சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும்.

காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம்.

View More சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

வேண்டாம் இவருக்கு குரு பூஜை

அந்த மகத்தான தேசபக்தரை சிறைவைத்து செக்கிழுக்க செய்து சித்திரவதை செய்த வெள்ளைக்காரன், அவரை உதாசீனம் செய்த காங்கிரஸ் மேலிடம்… இவர்களெல்லாம் அவருக்கு செய்த கொடுமைகள், அவமானங்கள் போதாதா? இந்த ஆழமான தமிழறிஞரைசாதிய சிறையில் அடைத்து இழிவு படுத்தி அவருக்கும் குருபூஜை போட்டு என்றென்றைக்கும் அவரை சாதிய செக்கிழுக்க வைக்க வேண்டுமா? போதும் வாழும் போது அவர் பெற்ற சிறைவாசமும் அவர் அனுபவித்த கொடுமையும்.

View More வேண்டாம் இவருக்கு குரு பூஜை

பாரதி: மரபும் திரிபும் – 7

This entry is part 7 of 10 in the series பாரதி: மரபும் திரிபும்

“தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள் பாடியதாக” பாரதி மீது ஒரு அவதூறு… தனது 14வது வயதில் கல்வி கற்பதற்காக உதவி செய்யுமாறு எட்டயபுர ராஜாவுக்கு எழுதினார். அதிலுள்ள மிடுக்கு பிற்காலத்தில் எழுதுகிற சீட்டுக்கவியிலும் எதிரொலிக்கிறது – தன்னை நேரிலே வந்து பார்த்து பரிசு கொடுக்க வேண்டும் என்கிறார். இங்கே பாரதி மற்ற புலவர்களிடமிருந்து விலகியே நிற்கிறார்… தன் தேவைக்காக நிதி கேட்ட வ.உ.சிக்கு வக்காலத்து வாங்கி, காந்தி வ.உ.சியை ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்த மதிமாறன், தன் தேவைக்காக நிதி கேட்ட பாரதியை மட்டும் விமர்சிக்கிறார் என்றால் அவரது உள்நோக்கம் என்ன?…

View More பாரதி: மரபும் திரிபும் – 7

சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை

1916இல் மீண்டும் லக்னோவில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடியது. […..] இந்த மகாநாட்டில் ஒரு வேடிக்கை நடந்தது.

இங்கு நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தலில் காந்தி திலகரிடம் தோற்றார். ஆனால், வெற்றி பெற்ற திலகர் காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

View More சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை

தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்

தெரியாது என்ற வார்த்தையும் முடியாது என்ற வார்த்தையும் பாரத பக்தர்கள் தவிர ஏனையோரின் பொருட்டாகவே உண்டாகின்றன. இவ்வுண்மை உங்கள் மனதில் எப்போதும் நிற்கட்டும்… சிவநேசனாகவோ தமிழ்நேசனாகவோ அவ்விருபொருள் நேசனாகவோ என்னை மதித்து என்னிடமிருந்து யாதொரு கைமாறும் கருதாது, “சிவநேசன்” வாரந்தோறும் என்னைக் காணும்படி நீங்கள் செய்ததற்காக யான் உங்கள் பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன் ..

View More தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்