மக்கள் சத்துவகுணம் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு சிறிது சிறிதாக அஞ்ஞானம் என்ற காரிருளில் தமோகுணம் என்ற மாபெரும் கடலில் மூழ்கிப் போவதை நீங்கள் கண்கூடாகக் காணவில்லையா?.. ஒருவன் ராஜஸ குணத்தின் வாயிலாகச் சென்றாலன்றி சாத்துவிக நிலையை அடைவது என்பது சாத்தியமாகுமா?… ஐரோப்பாவிலுள்ல பல நகரங்களையும் நான் சென்று பார்த்ததில் அந்தந்த நாட்டு ஏழை மக்களின் இன்ப நிலையையும், கல்வியறிவையும் கண்டேன். அப்பொழுது என் நாட்டு ஏழை மக்களின் நிலை பற்றியே கண்ணீர் உகுப்பது வழக்கம். ஏன் இந்த வித்தியாசம்? எனக்குத் தோன்றிய விடை “கல்வியே”. கல்வியினால்தான் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை வருகிறது …
View More எழுமின் விழிமின் – 12