போகப் போகத் தெரியும் – 30

எம்.எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை?

திராவிடர் கழக 18-வது மாநாடு, 8, 9-05-1948 தேதிகளில் தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது. ஆண்களும் பெண்களுமாக இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மலேயா, இலங்கை, மைசூர், கொச்சி முதலான ஊர்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். கருப்புச் சட்டை அணிந்த பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ, தலைவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். வெள்ளம் போல திரண்டுவந்த கூட்டம் வசதியாக இருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளைக் கவனிக்கும் முறையில் மாநாட்டுப் பந்தல் வ.உ.சி. மைதானத்தில் அர்ச்சுனன் பந்தல் என்ற பெயருடன் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. தாய்மார்களுக்குத் தனியாக இடவசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மாநாடு பகல் 11 மணிக்கு ஆரம்பமாயிற்று. தோழர் K.K. நீலமேகம் அவர்கள் கொடியேற்று விழாவை நடத்தினார். தலைவர் பெரியார் அவர்கள் பெருத்த கைத்தட்டுதலுக்கிடையே எழுந்து தம்முடைய தலைமைப் பிரசங்கத்தை மூன்றுமணி நேரம் ஆர்வத்தோடு பேசினார். ‘காந்தியடிகள் மறைவு – திராவிட மக்களுக்குப் பெருத்த நட்டமும் ஏமாற்றமும்’ என்பதைக் குறித்து விரிவாகப் பெரியார் அவர்கள் தம்முடைய தலைமையுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.

மாநாட்டில் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அண்ணா ஏன் வரவில்லை என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘முத்தன் ஏன் வரவில்லை? அப்புறம் எம்.எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை, சுந்தராம்பாள் ஏன் வரவில்லை என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே’ என்று பதிலளித்தார்.

பெரியார் பேசும்போது கருத்து வேறுபாடு குறித்துக் கோடிகாட்டினார்.

“புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது இயற்கைதான். ஆகவேதான் நான் நீடாமங்கலம் மாநாட்டின்போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்தப் பகுத்தறிவைக்கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று…..

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டுமல்ல உங்கள் மனசாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டியதுதான்.”

– 1948 மே மாத நாளிதழ்கள்.

தூத்துக்குடி மாநாடு நடந்த ஒரு வருட காலத்திற்குள் நிலைமை மாறிவிட்டது.
தலைவர் சொற்படி பகுத்தறிவையும் மனச்சாட்சியையும் மூட்டைகட்டி வைத்திருந்தவர்கள் தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்தது அப்போது. ஈ.வெ.ரா மணியம்மை திருமணத்தை ஒட்டி திராவிடர்க் கழகம் பிளவுபட்டது; 70 வயதைக் கடந்தவருக்கு 30 வயதுப் பெண்மணியோடு திருமணம் (1949)ல் நடந்தது.

மனச்சாட்சியின்படி நடக்க விரும்பியவர்களில் ஒருவர் இராம. அரங்கண்ணல். அவர் தன்னுடைய எதிர்ப்பை நூதனமான முறையில் தெரிவித்தார்.

‘வயதானவர்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது’ என்ற பொருள்பட ஈ.வெ.ரா பல மேடைகளில் முழங்கியிருந்தார். அந்தப் பேச்சுக்களைத் தொகுத்து ஈ.வெ.ரா-வுக்குத் தெரியாமல் இந்த (அ)சந்தர்ப்பத்தில் விடுதலை இதழில் அச்சேற்றிவிட்டார் அரங்கண்ணல். அவர் விடுதலை இதழில் துணையாசிரியராக இருந்தார்.

விடுதலை இதழின் உரிமையாளர் ஈ.வெ.ரா. அதில் வெளிவந்ததோ ஈ.வெ.ராவின் பேச்சு. தன்னுடைய கையால் தன் கண்ணைக் குத்துகிறார்களே என்ற கோபம் ஈ.வெ.ராவுக்கு; அரங்கண்ணல் வெளியேற்றப்பட்டார்.

பகுத்தறிவாளர்களின் பயணத்தில் இது இன்னொரு மைல்கல்.

நாம் 1927-க்குப் போகலாம்.simon

இந்தியாவுக்கான சுயாட்சியை ஆரய்வதற்காக, ஆங்கில அரசு 1927 இல் ஒரு ஆய்வுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. சர். ஜான் சைமன் என்ற வழக்கறிஞர் இந்தக் குழுவின் தலைவர்.

சைமன் கமிஷனில் ஒரு இந்தியர் கூட உறுப்பினராக இல்லை. ஆகவே இந்தக் கமிஷனுக்கு இந்தியாவெங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சைமன் சென்ற நகரங்களில் எல்லாம் கடையடைப்பு நடந்தது. ’சைமனே திரும்பிப் போ’ என்ற முழக்கம் இந்தியாவெங்கும் எதிரொலித்தது.

பம்பாயில் நடந்த வரவேற்பு விழாவில் ஆங்கில அரசிடம் சர் பட்டம் பெற்றவர்கள்கூட கலந்துகொள்ளவில்லை.

lalalajpatraiபஞ்சாபைச் சேர்ந்த லாகூரில், சைமன் கமிஷனுக்கு எதிராக பிரம்மாண்டமான ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு லாலா லஜபதி ராய் தலைமை வகித்தார். ஊர்வலத்தின் மீது போலீஸார் கடுமையான தடியடி நடத்தினார். தடியடியில் காயமடைந்த லஜபதி ராய் இரண்டு வாரத்தில் மரணமடைந்தார்.

ஜவகர்லால் நேரு கோவிந்த வல்லப பந்த் கலந்துகொண்ட கூட்டம் ஐக்கிய மாகாணத்தில் லக்னோவில் நடந்தது. கூட்டத்தில் குதிரைப் போலீசார் தாக்குதல் நடத்தினர்; பந்துக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.

போலீஸ் தடியடியில் காயமடைந்த தொண்டர்கள் ஆக்ரோஷமான மனநிலையில் இருந்தபோது நேருவை அணுகிய ஒரு இளைஞன் தன்னிடம் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும் அதைக் கொடுக்கிறேன் என்றும் கூறினான். ஆனால் நேரு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு விசாரித்ததில் அந்த இளைஞன் போலீஸ் அனுப்பிய கையாள் என்பது தெரியவந்தது.
நாடெங்கும் தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானவர்கள் கைதாயினர்.

சென்னை நகரத்தில் முழுக் கடையடைப்பு, டிராம்கள் ஓடவில்லை. கல்லூரி மாணவர்கள் திரண்டு உயர்நீதி மன்றம் அருகே கூடினர்; உயர்நீதி மன்றத்தை மூடச்சொல்லி குரல் எழுப்பினார்கள். நீதிமன்ற வளாகத்தில் இருந்த கார் ஒன்று தீயிடப்பட்டது.

அந்தப் பகுதியில் ராணுவத்தினர் குவிந்தனர். ஒரு பக்கம் துப்பாக்கிகளின் அணி; எதிரே கொந்தளிப்பான மனநிலையில் மாணவர்கள். ‘சைமனே திரும்பிப் போ’ என்ற கோஷம் காதைப் பிளந்தது.

தடியடி நடத்தியும் கூட்டம் கலையவில்லை. காங்கிரஸ் தலைவர்t_prakasam டி. பிரகாசம் துப்பாக்கிகளுக்கு நேரே நின்றுகொண்டு சட்டையை திறந்து மார்பைக் காட்டி ‘என்னைச் சுடுங்கள்’ என்று சவால்விட்டார்.

அன்று மாலை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் சத்திய மூர்த்தி, புலுசு சாம்பமூர்த்தி ஆகியோர் பேசவிருந்தனர். மேடையில் வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த கேஸ் விளக்கை போலீசார் உடைத்துவிட்டனர். கூட்டத்தில் புகுந்த குதிரைப் போலீசார் மக்களைக் கலைத்து விரட்டினர்.

காவல் துறை உதவி ஆணையராக இருந்த அனந்த நாராயணன் குதிரை மேல் இருந்தார். இவர் புலுசு சாம்பமூர்த்தியைத் தமது பூட்ஸ் காலால் எட்டி உதைக்க முயன்றார். பக்கத்திலிருந்த துர்கா பாய் என்ற இளம்பெண் அந்த போலிஸ் அதிகாரியின் காலைப் பிடித்து வேகமாக இழுத்தார் கீழே விழுந்த அதிகாரிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

சென்னை மாகாண சட்டமன்றத்தில் சைமன் கமிஷனுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் டாக்டர். பி. சுப்பராயன் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். அவருடைய அமைச்சரவை சகாக்களே தீர்மானத்தை ஆதரித்தனர்.

சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தவர் சர்.ஏ. ராமசாமி முதலியார். இவர் நீதிக்கட்சியின் தலைவர். சைமன் கமிஷனுக்கு ராமசாமி முதலியார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் ஆங்கிலேயர்களும் நீதிக்கட்சியினரும் மட்டுமே கலந்துகொண்டனர். பெரும்பான்மையான மாநகராட்சி உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.

பின்னர் மாநகராட்சி உறுப்பினர்களிடம் ராமசாமி முதலியார் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
சைமன் கமிஷன் இந்தியா வந்த வேளையில் தேசிய எழுச்சி எப்படி இருந்தது என்பதைப் பார்த்தோம். இந்திய விடுதலைப் போரில் சுயமரியாதைக்காரர்களின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போமா?

செங்கல்பட்டு நகரில் 1929 -இல் கூட்டிய மாகாண சுயமரியாதை மாநாட்டில் சைமன் கமிஷனை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் பிராமணரல்லாதாரின் சுயமரியாதைக்கு ஏற்றது என்றும் சொல்லப்பட்டது.

இதோ அந்தத் தீர்மானம்:

இந்தியாவிலுள்ள பல வகுப்பாரின் உரிமைகளும் அபிப்ராயங்களும் ஒன்றுக்கொன்று மாறாக இருப்பதாலும் இந்திய அரசியல் விசாரணைக் கமிஷனில் இந்தப் பலவகுப்புகளுக்கும் பிரதிநிதிகள் நியமிப்பது சாத்யமல்லவென்று இந்தியா மந்திரி பார்லிமெண்டில் கூறியிருப்பதாலும் இந்தியர்களில் எல்லா சமூகத்தாருக்கும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒருவரைச் சேர்க்க முடியாத நிலமையில் நமது தேசம் இருக்கிறபடியாலும் இந்திய அங்கத்தினர் நியமிக்கப்படவில்லையென்னும் காரணத்தைக்கொண்டு கமிஷனை பகிஷ்கரிப்பது நியாயம் அல்ல வென்று இம்மாநாடு கருதுகின்றது.

பிரிட்டிஷ் பார்லிமெண்டார் இந்திய தேசத்தை ஆண்டு வருகிற உரிமையையும் இந்திய அரசாங்கத்தை நிர்வகித்து வருகிறதையும் இந்த தேசத்திலுள்ள எல்லா ராஜ்யக் கட்சியும் ஏற்று அடங்கி ஒத்துழைத்து வருகிற இக்காலத்தில் அதே பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் முன் சாட்சியம் சொல்வது இந்தியாவில் சுயமரியாதைக்கு விரோதமென்று சொல்லுதல் பொருத்தமுள்ளதல்ல வென்று இம்மாநாடு கருதுகின்றது.

ஊரே திரண்டு ஓட ஓட விரட்டிய சைமன் கமிஷனுக்கு பந்தல் அமைத்து கொடுத்தவர்கள் பகுத்தறிவுக்காரர்கள்.

சைமன் கமிஷனுக்கு வரவேற்பு கொடுத்தது பற்றி எழுதி அதற்கு ஒரு நியாயம் சொல்கிறார் நீதிக்கட்சியின் தலைவரான பி. டி, ராஜன்.

டாக்டர் சுப்பராயன், கமிஷனை முதல் அமைச்சர் என்ற முறையில் வரவேற்கிறார். மேலும் கமிஷனின் தலைவரான சர். ஜான் சைமனும் அவரும் ஆக்ஸ்ஃபோர்டில் வாதாம் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் என்பதாம்.”

– பக். 52 / நீதிக்கட்சி நினைவுகள் / சர். பி. டி. ராஜன்

திராவிடர் இயக்கத்தின் மற்றொரு தலைவரான இரா. நெடுஞ்செழியன் எழுதுகிறார் –

“சென்னை ஆளுனர் கோஷனிடத்திலும், டாக்டர். சுப்பராயன் அமைச்சரவையிடத்திலும் நீதிக்கட்சிக்கு நல்லிணக்க உறவு ஏற்பட்டதன் விளைவாக சைமன் குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவது என்ற முடிவுக்கு நீதிக்கட்சி வந்தது.”

– பக் 276 / திராவிட இயக்க வரலாறு / இரா. நெடுஞ்செழியன்.

நீதிக்கட்சி சைமன் கமிஷனை வரவேற்றது என்பதைப் பார்த்தோம். ஈ.வெ.ரா என்ன செய்தார் என்ற கேள்வி எழுகிறது.

அதற்கும் நெடுஞ்செழியன் பதில் தருகிறார்.

“சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தபோது அதனை வரவேற்க வேண்டும் என்று பெரியார் முதல் குரல் எழுப்பினார்.”

– பக். 471 / தி. இ. வ / இரா. நெடுஞ்செழியன்.

அடிமைத்தனம் அகலக்கூடாது என்பதில் ஈ.வெ.ராவும் அவருடைய கூட்டாளிகளும் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.

evr-and-sonsஇன்று இந்தியா சுதந்திர நாடாக இருக்கிறது. திராவிட இயக்கத்தினர் கண்ணீரோடு கதறியதற்கும் பூமியிலே புரண்டதற்கும் பலனில்லை; வெள்ளைக்காரன் வெளியேறிவிட்டான்.

மாறுபட்ட சூழ்நிலையில் இன்று மதிப்பு தேவைப்படுகிறது. விடுதலைப் போராட்டத்திற்கு வினையாக இருந்தோம் என்று சொல்லிக்கொள்ள மனது இல்லை. ஆகவே மாற்றிப் பேசுகிறார்கள்.

“நானோ வீரமணியோ காங்கிரஸ்காரர்களாக இல்லாமல் இருக்கலாம். பிறந்தபொழுதே காங்கிரஸ்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் யாரால் வளர்க்கப்பட்டவர்கள் என்றால் காங்கிரஸ் இயக்கத்தைத் தமிழ்நாட்டிலே கட்டிக்காத்த தந்தை பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்கிறபோது எங்களுக்கும் இந்த நாட்டின் விடுதலை அத்தியாயத்தில் சிறப்பான அம்சமுண்டு. நாங்கள் அன்றைக்குப் பிறக்காதது எங்கள் குற்றமா?” என்று குறைபட்டுக்கொண்டார் ஒருவர். அவர் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வரான மு. கருணாநிதி.

அவருடைய பேச்சு (29. 04. 1986) அன்றைய நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. அந்தப் பேச்சில் உள்ள விஷயத்தை ஆராயலாமா?

  • 1924 இல் பிறந்தவர் மு. கருணாநிதி.
  • சென்னை நகரில் கொடுங்கோலன் நீல் சிலையகற்றும் போராட்டம் நடைபெற்றது 1927இல்.
  • வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்புச் சத்தியாகிரகம் நடந்தது 1930-இல்
  • திருப்பூரில் கொடிகாத்த குமரன் உயிர்விட்டது 1932-இல்.
  • மகாத்மா காந்தியின் ஆணைப்படி தனிநபர் சத்தியாகிரத்தில் வீரர்கள் கைதானது 1940 இல்.
  • புரட்சிவெடித்து ‘வெள்ளையனே வெளியேறு’ என்று நாடு ஒரே குரலில் முழக்கமிட்டது 1942 இல்.
  • தமிழர்கள் பெருமளவில் பங்கு கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கியது 1943-இல்.
  • மகாத்மா காந்தி பயணம் செய்த ரயிலை மதுரைக்கருகே அம்பாத்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் மறித்தது 1946-இல்.

ஒவ்வொரு வரலாற்று நிகழ்ச்சியையும் ஆராய்ந்து முதல்வரால் அதில் பங்கெடுத்திருக்க முடியுமா என்ற கேள்விகளுக்கான பதில்களை வாசகர்கள் யோசிக்கவேண்டும்.

மேற்கோள் மேடை :

திராவிட இயக்க உணர்வுக்கும் தோற்றத்திற்கும் ஆங்கில ஆட்சியே மறைமுகக் காரணமென்று கூறலாம். ஆட்சியில் நிலைத்திடவேண்டும் என்பதற்காக மக்களிடையே அவர்கள் கைக்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சி, அவர்களின் ‘பிரித்து ஆளுதல்’ என்னும் கொள்கை முதல் காரணமாயிற்று.

– பக். 52 / சுயமரியாதை இயக்கம் / மங்கள முருகேசன்.

(தொடரும்…)

45 Replies to “போகப் போகத் தெரியும் – 30”

  1. Respected Sir,
    Vanakkam & Thanks.
    I was born in 1967.
    Never before, I had the chance & means to know the Proper History of our place.
    My sincere respects & Gratitude to you and the Editorial Team for phrasing all these into proper record.
    I feel quiet sad to know what has happened.
    The eagerness, with which I await further revelations in this INSIGHTFUL articles, is great.
    Thanks and Warm Regards,
    Anbudan,
    Srinivasan. V.

  2. ‘பழைய குடியரசு ஏடுகளில் இருந்து பெரியாரின் பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத் திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது ‘ஒரு இளம்பெண்னை வயதானவர் கட்டிக் கொள்வது சரியல்ல ‘ என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து ‘தக்க வயதுப் பொருத்தமே திருமணத்தின் இலட்சியம் – பெரியாரின் பேருரை ‘ என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டுக் கம்போசிங்குக்குக் கொடுத்தேன். அதுவும் உடன் வெளிவந்தது. பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காகச் சென்றபோது பெரியார் கடுங்கோபத்தில் இருந்தார். என்னைப் பார்த்து ‘பெருமாள் வீட்டுச் சோத்தைத் தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க ‘ என்று சொன்னார். நான் பதில் பேசாமல் வெளியேறினேன்.

    (நூல்: இராம அரங்கண்ணலின் நினைவலைகள்)

  3. YES, EVR was the most uncivilised person we have ever had in our public life. His cheap behaviour could NOT be tolerated even by his own followers at times. Civilised persons could never associate with him for long. He was never sincere to his own words; a hypocrate to the core. Had Anna was strong enough to take tough stand when EVR secretly married Maniammai in 1949, EVR would have gone into oblivion then and there because most of the cadres of DK wanted to oust EVR from DK, takeover the properties of the party including its publication division; The central wotking committee passed a resolution to the effect of asking EVR to vacate the president’s chair following his marriage. BUT Anna pacified and advised that they would start a separate party because they were civilised people.

    There are still some gullible people in our society thinking EVR was a reformer and his cricism of Hindu faith has to be evaluated. EVR is unfit for any such consideration. He was rank opportunist and also rank anti-Hindu. And his criticisms are NOT worth even for a penny! EVR and his DK are NOT a force today to take seriously. However, the younger generation happen to see his statue in all public places and his biography full of untruth and half truths is prescribed in text books. Thus, we need to show EVR in correct perspective to our youngsters and future generation. Once I also told Sri Ram Gopalanji of Hindu Munnani and others that we better leave EVR from our strategies, as he was a spent force. Also, he has some how gained the reputation as the crusader of the interests of Non Brahmin communities, though he did NOT deserve that kind of recognition. The reservation came into effect during the rule of the cabinet that included a Brhmin! And maximum percenrage of reservation was introduced by MGR, who was NOT EVR’s follower but follower of Hindu faith. And all his personal advisers were Brahmins only! But Sri Gopalji, wiser than me, told that we have to totally remove th etraces of EVR inorder to unite Hindu society. And I too understood its necessity in course of time. Tiruvannamalai Yogi Sri Ramsurat Kumarji’s last advice to me was, “Eradicate EVR from Tamil Nadu!

    MALARMANNAN

  4. //But Sri Gopalji, wiser than me, told that we have to totally remove th etraces of EVR inorder to unite Hindu society. And I too understood its necessity in course of time. Tiruvannamalai Yogi Sri Ramsurat Kumarji’s last advice to me was, “Eradicate EVR from Tamil Nadu!//

    பெரியவர்கள் சொன்னது முற்றிலும் சரி.

    EVR என்கிற இந்த நச்சை அழிப்பதற்கு “போகப் போகத் தெரியும்” வெளியீடு ஒரு நல்ல ஆரம்பம். நல்ல ஆரம்பம் பாதி காரியம் சாதித்ததற்கு சமம். நெல்லை ஜெபமணி, மா.வெங்கடேசன், சுப்பு மற்றும் தமிழ் இந்து ஆகியோருக்கு நாளைய தமிழகம் பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.

    நன்றி

    ப.இரா.ஹரன்.

  5. “திராவிட இயக்க உணர்வுக்கும் தோற்றத்திற்கும் ஆங்கில ஆட்சியே மறைமுகக் காரணமென்று கூறலாம். ஆட்சியில் நிலைத்திடவேண்டும் என்பதற்காக மக்களிடையே அவர்கள் கைக்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சி, அவர்களின் ‘பிரித்து ஆளுதல்’ என்னும் கொள்கை முதல் காரணமாயிற்று.”

    you are 100% correct.now we can see ethnics conflicts in Iraq & afgan

  6. கருணாநிதிக்கு விவஸ்தை என்பதே கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சொல்லும் ஜீவன். ”நான் அந்தக் காலத்திலேயே பாகிஸ்தானுக்க்காக குரல் எழுப்பியவன் நான்”, “நானும் ஒரு கம்யூனிஸ்ட் தான். திராவிட கழகம் என்று இருந்திராவிட்டால், நான் கம்யூனிஸ்டாகத் தான் இருந்திருபேன்.” “நான் சொன்னதை ராஜீவ் காந்தி கேட்டிருந்தால், இந்த இலங்கை தகராறே வந்திராது”, நாங்கள் ஆட்சியில் இருந்தால் இந்த விவகாரமே (ஜெயேந்திரர் மீது சாட்டப்பட்ட “கொலைக் குற்றம் – அதாவது கொலையே நடந்திராதாம்.) எழுந்திராதே” – இப்படி வாய்க்கு வந்தபடி உளறுவது கருநாநிதியின் தனிக் குணம்.

  7. எல்லாம் சரிதான்.ஆனால் சில உண்மைகளை நாம் மற்ந்துவிடக் கூடாது.
    இந்தியா சுதந்திரம் அடைந்தது என்னமோ உண்மை தான்.ஆனால் தமிழ்நாடு சுதந்திரம் அடையவில்லையே!இன்னமும் ஆரியரின் அடக்கு முறை-அரசியலில்-
    இல்லாத ராமர் கதையை காட்டி ராமரை கடவுள் ஆக்கியது,தமிழக தமிழரை குரங்குகளாக சித்தரித்தது,ஒரு தமிழனான ராவணனை குற்றவாளி ஆக்கி கொன்றது,சிறந்த புலமையை-கம்பனை-அடிமைபடுத்தி இல்லாத ராமாயணத்தை
    எழுத செய்து தமிழனை ஆரியத்திற்கு அடிமை பட வைத்தது-இதில் இருந்து நாம் இன்னமும் விடுபடவில்லையே!ஆரியம் சுதந்திரம் பெற்றது,தமிழகம் எங்கே சுதந்திரம் பெற்றது?இதை முன்னமே அறிந்தோ என்னவோ பெரியார் பின் வாங்கி இருந்திருக்கக் கூடும்.யாராவது மனம் விட்டு சொல்லுங்கள் தமிழகம் சுதந்திரம் பெற்றுள்ளதா அல்லது ஆரியத்தின் கையில் சிக்கி தவிக்கிறதா?தமிழ் அங்கே வாழ்கிறதா? வேதனை படுகிறோம்,வெட்கப் படுகிறோம்.உள்ளிருந்து பார்க்காதீர்கள்.வெளியே வந்து பாருங்கள்.அப்பொழுது தெரியும்.நம் நிலை என்ன என்பது.கிணற்றுத் தவளை என்பார்களே அந்த நிலை.விளித்தெழுங்கள்.
    மூர்த்தி

  8. மூர்த்தி அய்யா நல்ல சோக் அடிகிறீங்க..புரியாததை இல்லைன்னு சொல்லுவதுதான் உங்கள் பகுத்தறிவா? உங்கள் முப்பாட்டனுக்கு முப்பாட்டன நீங்க பாக்கலைங்கரதுக்காக அவர் இல்லாத ஒருவர், சுத்தப் பொய் என்று சொல்லுவீர்கள் போல. பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைத்ததாம். அத விடுங்க..எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டீங்க.

    “ஒரு தமிழனான ராவணனை குற்றவாளி ஆக்கி கொன்றது,”

    எவ்வளவு நாள் இந்த அஞ்ஞ்யானத்தில் இருப்பீர்கள். ராமாயணம் இல்லை என்கிறீர்கள் ஆனால் ராவணனை கொன்றது மட்டும் உண்மையோ? ராவணன் ஒரு பிராமணன், ராமன் க்ஷத்ரியன். இந்த அடிப்படை தெரியாமல் திக கண்மணிகள் கூப்பாடு போடுகிறார்கள், நீங்களும் கும்பலோட கோவிந்தா..

    இதெல்லாம் விடுங்க. தமிழ் தமிழ் என்று அடித்துக் கொள்கிறீர்களே, தமிழுக்காக திக என்ன செய்தது. தமிழ் இலக்கண இலக்கியம் புரியாமல் மூன்று தலைமுறை வந்தது திமுக ஆட்சிக்காலத்தில்தான். இன்று நாற்றத்திற்கும், மயிருக்கும் தப்பர்த்தம் தேடித்தந்ததுதான் தமிழ் வளர்த்த இலட்சணம்.

    “கிணற்றுத் தவளை என்பார்களே அந்த நிலை”.

    கிணற்றுக்குள் இருந்து கொண்டு நீங்கள் இப்படி சொல்லுவது சிரிப்பாக உள்ளது.

  9. தமிழ் இந்து ஆசிரியர் குழுவிற்கு நல்ல நகைச்சுவை உணர்வு. “பகுத்தறிவு”டன் கூடிய இந்த “கழக”க் காமடி மறுமொழியை வெளியிட்டு எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி. (:-))

    இதைப் போல் அவ்வப்போது பகுத்தறிவுடன் கூடிய நகைப்புக்குகந்த மறுமொழிகள் அனுப்பி எங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துமாறு கழகக் கண்மணி திராவிட மூர்த்தி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். (:-))

  10. திருவாளர் மூர்த்தி அவர்களே,

    எந்த அடிப்படையில் எந்த அடிப்படையில் “இல்லாத ராமர் கதையை காட்டி ராமரை கடவுள் ஆக்கியது” என்று கூறுகிறீர்கள் ?

    வரலாறு என்பதே அந்தக் கால கட்டத்தில் எழுதப் பட்ட நூல்கள் ,நினைவுச் சின்னங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் உருவானதுதானே?

    கலிங்கத்துப் பரணியை வைத்து இராசேந்திர சோழனின் கலிங்க வெற்றி அறியப் படுகிறது. இண்டிகாவை வைத்து சந்திர குப்தனின் ஆட்சியை தெரிகிறோம். அதே போல இராமரின் வரலாற்றுக்கு வால்மீகி இராமாயணம் நூல் சான்றாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாலமே இராமரின் வரலாற்றுக்கு பொருள் ஆதாரமாக (Physical evidence) உள்ளது.

    ஆனால் உங்களின் நோக்கமே வேறு என்பது தெரிகிறது. இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டைப் பிரிக்கும் வகையிலான கருத்துக்களை அப்படியே தூவி விட்டு இருக்கிறீர்கள்.

    இமய மலையை தனியாக ஒரே மனிதன் தலையால் முட்டி ஒரு மைல் தூரம் நகர்த்தினாலும், இந்தியாவிலருந்து ஒரு அங்குலம் கூடப் பிரிக்க முடியாது.

    7 கோடித் தமிழரில் அதிகம் போனால் நூறு பேர் பிரிவினைக்கு தயாராக இருப்பான். அவர்களை உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள்!

    நாங்க எல்லாம் சுதந்திரமாகத் தான் இருக்கோம். நீங்க வந்து எங்க வாழ்க்கையை நாசம் பண்ணப் பார்க்காதேங்க!

  11. In a way, what Sri Moorthi staes is correct. Tamail Nadu is under the siege of the most barbaric rowdy element, under MK and company, which is the biproduct of EVR. We need to FREE our TAMIL HINDU BHOOMI from these traitors who would not hesitate to go to any length for selfish end. Moorthi should read, analyse, make indepth study on various topics related to our history (NOT the prescribed text books!), social system, culture, tradition instead of blindly repeating what EVR and Co was telling some 80 years ago. NOW, the pure Tamilan, MK’s son Alagiri, who does NOT know anything except dadagiri is a cabinet minister in the union govt. And MK holds considerable influence at the centre to get things done for his personal needs. And these elements claim to be Dravidians of first quality! Also claim they are the sons of EVR (Thanthai); then why should Sri Moorthi regret? If he reads properly, he would know the Aryan-Dravidian distinction is purely a myth. These are the findings of linguists; as for racial, anthropologists are the right persons to say and even their findings may go wrong. The latest finding is, it is Asia, where mankind came into being first. EVR wanted only idiots for his followers, who should NOT use their common sense. Therefore, it is hightime friends like Sri Moorthi, in their own self respect, came out from the influence of foolish notions propagated by EVR and his movement.

    I apologise for NOT being able to key Tamil fonts. Unless somebody teaches me, I will NOT be able to write in Tamil. I write this because I am receiving calls frequently asking me to wirte in Tamil so that my views can be understood by many and it will benefit English knowing readers as well. I invite them to come and teach but so far no one has time to do so!
    MALARMANNAN

  12. ஆழமான கருத்துக்கள் உள்ள கட்டுரைகளை படிக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைக்குது!
    இந்தியா குறிப்பாக தமிழகம் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு உள்ளது!

  13. ஐயா நன்றி வனக்கம்.சில ஆதாரங்கள்.
    1. The present Ramayana even as it is approved and adopted by the searching and all respected commentator katara, is not the Ramayana originally written by Valmiki, not even the most orthodox thinker thinker will be desposed to doubt. Who ever cursorily reads the poem cannot but be struch by the inconsistencies the sereneness of connections, juxtapositions of new and old ideas which abound so greatly in the present Ramayana. Wheather we take the Bengal or Bombay text of it, and one connot but come to the conclyusion that the Ramayana of Valmilki was substantially reconstructed some sabseqient date- The Riddle of Ramayana P.7-C.V. Vaidya. M.A.L.L.B.
    Narada therefore, appears to treat Rama not as an Avatara of Vishnu, but only a so great person who having lived a meritorious life goes to Bramaloka after his death. The theory of ten Avataras of Vishnu is a creation of the Puranas and not of Mahabharata nor the Ramayana as is abundantly clear from the Ramayana itself. The Varaha Avatara seems not to have been locked upon as an Avatara of Vishnu in the days of Ramayana – The foregoing will efficiently prove that the modern ideas of ten Avataras did not form part of the original Ramayanar. The idea was only in the process of formation at the time of the compilation of the present Ramayana and developed itself more fully subse-quently during times – Ibid p.29
    1. The Tamilian Antiquary-No. 7
    2. It is now generally admitted that a great deal of the ancient medieval myths and legends enshrined in the Sanskrics and puranas are of non-Aryan origin, and that even in vedic mythology certain pre-Aryan elements are present. Puranic myth of the gods and legends of kings, heroes and sages in the form of which we find them in the Sanskrit works, represents undoubtedly a considerable
    mount of modifications from other original forms whethser Aryan or non-Aryan. The non-Aryan Speaking marses of northen India became Aryanized in language, and that their tales and legends were retold as a matter of course in the Aryan language of their adoption – Purana Legends and the Prakrit tradition in new Indo-Aryan-Bulletin of the school of Oriental studies Vol. VIII – S.K.Chatterji.
    It is on short difficult to deny that the Ramayana as it exists today consists of an old nucleus written by Valmiki before the rise of Buddhism buried in substantial addition made long after the invation of Alexander about the 1st century B C”
    தற்போதய வடமொழி இராமாயணம் கி.மு.200 அளவில் தொகுக்கப்பட்டது.
    ஆர்.சி தத்தர் –கிரியை சூத்திரம்-11,17,97 சீதை இந்திரனின் மனைவி.
    இராமாயண-குரங்குவீரர்கள் ஆதி திராவிடர்-கோத்திரக்குறி-வழவனஅ-
    நன்றி-என்சிகே+இனியன்-

    தமிழ்நாடு சைவ சித்தானந்த சபையினர் பொதுவாக ஒருகருத்தைசொல்கிறார்கள்-
    ஆட்சியில் யாரரிருக்கிறார்களோ,யாரிடம் செல்வாக்கு,பணம் அச்சம் இருக்கிறதோ அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்க முனைகிறார்கள்.அதனால் நாம்
    சொல்லும் பல உண்மையானாலும் ஏற்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.

    சொத்தை பிரி என்பது வேறு,தனி குடிதனம் போவது என்பது வேறு.
    பிரிவினை வேறு,சுதந்திரம் வேறு.மாநில அரசுகளின் அதிகாரம் என்ன?உலகம்
    முழுவதும் தமிழர்களின இன்றைய நிலை என்ன? காரணம்-தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை.சுதந்திரம் இல்லை என்பதே.

  14. //ஐயா நன்றி வனக்கம்.சில ஆதாரங்கள்….//

    Typical Marxist/Dravidian crap! Deserve to be thrown into trashcan

  15. How epics and other great works were written in ancient times? Mostly, on palm leaves with iron stylus. Or on hard barks. It is very painful to write with an iron stylus on hard palm leaves. NOT like today’s gel ball points with softened rubber cushion where your fingers hold the pen! Many made their Sisshyas to biheart the lines and write later.

    And it is humanly impossible for a single person to write the entire work. Then how did great masters write their works?

    The master would sit on a raised floor and his disciples would sit around. The master would start dictating his lines one by one to his disciples, one after the other. Each one would take down the line dictated to him. Fianlly, these lines would be verified and then rewritten by another as compilation. There were no copier (Xerox) machines to take copies or printers to bring out the same copy of the original. Copies were taken by hand by those interested, at different times and that is the reason why there are several versions for one ancient work. While copying humanly, mistakes are boung to happen. Some may take some lines for granted and write by themselves guessing. Some will intentionally interpolate. In some cases, the leaves would have been damaged by whiteants and the copier would fill up the blanks with his own lines! You need to identify the original lines and unless you are familiar with the nuances of the original author, you cannnot find out as to which could be the correct lines of the original author. In case of Kamaba Ramayanam in Tamil, T K Chitamparanatha Mudaliar, immersed in Kamdan’s creativity, removed many lines from Kamba Ramayanam, saying all those were interpolations. We have to admit that there are lot of interpolations in NOT only Mahabharat and Srimad Ramayana but also in almost all our ancient works. Some eccentircs, in the interst of giving their creations permanence used to interpolate their own lines in the works of great authors! That is why you will find many contradictions in our ancient works. This has happened to Sri Manu Smruti also and therefore, you will find too many contradictions in it. You have to analyse deeply, understand the core idea and decide as to which could be the original lines and thoughts of the author.

    We have too many pseudo scholars like Romilla Thapar amonst us. IN the interest of getting easy recognition, fellowships and other benefits, they please the Western minds and academies by wriiting thesis undermining and under estimating Hindu values. This they do to get easy recognition from the West; and the West is generally likes to under estimate the achievements of the East. Many of the scholars from Hindustan know this and for easy recognition and the rewards that would follow, come out with the research that would please the Western minds. And some gullible amongst us would take them seriously and quote from those psuedo research to substantiate their arguments!

    Just see the saying that Srimad Ramayana was compiled as recent as in 200 B.C.! That is just 2200 years ago! Is it not laughable? Our heritage dates back to several thousand years; Even the advent of Buddha is vary very recent for us. For the West, two thousand years is pretty old time! That is why they fixed B C and AD to indicate the period! Now that system is changing.
    A Hindu does not look animals and plants inferior to him. Even if the people of Kishkinta were described as monkies(probably their kingdom might have had monkey as symbol; for instance, Pandyas had fish, Chola had tiger and Chalukya had boar as their official symbol)there is nothing wrong. No offence meant. No need to feel bad and develop inferiority complex. We worship Sri Anjaneya with reverance, derive enormous strength by worshipping Him (Jay Bhajrang Bali!). So Sri Moorthi need not feel bad if people of Kishkinta were referred as monkies. And believe me, Sri Hanumanji is ever willing to oblige the devotees of Maryada Purushottam Sri Ramachandra Moorthi! I read Obama is always carrying a small idol of Sri Hanuman with him!
    And I am a staunch believer and worshipper of Sri Anjaneya, who always stands by me as my body guard! It was He, who saved me from many dangerous situations!

    I wish Sri Moorthi begins to worship Sri Rama sincerely to get favours from Sri Hanumanji automatically! Recite Sri Ramajayam nine times every morning and if possible, always do Japa inwardly and you will experienc the presence of Sri Anjaneya nearby! If the Japa is sincere, this happens!

    MALARMANNAN

  16. // I wish Sri Moorthi begins to worship Sri Rama sincerely to get favours from Sri Hanumanji automatically! Recite Sri Ramajayam nine times every morning and if possible, always do Japa inwardly and you will experienc the presence of Sri Anjaneya nearby! If the Japa is sincere, this happens!

    //

    comedy!!!

  17. சுகந்திரம் என்றால் என்ன?
    யாரால் விளக்க முடியும்.

    முன் ஒரு காலத்தில் ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு வந்தனர்
    பின் ஆப்கானியர்கள், பாலச்தினியர்… என வரிவரியாய் வந்து குடி எறினர்.
    வந்த அனைவருமே ஆட்சியாய் கைப்பற்ற‌ பல போர் நிகழ்த்தினர்.
    (ஆரியர்கள் போர் மட்டும் அல்ல பல கட்டுக் கதைகளையும் அள்ளி விட்டனர் வைச்ணவ மதம் உருவானது.
    பிறகு நளிந்து விடுவோம் என்ற பயத்தில் எதிரும் புதிருமாக இருந்த‌ சைவத்துடன் கூட்டணி வைத்து இந்துவானது. அது அன்றைய அரசியல்)

    இறுதியாக ஐரோப்பியர்கள் வந்தனர்…

    இதில் யார் வெளியேறினால் விடுதலை???

    “விடுதலை என்பது ஒர் உணர்வு சார்ந்த நிகழ்வு. யாரும் வெளியேறினால் விடுதலை வருவதில்லை.
    அனைவரும் சமம் என வாழ்ந்தால் தான் விடுதலை என பொருள் கொள்ள முடியும்.” இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

    அப்படியானால், இன்று நாம் சுகந்திர நாள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது ஏன்? அது ஒரு கறுப்பு நாள் தானே… அது ஒர் ஆட்சி பரிமாற்றம் அவ்வளவுதான்…

    உண்மை சுகந்திரத்திற்கு இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதற்கு சமூக சீரமைப்பு தேவை.
    சமூக ஏற்ற தாழ்வுகளை ஊக்குவிக்கும் வர்ண சாத்திரம், இராமாயாணம் போன்ற நூல்கள் தடை செய்ய வேண்டும். அதன் உண்மை நிலையை அனைவரும் உணர‌ வேண்டும்.

  18. In Hindustan, the biased constitution tilting toward minorities has already vested lots of powers to the State Governments. The Union Government is made of all States including Southern States and Tamil Nadu is NOT left out. IT is a myth to talk about North South divide. With the existing powers, the leaders of Dravidian movement have already stashed ill gotten money to the tune of more than thousands and thousands of crores in the last forty years. They could loot public money even through their influence at the centre. Is it NOT silly to think that Tamil Nadu is governed by the Centre? What does Sri Moorthi mean by saying Aryan? When the present rulers of Tamil Nadu have hassels with neighbouring states, why do they go to the centre begging to mediate? IF they have independence and similarly, if other states also have independence, how will they solve inter-state issues? Realising one large nation is more beneficial than existing as small units, European nations are trying to shed their identities; as the first step, they have become commercially one block. I am helping exporting companies in preparation of certain documents and I find all European nations have started asking quotations in Euro. MK has already started canvassing for Bharat Ratna for himself; And the alien lady Sonia would NOT mind making anyone a Bharat Ratna if she has any gains in it; She is least bothered about the prestige of Hindustan and the people of Hindustan. She does not even know the value of Bharat Ratna award. Though it has already lost its value considerably, it would be shame on all right thinking people of Hindustan if it is conferred on MK (I have received this info though NOT confirmed)! Can Sri Moorthi list out in what ways Tamil Nadu is deprived for being part of Hindustan? If the great Tamilians are NOT familiar in the North, who is responsible for that? Who prevented from making them and their work popular among Northern states? Likewise every state in Hindustan has produced great people. Do we know about all of them? If you happen to visit every nook and corner of Hindustan, you will find people living in Northern and North Eastern states are the most deprived and neglected.

    If Sri Moorthi thinks Tamil Nadu could not take proper steps to safeguard the interests of Elam Tamils and it would have been possible if Tamil Nadu remained a separate nation with separate identity, he is mistaken. Tamil Nadu and the Govt of Hindustan did provide all kinds of help from 1980ies; I know for sure how far we helped Tamil groups and Elam civilians then. And later it was found that almost all groups are only treating Tamil civilians just as pawns. During the last phase of LTTE’s down fall, Tamil Nadu was under the rule of first grade Dravidians only. Why did not they give pressure to the Centre to interfere? If Tamil Nadu were an independent nation, its rulers would have bartered Elam Tamils’ interests with Sri Lankan govt. bargaining with them for not interfering in favour of Elam Tamils and made money!
    MALARMANNAN

  19. இங்கே நம்மில் பலர் வரலாறு படித்து விட்டு தானே வந்திருக்கிறோம். பல முக்கியமான போர்களைப் பற்றி நாம் படித்து இருக்கிறோம்.

    மைசூர் போர், பானிபட் போர், தலையாலங்கானம், கலிங்கத்துப் போர் இப்படி பல போர்கள் வரலாற்றில் உண்டு.

    ஆரிய திராவிடப் போர் என்று ஏதாவது போர் வரலாற்றிலே இருக்கிறதா? இப்படி இல்லாத போர்களை கற்பனை செய்து, கனவிலே மகிழுந்து, குளிர் சாதன அறையிலே வீரமாக எழுதி தமிழர்கள் வாழ்க்கையை நசுக்கியதுதான் மிச்சம்.

    தமிழர்கள் சோழ, சேர பாண்டியர்கள் தங்களுக்குள் சமர் செய்து கொண்டதுதானே அதிகம்?

    ஹர்ஷர் நரசிம்ம பல்லவனுடன் போரிட்டதாகவோ, குப்தர்கள் சோழ நாட்டின் மீது படை எடுத்ததாகவோ வரலாறு உண்டா?

    பெரிய தலைகள் எல்லாம் இளைங்கர்களை தூண்டி விட்டு, தாங்கள் ஒதுங்கி, பிறகு அதிகார மையங்களை வாழ்த்தி வளமடைகின்றனர்.

    உலக சூழ்நிலைக்கு ஏற்ப நம்முடைய மக்கள் எல்லா நன்மையும் பெற்று நல்ல நிலைமையில் வாழ எது சிறந்த வழி என்று பார்க்க வேண்டும்.

    மக்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க விவரமாகத் தான் இருக்கிறார்கள். யாரும் மக்களை எளிதாக ஏமாற்றிக் குழியில் தள்ள முடியாது.

  20. தமிழ் நாட்டை தட்டினால் தங்கம் , வெட்டினால் வெள்ளி என்றார் அண்ணா. எங்கே தட்டினால் கிடைக்கும் என்றும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ஜார்க்கண்டில் இருந்து இரும்பு வருகிறது. ஒரிசாவில் இருந்து அலுமினியம் வருகிறது. தூத்துக்குடியில் உள்ள அனு மின் நிலையத்துக்கு கூட நிலக்கரி ஒரிசாவில் இருந்துதான் வருகிறது. ராஜஸ்தானில் இருந்து மார்பில் வருகிறது. அதை எல்லாம் வைத்து தொழில் செய்து கார்களை , தானியங்கி பாகங்களை உற்பத்தி செய்வதால் எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கூட இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பி விற்பனை செய்வதால்தான் எங்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

    இந்தியாவில் எந்த மாநிலமும் தனித்து இயங்க முடியாது.

    மராத்தாவில் ஒரு குடும்ப வெறிக் கும்பல் பிற மாநிலத்தவர் மும்பைக்குள் வரக் கூடாது என்று வன்முறை செய்கிறது.

    ஆனால் மும்பை பற்றி எரிந்த போது, அந்த குடும்பக் கும்பல் வீட்டுக்குள் பேச்சு மூச்சின்றி முடங்கிக் கிடந்தது.

    பிற மாநிலத்தவர் மும்பையில் வேலை செய்யக் கூடாது என்றால், பிற மாநிலத்தவர் பதிலுக்கு “மும்பையில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை நாங்கள் வாங்க மாட்டோம்”, என்றால் மும்பயில் தயாரான பொருட்களை எங்கு கொண்டு போய் விற்ப்பார்கள்?

    இந்தியாவில் எந்த மாநிலமும் தனித்து இயங்க முடியாது.

  21. எங்களுக்குத் தெரியும் ஐயா, இராமர் யாரு , இராவணனன் எப்படிப்பட்டவன் என்று!

    இராமர் அயோத்தியில் பிறந்தவர் என்பது எல்லா தமிழருக்கும் தெரியும்.பெரிய உண்மைகளை கண்டெடுத்தவர் போல இங்கெ எழுதுகிறார்கள்.

    இராமன் பின்லாந்து நாட்டுக்காரனாக இருந்தாலும் அவரை வணங்குவேன்.

    கோழையும் , பொருக்கியுமான இராவணன் என் சொந்தத் தம்பியாக இருந்தாலும் அவனை விரட்டி விட்டுதான் மறுவேலை! இல்லை என்றால் குடும்பத்தைக் கெடுத்து விடுவான் குடிகேடி இராவணன்.

    துறவி போல வேடமிட்டு இராவணன் தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றால், தமிழ்ப் பெண்கள் அவனைத் துடைப்பத்தால் அடித்து விரட்டுவார்கள்.

    சிங்கள அரசன் இராவணனுக்கு, தமிழரை வைத்தே புகழ் பாட வைக்க நினைக்கும் சதியைப் பாருங்கள்.

    சீதை, முக்கு சந்துல கடை வைத்து இருக்கும் ஜீவன்லால் சேட்டின் சகலையின் பாட்டிக்கு ஓரகத்தி மகள்- என்று கூட கதை எடுத்து விடுவார்கள் போல இருக்கிறது- கேட்பவன் கேனையன் என்றால்!

  22. NO, Sri Mathivanan. No comdy intended. I meant with all sincerity. I have turned many DK/DMK/Mrxsist friends as Bhaktas of Sri Krishna and Sri Rama.
    I am confident Sri Moorthi will soon turn an ardent devotee of Sri Anjaneya, as he is very particular about this monkey business, trying to get references for Kuranku Manitarkal. Near Mayiladuturai, there is a small but holi place called Tiruk Kurakkoor (meaning town of monkies). Kurakku is for monkey in chaste Tamil. Here, Sri Anjaneya worshipped Sri Shiva. It is one of the Atta Veerattaanam of Sri Shiva. He burnt Manmata in this stal. Sri Anjaneya, a Naishtika Brahmachari, worshipped Sri Shiva as the destroyer of Kama. Even now, once in a year, Monkies enter the temple from nowhere, go direct to the Garbagruha, go round Sri Shivalingam and return. I’ve also gone to this holi place because my Ishta Deivam has worshipped Sri Shiva here and like my Ishta Deivam, I worship Sri Shiva as destroyer of Kama.
    MALARMANNAN

  23. Sri Mathivanan can attain VIDUTALAI, the moment he is relieved of from the influence of EVR and early proselytisers. There is no such thign as Varna Sastra. Sri Mathivanan should equip himself first to discuss on such topics, before mustering courage to comment. He should first learn to understand what is Varna and what is Jati.

    In Geeta, My Master Sri Krushna says very clearly that Chatur Varnam Maya Srushtam and half baked persons quote this line only. Next comes from My Master Sri Krushna, “Guna Karma Vibhaga Saha.”
    The meaning of the second line is, Varna comes according to the divisions based on character (Gunam) and inclination toward a particular performance (Karmam). Nowhere My Master has said Varna is based on birth. Only Jati is based on birth and there is no referenc for Jati anywhere in Hindu Sastras. Before making any remarks, persons like Sri Mathivanan should think twice. Maryada Purushottam Sri Ramachandra Moorhti embraced Guha, the hunter who was also a boatman, and took him as his own brother. And Sri Rama is a prince. Telling there is no equiality taught in Srimad Ramayana only reveals the ignorance of the person who tells likewise. EVR wanted only idiots for his followers. Also he wanted only persons with no concience. I am sad there are still some people rigfhtly qualifying EVR’s conditions to be his followers. Hindustan is NOT a free for all playground. Only traitors amongst us made it look like so. AS we have many heros, we also have traitors!

    There is no evidence for any race called Aryan OR Dravidian. These are all linguistic terminologies. The word Arya is also having spl meanings such as noble, righteoius etc. The Word Dravidian has addtional meaning to denote geogrphical location. Linguists are not qualified to categorise races. And races are not identified on the basis of languages. This are all basic things.

    Reecently, one Sri Kumanan from Paris, after reading some of my articles in Thinnai.com, came in contact over phone introducing himself as a very staunch EVRist. Whenever he comes home, his first duty would be placing a wreath at the resting place of EVR, he said and his intention of contacting me was to contradict me (He is working in Paris Museum and therefore knowlegeable). He continued talking to me over phone (he contacted me even last night) and he his now agreeing to what I say. He is now with Hindu awareness, having attained VIDUTALAI! He is coming home in October and this time his first duty is seeing me – NOT going to the resting place of EVR! If anybody wants to verify, I will ask Sri Kumanan to give his phone number next time when he talks to me and mention it in my next posting. I hope both Sarva Sri Moorhti and Mathivanan will soon follow suit if they continue to read TamilHindu. Afterall, they are also TamilHindus only.

    I wish Sri Mathivanan also attains VIDUTALAI like Sri Kumanan! It is possible if he has open mind, no reservations. IF he is adamant, he can obtain VIDUTALAI (DK newspaper) only from a few news stands. IT is available in only a few stands because it has no takers!
    MALARMANNAN

  24. சமூக சீரமைப்பு தேவைதான்.அது நடந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து நடை பெரும்.

    இராமாயணம் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு காரணம் அல்ல. இராமர் குகனை நெஞ்சாரத் தழுவி தன் சகோதரனாக ஏற்றவர். அந்தக் காலத்திலேயே சம நோக்குடன் நடந்து கொண்ட அன்பாளர் இராமன். சரியாகப் புரிந்து கொள்ளாமல் நண்பர் எழுதுகிறார்.

    இந்தியாவிலே, தமிழகத்திலே தேவைக்கு அதிகமான சுதந்திரம் இருக்கிறது!

    பெயில் குடுக்காத நீதிபதியின் மூக்கை உடைத்து பெயில் கேட்க்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது!

    மருத்துவர், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை (மகனை) வைத்து சிசேரியன் பிரசவம் பார்க்க வைக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது!

    நாற்பது மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவன் கீழே விழுந்து பின்னும், அவனை அடித்து நொறுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது!

    சுதந்திரத்தை ஆக்க பூர்வமாக பயன் படுத்த வேண்டும். சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு. சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய என்ன செய்ய வேண்டுமோ , அதை எல்லாம் செய்ய தயாராக இருக்கிறோம். சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைய நாம் இணைந்து பணி ஆற்றுவோம்.

  25. நன்றி
    எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்பவர்கள் இல்லை நாம் மதுரைக்காரர்கள்.
    சிவனையே ஏன் என்று கேட்ட நக்கீரன் குலம் எங்கள் குலம்.எங்கே நல்லது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வதும் தவறை சுட்டிக் காட்டுவதும் மரபு.
    EVR ன் தனிப்பட்ட வாழ்வை வைத்து எடை போடுவதோ அன்றி முற்றாக எதிர்ப்பது நன்றன்று.தினம் ஒரு கருத்துக் கூறும் அம்மாவையோ,அன்றி சிலைகளை திறந்து வைப்பதும்,மக்ககளின் சொத்தை மகேசன் சொத்து என எண்ணாது வாரி வளங்கும் கொடை வள்ளல் என்று நடிப்பதும் அழகல்ல-MK. சென்னையை விட்டு மதுரைக்கோ அல்லது ஒரு கிராமத்துக்கோ வாருங்கள் மக்களின் வாழ்வு சுதந்திரம் எப்படி என்பது புரியும்.விருகம்பாக்கம் பொன்ற பல இடங்களில் கண்டெடுக்கப்பட்ட 8ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்று ஆதாரங்கள் கதை சொல்லும்.மூன்று நேர உணவையும் பொழுதுபோக்க வசதியையும் கொடுத்துவிட்டால் சுதந்திரம் அபிவிருத்தி என அரசும்,அவை கிடைத்து விட்டால் சுதந்திரமென நினைக்கும் மக்களுமிருக்கும் வரை??சிலைகளை வைக்கும் செலவு எத்தனை மக்களின் வாழ்வுக்கும் கல்விக்கும்மாதாரமாக இருக்கும்.சிறந்த கருத்துக்களை கல்லில் விதைப்பதை விட மனதில் விதைக்கலாம்.தமிழகமமெங்கே போகிறது?இதற்குளளெத்தனை கட்சிகள்-ஜாதிகள்-மதங்கள்.இவை தானா சுதந்திரம்? தமிழ் பேசுவது என அநாகரிகமாக நினைக்கும் சமூகம் -இளையோர் சிந்திக்க வேண்டும்.
    மனிதனகொலை செய்கிறான்,கடவுள் மன்னிக்கிறார்.ராமன் செய்ததுகொலை
    முருகன் செய்தது மன்னிப்பு.
    முதலில் sri என்பதை மாற்ற வேண்டும்.அழகான தமிழில்லையா?sir மாற வேண்டும்.சுதந்திரம் கிடைத்து விட்டது என்றோம் அதற்குள்ளெத்தனை சார் கள்.
    என்ன கொடுமை இது சார்-sir!

  26. வணக்கம்
    அட விடிய விடிய கதை கேட்டும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொன்னான் என்று ஒரு பழமொழி இருக்கே அது போலே இவங்ககிட்டே என்ன சொன்னாலும் பயனேஇல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது .
    நமது பழைய காலத்தில் நம்மை பிரித்தாள துணிந்த வெள்ளையன் செய்த தந்திரம் ஆரிய திராவிடபிரிவினை.
    சரி போகட்டும் ரமாயனத்தையாவது சரியாக உணர்ந்தார்களா அதையும் தப்பாகவே அறிந்துள்ளார்கள்.
    அரக்கர்கள் என்பவர் யார் எனில் இரக்கம் இல்லார் அரக்கர் என்பது கம்பனின் வாக்கு. அப்படியெனில் தமிழர்கள் இரக்கமில்லாதவர்களா?
    சரி தமிழர்களை குரங்குகள் என வர்ணித்ததாகவே வைத்துக்கொள்வோம் , ராவணனையும் தமிழன் என்கிறார்கள் அப்படியெனில் அவன் குரங்காக காட்டப்படவில்லையே ஏன் இந்த முரண் பாடு.
    தெளிவறக்கற்று பின்னர் விமர்சிக்கவேண்டும்.
    முதலில் அதற்க்கு நமக்கு தகுதியுள்ளதா என யோசிக்க வேண்டும்.
    ஆராய்ந்து பாராமல் தமிழன் என்று உணர்ச்சி பொங்க கத்தியவன் சத்தத்தை கேட்டு விட்டு நாமும் மார்தட்டிக்கொள்ளக்கூடாது.
    தமிழனுக்கு நாடு இல்லையா இப்போது நீர் எங்கோ அகதியாய் உட்கார்ந்து கொண்டா இதை பதிவிட்டீர்
    முதலில் நீர் ஒரு இந்தியர் என சிந்தியும்.
    தமிழ் தமிழ் என்று கத்தி விட்டு தன்வயிறு நிரப்பும் கூட்டத்தை இன்னும் எத்தனை நாள் நம்பப்போகிறீர்கள்.
    பல சரித்திரங்கள் வெள்ளையனால் அழிக்கப்பட்டு அவன் சொன்னதுதான் சரித்திரம் என்ற நிலயை உருவாக்கி விட்டும், பல சாதி பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் தன் மதம் வளர வழி வகுத்து விட்டும் போய் விட்டான். இன்னமும் அவர்கள் சொன்னதையே மேற்கோள் காட்டி பேசுவதும். என்னமோ தமிழர்கள் அறிவே இல்லாதவர்களாகவே நினைப்பதையும் முழுசாக நிறுத்துங்கள்.
    திருச்சிக்காரன் சொன்னதுபோல் எந்த மாநிலமும் தனியாக இயங்கவே முடியாது. நமக்கும் தண்ணீர் கூட கிடைக்காது.
    தட்டினால் தங்கமும், வெட்டினால் வெள்ளியும் அன்ன சொன்னது போல் உண்மையிலேயே கிடைக்கும். வேண்டுமானால் பொய் உங்கள் தலைவர், தலைவி வீட்டில் தட்டிப்பாருங்கள்
    கிடைக்கும். அதை முகர்ந்து பாருங்கள் அதில் தமிழ் மக்களின் வியர்வை வாசம் இருக்கும்.

  27. //In Geeta, My Master Sri Krushna says very clearly that Chatur Varnam Maya Srushtam and half baked persons quote this line only. Next comes from My Master Sri Krushna, “Guna Karma Vibhaga Saha.”
    The meaning of the second line is, Varna comes according to the divisions based on character (Gunam) and inclination toward a particular performance (Karmam). Nowhere My Master has said Varna is based on birth. Only Jati is based on birth and there is no referenc for Jati anywhere in Hindu Sastras//
    PERFECT AND AUTHORITATAIVE REMARKS!

    //Maryada Purushottam Sri Ramachandra Moorhti embraced Guha, the hunter who was also a boatman, and took him as his own brother. And Sri Rama is a prince. Telling there is no equiality taught in Srimad Ramayana only reveals the ignorance of the person who tells likewise//
    EXCELLENT REMARKS!

    //I wish Sri Mathivanan also attains VIDUTALAI like Sri Kumanan! It is possible if he has open mind, no reservations. IF he is adamant, he can obtain VIDUTALAI (DK newspaper) only from a few news stands. IT is available in only a few stands because it has no takers!//

    SUPER HIT!

    I APPRECIATE Mr. MALARMANNAN FOR THE ABOVE COMMENTS!

  28. NOW Sri Moorhti sidetracks to economics and politics. He has conveniently diverted his looks from Hindu philosophy and ehtos, realising his arguments will not hold water. YES, there are umpteen problems.Politicians, especially who claim as followers of EVR have spoiled the whole atmosphere. Economically and politically, people have not attained real freedom. The rowdy elements don’t even alllow people to cast their vote during elections. Booths are taken over, as directed by DMK thugs. Poll officers look otherside to save their skins. But why should you realte the Hindu faith with this? Madurai is the holi place where our Sri Shiva performed very many roles and sanctified the soil! It is also the place where great Saivate luminaries walked on the soil to sanctify. NOT just Nakkeeran but very many great poets and devotees lived in Madurai Moodoor. So what? It does NOT mean any citizen of Madurai can put a silly quetion! What was Nakkeeran’s contention? His stand was the hair of women cannot contain any natural fragrance. But it depends on the faculty of the person to feel whether it has any fragrance OR not. Dogs have excellent faculty in identifying fragrance. Science tells us that all liivng beings have some kind of fragrance in different parts of their body. Let us leave this fact as it does not matter here. Sri Shivji asked whether even Parvati’s hair did not have any fragrance. Nakkeeran replied in the negative, comparing Sakti with a human female. Is it NOT foolish enough? Did he have any authority to speak on Sakti’s hair as if he knew? For that he deserved good punishment to realise his follies. What is there to boast in claiming Nakkeeran’s lineage? Nakkeeran was a great scholar and later wrote Tirumugaarruppaai, that is showing the path to reach Sri Murugan, the great upadesi of Gnana. That was as a mark of repentance for his follies. IS Sri Moorthi also going to repent for his follies like Nakkeeran, realise his mistake and come back to the path of Hindu? I have no doubt, if Sri Moorthi tries to apply his brains, he would soon gain Hindu awareness, understand EVR was nothing but an evil force. THERE IS NO NEED TO CONSIDER OPINIONS OF AN EVIL FORCE BENT TO DESTROY HINDU UNITY.

    Now, Sri Moorthi seems to have porblems for my using SRI. My intention is to do him good only. While reading my post, he will automatically read the word SRI also, knowingly or unkonwingly and it will benefit him in course of time. See, now itself it has started working on him because he has indicated that SRI is disturbing him! Because SRI is NOT just an honorofic. It is a powerful mantra; whether you agree or not, when reading it in mentally, take my word, you will return to the right path, gain back you Hindu awareness because it is psychiic therapy! You know the end result of the legend of Nakkeeran. If you quote Nakkeeran, you have to quote him in full. NOT some portion from his legend according to your convenience! After lots of sufferings, Sri Moorthi will also get redemption at the end if he wants to be a heirling of Nakkeeran!

    Now, Tiru is a beautiful word. Very Sweet one. In Vaishnava Sampradaya, it is used extensively. But it is not a mantra. It is only a nice word to hear and utter. There are many words in Tamil also, which have the effect of mantra. But Tiru is NOT a mantra. That is why I use SRI, the mantra to make the reader feel good. If you want to eliminate it, you are the loser, NOT the mantra!

    MALARMANNAN

  29. //தட்டினால் தங்கமும், வெட்டினால் வெள்ளியும் அன்ன சொன்னது போல் உண்மையிலேயே கிடைக்கும். வேண்டுமானால் பொய் உங்கள் தலைவர், தலைவி வீட்டில் தட்டிப்பாருங்கள்
    கிடைக்கும். //அதை முகர்ந்து பாருங்கள் அதில் தமிழ் மக்களின் வியர்வை வாசம் இருக்கும்//

    பாஸ்க‌ர் ஐயா, ச‌ரிய‌டி!

  30. ராமன் கொலை செய்தானாம்!

    இராவ‌ண‌ன் புத்த‌ர் போல‌ உத்த‌ம‌மான‌வ‌னாம்!! அவ‌ன் இன்னொருவ‌ர் ம‌னைவியைத் தூக்கிப் போவானாம். அந்த‌ அப்பாவி பெண்ணை விடுவிக்க‌க் கோரிக்கை வைக்க‌ப் ப‌ட்ட‌து அல்ல‌வா? அனும‌ன் கேட்ட‌ போதே விடுவித்து இருந்தால் எத‌ற்க்கு‌ப் ப‌டை எடுக்க‌ப் போகிறோம்?

    ஆகையால் த‌மிழ‌ர்க‌ளே, கோழைத் த‌ன‌முடைய‌ பொருக்கிப் ப‌ய‌ல்கள், பிற‌ன் ம‌னைவியை தூக்கிப் போக‌லாமாம்!
    அந்த‌ப் பெண்ணை விடுவிக்க‌ அவ‌ள் க‌ண‌வ‌ன் போரிட்டால் அவ‌ன் கொலைகார‌னாம்! ம‌ன்னிக்க‌த் தெரியாத‌வ‌னாம்!
    இவர்க‌ள் தான் புதிய‌ வ‌ள்ளுவ‌ர்கள்! பிற‌ன்ம‌னை விழையாமை குறித்து ப‌த்துப் பாட‌ல்க‌ள் பாடிய‌ வ‌ள்ளுவ‌ரை ஏற‌ க‌ட்டி விட்டு, இவ‌ர்க‌ள் புதிய‌ கொள்கையுட‌ன் புற‌ப்ப‌ட்டுள்ளன‌ர்.

    என‌வே ந‌ண்ப‌ர்க‌ளே, உங்க‌ளில் யாராவ‌து, த‌ன்னுடைய‌‌ ம‌னைவி ப‌ல‌வ‌ந்த‌மாக‌ தூக்கிச் செல்ல‌ப் ப‌டுவ‌து த‌வ‌றில்லை என்று க‌ருதினால், அப்ப‌டி தூக்கிச் சென்ற‌ பொருக்கிப் ப‌ய‌லை ம‌ன்னிக்கும் ம‌ன‌நிலை உடைய‌வ‌ராக‌ இருந்தால், உங்க‌ளுக்கு த‌லைமை ஏற்று ந‌ட‌த்த‌ புதிய‌ புய‌ல்க‌ள் புற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌!

    ஆனால் நீங்க‌ள், “ஒருவ‌ன் ம‌னைவியை இன்னொருவ‌ன் தூக்கிச் செல்வ‌து த‌வறு, அதை ம‌ன்னிக்க‌ முடியாது” என்று கூறும் ப‌ழ‌மை வாதியாக‌ இருந்தால், உங்களுக்கு ப‌ழைய‌ வ‌ள்ளுவ‌ரை விட்டால் வேறு வ‌ழியில்லை.

    துறவி போல வேடமிட்டு இராவணன் தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றால், தமிழ்ப் பெண்கள் அவனைத் துடைப்பத்தால் அடித்து விரட்டுவார்கள்.

  31. ஸ்ரீ மலர்மன்னன் அவர்கள் சொல்லியதை ஸ்ரீ மூர்த்தி அவர்கள் சரியான முறையில், சரியான உணர்வுடன் உள்வாங்கிக் கொண்டால் “ஸ்ரீ” எனும் மந்திரத்தின் சக்தியைப் புரிந்து கொள்வார்.

    மேலும் ஒன்றிரண்டு தினங்கள் பொறுமையாக தமிழ் இந்துவில் ஆரம்பத்திலிருந்து வந்துள்ள படைப்புகளையெல்லாம் படித்தார் என்றால் சாதா மூர்த்தி ஸ்ரீ மூர்த்தியாகிவிடுவார்.

    ஸ்ரீ அஞ்சனாசுதன் அருள் பாலிக்கட்டும்!

    பிகு: அஞ்சனாசுதன் = அனுமன்

  32. முதலில் அவர்களை சிந்திக்கும் மனநிலைக்கு கொண்டு வாருங்கள்.

    பிறகு அவர்கள் தாமாக வணங்க ஆரம்பிப்பார்கள்.

    யாரோ சிலர் கூறிய வெறுப்பு கருத்துக்களை மனதில் வாங்கி அதில் எவ்வளவு உண்மை என்று கூட சிந்திக்காமல் இங்கெ எழுதுகிறார்கள்.

    இவர்களுக்கு முதலில் பகுத்தறிவை வழங்க வேண்டும். இவர்கள் பல்லிளித்து ஜால்ரா போடும் கனவான்கள் கூறுவதை பகுத்தறிவு என எண்ணி ஏமாறுபவர்கள். இவர்களுக்கு உண்மையான பகுத்தறிவை ஊட்ட வேண்டும்.

    அதுதான் நம் கடமை.

    பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    “The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

    “அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

    பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.

    சரிதானே ?

    “மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

    இதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக இருந்தாரா?

    “மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!
    உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

    ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் தேவை.
    இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?
    ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

    நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?
    அதாவது “உடலோடு சேர்ந்து தான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும், தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

    ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

    பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

    ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.

    இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு! மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ(pbuh), ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
    மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!
    எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

    மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

    நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!! கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    ஆனால் எதுவானாலும் அதை ஆராயாமல், உணராமல், குருட்டுத் தனமாக ஒரு முடிவுக்கு வர முடியுமா?

    ஆனால் நண்பர்களே நாம் அபாயத்தில் இருக்கிறோம், எந்த நோயோ அல்லது துன்பமோ நம்மையோ, நமது நெருங்கிய உறவினரையோ தாக்கினால் அதைத் தடுத்து நம்மை காத்துக் கொள்ளும் திறன் நமக்கு இருக்கிறதா?

    இதில் பிராமணர்களாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால் என்ன? ஒரு பிராமணரின் கை இரண்டு துண்டு ஆனால், அதை எடுத்து சேர்த்து வைத்தால் உடனே ஒட்டிக் கொண்டு சரியாகி விடுகிறதா? கொத்தடிமைகளாக இருக்கும் நமக்குள் இந்த சண்டை ஒரு கேடா?

    நண்பர்களே, மிகச் சிக்கலான நிலையிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
    எனவே நான் நம்முடைய ஆத்தீக நண்பர்கள், நாத்தீக நண்பர்கள் இரு தரப்பாரையும் கேட்டுக் கொள்வது என்ன வென்றால் நாம் அனைவரும் உண்மையான ஆன்மீக ஆராய்சச்சியில் ஈடுபடுவோம்!

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்!

    ஏன் எனில் உண்மை யாருக்காகவும் வளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் படையில் தேர்ந்து எடுக்கப் படுவதில்லை.

    உலகில் எல்லொரும் உலகம் தட்டை என்று நினைத்தாலும், ஒருவன் மட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

    Because Truth can never be defeated- it is the property of the truth!

    Truth shall prevail! No body can defeat the Truth.

    Hence let us all strive to find the truth.

    முதலில் அவர்களை சிந்திக்கும் மனநிலைக்கு கொண்டு வாருங்கள்.

    பிறகு அவர்கள் தாமாக வணங்க ஆரம்பிப்பார்கள்.

    இவர்களுக்கு உண்மையான பகுத்தறிவை ஊட்ட வேண்டும்.

    அதுதான் நம் கடமை.

  33. நன்றி மலர்மன்னன் அவர்களே,உங்களிடம் இருந்து பலவற்றை அறிந்து கொண்டேன்.
    திருச்சிக்காரரே! ஆன்மீகம்,இறை நம்பிக்கை உடையவர்கள் கோபத்திற்கும் தகாத வார்த்தை பிரயோகத்திற்கும் இடமளிப்பது அழகல்ல.தனது சார்ந்த கருத்துக்களுக்கு பலம் சேற்க வேண்டும்.
    இல்லாத நூலிற்கு அட்டைபடம் வரைவதை போல் உள்ளது ஐயா உங்கள் கருத்து.இணயத்தளமும் அல்லது ஒரு பேனாவும் இருந்தால் போதாது.வரலாற்று சாட்சியங்கள் வேண்டும்.பல தமிழ் ஆராச்சிகள் இன்னமும் Cologne-uni யிலும்
    நடை பெற்று வருகிறது.காலம் காலமாக சொல்லி வருவதை மட்டும் சாட்சிகளாக
    ஏற்பது அறிவீனம்.இராமாயனணம் நடந்ததாக (நடந்திருந்தால்)சொல்லப்படும் காலம் கம்பருக்கு முன்,மூன்று கடற்கோள்களுக்கு முன் இலங்கையும்-இந்தியாவும் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கவில்லை.பிரிக்கப்படாத நாட்டுக்கு அணை ஏன்? கம்பர் தனது காலத்திலிருந்ததை வைத்து எழுதி உள்ளார்.இப்படி வரலாற்று ஆராய்வாளர்கள் கேட்கிறார்கள்.ஆனாலும் கம்பனின் கவி நயதிற்க்கு தலை வணங்குகிறேன்.
    தமிழகத்தை கலக்க இன்னொரு அரசியல் தலைவரா-விஜய்- பரிதாபம் நம் தமிழகம்!
    என் பரீட்சை முடிந்ததும் வரலாற்று சிந்தனைகளுடன் மீண்டும் வருவேன்..

  34. சகோதரர் மூர்த்தி அவர்களே, அப்படி என்ன தகாத வார்த்தை கூறி விட்டேன்?

    உங்களைப் பற்றி தவறாக எதுவும் கூறவில்லையே.

    இராவணனைத் தான் கோழை, பொறுக்கிப் பயல் என்று சொன்னேன். அது சரிதானே? திருடனை திருடன் என்றும், ரவுடியை ரவடி என்றும் தானே கூற முடியும். “மகா கணம் பொருந்திய, மாட்சிமை உடைய, நல்லவர் மகாத்மா இராவணன்” என்றா எழுத முடியும்?

    நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள்.

    நீங்கள் இராவணனுக்கு ஆதரவு அளித்தால், அவன் செய்த செயல்களை ஒத்துக் கொள்வதாகவே முடியும். அப்போது நாகரீக சிந்தனையுள்ளவர் என்ன நினைப்பார்கள் என்று தயவு செய்து உங்களிடம் நீங்களே கேட்டுப் பாருங்கள்.

    தாயாரிடம், தமக்கையிடம், பிற பெண்களிடம் ‘இராவணன் செய்தது சரிதான், இராவணனை ஆதரியுங்கள்’ என்று உங்களால் கூற முடியுமா? அவர்கள் உங்களுக்கு என்ன பதில் சொல்வார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

    பிரச்சினை கொள்கை அடிப்படையில் தான். எனக்கு உங்கள் மேல் எந்த விதமான கோவமோ, வருத்தமோ இல்லை!

    நாம் அழுத்தம் கொடுப்பது கொள்கைகளுக்காகத் தான்.

    நாம் இராமரை மரியாதை செய்வது அவருடைய கொள்கைகளுக்காகத் தான்.

    இராமாயணம் அரசியல், சமூகம் என பல பரிமாணங்களை உடையது!

    அரசியல் ரீதியாகப் பார்த்தால் “பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போன்றது, கொள்கை என்பது இடுப்பில் அணியும் வேட்டி போன்றது” என்றார் அண்ணா! எத்தனை பேர் அப்படி நடந்து கொள்கிறார்கள்?

    தன் தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றூம் கொள்கைக்கு ஆக, இராமன் தன் பதவியை துச்சமாக கருதி காடு சென்றார்!

    இராமனோடு, சீதையும் தானாக வனம் சென்றார்! இந்திய வரலாற்றிலே, கண்ணகி,சீதை, சந்திரமதி போன்ற சில பெண்கள் உலகிற்கு முக்கியமான செய்தியை விட்டுச் சென்றுள்ளனர்! அது என்னவென்றால் “கற்பு என்பது கணவனோடு மட்டும் உறவு கொள்வது” -என்பது மட்டும் அல்ல!-“கணவன் எந்த தாழ்ந்த நிலயை அடைந்தாலும், அவனை விட்டுக் கொடுக்காமல், விட்டு விலகாமல், அவன் துயரங்களில் பங்கு எடுத்து, அவன் மீண்டு வர ஒத்துலைப்பதுதான் கற்பு” என்பதுதான் கண்ணகி சீதை போன்ற பெண்கள் உலகிற்கு விட்டுச் சென்ற வரலாறு!

    அந்த அளவுக்கு கணவனுக்காக தன அத்தனை சுகங்களையும் விட்டு வந்த , காட்டு வாழ்க்கையின் பல்வேறு துயரங்களையும் தன் கணவனுக்காக தாங்கிக் கொண்ட ஒரு அப்பாவிப் பெண்ணை, ஏமாற்றி தூக்கி சென்றிருக்கிறான் இந்த இராவணன். அவனைப் பாராட்டவா முடியும்?

    எனவே கொள்கை அடிப்படையில் தான் நாம் இராமருக்கு அதரவு கொடுக்கிறோம்.

    நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்.

    நியாயம் எது என்று சிந்தியுங்கள்!

  35. சகோதரர் மூர்த்தி அவர்களே,

    //கம்பருக்கு முன்,மூன்று கடற்கோள்களுக்கு முன் இலங்கையும்-இந்தியாவும் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கவில்லை//

    இதை எப்படி நீங்கள் உறுதியாகச் சொல்லுகிறீர்கள். மூன்று கடற்கோள்களுக்கு முன் முன்பு நீங்கள் பிரிக்கப் படாத நிலப் பகுதி மூலம் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு நடந்து சென்று இருக்கிறீர்களா? (நாம் இப்படிக் கேட்பதால் நீங்கள் அதிர்ச்சி அடையக் கூடாது. உண்மைக்கான ஆராய்ச்சிக்கு இந்த கேள்வி ஒரு வழி என்பதால் கேட்கிறோம்)

    இந்த மூன்று கடற்கோள்களுக்கு முன் இலங்கையும்-இந்தியாவும் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கவில்லை என்பதெல்லாம் ஒரு அனுமானம் தான், யூகம்தான்.

    ந்யூட்டனின் மூன்றாம் இயக்க விதிகளை, உங்களுக்கு என்னால் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எத்தனை முறை வேண்டுமானாலும் நிரூபித்துக் காட்ட முடியும்!

    இராமாயணம் நடந்ததாக சொல்லப்படும் காலத்தில் இலங்கையும்-இந்தியாவும் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கவில்லை என்பதை உங்களால் நிரூபித்துக் காட்ட முடியுமா? அந்த அறிங்கர் சொன்னார், இந்த பேராசிரியர் சொன்னார் இப்ப‌டி ந‌ட‌ந்திருக்க‌ வாய்ப்புக‌ள் உள்ளன‌, என்று கூறலாமே தவிர தெளிவான நிரூபணம் தர முடியுமா?

    வரலாற்று ஆதாரம் என்பது என்ன? அந்தந்த கால கட்டத்தில் எழுதப்பட்ட நூல்கள், அகழ்வாராய்ச்சில் கிடைத்த பொருட்டகளைக் கொண்டு வூகித்தல் இப்படிதான் வரலாறு உண்டாக்கப்படுகிறது!

    வரலாறு என்பது மின்னியக்க வீதிகளைப் போல தெளிவாக நிரூபிக்ப் பட முடியாதது!

    //காலம் காலமாக சொல்லி வருவதை மட்டும் சாட்சிகளாக
    ஏற்பது அறிவீனம்//

    வ‌ர‌லாற்றுக்கு முக்கிய‌ சாட்சி கால‌ம் கால‌மாக‌ சொல்ல‌ப் ப‌ட்டு வ‌ருவ‌துதான். அது ஒரு முக்கிய‌மான‌ Communication method.

    கற்ப்புக்கரசி கண்ணகியின் வாழ்க்கைக்கு என்ன ஆதாரம்- சிலப்பதிகாரம் என்னும் நூலைத் தவிர? அதைப் போல நூல் ஆதாரமாக இராமாயணமும், பொருள் ஆதாரமாக (Physical evidence) இந்தப் பாலமும் உள்ளன!

    //பல தமிழ் ஆராச்சிகள் இன்னமும் Cologne-uni யிலும்
    நடை பெற்று வருகிறது//

    என்ன‌ ஆராய்ச்சி ந‌டைபெறுகிர‌து? எதை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்க‌ள்?

    Cologne-university ல், டைம் மிசின் (Time machine) இருக்கிற‌தா? நீங்க‌ளோ, உங்க‌ள் ஆசிரிய‌ரோ அந்த‌ டைம் மிசினில் அம‌ர்ந்து பின்னொக்கிப் ப‌ய‌ண‌ம் செய்து, ந‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சிக‌ள் ஏல்லாவ‌ற்றையும் பார்த்து வ‌ர‌ முடியுமானால், அப்போது நீங்க‌ள் இராமாய‌ண‌ம் நிச்ச‌ய‌ம் ந‌ட‌க்க‌வில்லை என்று கூறினால், நான் அதை நிச்ச‌ய‌ம் ஏற்றுக் கொள்வேன்.

    கூகிள் Earth ல் சென்று அந்தப் பாலத்தைப் பாருங்கள். மிகத் தெளிவாக ஒரு கோடு போல பாலம் தெரிகிறதே?

    அது எப்படி இயற்கை சரியாக பால வடிவில் உருவாக்கும்?

    இந்தப் பாலத்தில் அகழ்வாரைய்ச்சி நடத்தி பாலத்தின் , நீல, அகல, உயர பரிமாணங்கள், Contour Chart எடுத்தால் தெரிந்து விடும்!

    பாலத்தில் அகழ்வாராய்ச்சி செய்யுங்கள், அதன் பரிமாண வரை படங்களை எடுங்கள் என்று அழுத்தி சொல்லுகிறோம், தைரியமாக சொல்லுகிறோம். ஆனால் அரசு அகழ்வாராய்ச்சி செய்ய மறுக்கிறது ஏன்? அறிவியலின் பாதையில் போகத் தயங்குவது ஏன்?

    அதே நேரம், இராமாயணம் நிச்சயம் நடந்த நிகழ்ச்சி என்று நான் அறுதியிட்டுக் கூறவில்லை. இராமாயணம் ஒரு நிஜமான நிகழ்வாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் அது வெறும் கதையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்;

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள், அறிவியல் கண்ணோட்டத்தின் மூலமாகவே அதிகமாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

    இந்தப் பாலம் அமைக்கப் பட்டுள்ள வடிவமும், தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இடமும் இராமாயணம் உண்மை நிகழ்வாகவே இருந்திருக்கும் என்ற கருத்துக்கே வலு சேர்க்கின்றன.

    முன்பு நான் இராமயணத்தப் பற்றியோ, இந்தப் பாலத்தைப் பற்றியோ அதிக அக்கறை காட்டவில்லை.

    ஆனால் இந்தப் பாலம் பற்றிய சர்ச்சை வந்தது முதல் நான் இதை கவனத்துடன் நோக்கிய வகையில், இது நேர்த்தியாக அமைக்கப் பட்ட பாலமாகவே, செயற்கையாக உருவாக்கப் பட்ட பாலமாகவே கருத வேண்டியுள்ளது.

    தேர்வை சிற‌ப்பாக‌ எழுதி முடித்து விட்டு வாருங்க‌ள். வாழ்த்துக்க‌ள்!

  36. ஐயா திருச்சிக்காரரே வாழ்த்துக்கள்.தற்போது தங்கள் எழுத்துக்கள் மிகவும் மெருகேறி உள்ளது.உலகின் பேரழகி கிளியோபற்றா கூட உங்கள் எழுத்தில் மயங்கி விடுவாள்..நான் cologne uni ல் படித்த போது நீங்கள் கூறிய Time machine அங்கு இருக்கவில்லை.தற்போது? கேட்டு தெரிந்து சொல்லுகிறேன்.தேர்வில் வெற்றி பெற வழ்த்தியமைக்கு நன்றி

  37. வணக்கம்

    நன்றி திருச்சிக்காரர் அவர்களே,

    நான் பல நாட்களுக்கு முன்னர் ஒரு புத்தகத்தில் படித்த செய்தி

    ராமர்பாலம் என்னும் நிலப்பகுதி கடலின் ஆழத்தில் இருந்து மேல்மட்டம் வரை உள்ளதல்ல அவை மிதவைப்பாறைகள் என்னும் பாறைக்கூட்டங்களால் ஆனவை
    மிக மிக பழைய காலங்களில் அவை தனுஷ் கோடியில் இருந்து தலை மன்னர் வரை நேர்கோட்டில் இருந்தன அனால் காலப்போக்கில் நீரின் சுழற்சி மற்றும் கடல் நீரின் போக்கு, இவைகளால் சற்று அலைக்களிக்கப்பட்டுள்ளன எனவே இப்போது அவை சற்று சிதறிக் கிடக்கின்றன.

    ராமாயணத்தில் ஒரு நிகழ்ச்சி

    இந்த சமுத்திரத்தில் இலங்கை வரை பாலம் கட்டுவது என்பது, அதுவும் வானர சேனைகள் கடந்து செல்லும் வலுவுடன் கட்டுவது எப்படி என்பது ஒரு கேள்விக்குறியானது. ஆனால் வானரர்கள் மனம் தளராமல் ராமபிரானை மனதில் தியானித்து பாறைகளை உருட்டி வந்து ராம நாமம் உச்சரித்து கடலில் வீசினர். அவர்கள் கொண்ட நம்பிக்கை வீணாகாது பாறைகள் நீரில் மிதந்தன.

    அது இயற்கையான நிலப்பகுதியாகவே இப்போது இருந்துவிட்டுப்போகட்டும், அனால் விங்கானத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சில ஆண்டுகளில் மறுப்புக்கு ஆளாகிறது.

    இதிகாசங்கள், புராணங்கள் என்பவை எழுதப்பட்டது எதோ கற்பனைகளால் அல்ல, அவைகளில் அதிகபட்சமான வர்ணனைகள் இருப்பது அவைகளை மெருகூட்ட அல்ல அதன் கவித்துவத்தை மட்டும் மெருகூட்ட.

    நீங்கள் கோலம் போடுங்கள், வட்டம் போடுங்கள், வெறும் கோடு மட்டும் போடுங்கள், ஆனால் நீங்கள் வரையும் எதுவானாலும் அதன் ஆரம்பம் ஒரு புள்ளியே.

    ராம காவியத்தின் வர்ணனைகள், நீங்கள் நினைக்கும் கற்பனைகள் எல்லாம் நான் சொன்ன கோடு, கோலம், போன்றவை, ஆனால் ராமன்தான் அதன் புள்ளி.

    புள்ளி என்ற ஒன்று இருந்ததால்தான் கோடும், கோலமும் வால்மீகியால் போட முடிந்தது. கம்பனுக்கும் அது சாத்தியமானது.

  38. //ஆரிய திராவிடப் போர் என்று ஏதாவது போர் வரலாற்றிலே இருக்கிறதா?

    அப்படி என்றால் இராமாயணம் வேறும் கதை தன் என்பதை ஓப்புக் கொள்கிறீர்கள்? நன்றி திருச்சியாரே அதை தான் நானும் கூறுகிறேன்… (ஆனால் கராப்பா, மொகன்சதாரோ அழிவிற்கு ஆரியர்கள் படை எடுப்பு ஒரு முக்கிய காரணம் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.)

    //இராமன் பின்லாந்து நாட்டுக்காரனாக இருந்தாலும் அவரை வணங்குவேன்
    //கோழையும் , பொருக்கியுமான இராவணன் என் சொந்தத் தம்பியாக இருந்தாலும்

    இராமன், வாலியை நேர்க் கொள்ள பயந்து, மறைந்து நின்று தாக்கினான் என்கின்ற இராமயணம் இராவணன் இறுதிப் போர்க்கு வருகையில் இவன் மாபெரும் வீரன் என இராமன் கூறுவதாக அந்த கதையில் உள்ளதே…

    //I wish Sri Mathivanan also attains VIDUTALAI like Sri Kumanan!

    மதிவாணன் என்று பெரியார், சாக்கரடீச், காரல் மாக்ச் வாதங்களில் உள்ள நியாயங்கள் உணர்ந்து, நாத்திக படி ஏறினானோ அன்றே விடுதலை காற்றை சுவாசிக்க துவங்கி விட்டான். எதையும் (மதத்தையும் சேர்த்து) சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திரண் எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். ஆக என்னை பற்றி கவலைப் பட வேண்டாம் தோழரே… மதம் சொல்வது சரியா தவறா என‌ சிந்திக்க கூட தயக்கும் பலருக்காக கவலைப்படுகிறேன்.

    //I wish Sri Mathivanan also attains VIDUTALAI like Sri Kumanan!
    //SUPER HIT!
    திருச்சிக்காரரே எந்த தியெட்டர்ல ஓடுது???

    // பெயில் குடுக்காத நீதிபதியின் மூக்கை உடைத்து பெயில் கேட்க்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது!
    //நாற்பது மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவன் கீழே விழுந்து பின்னும், அவனை அடித்து நொறுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது!

    என்ன திருச்சிக்காரரே, இதற்கு பெயர்தான் சுகந்திரமா? இது காட்டுமிராண்டி தனம் இல்லையா? (நீங்கள் வேறு எதையோ நினைத்துக் கூறி இருக்கிறீ்ர் என நினைக்கிறேன்). அதற்கும் வாததிற்கும் துளியும் சம்மத்தமில்லையே?

    //நமது பழைய காலத்தில் நம்மை பிரித்தாள துணிந்த வெள்ளையன் செய்த தந்திரம் ஆரிய திராவிடபிரிவினை

    திரு. பாச்கர் அவர்களே, புதுகதை சொல்கிறீங்க‌… ஆதாரம் இருக்கிறதா? கூறினால் ஆராந்து உண்மையானால் ஏற்றுக் கொள்கிறேன்…

    மூர்த்தியின் பொறுமை திருச்சிகாரரை, மெருகெற்றி உள்ளது என்று நினைக்கிறேன்

  39. I dont know in which world Mr.Mathivanan is living in. In our world, the Aryan Invastion theory has been broken to pieces and all the (true) historians have accepted that its only a story created by Max Muller and followed by the rest of europeans to divide and rule India.

    Pleas search in google for ‘Aryan invations theory a myth’ or even directly ‘david frawley’. You will get lots and lots of information proving that AIT is a myth. There is not even a single evidence to prove that Aryan invasion happened. But in contrast, DNA researches have been conduced and proved that the entire Indian subcontinent shares the same DNA structure and scientifically there is no proof for two races (the so called Aryan and dravidian) living in this part of the world.

    Please update yourself before commenting sir.

    And I pity your ignorance…
    // பெயில் குடுக்காத நீதிபதியின் மூக்கை உடைத்து பெயில் கேட்க்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது!
    //நாற்பது மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவன் கீழே விழுந்து பின்னும், அவனை அடித்து நொறுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது!

    என்ன திருச்சிக்காரரே, இதற்கு பெயர்தான் சுகந்திரமா? இது காட்டுமிராண்டி தனம் இல்லையா? (நீங்கள் வேறு எதையோ நினைத்துக் கூறி இருக்கிறீ்ர் என நினைக்கிறேன்). அதற்கும் வாததிற்கும் துளியும் சம்மத்தமில்லையே?

    Mr.Thiruchikaran was sarcastic in saying that this is the freedom the DK movement has given us and I wonder whether Mr.Mathivanan is playing ignorant or really ignorant. 🙂

  40. அன்புள்ளம் கொண்டவர்களே,
    நான் மௌனம் சாதிக்கவில்லை.மிக முக்கிய தேர்வு காரணமாக அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இருப்பினும் ஒரு சில கூறி விடை பெறுகின்றேன்.
    கவுண்டமணியின்-சும்மா கதை விடாதீங்க சார்- எதையும் ஆதாரத்துடன் தெரிவிப்பதே மேல்.உண்மையாக இருப்பின் யாரும் ஏற்க தயாராகவே இருப்பர்.
    கன்னியாகுமரியில் அண்ணன்-சுகவீனம்ற்ற தங்கை கையை பிடித்து அழைத்துச் செல்கிறான்.மழையில் நனைந்தற்காக திட்டவும் செய்கிறான்.இதுவே
    மதுரை-திருச்சி-சேலம்-சென்னை சென்று- காதலர்கள் அட்டகாசம்,காதலியை தாக்கிய காதலன்,பின் டெல்லியில் வேறு எப்படியோ மாறுகிறது? இதே போல்?
    கம்ப இராமாயனத்திற்கு முன்பே சில இராமாயன கதைகள் உண்டு.-புற-378.
    வால்மீகி-கம்ப இராமாயனதிற்குள் பல வேறுபாடுகள் உள்ளன.
    பழைய இராமாயனம் கம்ப இராமாயனதிற்கு மிக முற்பட்டவை-காரனம்-அவை
    அகவற்பாக்களினால் ஆனவை.
    வால்மீகி கி.மு 400 அளவில் வாழ்ந்தவர்.அவருடைய இராமன் ஜாதகப்படி
    11.02.கி.மு.4433 ல் இராமன் பிறந்திருக்க வேண்டும்-பிறந்திருந்தால்?
    Decompotion -carbon theory ன் படி இவை ஒத்துப் போகவில்லை.திருமூலர்-அகத்தியர் காலம் கி.மு 5000 வரை இருக்கலாமென்றால்,ஏன் இராமாயணம்
    அப்போதே எழுதப்படவில்லை என்ற கேழ்வியும்,இந்த இராமாயணக் கதைகள்-சுயம்பு வாகை கருத்தாக மருவியிருக்க வாய்ப்புகளதிகம்.பாட்டி வடை சுட்ட கதை-பிக்சா-pizza-விற்ற கதையாக மாற எவ்வளவு நாளாகும்!
    கம்பனின் கவி நயத்தை ஏற்பதை விடுத்து?யார் யாரை கடவுளாக்கி கோவில் கட்டுவது என்று முறை இல்லையா?நடிகைகளுக்கே கோவி கட்டும் போது?
    தமிழர்கள் தான் குரங்குகளாக கூறப்பட்டதாக எண்ணியோ என்னவோ srilanka
    இராணுவத்தளபதி தமிழ்நாட்டு தமிழர்கள் கோமாளிகள் என்று வர்னித்தாரோ!
    அவர் மன்னிப்பும் கேட்கவில்லை.நாம் கொதித்து எழவுமில்லை.சிங்களத்திற்கு
    குடை பிடித்து பரணி பாடுகின்றோம்.இது அடிமைத்தனமா இல்லை சுதந்திரம்
    என்று மௌனமாகி விட்டோமா! நக்கீரன் கோபால் சிங்களத்திற்கு சவால் விட்டாரே அதில் சிறு பகுதி உணர்வு கூட நமக்கு இல்லாமல் சுதந்திரம் பற்றி பேசுகிறோம்.விந்தையா!அடிமைத்தனமா!இராமனுக்கு தரும் பக்தியா!
    ஏழை விவசாயி கிராமங்களில் கண்ணீரை விதைக்கிறான்.நாமிங்கே சிலைகளை
    விதைக்கிறோம்.என்று மடியும் இந்த போலி பக்தியும்,போலி அரசியல் அடிமைத்தனமும்?கடவுள் ஒருவனே.மனிதருள் கடவுள் குணத்தான் வரலாம்,அவன் வள்ளுவன் சொல்லும் மாந்தர்.அவன் அவதாரம் எடுத்து மனிதனை அழிப்பானா? கிற்லரை அழிக்க அவதாரம் எடுக்காத இறைவன்,ஈழத்
    தமிழனை கொன்று குவிக்கும் போதும் கூட சிங்களனை அழிக்க அவதாரம் ஏன் எடுக்கவில்லை.பொது நலத்திற்கு இறைவன் அவதாரம் எடுக்க மாட்டனா?
    தன் மனைவியை சிறை பிடிப்பான் என்று முன்னமே தெரிந்து கொண்ட இராமன் அவதாரமெடுத்தானா? அப்படியானால் அங்கே சுயநலம் மட்டுமே!

    (Edited and Approved – Tamilhindu Editorial.)

  41. //I dont know in which world Mr.Mathivanan is living in. In our world, the Aryan Invastion theory has been broken..

    I am in earth only Mr. Satish.. which is your (dream) world. Kindly just come to the real world. Letus see how your are in dream.

    Mr.Satish, I can hardly find any trust organisations website there, where you suggested to search the words.

    https://www.incredibleindia.org/newsite/cms_page.asp?pageid=759
    This is the website of Ministry of Tourism of India – Indian Government offical website…

    I am here giving the words which is there. “The coming of the Aryans around 1500 BC, gave the final blow to the collapsing Indus Valley civilisation. At the dawn of Vedic ages the Aryans came in from the North and spread through large parts of India bringing with them their culture and religious beliefs.

    https://www.incredibleindia.org/newsite/cms_Page.asp

    “The history of the Tamils present an exciting pageant of a powerful civilization whose origin dates back to ancient times. It is clear that the Tamils, who belong to the Dravidian race, were the first major occupants of the country and settled in the northwestern part of India long before the coming of the Indo-Aryans. Excavations have revealed that the features of the people of the Indus Valley Civilization bore a strong resemblance to this race.

    However, with the advent of the Aryans, the Dravidians were pushed back into the deep south where they ultimately settled.”

    According to this website the Aryans are comes from somewhere. And have a very big crosses with already existing people (dravidans).

    Awake up Satish is too late… come to the real world.

  42. மதியின் கருத்தைமுற்றிலும்ஏற்கவேசெய்கிறேன்.நிரூபிக்கப்பட்டஉண்மை. நிரூபிக்கப்படாத என்று ஒன்றும் இருக்கிறது.அது சொல்லி வந்த கதை-இராமர் கதை போல்-அதை சுயம்பு என்பர். எங்கிருந்தோ வந்த ஆரியம், தமிழர்-திராவிடர்-களை வடக்கில் இருந்து தெற்குக்கு தள்ளியது.அத்துடன் நில்லாது கலாச்சார-சமயக் கருத்துக்களை திணிக்க ஆரம்பித்தது.போர் அச்சம்,அடக்கு முறை,அதிகாரம் இவற்றால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டிய நிலக்கு தள்ளப்பட்டர்கள்.எங்கிருந்தோ வந்த சிங்கள-ஆரியன்- srilanka ல் செய்ததும்,செய்வதும் போல்.
    இது ஒரு புறமிருக்க,கி.மு 1000 க்கு முன்(சிலர்2000/சிலர்1500 எனவும்)ஆரியர்
    விந்திய மலையை கடந்து வரவில்லை என்பது ஆராச்சி முடிபு.அப்படி வைத்துக் கொண்டால் இராமாயண கதை வடநாட்டில் மட்டுமே இருந்தது எனபதும்,ஆரியர்
    தென்நாடுகளை அறியார் என்பதும் முடிவு.தவிர கி.மு 6 ம் நூற்றாண்டில் இருந்த
    புத்தரும்,அவருக்கு பின்னால் வந்த புத்தர் பிறப்பு பற்றிய கதைகளில்-சாதககதை-
    இராமாயண கதையில்,சீதையை கவர்ந்தது பற்றியோ,இராம-இராவண யுத்தம்
    ப்ற்றியோ குறிப்பிடப் படவில்லை.வால்மீகி இராமாயண்த்தை விட வேறு இராமாயணங்களும் உண்டு.பழைய இராமாயணம்-Madurai Project-.இன்றுள்ள வட மொழி இராமயணம் வால்மீகியுடையதல்ல.வால்மீகியால் தொகுக்கப்பட்டது
    வேறு.பழையரமாயணத்திற்கும்,வடமொழி இராமாயணதிற்கும்,வால்மீகியால் தொகுக்கப்பட்ட இராமாயணத்த்ற்கும் பல வேறுபாடுகள் உண்டு.புத்தருக்கு முன் வால்மீகியால் தொகுக்கப்பட்ட சிறிய கதை புத்தருக்குப் பின் இடைச் செருகலாக பல சேர்க்கப்ப்ட்டது.கி.மு1 ல் அலெக்சாண்டரின் படை எடுப்பிற்குப் பின் இராமயணம் வளர ஆரம்பித்தது.கிரேக்க படை எடுப்பின் பின் -இல்லியட்-
    படித்தவர்க்ள்,இராவணன் பற்றியும் இராமாயணத்திலும் சேர்த்திருக்கலாம்.
    ஆரியர் வாழாத தெற்கில் எப்படி ஆரியப் பெயர்களான சுக்க்ரீவன்,ஹனுமன், சடாயு வந்தது? வால்மீகி இராமாயண்த்தில் இல்லாத வைஸ்ணவ கொள்ககைகளை-அப்போது வைஸ்ணவமமிருக்கவில்லை.இந்திரனே முழு முதற்
    கடவுள்-பிரஸ்கார கிரியை சூத்திரம் 11,17,97-சீதை இந்திரனின் மனைவி. வால்மீகி இராமாயண தொகுப்பாளர்களின் திறமைக்குறைவினால் வைஸ்ணவ்
    கொள்கைகளை புகுத்தி விட்டனர்.தமிழர்களை இழித்து எழுதிய நூலலென
    பேராசிரியர் சுந்தரம்பிள்ளை கூறுகிறார்.
    இரமயணம் நடந்த கதை அல்ல என்பதும்,ஆரிய் கருத்துக்களை,சமய கருத்துகளை,கலாச்சாரத்தை புகுத்த,இடைச் செருகல்களுடன் வந்து கம்ப இராமயணமாக உரு எடுத்து இருக்கிறது.
    Weber,Lassen என்பவர்கள் எழுதும் போது, ஆரியக் கொள்கைகளை தெற்கிலும், இலங்கையிலும் பரப்ப எழுதப் பட்ட கற்பனைக் கதை என்கிறர்கள்.
    சவரிராயன் எழுதும் போது தமிழ்நாட்டின் பழய வரலாறு ஒன்றை கோசல நாட்டு
    இராமன் கதையோடு பின்னி எழுடியிருக்கலாம் என்கிறார்.
    ஆரியர் மண முறை கன்னிகாதானம். தமிழர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து காதலுக்கு முன்னுரிமை தந்து, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்ணிற்கும் கொடுத்தனர்-சங்ககால இலக்கியங்கள்-கன்னியை ஆணிடம் அடிமையாக தாரைவார்த்து கொடுப்பது ஆரிய மண முறை.
    சிந்தியுங்கள். சிந்தித்து முடிவெடுங்கள். பிரியாணிக்கும்,பணம்,பதவி,சிறிய
    சலுகைகளுக்கும் வாக்களித்து அரசியலை சாக்கடை ஆக்குவது போல் நல்லதோர்
    தமிழ் கலாச்சார சமூகத்தை , சிந்திக்கத் தெரிந்த இன்றைய சமூகம் , எண்ணிச்
    செயல் பட வேண்டும்.சிலை அமைப்பதையும்,கோவில்கள் கட்டுவதையும்,
    இறைவன் ஒருவன்.அவனுக்கு கோவில்கள் போதும், நிறுத்தி நல்ல கருத்துக்
    களை மக்களிடம் விதையுங்கள். நல்ல உண்மையான ஆன்மீகத்திற்கு நாம்
    எதிரான நாத்தியர்கள் அல்ல நாம். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்.
    சட்டக் கல்லூரி சம்பவம் போல் வேடிக்கை பார்க்காதீர்கள்.

  43. இங்கு ஆரிய/திராவிட இனபேதத்தை பற்றிப்பேசிய பகுத்தரிவுவா(ந்)திகள் மூர்த்தி மற்றும் மதிவாணனுக்கு ஒன்றை கேட்கிறேன்… முதலில், ஆரியர்கள் இந்தியாமீது “படையெடுத்து” வந்து, திராவிடர்களை கொன்று, அடிமையாக்கி வைத்தனர் என்றீர்கள். இப்பொழுது, ஆதாரம் மாறுகிறது, படைஎடுப்பில்லை (invasion), இடம்மாரினார்கள் (migration)…

    அடுத்தென்ன, விசாக்களும் பாஸ்போர்டும் வாங்கிக்கொண்டு “Air India” விமானம் மூலம் இந்தியா வந்தார்கள் ஆரியர்கள் என்று கூறுவீர்கள் போலிருக்கிறதே…

    தமிழ், தமிழ் என்று அடித்துக்கொல்கிரீர்களே… ஆரிய/திராவிட இனப்போர் என்று ஏதாவது தமிழ் இலக்கியங்களில் உண்டா? உங்களால் காட்டமுடியுமா??

  44. நான் மேலே படித்துக் கொண்டிருப்பதால் கணணிக்கு செல்வதும்,இணையத்தளத்திற்கு செல்வதும் மிகக் குறைவு.தற்செயலாக உங்கள் கேழ்வியை படித்தேன்.Rigveda முழுவதையும் படியுங்கள்.ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைக்கும்.தவிர வடமொழியிலும் ஒப்பிட்டு படியுங்கள்.நான் இரு மொழி நூலகளையும் வைத்துக் கொண்டே படிக்கத் தொடங்கினேன்.தாசுக்கள் என்பது தமிழர்களைக் குறிக்கும்.invasion,migration எல்லாம் புரியும்.படிக்கும்படி கூறி உங்களை சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும்.தொல்பொருள் அகழ்வு காட்சியகம் அசாம்,உத்தரபிரதேசம்,தஞ்சாவுர்,திருநெல்வேலியை அடுத்த பகுதி,மொகஞ்சதாரொ நகர சிதைவுகள் தயவு செய்து ஒரு முறை சென்று பாருங்கள்.வெளிவராத அல்லது வெளியிட விரும்பாத பல சுவையான தகவல்கள் தெரிய வரும்.

  45. இவரெல்லாம் விடுதலைப் போர் போன்ற தேசிய எழுச்சியில் கலந்துகொள்ளமாட்டார்கள்.குந்தி உட்கார்ந்தபடியே அப்போதும் ஏதாவது குத்தாட்டத்தை ரசித்திருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *