மகாபாரதம்: மாபெரும் உரையாடல் – புத்தக அறிமுகம்

இந்தப் புத்தகத்தின் மூலம் மஹாபாரதத்தை எப்படிப் படிக்கவேண்டும் என்று ஹரி கிருஷ்ணன் கற்றுத் தருகிறார், நமக்கு அவர் கற்பிக்கிறார் என்னும் சுமை தெரியாமல்… பெளராணிகர்கள், நாத்திகர்கள், அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இவர்களுடைய பலவிதமான கூற்றுகள், பழிகள், குற்றச்சாட்டுகள் இவற்றுக்கு இந்த நூல் பதில் சொல்கிறது. ஒவ்வொரு வாதமும் ஆதாரங்களுடன் மின்னுவது சிறப்பு.. ஆய்வு முகம், ஆன்மீக முகம் இவையிரண்டும் சேர்ந்து அமைந்தவர்கள் குறைவுதான். இந்த ஒரு காரணத்தினாலேயே ஹரியின் இந்த நூல் அரியநூல் வரிசையில் அதுவாக அமர்கிறது…

View More மகாபாரதம்: மாபெரும் உரையாடல் – புத்தக அறிமுகம்

நிழல் [சிறுகதை]

முறிந்த தொடையிலிருந்து ஓடிய ரத்தம் சேற்றோடு கலந்து சிவப்புக் கம்பளத்தில் படுத்திருப்பதைப் போல துரியோதனன் கிடந்தான். அஸ்வத்தாமன் துரியோதனன் அருகே அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டான். கிருபர் ‘நான் சென்று பச்சிலைகள் கொண்டு வருகிறேன், கிருதவர்மரே, நீங்கள் எப்படியாவது ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்!’ என்று பரபரத்தார்… ஒன்றும் புரியாத அஸ்வத்தாமன் முழந்தாளிட, துரியோதனன் தொன்னையிலிருந்து நீரை எடுத்து அஸ்வத்தாமன் தலையில் ஊற்றினான்.
கிருபரின் மார்புக்கூடு விரிந்தது. அவரது மூச்சு கொல்லன் துருத்தி போல பெரிதாக எழுந்தது. அவரது கன்னங்கள் ரத்தம் பாய்ந்து சிவந்தன… பாண்டவர் படைகளின் கூடாரங்களில் விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. நட்சத்திரங்களின் மெல்லிய ஒளி மேகக் கூட்டத்தின் வழியே மங்கலாகத்தான் தெரிந்தது…

View More நிழல் [சிறுகதை]

கட்டாய ஓய்வு [சிறுகதை]

‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மாமா? இதைச் சொல்லத்தானே நானே வந்தேன்! நீங்கள்தான் இந்த மூடனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றான் கர்ணன். பிறகு துச்சாதனனின் கையில் இருந்த மதுக்குடுவையைப் பிடுங்கி தனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொண்டான். ‘நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன்’ என்று துரியோதனன் உறுமினான்…. சகுனி எதுவும் சொல்லாமல் ஆகாயத்தை நோக்கினார். நவமியின் நிலவை மேகங்கள் மறைத்திருந்தன. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் பிரகாசமாகத் தெரிந்தன. அனேகமாக எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. பனைமரக் கொடி பறந்த பீஷ்மரின் கூடாரத்தில் மட்டும் இன்னும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன…

View More கட்டாய ஓய்வு [சிறுகதை]

வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

மிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது. கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னகை மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்… கால் போன போக்கில் நடந்த கண்ணன் சில நாழிகைகள் கழித்தே தன் கூடாரத்துக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று கேட்டான்…

View More வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

ரிஷிமூலம் [சிறுகதை]

கண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் “தெரியும்” என்றான். சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான்….

View More ரிஷிமூலம் [சிறுகதை]