தன் மண்ணையும் மக்களையும் ஆங்கிலேயரிடமிருந்து காக்க எதையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே. சென்னம்மாவின் தொடர் எதிர்ப்பால், 1824-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கித்தூரைத் தாக்கினர். சென்னம்மாவின் சிறிய படையோ துணிச்சலுடன் போரிட்டது… நாட்டுப்புறக் கதைப்பாடல், லாவணி, கிகி படா வடிவங்களில் ராணி சென்னம்மாவின் வீரக் கதை காலம்காலமாகக் கூறப்பட்டுவருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 22-24-ம் தேதிகளில் கர்நாடக மாநிலம் கித்தூரில் நடைபெறும் ‘கித்தூர் உற்சவ’த்தில் சென்னம்மாவின் வீரம் கொண்டாடப்படுகிறது..
View More கித்தூர் ராணி சென்னம்மா: சுதந்திரப் போராட்ட வீராங்கனைTag: வீராங்கனை
கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3
இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்….
View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி
அம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் அவளது கதையைத்தான். ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு… ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்… விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின் பெயர் ஹ்ருஸாங்கலி…
View More ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகிஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)
பயணம் கிளம்பியதும், முதலில் இறங்கிய இடம் சித்ரதுர்கா கோட்டை.. ஏழு சுற்றுகள், பதினெட்டு கோயில்கள், தோரண வாயில்கள், பண்டக சாலைகள், விழா மண்டபங்கள், குருகுலம், குளங்கள், சுனைகள், உடற்பயிற்சி நிலையங்கள், ரகசிய வாயில்கள் என பற்பல பகுதிகளைக் கொண்ட கோட்டையை ஏறி இறங்கி சுற்றி வருவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும்… கொண்டாட்டங்கள், மாபெரும் வீரச் செயல்கள், சிலிர்ப்பூட்டும் தியாகங்கள், சதி வலைகள், காதல்கள் எல்லாம் கலந்து பெருமூச்சு வரவழைக்கும் கதைகள். கோட்டையிலிருந்து இறங்கும் போது வரலாற்றின் திசை மாற்றங்களை யோசித்துக் கொண்டே வந்தேன்..
View More ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்
இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது. படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார். தளபதிகளைக் கண்டதும் ராணி… இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,” என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு…
View More சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்