இது இந்தியத் திரைப்பட உலகில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் அதிசயம்.. மதம் மாறு… அல்லது…. ஓடிப் போய்விடு… அல்லது செத்துப்போ என்று காஷ்மீர இந்துக்களுக்கு விடப்பட்ட மிரட்டல் அப்படியே படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தேசம் முழுவதிலும் இருக்கும் இந்துக்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நேற்று பண்டிட்கள்… நாளை நாம் என்று ஓர் அதிர்ச்சி உடம்பெல்லாம் ஓடும். அந்த வகையில் இந்தத் திரைப்படம் இப்படியான ஒரு படுகொலை இனி நடக்காமல் தடுக்க என்ன செய்யவேண்டுமோ அதை உரத்த குரலில் எச்சரிக்கை செய்யும் கண்டாமணியோசையாக இருக்கிறது.. என்று இந்தப் படம் நம் நெற்றிக்கு நேராகத் துப்பாக்கியை வைத்துப் பாடம் எடுத்திருக்கிறது…
View More காஷ்மீர் ஃபைல்ஸ் – ஓர் இந்து இனப் படுகொலையின் கலை ஆவணம்Tag: இனப்படுகொலை
நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்
காலம் காலமாக உருவாகி வந்த இந்த உறவுகளின் வலைப்பின்னல்களை உதாசீனப்படுத்திவிட்டு பேசப்படுவது பாரத ஒற்றுமையோ அல்லது தமிழ் உணர்வோ அவை பொய்யானவையே. அவை நம்மை – பாரதியராகவும் சரி தமிழனாகவும் சரி – பலவீனப்படுத்தும். இந்த பண்பாட்டு ரத்த உறவுகளின் வலைப்பின்னல்களே ஹிந்துத்துவம்…. எனவேதான் வலிமையான பாரதத்துக்காக தென்னக மீனவ மக்களின் நன்மைக்காக கடலையே கண்டறிந்திராத அந்த வடக்கு மாநிலத்தில் குரல் கொடுத்த அந்த மனிதர் இன்றைய சூழலில் தமிழராகிய நமக்கு, தாயக தமிழரோ, ஈழத்தமிழரோ, புலம்பெயர்ந்த தமிழரோ எல்லாத் தமிழருக்கும், முக்கியமானவர் ஆகிறார்….
View More நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்
இந்த மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றால், அதில் உள்ள பிரிவினைவாத கோஷங்கள் முற்றாக நீக்கப்பட்டு, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், அடிப்படை சிவில் உரிமைகள் ஆகியவற்றையே மையமாக வலியுறுத்துவதாக இவை அமைய வேண்டும். ஆதரவு வட்டத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர குறுக்கக் கூடாது…. இவ்வளவு தூரம் தூண்டி விட்ட பின்னால், தேவையான அளவுக்கு போராட்டம் பெரிதானவுடன், அமெரிக்க அரசு அதே தீர்மானங்களின் கடுமை குறைத்து நீர்த்துப் போனதாக மாற்றுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேரம் என்ன? தேவையான அளவு கிளர்ச்சி எழுப்பப் பட்டவுடன் பந்தை அமெரிக்கா இந்தியா மீது திணிக்கிறது. இப்பொழுது ராஜபக்சேவைப் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் பால் திருப்பப் படுகிறது. இந்தியா அதைக் கட்டாயம் செய்ய முடியாது. அப்படிச் செய்யாத பொழுது தனித் தமிழ் நாடு கோரிக்கையை மேலும் வலுப் படுத்தலாம். இப்படி ஒரு திட்டம் இதன் பின்னே இருக்கக் கூடுமோ என்றும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது….
View More இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்