உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியது சம்ஸ்கிருதம் மற்றெல்லா மொழிகளையும் விட அறிவியல்*பூர்வமான* மொழி என்பதைத் தானே தவிர, உடனடியாக அறிவியல் பாடங்களை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் படிக்க வேண்டும் என்பதாக அல்ல… வேறெந்த மாநிலத்திலும், ஆங்கில ஊடகங்களிலும் கூட இந்த செய்தியினால் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதை ஏதோ பெரிய பிரசினையாக்கிக் கொண்டிருக்கின்றன. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்று பாரதியார் சொல்லவில்லையா என்ன? அதே போன்ற ஒரு லட்சிய வாசகம் தான் “க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்” என்பது. எல்லா மக்கள் இயக்கங்களுக்கும் இத்தகைய வாசகங்கள் தேவை…மொத்தத்தில் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக எந்த பிரசினையையும் குற்றச்சாட்டையும் கிளப்ப முடியவில்லையே என்ற புகைச்சலும் நமைச்சலும் மட்டுமே இதில் தெரிகிறது….
View More சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?Tag: சம்ஸ்கிருத மயமாக்கல்
புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு
சமஸ்கிருதம் என்றாலே அது தீட்டுப்பட்ட மொழிபோலவே நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது…
View More புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவுஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2
சாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன? அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா?…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி?…
View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2