கையும் களவுமாகச் சிக்கிய திருடன், பொதுமக்களின் அடிகளுக்கு பயந்து, தட்டுப்படுபவர்களை நோக்கி எல்லாம் கை காட்டுவதுபோல, ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழலில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம்- வானவில் ஊழல்களின் வெளிப்பாடு வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வருகிறது…
View More ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1Tag: ஸ்பெக்ட்ரம்
மன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்
மன்மோகன் சிங் சுற்றிலும் நடக்கும் புயல், மழை, இடி, சூறாவளி எதனைப் பற்றியும் கவலைப் படாமல், அமைதியாக, ‘விசுக் விசுக்’ என்று நடந்து கொண்டு தன் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்… முரசொலி மாறன் படத்துக்கு மலர் போட வந்த அவர், ராசாவைத் தட்டிக் கொடுக்கிறாரே, அதன் பொருள் என்ன?… ‘ஸ்பெக்ட்ரம்’ பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையின் மீது சந்தேகப்படுவது வெட்கக்கேடானது.
View More மன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03
இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது………இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 02
இந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன… அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன… இந்தத் தகவல்களின் சாரம் என்ன ?
View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 02நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01
இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.
View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01