இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (யங் இந்தியா, ஜூன் 10, 1921)

“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)

mohandas gandhi“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்” (யங் இந்தியா, 6-8-1925, p274. )

“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism – By M. K. Gandhi p. 205)

“மாறாத சத்தியத்திற்கான உண்மையான தேடல் இந்துமதத்தில் தான் உள்ளது, ஏனெனில் ‘சத்தியமே கடவுள்’ என்று அது முரசறைகிறது. இன்று நாம் தேக்கநிலையிலும், ஊக்கமின்றியும், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் போலவும் இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் நாம் களைத்திருக்கிறோம், அயர்ந்திருக்கிறோம். இந்த அயற்சி நீங்கியவுடனேயே முன் எப்போதும் கண்டிராத உத்வேகத்துடன் இந்துமதம் விழிப்புற்று உலகெங்கும் பரவும்” (Young India, 24/11/1924 p. 390-396)

“இந்துமதம் கங்கை நதியைப் போன்றது. மூலத்தில் எந்த மாசுகளும் அற்று
தூய்மையாகவும், செல்லும் வழியில் வந்து சேரும் சில கசடுகளையும் தன்னகத்தே கொண்டும் அது விளங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்னை கங்கையைப் போன்றே, அது உலகிற்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கிறது. கங்கையும் சரி, இந்துமதமும் சரி, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றினாலும், இந்த எல்லா இடங்களிலும் சாரமான உட்பொருள் அப்படியே தான் இருக்கிறது” (Young India 8-4-1926)

“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (“கீதை என் அன்னை” முன்னுரை)

“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்” (source: The Upanishads Translated for the Modern Reader By Eknath Easwaran. Nilgiri Press. 1987. pg 205)

6 Replies to “இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி”

 1. அருமையான வாக்கியங்கள்….

 2. hiduism is the very oldest religion.it is return by saints(nanikal),by hinduism “thiruvalluvar,kambar..many poets are made

 3. இவர் ஹிந்து மதத்தை நேசித்தால் ஏன் பிரிவினைக்கு துணை போக வேண்டும்?

  பிரிவினை பற்றி எனது கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை பதிவு செய்கிறன்:-

  பிரிவினை என்ற பெயரில் இஸ்லாமிய வெறி கும்பல் நாடேங்கும் வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் கென்றனர். இந்துக்கள் தெய்வமாக பார்க்கும் பெண்களை கற்ப்பழித்தனர். பல சித்திரவதைகளை இந்துக்கள் அனுபவித்தனர். ஆனால், காந்தியோ இந்துக்களை கோயிலுக்குச் சென்று பிரத்தனை நடத்தச் சொன்னார்! ஏன் காந்தியின் அகிம்சை, இந்துக்களுக்கு மட்டும் தானா? அல்லது, இஸ்லாமியரை எதிர்க்கும் திராணி இந்துக்களிடம் இல்லை, என்று காந்தி நினைத்துவிட்டாரா? ஒருவேளை, காந்தியின் மனைவியை, இஸ்லாமியர்கள் வெட்ட வந்தாலும், அவர் அகிம்சை பேசி, கோகவிலுக்கு சென்று பிரத்தனை தான் நடத்துவாரா? “நம் உரிமையை மீட்டேடுக்க, அகிம்சை உதவினால், அதை ஏற்று நடக்கலாம். மாறாக,உரிமை அகிம்சையால் பரிபோகிறது” என்றால் அந்த அகிம்சை எதற்கு? அதனால், என்ன பயன்? பிரிவினையின் போது, இந்து மக்களை காப்பாற்ற அன்றைய, இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்-ம் எடுத்த முயர்ச்சியை இந்த தேசத்தில் வாழும் உண்மையான தேசபக்தர்கள் மறந்துவிடமாட்டார்கள்.
  ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.

 4. காந்தி மட்டுமல்ல இராஜாஜி கூட பிரிவினைக்கு ஒத்துழைப்பு தந்தார் . காரணம் அவர்கள் மனமொப்பி இதனை செய்யவில்லை. ஜின்னா தலைமையில் இருந்த அழிவு சக்திகள் , பிரிவினை உணர்ச்சியை தூண்டி, இஸ்லாமியர்களும் இந்துக்களும் கிறித்தவர்களும் ஒற்றுமையாக இருக்கமுடியாத சூழலை உருவாக்கி விட்டிருந்தனர். எனவே இந்திய பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாததாக இருந்தது. அப்போது பிரிட்டிஷ் ஆளும் வர்க்கமும் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போதே , ஒரு பெரிய தலைவலியை உருவாக்கிவிடவேண்டும் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது. விரைவில் ஷியா -சன்னி சண்டைகளால் பாகிஸ்தான் சின்னா பின்னமாகும். அது ஒரு முழு பாலைவனமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஒரு மதம் ஒரு மொழி என்பது ஒரு நாடாக இன்றைய உலகில் இருக்க முடியாது. அப்படி இருந்தால் உலகமும், மனித இனமும் ஒரே நாளில் அழிந்து விடும்.

 5. காந்தி அடிப்படையில் அரசியல்வாதியல்ல ! ஆன்மீகவியலாளர் ! இந்திய விடுதலை அரசியல் தலைமை அவர் மீது வலிய வந்தது

  அடிப்படையில் அவர் இந்து என்றாலும் இந்து மதத்தின் உண்மைகளுடன் கலந்து விட்ட அஞ்ஞானங்களை களைவது மற்றும் உலகில் ஆப்ராகாம் வாரிசுகள் மூலமாக கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட வேதங்களிளிருந்து உண்மையை சுவீகரித்து இந்து மதத்தை செழுமைப்படுத்துவது – உலகம் முழுமைக்கான சமாதானத்தை – அனைத்து மதங்களையும் வேற்றுமைகளினுடாக ஒற்றுமையை நிலை நாட்டும் சமரச வேதத்தை வெளிக்கொண்டு வருவது – இந்தப்பணி கடவுளால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது
  முந்தய பிறவியில் கிரிஸ்ணரின் நண்பரான குசேலரே காந்தி வேதங்கள் கிரிஸ்ணராலோ அல்லது அவரது நண்பர்கலாலோ மட்டுமே உலகில் வெளிப்படுத்தப்படும்

  கலியுக முடிவில் கல்கி வருகைக்கு முன்பு உலகம் முழுதும் சமாதானத்தை உண்டாக்கி நிர்வகிக்கும் ஒரு வழிகாட்டி (இமாம் ) இருப்பார் என்பதாக முகமதுவுக்கு கணவு உண்டானது ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது

  அந்த நபர் சாட்சாத் காந்தியே அவர் தமிழராக பிறந்து சமரச வேதத்தை உலகம் முழுதும் நிலைநாட்டுவார் வடலுருக்கு தெற்கே பிறக்கும் ஒருவர் மூலமாகத்தான் சமரச வேதம் நிலைநாட்டப்படும் என வள்ளலாரும் சொல்லியுள்ளார்

  இந்து மதத்தில் ஆப்ராகாமிய வேதங்களை சுவிகரிக்கும் முயற்சியில் இருந்த அவரால் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை பிரித்து அனுப்பும் எண்ணம் இல்லை

  ஆனால் குர்ஆனில் உள்ள மிகைப்படுத்தப்பட்ட மத வெறியை அவர் நிதானித்து இருந்தால் பிரிவினை கோரிக்கை எழுந்தவுடன் அதை அங்கீகரித்து சுதந்திரம் அடையும் முன்பே அரசின் பாதுகாப்பின் கீழ் பாதுகாப்பாக இந்துக்களையும் முஸ்லீம்களையும் இடம் மாற்றும் பணியை திட்டமிட்டு செய்திருக்கவேண்டும் அவ்வாறு செய்யாததால் முரட்டுத்தனத்துக்கும் கொலைக்கும் அஞ்சாத முஸ்லிம்களால் இந்துக்கள் பெருவாரியாக கொல்லப்பட்டனர் ஆனால் பதிலுக்கு பதில் கொல்வதல்ல இறை நெறி ! அதனால் கோவிலில் வழிபாடு செய்யுங்கள் என்றார் ஆனால் இந்தப்பாவத்திற்கும் காந்திக்கும் எந்த சம்மந்தமுமில்லை !

  அவர் முஸ்லிம்களை அரவணைக்க முயற்சி செய்து தோல்வியும் மரணமும் அடைந்தார் இருப்பினும் உலகம் தழுவிய ஆண்மிகப்பேரலையை உலகின் முதல் மனிதனான தமிழனாக பிறந்து முன்னெடுக்கும் கடவுளின் திட்டமும் அதில் அடங்கியுள்ளது

 6. பிரிவானைக்கு காரணம் காந்தி அடிகள் இல்லை. அதை எதிர்த்து உண்ணா விரதம் இருந்தவர். பிரிவானைக்கு முழுக்க முழுக்க ஜின்னாஹ் தான் காரணம். நம் இந்துஷ்தானை மதசார்பற்ற நாடாக மாற்றியது கூட நேரு போன்றோர்களின் கொள்கை தான். ஆகவே காந்தியை பற்றிய தவறான வதந்திகளை விட்டு விடுங்கள். அவர் அகிம்சை ஆத்மா வாக எண்ணினார். மதச்சண்டைகளை வெறுத்தார் என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *