இந்து மத நம்பிக்கைகளைக் கேவலமாகச் சித்தரிக்கும் தமிழ் பட உலகை ஒப்பிடும் பொழுது மலையாளப் பட உலகில் ஒரு நேர்மையைக் காண முடிகிறது. மலையாளப் பட உலகம் கம்னியுஸ்டுகளின் கோரப் பிடியில் சிக்கியிருந்தாலும் கூட பொதுவாக அவர்களிடம் அநாவசியமாக ஒரு மதத்தை இழிவு செய்யும் நோக்கில் எடுக்கப் படும் படங்களைத் தமிழில் காண்பது போலச் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியாது. மேலும் தங்கள் நம்பிக்கைகளைச் சொல்லும் பொழுது அவர்கள் வெட்கப் படுவதோ மறைப்பதோ போலித்தனமாக நடிப்பதோ கிடையாது. எம் ஜி ராமச்சந்திரன் வெளியுலகில் நாத்திகக் கொள்கையுடையவராகத் தன்னைக் காண்பித்துக் கொண்டு ரோஸ் பவுடரின் நடுவே யாருக்கும் தெரியாமல் விபூதியைப் பூசிக் கொள்ளும் ஒரு வேடதாரியாகவே இருந்திருக்கிறார். திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கியதற்காக சிவாஜி கணேசனை திராவிடக் கட்சிகள் வெளியேற்றின. இன்னும் பல இயக்குனர்களும் கலைஞர்களும் தங்கள் கடவுள் நம்பிக்கையை மறைத்துக் கொண்டால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை தமிழ்த் திரைப் பட உலகத்தில் தொடர்ந்தது. தனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் அதை மறைக்காமல் சொல்லக் கூடிய துணிவு வெகு சிலருக்கே இருந்தது. அப்படியே தனியே சொன்னாலும் கூட திரைப்படங்களில் அவற்றைச் சொல்வதில் இருந்து ஒதுங்கியே இருந்தனர். அல்லது சினிமாக்களில் நாஸ்திக வாதம் என்ற பெயரில் இந்து மத நம்பிக்கைகள் இழிவு செய்யப்படுவதே ஒரு பெருமைக்குரிய விஷயமாக இன்று வரை தமிழ் திரைப் பட உலகத்தில் இருந்து வருகிறது.
60 ஆண்டுகால திராவிட அரசியலின் தாக்கம் இன்று தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், சரத்குமார் போன்ற ஒரு சில நடிகர்களைத் தவிர பிற சினிமாக்காரர்களைக் கொடுமையாகப் பாதித்துள்ளது. போலித்தனமும் இரட்டை வேடமும் போட்டு நிஜவாழ்க்கையிலும் நடித்துக் கொண்டிருக்கும் நம் நடிகர்களுக்கு நடுவே ஒரு முன்ணணி மலையாள நடிகர் சொல்லுவதைக் கொஞ்சம் படியுங்கள். இவர் ஒரு ஆக்ஷன் ஹீரோ, நேர்மையான போலீஸ் அதிகாரியின் வேடத்தில் அடிக்கடி நடிப்பவர். இவரது இமேஜுக்கு தன்னை நாத்திகனாகக் காட்டிக் கொள்வது இந்துக்கள் மைனாரிட்டியாய் போன, கம்னியுசம் என்ற கேன்சரால் அரித்துப் போன கேரள மாநிலத்தில் நன்கு எடுபடலாம். இருந்தாலும் இந்த நடிகர் சொல்வதை கவனியுங்கள்.
ஒரு சினிமாவில் நாஸ்திகனாக நடிக்கக் கூடத் தான் முதலில் மறுத்து விட்டதாகவும் படத்தின் கதையைக் கேட்ட பின்னால் நடித்ததாகவும், அதன் பின்னால் பரிகாரம் செய்ததாகவும் சொல்லுகிறார். சினிமாவில் நடிப்பிற்காக ஒரு சர்ப்பக்காவை கலைத்து விட அதற்காக தூக்கமின்றி தவித்துப் பரிகாரம் செய்திருக்கிறார். அதை மறைக்கவில்லை. ஒளிவு மறைவின்றி எவ்வித வெட்கமும் இன்றிச் சொல்லுகிறார். தன்னை ஒரு மலையாளி என்று அழைத்துக் கொள்வதை விட ஒரு பாரதீயன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப் படுகிறேன் என்கிறார். எந்தத் தமிழ் நடிகனுக்காவது இதைச் சொல்லும் துணிவு உண்டா? அப்படி அவர் நாத்திகனாக நடிக்க நேர்ந்து விட்ட அற்புதமான மலையாளப் படம் தான் இந்தப் “பைத்ருகம்”.
பைத்ருகம் (பாரம்பரியம், குடிப்பண்பு) என்ற இந்த மலையாள திரைப்படம் இந்து மதத்தின் நம்பிக்கைகளையும் அதன் மேன்மைகளையும் மக்களிடம் நேரடியாக ஒரு விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சினிமா. மேஜிக் காட்சிகளையோ, பாம்பு, ஆடு மாடு குரங்குகளையோ நம்பி எடுக்கப் படும் மலிவான தமிழ் பக்திப் படங்கள் போல அல்லாமல் கருத்து ரீதியாக இந்து மதத்தின் மேன்மைகளை மக்களிடம் மிக அழகாக எடுத்துச் செல்லும் ஒரு படம். இந்தப் படத்தைப் பற்றிய என் பார்வையைப் பார்ப்பதற்கு முன்பாக இந்த படத்தின் நடிகர் சொல்வ்தைக் கேளுங்கள்.
நடிகர் சுரேஷ் கோபியின் பேட்டியை அப்படியே கீழே தந்திருக்கிறேன்
Q: In Paithrukam, your first film with Jayaraj, you acted as an atheistic journalist who defied all norms and rituals. Was it difficult for a very religious person like you to portray such a character?
Suresh Gopi: I was totally against it. We had a lot of fights during the making of the film. Instead of Paithrukam we were to make a very commercial film. One week before the commencement of the shoot, Jayaraj convinced our producer that we were into an academic film. I was thrilled. I had been praying for such a film for such a long time. I reached Guruvayoor on February 5 and straight away went to Jayaraj’s room. He was performing his daily puja then.
So Jayaraj is also a religious person. Very religious. He finished his prayers, sat on the cot and started telling me the story. Half-way through I said I was going back. I would never utter a word against God. I said, I can’t be going on a rampage against Sarppakavu and the temple. But he made me listen to the whole story. In fact, I started crying then. Finally, we did the film. Even though I was well informed of all those scenes, enacting them was terrible. I felt a lot of pressure inside me. I was going against my inner feelings. That affected my mind too. In between, I even wanted to kill Jayaraj!
Whenever some other character talked against me in the film, I sincerely wished I was in their position, to say such dialogues. Jayaraj shot the last scene only at the end. He said, ‘I want all the negative pressures inside you to come out in the last scene.’
Q: You were so convincing as an atheist that I thought you were one.
Suresh Gopi: (laughs)
Q: I think in Kerala, people have accepted English as their own language. Isn’t that why our writers and intellectuals are agitated?
Suresh Gopi: Yes, in Kerala we don’t look at English as an alien language. I think it is a problem in Tamil Nadu and some parts of northern India.
Q: In Tamil Nadu, they are not against English. They are only against Hindi.
Suresh Gopi: I beg to differ in their attitude to Hindi also. Agreed, Malayalam is the mother tongue of Malayalis alone. Agree, Tamil is the mother tongue of Tamilians alone, but Hindi is the mother tongue of our country and all Indians.
You are narrow-minded if you think that Kerala, or Tamil Nadu, is your motherland. You need a broad perspective and look at India as your motherland.
Q: Why do you feel that strongly about the name Bharat?
Suresh Gopi: Yes, it gives you additional confidence… See, it sounds so Indian. I think that title should come back. Once again the best actor should be called Bharat, the best actress, Urvashi
Q: You said the word Bharat is very Indian. Do you feel Indian in every sense?
Suresh Gopi: Yes, definitely. Even though I feel I am the son of the world. I think I told you last time about the world under one roof and the world under one government. I still feel for that and I wish it happens.
இனிமேல் ஒரு சினிமாவில் நடித்தற்காக பரிகாரம் செய்யும் அளவிற்கு, ஒரு கதையைக் கேட்டு அழும் அளவிற்கு சுரேஷ் கோபியைத் தள்ளிய பைத்ருகம் படத்துக்குள் போகலாம்.
நன்றியறிதலைத் தெரிவித்தே ஆகவேண்டுமென்று என் உள்ளுணர்வு வற்புறுத்துகிறது. யாருக்கு? சுரேஷ் கோபிக்கா, விஸ்வாமித்ராவுக்கா?
என்ன சொல்லவேண்டுமோ அவற்றைத் தெளிவாகச் சொல்லியுள்ளார் ஒருவர்; அவற்றை நமக்காக அரும்பாடுபட்டுக் கொடுத்துள்ளார் இன்னொருவர்.
இருவருக்கும் நன்றியறிதல் உடையேன்.
Read the article.It gives the real picture about our actors who accepts their inhibitions in the cinema,But our Hindu ruling ministers and chief ministers are taking the pleasure to criticize our own Hindu culture and faith which is lamenting
ஒரு நல்ல நேர்காணலை பகிர்ந்ததற்கு நன்றி. எம் ஜி ஆர் – தான் திராவிட கட்சிகளில் முதன் முதலில் கோவிலுக்கு சென்றவர் என்று கேள்விபட்டிருக்கிறேன். பல கோவில் திருபணிகள் செய்திருக்கிறார் என்றும் கேள்விபட்டிருக்கிறேன். காஞ்சி காமாக்ஷி கோவில் அருகில், கௌஷிகேஸ்வரர் ஆலயம் புதையுண்டு இருப்பதறிந்து அதை சீரமைக்க ஏற்பாடு செய்தவரும் அவரே. அதனால் அவரைப் பற்றிய கூற்று எனக்கு புதிதாக உள்ளது.
நேர்கனலைப் பற்றி – ஈழத் தமிழர் பிரச்சினையை பற்றி ஒரு மடற்குழுவில் விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது பலர், தாங்கள் முதலில் தமிழர், பிறகு தான் இந்தியர் என்று கூறுகின்றனர். எனக்கு சிர்ப்பதா அழுவதா என்று தெரியவில்லை. உள் நாட்டில் இருக்கும் காஷ்மீர் அகதிகளை பற்றி குரல் கொடுக்க வக்கில்லை, வெளிநாட்டிற்கு குரல் கொடுக்கிரரார்கலாம். அவர்கள் இந்த நேர்காணல் படிக்க வேண்டும். முதலில் தான் இந்தியன் என்ற உணரவில்லை என்றால், நம் பாரம்பர்யம் எப்படி புரியும்?
சதீஷ்
நம்பி, பாரதி ராமச்சந்திரன், சதீஷ் ஆகியோருக்கு நன்றி பல.
சதீஷ்
எம் ஜி ஆருக்கு ஆரம்பம் முதலே பக்தியும் கடவுள் நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. இருந்தாலும் தி மு க என்ற கட்சியில் தன்னை பிரதானப் படுத்திக் கொள்ளும் பொருட்டு தன்னை நாஸ்திகனாக வெளியுலகில் காண்பித்துக் கொண்டிருந்தார். அவர் நெற்றியில் பூசும் திருநீற்றைக் கூட பவுடர் போட்டு மறைத்துக் கொள்ளும் அளவுக்கு தன் நம்பிக்கைகளை வெளியில் சொல்வதில் வெட்கம் உடையவராக இருந்தார். தன் படங்களில் கடவுள் நம்பிக்கை குறித்த வசனங்கள், கடவுள் உருவில் தோன்றுவது ஆகியவற்றை திராவிட இயக்கக் கொள்கைகளைக் கட்டிக் காப்பவராகத் தன்னைக் காண்பித்துக் கொள்ளும் பொருட்டு எதிர்த்தே வந்திருக்கிறார். தன்னை வெளியுலகிற்கு ஒரு நாஸ்திகனாகவே காண்பித்து வந்துள்ளார். சொந்தமாகக் கட்சி தொடங்கி தன்னால் தி மு க வின் பிடியில் இருந்து வெளியே வந்தாலும் சுயமாக நிற்க முடியும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னாலேயே தன் கடவுள் நம்பிக்கையைப் பகிரங்கமாக அறிவிக்கத் தலைப் பட்டார். இதயம் பேசுகிறது மணியன் இவரை மூகாம்பிகைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற பொழுதுதான் தன் நம்பிக்கையை பகிரங்கமாக வெளியில் காண்பிக்கத் தலைப்பட்டார். ஆகவே தன் சொந்த நம்பிக்கையை வெளியில் சொல்வதற்குக் கூட வெட்க்கப் பட்டவர், மறைத்து நடித்தவர்தான் எம் ஜி ஆர். மாறாக சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சரத்குமார் ஆகியோர் தங்களது ஆன்மீக நம்பிக்கைகளையும் தேசப் பற்றையும் வெளியில் சொல்வதற்கு வெட்க்கப் பட்டதோ, மறைக்க முயன்றதோ கிடையாது. இந்த வகையில் சுரேஷ் கோபியைப் போலவே இவர்களும் பாராட்டுக்குரியவர்களே. சுரேஷ் கோபி தனது பேட்டியின் மூலம் நம் மனதில் மதிப்பில் உயர்ந்தவராக நிற்கிறார். மலையாளத்தில் தனது திறமை திசை திருப்பப் பட்டு வீணடிக்கப் பட்ட நல்ல நடிகர்களில் ஒருவர், இறை நம்பிக்கையாளர், தேசப் பற்றாளர் சுரேஷ் கோபி
நன்றி
விஸ்வா
Thanks a lot for your clarification dear Visvamitran sir.
Kudos to Shri Suresh Gopi . Kudos to Vishvamithra.
இந்தியாவில் கேரள மற்றும் வங்காள மொழிப் படங்கள்தான் நம் மண்ணின் கலாசாரத்தை உள்ளபடி காட்டுகின்றன..கதைக்கு தக்கவாறு
நிகழ்வுகள் அதில் பதிவாகும்..தமிழ் மொழிப் படங்களில் ஹிந்து மதமும் அதன் கலாச்சாரமும் அர்ததமில்லாமல் கேவலப்பட்டு வந்துள்ளன..சதயராஜ், கவுண்டமணி,பாக்கியராஜ் போன்றோர் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு செய்யும் கீழ்த்தரமான சேட்டைகளும் பேச்சும் இதற்கு உதாரணங்கள்..