கண்மூடித்தனமாக ஓப்பியமும், மதுவும் குடித்து எந்த நேரமும் மூளை மழுங்கி வெறியுடன் திரிந்த அக்பரின் மகன் ஜஹாங்கிர் தனக்குப் பிடிக்காதவ்ர்களுக்கு இழைத்த கொடுமைகள் கடவுளால் பொறுக்க இயலாதவை. அவருடன் இருந்த அவரது குறிப்பெழுத்தாளன் ஒருவன் அந்தப்புரத்திலிருந்த வேலைக்காரப் பெண் ஒருத்தியுடன் காதலில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜஹாங்கிர் அவனது தோலை உயிருடன் உரித்தார் என்கிற செய்தியைப் படிக்கையிலேயே குலை நடுங்கும். வின்செண்ட் ஸ்மித், “1591-ஆம் வருடம் அக்பர் கடுமையான வயிற்றுவலியால் துடித்தார். தன்னுடைய மகனான ஜஹாங்கிர்தான் தனக்கு விஷம் வைத்திருக்க வேண்டும் என அக்பர் சந்தேகப்பட்டார்” என்கிறார்…
View More அக்பர் எனும் கயவன் – 5Tag: ஷாஜஹான்
தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்
ஷாஜஹானுக்குப் பிறகு தானே ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் போவது உறுதியானது என்பதில் தாரா ஷிகோவுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்லை. ஷாஜஹான் அவரிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்த காலத்தில் தாரா ஷிகோ ஏறக்குறைய இஸ்லாமை விட்டு வெளியேறியிருந்தார். வெள்ளைக்கார கிறிஸ்தவ பாதிரிகள் என்னேரமும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள்… ரோஷனாரா பேகம் மிகக் கோபத்துடன் தாரா ஷிகோவைக் கொல்ல வேண்டும் என்று வாதிடுகிறாள். அவளுக்கு ஆதரவாக அரசவை முல்லாக்களும் சேர்ந்து கொண்டு காஃபிரான தாரா ஷிகோவைக் கொல்வதுதான் சரியானது என்று யோசனை சொல்ல, அவ்ரங்க்ஸிப் அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதன்படியே தாரா ஷிகோவைக் கொல்ல அவரது அடிமைகளில் ஒருவனை அனுப்புகிறார்….
View More தாரா ஷிகோ: முகலாய வரலாற்றில் ஒரு துயர அத்தியாயம்தந்தையும் தனயனும் பதவிப் போட்டியில்!
முகலாயர்களுடைய வரலாற்றைச் சற்றுத் திரும்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்கெல்லாம் புலப்படும். அதாவது ராஜகுடும்பத்தில் அரசபதவி என்றால் உறவுகள் மறக்கப்படும் என்பதுதான் அந்த உண்மை. முந்தைய முகலாயமன்னர்களாலும் சொந்தங்களுடன் போராடித்தான் அரச சிம்மாசனத்தைப் பிடிக்கமுடிந்திருக்கிறது. அங்கு அண்ணன்-தம்பி பாசமோ, அப்பன்-பிள்ளை என்கிற உறவோ குறுக்கே நிற்கமுடியாது. தன் சொந்த மகனாலேயே சிறையிடப்பட்ட ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் சிறையில் இருந்தபடியே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தே 1666 ஜனவரி 22ல் உயிரிழந்தார்.
துரோக வரலாற்றின் அடிச்சுவட்டில் அரசகட்டில் ஏறிய ஒளரங்கசீப்தான் முகலாய மன்னர்களின் கடைசிமாமன்னராக இருந்தார் என்கிறது வரலாறு. துரோகம் எப்போதும் நிலைத்திராது. அதற்குரிய விலையை துரோகிகள் கொடுத்தாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதி.