இந்திய அரசியலைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. ஆனால், தொடர்ந்து பல பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியும் இன்னபிற போலி மதச்சார்பின்மை கட்சிகளும் சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் ஒடித்து வளைத்து திரித்து வந்துள்ளனர். இந்த பிரசினையின் சில அம்சங்களை விளக்கும் முகமாக தில்லியைச் சேர்ந்த சமர்த் டிரஸ்ட் என்ற அமைப்பு “தி மெஜாரிடி ரிப்போர்ட்” என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் தமிழ் வடிவத்தை இங்கு வெளியிடுகிறோம் (தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார், பாஞ்சஜன்யம் இதழின் ஆசிரியர்)…
View More இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்Tag: அறிக்கை
வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தில் 2013 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தீவிர மத மோதல்கள் இந்து – இஸ்லாமிய வகுப்பாரிடம் நடந்துள்ளன. இம்மோதல்கள் குறித்து ஒரு பக்க வகுப்புவாத ஆதரவும் மற்றொரு சாரருக்கு எதிரான தீர்மானமான முன்முடிவு கொண்டவர்களும் கொண்ட ஒரு ‘உண்மை அறியும் குழு’ எனும் தனியார் குழு அளித்த அறிக்கைகள் வகுப்புவாத இணைய தளங்களால் இணையம் மூலம் சமுதாயத்தில் பரப்பப்பட்டன. இச்சூழ்நிலையில் அந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளையும் நிலவும் சூழலையும் அறிய அரவிந்தன் நீலகண்டன், வீர,ராஜமாணிக்கம் மற்றும் சில சமூக அக்கறை கொண்டோர் குழு கிராமத்திற்குச் சென்று இரு சமுதாய மக்களையும், மாவட்ட ஆட்சியரையும் சந்தித்தனர். அதன் அடிப்படையிலான கள அறிக்கை இங்கு தரப் படுகிறது…. தேர் நிற்கும் இடத்தை இல்லாமல் ஆக்குவதையும், தேரோடும் வீதிகளில் இந்துக்களின் மத ஊர்வலங்களையும் மணவிழாக்கள் இதர ஊர்வலங்களையும் நிறுத்துவதன் மூலமாக, தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் தம்மை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றி, தம் பண்பாட்டு அடையாளங்களையும் சமுதாய ஒற்றுமையையும் குலைக்க நினைப்பதாக இந்துக்கள் கருதுகின்றனர்…. கோயில் தேர்களுடன் ஒரு இஸ்லாமியர் மிக இயல்பாக தம் மிதிவண்டியை இணைத்து வைத்திருந்ததையும் ஒரு பழமையான மதரசா இந்துக்கள் அதிகமாக வாழும் வீதியில் இருந்ததையும் நாம் காண முடிந்தது. இத்தகைய சமரச சூழ்நிலையில் மாநில அளவில் வ.களத்தூர் பிரச்சனையை பெரிதாக்குவோம் என முழங்கும் பாப்புலர் ஃப்ரெண்ட் சுவரொட்டிகளையும் காண முடிந்தது. இஸ்லாமியர் பாரம்பரியமாக சமுதாய பொறுமையும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதாகவும் இது முழுக்க முழுக்க பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஊர் ஜமாத்தினைக் கைப்பற்றியதால் ஏற்பட்ட நிகழ்வு எனவும் மணிவேல் கூறினார். பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புதான் இந்து முஸ்லீம் ஒற்றுமையை குலைத்து வருவதாகவும் இளைஞர்களை தவறாக வழி கெடுத்து வருவதாகவும் திரு.ஹுசைன் அவர்கள் தெரிவித்தார்…..
View More வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கைகருணாநிதியும் பொய் மூட்டைகளும்
திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது[..] தமிழக முதல்வர் தனது பெயரில் சொத்துக்களை மட்டுமே தெரிவித்துவிட்டு, தனது மனைவி, துணைவி, மகன்கள் பெயரில் உள்ள சொத்துகளை தெரிவிக்கவில்லை என்பதும் மிகப் பெரிய நெருடல்.[..] லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும் [..]
View More கருணாநிதியும் பொய் மூட்டைகளும்