ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்…
View More இவரை மறக்கலாமா?Author: முரளி
அள்ளக் குறையாத அமுதம் – 3
மனிதன் அறிந்த மிகப்பெரிய இன்பம் எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால் மேற்கண்ட கேள்விக்கும் பதில் தெரியும். ஒருவன் துறவியாகவோ, ஞானியாகவோ, ஓரினச் சேர்க்கையாளனாகவோ இல்லாத பட்சத்தில் மனிதன் தன் புலன்களால் அறியும் மிகப்பெரும் இன்பம் பெண்ணுடனே சேருகிற இன்பம்தான். சரியா?
View More அள்ளக் குறையாத அமுதம் – 3ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6
மாலையில் திரும்பி வரும்போது படகின் ஆட்டமோ, மதிய உணவின் வேலையோ தெரியவில்லை ஒரு பையனுக்கு வாந்தி எடுக்கத் தொடங்கியது. படகோட்டி கோபமடைந்தார். “வாந்தி எடுத்ததை நீங்கள்தான் சுத்தம் செய்யவேண்டும்” என்று வற்புறுத்தினார். “இல்லையென்றால் இரண்டு பங்கு கூலி கொடு” என்று மிரட்டினார்…
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6அள்ளக் குறையாத அமுதம் – 2
“நீங்கபாட்டுக்கு மாதவி வீட்டிலே போய் இருந்துட்டீங்க. அப்போ உங்க அம்மாவும் அப்பாவும் என்னைப் பாக்க வந்தாங்க. என்னைப் பாக்க வரும்போது உங்கமேலே இருந்த செமத்தியான கோவத்தை மறச்சுக்கிட்டுத்தான் வந்தாங்க. உங்களைப் பிரிஞ்சு இருக்கற என்னைப் பத்தி நாலு நல்ல வார்த்தை பேசினாங்க. நான் ஒண்ணுமே பேசல. சும்மா ஒரு புன்னகையில்லாத புன்னகைதான்…
View More அள்ளக் குறையாத அமுதம் – 2ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 5
“இப்படியே வீடு வீடாக மரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருப்பாயா? இல்லை, படிக்கவும் செய்வாயா?”. “ஐயா, நான் படிக்கவும் செய்வேன், விளையாடவும் விளையாடுவேன்” என்றான் நரேன். உடனே அவனைச் சோதித்தார் கிழவர். புவியியல், கணிதம் இவற்றில் கேள்வி கேட்டார். கவிதைகள் ஒப்பிக்கச் சொன்னார். இந்தக் கடினமான தேர்வில் சிறப்பாகத் தேறினான் நரேன். கிழவர் அவனை ஆசீர்வதித்து…
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 5அள்ளக் குறையாத அமுதம் – 1
மழைக்காலத்தில் ஒருநாள் இரவு வெகு நேரம் கழித்து நெடுந்தூரம் நடந்து களைத்த வழிப்போக்கர்கள் வந்தனர். அவர்கள் ஆபுத்திரனிடம் “எங்களுக்குப் பசியாக இருக்கிறது. உணவு கிடைக்குமா?” என்று கேட்டனர். மற்றவர்களின் பசியைப் பார்க்கப் பொறுக்காத ஆபுத்திரனுக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. அவனுடைய பிட்சைப் பாத்திரம் அலம்பிக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. என்ன செய்வது?
View More அள்ளக் குறையாத அமுதம் – 1கம்பராமாயணம் – 8 (Kamba Ramayana – 8)
கம்ப ராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் (21-25), கோசல நாட்டு வர்ணனை.
இளம்பெண்களின் ஒளிபொருந்திய முகத்தில் அமைந்துள்ள வடிவான, மையிட்ட கண்ணை நோக்கி, ‘இது ஒளிமிக்க பெண்வண்டு’ என்று நினைத்த வண்டுகள், அதன்மீது மையலும் அன்பும் கொண்டு, மருதநிலப் பகுதியிலேயே தங்கிவிட்டன…
யானை இறைத்த சோறு!
“நானும் என் மனைவியும் சேர்ந்து மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். அதை அனுபவிப்பதில் தவறென்ன?” நியாயமான கேள்விதான். நீங்கள் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் ஒவ்வொரு பொருளும், அது தேவையான மற்றொருவருக்கு விலையை ஏற்றிவிடுகிறது. உதாரணமாக, யாருக்காவது வேண்டுமோ இல்லையோ சில வீடுகளில் டி.வி, மின்விசிறி இவை ஓடியவண்ணம் இருக்கும்…
View More யானை இறைத்த சோறு!கம்பராமாயணம் – 5 (Kamba Ramayanam – 5)
கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம், பாடல்கள் 6 – 10. இதில் கோசல நாட்டின் வளம் பேசப்படுகிறது.
ஆலைகளில் பிழியப்படும் கருப்பஞ் சாறும், தென்னை முதலிய மரங்களில் பாளையை அரிந்து வடிக்கப்படும் சாறும், சோலைகளில் கனிந்து உதிரும் பழங்களின் சாறும், தேன்கூட்டிலிருந்து தொடர்ந்து ஒழுகிக்கொண்டிருக்கும் தேனும், மாலைகளில் இருந்து விழும் தேனும் ஒன்றாகி…
கம்பராமாயணம் – 4
கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படலம், பாடல்கள் 1-5.
வயல் வரப்புகளில் எல்லாம் முத்துக்கள் மண்டியிருக்கும். நீர் ஓடும் மடைகளில் எல்லாம் சங்குகள். நிரம்பிய வெள்ளம் ஓடும் கால்வாய்களின் கரையெல்லாம் செம்பொன்னால் ஆனவை; எருமைகள் படுத்ததனால் ஏற்பட்ட குழிகளில் தேங்கிய நீரில் செங்கழுநீர் மலர்கள் பெருங்கூட்டமாகப் பூத்துள்ளன; சமப்படுத்திய வயல்களிலோ பவளமணிகள் பரவியுள்ளன. சாலி என்னும் உயர்வகை நெல் நிரம்பிய வயல்களில் அன்னப் பறவைகள் உலவுகின்றன; அருகிலுள்ள கரும்பு வயல்களில் கருப்பங்கழிகளுக்கு இடையிலிருக்கும் கூடுகளிலிருந்து செந்தேன் பொழிகின்றது…