1,934 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடிக்குறிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களைக் கூட வங்கிகள் வைத்திருக்க வில்லை. தள்ளுபடி செய்யப்பட்ட வட்டி, வட்டி சதவீதம் என்ன? எந்த காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டது? மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின் படி எந்த விவசாயிக்கு வட்டி தள்ளுபடி கிடைக்கும் என்பது பற்றி ஆவணங்கள் கூட சில வங்கிகள் வைத்திருக்க வில்லை. ஆந்திராவில் ஐந்து வங்கிகளில் 25 சதவீத தொகையான ரூ66.16 லட்சத்திற்குறிய அதாவது 75 சதவீதம் கட்ட வேண்டிய விவசாயி கட்டாமலே, வங்கி கட்டியதாக காட்டி மத்திய அரசிடமிருந்து 25 சதவீத தொகையை பெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
முறையான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கியும், நபர்டு வங்கியும் அவ்வப்போது அனைத்து வங்கிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் இந்த நெறிமுறைகளுக்கு புறம்பாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது 31.3.1997க்கு முன் கடன் பெற்ற விவசாயிகள், 31.3.1997 முதல் 31.3.2007ந் தேதி வரை தான் செலுத்த வேண்டிய அசல் தொகை மற்றும் வட்டியை கட்டாதவர்கள், மற்றும் பல முறை நினைவுட்டு செய்யப்பட்ட பின்னும், 29.2.2008ந் தேதி வரை கட்டாமல் ஓவர் டியூ வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் படி தள்ளுபடி கிடைக்கும். ஆனால் 25 மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்கள் போன்ற மாநிலங்களில் 1.4.1997க்கு பின்னர் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் , வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே மத்திய அரசாங்கம் 31.3.2007ந் தேதி 2004 மற்றும் 2006-ல் கடன் பெற்றவர்களுக்கும் சில சலுகைகள் கிடைக்கும் விதமாக சிறப்புத் திட்டத்தை அறிவித்தது. இந்த சிறப்புத் திட்டத்திலும் வராத விவசாயிகளுக்கு விதி முறைகளை மீறி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்து. கர்நாடக மாநிலத்தில் மட்டும் 2,879 விவசாயிகளின் கடன் தொகையான ரூ8,85,76,567 விதி முறைகளுக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 1,050விவசாயிகளின் கடன் தொகையான ரூ2,05,32,186 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ( ஆதாரங்கள் தணிக்கை அறிக்கை பக்கம் எண்19, இணைப்பு பக்கம் எண்9, 4வது இணைப்பு) இதன் காரணமாக தணிக்கை துறை கொடுத்துள்ள பரிந்துரை தவறு செய்த அதிகாரிகள் மீது குறிப்பாக தணிக்கை செய்ய வேண்டிய தணிக்கையாளர்கள், மத்திய தணிக்கையாளர்கள், தவறான சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
View More விவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு