மானுட பிரயத்தனங்களுக்கு அப்பால் உள்ள தூய ஞானம் தான் இந்து தர்மம். இந்த பூமியில் பிற உயிர்க்காக இரங்கும் ஒருவன் இருக்கும் வரையில் இந்த தர்மம் நீடிக்கும் என்ற நம்பிக்கையை இந்த பயணங்கள் எனக்கு அளித்தன… கோனார்க்கின் சூரிய க்ஷேத்திரம். அண்டப் பெருவெளியில் காலம் எனும் தேரில் கடந்து போகும் சூரியன். அவனுடைய தேரை அலங்கரிக்கும் வாழ்வின் பல்வேறு நிலைகள். இந்த தேர் முழுக்க காலத்தை வெல்லும், இல்லாமலக்கும் இசையும், நடனத்தையும், சிருங்காரத்தையும் சேர்த்து அமைத்த மெய்கள். மனித உடலின் அபாரமான சாத்தியங்கள். நடன அசைவுகள், உடலே இசைக்கருவியாக மாறி தீராத படைப்பின் சங்கீதத்தை இசைக்கும் சிருங்கார சிற்பங்கள்… விளையாடும் யானைகள், துரத்தும் யானைகள், கூட்டத்தில் இருந்து விலகி ஓடும் யானை. நான்கு திசைகளிலும் பிரமாண்டமான அலங்காரத்தோடு கூடிய போஷாக்கான குட்டி யானைகள். எத்தனை யானைகள் வடித்த பிறகும் மகத்தான சிற்பிகளுக்கு இன்னும் நாம் யானைகளை பற்றி சொல்வதற்கு இருக்கும் தீராத ஆசையின் விளைவாக மேலும் மேலும் யானைகளை சித்தரிக்க இருக்கும் சிறு வாய்ப்புகளை கூட தவற விடாத மோகம்….
View More பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3Tag: கோனார்க்
பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2
ஒரு கட்டத்தில் அனைத்து ஆண்களும் களத்தில் மாண்டு விட பெண்கள் ஆயுதமேந்தி போராட வருகிறார்கள். மனம் வெதும்பும் அசோகன் போரை கைவிடும் முடிவை எடுக்கிறான் . இவை எல்லாம் மிக நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளது… இஸ்லாமிய படையெடுப்பில் கலிங்கத்தின் தொன்ம அடையாளங்கள், முக்கியமான வரலாற்று ஆவணங்கள், குறிப்புகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டு இருந்திருக்கிறது… இஸ்லாமிய படைத்தலைவர்கள் ஊர்களை எரியூட்டி அழித்தும், ஏராளமான பெண்களை கற்பழித்தும் , நகரங்களை நாசம் செய்தும், தீ வைத்தும் இருக்கிறார்கள். பொய்யை மட்டுமே சொல்வதற்காக பிறப்பெடுத்திருக்கும், இடது சாரி வரலாற்று ஆய்வாளர்கள் இவைகளை எல்லாம் சொல்வதற்கு வசதியாக மறந்து விடுவார்கள்.மேற்கு வங்கத்தில் இருந்த கம்யூனிஸ் அரசோ அரசாணை வெளியிட்டு இஸ்லாமிய கொடுரர்கள் செய்த பேரழிவுகளை வரலாற்றில் மறைக்க சொல்லி ஆணையிடும்…
View More பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)
இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, “விஞ்ஞானம் – ஆன்மிகம் – சமூக சேவை’ கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்…
View More இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)