ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் உன்னத இடத்தை வகிப்பவை சுவாமி விவேகாநந்தர் அருளியவை. கேட்பதற்கே மிகவும் எழுச்சியூட்டும் துதியாக அமைந்தது ‘கண்டன பவ பந்தன’ என்னும் துதி. பெரும் சமுத்திர அலைகளின் அணி போல் திரண்டு எழும் நாத அலை போன்றே பாடுங்கால் அமைவது… வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவருக்கு நீஞ்சிக் கரை சேரும் படியாக ஒரு புணை ஒன்றைக் கொடுத்தால் அதைக் கொண்டு கரையை நோக்கி நீஞ்சாமல் அடித்துப் போகும் வெள்ளத்தின் ஓட்டத்தின் வழியிலேயே போவது சுலபமாக இருக்கிறது என்று கொண்டு அப்படியே கடலில் போய் மூழ்கிவிடும் அபத்தமாகத்தான் இந்த ஜீவன் தனக்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது…
View More சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்Tag: ராமகிருஷ்ண மடம்
நேதாஜி: தலைவர்களின் தலைவர்
பகவத்கீதை அவரது வழித்துணையாக இருந்தது. அவரது கைப்பெட்டியில் அது கடைசி வரை இருந்தது. சுதந்திரப் போருக்கு கீதை தூண்டுதலாக இருக்கும் என்று அவர் நம்பினார். அதேபோல, சுவாமி விவேகானந்தரே நாட்டில் எழுந்துள்ள நவ எழுச்சிக்குக் காரணம் என்று அவர் பலமுறை கூறி இருக்கிறார்… நேதாஜியின் வாழ்க்கையே ஒரு போர்க்களம். அவர் வாழ்ந்தது 48 ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் அவர் நிகழ்த்திய அரசியல் சாதனைகள், வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள், போர்முனை சாகசங்கள் உள்ளிட்டவற்றை அறிகையில், அந்த மாபெரும் தலைவனின் பிரமாண்டம் புரிகிறது…
View More நேதாஜி: தலைவர்களின் தலைவர்பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை
சுவாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று, அயர்லாந்திலிருந்து பாரதம் வந்து, இந்நாட்டின் தவப்புதல்வியாகவே வாழ்ந்தவர் சகோதரி நிவேதிதை. அவரது 150-வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இந்த ஆண்டு நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தமிழகத்தில் ரத யாத்திரை நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
கோவையில் ஜனவரி 22,2018 (இன்று) தொடங்கி, சென்னையில் பிப்ரவரி 22,2018 முடிவுபெறும் இந்த மாபெரும் ரத யாத்திரை, 30 நாட்களுக்கு 27 மாவட்டங்களின் வழியாக சுமார் 3,000 கி.மீ. தொலைவைக் கடந்து 2 லட்சம் மாணவிகளிடம் சகோதரி நிவேதிதை ஆற்றிய பணிகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரத யாத்திரையை ஒட்டி, சகோதரி நிவேதிதை குறித்த கட்டுரை இங்கு வெளியாகிறது…
View More பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை