எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

புதிய கொள்கைகள், பெரிய திட்டங்கள், பெரிய கட்டமைப்புகள் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவது ஒரு வழி.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதை மக்களின் இயக்கமாக மாற்றி பெரும் அளவில் செய்வது இன்னொரு வழி. இரண்டு வழிகளும் வளர்ச்சியை கொண்டுவரும்… அரசில் இருக்கும் நாங்கள் எப்போதும் ஒரு கேள்வியை கேட்கிறோம், எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது. அதற்கு என்ன வகையான பலன் கிடைக்கிறது? இதற்கு அரசு அலுவலகங்கள் திறமையாக செயல்படவேண்டியிருக்கிறது. இதற்கு சில சட்டங்களை மாற்ற வேண்டி இருக்கிறது… முன்னேற்றம் என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும். சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை எல்லாம் வேலைவாய்ப்புகள் இல்லையேல் வெறும் வார்த்தைகளாகவே இருக்கும். நமக்கு உற்பத்தி மட்டும் தேவையில்லை, வெகுஜன மக்கள் செய்யும் பெரும் உற்பத்தி தான் தேவை…. பல நாடுகள் வருமானத்தால் பணக்கார நாடுகளாக இருக்கிற போதிலும் சமூக அமைப்பில் ஏழைகளாக இருக்கின்றன. சமூகத்தை ஒன்றாக பிணைக்கும் அவர்களின் குடும்ப அமைப்புகள், நம்பிக்கை முறைகள், சமூக உறவுகள் ஆகியவை சிதறியுள்ளன. நாம் அந்த வழியில் போகக்கூடாது. நமக்கு சமூகமும் பொருளாதாரமும் இணைந்து செயல்படுதல் வேண்டும்…

View More எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

மண்ணுருண்டையா மாளவியா?

மதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார். தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது? இதைத் தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளார்கள்… ஆனால் உண்மை என்ன?

View More மண்ணுருண்டையா மாளவியா?

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]

கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகப்படி அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்ற கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன்… குற்றம் இழைப்பவர்களுக்கும் சரியான தண்டனைகள் அளிப்பதில் நவீன சமூகம் சிக்கல்களை சந்திக்கிறது. கருணை என்னும் குணாதிசயம்தான் இதற்கெல்லாம் காரணம்… எவ்வளவு நாள்தான் எந்த வேலைத்தரத்தையும் காண்பிக்காத டம்மி பீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என்று அனைத்து வசதிகளையும் அளிக்க முடியும்? யூனியன் மாஃபியா கும்பலை “நேருக்கு நேராக” எதிர்க்கும் நேர்மைத்துணிவு, எனக்குத் தெரிந்து திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது… உலகம் முழுவதும் இந்த வினவு குழுக்களின் கிளைகள் என்றுமே இருந்து வந்துள்ளன…

View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]

எழுமின் விழிமின் – 17

முதன்முதலில் நமது இளைஞர்கள் பலம் உடையவர்கள் ஆக வேண்டும். சமய உணர்ச்சி அதற்கு பிறகு வரும். எனது வாலிப நண்பர்களே! பலம் உள்ளவர்களாக இருங்கள். நான் அளிக்கக் கூடிய புத்திமதி இதுதான். நீங்கள் கீதையைப் படிப்பதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே கூறுகிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன். உங்களது கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால் கீதை உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். உங்கள் உதிரத்தில் சக்தி இருந்தால் ஸ்ரீகிருஷ்ணனுடைய பலமிக்க மேதாவிலாசத்தையும், பராக்கிரமத்தையும் உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் உடை உங்களது கால்களின் மீது உறுதியாக நிமிர்ந்து நிற்க நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும் போது உபநிடதங்களின் தத்துவங்களையும் ஆத்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துணர முடியும்.

View More எழுமின் விழிமின் – 17

எழுமின் விழிமின் – 16

பாரதத்தின் ஜனத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு முஸ்லீம்களாகி விட்டார்கள். ஏற்கனவே கிறிஸ்தவர்கள் ஜனத் தொகை பத்து லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது. யாருடைய குற்றம் இது?… நம் தேசிய வாழ்க்கையாகிற உடல் பலவீனப்படும் பொழுது தான் பலவித நோய்க் கிருமிகளான கருத்துகள் நமது மக்களினத்தின் அரசியல் துறையில், சமூகத் துறையில், அறிவுத் துறையில் பெருங்கூட்டமாக நுழைந்து நோயை உண்டாக்குகின்றன… நமது சமயம் சமையலறை மதமாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது… குறைபாடுகளை எவ்வளவு விரைவில் ஒழிக்கிறோமோ அவ்வளவுக்கு நமது கொள்கைகள் அதிகமான பிரகாசத்துடன் ஜொலிக்கும்…

View More எழுமின் விழிமின் – 16

எழுமின் விழிமின் – 10

ஜாதிப் பிரச்னைக்கு நாம் காணும் மாற்றம் ஏற்கனவே மேல் நிலையிலிருப்பவர்களைத் தாழ்த்துவது அல்ல; அன்றி அளவின்றி உண்டு, குடிப்பதன் மூலம் மூளை தடுமாறி ஓடுவதல்ல. வரம்பு மீறிப் போகங்களை அனுபவிப்பதற்காக முன்னோர் வகுத்த எல்லையைத் தாண்டிச் செல்லுவதுமல்ல… மனித குலம் முழுவதையும் மெல்ல மெதுவாக உயர்த்தி, எதையும் எதிர்க்காத, அமைதியான, உறுதியான, வழிபாட்டுத் தன்மையுள்ள தூய தியான வடிவான ஆன்மிக மனிதனாக ஆகும் லட்சிய நிலைக்கு ஏற்றி வைக்க வேண்டும். அந்த லட்சியத்திலேயே தெய்வமுள்ளது… உருவ வழிபாட்டால் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்களை உண்டாக்க முடியுமானால் மேற்கொண்டு ஆயிரம் உருவங்களைக் கொண்டு போங்கள். இறைவனருளால் உங்களுக்கு வெற்றி கிட்டட்டும்.

View More எழுமின் விழிமின் – 10

எழுமின் விழிமின் – 9

கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்று கருதுகிற மனிதனோ, சமூகமோ மரணத்தின் வாய்க்குள் முன்னரே புகுந்துவிட்டதாக அறிந்துகொள்ளுங்கள். ஆம்! மேல்நாட்டவரிடமிருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உள்ளன. ஆனால் அஞ்ச வேண்டுவனவும் உள்ளன… ஒரு கதையில் ஒருவன் தனது நண்பனின் நெற்றியில் உட்கார்ந்திருந்த கொசுவைக் கொல்லவிரும்பிக் கொடுத்த பலமான அடியில் கொசுவுடன் நண்பனும் இறக்கத்தக்க நிலை ஏற்பட்டதாம். அதுபோலத்தான் இவர்கள் நிலையும்…. நமது பண்டைய சட்ட நிர்மாணகர்கள், ஜாதிகளை உடைப்பவர்களாகவும் இருந்தனர். ஆயினும் அவர்கள் நமது தற்காலச் சீர்திருத்தக்காரர்களைப்போல இருக்கவில்லை…

View More எழுமின் விழிமின் – 9