தற்போது மாவட்டம்தோறும் சிறுபான்மையினர் நலவாரியம் மூலம் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கி வருகிறது. இதனால் இந்து நாடார் சமுதாயம் தனது நிலைப்பாட்டினை இழந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட இந்து நாடார் சமுதாய ஏழைகள் சலுகைகள் பெறும் விதத்தில் பிற மதங்களுக்கு மாறுகிறார்கள். இது மதமாற்றத்துக்கு அரசே சலுகை கொடுப்பது போன்று அமைந்துவிடுகிறது. எவ்வளவு காலம் இட ஒதுக்கீடு முறை இருந்தாலும் யாரும் ஜாதி மாறி சலுகை பெற முடியாது. சலுகை காட்டி மதமாற்றம் என்பது வெள்ளையர் ஆட்சி காலத்தில் நடந்தது. தற்போது சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற அரசே வகுத்தள்ள திட்டம் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் சிறுபான்மையின பிரதிநிதிகளை சந்திப்பதும் அவர்களுக்கு சாதகமாக செயல்படுவதும் மதச்சார்பற்ற அரசு என்பதை அர்த்தமற்றதாக்கிவிடும். மதமாற்றம் மற்றும் மதவேறுபாடுகளை ஏற்படுத்தாமல் இருக்க மதச்சார்பற்ற அரசு மதத்தின் பெயரால் சலுகைகளை வழங்கக்கூடாது.
மதங்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் நீக்கமற நிறைந்தது இறைதன்மை.
வான்வெளியில் உள்ள காந்தசக்தி போல் ஒளியைபோல்,காற்றைபோல். அதன் தன்மையை அறிந்துகொள்ளும் முயற்சி மனம் மூலம் நடைபெறுவது பெரியாரை பார்க்காத ஒரு நாத்திகனுக்கு பெரியாரின் சிலைய்யோ அல்லது அவரின் படமோ தேவைப்படுவது போல் கடவுளை பார்த்தறியாத ஒரு ஆத்திகனுக்கு ஆரம்ப நிலையில் ஒரு சிலை அல்லது படம் தேவைப்படுகிறது. படத்தை,பார்த்த,பிறகு,மனதில்,பதியவைத்துகொண்டவுடன் படம் தேவைபடாது போல் உண்மையை உணர்ந்த ஆத்திகனுக்கும் சிலை வழிபாடு தேவையற்றது
இறைவனின் நிலையை புரிந்துகொண்ட சித்தர்கள் சிலை வழிபாடு செய்வது கிடையாது..சிலை வழிபாடு செய்வது உண்மையை உணர்வதற்கு செய்யும் முயற்சியில் தொடக்க நிலையே .ஆத்திகனும் சிலை வைத்து வழிபடுகிறான் நாத்திகனும் சிலை வைத்து பிறந்த நாள் மறைந்த நாள் என மலர் தூவியும மாலை அணிவித்தும் கொண்டாடுகிறான். ஆத்திகர்களின் செயல்களையே அவனும் செய்து கொண்டிருப்பதால் நாத்திகனுக்கு ஆத்திகர்களை விமரிசிக்க எந்த உரிமையும் கிடையாது. கடவுள் சிலைகளை உடைத்து அவமதிக்கும் நாத்திகர்களே உங்கள் பெரியார் சிலையை உடைத்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. ? அது வெறும் சிலையாக இருந்தும் .அந்த வடிவத்தில் உங்கள் தலைவரை கான்பதால்தானே.ஏன்,அதுபோல்தான்,ஆத்திகர்களுக்கும்என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .உங்களுக்கு கடவுள் இல்லை என்று சொல்லிக்கொள்ள எவ்வளவு உரிமையுள்ளதோ அதே அளவிற்கு கடவுள் உள்ளார் என்று நம்புபவர்களுக்கும் உரிமையுண்டு என்பதை உணர்ந்து வரம்பு மீறாமல் இருப்பது நாட்டிற்கு நல்லது. மத வெறி பிடித்தவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்,என்பதை,கவனத்தில்,கொள்ளவேண்டும்.உண்மை நெறியை உணர்ந்தவர்கள் எல்லா உயிரிலும் இறைவனை காண்பார்கள். அனைவரையும் நேசிப்பார்கள். அந்நிலையை அடையாத வரை அவர் எம்மதத்தை சார்ந்தவராயினும் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவரமாட்டார்கள்.