அவர் அமெரிக்கா வருவதற்குமுன் அவரது தம்பி ஆறு வயதில் காலமாகி விட்டான் என்றும், என் மகனைப் பார்த்தால் அவன்நினைவு வருகிறது என்றும், ஆகவே என் மகனுக்கு வாங்கித் தருவது காலம்சென்ற தனது தம்பிக்கு வாங்கித் தருவதுபோல இருக்கிறது என்று மனம்விட்டு தனது உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொண்டார்.
திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம்சொல்ல மறுத்துவிட்டார். சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
Tag: பச்சாத்தாபம்
கையாலாகாதவனாகிப் போனேன்! – 1
என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை. எந்தவொரு மாட்டுவண்டியைப் பார்த்தாலும் என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
View More கையாலாகாதவனாகிப் போனேன்! – 1