உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியது சம்ஸ்கிருதம் மற்றெல்லா மொழிகளையும் விட அறிவியல்*பூர்வமான* மொழி என்பதைத் தானே தவிர, உடனடியாக அறிவியல் பாடங்களை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் படிக்க வேண்டும் என்பதாக அல்ல… வேறெந்த மாநிலத்திலும், ஆங்கில ஊடகங்களிலும் கூட இந்த செய்தியினால் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதை ஏதோ பெரிய பிரசினையாக்கிக் கொண்டிருக்கின்றன. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்று பாரதியார் சொல்லவில்லையா என்ன? அதே போன்ற ஒரு லட்சிய வாசகம் தான் “க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்” என்பது. எல்லா மக்கள் இயக்கங்களுக்கும் இத்தகைய வாசகங்கள் தேவை…மொத்தத்தில் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக எந்த பிரசினையையும் குற்றச்சாட்டையும் கிளப்ப முடியவில்லையே என்ற புகைச்சலும் நமைச்சலும் மட்டுமே இதில் தெரிகிறது….
View More சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?Tag: ராஜ்நாத் சிங்
சாக்ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?
அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்ஷி மஹராஜ், சாத்வி…
View More சாக்ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?புதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்
பழைய ஆட்சிகளின் புளித்துபோன பாணியிலிருந்து விலகி 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை முடிவுசெய்வது, அமைச்சர்கள் தங்களது உறவினர்களுக்கு பதவி அளிக்கக்கூடாது எனும் எச்சரிக்கை ஆகியவை நல்ல தொடக்கத்தையும் பொதுமக்களான நமக்கு நம்பிக்கையையும் அளிப்பவையாக உள்ளன… ஸ்மிருதி இரானியி தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதிலளித்துள்ளார், தன்னை தான் செய்யும் பணிகளை வைத்து எடைபோடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்…. அஜித்குமார் டோவல் அவர்களும் அனுபவம் வாய்ந்த செயல்வீரராக அறியப்படுகிறார். அவர் பல காலம் வடகிழக்குபகுதியிலும், காஷ்மிரிலும் பணியாற்றிய அனுபவமுடையவர், IB ன் முன்னால் தலைவர்….
View More புதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!
“பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர். இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது…. வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி தேசிய அளவிலும் பாஜக-வுக்கு மிகுந்த தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது….
View More மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!