இந்தப் புத்தகத்தின் மூலம் மஹாபாரதத்தை எப்படிப் படிக்கவேண்டும் என்று ஹரி கிருஷ்ணன் கற்றுத் தருகிறார், நமக்கு அவர் கற்பிக்கிறார் என்னும் சுமை தெரியாமல்… பெளராணிகர்கள், நாத்திகர்கள், அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இவர்களுடைய பலவிதமான கூற்றுகள், பழிகள், குற்றச்சாட்டுகள் இவற்றுக்கு இந்த நூல் பதில் சொல்கிறது. ஒவ்வொரு வாதமும் ஆதாரங்களுடன் மின்னுவது சிறப்பு.. ஆய்வு முகம், ஆன்மீக முகம் இவையிரண்டும் சேர்ந்து அமைந்தவர்கள் குறைவுதான். இந்த ஒரு காரணத்தினாலேயே ஹரியின் இந்த நூல் அரியநூல் வரிசையில் அதுவாக அமர்கிறது…
View More மகாபாரதம்: மாபெரும் உரையாடல் – புத்தக அறிமுகம்Tag: ஹரி கிருஷ்ணன்
தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது
இந்து தர்மத்திற்கும், பாரம்பரிய அறிவுத் துறைகளுக்கும் நீண்டகாலம் சிறப்பாகப் பங்களித்துத் தொண்டாற்றி ஆசான்களாக விளங்கும் 108 பெரியவர்களுக்கு Grateful2Gurus (குருமார்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்) என்ற பெயரிலான விருதையும் கௌரவத்தையும் வழங்குவதாக இந்த ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று இண்டிக் அகாதமி அமைப்பு அறிவித்தது. நமது இணையதளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான தமிழறிஞர், கவிஞர் ஹரி கிருஷ்ணன் அவர்களின் பெயரும் இதில் இடம் பெற்றிருந்தது. 2019 அக்டோபர் 5ம் தேதியன்று பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா (பாரதிய ஜனதா கட்சி) கலந்து கொண்டு ஆசான்களுக்கு மரியாதை செய்தார். வேதகோஷம் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் ஒவ்வொரு ஆசானுக்கும் தேஜஸ்வி சூர்யா பாதபூஜை செய்து அவர்களது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்…
View More தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது