புதிய கொள்கைகள், பெரிய திட்டங்கள், பெரிய கட்டமைப்புகள் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவது ஒரு வழி.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதை மக்களின் இயக்கமாக மாற்றி பெரும் அளவில் செய்வது இன்னொரு வழி. இரண்டு வழிகளும் வளர்ச்சியை கொண்டுவரும்… அரசில் இருக்கும் நாங்கள் எப்போதும் ஒரு கேள்வியை கேட்கிறோம், எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது. அதற்கு என்ன வகையான பலன் கிடைக்கிறது? இதற்கு அரசு அலுவலகங்கள் திறமையாக செயல்படவேண்டியிருக்கிறது. இதற்கு சில சட்டங்களை மாற்ற வேண்டி இருக்கிறது… முன்னேற்றம் என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும். சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை எல்லாம் வேலைவாய்ப்புகள் இல்லையேல் வெறும் வார்த்தைகளாகவே இருக்கும். நமக்கு உற்பத்தி மட்டும் தேவையில்லை, வெகுஜன மக்கள் செய்யும் பெரும் உற்பத்தி தான் தேவை…. பல நாடுகள் வருமானத்தால் பணக்கார நாடுகளாக இருக்கிற போதிலும் சமூக அமைப்பில் ஏழைகளாக இருக்கின்றன. சமூகத்தை ஒன்றாக பிணைக்கும் அவர்களின் குடும்ப அமைப்புகள், நம்பிக்கை முறைகள், சமூக உறவுகள் ஆகியவை சிதறியுள்ளன. நாம் அந்த வழியில் போகக்கூடாது. நமக்கு சமூகமும் பொருளாதாரமும் இணைந்து செயல்படுதல் வேண்டும்…
Tag: முன்னேற்றம்
முதுமை – சில சிந்தனைகள்
இந்தியாவில் பிள்ளைகளின் படிப்புச் சுமை, குடும்பச் சுமை, வயதான பெற்றோர்களின் பராமரிப்பு என்று அதிலேயே ஈட்டிய பொருள் அனைத்தும் செலவாகி, வயதான காலத்தில் பிள்ளைகளிடம் கையேந்தும் நிலையில் இருந்து விடுகின்றனர். வயது காலத்தில் பணம் தனக்கென்று காசு சேர்த்துக் கொள்ளாமல் இவர்கள் இருந்தது கூட, வயதான காலத்தில் பிள்ளைகள் தம்மை பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் என்று தோன்றுகிறது. ஆனால் முன்னெப்போதையும் விட மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் இந்த மாதிரியான திட்டமிடல் நிறைவேறாமல் போவதாகவே தோன்றுகிறது […]
View More முதுமை – சில சிந்தனைகள்