ஹிந்து எழுச்சிப் பாடல்

பல்லவி

இந்து நானென்று சொல்லடா! – நீ
நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!

அநுபல்லவி

செந்தமிழில் ஒளிர் சிந்தனையால் – இந்த
ஜெகத்தினை மேன்மை செய்யடா (இந்து நானென்று…)

சரணங்கள்

உலகின் முதன்முதல் சமயமடா – அதில்
உதித்ததில் நமக்குப் பெருமையடா
நலங்கள் பலப்பல விளையுமடா – ஒன்றாய்
நாம் இணைந்தால் துயர் குலையுமடா. (இந்து நானென்று…)

வேதரிஷிகளின் விழுதுகள் நாம் – போர்
வித்தை பயின்ற வித்தகர் நாம்
கீதம் பரதம் கவின்கலைகள் – மிக
கீர்த்தியுடன் செய்வோம் நேர்த்தியுடன்! (இந்து நானென்று…)

கல்வியினால் செல்வம் ஈட்டிடுவோம் – பெரும்
கருணையினால் துயர் வீட்டிடுவோம்
பல்விதத் தொழில்கள் நாட்டிடுவோம் – அன்னை
பாரத்தின் புகழ் மீட்டிடுவோம்! (இந்து நானென்று…)

One Reply to “ஹிந்து எழுச்சிப் பாடல்”

  1. இன்றுதான் திரு முரளி அவர்களின் கவிதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கவிதை தமிழ் ஹிந்துவின் முகப்பு பக்கத்தில் நிரந்தர இடம் பெற வேண்டிய ஓவியமான , அற்புதமான கவிதை. திருமுரளி அவர்களுக்கு நம் வாழ்த்துக்களும், நன்றியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *