மகாபாரதம்: மாபெரும் உரையாடல் – புத்தக அறிமுகம்

இந்தப் புத்தகத்தின் மூலம் மஹாபாரதத்தை எப்படிப் படிக்கவேண்டும் என்று ஹரி கிருஷ்ணன் கற்றுத் தருகிறார், நமக்கு அவர் கற்பிக்கிறார் என்னும் சுமை தெரியாமல்… பெளராணிகர்கள், நாத்திகர்கள், அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இவர்களுடைய பலவிதமான கூற்றுகள், பழிகள், குற்றச்சாட்டுகள் இவற்றுக்கு இந்த நூல் பதில் சொல்கிறது. ஒவ்வொரு வாதமும் ஆதாரங்களுடன் மின்னுவது சிறப்பு.. ஆய்வு முகம், ஆன்மீக முகம் இவையிரண்டும் சேர்ந்து அமைந்தவர்கள் குறைவுதான். இந்த ஒரு காரணத்தினாலேயே ஹரியின் இந்த நூல் அரியநூல் வரிசையில் அதுவாக அமர்கிறது…

View More மகாபாரதம்: மாபெரும் உரையாடல் – புத்தக அறிமுகம்

சக்திதான் என்றும் !

தோளி ருப்ப தெல்லாம் -மற்றோர்
துயர்து டைக்கவென்றே! தம்பி
காளி அடங்கமாட்டாள்! செல்வக்
கட்டி லென்று கண்டோம்!….
காடும் சடையும் வேண்டாம்! இங்கே
கலி பிளக்க வந்தோம்! அவளைப்
பாடு தம்பி பாடு! இந்தப்
பாருன் கையி லாடும்!…..
ஆடுகின்ற கடலில் -நம்மை
ஆட்டு கின்ற மனதில் -இருளைச்
சாடுகின்ற கதிரில் -அறவோர்
சாந்த மான நகையில் -ஆங்கோர்
வேடு வச்சி நடையில் -நெஞ்சம்
விம்மு கின்ற கலையில் -தோன்றிப்
பாடும் அன்னை சக்தி! பார் பார்!
பரவுதங்கு செந்தீ!…

View More சக்திதான் என்றும் !

விடியல்பாட்டு

வைகறைக் கணத்தைக் குறிக்க முடியாமல், அதிகாலைப் புலர்வின் அற்புத அழகை விவரிக்கவொண்ணாமல், தோற்றுத் தோற்றுத் தோத்திரம் செய்கின்றன வேதங்கள்! நான் அந்த மந்திரக் கணத்தை, ஒரு மாதிரியாகக் கவனித்து வைத்திருக்கிறேன்!

View More விடியல்பாட்டு

கவிதை: காலின் வலிகள்…

பட்டாம் பூச்சியின் சுவாசத்தில்
பதறும் புல்நுனி நெஞ்சம்
பாகை கட்டிப் பாண்டி விளையாடப்
பரவெளி தேடிக் கெஞ்சும்!
விட்ட மூலையில் சிலந்தி துறந்த
வெற்று வலைகள் மிஞ்சும்
வெளிறிப் போன விட்டில் சிறகை
வீணே காற்று கொஞ்சும்!

View More கவிதை: காலின் வலிகள்…

கவிதை: குருவின் முறுவல் பொன் உதயம்!

தோட்டம் முழுதும் பட்டாம் பூச்சி
துரத்தத் துரத்தப் பறக்கிறது
தொட்ட கணத்தின் துன்ப நிதர்சனம்
தொல்லை யுகமாய்த் தொடர்கிறது
வேட்டைக் கிறங்கும் வேங்கை தானே
வேட்டை யாடப் படுகிறது!…

View More கவிதை: குருவின் முறுவல் பொன் உதயம்!

கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

சொல்லுள் துலங்கும் மெளனத்தில்
சொக்கிப் போய்நாம் நிற்பதனால்
அல்லை ஒளியின் கருவென்று
அதில்நின் றேநாம் கண்டதனால்
புல்லே மரமாய் மலைக்கின்றோம்
புவியே மலராய் நுகர்கின்றோம்
எல்லை பொய்யோ மெய்தானோ?
இன்னும் எதற்கு இவ்வாதம்?

View More கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

கவிதை: குருநாதன்…

நித்திரைக்கும் பிரக்ஞைக்கும்
நேரத்தில் வசப்படாத
ஒத்திகையால் தாண்ட
ஒண்ணாத ஒருகோட்டில்
சத்திரத்துத் திண்ணையிலே
சாய்ந்துறங்கும் முதியோன்போல்
அத்தனவன் என்னுள்ளே
அரிதுயிலாய்க் கவர்கின்றான்!

View More கவிதை: குருநாதன்…