பிரபல உபன்யாசகர் துஷ்யந்த் ஶ்ரீதர் மீது பிரபல ஆலயப் பாதுகாப்பு போராளி ரங்கராஜன் நரசிம்மன் விடுத்துக் கொண்டிருக்கும் சமீபத்திய எதிர்ப்பு வீடியோ ஏவுகணைகள் குறித்து எனது கருத்து என்ன என்று கேட்டார் நண்பர் ஒருவர். “அரைகுறை வரலாற்று ஆராய்ச்சி கோமாளித்தனத்தைக் குறிவைத்து குருட்டு சம்பிரதாயவாத கோமாளித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்”, என்று கூறினேன்… நமக்குத் தேவை முதிர்ச்சியான, ஆழமான, பன்முகப் பார்வை கொண்ட கண்ணோட்டங்கள்…
View More இராமாயண கால ஆராய்ச்சி, உபன்யாசகர்கள், சம்பிரதாயவாதிகள்Tag: சதுர்யுகம்
ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1
செவி வழி வந்து, பின்பு எழுத்துக்கள் மூலம் நம்மை அடைந்ததுதான் நமது புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் என்பதை நாம் அறிவோம். வேத-உபநிஷத்துகள் கூறும் உயர்ந்த தத்துவங்களை, பேச்சு வாக்கில் மக்களிடம் பரப்புவதற்காக, நடந்த நிகழ்ச்சிகளை தத்துவங்களோடு ஒப்பிட்டு, வாழும் வகையைக் காட்டுவதில் இதிகாசங்கள் மென்மையான, மற்றும் மேன்மையான வழிகாட்டிகளாக விளங்கின. இதிகாசங்கள் பாரதத்தில் நடந்த நிகழ்வுகளின் கோவையான நமது பண்டைய சரித்திரங்களாக இல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? ஏனென்றால், எவ்வாறு வேத மந்திரங்களை ஒருவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு பதிவு செய்துகொண்டார்களோ, அதேபோல நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் பயன்படும் முறையில் நீதி, நேர்மைக்கான கோட்பாடுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1