கடந்த 10 வருடங்களில் இலங்கைத் தமிழர் பிரசினை குறித்து இவ்வளவு தீர்க்கமான, விசாலமான, ஆழமான அரசியல், வரலாற்றுப் புரிதல்களை கொண்டதாக, இந்திய தேசிய நலனையும் ஈழத்தமிழர் மீது உண்மையான, பாசாங்கற்ற பரிவையும் ஒருங்கே உள்ளடக்கியதாக இப்படி ஓரு நேர்மையான பேச்சு தமிழ் மண்ணில் பேசப்பட்டிருக்கிறதா?..
View More முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அண்ணாமலை: ஒரு பார்வைTag: வெளியுறவுக் கொள்கை
மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை
இன்றைய சீன அதிபர் ஜின்பிங் பெரும் வரலாற்றுணர்வு மிக்க மனிதர். சீனா இழந்த கலாச்சாரச் செல்வங்களை மீட்டுக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமுடையவர் ஜின்பிங். அவரை, இன்னொரு வரலாற்று ஆர்வலரான பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றது பெரும் ஆச்சரியமில்லை… மோடி-ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பினால் இந்திய-சீனா இடையே உள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் இரண்டு பழம்பெரும் நாகரிகங்கள் தங்களின் கடந்தகால வரலாற்றை உணர்ந்து கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது. இந்திய-சீனப் பொருளாதார யுத்தம் முக்கியமான பிரசினை. சீனா இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எல்லா வழிகளிலும் முயல்கிறது. இன்றுவரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது என்றாலும் எதிர்காலத்திலும் இந்தியா இப்படியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் இன்றைக்கு உலக நாடுகளுடன் சுமுக உறவு வைத்திருக்கும் வலிமையான இந்தியாவை சீனர்கள் அடக்கி வைப்பது சாத்தியமில்லை…
View More மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வைராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)
எங்க தலைவரு கொதிக்காரு, ஒமக்கு ஜோக்கா இருக்கு என்னா?… சரி, மேலே… போற வழில சீன தூதரகத்தப் பாத்துட்டாரு. அதென்னா சைனீஸ்ல எழுதீருக்கான்? நிறுத்துன்னுட்டாரு… நானும் போனேனா? உள்ள போனவரு “உங்க செஃப் எங்க?”ன்னு ரிசப்ஷன்ல கேட்டாரு… அவன் சீஃப்னு நினைச்சிகிட்டு தூதரைப் பாக்க வந்திருக்காருன்னு , ஒரு ஃபார்ம் கொடுத்து ’நிரப்பு’ன்னுட்டான். அதுல இங்க்லிஷ்லயும் சைனீஸ்லயுமா எழுதியிருந்திச்சா, அண்ணன் குழம்பிட்டாரு… ஒரு வெண்பா சொல்லுங்க. அப்படியே கட்சி இதழ்ல போட்டுருதேன்… கொடுத்துருவம்…
View More ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வை
சிலர் வாய்கூசாமல் பிரதமர் உல்லாசச் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்கின்றனர். அது உண்மை என்றால் ஒரு மணிநேரம் ஒய்வு கூட இல்லாமல் இயந்திரமாக ஒரு மனிதன் உல்லாசச் சுற்றுப் பயணம் செய்வதை இப்போதுதான் நாம் பார்க்கிறோம்…இப்போது நாடுகளின் அரசியல் உறவுகள் பெருமளவு மாறி விட்டிருக்கிறது. உலக ஆளுமை என்பதன் அடையாளம் வர்த்தகத் துறையில் ஆதிக்கமே.ஏனைய மற்ற துறைகளின் முன்னேற்றம் கூட வர்த்தக முன்னேற்றத்தை ஒட்டியே அமையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஆகவே பிரதமரின் இந்த ஒவ்வொரு வெளீநாட்டுப் பயணத்தின் முக்கியத்துவமும் விளைவுகளும் நமக்கு முழுதாகத் தெரிய சில ஆண்டுகளாவது ஆகும். ஆட்சியாளர்களுக்கு எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை எத்துணை முக்கியமோ அது போல மக்களுக்கும் கடந்த கால வரலாறு குறித்த நினைவு அவசியம்…
View More பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வைஎமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…
தமிழின் மூத்த பத்திரிகைக் குடும்பமான விகடன் குழுமம் கடந்த சில காலமாக,…
View More எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.
View More வளரும் பாரதத்தின் உலக மேலாண்மைஇலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்
இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்… தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் – இராணுவ மயமாக்கப் பட்ட சூழல், திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும், மதமாற்றம்… முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. அந்த அமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை… இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு முழுமையான சமஷ்டி அமைப்பினை ஏற்படுத்துவதாகும். இதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசு செய்வதற்கு மறுத்தால், இந்திய அரசு மற்ற இரண்டு சிக்கலான தெரிவுகளுக்கு செல்வது தான் பிரசினைக்கு தீர்வு காணும் வழிகளாக ஆகும்….
View More இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?
தனது கடும்போக்கு மூலம் ஜெயலலிதா என்ன உணர்த்துகிறார்? “ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்” என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா? இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை… தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன?… தனக்குக் கிடைத்திருக்கும் ஜனநாயக பூர்வமான அதிகாரத்தை ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்கிறார்…
View More ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி
தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று… மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன? ஒன்றுமே இல்லை…
View More திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளிபிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை
இதுவரை எந்த நாடும், எந்தத் தலைவரும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. சாதாரணமாக தேர்தல் முடிந்தபின் பதவியேற்றுக்கொள்வது என்பது ஒரு உள்நாட்டு நிகழ்ச்சியாக மட்டுமே கருதப்பட்டுவரும் நிலையில், அண்டைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்ததன் மூலம் உலக நாடுகள் அனைத்தையும் பாரதத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வைத்திருக்கிறார் மோதி. இதன் மூலம் தன்னை ஒரு வித்தியாசமான தலைவராக முன்னிறுத்தியுள்ளார்… தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் பாரதத்தின் தலமைச் சிறப்பையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மோதி அரசு செயல்படும் என்பது என் கருத்து. பாரதத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உலக அளவில் பாரதத்தின் நிலை உயரும் என்பது நிச்சயம்.
View More பிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை