இன்றைக்கு புதிதாக ஓர் அரசியல் விமரிசனம் மன்மோகன் சிங் பற்றி வெளியாகியிருக்கிறது; பிரதமர் மன்மோகன் சிங் சிறிது சிறிதாக நரசிம்ம ராவாக மாறிவருகிறார் என்று. இடி விழுந்தாலும் சிறிதுகூட அசராதவர் நரசிம்ம ராவ். உருவாகும் எல்லா பிரச்சினைகளும் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்பது அவரது நம்பிக்கை. எப்பொழுதும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்கிற மோன நிலை. சில நேரங்களில் நமக்கு ஏற்படும் சின்னஞ்சிறு உடல் உபாதைகளைக் கண்டு சிலர் அவசர அவசரமாக மருத்துவரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்வார்கள். பொதுவாக சில மருத்துவர்கள் தலைவலி, சளி, இருமல் இதுபோன்ற உபாதைகளுக்காக மருத்துவர்களிடம் ஓடாதீர்கள். அவை தற்காலிகமானவை, தானாகவே குணமாகிவிடும் என்பார்கள். அதுபோல அரசியலில் ஏற்படும் சில பிரச்சினைகள் தானாகவே கூட அடங்கிப் போகும். அதை விட்டுவிட்டு உடனடியாக அதற்கு எதிர் நடவடிக்கை, அடக்குமுறை, எதிர்ப்பேச்சு.. இப்படித் தொடங்கினால் அது பிரச்சினையை இன்னும் பெரிதாக ஆக்கிவிடும். அதனால் சும்மா இருப்பதே சுகம் என்று ‘சிரிக்கத் தெரியாத’ பெரியவர் நரசிம்ம ராவ் தனது அரசியல் வாழ்க்கையை ஓட்டிவிட்டார். இத்தனைக்கும் அவர் நல்ல அறிவாளி, பல மொழிகளை அறிந்தவர், நல்ல நிர்வாகத் திறமை படைத்தவர், காங்கிரஸ் கட்சியில் மாநாடுகளில் தீர்மானங்களை எழுதுபவர் இவர்தான். அப்படிப்பட்டவர் எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து மைனாரிட்டி அரசை நடத்திச் சென்றவர். மன்மோகன் சிங் அப்படிப்பட்ட திறமைகள் கொண்டவரா என்பது தெரியவில்லை, ஆனால் சுற்றிலும் நடக்கும் புயல், மழை, இடி, சூறாவளி எதனைப் பற்றியும் கவலைப் படாமல், அமைதியாக, ‘விசுக் விசுக்’ என்று நடந்து கொண்டு தன் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். சில சமயங்களில் இவரது நடை வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மந்திரி நாராயணசாமி போன்றவர்கள் மன்மோகனுக்கு அருகில் நடக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஓடிவந்து சேர்ந்து கொள்ளும் அபூர்வ காட்சிகளும் தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன.
சரி! இவர் ஒரு பொருளாதார நிபுணர்; ரிசர்வ் வங்கியில் இருந்தவர்; உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்துச் சென்று நாட்டை மேல்நாட்டவருக்குத் திறந்து விட்டவர், என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் சரி! தன் அமைச்சரவையில் ஓர் ஊழல் நடக்கிறது, அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது; அதற்கு காரணமானவர் இன்னார் என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கிற குக்கிராமம் சோத்துக்காரன்பட்டி சுப்பனுக்குக்கூடத் தெரிந்து விடுகிறது. ஆனால் இந்த நாட்டின் முதல் நிர்வாகி, பிரதம மந்திரி, தன் மந்திரி சபையில் இப்படியொரு ஊழல் நடந்திருப்பதையோ, அதனைச் செய்தவர் இவர்தான் என்பதையோ உணர்ந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லையே. மறுபடியும் அதே ஊழல் மலிந்த, எண்ணிலாத கோடி வருமானம் தரும் அந்தத் துறையை மீண்டும் அவரிடமே கொடுத்தாரே, அந்த மர்மம் என்ன? தெரிய வேண்டுமல்லவா? அதுதான் போகட்டும் நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் படத்துக்கு மலர் போட வந்த அவர், ராசாவைத் தட்டிக் கொடுக்கிறாரே, அதன் பொருள் என்ன? பலே பாண்டியா? நல்ல சாதனை! சளைக்காதே நான் இருக்கிறேன் என்று பொருளா? நமக்குத் தெரிய வேண்டும்.
புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படுகிறது. அதில் மந்திரி சபை அமைக்க வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையாவது இந்த மனிதர் செய்தாரா என்றால், அந்த வேலையையும் கூட யார் யாருக்கோ தானம் செய்து விட்டார் போலிருக்கிறது. யாரோ ஒரு தரகர் மாது நீரா ராடியா என்பவரும் வேறு சிலரும், ஊடகங்களிலிருந்து பத்மபூஷன் கொடுத்துத் தன்னக்கட்டப்பட்ட ஒரு வீராங்கனையும் இந்த பங்கு பேரத்தில் ஈடுபடுகிறார்கள். நம் ஊரில் மாலை நேர தெருவோர காய்கறி மார்க்கெட்டில் “ஏய் கிழவி! உன் கத்திரிக்காய் கூடையை அதோ அந்த லேம்ப் போஸ்ட் அருகில் போட்டுக்கோ!”, “இந்தாம்மா, உன் புடலங்காய் மூட்டையை அந்த சாக்கடை ஓரத்தில் போடு!” என்றெல்லாம் கட்டளை பிறப்பிக்கும் பிஸ்தா மேஸ்திரி மாதிரி இந்த உதிரிக் கூட்டம் யாருக்கு என்ன மந்திரி கொடுக்கலாம் என்று பேரம் பேசுகிறார்கள்.
அதுதான் போகட்டும், ஒரே குடும்பத்தில் ஒரு டஜன் பேருக்கு மந்திரி பதவியில் ஆசை. மியூசிகல் சேரில் சுற்றிச்சுற்றி வந்து மியூசிக் நின்றவுடன் ஓடிவந்து உட்காருபவருக்கு பதவி, ஏமாந்தவர் வெளியேற வேண்டும். அப்படி ஒரு குடும்பத்துக்குள் மியூசிகல் சேர். இதில் சிலருக்கு பலர் வக்காலத்து. சிலருக்கு வேரில் வேட்டு வைக்கப்படுகிறது. குடும்ப பேட்றியார்ச் இதில் ஒருவருக்கு ஆதரவு, அவரது மனைவி மற்றொருவருக்கு ஆதரவு. என்ன இது. நூறுகோடிக்கும் மேற்பட்ட மக்கள், இதில் 534 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த 534-இல் ஐம்பது அல்லது அறுபது மந்திரிகள். இவற்றில் ஒரு டஜன் ஒரு குடும்பத்துக்கு என்றால் மற்றவர்களுக்கு? பிரதமர் செய்ய வேண்டிய வேலைகள் பரவலாக்கப்பட்டு பலரும் இதில் ரொம்ப மெனக்கெட்டிருப்பதைப் பார்த்தால், அரசியலும் ஒரு பங்கு மார்க்கெட்டோ என்று ஐயப்படத் தோன்றுகிறது.
ஆக, இத்தனைப் பெருமைகளுக்கும் உரியவரான நமது மாண்புமிகு பிரதம மந்திரி நேர்மையானவர், நூறு சதவீதம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே! அப்படிப்பட்ட பெரியவரை, உலகமே யோக்கியர் என்று போற்றுகின்ற உத்தமரை ‘ஸ்பெக்ட்ரம் 2ஜி’ விவகாரத்தில் எதிர்கட்சிகள் பழிசுமத்துகின்றனரே! ஐயகோ! இது என்ன கொடுமை. இப்படிச் சொல்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா. இவர் சொல்கிறார் ‘ஸ்பெக்ட்ரம்’ பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையின் மீது சந்தேகப்படுவது வெட்கக்கேடானது. கவனியுங்கள் பிரதமரைச் சந்தேகிப்பது ‘வெட்கக்கேடானதாம்’. யாருக்கு வெட்கக்கேடு? சுற்றி நடப்பவற்றைத் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல இன்று வரை ஊமை போல இருப்பவருக்கு வெட்கக்கேடா? அல்லது இப்படி எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே, இவருக்கும் தெரிந்தே இவை அனைத்தும் நடந்திருக்கிறது? இவருக்கு இதைப் பற்றி நன்கு தெரிந்திருக்குமோ? என்று சந்தேகப்படும் இந்த நாட்டு மக்களுக்கு வெட்கக்கேடா தெரியவில்லை. அல்லது இவை அத்தனைக்கும் காரணமான தனது கட்சிக்கும் தலைவரான தனக்கும் வெட்கக்கேடா? புரியும்படியாக அல்லவா சொல்ல வேண்டும்.
இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதாவது இந்த சோனியா அம்மையாருக்கு இந்த நாட்டின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம் இவை சிறிதளவாவது தெரிந்திருக்குமானால் இதுபோன்ற சம்பந்தமில்லாத கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பாரா என்று எண்ணிப்பாருங்கள். யாரோ எழுதிக் கொடுப்பதைப் படிக்கிறாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இல்லாவிட்டால், இந்த நாட்டு பெரும் தலைவர்கள் கூட சொல்லத் தயங்கும் கடுமையான வார்த்தைகளை இவர் பயன்படுத்துவதைப் பார்த்தால் இவர் இன்னும் இந்த நாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டவராகத் தெரியவில்லை. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவை விட்டு வந்து இந்திய அரசியலில் ஈடுபட விருப்பம் தெரிவித்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே அவரை இந்தியா முழுவதும் சுற்றி வாருங்கள். கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர்களது வாழ்க்கை முறை, அங்கெல்லாம் நிலவும் கலாச்சாரம், பண்பாடு இவற்றை நன்கு தெரிந்து கொண்டு வாருங்கள், அதன் பிறகு இந்தியச் சுதந்திரப் போரில் தலைமை ஏற்கலாம் என்றார். காந்திஜியும் அப்படியே ரயிலில் மூன்றாம் வகுப்பில் தன் மனைவியோடு கூட்டத்தோடு கூட்டமாகப் பயணம் செய்து சாதாரண அடிமட்ட இந்தியனின் உணர்வுகளை, வாழ்க்கை முறையை, அவனது தேவைகளை அவனது இன்னல்களைப் புரிந்துகொண்டு வந்தார், பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.
நேரு குடும்பப் பாரம்பரியம் என்ற போர்வையில் காங்கிரஸ் தலைமைக்கு வந்த சோனியா தேர்தலின்போது பிகாரில் சுற்றுப்பயணம் செய்தார். சரி! மக்களுக்கு என்ன தேவைகள், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற குறைகள் இவைகளைத் தெரிந்து கொண்டு எங்கள் கட்சி அவற்றைச் சரி செய்து மக்கள் மகிழ்ச்சியோடும், நிம்மதியாகவும் வாழ நல்ல ஆட்சி கொடுப்போம் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஒரு நல்ல சேல்ஸ்மேனுக்கு இருக்க வேண்டிய தகுதி பற்றிப் பாடங்கள் இருக்கின்றன. முதலில் வேறொரு நிறுவனம் விற்பனை செய்யும் பொருளை குறை சொல்லாமல், தனது பொருள் எந்த விதங்களில் மேன்மையுடையது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டுமாம். இந்த அம்மையார் என்ன சொன்னார்? நிதிஷ் குமார் ஓர் ஏமாற்றுக்காரர் என்றார். அவர் யாரை ஏமாற்றினார்? இந்த அம்மையாரையும் இவரது கட்சியையும் பிகாரில் காலூன்ற முடியாத அளவுக்கு ஊழல் இல்லாத நேர்மையான, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆட்சியைத் தந்தாரே அதனால்தான் அவர் ஏமாற்றுக்காரரா? இந்தச் சொல்லைப் பயன்படுத்த இந்திய நாட்டில் வேறு எந்த தலைவராவது துணிவார்களா? மக்களின் பேராதரவைப் பெற்று 243 இடங்களில் 206 இடங்களை வென்றிருக்கிற நிதிஷ்குமாரைப் பார்த்து தேர்தல் கூட்டங்களில் அவர் ஓர் ஏமாற்றுக்காரர் என்று சொன்னது யோக்கியப் பொறுப்புள்ள செயலா? சிந்திக்க வேண்டும்.
இவரது கைப்பாவையாக விளங்கும் மனமோகன சிங்கர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நாங்கள் பிகாருக்குத் தருகின்ற நிதி உதவிகளை நிதிஷ்குமார் மக்களுக்குச் செலவிடவில்லை. திட்டங்களுக்குக் கொடுக்கவில்லை என்றார். இவர் சொல்லும் நிதி காங்கிரஸ் கட்சியின் நிதியா? மனமோகனரின் சொந்த நிதியா? மக்களின் வரிப்பணம் தானே! அப்படியென்றால் அந்த நிதி என்னவாயிற்று? அவர் ஊழல் செய்துவிட்டார் என்கிறாரா? இவரைச் சுற்றி இருக்கும் யோக்கியப் பொறுப்புள்ள நபர்களையே பார்த்துக் கொண்டிருந்ததனால் ஏற்பட்ட பார்வைக் கோளாறோ என்னவோ தெரியவில்லை. இவர்களுக்குப் பார்ப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களாகவே தெரிகிறார்கள். இப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் தனிநபர் விமரிசனங்கள், குற்றச்சாட்டுகள், கடுமையான வசவுகள் இத்தனையையும் சொன்னார்களே 243 இடங்களில் வெறும் 4 இடங்களை வாங்கியிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது. மக்கள் இவர்களது பேச்சுகளை உதாசீனப்படுத்தி விட்டார்கள். இவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்களை நிராகரித்து விட்டார்கள். இவர்களது பேச்சுக்காக இவர்கள் முகங்களில் கரியைப் பூசிவிட்டார்கள். இன்று மக்கள் விழிப்போடும் தெளிவோடும் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் மூன்று கோடிப்பேர் ஒரே மாதிரியான தீர்ப்பை அந்த மாநிலம் முழுவதும் கொடுக்க முடியுமா? இவர்கள் ஒன்றுகூடி பேசிவைத்துக் கொண்டா இந்தத் தீர்ப்பை வழங்கினார்கள்.
இதே அம்மையார் முன்னர் குஜராத் தேர்தலின் போது அங்கு சென்றார். அங்கு போய் முதல்வர் மோடியைக் கடுமையாக விமரிசனம் செய்தார். என்ன சொன்னார்? இந்த நபர் நரேந்திர மோடி இருக்கிறாரே, இவர் ஒரு “மரண வியாபாரி” என்றார். இப்படி பா.ஜ.க. தலைவரைச் சொல்வதன் மூலம் ஏற்கனவே எதிர் எதிராக இருக்கும் மதமோதல்கள் காரணமாகப் புண்பட்டுப் போயிருக்கிற அந்த மாநில மக்கள் இவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார். மோடியை கடுமையான வார்த்தைகளால் விமரிசனம் செய்வதனால் முஸ்லிம்கள் இந்த அம்மையாரின் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கருதினார். ஒரு தெருவில் பல இனத்தவர் வசிக்கிறார்கள். அவர்களுக்குள் ஏதாவது மனத்தாங்கல்கள் இருக்கத்தான் இருக்கும். அப்படி இருக்கையில் எங்கிருந்தோ வந்த ஒரு சம்பந்தமில்லாதவன் இவர்களுக்குள் மோதவிடுவது போல் சிண்டு முடிந்தால் விடுவார்களா? பாரதி சொன்னது போல, “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி” என்று பொங்கி எழுந்து விரட்டியடிப்பார்கள் அல்லவா. அதுதானே அங்கேயும் நடந்தது. அப்படியானால் போகுமிடங்களில் எல்லாம் இந்தியத் தலைவர்களை இப்படி கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தால், தான் இந்தியா முழுவதையும் ஆண்டுவிடலாம் என்ற குருட்டுக் கணக்குப் போடுகிறாரா இந்த அம்மையார்?
அப்படிப் பார்த்தால் இந்தியாவில் இந்த அம்மையார் தலைமை ஏற்றிருக்கும் கட்சி எத்தனை மாநிலங்களில் கோலோச்சுகின்றன. டில்லி, மகாராட்டிரம், ஹரியானா, ராஜஸ்தான் இதுபோன்ற ஒரு சில இடங்கள்தானே. மற்ற இடங்களில் எல்லாம் மற்ற கட்சிகள்தான். இவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசு பெட்டி பெட்டியாகக் கொண்டு வந்து கொட்டும் பணத்தைக் கொண்டு ஆங்காங்கே பாலையும் தேனையும் ஓடச் செய்திருக்கிறார்களா? வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்து விட்டார்களா? அங்கெல்லாம் உற்பத்தியைப் பெருக்கிவிட்டார்களா? வன்முறை ஒழிந்து அமைதி அங்கெல்லாம் கோலோச்சுகிறதா? உன் வீட்டை ஒழுங்கு செய்து முன்மாதிரியாக இருப்பதை விட்டுவிட்டு அடுத்த வீட்டில் எலி ஓடுகிறது, பெருச்சாளி வசிக்கிறது என்றெல்லாம் பூச்சாண்டி காட்டும் வேலையை இவர்கள் விட்டொழிக்க வேண்டும். சொல்லும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். முகத்தை கடுமையாக்கிக் கொண்டு எதிராளிகளை துச்சமாகப் பேசும் வழக்கத்தை உடனடியாக நிறுத்திக் கொள்வதுதான் நியாயமாக இருக்க முடியும். பாரதி வாக்கை இவர்களுக்கு நினைவு படுத்துவோம்: “மனதில் உறுதி வேண்டும்; வாக்கினில் இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்” அப்போதுதான் நெருங்கிய பொருள் கைவசமாகும். இதை ஒரு வேதமாகவே இவர்கள் ஏற்றுக் கொள்வதே நலம்!
மந்மொஹந்ஸிந்க்ஹ நேர்மையற்றவர் என்று ஆரம்ப முதலே தெரிந்துகொண்டவர்களுக்கு, தற்போதைய நிலை, தாங்கள் ஏமாறவில்லை, சரியாகவே கணித்தார்கள் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. நேர்மையானவர்கள், மோகன்தாஸ் காந்தியாகவே இருந்தால் கூட, காங்கிரசில் இருக்கமாட்டார்கள். என்னென்றால், காங்கிரஸ், க்ரித்தவ மத வெறியர்களால், ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்.
“//அதுதான் போகட்டும், ஒரே குடும்பத்தில் ஒரு டஜன் பேருக்கு மந்திரி பதவியில் ஆசை. மியூசிகல் சேரில் சுற்றிச்சுற்றி வந்து மியூசிக் நின்றவுடன் ஓடிவந்து உட்காருபவருக்கு பதவி, ஏமாந்தவர் வெளியேற வேண்டும். அப்படி ஒரு குடும்பத்துக்குள் மியூசிகல் சேர்.//”
சரியாகச சொன்னீர்கள் திரு. கோபாலன்! உண்மையில் மியூஸிகல்
சேர்தான் நடக்கிறது. எப்போது கிடைக்கும் கதி மோட்சம்?
November 24, 2010.
Dr. Manmohan Singh,
Prime Minister of India,
South Block,
New Delhi.
Dear Prime Minister:
You may by now have realized that the 2G Spectrum scandal is not only bad for the country in the dimension of corruption, but now it emerges that there is a national security dimension too. The RAW, IB, CBI, ED all have enough material which they may have placed before you regarding the dubious aspects of the principal player in this scam.
According to my information two sisters, Anushka and Nadia, of Ms Sonia Gandhi had received sixty percent of the kickbacks in this deal i.e. Rs.18,000 crores each. The frequent travel of Sonia Gandhi and her immediate family to Malaysia, Hongkong, Dubai and parts of Europe including London requires to be probed under the law. What requires your special attention is the mode of the travel, not by commercial airliners, but by jets provided by the corporate sector which itself is illegal under the DGCA Rules. I find that often Ms. Sonia Gandhi and family have traveled to Dubai and then traveled onwards on private jets provided by dubious Arab business interests to Europe. It is not clear on what passport they have traveled. In Dubai they were felicitated by agencies of countries which are hostile to India including that of Pakistan.
You can no more not take a stand when evil is permeating in the country in the form of terrorism, religious conversion and demographic infiltration. The ill-gotten money in billions of dollars equivalent, the money laundering and Participatory Notes have all undermined our national integrity. The time is come for you to take a stand.
I am familiar with the information and data with our intelligent agencies. I also know that you can seek cooperation of other countries especially the United States in pooling information especially from inter Intelligence interaction that take place regularly. I hope therefore you will rise to the need of the hour and take effective steps to set right the sorry state of affairs in the country caused by overtly and covertly resident foreigners. In this connection I would like to meet you at the earliest. My Secretary will be in touch with your Secretariat to fix a time.
Yours sincerely,
(Sd SUBRAMANIAN SWAMY )
மன்மோகன் சிங்க் தனிப்பட்ட முறையில் நேர்மையானவர் என்பது ஊடகங்களால் குள்ள நரித்தனமாக செய்யப்பட்ட பிரசாரம்.
முதலில் காங்கிரசில் ஒருவர் இருந்தாலே அவர் நேர்மையானவராக இருக்க முடியாது
அப்படியே மன்மோகன் சிங்க் தான் ஊழலே செய்யாவிட்டாலும் தன்னைச் சுற்றி நடக்கும் ஹிமாலய ஊழல்களைக் கண்டும் காணாதது போல் இருப்பது அவர் ஊழலுக்குத் துணை போகிறார் என்பதை உறுதி செய்கிறது.
ஒரு தவறு நடப்பதைக் கண்டும் அதைத் தட்டிக் கேட்க அதிகாரம் இருந்தும் ஒருவர் கேட்க வில்லை என்றால் அவரும் தவறு செய்தவரே ஆவார்..
அவர் எடுத்ததெற்கெல்லாம் சோனியாவிடம் ஓடுகிறார்.
அப்படியானால் இந்த ஊழல்கள் நடப்பதை கட்டாயம் சோனியாவிடம சொல்லியிருப்பார்
அதைக் கேட்டு சோனியா என் மௌனமாக இருக்கிறார்?
அவர்களுக்கு என்ன பங்கு என்றுதான் மக்கள் கேட்பார்கள்?
மன்மோகன் சிங் அரசு தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி நியமன விசாரணையில் நீதிபதிகள் மீதே ஐயம் தெரிவிக்கிறது. மறைமுக மிரட்டலாகவும் கொள்ளலாம் அதை.
போகட்டும் 1996 ல் தமிழகத்தில் முள்ளை முள்ளால் எடுப்பது போல் அதிமுக ஊழலை திமுகவைக் கொண்டு நீக்கினார்கள் வித்தகர்கள் சிலர். (அதில் hero வேடமிட்டவர் தற்போது சிரிப்பு வேடந்தாங்கி மகிழ்விக்கிறார். )
இதுபோலவே காங்கிரஸ் ஊழலை எடியுரப்பாவை கொண்டு முறியடிக்கவேண்டும் என ப ஜா க நினைக்கிறது போலும். நிலைமை மோசமடைந்தும் அவர் முதல்வராக நீடிக்கிறார். அவரது மகன்களும், மாப்பிள்ளையும் 45 கோடியை கடந்த 30 நாட்களுக்குள் எடுத்ததாக செய்தி வருகிறது. மேலும் சில நிலா மோசடிப் புகார்கள் நில மோசடிப் புகார்கள் லோகாயுக்தாவிடம் கொடுக்கப்பட்டுள்ளன. லோகாயுக்தா ஆணையாரை அத்வானி முயற்சியிட்டு திரும்பக் கொணர்ந்தார். லோகாயுக்தா ஆணையாருடன் ஊழலை முடும் முயற்சியில் மோதல்.
இதனிடையே அருண் ஜேட்லி:
காங்கிரஸ் 2008 ல் கொடுக்கப்பட்ட புகாரை ஒட்டி இரண்டாண்டுகள் கழித்தே ராசாவின் ராசினாமைப் பெற்றதாம். அதனால் பாஜவும் நிதானமாக நடவடிக்கை எடுத்தால் போதுமென்கிறார்
எங்கே போகிறோம் நாம்? எவர் தீர்ப்பார் ஊழலை?
மஹா பாரதத்தில் ஒரு காட்சி. பாஞ்சாலி துச்சாதனால் துகிலுரியப்பட்டபோது சபையில் நியாயம் கேட்கிறாள். தருமமுணர்ந்த பீஷ்மர் துரோணர் க்ருபர் முதலியோர் வாய்மூடி இருந்தது ஏன் என முறையிட்டபோது எவரும் வாய் திறக்கவில்லை. விதுரனைத் தவிர. அதர்மம் நிகழும் போது அதனைகண்டிக்காமால் மௌனமாய் இருப்பதும் அதர்மத்துக்கு துணைபோவதாகும் என்று அப்பெரியோர்கள் அறிந்தும் மௌனமாய் திரௌபதிக்கு யாரும் பதிலுரைக்கவில்லை.” நேர்மையான பிரதமர்” பீஷ்மரோ
அல்லது துரோணரோ அல்ல. அவர் திருதராஷ்ட்ரன் என்பது உண்மை. கௌரவர்கள் யார் என்பது நாம் அறிவோம். பாரதத் தாயை எல்லாம் வல்ல பரம்பொருள் காப்பாற்றட்டும்
Ramki,
எல்லா காங்கிரஸ்காரரையும் போல் அலைக்கற்றை ஊழலைப் பேசினால் உடனே எடியுரப்பா ஊழலைப் பேசுவது சரியா?
இமாலய ஊழலாகவும் ஊழல் சுரங்கமாகவும் திகழும் காங்கிரஸின் ஊழலையும் அதற்கு சப்பை கட்டு கட்டும் அதன் தலைவரையும் பற்றிய பதிவு இது. நாட்டின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் காட்டி இந்த ஊழலின் ஆதிவேரை கண்டறிய வேண்டிய தருணம் இது. இதில் தனிநபர் வழக்காடி கலக்கிக் கொண்டிருக்கும் சுசுவாமியும் எதிர்கட்சிகளும் ஊடகமும் அணி சேர்ந்து போராடிக் கொடிருக்கின்றன. இது தொடர்பான வாதங்களில் கருத்துப் பகிர்வுகளில் இன்னொரு ஊழலைக் காட்டி பிரச்சனையின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்வதால் விரக்கிதியன்றி வேறென்ன விளையப் போகின்றது?
கர்நாடக ஊழலை தனியாக பேசலாம். இந்த ஊழலுக்கு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. மத்திய பாஜகவில் பல நாட்கள் தீவிர கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. இன்னும் இந்த ஊழலை வெளிக்கொணர்ந்து தண்டிக்க வேண்டுமானால் வேறு வகை நெருக்கடிகள் – தனி நபர் வழக்கு, எதிர்கட்சியினர் போராட்டம் போன்றவற்றால் அழுத்தம் தர வேண்டும். அதை விடுத்து காங்கிரஸ் உழலுக்கு சமாதானமாக இதைப் பேசிக் கொண்டிருந்தால் அது ஓர் இமாலய ஊழல் பற்றிய கருத்துத் தீவிரத்தை நீர்த்துப் போக வைப்பதாகும்.
//“மனதில் உறுதி வேண்டும்; வாக்கினில் இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்” //
பாரதியார் பாடலை சோனியா காந்திக்கு எடுத்துச் சொல்கிறீர்களே! அதே பாரதியார் படித்தவன் பாவம் செய்தால் ஐயோ என்று போவான் என்றார். அது நிகழ வேண்டும் என்று நீஙகள் எண்ணுவது புரிகிறது. பிற சாதியினரின் முன்னேற்றத்தைக் குறுக்கே வெள்ளை நூல் போட்டுத் தடுக்கும் இந்தத் தந்திரம் கண்டு அடலேறுகள் அஞ்ச மாட்டார்கள். நீங்கள் செம்மொழித் துரோகி. ஆதிக்க சாதியின் அடிவருடிக் கூட்டம். வாழும் வள்ளுவரின் புகழ் பொறுக்காத புல்லுருவி,
பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கழகம் வழக்கொழிக்க முனையும் பல புலவர்களில் அடங்குவர். பழையன கழிதலும் புதியன புகுதலுமே வளர்ச்சி. பாரதியும், பாரதிதாசனும் பிறரும் பழையவர்கள்.
புதுமைப் புறநாநூறு, கவின் தமிழ்க் காவியப் பாவலர், தானைத் தலைவர், செம்மொழி வித்தகர், முத்தமிழறிஞர், குறளோவியம் தீட்டி வள்ளுவரை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்த மாமேதை, சமரில் சன்மானத்தால் வென்று தமிழனின் தன்மானம் காத்த சங்கத்தமிழ்ச் சிங்கம், ஈழம் காத்த இரும்பொறை, டாக்டர் கலைஞர் எழுதிய கருத்தாழமிக்க கடிதங்களும், கவிதைகளும், திரைப்பட வசனங்களும், மற்றும் புதிதாய் வந்த “செம்மொழியான தமிழ்மொழியாம்” பாடலையும் தவிர வேறு எதையும் உலகம் கேட்பது உயர்வுக்கு உதவாது என்பது உடன்பிறப்புக்களின் உறுதியான கொள்கை.
ஒரு தமிழன் செல்வச் செழிப்பில் வாழ்வது பொறுக்கவில்லை உங்களுக்கு. ஊழல் என்கிறீர்கள், விசாரணை என்கிறீர்கள், அதுதான் போகட்டும் இலக்கியம் படைக்கலாம் என்றால், பாரதியாரை உதாரணம் காட்டியே பேசுகிறீர்களே! “ஊழல் தடுப்பு தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. அது தமிழனின் முன்னேற்றத்தைத் தடுக்கக் கூடாது என்று தான் சொல்கிறோம்”. தமிழினத் தலைவன் செழிப்பது கண்டு தமிழினமே இறும்பூது எய்துகிறது, ஆனால் நீங்கள் குற்றம் சுமத்துகிறீர்கள். உங்கள் குரலுக்கு தமிழன் அஞ்சிய காலம் மலையேறிவிட்டது.
தமிழ் வாழும் காலம் இது. தமிழன் ஃபீனிக்ஸ் பறவை போல எத்தனை பேர் எத்தனை முறை மாய்த்தாலும் மீண்டு வருவான். இந்தக் கட்டுரையில் நீங்கள் சாட்டிய குற்றங்களுக்கு இதுவே தக்க பதில். வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!!
https://www.tribuneindia.com/2010/20101127/main5.htm
Tainted CVC தாமஸ் அடுத்த CBI இயக்குநரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாராம்! காலக் கொடுமை.
\\\\\\\\\\\\காங்கிரஸ் 2008 ல் கொடுக்கப்பட்ட புகாரை ஒட்டி இரண்டாண்டுகள் கழித்தே ராசாவின் ராசினாமைப் பெற்றதாம். அதனால் பாஜவும் நிதானமாக நடவடிக்கை எடுத்தால் போதுமென்கிறார்
எங்கே போகிறோம் நாம்? எவர் தீர்ப்பார் ஊழலை?\\\\\\\\\\\
\\\\\\\\\\காங்கிரஸ் உழலுக்கு சமாதானமாக இதைப் பேசிக் கொண்டிருந்தால் அது ஓர் இமாலய ஊழல் பற்றிய கருத்துத் தீவிரத்தை நீர்த்துப் போக வைப்பதாகும்.\\\\\\\\\\\\\\\\\எல்லா காங்கிரஸ்காரரையும் போல் அலைக்கற்றை ஊழலைப் பேசினால் உடனே எடியுரப்பா ஊழலைப் பேசுவது சரியா? \\\\\\\\\\
ராம்கியின் நிலைப்பாடு சரியே. ஸ்ரீ நடராஜன் காங்கிரஸ் ஊழலுக்கு சமாதானமாக எடயுரப்பா ஊழலை பேசுவது முற்றிலும் தவறு. அதே சமயம் எடயுரப்பா ஊழலை பூசி மொழுக பா.ஜ. க யத்னம் செய்வது அபத்தம். குறைந்த பக்ஷம் அவருக்கு பதில் வேறொருவரை முக்ய மந்த்ரியாக ஆக்கி இருக்க வேண்டும். ராஜநீதியில் இருப்பவர்கள் ஏப்பம் விடுவது பொது ஜனங்கள் பணம். குற்றத்துக்கு ஏற்ற தண்டனை இருக்க வேண்டியது அவசியம். இந்த மட்டிலுமே இரண்டு ஊழலும் வித்தியாச படுகிறது.
படங்களின் தேர்வு அருமை !!
குறும்புத்தனம் கொப்பளிக்கிறது !! 😉
In 2009 Lok Sabha Elections, Naveen Patnaik in Orissa contested alone, both in Loksabha and Assembly Elections, (leaving BJP) and own comfortably. BJP reduced to third place in Orissa.
What would have happened in Bihar, had Nitish Kumar gone on his own without BJP in the recently contested Assembly Elections?
Definitely, BJP would have reduced to minimum as the image of the State Administration is rested with Nitish Kumar.
ஓகை நடராஜன்,
எனது விடைக்கு முன்னால்:
முதலில் வகைப்படுத்துதல், பின்னர் வசை பாடுதல். பெரும்பாலான இணையதள விவாதங்களில் இதுவே பரவியிருக்கிறது. நீங்கள் என்னை காங்கிரஸ்காரர் என வகைப்படுத்த விழைகிறீர்கள். எனக்கு அது பொருட்டல்ல. மெய்பொருள் காண்பது அறிவு. நான் அதை விவாதிக்கவில்லை.
இனி விஷயத்திற்கு வருவோம்.
சுவாமி போராடுவது, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை கையாளும் விதம் (சுவாமியே இது பற்றி தன மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கிறார்) இவையே நம் நம்பிக்கை. இதை ஏன் எனக்கு நினைவூட்டுகிறீர்கள்?
பாராளுமன்றத்திலும் பொது அரங்குகளிலும் பா ஜ இந்த போராட்டத்தில் தொடர வேண்டுமானால் நில ஊழலைக் களைவது அவசியமாகிறது. அதையே நான் சுட்டியிருக்கிறேன். மேலும் நீதிமன்றத்தையே மிரட்டும் போக்கை காங்கிரஸ் கையிலெடுக்கிறது. அப்போது வேறு தளங்களிலும் போராடுவது தேவை. அதற்கு அப்பழுக்கற்ற பா ஜ க போன்ற எதிர்க்கட்சி தேவை. அழுக்கு மூட்டையை சுமந்திருக்கும் பா ஜ க அதற்கு உதவாது.
அது போன்ற முயற்சி 1996 ல் தமிழகத்தில் நடந்ததையும் அதன் இன்றைய விளைவையும் நீங்கள் காண்கிறீர்கள்.
மேலும் கோடிகணக்கை வைத்தா ஊழலை அளவிடுகிறீர்கள்? இல்லை அது போய்ச்சேர்ந்த இடம் வைத்தா? பழினாணுவர் அளவுகளைப் பார்ப்பதில்லை. அவ்வாறேயயினும், காங்கிரஸ் நூற்றாண்டு கடந்து இந்த அளவை எட்டிபிடித்தது என்று வைத்துக்கொள்வதா?
அதுமட்டுமில்லை. இது வரை இந்த ஊழலை பா ஜ க சரியாகக் கையாளவில்லை. அது கமிஷன் அமைத்ததே அதைப் புதைக்கும் முயற்சி. லோகாயுக்தா ஆணையர் சந்தோஷ் ஹெக்டே மீது எடியுரப்பாவிற்கு நம்பிக்கை இல்லை. அவர் பதவி விலகினார். பின் அத்வானி உட்பட பலர் தலையிட்டு அவரை விலக்கலைத் திரும்ப பெற வைத்தனர். அவரை விசாரணையிலிருந்து விளக்கி வைப்பதே கமிஷன் அமைப்பதன் நோக்கம். எடியுரப்பாவும் காங்கிரஸ், JDU வின் ஊழலை விளம்பரம் மூலமாக வெளியிடுவேன் என்கிறார். 30 மாதங்களில் விசாரித்துத் தண்டனையே கொடுத்திருக்கலாமே. வளர்ச்சி என்று விளம்பரப் போர் துவங்கியுள்ளார். வரிப்பண விரயம். பாராளுமன்ற அமளி கர்நாடக சட்டசபையில் அரங்கேறும். முன்னரே நடவடிக்கை எடுப்பது நலம்.
மோடியின் நடவடிக்கையால் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்புகளில் நில விற்ற வருவாய் விவசாயிகளுக்கு செவ்வன கிடைத்ததாகப் படித்தேன். எடியுரப்பவைத் தொடர அனுமதிப்பது மோடி போன்றோருக்கு இழைக்கும் அநீதி.
திணையளவானாலும் ஊழல் எங்கிருந்தாலும் எதிர்ப்போம்.
A ‘no-holds-barred’ analysis.
Being humble is different from being humiliated!!..7 RCR is living upto its reputation..verbatically 🙂
Stop the slumber-Dr.Manmohan Singh..
//What would have happened in Bihar, had Nitish Kumar gone on his own without BJP in the recently contested Assembly Elections?
Definitely, BJP would have reduced to minimum as the image of the State Administration is rested with Nitish Kumar.//
Statistical analysis say a different story. The problem for BJP’s low profile in Bihar is lack of a charismatic leader like Nitish Kumar, but having of one could have backfired, due to a probable ego clash in the alliance.
https://www.ndtv.com/article/assembly-polls/bihar-assembly-polls-will-bjps-sharp-showing-dull-nitishs-edge-68415
கோபாலன் ஐயா
சரியான பதிவு. முதலில் மன்மோகன் சிங் யோக்கியர் என்று நம்புபவர்கள் எவருகே கடைந்தெடுத்த முட்டாளாக பொது அறிவில்லாத ஆசாமியாக மட்டுமே இருக்க முடியும். மன்மோகன் சிங் இந்தியா கண்ட பிரதமர்களிலேயே வடிகட்டிய அயோக்யர், ஊழல்வாதி, கேவலமான ஒரு மனிதர். இவர் ஆரம்பத்தில் நிதி மந்திரியாக இருந்த பொழுதே இவரது ஊழல் வரலாறு துவங்கி விடுகிறது. இந்தியா இது வரை கண்ட ராட்சச ஊழல்கள் அனைத்துமே இவரது தலைமையிலும் ஆசீர்வாதத்திலும் மட்டுமே நடந்துள்ளது. ஹர்ஷத் மேத்தா ஊழல்களின் முக்கியமான சூத்திரதாரி இந்த மன்மோகன். அப்பொழுது இவர் நான் இந்த ஊழல்களுக்கு எல்லாம் என் தூக்கத்தை இழக்க முடியாது என்று அலட்சியமாகச் சொன்னவர் ஆனால் அதே மன்மோகன் எங்கோ ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி ஆஸ்த்ரேலியாவில் கைதான பொழுது தன் தூக்கத்தை இழப்பதாகச் சொன்னார். ஆகவே இவரது நிம்மதியும் தூக்கமும் எதில் உள்ளது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். சமீபத்தில் நடந்த ரயில் விபத்துக்களில் உயிர் இழந்த பல நூறு இந்தியர்களின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்காத இதே மன்மோகன் சிங் பாக்கிஸ்தானின் எந்த மூலையிலாவது எவனோ ஒரு பயங்கரவாதி செத்தாலும் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்துகிறார். இப்படிப் பட்ட ஒரு கேவலமான மனிதரை இந்தியா தன் பிரதமராகக் கொண்டிருப்பது இந்தியா செய்த பாவம் அன்றி வேறென்ன? ஆகவே இவர் ஊழல் செய்யவில்லை என்றோ அப்பாவி என்றோ நம்ப முடியவில்லை. இவருக்கு இந்த ஊழல்களில் எவ்வளவு போயிருக்கிறது என்ற விபரம் நமக்குத் தெரியாததினால் மட்டுமே இவர் யோக்யராகி விட மாட்டார். நிச்சய்மாக ஸ்பெக்ட்ரம் ராஜாவை விட பல மடங்கு ஊழல்வாதியும் அபாயகரமான ஒரு கிரிமினலும் இந்த மன்மோகன் (அ)சிங்கமே. இவர் நிச்சயமாக கைது செய்யப் பட வேண்டிய ஒரு படு பயங்கரமான ஊழல் பெருச்சாளி என்பதில் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது. டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக மிகத் தந்திரமாக மன்மோகனை ராஜினாமா செய்வதில் இருந்து தப்பிக்க வைத்திருக்கிறாரே ஒழிய அவரும் கூட இந்த ஆள் யோக்யன் என்று மனதுக்குள் நம்புகிறமாதிரி தெரியவில்லை. மன்மோகன் போனால் ராகூல் என்ற ஒரு தற்குறி மண்டூகம் வந்து இன்னும் மோசமான சிக்கல்கள் நடந்து விடும் என்பதினாலேயே சுவாமி மிகவும் ஜாக்கிரதையாக மன்மோகனைத் தப்ப விட்டிருக்கிறார்.
அன்புடன்
ச.திருமலை
திரு.வ.கோபாலன் அய்யா
தங்களுடைய விமர்சனம் மற்றும் வேதனை நியாயமானது.
தங்கள்
இரா.மோகன்
The percentage of the BJP win is 89 whereas that of the JD ( u) is only 77
So it is clear that the people of Bihar know what they are doing!
When Narendra Modiji had visited Bihar some months back,there were reports that he received tumultuous response.
If in every state the BJP projects a clean,dynamic and charsimatic leader and supplement them by campaign by modi,varun et al then it will become a formidable force.
They should have tried it in orissa where Navin patnaik has been purchased by the church.
திரு ஏ ராசா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு கலைஞர் பதிலளிக்கும் சமயம் அவர் தலித்து என்பதால் பத்திரிகைகள் இந்த ஊழலைப்பற்றி எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதே சுப்பிரமணிய சாமி முன்னாள் கர்நாடக முதல்வர் திரு ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மீதும் புகார்கள் கொடுத்து, வழக்குகள் தொடுத்து பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்த அவர்கள் பதவி விலக மற்றும் அவர்களின் செல்வாக்கு குறைய காரணமாக இருந்தார். அப்போது இதே கருணாநிதி அவர்கள,் பார்ப்பனர்கள் செய்த தவறுக்கும் கண்டித்து நடவடிக்கை எடுத்ததற்காக , சுப்பிரமணிய சாமியை பாராட்டி பேசவில்லை. இப்போது ராசா விஷயத்தில் மட்டும் அவர் தலித்து என்று சொல்லி இருப்பது கலைஞருக்கு துண்டு மட்டும் மஞ்சள் அல்ல, கண்ணும் மஞ்சள் ஆக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தமிழ்நேசனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் தமிழ் கலாச்சாரம் என்பது திருடி பிழைக்கும் ஒருவனுக்கு வக்காலத்து போவது என்பதை நினைகிரிர்கள் அது தவறு உங்கள் கலைஞரின் தமிழ் பற்றை போற்றுகிறேன் ஆனால் அவர் தீயதுகு துணை போவதை தமிழன் அனுமதிக்க மாட்டான்.