இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்த வாரம் இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டதும், வாசகர்களை சந்தித்ததும் மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உரிய முக்கிய நிகழ்ச்சி. கண்காட்சி வியாழன் (ஜன.26) அன்றே துவங்கி விட்டாலும் வெள்ளிக் கிழமை தான் திட்டமிட்டபடி செயல்பட முடிந்தது. ஏனைய மூன்று நாட்களும் கண்காட்சிக்கு ஆர்வத்துடன் வந்திருந்த மக்களையும், தமிழ் ஹிந்துவின் வாசகர்களையும் சந்தித்தோம். தமிழ்ஹிந்து ஸ்டாலில் விற்பனைக்கு வைத்திருந்த “பண்பாட்டை பேசுதல்”, “சாதிகள்?”, அரவிந்தன் நீலகண்டனின் “உடையும் இந்தியா?”, “ஹிந்துத்துவம்”, “பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிசம்”, சுப்பு அவர்களின் “திராவிட மாயை” போன்ற பல நூல்கள் வாசகர்களைக் கவர்ந்தன. கண்காட்சிக்கு வந்து, எங்களை ஊக்குவித்த வாசக அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

கண்காட்சியில் சில காட்சிகள் (படங்களை க்ளிக் செய்து பார்க்கவும்)

[captiongroup]


நுழைவாயில்

கண்காட்சியின் உள்ளே...
spiritualfair2012-4

spiritualfair2012-5
spiritualfair2012-6
மக்கள் கூட்டம்
தமிழ்ஹிந்து ஸ்டால்

தமிழ்ஹிந்து குறித்து தினமணி செய்தியில்

[/captiongroup]

***

சென்னையில் ஒரு திருவிழாவாகவே ஆன்மீக கண்காட்சி நடந்தேறியது போல ரதசப்தமி தினமான ஜனவரி 30, அன்று ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் சுமார் ஐந்து லட்சம் ஹிந்துக்கள் சூரிய பகவானை வணங்கிப் புனித நீராடினர். இந்த ஆண்டு எந்த வித அசம்பாவிதங்களும் நேராமலிருக்க பலமான பாதுகாப்பும், பக்தர்கள் வசதிக்காக டென்ட்கள் ஆங்காங்கு சிறப்பாக அமைக்கப் பட்டிருந்தன. இங்கே சந்திரபாகா என்கிற நதி இருந்ததாக ஐதீகம். இப்போது அது ஒரு ஏரியாகத்தான் காட்சி அளிக்கிறது. ஆண்டுதோறும் இந்த தினத்தில் பெருந்திரளான மக்கள் புனித நீராடி வருகின்றனர்.

***

சென்ற வார இறுதியில் (ஜன 27-28) பூரண தத்துவ சபையின் சார்பில், “விஞ்ஞானம் – ஆன்மிகம் – சமூக சேவை’ எனும் தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தியோசோபிக்கல் சொசைட்டியின் தலைவர் செல்வராஜ் “அக்னி ஹோமம், கூட்டுப் பிரார்த்தனை போன்ற, இந்து சமயத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் அறிவியல் பூர்வமானவை” என்று கூறினார். தொல்லியல் துறை முன்னாள் தலைவர் தியாக.சத்தியமூர்த்தி, “தொல்லியலும், விஞ்ஞானமும்’ எனும் தலைப்பில் பேசும்போது, “”பெருவழுதி என்ற, சங்கால பாண்டிய மன்னன் வெளியிட்ட நாணயத்தில், அசுவமேத யாகத்தை விவரிக்கும் வகையில், குதிரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் பழமைமிக்க கோவில்கள், சிற்பங்கள், சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவை, நம் வேதங்களில் சொல்லப்பட்ட செய்திகளை உணர்த்துகின்றன. இவற்றின் பெருமையை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் பணியை எங்களின், “ரிச் பவுண்டேஷன்’ செய்கிறது,” என்றார்.

***

பகவத் கீதை மத நூல் அல்ல; அது வாழும் நெறி எனவும் சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பகவத் கீதை கற்பிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்தது. இதை எதிர்த்து கத்தோலிக்க பிஷப் கௌன்சிலின் மக்கள் தொடர்பாளர் ஆனந்த் முட்டங்கல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நீதிபதிகள் அஜித் சிங், சஞ்சய் யாதவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. வழக்கின் தீர்ப்பில் பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல; அது ஒரு வாழும் நன்னெறியை போதிக்கிறது. சமூக நீதியைக் காப்பதன் முக்கியத்துவத்தை கீதை வலியுறுத்துகிறது என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

***

புதுக்கோட்டை அருகே குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவரை அடித்து அவமானப் படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே கறம்பக்குடி கரு.வடதெரு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கலைமணி. பெண் தலித் ஊராட்சித் தலைவர் இவர். இவர் தேசியக் கொடி ஏற்ற முயன்றபோதுதான் இந்த அடி உதை சம்பவம் நடந்துள்ளது. அதே போல, ராஜா குடியிருப்பு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும் ஊராட்சித் தலைவரை கொடியேற்றவிடாமல் சாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்து தலைமை ஆசிரியரை கொடியேற்ற வைத்துள்ளனர்.

தலித் இன மக்கள் ஆட்சியமைப்பில் உரிய முக்கியத்துவம் பெறுவதை விரும்பாத சாதி வெறியர்களை தமிழ்ஹிந்து வன்மையாகக் கண்டிக்கிறது. பாதிக்கப் பட்டோருக்கு எமது அனுதாபங்கள். ஹிந்து அமைப்புகள் இது போன்ற நிகழ்வுகளில் தலையிட்டு தலித் இன மக்களின் உரிமையை பாதுகாத்துக் கொடுப்பதே ஒரு நல்ல தீர்வாக அமையும் என்று நம்புகிறோம்.

***

கோவிலில் மணி அடிக்கக் கூடாது. மஹா ஆரத்தி நிகழ்த்தக் கூடாது என்று அரசு உத்தரவிடப் பட்டுள்ளது. எங்கே இது, பாகிஸ்தானிலா? என்று கேட்கிறீர்களா இல்லை, இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள பாக்யலட்சுமி கோவிலில் தான். வெள்ளிக் கிழமை அன்று இக்கோவிலில் விமரிசையாக பூஜைகள் நடப்பது வழக்கம். அருகில் உள்ள மசூதியில் தொழுவதற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று புகார் அளித்ததன் பேரில் காவல்துறை கோவில் நிர்வாகஸ்தர்களை அணுகி கோவிலில் இருந்து மணிச்சத்தம் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் கோபமும் எழுந்துள்ளது.

இப்பகுதியில் எம்.எல்.ஏ வாக உள்ள MIM கட்சியின் அக்பருத்தீன் என்பவர், ராம நவமி போன்ற விழா தினங்களில் கோவில் சுவாமி ஊர்வலம் வரக் கூடாது என்று தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்துக்கள் உரிமை கோரும் போதெல்லாம், அதை எதிர்த்து வரும் மத நல்லிணக்கவாதிகள் இப்போது என்ன சொல்வார்களோ! இது நாள்வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்த போது, இப்போது மட்டும் திடீரென்று இப்படி ஒரு உத்தரவு வரக் காரணம் என்ன? இதைப் பற்றி சிந்திக்கக் கூட மனமின்றி பல இந்துக்களே போலி மதச்சார்பின்மை வாதிகளாக இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் ஒரு எச்சரிக்கை மணி.

***

கோவில்களுக்கு வெளியே இருந்து மட்டும் அபாயம் இல்லை. உள்ளே நிர்வாகம் செய்கிற அலுவலர்களிடம் இருந்தே அபாயம் நேருகிறது. விருதுநகரில் சொக்கநாதசுவாமி கோவிலில் எக்ஸிக்யூடிவ் ஆபீசராக உள்ளவர், கோவிலின் அன்னதான திட்டத்துக்கான நிதியில் இருந்து சுமார் 13 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்ததன் பேரில் கைதாகி இருக்கிறார். இது ஒரு கோவிலில் கண்டுபிடித்து கைது செய்திருக்கிறார்கள். இன்னும் கண்டும் காணாமலும் எத்தனையோ கோவில்களில் கூட்டுக் கொள்ளைகள் நடந்து வருகின்றன. கோவில் நிர்வாகம் அரசின் கையில் இருப்பதும், அரசியல்வாதிகள் துனையிருப்பதாலும் இத்தகைய சம்பவங்கள் வெளியே தெரியாமலே போய்விடுகின்றன. தெரிந்தாலும் நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது எளிதல்ல என்பதே நிதரிசனம்.

***

வசந்த பஞ்சமி இந்த வருடம் ஜனவரி-28ம் தேதி வந்தது. வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நாளாக, கலைவாணியின் பூஜைக்குரிய புனித நாளாக வட இந்தியாவெங்கும் இந்தப் பண்டிக்கை கொண்டாடப் படுகிறது. கடந்த பல வருடங்களாக இந்த நாளில் மத்திய பிரதேசம் போபாலுக்கு அருகே உள்ள போஜ்சாலா என்ற ஊரிலுள்ள சரஸ்வதி கோயிலில் வழிபாடு நடத்துவதில் பிரசினைகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த புராதன ஆலயம் போஜ மகாராஜனும் மகாகவி காளிதாசரும் வணங்கிய பெருமை வாய்ந்தது. இடைக்காலத்தில் இசுலாமிய படையெடுப்பாளர்கள் கோவிலைக் கொள்ளை
அடித்து அதே இடத்தில் மசூதி ஒன்றை கட்டி விட்டனர். பிறகு அதுவும் சிதிலமடைந்தது. இந்தக் கோவிலுக்கு உரியதாகக் கருதப் படும் சரஸ்வதி தேவியின் அழகிய சிலை ஆங்கிலேய ஆட்சியில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அங்கே ஒரு ம்யூசியத்தில் உள்ளது. இப்போது இடிபாடுகளுடன் கூடிய போஜ்சாலா கோயில் தொல்பொருள் துறையால் பராமரிக்கப் பட்டு வருகிறது.

சென்ற வருடம் வசந்த பஞ்சமி தினத்தன்று வழிபாட்டிற்காக கொண்டுவரப் பட்ட வேறொரு வாக்தேவி சிலையை பக்தர்களிடம் இருந்து அரசு பறிமுதல் செய்தது. இந்த வருடம் திருவிழா சமயத்தில் 144 தடையுத்தரவே பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இங்கே இந்துக்கள் செவ்வாய்க் கிழமைகளிலும், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையிலும் வழிபாடு செய்து வந்தனர். இப்போது ஹிந்துக்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வாக்தேவி சிலையை திரும்ப கொண்டுவர உதவ வேண்டும் என்றும், இந்துக்களுக்கு தொடர்ந்த வழிபாட்டுரிமை வழங்க வேண்டுமென்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

***

பார்சல் குண்டு மூலம் இந்து முன்னணி தலைவரின் மனைவி கொல்லப்பட்ட வழக்கில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ரிபாயி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு நாகூரைச் சேர்ந்த இந்து முன்னணித் தலைவரான முத்துக்கிருஷ்ணன் வீட்டுக்கு தபால் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்த முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம், அதில் இருந்த வெடிகுண்டு வெடித்துப் பலியானார்.

இந்த வழக்கில் ரிபாயி,குத்புதீன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தற்போது ரிபாயி, குத்புதீன் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். சமீபத்தில்தான் ரிபாயி, தமுமுக மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், ரிபாயி, குத்புதீன் மற்றும் புழல் சிறையில் உள்ள 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

***
சுவிஸ் வங்கிகளில் புழங்கும் கருப்புப் பணம் மற்றும் ஏனைய ஊழல்களுக்கு எதிராக சுப்பிரமணியம் சுவாமியால் ஆரம்பிக்கப் பட்ட இயக்கம் ”ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக் குழு” – Action Committee against Corruption in India. அண்மையில் தான் இந்தக் குழு செயல்படத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் விவகாரத்தில் சி.பி.ஐ. சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான கோர்ட் நடவடிக்கைகளில் இந்தக் குழு இறங்கியிருந்தது.

இந்நிலையில் இந்தக் குழுவின் ACACI.IN இணைய தளம் பாகிஸ்தான் ஸைஃபர்
தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. “நாங்கள் உண்மையான பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தான் ஸைஃபர் போலீஸ் நாங்கள். முடிந்தால் எங்களைப் பிடித்துப் பார்” என்ற வாசகங்களையும் ஹேக் செய்யப்பட்டுள்ள தளத்தில் கொக்கரித்துள்ளார்கள். தற்சமயம் இது சரி செய்யப் பட்டு விட்டதாக தெரிகிறது. இது ஒன்றும் புதியதல்ல, சில இந்திய அரசுத் தளங்களே ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டிலுள்ள விஷமிகளால் இது போல ஹேக் செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

***

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாகவும், அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்தக் கோரியும் இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் உடையார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடமும், மத்திய குழுவிடமும் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது அங்கு வந்த உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் குழுவினருடன் தகராறு ஏற்பட்டு கடும் மோதல் ஏற்பட்டது.

***

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும், தமிழர்களின் கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் வகையிலும் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 9 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் கட்டிடங்கள் இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். 9 மீட்டர் உயரத்தை தாண்டி சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

***

ஆப்பிரிக்கா மானுடத்தின் தொட்டில் என்பது இனி இல்லை என்று மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளன. இப்போது யூரோப், ஆசியா ஆகிய பல இடங்களில் வெவ்வேறு பிராணிகளிடையே கலப்பால் மானுடம் எழுந்தது என்று சொல்லத் தலைப்பட்டிருக்கிறார்கள். இது பலவிதத்தில் இன அரசியலைக் கலக்கப் போகிறது. குறிப்பாக ஆரிய படையெடுப்பு வாதத்தை இது எப்படி பாதிக்கும் என்று பார்க்க வேண்டும். அதே சமயத்தில் பல இடங்களில் மானுடம் பிறந்தது என்பது ஆபிரகாமிய மதங்களின் ஆதாரக் கோட்பாடுகளை தகர்க்கக் கூடும்.

***

ஜனவரி 26 அன்று, ராமேஸ்வரத்தில், விவேகானந்தர் அமெரிக்கா சென்று இந்தியா திரும்பிய நாளை நினைவு கூறும் வகையில், பாம்பன் குந்துகால் கடற்கரையில் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விவேகானந்தர் அமெரிக்கா சிகாகோ நகரில் நடந்த, சர்வ சமய மாநாட்டில் கலந்து கொண்டு, 1897 ஜன., 26ல் நாடு திரும்பியபோது, இலங்கை சென்று அங்கிருந்து கப்பல் மூலம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் தான் வந்திறங்கினார்.

ராமநாதபுரம் சமஸ்தான மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதி, தமது பரிவாரங்கள் மற்றும் பொதுமக்களுடன் குந்துகால் கடற்கரையில், விவேகானந்தருக்கு வரவேற்பு கொடுத்தார். படகில் இருந்து இறங்கிய விவேகானந்தரின் கால்பாதங்கள் நிலத்தில் பதியும் முன், தனது தலையில் வைத்து இறங்குமாறு கூறிய பாஸ்கர சேதுபதி, முழங்காலிட்டு கடற்கரை மணலில் அமர்ந்தார். மெய்சிலிர்த்துப்போன விவேகானந்தர் இதை மறுத்து சேதுபதியை கட்டித் தழுவிக்கொண்டார். பின் இரட்டை குதிரை பூட்டிய சாரட்டில், விவேகானந்தரை அமர வைத்த பாஸ்கரர் குதிரைகளின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, தானே சாரட்டை இழுக்கத் துவங்கினார். இதைப் பார்த்த சமஸ்தான அதிகாரிகள், மன்னருடன் சேர்ந்து சாரட்டை இழுத்து விவேகானந்தரை பாம்பனில் இருந்த சேதுபதி கோட்டைக்கு அழைத்து சென்றனர்.

சுவாமி விவேகானந்தர் இந்தியா திரும்பிய இந்நினைவைப் போற்றும் வகையில், பாம்பன் குந்துகால் கடற்கரையில் விழா நடந்தது. மாலை 4 மணிக்கு, விவேகானந்தர் வேடமணிந்த மாணவர் ஒருவர் படகில் வந்திறங்க, கடற்கரையில் மன்னர் பாஸ்கர சேதுபதி மற்றும் அமைச்சர்கள் வேடமணிந்த மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாள முழக்கத்துடன் நடந்த கடந்த கால வரலாற்று நிகழ்வின் தத்ரூப காட்சியை கடற்கரையில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர். தொடர்ந்து விவேகானந்தர் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் உபதலைவர் சுவாமி சங்கரானந்த மகராஜ் தலைமை வகித்தார்.

அடுத்த ஆண்டு 2013 சுவாமி விவேகானந்தர் அவதரித்து நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா அனுசரிக்கப் படுகிறது. அதன் ஒரு கட்டமாக அமெரிக்காவில், சிகாகோ பல்கலைக் கழகத்தில் விவேகானந்தர் குறித்து துறை ஒன்றை துவக்க இந்திய அரசு 1.5 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கி உள்ளது.

8 Replies to “இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)”

 1. இரு விஷயங்கள் :-

  1. ப்ரதேசாந்திர தமிழ் ஹிந்துக்களுக்கு ஹிந்து தமிழறிஞர்களின் புஸ்தக கண்காட்சி

  \\\\இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டதும், வாசகர்களை சந்தித்ததும் மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உரிய முக்கிய நிகழ்ச்சி. \\\\

  ஒரு விக்ஞாபனம். சென்னையைப் போன்று தில்லி, மும்பை, கொல்கத்தா போன்று ப்ரதேசாந்திரத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் குறைந்த பக்ஷம் வருஷம் ஒரு முறை தனியாகவோ அல்லது அந்த ப்ரதேசங்களில் உள்ள ஹிந்து இயக்கங்கள் நடத்தும் ஷிபிர் அல்லது விழாக்களினூடோ ஹிந்து தமிழறிஞர்களின் புஸ்தக வெளியீடுகளை விற்பனைக்கு வைத்தல் பலருக்கு பயனளிக்கும். அது சம்மந்தமான செய்தி தமிழ் ஹிந்துவில் முன்கூட்டி தெரிவித்தால் ப்ரதேசாந்திர தமிழர்களுக்கு பேருபகாரமாக இருக்கும்.

  2. இஸ்லாமிய க்றைஸ்தவ மத சம்பாஷணம் :-

  மதங்களினூடே சம்பாஷணங்கள் எந்த அளவு பயனளிக்க வல்லவை என்பதில் எனக்கு மிகுந்த சந்தேகம் உண்டு. குறிப்பாக் தொலைக்காட்சியில் ஜாகிர் நாயக் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களிடையேயான அப்படி ஒரு சம்பாஷணம் பார்த்து நொந்தது உண்டு.

  சமீபத்தில் க்றைஸ்தவர் மற்றும் இஸ்லாமியரிடையே இது போன்று ஒரு சம்பாஷணம் நிகழ்ந்தது. பரஸ்பர வசைமாறலில் முடிந்ததாக தெரிகிறது. சென்னையில் நிகழ்ந்த இந்த நிகழ்வினை தமிழ் ஹிந்துக்கள் பலர் அறிந்திருக்கலாம். இணையத்தில் நான் படிக்க நேர்ந்தது. மேல் அதிக விபரங்களுக்கு கீழே சுட்டியை பார்க்கவும்

  https://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/san-ran-away-from-debate/

 2. மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு, சிறப்பாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

  பாஸ்கர சேதுபதியின் பக்தியைப் படிக்கும்போது ஒருமுறை உடல் புல்லரித்தது நிஜம்.

  வாழ்க !

  .

 3. //மணி அடிக்கக் கூடாது. மஹா ஆரத்தி நிகழ்த்தக் கூடாது என்று அரசு உத்தரவிடப் பட்டுள்ளது. எங்கே இது, பாகிஸ்தானிலா? என்று கேட்கிறீர்களா இல்லை, இந்தியாவில் ஹைதராபாத்தில் உள்ள பாக்யலட்சுமி கோவிலில் தான். //

  ஹைதராபாத்தின் உண்மையான பெயர் பாக்யநகரம்.

  அது இந்தக் கோயிலின் பெயரில் இருந்து வந்த ஒன்று என்று கேள்வி.

  .

 4. Dear Tamil Hindu Team, please read the following comment that was made by a Mumeen in a site.
  Actually this is with reference to an ex-muslim and how he is being tortured by the fellow Mumeen in a place in Tamil Nadu. He is so tortured for a simple reason that, he criticised various stupid concepts of this ‘Desert Blabbering’ and hence a ‘Financial Bar’ has been made on him by the local Mumeens. They have adviced no one to purchase anything from His shop and all supports to him by means of money and materials got stopped!

  And, this particular person who has commented is very happy for doing these mental tortures to a person for a simple reason that he rose against the religion. See how the minds of Mumeens are poisoned. When the social organistations in India raise slogans to avoid purchasing anything from Mumeen’s shop, these stupid people claim for Democracy and Social Co-existance. But they do the same thing for an ex-Muslim. This is a ‘cut throat’ trend that they follow everywhere. What these people are going to achieve by being always aukward in their entire life time! What would happen if these people get majority in our Home Land! True efforts like yours should be always there and that should help people to know the real face of Muham-mad and ISLAM!

  “கடையநல்லூரில் பதிவருக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து, ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் அவர் விதைத்ததை அவர் அறுத்தார். என்னைப் பொறுத்த மட்டில், அவர் எந்த இஸ்லாத்தை மலம் என வர்ணித்து அதனை அசிங்கப் படுத்தினாரோ அந்த இஸ்லாத்தை தனது வாழ்நெறியாக கொண்டு வாழும் மக்களிடம் தனது ஜீவாதாரத்திற்காக இனியும் அவர் நம்புவதும் கையேந்தி கடைவிரிப்பதும் கடைந்தெடுத்த மடத்தனம் மற்றும் நயவஞ்சகத் தனம்…. அந்தக் கடை முதலாளி இனி தனது கைச்சரக்கை அவரது அன்புக்குரியவர்களிடம் விற்கலாம். யார் தடுப்பார். இஸ்லாத்தில் மறுக்கப்பட்ட இறைச்சியை அவரிடம் யார் இனிக் கொள்வார். தஜ்ஜால்கள் தேடிவந்து அவரது கல்லாவை நிரப்புவார்கள். நாசப்பட்டு நலிவடையும் நாகரீகம் தெரியாத ஒரு பதிவனை ஒரு பார்வையாளனாக நானும் கண்டு பாதையோடு செல்கிறேன். நிறைந்த மனதுடன்.” – A Mumeen!

 5. ///வெள்ளிக் கிழமை அன்று இக்கோவிலில் விமரிசையாக பூஜைகள் நடப்பது வழக்கம். அருகில் உள்ள மசூதியில் தொழுவதற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று புகார் அளித்ததன் பேரில் காவல்துறை கோவில் நிர்வாகஸ்தர்களை அணுகி கோவிலில் இருந்து மணிச்சத்தம் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ///

  மிகவும் அவமானகரமான செய்தி, ஹிந்துக்கள் இன்னும் கூட சுரணை இல்லாமல், செக்யூலரிசம், எம்மதமும் சம்மதம் , என்றெல்லாம் ஏமாந்த சோனகிரியாக பேசிக்கொண்டிருந்தால், நாளை நம் வீட்டுக்குள் சாமி கும்ப்பிடுவதோ ஏன், நாம் ஹிந்து என்று சொல்லிக்கொள்ளக்கூட தடை வரலாம். ஹைதராபாத் ஏற்கனவே செமி முஸ்லீம் நாடு போலத்தான் இருக்கும். இவர்களை வளர விடுவது நல்லதல்ல. ஹிந்துக்களே,! வெளிப்படையாக பொது இடத்திலும் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் இது போன்ற விஷயங்களைப் பற்றி பேசத்துவங்குங்கள். இல்லை நாளை நம் பூமி நமக்கில்லை. நாம் வாழ இடமில்லை! எழுமின்! விழிமின்!

 6. ஹிந்துக்களே! இனியும் நாம் பொறுத்தல் கூடாது.வரும் காலத்தில் ஹிந்து எனும் வார்த்தைக்கு கூட தடிவிதிக்க நம்மவர் தயங்கமாட்டார்.புரிந்துகொள்ளுங்கள் “குட்டக் குட்டக் குனிகிரவனும்” முட்டாள்.விளிதுக்கொளுங்கள் வரும்காலம் நம்முடையதாகும். “ஜெய் காளி”

 7. பாரத நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை எந்தக் கோவிலிலும் மணி அடிக்கக் கூடாது என்று அறிவிப்பு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அசிங்கம்.

 8. இந்த நிகழ்வு முஸ்லிம்களின் பலத்தால் மட்டும் நடந்தது அல்ல .ஹிந்துகளின் பலவீனத்தால் தான் நடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *