முதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்… ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது…. இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்….
View More அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]