ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் (1853–1924) தென்னிந்தியாவில் சமீபகாலத்தில் வாழ்ந்த மகான்களில் முக்கியமானவர். வேதாந்த ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்த துறவி இவர். அவர் மலையாளத்தில் எழுதிய கிறிஸ்து மத சேதனம் என்ற நூலின் ஆங்கில-வழி தமிழ் மொழியாக்கம் இது.
ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்
தமிழாக்கம்: சிவஸ்ரீ விபூதிபூஷண்
பகுதி 1
பதிஇயல்
4. ஜெஹோவின் துர்குணங்கள்
ஓ கிறிஸ்தவ போதகர்களே!
சவர்வவியாபகம் (எங்கும் நிறைந்த தன்மை), சர்வபௌமம்(சர்வவல்லமை), பெருங்கருணை, போன்ற தெய்வீக நற்குணங்களை, உங்கள் தேவனாகிய ஜெஹோவாவிடத்தில் இல்லாதவற்றை, அவரிடம் இருப்பதாக ஆதாரமின்றிக் கற்பிக்கிறீர்கள். இந்த கடவுட்தன்மைகள் ஏதும் அவருக்கு இல்லை என்பதை ஏற்கனவே ஆதாரப்பூர்வமாக நிரூபித்துவிட்டோம். உங்கள் விவிலியத்தினைப்படித்தால் அவரிடத்திலே காணப்படும் துர்க்குணங்களை நீங்கள் மிகவசதியாக மறைத்துவிடுவது தெரிகிறது. எனவே உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள் வசனங்களின் துணைகொண்டு உங்கள் கர்த்தராகிய ஜெஹோவாவின் தீயகுணங்களான பழிவாங்குதல். குரோதம், பொறாமை, கொடூரம், முகஸ்துதியில் இச்சை, கவலைப்படுதல், நேர்மையின்மை ஆகியவற்றை ஒவ்வொன்றாக இங்கே நிரூபிப்போம்.
ஜெஹோவாவின் பொறாமை:
உங்கள் பரிசுத்த வேதாகமாகிய விவிலியத்தின் கீழ்க்கண்ட வசனங்கள் உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா பொறாமைகொண்டவர், எரிச்சலுள்ளவர் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
“நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரைக்கும் விசாரிக்கிறவனாயிருக்கிறேன்.”
— (யாத்திராகமம் 20:5).
“கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது. ஆகையால் அந்நிய தேவனை நீ பணிந்து கொள்ளவேண்டாம்”.(
— யாத்திராகமம் 34:14).
ஜெஹோவாவின் கடும்கோபம்:
உங்கள் தேவனாகிய ஜெஹோவாவின் கோபம் எந்த அளவிற்குக் கொடுமையானது என்பதைக் கீழ்க்கண்ட விவிலிய வசனங்கள் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றன.
“கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடும்கோபம் புறப்பட்டது, வாதை(ப்ளேக்) தொடங்கிற்று.
— (எண்ணாகமம் 16:46).
“பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி, “இந்த ஜனங்களைப் பார்த்தேன், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள். ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு!”
— (யாத்திராகமம் 32:9-10).
ஜெஹோவாவின் பொறாமை
பின்வரும் நும் பரிசுத்த வேதாகம வசனங்கள் உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா பொறாமை நிறைந்தவர் என்பதைப் பறைசாற்றுகின்றன.
“பின்பு தேவனாகிய கர்த்தர், ‘இதோ, நன்மை–தீமை அறியத்தக்கவனாக மனிதன் நம்மில் ஒருவனைப்போல் ஆனான். இப்பொழுது மனிதன் ஜீவமரத்தின் கனியையும் எடுத்து உண்டால் என்றென்றென்றும் உயிரோடிருப்பான்,’ என்றார். ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான்”
— (ஆதியாகமம் 3:22-23).
வானளாவிய கோபுரம் ஒன்றை மக்கள் கட்டமுயல்வதைக்கண்ட ஜெஹோவா அதனால் அவர்கள் பெரும்புகழ் பெறுவார்கள் என நினைத்தார். அதனால் அவர்களது ஒற்றுமையை சிதைத்தார். அவர்களை பூமி முழுதும் சிதறிப்போகச் செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தை கட்டிமுடிக்கமுடியாமல் போயிற்று என்றும் உங்கள் விவிலியம் சொல்லுவதை இங்கே நினைவுகூறுங்கள்.
— (ஆதியாகமம் 11).
ஜெஹோவாவின் கொடூரம்:
உங்கள் தேவனாகிய ஜெஹோவா எகிப்து தேசத்தில் இருந்த எல்லா தலைச்சன் ஆண்குழந்தைகளையும் கொன்றார் என்பதை யாத்திராகமம் இப்படிச் சொல்கிறது.
“மோசே ஜனங்களிடம், “கர்த்தர் இன்று நள்ளிரவில், நான் எகிப்தின் வழியாக செல்வேன். எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகள் அனைவரும், எகிப்து மன்னனாகிய பார்வோனின் முதற் பேறான மகன் முதல், மாவரைக்கிற அடிமைப்பெண்ணின் முதற்பேறான மகன் வரைக்கும் எல்லோரும் மரிப்பார்கள். முதற்பேறான மிருகங்கள்கூட மடியும். கடந்த எந்தக்காலத்தைக்காட்டிலும் எகிப்தின் அழுகுரல் பயங்கரமாக இருக்கும். வருங்காலத்தில் நடக்கக்கூடியதைக்காட்டிலும் அது கொடியதாக இருக்கும்”
— (யாத்திராகமம் 11: 4-7).
தனது மகிமையை விளங்கச்செய்யும் நோக்கத்தோடு ஜெஹோவா பார்வோனின் இதயத்தைக் கடினப்படுத்தினார், தனதுக் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் செய்தார். அவனையும் அவனது பெரும்படையையும் கடலில் மூழ்கடித்துக் கொன்றார்[i].
— (யாத்திராகமம் 14).
“ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாதமுறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர்.”
— (லேவியராகமம் 16: 1).
“மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவனது உடல் பாறையைப்போல இறுகியது. பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச்செய்தார்”.
(1 சாமுவேல் 25: 37-38).
மேலும் கர்த்தராகிய ஜெஹோவா இஸ்ரேலியருள்ளேயும் மற்ற சாதியினருள்ளேயும் கலகத்தைத் தோன்றச் செய்தார். அதனால் பலப்பலர் அழித்தொழிக்கப்பட்டனர் என்றும் பழைய ஏற்பாடு சொல்கிறது. இவையெல்லாம் உங்களுடைய கர்த்தராகிய ஜெஹோவா எவ்வளவு கொடூரமானவர் என்பதைச் சொல்லுகின்றன.
துதிவிரும்பி ஜெஹோவா:
பைபிளில் பல இடங்களில் தனது மகிமையை அதிகரிக்க உங்கள் தேவனாகிய ஜெஹோவா முயன்றது பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் அவர் புகழ்ச்சியை விரும்புகிறவர், முகஸ்துதிக்கு ஆசைப்படுபவர் என்பதைக் காட்டுகின்றன.
ஜெஹோவா துன்பத்திலிருந்து விடுபட்டவர் அல்லர்:
உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா படைப்பினை முடித்தவுடன் மகிழ்ச்சியடைந்தார் என்றும் பின்னர் மனிதரின் பாவச்செயல்களைக் கண்டு மிகவும் வருந்தியதாகவும் பைபிள் சொல்கிறது. இது அவர் துன்பத்திலிருந்து நீங்கியவர் அல்லர் என்பதைக் காட்டுகிறது.
நேர்மையற்ற ஜெஹோவா:
பொய்களைச் சொன்ன ஆபிராஹாமையும் ஈசாக்கையும் தண்டிக்காமல், அவர்களின் கர்த்தராகிய ஜெஹோவா அவர்களை ஆசீர்வதித்தார் என்று பழைய ஏற்பாடு சொல்லுகிறது.
— (ஆதியாகமம் 22, 26).
சிப்பிராள் மற்றும் பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பொய் சொன்னபோதிலும், அவர்களை ஆசீர்வதித்தார்.
— (யாத்திராகமம்).
உங்கள் மெய்யான தேவனாகிய ஜெஹோவா இப்படிப் பொய்யை ஆதரிக்கலாமா? இதுதான் அவரது நேர்மையா? பொய்சொல்வதை ஆதரித்தது மட்டுமல்ல, பொய்யைச் சொல்லும்படி ஆவியையும் ஏவிவிட்டிருக்கிறார் பாருங்கள், உங்கள் தேவன்!
“இறுதியில் ஒரு ஆவி வெளியேவந்து கர்த்தருக்குமுன் நின்றுகொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்,’ கர்த்தர், ‘எவ்வாறு செய்வாய்,’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பி, பொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்,’ என்றது. உடனே அவர், ‘போய் ஆகாப்பை ஏமாற்று. நீ வெற்றி பெறுவாய்.’ என்றார்”
— (1 இராஜாக்கள் 22: 21-22).
ஒரு ஆவியை அனுப்பி தீர்க்கதரிசிகளைப் பொய்சொல்லச்செய்து ஆகாப்பையும் அவனது படையையும் அழித்த ஜெஹோவாவின் நேர்மையை என்னென்பது!
ஜெஹோவா துன்மார்க்கர்:
“அண்டை அயலாரிடம் இரவலாக வாங்கி இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிப்போகச் சொல்லி இஸ்ரேலியரைத் தூண்டினார் ஜெஹோவா”
— (யாத்திராகமம் 11).
தாவீது உரியாவைக் கொன்று, அவனது மனைவியான பத்சேபாளைக் கட்டாயப்படுத்தி மணந்துகொண்டபோது, உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா அவனை, நாத்தான் என்னும் தீர்க்கதரிசி மூலம் எப்படி மிரட்டுகிறார் பாருங்கள்.
“கர்த்தர் சொல்வது: “நான் உனக்கு எதிராகத் தொல்லைதர ஆரம்பிப்பேன். தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து, உனக்கு மிகவும் நெருக்கமான ஒருவனுக்கு கொடுப்பேன், அம்மனிதன் உன் மனைவியரோடு படுப்பான், அதை எல்லோரும் காண்பார்கள்! நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக பகிரங்கமாக நான் இக்காரியத்தை செய்வேன் என்றார்,’ என்றான்.
— (2 சாமுவேல் 12: 11-12).[ii]
உங்கள் தேவனாகிய ஜெஹோவாவின் துர்போதனையைப்பாருங்கள்:
“ஆண்டவர் ஓசேயாமூலமாகப் பேசியபோது, அவர் அவனை நோக்கி, ‘நீ போய் விலைமகள் ஒருத்தியை சேர்த்துக்கொள்: வேசிப்பிள்ளைகளைப் பெற்றெடு: ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது,’ என்றார்”
— (ஓசாயா 1:2).[iii]
உங்கள் பரிசுத்தவேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் பல புத்தகங்களிலிருந்து போதுமான ஆதாரங்களோடு உங்கள் ஆண்டவராகிய ஜெஹோவாவின் தீயகுணங்களை ஒவ்வொன்றாக நிருபித்துள்ளோம். சொல்லாலும், செயலாலும், உணர்வாலும் அவர் தீமையின் உறைவிடமாக விளங்குகிறார் என்பதை இங்கே தெள்ளத்தெளிவாகக் கண்டோம். இன்னும் பைபிளில் காணப்படும் ஆதாரங்களை அடுக்கினால் எமது நூல் மிகவும் விரிவாக நீளும், ஆகவே இதுவே போதும்.
[i] பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள புத்தகமான யாத்திராகமத்தினை முழுதும் படித்தால் ஒருபுறம் அற்புதங்களைச்செய்ய மோசேவுக்கு சக்தியளித்து அவர் மூலம் எகிப்தியமன்னன் பார்வோனை எபிரேயர்களை விட்டுவிடும்படி ஆணையிட்டாலும் ஜெஹோவா அவனது மனதைக் கடினமாக்கி அவர்களை போகவிட மறுப்பதும் பலமுறை நிகழ்கிறது.
[ii] கடவுள் செய்கிறகாரியமா இது? இல்லை பேசுகிற பேச்சா இது? கொடுமையிலும் கொடுமை.
[iii] ஜனங்கள் வேசித்தனத்தில் மூழ்கியிருந்தால் தீர்க்கதரிசியையும் வேசித்தனத்தை மேற்கொள்ளும்படி போதிப்பது சரிதானா?.
[1] பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள புத்தகமான யாத்திராகமத்தினை முழுதும் படித்தால் ஒருபுறம் அற்புதங்களைச்செய்ய மோசேவுக்கு சக்தியளித்து அவர் மூலம் எகிப்தியமன்னன் பார்வோனை எபிரேயர்களை விட்டுவிடும்படி ஆணையிட்டாலும் ஜெஹோவா அவனது மனதைக் கடினமாக்கி அவர்களை போகவிட மறுப்பதும் பலமுறை நிகழ்கிறது.
[1] கடவுள் செய்கிறகாரியமா இது? இல்லை பேசுகிற பேச்சா இது? கொடுமையிலும் கொடுமை.
[1] ஜனங்கள் வேசித்தனத்தில் மூழ்கியிருந்தால் தீர்க்கதரிசியையும் வேசித்தனத்தை மேற்கொள்ளும்படி போதிப்பது சரிதானா?.
(தொடரும்)
புதிதாக சேர்ந்தவர்களும் சரி ஓரிரண்டு தலைமுறை முன்பு மாறியவர்கள் ஆனாலும் சரி இதையெல்லாம் அநேகர் படித்திருக்கமாட்டார்கள் அல்லது ,படிக்கவிடமாடார்கள் வெறும் நுனிப்புல் மட்டும்தான் மேய்வார்கள்- மேயவிடுவார்கள் விவிலியத்தை முழுவதும் படித்திருந்தால் மதம் மாறுபவர்கள் இப்படி மதம் மாறுவார்களா?
பக்கத்து வீட்டு அம்மாவை மதிக்கலாம் அதற்காக சொந்த அம்மாவை தள்ளிவைத்துவிட்டு அடுத்தவீட்டு அம்மாவை அம்மா என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?சிந்தியுங்கள் மதம் மாறும்- மாற்றும் ( என் )அன்பு சகோதர சகோதரிகளே!!
அன்புடன்
பிறேமதாசன் திருமேனி .