இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்

நேற்று அடுத்தடுத்து இரண்டு செய்திகள் வந்தன. நம்மைச் சூழ்ந்திருக்கும் ஆபிரகாமிய ஆக்கிரமிப்பின் கண்ணிகளை வெளிப்படையாகச் சொல்லி அபாயமணி அடிக்கும் செய்திகள் அவை.

முதலில் நம்ம ஊர் சமாசாரம்.  நேற்றைய தினமலரில் வந்த இந்தச் செய்தியை அப்படியே தருகிறேன்.

செஞ்சி : செஞ்சியில் 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவில் உள்ள இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என கோரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கோட்டையை வலிமையானதாக மாற்றியதுடன், செஞ்சியைச் சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர்.இதனால், இந்திய மன்னர்கள் மட்டுமின்றி முஸ்லிம் பேரரசர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியின் மீது தீராத மோகம் இருந்தது. ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால், தென்னிந்தியாவில் செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது.கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது.

vellore-kodandarama-templeஇந்த போரின் போது செஞ்சி நகருக்கு பெருமை சேர்த்து வந்த வெங்கட்ரமணர், பட்டாபிராமர், கோதண்டராமர், சீத்தாராமர் கோவில்கள் பேரழிவை சந்தித்தன.இதன் பிறகு கி.பி.,1750 வரை நவாப்புக்களும், அடுத்து பத்து ஆண்டுகள் பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். கி.பி., 1761ல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் செஞ்சிக்கோட்டை தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது.ராஜா தேசிங்கிற்கு பின்னர் இந்து மன்னர்கள் யாரும் செஞ்சியை ஆட்சி செய்யவில்லை. இதனால் போரில் நாசப்படுத்தப்பட்ட கோவில்கள் மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. ராஜா தேசிங்கிற்கு பின்னர் செஞ்சியை ஆட்சி செய்தவர்கள் கோவில் சொத்துக்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மானியமாக வழங்கியதால் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி விடப்பட்டன.ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர், கலை நயம்மிக்க வெங்கட்ரமணர் கோவில், பட்டாபிராமர் கோவில்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

சீத்தாராமர் கோவிலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்த கோதண்டராமர் கோவிலும் தொடர்ந்து கேட்பாரற்று விடப்பட்டன. 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடக்காமல் இருந்த காலத்திலும், இங்குள்ள மண்டபத்தில் செஞ்சி ஏகாம்பரேஸ்வரரும், சிங்கவரம் அரங்கநாதரும் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி நடந்து வந்தது.இந்த கோவிலில் ராமர் சிலை வைத்து வழிபாடு நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்த கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி போலீசில் புகார் செய்தனர்.இப்பிரச்னை தொடர்பாக செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இரண்டு முறை சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கிறிஸ்தவர்கள் தரப்பில் 1878ல் திண்டிவனம் சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஆதாரமாக காட்டி உள்ளனர்.இந்த பத்திரத்தில் கோதண்டராமர் கோவில் உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை மயிலம் தேவஸ்தான ஆதினம் பரம்பரை தர்ம கர்த்தா சிவக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு யெப்டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியுள்ளார்.இதே பத்திரத்தில் மண்டபம், மயில் கோபுரம், கிளி கோபுரம் நீங்கலாக என குறிப்பிட்டிருப்பதாக இந்துக்கள் தரப்பில் கூறுகின்றனர். பத்திரப் பதிவின் போது மடத்தினர் இந்த சொத்தை கிரயம் பெற்றதற்கான மூலப்பத்திரமும், கோவில் நிலத்தை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட டிரஸ்டி பத்திரமும் இணைத்து வழங்கியதாக கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

fort_gingeeஆனால் இந்த இரண்டு பத்திரத்தையும் கிறிஸ்தவர்கள் தரப்பில் சமாதானக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவில்லை. பிரச்னைக்குரிய இடத்திற்கு சமீபத்தில் எடுத்த வில்லங்க சான்றிதழில், 1878ல் நடந்த கிரயத்தை தவிர வேறு சொத்து பாரிமாற்றம் நடக்கவில்லை. இதற்கிடையே கோவில் இடத்திற்கான பட்டா காண்டியார் என்பவர் மீது மாற்றப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்த நிலையில் இருந்த கோதண்டராமர் கோவிலை மீண்டும் கட்ட 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை உருவாக்கி கோவில் கட்டுவதற்கான வேலைகளை இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் நேற்று முன்தினம் கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை நடக்க உள்ள சமாதானக் கூட்டத்தில் எடுக்க உள்ள முடிவிற்காக இரண்டு தரப்பினரும் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.

கோவில் இடத்தை காட்டும் எழுத்துக்களை அழித்துள்ளதாக புகார் : அரசு வரைபடத்தில் கோதண்டராமர் கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் எழுத்துக்கள் சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக ஆலய அறக்கட்டளை தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை குறித்து கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை நிறுவி கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் ரங்கராமானுஜதாசர் கூறியதாவது:தாலுகா அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்துள்ள கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சொத்தின் மூலப்பத்திரமும், டிரஸ்டி பத்திரமும் கேட்டு தாசில்தாரிடம் மனு செய்தும் இதுவரை சமர்ப்பிக்க வில்லை. இந்த பத்திரங்கள் கிடைத்தால் தான் கோவிலை விற்பனை செய்யும் உரிமை விற்பனை செய்தவருக்கு உள்ளதா என்பது தெளிவாகும். இதில் டிரஸ்டிகளாக இருந்தவர்கள் விவரமும் தெரியவரும்.

கிரயத்திற்கு பிறகு இன்றைய நாள் வரை எந்த சொத்து பரிமாற்றமும் நடக்காத நிலையில் எந்த அடிப்படையில் காண்டியார் என்பவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது என கேட்டு கடந்த மாதம் 4ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தாசில்தாருக்கு மனு கொடுத்தோம். ஆனால், இதுவரையில் இந்த மனுவிற்கு பதில் அளிக்க வில்லை.அரசிடம் உள்ள நிலத்தின் வரைபடத்தில், கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் வகையில் இருந்த எழுத்துக்களை சமீபத்தில் வெள்ளை மை கொண்டு அழித்துள்ளனர். இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கோரியுள்ளார் – ”… பாதிரி ஜேம்ஸ் ஆல்பிரட் என்பவர் பிப்ரவரி-1 அன்று ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பக்தர்களை வெளியேற்றி கோயிலுக்குப் பூட்டுப் போட்டுள்ளார். இது சம்பந்தமாக விசாரிக்க வந்த தாசில்தாரும் கோயிலைப் பூட்ட உத்தரவிட்டுள்ளார்… கோயிலை யாருக்காவது விற்பது சட்டப் படி செல்லாது . தாசில்தார், பாதிரி ஜேம்ஸ் ஆல்பிரட் ஆகியோர் மீது காவல்துறை கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. முழு அறிக்கையையும் இங்கே பார்க்கலாம்.

அரசு இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் என்று எதிர்பார்ப்போம். சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப் படலாம், தீர்க்கப் படவேண்டும்.

ஆனால், இந்த சம்பவம் சில மையமான கேள்விகளை எழுப்புகிறது.

pondicherry_colonial_seigeதமிழக வரலாறு பற்றி ஓரளவு பரிச்சயம் உள்ளவர்கள் 17,18,19ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் எத்தகைய அரசியல் கொந்தளிப்புகளிலும், கொடுங்கோன்மையிலும் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது என்பதை அறிந்திருக்கலாம்.  நிலையான அரசாட்சி இல்லாமையினாலும்,  ஆங்கிலேயேர்கள், பிரெஞ்சுக் காரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக் காரர்கள் இவர்களிடையே நடந்து கொண்டிருந்த வாணிப, அதிகாரப் போட்டியினாலும், காலனியர்களின் பொருளாதாரச் சுரண்டலினாலும், அவர்கள் திட்டமிட்டு உருவாக்கிய அடுத்தடுத்த பெரும் பஞ்சங்களாலும்  தமிழ்ச் சமுதாயமும், அதன் கலாசாரமும் முழுவதுமே உருக்குலைந்தன.  இந்தச் சூழலிலும்  நம் பண்பாட்டையும் மக்கள் நலனையும் பாதுகாக்கப் போராடிய ஒளிக்கீற்றுகளாக செஞ்சி மன்னர் தேசிங்கு, தஞ்சை மராட்டியர்கள், மருதுபாண்டியர், கட்டபொம்மன், ராணி மங்கம்மாள் ஆகியவர்களைக் குறிப்பிடலாம்.

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் அனைத்து இந்துக் கோவில்களும் பெரும் சீரழிவுக்கு ஆட்பட்டன.  சிதம்பரம், காஞ்சிபுரம், தஞ்சை, திருவரங்கம், மதுரை என்று தமிழகத்தின் மிகப் பெரும் கோயில்கள் கூட அன்னியர்களின் கொத்தளங்களாக  இந்தப்  போர்களின்போது உருமாறின. பல கோயில்களில் வருடக் கணக்கில் வழிபாடுகள் நின்று போயின.  பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரன் கோயில் முழுதாக இடிக்கப் பட்டதுதிருச்செந்தூர் கோயிலைத் தகர்க்க முயன்றது ஆகியவை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள்.  சொல்லப் போனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இந்த இழுபறிகள் ஓரளவுக்கு நின்று ஆலயங்களில் சீரான வழிபாடுகள் நடந்து வரலாயின.  பல்லாண்டுகளாகக் கைவிடப் பட்டுக் கிடந்த கோயில்களும் புதுப்பிக்கப் பட்டு நின்று போயிருந்த வழிபாடுகள் தொடங்கப் பட்டன.   அண்மைக் காலங்களில் கூட, இத்தகைய புனருத்தாரண நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 1980களில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் இவ்வாறு புதுப்பிக்கப் பட்டது.   இந்திய தேசிய எழுச்சியின், பண்பாட்டு மறுமலர்ச்சியின் ஒரு அங்கமாக இயல்பாகவே நிகழ்ந்துவரும் செயல்பாடுகள் இவை.

இதன் ஒரு தொடர்ச்சியாகவே செஞ்சி கோதண்டராமர் கோயிலைச்  சீரமைக்கும் பணியை அங்கு வாழும் இந்துக்கள் ஏற்றிருக்கின்றனர். அதனை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் அதற்கு ஆதாரமாகக் காட்டுவது என்ன??  1878-ஆம் ஆண்டு கிரயம்! கோவிலைச் சுற்றியுள்ள நிலம் மட்டுமல்ல, கோயிலையும் சேர்த்து  “ரெவரெண்டு யெப்டாருஸ்” வாங்கி விட்டாராம் – அதனால் அது கிறிஸ்தவ சொத்து!  யார் இந்த ரெவரெண்டு? நம் தேசத்தை ஆக்கிரமித்திருந்த காலனிய அரசாட்சியாளர்களுடன், அவர்களது ஐந்தாம் படையாக வந்த ஒரு ஐரோப்பிய மிஷநரி. அதோடு, அந்தக் காலகட்டத்தில் சூழ்ச்சி, நயவஞ்சகம், மோசடி, வரிக் கொடுமைகள் இவற்றின் மூலம் இந்தியர்களின் நிலபுலன்களும், சொத்துக்களும் காலனியர்களாலும், அவர்களது கூட்டாளிகளான மிஷநரிகளாலும் கையகப் படுத்தப் பட்டதென்பது ஆவணப் படுத்தப் பட்ட வரலாறு.

1878ல் ஐரோப்பியப் பாதிரி வாங்கியதாகச் சொல்லப் படும் நிலத்தை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடும் இந்த மதவெறியர்கள் அந்தப் பாதிரியின் சந்ததிகளா? அல்லது ரத்த உறவினர்களா? காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்! தங்களது முன்னோர்களே கட்டிய  பாரம்பரியமான கோயிலில் வழிபாட்டைத் தடுத்து நிறுத்தும் செயல்பாடு எப்ப்பேர்ப்பட்ட துரோகம்!

இந்தக் கயமைத் தனத்தைச் செய்பவர்களே! இதே ஆதாரத்தை வைத்து, இந்தியாவில் இருந்த இந்த ஐரோப்பிய மிஷநரிகளும், அவர்கள் அமைப்புகளும் இங்கிலாந்திலும், பிரான்சிலும், ஜெர்மனியிலும், போர்ச்சுகலிலும் வைத்திருந்த நிலங்கள் மீதும், சொத்துக்கள் மீதும் உங்களால் உரிமை கொண்டாட முடியுமா? அதற்குத் தைரியம் இருக்கிறதா? அங்குள்ள அரசுகள் அதை அனுமதிக்குமா? அல்லது உங்கள் எஜமானர்களான அங்குள்ள சர்ச்சுகள் தான் அனுமதிக்குமா? பரந்த பெருந்தன்மையுடன், உங்களது ஆக்கிரமிப்பு அராஜக மதத்திற்கும் மரியாதையும், உரிமையும் கொடுத்து வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜனநாயக இந்திய தேசத்தில், வைதாரையும் வாழவைக்கும் இந்தத் தமிழ்மண்ணில் தான் இதை உங்களால் செய்ய முடிகிறது. மறைமுகக் காலனியத்தின் ஏவலாளிகளே ! இப்படிச் செய்ய உங்களுக்கு வெட்கமாகயில்லை? அந்த அளவுக்கு மானமிழந்தவர்களாகவா ஆபிரகாமியம் உங்களை ஆக்கி விட்டது?

தமிழகத்தின் பல நூற்றாண்டு கால சரித்திரத்தில் இப்படி பொதுச் சொத்தான கோவில்களையும், குளங்களையும், ஏரிகளையும் யாராவது விற்றதாக, வாங்கியதாக சரித்திரம் உண்டா? தங்கள் குடிசை வீடுகளிலும் ஒரு ஓரத்தில் குலதெய்வத்தை நிறுத்தி வழிபடுவது தமிழனின் மரபு. பிணைத் தொழிலாளர்களாக மலேசியாவிலும், இலங்கை மலையகத்திலும், தென்னாப்பிரிக்காவிலும் வாழ்ந்த சூழலிலும் தங்கள் நிலங்களில் கோயில்கள் கட்டி வழிபட்டு வந்த தன்மானப் பாரம்பரியம் கொண்டது தமிழ்ச் சமூகம். இதைப் பற்றிய பிரக்ஞையாவது உங்களிடம் இருக்கிறதா? தமிழ் முன்னோர்கள் கோவிலையும் சேர்த்து விற்றதாக மோசடி செய்யும் அளவுக்கு ஆபிரகாமியம் உங்களை மரத்துப் போகச் செய்திருக்கிறது.

கள்ளத்தனமாக கோவில் சுவர்கள் மீதும், மலைகள் மீதும், மரங்கள் மீதும், போக்குவரத்து சிக்னல்களைக் கூட விட்டுவைக்காமல் அவற்றின் மீதும் அதிகாரவெறியின் அடையாளமான சிலுவையை வரைந்து வரைந்து ஆக்கிரமிப்பு அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் இந்த மதப் பிரசார வெறி இப்போது இந்துக்களின் பழைய கோயிலையே சொந்தம் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்து விட்டிருக்கிறது. அந்தக் கோயில் உங்கள் கைக்கு வந்ததும் என்ன செய்வதாக உத்தேசம்? அதை இடித்து விட்டு அங்கும் ஆக்கிரமிப்புப் பிரகடனம் செய்வதா? புத்தர் சிலைகளை இடித்தழித்த தாலிபானிய மனநிலைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? ஒன்றுமில்லை.

இன்னொரு செய்தி நம் அண்டை வீடான ஆந்திரா பற்றியது.

simhachalam1விசாகப் பட்டினம் அருகில் உள்ள சிம்ஹாசலம் பழமைவாய்ந்த விஷ்ணு ஸ்தலம். இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்த அழகிய கோவில். ஸ்ரீராமானுஜரின் பாதச் சுவடுகளால் பெருமைப் படுத்தப் பட்ட தலம்.

இந்தக் கோவிலுக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலம் சட்டத்திற்குப் புறம்பாக பலரால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது என்பது நெடுநாளைய புகார். மேலும் இந்த நிலத்தில் 47 சர்ச்சுகளும் கட்டப் பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கோவிலின் கோசாலையிலுள்ள மாடுகள் வேண்டுமென்றே கவனிக்காமல் விடப் படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் பல மாடுகள் மர்மமான முறையில் இறந்து போனது பல பக்தர்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலிருக்கும் அரசு அதிகாரிகள் முழுமையாக ஊழலில் திளைத்திருக்கிறார்கள் என்பதோடு, மிஷநரிகளின் கைக்கூலிகளாகவே இருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது. இப்படி இருந்தால் அதில் ஆச்சரியமும் இல்லை.  ம்றைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் செயல்பாடுகளால், ஆந்திரா தென்னிந்தியாவின் ‘பைபிள் பெல்ட்’ (Bible Belt) என்ற புகழுரைக்குப் பொருந்தும் வகையில் வந்து கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள அடிப்படைவாத, பழமைவாத கிறிஸ்தவ மிஷநரிகளின் சொர்க்கபூமியாக ஆந்திரா கருதப் படுகிறது. உலகின் பல நாடுகளில் அங்குள்ள கிறிஸ்தவ அரசுகளாலேயே தடைசெய்யப் பட்ட விஷயங்களைக் கூட அவர்கள் ஆந்திராவில் கனஜோராக செய்ய முடியும்.

இந்நிலையில், இந்த ஆலய நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து பக்தர்கள் குழு ஒன்று கமல் குமார் சுவாமி என்ற துறவியின் தலைமையில் அமைதியான முறையில் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டும், நிர்வாக சீர்கேடுகளை விளக்கும் செய்திகளைச் கூறிக் கொண்டும் சென்றது. தங்கள் கூட்டம் முடிந்ததும் கோயிலுக்கு உள்சென்று தரிசனம் செய்வதாகவும் எண்ணியிருந்தது. கோவில் வாசலருகில் வந்தவுடனேயே ஆலய நிர்வாகி, பக்கத்தில் கடைவைத்திருந்தவர்கள், சில ஆலயப் பணியாளர்கள், மற்றும் அங்கு வரவழைக்கப் பட்ட கூலிப் படையினரால் சரமாரியாக சுவாமிகளும் பக்தர்களும் தாக்கப் பட்டனர்.

ஈ-டிவி வீடியோ:

இந்த மாபெரும் சதித்திட்டத்தை அம்பலப் படுத்திய கமல் குமார் சுவாமிகளையும், பக்தர்களையும் கோவில் நிர்வாகி மோசமான வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார். கோவில் சொத்துக்களை சர்ச்சுக்குக் கடத்தும் இந்த மானங்கெட்ட கைக்கூலி, சுவாமிகளை self styled swami என்று திட்டி, காவிக் கொடிகளை கோவிலுக்குள் கொண்டு செல்வது சட்டவிரோதம், அதனால் தான் அடித்தோம் என்று விளக்கம் வேறு அளிக்கிறார். அவரது அதிகாரம் அங்கே முழுமையாக இருப்பதால் கடைக்காரகள் உட்பட அனைவரும் அவரது கைக்குள்!

சுயநலத்தாலும், அரசியல் அதிகார ஆசைகளாலும் இந்துக்களிலேயே ஒரு சாரார் தங்கள் மதத்தை அழிக்கும் செயல்பாடுகளிலும், தங்கள் சகோதரர்களையே எதிரிகளாகக் கருதும் இழி நிலைக்குத் திருப்பப் பட்டிருக்கிறார்கள். பலியாகியிருக்கிறார்கள்.

”யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாயிருக்கமாட்டான்.” – லூக்கா 14:26, விவிலியம்

“இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது” – வில் டுராண்ட் (நாகரீகங்களின் வரலாறு)

மேற்கண்ட வாசகங்களின் நிஜம் நம்மைச் சுட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கீழ்க்கண்ட வாசகத்தையும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

“கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் அவற்றையே மறுமுறை செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்” – ஜார்ஜ் சாண்டாயனா.

41 Replies to “இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்”

  1. https://www.hindu.com/2010/02/04/stories/2010020451400300.htm

    Hindu religious heads seek State grant for pilgrims

    Special Correspondent

    CUDDALORE: Religious heads have asserted that a separate board, on the lines of the Wakf Board, should be constituted for administering temples and their property in Tamil Nadu, said Marudhachala Adigalar of Perur Adheenam.

    Addressing a press conference at Chidambaram near here on Wednesday, the Adigalar said there were 35,000 temples in the State but most of these were brought under the purview of the Hindu Religious and Endowment Act 1959. Hence, the religious heads had no say in the administration of the temples. The Tamilaga Thuravigal Peravai, modelled on the ancient Theiveega Peravai, had already made an appeal to the State government, he said.

    A demand had also been made to the government to give monetary assistance to those who were making pilgrimage to the Kailash every year. Each of them had to spend about Rs.75,000 to Rs.1 lakh on the journey.

    The Adigalar noted that the Karanataka and Gujarat governments were giving Rs.25,000 to each of those who visit the Kailash and the Tamil Nadu government should also emulate them.

    Kumaragurubara Adigalar of Gowmara Math said the Muruga Bhaktha Peravai had demanded that medical facilities be provided to pilgrims who undertake trekking and also compensation to the families of those who die in mishaps during the journey.

    Sundaramurthy Thambiran said that his Thirupanandal Adheenam had built temples in the seven villages by spending lakhs of rupees to keep the flocks together.

  2. 
    HolyIndia.Org – devaram.senthamil.org has been shifted to HolyIndia.org so kindly use holyindia.org

    கோயில் : 273-திருக்கோணமலைஅடுத்த ஆலயம் சிவஸ்தலம்
    பெயர் : திருக்கோணமலை
    இறைவன் பெயர் : திருக்கோணேஸ்வரர்
    இறைவி பெயர் : மாதுமையாள்
    எப்படிப் போவது : திருக்கோணேஸ்வரத்திற்கு இரயில் மூலம் கொழும்பிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் போகலாம். பேருந்து வசதிகளும் உள்ளது. திருக்கோணமலை இரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு நடந்து போகலாம்.
    ……………
    இக்காலத்திற் சிவராத்திரி தினத்திற் கோணேச்சரப் பெருமானுக்கு நகர்வலம் வருதல் என்னும் திருவிழா ஒன்று சிறப்பாக நடைபெறுகின்றது. அக்காலத்திலும் இத்தகைய திருவிழாக்கள் நடைபெற்றன. இவ்வாறாக 1624ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு நாளில் நகர்வலம் வருந் திருவிழா ஒன்று நடைபெற்றது. இதற்காக மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து நகருக்கு எழுந்தருளினார். அவ்வேளையிற் போர்த்துக்கேயப் படைவீரர் பிராமணர்கள் போல வேடந் தாங்கிக் கும்பிடப்போவது போன்று கோயிலினுட் புகுந்தனர். அந்நேரத்திற் கோயிலின் உள்ளே பூசகர்கள் சிலரும் வேலையாளரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

    கொன்ஸ்ரன்ரயின்டீசா என்பவனுடுடைய தலைமையிற் சென்ற இப்போர்வீரர்கள் எதிர்த்தவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க வெள்ளி நகைகளையும் விலைமதிப்புமிக்க பிறபொருள்களையும் சூறையாடிக்கொண்டு சென்றனர். அதன் பின்னர் அடியார்கள் சில விக்கிரகங்களை அகற்றி மறைத்து வைத்தனர். போர்த்துக்கேயர் பீரங்கிகளுடன் மீண்டும் வந்து கோயிலை முற்றாக அழித்தனர். போர்த்துக்கேயர் அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற மண்டபங்களும் இருந்தன என்பது அவர்கள் வரலாற்றுச் சான்றாக வரைந்து வைத்த படம் ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. கொன்ஸ்ரன்ரயின்டீசா செய்த சிவத்துரோகத்துக்காக அவன் 1630ம் ஆண்டு வேறு சிலர் செய்த சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டான்.

    புதிய கோயிலின் வரலாறு 1944ம் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு அகழ்வு வேலை செய்தபொழுது விஷ்ணு மகாலட்ஷ்மி விக்கிரகங்கள் கிடைத்தன. 1956ம் ஆண்டு ஆடி மாதத்திற் சுவாமிமலைக்கு அண்மையிற் கடற்கரை வீதியருகே கிணறு ஒன்று வெட்டப்பட்டபொழுது மூன்று விக்கிரகங்கள் கிடைத்தன. வேறோர் இடத்தில் அகழ்ந்தபொழுது மேலும் இரண்டு விக்கிரகங்கள் கிடைத்தன. இந்த விக்கிரகங்கள் எல்லாம் 1952ம் ஆண்டிற் பிரதிட்டை செய்யப்பட்டன.

    1950.07.03 அன்று கலாநிதி பாலேந்திரா அவர்களின் தலைமையிலே திருக்கோணேச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆரம்பமானது. இச்சபையின் பெருமுயர்சியாற் பழைய கோயில் இருந்த இடத்தில் மீண்டுந் திருக்கோணேச்சரர் ஆலயம் அமைக்கப்பட்டு 1963.03.03 அன்று மகா கும்பாபிடேகம் நிறைவெய்தியது. பழைய கோயிலுடன் ஒப்பிடும்போது இது சிறிய கோயிலாகவே இருக்கின்றது.

    https://devaram.senthamil.org/temple/273.htm

    THE HISTRY IS REPETED??????????

    OUT TEMPLES AND LANDS AND OTHER ASSETS IS MORE VALUBILE. PLS SAVE IT.

    TAMIL NADU GOVT., RESENT ONE ROUL IS ALOUED SALE OF TN TEMPLES LAND AND OTHER ASSOCETS, NO TEMPLE LANDS AND SHOPES –> NO INCOME OF TEMPLES –> NO SOURE INCOME OF TEMPLES TO GO TOO INCREASE OF SPECIAL TICKETS AND OTHER POOJA TICKETS –> POOUR HINDU PEPOLES DON’T GO TO TEMPLES.! IT IS PLANE. SO PLEASE SAVE OUR TEMPLE LAND AND SHOPES AND OTHER SOURCE OF INCOME OF TEMPLES.

    BY

    R. NATARAJAN

  3. Government of India has passed a legislation that all worship places as an 1947 can not be distrubed in the wake of Disputed Structure demolition in Ayodya.

    How then These Atrocities are supported by Police?

    Is this A Secular Country? or Sonia Antonia Maina’s Church Ruled Country?

  4. அம்பலப்படுத்தியதற்க்கு நன்றி. இந்து மதத்தைத் தவிர்த்து மற்ற மதத்தினர் எது செய்தாலும் கண்டுக்கக் கூடாது என்பதே ஆட்சியாளர்களின் மனநிலை. அவர்களுக்கு அடிபணியும் அரசாங்க ஊழியர்கள்.
    ‘நாங்கள் ஆண்டவர்கள் இப்போது அடிமைகளாக இருக்கிறோம்’ என்று ஒரு முஸ்லிம் தீவிரவாதி ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தில் பேசுவான். அதே போல்தான் சில கிருஸ்துவர்களும் நினைக்கிறார்களோ?!
    //கோவில் சொத்துக்களை சர்ச்சுக்குக் கடத்தும் இந்த மானங்கெட்ட கைக்கூலி சுவாமிகளை self styled swami என்று திட்டி, காவிக் கொடிகளை கோவிலுக்குள் கொண்டு செல்வது சட்டவிரோதம்,//கைக்கூலி என்ற சொல்லிற்க்குப் பக்கத்தில் , போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  5. இன்னும் என்னன்ன இந்துக்களுக்கு நடக்கபோவதுனு நினைச்ச பயமா இருக்கு!

    ஒரு நாளைக்கு நம்ம மதமே இல்லாம போய்டோம்முனு பயம்மா இருக்கு.

  6. ஜடாயு அவர்களே இந்த விஷயத்தை எல்லோரோனும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வீதியில் அமல ஆசிரமம் என்று தக்குனுண்டு ஆசிரமம் ஆரம்பித்தார்கள் (மதுரகவி ஆழ்வார் தோட்டத்தின் பக்கத்தில்) என்று எல்லா பக்கத்து நிலங்களையும் சாப்பிட்டு விட்டு ஒரு விஸ்வரூபம் எடுத்துள்ளது இந்த அமல ஆசிரமம். மாமுனிகள் திருவரசை (பிருந்தாவனம்) ஒரு இஸ்லாயிமியர் கபளீகரம் செய்ய கங்கணம் கட்டி கொண்டு இருந்தார் – பலரது பெரும் பண உதவியுடன் அந்த நிலத்தை கையகப்படுத்தி திருவரசை செப்பனிட வேண்டியாதாயிற்று –

    அம்மா மண்டபம் சாலையில் உள்ள பல வெட்டு காரர்களுக்கு நோட்டீஸ் விடப்பட்டிருக்கிறது – அந்த இடம் எல்லாம் ஆற்காட் நவாபிற்கு சொந்தமாம் – கொள்ளம்பட்டரையில் ஈ போல இருக்கு

    மன்னார்குடி கோவில் தெருவில் சமிப காலத்தில் ஒரு மசூதி உருவாகி உள்ளது – ராஜகோபாலன் புறப்பாடு நேரத்தில் ஒரே சௌண்டாக இருக்கும் – பிரியாணி வாசனையை கடந்து தான் செல்ல வேண்டும் ராஜகோபாலன்

    இந்த மாதிரி அட்டுழியம் நாடு நெடுகிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது 🙁

  7. சென்னை மயிலாப்பூர் கடற்கரையிலிருந்த கபாலீஸ்வரர் கோவிலை விரட்டி செயின்ட் தாமஸ் என்னும் ஒரு கற்பனை கதாபாத்திரம் இந்தியா வந்ததாகவும், திருவள்ளுவருக்கு ஞானம் சொல்லிக் கொடுத்ததாகவும் சர்ச் கதை கட்ட்டியது.
    https://ankaraikrishnan.wordpress.com/2010/01/02/kapaleeshwarkapaleeshwar/

    சென்னை தம்புசெட்டித் தெருவில் இன்றுள்ள காளிகாம்பாள் கோவில் முதலில் கடற்கரையில் இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடத்தில் இருந்தது, சர்ச் தூண்டுதலால் இடம் பெயர்ந்தது வரலாறு..

    ஆனந்தம்பிள்ளை டயரியில் எப்படி பாதிரிகள் கோவில் அபகரிப்ப நடத்தினர் என்பது நேரடி சாட்சியாய் பதித்துள்ளார்.

    இவற்றை எல்லாம் அப்போது எதிர்த்தாலும் கிறிஸ்தவ ஆங்கில அரசுகள் அடக்குமுறையில் அடக்கப் பட்டது.

    மேலும் பல கோவில் நிலங்கள் கல்விக்கூடங்கள் நடத்த என்று பறிக்கப்பட்டன.

    இந்த செஞ்சிக் கோவில் மட்டுமின்றி சர்ச் பள்ளிகள்மற்றும் அவைகளின் கீழ் உள்ள அனைத்து இடங்களும் மீட்கப் படவேண்டும்.

  8. நல்ல பகிர்வு. இதைப் போன்று சிலுவை போட்ட மலைகளை தமிழகத்தில் பரவலாக காணலாம்

  9. இன்னும் எதனை நாளைக்கு தான் இப்படி செகிலரிசம் பேசி நாம் ஏமாற போகிறோமோ? 1947 பிறகு உள்ள எல்லா மத வழிபடு இடங்களின் status quo பின்பற்றப்படும் என்று கூறி விட்டு இன்று missionari என்ன கதை விடுகிறார்கள்.
    At least now all hindus should wake up and raise to the occassion.

  10. தரங்கம்பாடி டச்சுக் கோட்டை பெரிசா நிக்கும். பக்கத்திலேயே பெரிய சர்ச்சுகள் வேலை தோறும் பிரார்த்தனைகளுடன் நடக்கும் . ஆனால் நூற்றாண்டுகள் கண்ட ஒரு சிவன் சன்னதி கடல் அரிப்பால் இடிந்த நிலையில் குப்பைகள் நடுவே இருக்கும். ஒரு புராதன சின்னமாக கூட அதை பராமரிக்க அரசு தயாராக இல்லை. ஆனால் நம்மை அடிமைப்படுத்திய டச்சுக்கரனின் கோட்டையை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.

  11. இந்தியாவில் நூறு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள்.

    ஆனால் இங்கே சகோதர்கள் ஜடாயு, ராம், சராங், தேவ பிரியா … இவர்களுக்கு இருக்கும் உணர்வு 100 கோடி இந்துக்களுக்கும் இருக்கிறதா?

    இருந்தால் இப்படி நடக்குமா? ஏன் அவர்களுக்கு உணர்வு இல்லை, சிந்தியுங்கள்!

    எல்லா இந்துக்களும் ஆன்மீகத்தின் இன்பத்தை, அமைதியை உணர்ந்து இருந்தால் -அதை அளித்த மதத்தை அவர்கள் விட்டுத் தருவார்களா?

    என்ன செய்ய வேண்டும் , என்ன வழி என்று திட்டமிடுங்கள். வெறுமனே புலம்பி சாதிக்கப் போவது என்ன?

    தண்ணீர் வெளியேறி பின் அணை கட்டி உபயோகம் இல்லை. அவலை நினைத்து உரலை இடித்து பலன் இல்லை.

  12. seri sir. anga ivanga irunthanga, inga intha koil ipdi irunthuchu, apdi pannanga….. records, data ….. enna use itha inga discuss panni melum kavala padarathukku?. what to do in this case of Senchi? evvalavo IT and Doctors are in our religion. evvalavo vakkeelunga irukkanga? enna seiaporom? what is the action plan to be taken. Just passing the news and worrying about the status will not yield anything. kavalappattukitte irukkavendiathu thaan? how many of our readers or any good & strong Hindu men in and around senchi? circulate this news to the people around the district. I wrote a letter to the HR&CE Board and a petition to the HR&CE Minister regarding this. Why can’t a good lawyer of our side can take this issue and fight for this? Do something useful. pesi pesie ottikittu iruntha velaikku agathu. We must save our treasures. Slowly India is again going under Whites control and Imams control. Just atleast write a petition to the HR&CE Board and Ministry. Kovapadatheenga. ivanga onnum senchuda porathu kediathu. But just try. Atleast ethaachum oru moolaila konjamavathu manasu vechu nadavadikkai eduppanga, namma neria peru anupunomna.

  13. நமது அய்யா இராம கோபாலன் அவர்கள் சொன்னார் “இந்த தேசம் மட்டுமே இந்துகளுக்கு சொந்தம் அதனால் இதை மற்றவர்களுக்கு விட்டு கொடுக்ககூடாது”. இதை அனைவரும் கடைபிடிப்போம்.

  14. krishna saya
    ஒரு நாளைக்கு நம்ம மதமே இல்லாம போய்டோம்முனு பயம்மா இருக்கு.

    koyentha ..koyentha …ippa pottu enna pannurathu .

    Srinivas…..
    At least now all hindus should wake up and raise to the occasion.

    Very good, how many in numbers…will move forward for this protection…shame for us ..Being a hindu nation and ask for protection for our own HOME.

    Think the mistakes we keep doing what our ancestors left for us to continue..

    Regards,

  15. இது மாதிரியான அக்கிரமங்களை படிச்சு படிச்சு எரிச்சலும் கோபமும் எல்லாருக்கும் வரும். ஆனால் அதை சேனலைஸ் பண்ணுவதற்கு ஒரு சரியான தலைமை இந்துக்களிடம் இல்லை. ரீச் ஃபவுண்டேஷன் மாதிரி அமைப்பு பழங்கால கோவில்களை புணரமைக்கும் முயற்சியில் இருக்காங்க. ஆனால், இந்த மாதிரி அமைப்புக்கள் கொஞ்சம் அங்கே இங்கேனு தான் இருக்கு. இதெல்லாம் தனித்த மனிதர்கள் அல்லது ஒரு குழுவோட முயற்சிகள். எல்லா முயற்சிகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்த ஒரு தலைமை இங்கே இல்லை. மக்கள் எதிர்பார்க்கிறது தலைமை தான். There is already too much information. We only need action plan. We need some organization with brains but also willing to fight out in the streets.

    Hindu Jagruti (hindujagruti.org) is one such group which fights for these atrocities at all levels (internet, media, agitation etc.).

    Let us do something from our side to make a difference.

  16. ///Hindu Jagruti (hindujagruti.org) is one such group which fights for these atrocities at all levels (internet, media, agitation etc.). ///

    I have attend their meeting one day…yes. they are trying to channelising the emotions of hindus in one roof. I heard they are very power full in karnataka..and goa. atleast we should attend some meeting and organise our people to know about the meetings. without doing face to face interaction we cannot achive any thing. Please bring lot of youngsters if you now any meeting of hindu organisations….it helps for future.

  17. நல்லா எழுதறீங்க. படிச்சுட்டு, நல்லா உணர்ச்சிவசபடறீங்க. இதை தவிர என்ன செய்யறீங்க?
    தமிழன்

  18. Are we heading towards a Christian India?

    Author: François Gautier
    Publication: FrancoisGautier.com
    Date:
    URL: https://www.francoisgautier.com/Written%20Material/Christian%20India.doc

    I am a westerner and a born Christian. I was mainly brought up in catholic schools, my uncle, Father Guy Gautier, a gem of a man, was the parish head of the beautiful Saint Jean de Montmartre church in Paris ; my father, Jacques Gautier, a famous artist in France, and a truly good person if there ever was one, was a fervent catholic all his life, went to church nearly every day and lived by his Christian values. There are certain concepts in Christianity I am proud of : charity for others, the equality of system in many western countries, Christ’s message of love and compassion….

    Yet, I am a little uneasy when I see how much Christianity is taking over India under the reign of Sonia Gandhi : according to a 2001 census, there are about 2.34 million Christians in India ; not even 2,5% of the nation, a negligible amount. Yet there are today five Christian chief ministers in Nagaland, Mizoram, Meghalaya, Kerala and Andhra Pradesh.
    One should add that the majority of politicians in Sonia Gandhi’s closed circle are either Christians or Muslims. She seems to have no confidence in Hindus.Ambika Soni, a Christian, is General Secretary of the Congress and a very powerful person, with close access to Sonia Gandhi. Oscar Fernandes is Union Programme Implementation Minister. Margaret Alwa is the eminence grise of Maharasthra. Karnataka is virtually controlled by AK Anthony, whose secretaries are all from the Southern Christian association. Valson Thampu, a Hindu hater, is Chairman NCERT curriculum Review Committee, John Dayal, another known Hindu baiter, has been named by Sonia Gandhi in the National Integration Council ; and Kancha Ilaya, who hates Hindus, is being allowed by the Indian Government to lobby with the UN and US Congress so that caste discrimination in India is taken-up by these bodies.

    for more…read the below link.

    https://www.hvk.org/articles/0706/32.html

  19. ஐரோப்பிய நீதிமன்றங்கள் சர்ச் நடத்தும் பள்ளிகளில் கூட சிலுவைகள் கூடாது எனத் தெளிவாக நீதி வழங்கி உள்ளது, நண்பர் தேவப்ரியா வலைப்பூவில் உள்ளது.
    https://devapriyaji.wordpress.com/2010/02/06/cross-banned-in-shools/

    எனவெ அரசு உதவியுடன் அரசு சம்பளம் கொண்டு நடத்தப்படும் அனைத்து ஆர்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் மதச்சார்பற்ற முறையில் சர்ச்சை நீக்கி அரசு ஏற்கவேண்டும். அவை கோவில் நிலங்களைக் கொண்டு அமைந்ததாக இருந்தால் அவை கோயிலிடம் திருப்ப வேண்டும்.

  20. இந்த மாதிரி நிறைய நடக்குது. எதாவது செய்யணும்.

  21. Ram said,
    so that caste discrimination in India is taken-up by these bodies.

    So u don’t want cast system to eradicate in India or do you want to re establish the cast system of Hinduism?

    Kasi
    6 February 2010 at 6:18 pm
    இந்த மாதிரி நிறைய நடக்குது. எதாவது செய்யணும்.

    Enna Pannalam?.Yaham nadaththalam or Kasi ikku pohalam,

    Anbudan

  22. The other day I was at the Madras Medical center, the foremost heart hospital in Madras. Right when you enter the lobby, you find a chapel, inviting everybody to pray, there are pictures and quotations of Christ everywhere and a priest visits all the patients, without being invited at all

  23. update:
    சத்யமேவ ஜயதே – வாய்மையே வெல்லும்!

    கோதண்டராமர் கோயிலில் பக்தர் திரளையும், காவிக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கும் காட்சியையும் பார்த்து மகிழுங்கள் –

    தினமலர் சமீபத்திய செய்தி : https://www.dinamalar.com/General_detail.asp?news_id=21703

    செஞ்சி : செஞ்சி கோதண்டராமர் கோவில் சாவி, கலெக்டர் உத்தரவுப்படி கோவில் நிர்வாகிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோதண்டராமர் கோவில் இடம் தொடர்பான பிரச்னையால் கடந்த 1ம் தேதி கோவில் பூட்டப்பட்டு, 3ம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 12 மற்றும் 15ம் தேதியில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    பதட்டம் உருவான நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில், கோவில் பூட்டு மீது வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. இந்நிலையில், செஞ்சி அங்காளம்மன் கோவில் அருகிலிருந்து இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் காஞ்சி கண்ணன் தலைமையில் நேற்று காலை 10.30 மணிக்கு கோதண்டராமர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தாசில்தார் சங்கரன், காஞ்சி கண்ணனிடம் கோவில் சாவியை ஒப்படைத்தார். கோவிலை திறந்து சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கினர். விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 12ம் தேதி, டி.ஆர்.ஓ., கதிரவன் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    தினமணி செய்தி – https://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=194290&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%3f%3f%3f%3f%3f%3f%3f%3f%3f%3f+%3f%3f%3f%3f%3f%3f+%3f%3f%3f%3f%3f%3f%3f%3a+%3f%3f%3f%3f%3f%3f+%3f%3f%3f%3f%3f%3f%3f%3f%3f%3f%3f+%3f%3f%3f%3f%3f+%3f%3f%3f%3f%3f%3f%3f

  24. https://www.hindu.com/2010/02/09/stories/2010020959060400.htm

    Ginjee temple issue partly resolved

    Special Correspondent

    VILLUPURAM: The dispute over the ancient Kothanda Ramar temple at Ginjee was partly resolved on Monday by handing over the keys to Hindu Munnani office-bearers for conducting worship there.

    The devotees, led by Kanchi Kannan, State executive committee member of the Munnani, took out a procession to the temple for offering prayers there on Monday. However, for resolving the issue of providing a pathway to the temple, talks would be held on February 12.

    Following a dispute between two communities over the ownership of the place, the temple, situated on the banks of the Sankarabharani river at the foot of the Kalavai hills, officials had sealed the temple a couple of days ago, denying access to both communities.

    The 1.60-acre land on which the temple stood was sold by the Bommapuram Adheenam at Mayilam in 1878.

    The deed reportedly stated that the property excluded the temple and mandapam in front of it. But, the entire property, including the temple and the mandapam were, till now, under the control of a minority community.

    The two rounds of conciliatory talks held by Tindivanam Revenue Divisional Officer W. Manjula ended in stalemate. Tempers ran high at the third round of talks and officials deemed it fit to seal the temple so as to avert a showdown between the two sections.

    On Sunday, District Collector R. Palanisamy called for the copies of the sale deed and, upon perusal, held talks with the minority community’s representatives, who did not objection to performance of ‘puja’ at the temple.

    On the direction of the Collector, Tahsildar Saravanan handed over the keys to the Hindu Munnani.

    The RDO had recused herself from the mediatory talks stating that since her neutrality was questioned by one section, she did not want to mediate.

    She told this correspondent that till now she had acted in all fairness and without any bias.

    The initial two rounds were held peacefully but, at the third round, a few persons raised objectionable views, sidetracking the main issue. She further said that the three rounds were held with the mutual consent of the parties to the dispute and yet she was portrayed as if she were siding with one party.

  25. சென்ற வார இறுதியில் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலுக்கு சென்றிருந்தேன் அங்கு நான் பார்த்தது அழுகையே வர வைத்து விட்டது –

    பொதுவாக வெள்ளை காரர்களை கோவிலுக்குள் அழைத்து வந்து கோபுரம், தூண்கள், சிற்ப வேலைபாடுகள் போன்றவற்றை காட்டி காசு பார்க்கும் கூட்டத்தை பார்க்கலாம் – இங்கோ பல படி மேலே சென்று சன்னதிக்குல்லேயே அரை நிஜார், சாக்ஸ் அணிந்த வெள்ளையர்களை அழைத்து வந்து விட்டார்கள், இதில் பெண்களும் அடக்கம் – வெளி நாட்டு பெண்களுக்கோ நமது கோவில்களுக்குள் பிரவேசிக்க தேவையான கட்டுப்பாட்டினை பற்றி தெரியாது – எல்லோரும் ஜாலியாக போட்டோ எடுத்துக்கொண்டு கைடு சொல்லும் கடையை கேட்டுக்கொண்டு இருந்தார்கள் – தாயர் சன்னதியிலிருந்து அவர்களை போக சொன்னோம் – அவர்கள் நேரே சாரங்கபாணி சன்னதிக்குள் ப்றேவேசித்தார்கள் – நான் நேரே வெள்ளயர்களிதேமே எடுத்துகூறி அவர்களை போக சொன்னேன்

    அங்கு இருந்த கோவில் நிர்வாகியிடம் புகார் செய்ய போனால் அங்கு ஒரு ஷாக் – மனிதர் பார்பதற்கு அச்சு அசல் தீகா காரரை போல் இருந்தார் – இவரிடம் பேசி பயனில்லை என்று தெரிந்தும் புகார் கூறினேன் – நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மனிதர் கூலாக சொல்லி விட்டார் – அவர் சொல்லி முடிக்கும் முன்னரே இன்னொரு வெள்ளையர் கூட்டம் கோவிலுக்குள் போட்டோ பிடித்துக்கொண்டு ப்ரேவேசித்தது – நான் நேரே அவர்களிடமே சென்று நமக்கு உள்ள கட்டுப்பாட்டினை பற்றி சொன்னேன் அவர்களும் புரிந்து கொண்டு வெளி ப்ராகரதிர்க்கு மேல் செல்லாமல் திரும்பினர்

    வெளி நாட்டவர்க்கு இருக்கும் அறிவு கூட இந்த மானம் கேட்ட மனிதர்க்கு இல்லையே என தோன்றுகிறது – போட்டோ பிடிக்கும் கூட்டதையா கோவிலுக்குள் அனுப்புவது – இப்படி எல்லாமா காசு பார்ப்பது
    கேரளா கோவில்களில் இது போல் நடக்குமா – அன்னியர் வர வேண்டாம் என்று கூறவில்லை, வருவதற்கான விதிகளை கூட காற்றில் பறக்க விட்டால் கோவில் என்பதற்கான சான்னித்யமே போய் விடுமே 🙁

    தமிழ் ஹிந்து வலைதளத்திற்கு வரும் கும்போகொனத்தை சார்ந்தவர்கள் ஏதேனும் செய்ய இயன்றால் நன்றாக இருக்கும்

  26. கோவில் சாவி கோவிலுக்கு உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டதாக இன்றைய தினமலரில் செய்தி வந்துள்ளது. தர்மம் என்றும் வெல்லும், பிராடுத்தனம் ஒழிந்தே போகும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

    இதற்காக முயற்சி செய்த அனைவரும் பெரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  27. சாரங்,

    அட..என்னய்யா..
    கும்பக்கோணம் என்றாலே இப்போது “எங்கெங்கு நோக்கினும் பர்தா” என்பது போல் மாறியிருக்கிறது..நீங்கள் வந்து போகும் வெள்ளைக்காரர்களை பற்றி கவலைப்படுகிறீர்கள் !

  28. //
    அட..என்னய்யா..
    கும்பக்கோணம் என்றாலே இப்போது “எங்கெங்கு நோக்கினும் பர்தா” என்பது போல் மாறியிருக்கிறது..நீங்கள் வந்து போகும் வெள்ளைக்காரர்களை பற்றி கவலைப்படுகிறீர்கள் !
    //
    இதையும் தான் பார்த்தேன்

  29. என்று தணியும் இந்த கிருஸ்து மோகம் !!!

    இந்த தமிழ்ஹிந்து தளத்தில் நமது முனோர்களின் பழம் பெருமையை பூத கண்ணாடி கொண்டு ஆராய்ந்து நம்ப தகுந்த செய்திகளை வெளிடுகிறது. இவை எல்லாம் சத்தியம் என்று எல்லோரும் நன்கு அறிவார்கள். ஆனால் கிறிஸ்துவாக மாறியவர்கள் எல்லோரும் எனது முன்னோர்கள் இவர்கள் இல்லை வெள்ளயர்கள் ஆவார்கள் என்று பூளாங்கிதம் அடைகிறார்கள். என்னே ஆனந்தம் என்று பாபிகளாய் கூத்தாடுகிறார்கள். தன்னை கசாப்பு கடைக்கு தான் மாலை இட்டு அழைத்து போகிறான் என்று இந்த ஆட்டு மந்தைகளுக்கு புரிவதில்லை.

    இவ்வாறு மாறுபவர்கள் நம் நாட்டை நாமே காட்டி கொடுக்கிறோம் என்றோ தன் தாய் நாட்டை ஊரானுக்கு விற்கிறோம் என்றோ உணர்சியற்ற ஜடங்களாக இருக்கிறார்கள். உள்ளூர் காரனுக்கு கை கட்டி வேலை செய்வதை விட வெளியூர் காரன் கால் அடியில் வேலை செய்வது பெருமை வாழ்கையின் லஷ்சியம் என்று எண்ணுகிறார்கள். ஜாதீ கொடுமையிலிருந்து விடுபடுவதாக எண்ணி மதம் மாறிய பின்பும் அது தொடர்ந்து வருவதை கண்கூடாக கண்டும் காணாதவர் போல் நடிக்கிறார்கள். (ஆயிரம் உண்டு இங்கு ஜாதி இதில் அன்னியர் மதம் வந்து புகல் என்ன நீதி). சந்தையில் ஜட பொருளை கூவி விற்பதுபோல் கடவுளை கூவி விற்று வியாபாரம் செய்கிறார்கள். எல்லாம்வல்ல கடவுளுக்கு இது தேவையா அப்படிப்பட்டவர் சக்தி வாய்ந்த கடவுளாக இருக்க முடியுமா. மோடி மஸ்தான் வித்தை காட்டுபவதுபோல் ஒருவன் ஆங்கிலத்தில் ஏதோ கூறுகிரான் அதை ஓருவன் தமிழில் மொழி பெயர்ப்பு செய்கிறான் மதம் மாறவில்லை என்றால் ரத்த வாந்தி எடுத்து சாவாய் என்று மோடி மஸ்தான் கூறுவதை போல் பயம் காட்டுகிறார்கள்.

    இன்று இலங்கையில் நடந்தது என்ன ? பல தமிழர்களும் சிங்களத்தவர்களும் படி படியாக கிருஸ்துவர்களாக மாற்றப்பட்டார்கள்.
    இவர்கள் இருவரிடைதிலும் அவர்களே அறியாமல் பகைமை தீயை ஏவி விட்டார்கள், நஞ்சு விதைகளை அங்கே வித்திட்டாற்கள். (தமிழ் நாட்டில் ஆரியன்-திராவிடன், தமிழ்-சமஸ்கிரதம், பிராமிணன்- பிராமிணன் அல்லாதாவர் என்பதுபோல்). இரண்டுபிரிவிலும் தலை ஆட்டி பொம்மைகளை உருவாக்கினார்கள். இலங்கையை 15 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டுவருவது கிருஸ்துவர்களாக மாறிய சிங்களத்தவர்கள் ஆவார்கள். ( சாலமன் பண்டாரநாயகா சூலியஸ் ஜயவர்தனே சந்திரிகா குமாரதுங்கா சிரில் மகேந்திர ராஜபிராகாசே). ஆனால் இவர்கள் தாங்கள் கிருஸ்துவர்கள் என்று அடையாளம் காட்டி கொள்வதில்லை. எல்டிடியிலும் மற்ற தமிழ் பேராளிகளிலும் பலர் கிருஸ்துவர்களாக மாறியவர்கள். (லஷ்மன் கதிர்காராமன் டக்லஸ் தேவாநந்தம் பிராபகரன் மற்றும் பலர்). இப்படி கிருஸ்துவர்களாக மாறியவர்கள் தங்களுக்குள் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. குரங்கு ஆப்பதத்தை பங்கிட்ட கதை உங்களுக்கு தெரியாதா ! (சர்சிலும் அப்பம் கொடுப்பார்கள்)

    ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா. சிறந்த தலைஆட்டி ராஜபிராகாசேவா அல்லது பொன்சேகாவா என்று அமெரிக்கா முடிவு செய்கிறது. முன்னேரிய நாடுகள் இவ்வாறு முன்னேரிவரும் நாடுகளில் மதமாற்றத்தை செய்து தலையாட்டி பொம்மைகளை உருவாக்கி (இங்கே சோனியாவின் கைதடிக்கு மன்மோகன்சிங் ஆடுவதுபோல்) அவர்கள் அறியாமலே மொத்தஇனத்தையும் முன்னேறவிடாமல் தடுப்பதே கிருஸ்துவத்தின் குறிக்கோள் ஆகும். அப்படி செய்தால்தான் அவர்கள் நாடு சுபிஷ்ஷமாக இருக்கமுடியும். நமது முதல்வர் பதவி ஆசையை விட்டு காங்கிரஸ் ஆட்டியிலிருந்து விலகியிருந்தால் இலங்கையில் இறந்த பாதி உயிரை காப்பாற்றியிருக்கலாம். தமிழன் உயிரைவிட பதவி பெரிது. இதை ஏன் இந்த திராட-கிருஸ்துவர்கள் உணரவில்லை. குஷ்பூ ஜயராமன் போன்றோர் ஏதோ வாய்தவறி தமிழர்களை பற்றி கூரிய வார்தைகளுக்கு மன்னிப்பு கேட்ட பின்பும் அவர்கள் வீட்டை தாக்குகிறார்கள் ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். செத்த பாம்பை அடிக்கும் சூரபுலிகள். இவர்களுக்கு உண்மையான தமிழ் உணர்வு இருந்தால் ஏன் ஐயா கிருஸ்துவ விஜய் டிவியில் தாலி அணிவதைப்பற்றி தரகுறைவாக வாக்குவாதம் செய்ததற்கு எதிர்பு தெரிவிக்கவில்லை. எங்கேபோனார் ராமதாஸ் !

    கிருஸ்துவம் அராஜகத்தை துண்ட அடியாட்களை தயார்செய்கிறது. அதற்கு அரசாங்கமும் துணைபோகிறது. (சிறுபான்மை ஓட்டு) சட்டத்தைகாக்கவேண்டிய வக்கீல்களே பேட்டைரவுடிபோல் தெருவில் இறங்கி கற்களையும் சோடாபாட்டில்களையும் எறிகிறார்கள்.

    (edited and published)

  30. The article is using very harsh words to denote christians act..

    but in this issue, i feel the fault is totally with the christians of the place. it is a very arrogant act to go and claim ownership for a old hindu temple, citing british period document. this will only fuel hatred in the minds of all hindu brethern against christians.

    it is also painful to note that no christian group or organization has condemned this act of christians of this town.

  31. Mr.James Arul,

    Where did you find such harsh words in this article that denotes the christian act. ok. It is lawful or legal or opposite to constitution or something else !!! But think and touch your heart and mind. Is it right to act and cheat like this? Why they are working still for those who treated us as slaves and below than that?

  32. கோவில் சிலை திருடி, விற்று, பிழைக்கும் பாதிரியார்…..வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சிறு குழந்தைகளைக் கடத்தும் பாதிரியார்…… கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் பாதிரியார்கள்………
    குழந்தைகளே! பொதுமக்களே உஷார்…உஷார்…..

    விழித்திருங்கள் ! இல்லையேல்……. ஆப்ரிக்கர்களுக்கு நேர்ந்த கதிதான் ……

    லெனின்

  33. என்று தணியும் இந்த கிறிஸ்துவின் மோகம்?

    என்று நிற்கும் அந்த டாலரின் ஆட்டம்
    அன்று தணியும் இந்த கிறிஸ்தவ நாட்டம்
    என்று விழிக்கும் இ்ந்த ஹிந்துவின் கூட்டம்
    அன்று நடக்கும் அந்த கிறிஸ்தவ ஓட்டம்
    என்று வீழும் அந்த திமுக காங்கிரஸ்
    அன்று வாழும் இந்த ஹிந்து சமுதாயம்

    இரா.ஸ்ரீதரன்

  34. Dear sarang sir,
    I m from kumbakonam.but presently out of country.from october onwards I will be in kumbakonam.please let me know and guide me what we can do for this.how shall we start to proceed.I will do surely.try to gather my friends and speak with the officers and write petition to the board with the maximum number of signatures.shall we call ISKON for help in this issue?.I m ready to work at any level for fight against this.please any one of you advise me how to start. your advises will be very help full please.

  35. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கோட்டையை வலிமையானதாக மாற்றியதுடன், செஞ்சியைச் சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர்.

    இதனால், இந்திய மன்னர்கள் மட்டுமின்றி முஸ்லிம் பேரரசர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியின் மீது தீராத மோகம் இருந்தது. ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால், தென்னிந்தியாவில் செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது.கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது.

    ஏன் அன்பரே முஸ்லிம் பேரரசு ,ஆங்கில பேரரசு ,பிரஞ்சு பேரரசு இதனை அரசுகள் செஞ்சி கோட்டையை தாக்கியும் இன்னும் கம்பீரமா நிக்குது எப்புடி ?

    மூன்று பேரரசுகளின் ஆளுகையில் இருந்தும் இன்றும் செஞ்சிகொட்டை கம்பீரமாக இருகுணா அது எப்படி – கடபாரையும் ,சம்மட்டியும் அப்போ கண்டுபிடிக்லையோ ?

    வெறும் 100 பேரு கொண்ட கூட்டம் ஒரு பள்ளிவாசலை ,சர்ச்சை இடித்து தரை மட்டமாக்க முடியும் போது மூன்று பேரரசுகள் இருந்தும் அந்த கோவில் இடிக்கப்பட வில்லை என்றால் என்ன அர்த்தம் ?நீங்கள் சொல்லுவது வடிகட்டதா அல்லது வடிகட்ட முடியாத பொய்னு நான் சொல்ல மாட்டேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  36. என்ன அர்த்தம்?
    அன்று முதுகெலும்புள்ள, மானமுள்ள,சுயநலமற்ற ஹிந்துக்கள் இருந்தார்கள் என்பதும் தங்கள் கலாசாரத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்த்துக் கடுமையாகப் போராடக் கூடிய நெஞ்சுரம் கொண்டிருந்தனர் என்பதுதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *