சாஸ்திரிகளின் கீர்த்தனைகள் பக்திச் சுவை நிரம்பியவை. சக்தி உபாசகரான அவரின் பெரும்பாலான கீர்த்தனைகள் அம்பாளைக் குறித்தே, அதிலும் அவரின் பூஜ்ய தேவதையான பங்காரு காமாட்சியைக் குறித்தே அமைந்தவை. ..‘மாயம்மா’ என்ற ஆஹிரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை மனமுருகப் பாடினார். மும்முறை ‘நம்பினேன்’ என்று சொல்வதின் மூலம் அம்பிகையின்மேல் அவர் வைத்த அசையாத நம்பிக்கை புலப்படுகிறது. உள்ளத்தை உருக்கும் அப்பாடலைக் கேட்டு அங்கிருப்போர் மட்டுமல்ல மீனாட்சி அம்பிகையே மனமுருகியிருக்க வேண்டும்… அவரது கீர்த்தனைகள் நுட்பமான தாளக் கணக்குடன் அமைந்தவை. குறிப்பாக, மிஸ்ர சாபு தாளத்தை அவர் அசாதாரணமான முறையில் கையாண்டிருக்கிறார். இதனால், தேர்ந்த சங்கீத வித்வான்களால் மட்டுமே அவரது கீர்த்தனைகளை அனுபவிக்கவும் பாடவும் முடிகிறது. நாட்டியங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த ஸ்வரஜதியை, செவ்விசை வடிவமாக்கிய பெருமை அவருக்கு உண்டு…
View More எப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்Tag: தாளம்
கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது… எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்… வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு.
View More கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வுஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்
புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள்? .. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்… தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு!
View More ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை
”கருணை முருகனைப் போற்றி – தங்கக் காவடி தோளின் மேலேற்றி…. “ – காவடிச்சிந்து மெட்டுக்கள், படித்தவர், பாமரர் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. காவடிச்சிந்து என்றாலே நம் நினைவுக்கு வருபவர், அண்ணாமலை ரெட்டியார்… இங்கு கழுகுமலையில் கடலொத்த வீதிகள் காணப்படுகின்றன. அங்குள்ள கடைகளின் முன்பு முத்துப் பந்தல் போட்டிருக்கிறார்கள். அந்தப் பந்தலின் ஒளியினால் அஷ்ட கஜங்களுடைய தந்தங்களின் ஒளி கூட மழுங்கி விடுமாம்!
View More காவடிகள் சிந்து பாடும் கழுகுமலைசொற்றமிழ் சூடுவார்
பேணிக் காப்பாரின்றி எண்ணற்ற சிவன் கோயில்கள் தமிழகத்தில் சிதிலமடைந்து வருவதுபோல ஓதுவார் பரம்பரையும் போற்றுவாறின்றி மங்கி வருகின்றது… தீட்சிதர் கீர்த்தனைகள் திருமுறைகளுக்கு எதிரானவை அல்ல; தீட்சிதர் சுந்தரமூர்த்தி நாயனார் மேல் பத்திகொண்டு அவரைப் போற்றி ‘டக்கா’ என்னும் அபூர்வராகத்தில் ஒருகீர்த்தனை இயற்றியுள்ளார் …
View More சொற்றமிழ் சூடுவார்இசைக்கூறுகள் – 2 : பாகம் 01- தாளம் மற்றும் ஸ்வரம்
ராணுவ அணிவகுப்புகளில் இருக்கும் ஒற்றுமை தாள அடிப்படையிலேயே அமைந்திருக்கும்… இதில் நாம் இருவகை இயக்கங்களை ஒரே நேரத்தில் செய்கிறோம். அப்படி செய்யும்போதே ஒரு ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் நிகழ்கின்றது. இதைப் போன்று தொடந்து செய்து வந்தால் இரு பகுதிகளாக மட்டுமே பிரிக்க முடியும். ஒரே போன்ற இசை அமைப்பு மட்டுமே உருவாகியிருக்கும்.
View More இசைக்கூறுகள் – 2 : பாகம் 01- தாளம் மற்றும் ஸ்வரம்