பல்லவி
இந்து நானென்று சொல்லடா! – நீ
    நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!
அநுபல்லவி
செந்தமிழில் ஒளிர் சிந்தனையால் – இந்த
    ஜெகத்தினை மேன்மை செய்யடா               (இந்து நானென்று…)
சரணங்கள்
உலகின் முதன்முதல் சமயமடா – அதில்
    உதித்ததில் நமக்குப் பெருமையடா
நலங்கள் பலப்பல விளையுமடா – ஒன்றாய்
    நாம் இணைந்தால் துயர் குலையுமடா.      (இந்து நானென்று…)
வேதரிஷிகளின் விழுதுகள் நாம் – போர்
    வித்தை பயின்ற வித்தகர் நாம்
கீதம் பரதம் கவின்கலைகள் – மிக
    கீர்த்தியுடன் செய்வோம் நேர்த்தியுடன்!       (இந்து நானென்று…)
கல்வியினால் செல்வம் ஈட்டிடுவோம் – பெரும்
    கருணையினால் துயர் வீட்டிடுவோம்
பல்விதத் தொழில்கள் நாட்டிடுவோம் – அன்னை
    பாரத்தின் புகழ் மீட்டிடுவோம்!                       (இந்து நானென்று…)		

இன்றுதான் திரு முரளி அவர்களின் கவிதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கவிதை தமிழ் ஹிந்துவின் முகப்பு பக்கத்தில் நிரந்தர இடம் பெற வேண்டிய ஓவியமான , அற்புதமான கவிதை. திருமுரளி அவர்களுக்கு நம் வாழ்த்துக்களும், நன்றியும்.