மலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்

என்ன நடக்கிறது மலேசியாவில்?

hindraf011957ல் சுதந்திரம் பெற்ற மலேசியாவில் முஸ்லீம்களும், சீனர்களும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 80% பேர் தமிழ் ஹிந்துக்கள் . முஸ்லீம் பெரும்பான்மை நாடான மலேசியாவில் பெருமான்மையினரான முஸ்லிம்களுக்கான சிறப்பு சலுகைகள் இருக்கின்றன. தமிழ் இந்துக்களும், இந்தியர்களும் தேயிலை ரப்பர் ,தோட்டங்களிலும், கொத்தடிமைகளாக ஆங்கிலேயர்களால் பணி அமர்த்தப்பட்டவர்கள் . அவர்களுக்கு எந்த உரிமையும் ,சலுகையும் இன்றி இன்னும் அப்படியே இருக்கிறார்கள். சிறிது முன்னேறும் குடும்பங்களுக்கு அரசு எந்த விதமான சலுகைகளையும் அளிப்பதில்லை. இவர்களுக்கு முன்னால் வந்த மலாய் முஸ்லீம்களும் பூர்வ குடிகள் அல்ல. ஆனால் இஸ்லாமிய பாசத்தில் அவர்களுக்கு சலுகை கிடைக்கிறது. மேலும் வானம் பொய்த்த கிழக்கு ,தெற்கு தமிழ் நாட்டில் இருந்து சென்ற சகோதரர்களும் கீழ் நிலை வாழ்க்கையையே அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். 25 லட்சம் இந்துக்கள் அங்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமை போல் வாழ்கிறார்கள்.
hindraf02இவர்களுக்கு கல்வி கற்க, அரசு வேலைகளில் இடம் பெற தடை நிலவுகிறது. மிகவும் உயர்ந்த பொறுப்புகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மலேசிய ரப்பர் தோட்டங்களில் பணியாற்றும் மக்களுக்கான தமிழ் கல்விக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு உரிய அளவிலான நிதி ஒதுக்காமலும், ஆசிரியர்களை நியமிக்காமலும் மாணவர்கள் படிப்பதை தடுத்து நிறுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்கிறது மலேசிய இஸ்லாமிய அரசு. உயர்கல்வியிலோ தமிழ் இந்துக்கள் படிக்கவே கூடாது என்பதற்காக தனது தேசத்தில் உள்ள சுமார் 8 லட்சம் இடங்களில் 5000 இடங்களை மட்டும் இந்துக்களுக்கு ஒதுக்கி இருக்கிறது மலேசிய அரசு. அடிமையாக இந்துக்களை வைத்து ரிங்கிட்களை அறுவடை செய்யும் மலேசிய அரசும் தொழில் நிறுவனங்களும் இந்துக்களுக்கு நல்வாழ்வு ஏற்பட்டு விடவே கூடாது என்ற கெடுமதியோடு காரியம் ஆற்றுகிறார்கள். அங்கு வாழும் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் பல விதங்களில் முடக்கப் படுகின்றன.

புதிய ஆலயங்களோ வழிபாட்டு இடங்களோ கூட அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கூட கட்டகூடாது என்கிறது  மலேசிய அரசு. ரப்பர் தோட்டங்களில் ஏராளமான முருகன் கோவில்கள், சிவன் கோவில்கள், அம்மன் கோவில்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அரசு குறிவைத்து அழிக்கிறது. அவர்களின் மத சுதந்திரத்தையும், வழிபாட்டு உரிமையையும் தீவிரமாக மறுக்கிறது. இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் முயற்சிகளை அரசே ஆதரிக்கிறது. இது பற்றி உரிமைக்குரல் எழுப்பும் உணர்வாளர்களை உள் நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போட்டு கைது செய்து வருகிறது. குறைந்த அளவு கூலியே தரப்பட்டாலும் அதையும் ஒழுங்காக தர அரசு ஆவன செய்ய மறுக்கிறது. ஆலய வழிபாட்டை சீர் குலைக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு முன் பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தின் போது கூடியிருந்த லட்சக்கணக்கான இந்துக்கள் மீது காவல் துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி அடுத்த வந்த ஆண்டுகளில் மக்கள் கூட்டத்தை திட்டமிட்டு குறைக்கிறது .hind03

இந்துக்களின் குழந்தைகள் காலம் காலமாக அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்வி உரிமையை மறுக்கும் மலேசிய அரசுக்கு தமிழ் ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஹிண்ட்ராப் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. 2005 ஆம் ஆண்டிலிருந்து போராடி வரும் ஹிண்ட்ராப் அமைப்பானது இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் மிகப்பெரிய மக்கள் இயக்கமாகும். இதன் தலைவர் திரு வேதமூர்த்தி அவர்கள் மலேசிய இந்துக்களின் வாழ்வு மேம்படுவதற்காகவும் , அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைப்பதற்காகவும் மகா சிவராத்திரி தொடங்கி கடந்த 10 நாட்களுக்கு மேலாக அகோர வீரபத்திரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்.அவருக்கு பெரும் மக்களின் ஆதரவு இருக்கிறது.

 

அவரது கோரிக்கைகளை பரிசிலீத்து மலேசிய வாழ் இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க இந்திய வெளியுறவுத் துறை ராஜதந்திர நடவடிக்கைகளை மேர்கொள்ள வேண்டும். ஹிண்ட்ராப் அமைப்பின் பெயரிலேயே இந்து என்ற வார்த்தை இருப்பதால் அதை ஆதரிக்க முடியாது என்று திராவிட கூட்டங்கள் சொல்லி விட்டன. கம்யூனிஸ்ட் கயவர்களும் இடையே சொல்லி உதவ மறுக்கிறார்கள். மத்திய காங்கிரஸ் அரசோ இவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. தன் தாய் நாட்டு மக்கள் அந்நிய தேசத்தில் உரிமைகள் மறுக்கப்பட்டு கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வழக்கம் போல கையலாகாத காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. பெருமளவில் மலேசியாவில் இருந்து நாம் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம். பல மலேசிய நிறுவனங்கள் பாரதத்தில் தொழில் செய்கின்றன. இந்திய அரசு ராஜ தந்திர உறவுகள் மூலம் முயற்சி செய்தால் அங்குள்ள அப்பாவி இந்துக்களுக்கு விடிவு பிறக்கும்.  மலேசிய தமிழ் ஹிந்துக்கள் நிலையும்  இலங்கையைப் போல  மேலும் மேலும் சீரழியாமல் இருக்க உடனடியாக  இந்திய அரசு செயலாற்ற வேண்டிய தருணம் இது.

waythamoorthy-on-hunger-strike-300x198

வேதமூர்த்தியின் செய்தி : https://www.hindraf.org/news-statements/945-13-0317-01.html

மேலும்:

தமிழ் ஹிந்து இணையத்தின் முந்தைய கட்டுரை

இது தொடர்பான திராவிட மாயை சுப்புவின் கட்டுரை 

அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை

ஜடாயுவின் கட்டுரை

 

10 Replies to “மலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்”

 1. ஆட்சி மாறினால் மட்டுமே நிகழும்? அதுவும் ஆணித்தரமான கொள்கை பிடிப்புள்ள அப்பளுக்கட்ட்ற தலைவர் பிரதமரானால் மட்டுமே செய்ய இயலும்.

 2. உலகு எங்கும் உள்ள இந்துக்களில் 99 விஹிதம் ரோசம் மானம் இல்லாத அபூர்வப் பிறப்புகள். எவ்வளவு அழிவு நடந்தாலும் இதுகள் வாய் மூடிக்கொண்டு இருக்கும். உணர்ச்சியே இல்லாத ஜன்மங்கள். இந்த நிலையில் உங்களின் முயற்சி வாழ்த்தப்பட வேண்டியது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெல்ல ஈழத்து இந்து ஆகிய நான் மனமார வாழ்த்துகிறேன்.

  ரிஷி -லண்டன்

 3. ஈழத்து இந்துக்களுக்கு நடந்த நடக்கின்ற அவலங்கள் கொடுமைகளை பார்த்து பேரானந்தமடைந்த இந்துப் பண்டிதர்கள் சான்றோர்கள் வேங்கடாஜலபதிகள் அத்வைதிகள் எல்லாம் மலேசிய இந்துக்களின் துயர் கண்ண்டுமட்டும் கொதிக்கப்போகின்றார்களாக்கும். உலகு எங்கும் உள்ள இந்துக்களில் 99 விஹிதம் ரோசம் மானம் இல்லாத அபூர்வப் பிறப்புகள். எவ்வளவு அழிவு நடந்தாலும் இதுகள் வாய் மூடிக்கொண்டு இருக்கும். உணர்ச்சியே இல்லாத ஜன்மங்கள். இந்த நிலையில் உங்களின் முயற்சி வாழ்த்தப்பட வேண்டியது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெல்ல ஈழத்து இந்து ஆகிய நான் மனமார வாழ்த்துகிறேன்.
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்

 4. இந்த அகப்பக்கத்தை எதிர்பாரார விதமாக பார்க்க நேரிட்டது. நானும் ஒரு மலேசியன்தான் அதிலும் ஓர் இந்து. இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்தி அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்தியை, மலேசியாவை வரைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கும் ஒரு செய்தியாளர் பதிவு செய்திருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது.

  ஹிண்ட்ஃராப் தலைவர் வேதமூர்த்தி உண்ணாவிரதம் எடுப்பது உண்மையே…. அவருக்கு ஆதர்வு பெருகுவதும் உண்மையே. அவர் இந்தியர்களின் நலனுக்காக சில கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறாரே தவிர, இங்குள்ள இந்தியர்கள் அடிமைகளாக இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

  நல்ல விஷயங்களை ஹிந்துகளுக்கு கொடுத்து வரும் இந்த இணையத் தளம் உண்மையை அறியாமல் மலேசியாவை பற்றி எழுதி இருப்பது மகா குற்றமாகும். “””புதிய ஆலயங்களோ வழிபாட்டு இடங்களோ கூட சொந்தமான இடங்களில் கட்டகூடாது, தோட்டங்களில் ஏராளமான முருகன் கோவில்கள், சிவன் கோவில்கள், அம்மன் கோவில்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அரசு குறிவைத்து அழிக்கிறது. அவர்களின் மத சுதந்திரத்தையும், வழிபாட்டு உரிமையையும் தீவிரமாக மறுக்கிறது. இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் முயற்சிகளை அரசே ஆதரிக்கிறது.” என்று சொல்லப்பட்டிருப்பது அபாண்டம்.

  இந்தியாவுக்கு அடுத்து மலேசியாவில் தான் தமிழ் கடவுள் முருகனுக்கு மிகப் பெரிய அளவில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. உலக மக்களை கவரும் மிகப் பெரிய திருவிழாவாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. பல மாநிலங்களில் தைப்பூசத்தன்று பொது விடுமுறையை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத சுதந்திரம் இல்லை, வழிப்பாட்டு உரிமை இல்லை என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய்.

  “கல்வி கற்க, அரசு வேலைகளில் இடம் பெற தடை நிலவுகிறது. மிகவும் உயர்ந்த பொறுப்புகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை” என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் உண்மை இல்லை. மலேசியாவில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. லட்ச கணக்கான மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றனர். சில பள்ளிகளில் மலாய், சீன மாணவர்களும் படிக்கிறார்கள். தமிழாசிரியர்களுக்கென பயிற்சி கல்லூரிகள் இருக்கின்றன. அதிகமான தமிழ் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகின்றனர். பல்கலைக்கழகம் வரை தமிழ்க் கல்வி உண்டு. இப்படி இருக்கையில் மலேசியாவில் கல்வி கற்க தடை நிலவுகிறது என்பதில் உண்மை இல்லை.

  இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைப் போல், மலேசிய இந்தியர்களும் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

  மலேசியாவில் குறைந்த அளவு கூலியே தரப்பட்டுவதாக கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வேலை தேடி மலேசியா வரமாட்டார்களே. இது யோசிக்க வேண்டிய விஷயம்.

  “பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தின் போது கூடியிருந்த லட்சக்கணக்கான இந்துக்கள் மீது காவல் துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி அடுத்த வந்த ஆண்டுகளில் மக்கள் கூட்டத்தை திட்டமிட்டு குறைக்கிறது” என்று அப்பட்டமான பொய்………..

  மலேசிய இந்தியர்கள் இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் எனதற்காக வேதமூர்த்தி எடுத்து வரும் உண்ணாவிரத்த்தை நானும் ஆதரிக்கிறேன். இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆனால், நான் பிறந்த தாய் நாட்டை அவதூறுப் பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது….

  எத்தனை பேர் இந்தப் பக்கத்தில் வெளியான செய்தியை படித்து விட்டு மலேசியாவின் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஒரு மலேசியன் என்ற முறையில் மலேசியாவில் வாழ்வதை பெருமையாக கருதுகிறேன்.

 5. நானும் மலேசியாவில் வசிப்பவன். திரு. சரவணன் சொல்வதுதான். உண்மை. வாய்க்கு..மன்னிக்க…கைக்கு வந்தபடி எழுதப்பட்டிருக்கிறது. சிறிய..சிறிய பிரச்சனைகள் இருப்பது உண்மை..ஆனால் அக்கறை உள்ள அரசாங்கமும் “வேத மூர்த்தி” போன்றவர்களும், மலேசியா தமிழ் மக்களும் பார்த்துக்கொள்வார்கள். தமிழகத்தில் உள்ள மக்களிடையே திராவிட எதிர்ப்புணர்ச்சி தூண்டுவதற்கு தயவு செய்து எங்களை பயன்படுத்த வேண்டாம். ஈழத்தில் சொல்லனா துயரத்தில் இருப்பவர்களுக்கே எதிராக எழுதுபவர் நீங்கள். நாங்கள் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் “கண்ணீர்” விட வேண்டாம்.
  ஈழ மக்களுக்காக என்ன போராட்டத்தில் “தமிழ் ஹிந்து” ஈடுப்பட்டது. “கருணாநிதி” போல் நீங்களும் போரின்போது “வாய் மூடி” தான் இருந்தீர்கள். இப்போதும் புரியாத விஷயங்களையே எழுதி வருகிறீர்கள். மக்கள் பிரச்சனையை எழுதாமல்,உனர்ச்யை தூண்டுவீர்கள்; அல்லது தமிழ் ஹிந்துவில் “சமஸ்க்ரிதம்” அல்லது “சற்றும்” நடை முறையில் சாதாரண மக்களுக்கு உதவாத விஷயங்களை எழுதுவதை விடுங்கள்…சும்மாச்சுக்கும் எழுதாமல்..உண்மையாய் இருங்கள்..

 6. தன பெண்ணை கட்டிகொடுத்த மாப்பிள்ளை வீட்டில் கொடுமை படுத்துகிறார்கள் என்று அரசல்புரசலாக கேள்விப்பட்டு மகள்வீட்டுக்கு சென்று மகளை குசலம் விசாரிக்கிறார். அவளோ “நான் நன்றாக சந்தோஷமாக ஒரு கொறையும் இல்லாம இருக்கேன் என்று” சொல்வாள்”

  . அப்பாவும் திருப்தி அடைந்து போய்விடுவார். பெண்ணோ பெட் ரூம் போய் குலுங்கி குலுங்கி அழுவாள். இந்த உதாரணம் திரு சரவணன் மற்றும் பத்மநாபன் ஆகியோருக்கு புரிந்தால் போதும்.

  நமது இந்து இரத்தங்கள் அங்கு சந்தோஷமாக இருந்தால் நமக்கும் சந்தோஷமே. மலாய் அரசு அவர்களை ஒரு குறையும் இல்லாம வைத்துக்கொண்டால் போராட்டம் எதற்கு? தண்ணீர் பீச்சி அடிப்பது எதற்கு?
  முஸ்லிம்கள் ஆட்சியில் இந்துகள் நன்றாக இருகிறார்கள் என்று சொல்வதை நம்ப சொன்னால் எப்படி நம்புவது? பக்கத்துக்கு பாகிஸ்தானை பாருங்கள். 1947 இல் 15% ஆகா இருந்த இந்துகள் இன்று 1.5% மட்டுமே இருப்பதின் மர்மம் என்ன? RSS இலங்கையில் இந்து தமிழர்களுக்கு விளம்பரம் இல்லாமல் சேவை செய்துவருகிறது. முஸ்லிம்களின் குணம் யாருக்கும் தெரியாத ஒன்றா? ஔரங்கஷீப் பாபர் கஜினி முகமது இவர்களை பற்றி தெரியாதா? தமிழர் தமிழர் என்று சொல்லிகொண்டே கொலை செய்ய உடந்தையாக இருந்த கருணாநிதி நல்லவராக போய்விட்டார் இந்துகள் கேட்டார்களா? A விஸ்வநாதன்.

 7. இந்தியா ஹிந்து நாடு என்று சொல்லி முஸ்லிம் களை வெளியேற சொல்கிறிர்கள் .ஆனால் மலேசியா ஒரு முஸ்லிம் நாடு .அப்படி இருக்கும் போது ஏன் அங்கு இருகிறிர்கள் ? உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயம் ? முட்டாள்களா யாரை ஏமாற்றிகிரிர்

 8. @ameer
  நன்றாக சொன்னீர்கள் நண்பரே, நீங்கள் அனைவரும் இஸ்லாமிய நாடுகளுக்கு போய்விடுங்கள் மற்ற நாட்டில் உள்ள ஹிந்துக்களை நாங்கள் இங்கே வரவழைத்துக்கொள்கிறோம். அப்படியாவது எங்களின் பாரத பண்பாடு காப்பாற்றப்படும்.

 9. “அமைதி” மதத்தவர் திரு அமீர் அவர்கள் திமிர் பிடித்து இந்துக்களை “முட்டாள்கள்” என்று வசை பாடி உள்ளார் அவரது மதம் அவருக்கு அமிர்தமான (=இனிமையான) வார்த்தையினை பயன்படுத்த கற்று கொடுக்கவில்லை போலும். “முட்டாள்” என்ற வார்த்தையினை படித்த மாத்திரம் என் ரத்தம் கொதித்தது ஆத்திரத்தில். “இந்திய நாய்களே! காஷ்மீரிலிருந்து வெளியேறுங்கள்!” என்று கூறி 4,00,000 இந்துக்களை காஷ்மீரிலிருந்து வெளியேற்றி அவர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆகிய பெருமை கொண்டது இந்த அமைதி மதம். அந்த “இரக்கமுள்ள” மதத்தை சேர்ந்த மேற்படியார் “முஸ்லிம்களை இந்தியாவை விட்டு வெளியேறு இந்துக்கள் கூறுகின்றனர்” என்று ஒரு அப்பட்டமான பொய்யை கூறுகிறார். முஸ்லிம்களுக்கு மனிதாபம்தான் இல்லை என்று நினைத்தோம். மனசாட்சிகூட இல்லை என்று இப்போது தெரிகிறது.
  இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு,கல்வி கடன் வசதி, ஹஜ் மானியம், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து, அவர்கள் நடத்தும் கல்வி நிறுவங்களுக்கு எண்ணற்ற சலுகைகள் என்று நன்றாக அனுபவிக்கின்றனர். ஆனால் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் நிலை என்ன? இங்கே முஸ்லிம்கள் ஜனாபதியாக பதவி வகித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தானில் இந்துக்கள் MLA வாக கூட இல்லை. (மைனாரிட்டி இனத்தில் ஒரே ஒரு சிந்து மாகாண சீக்கியர் மட்டும் MLA ஆக உள்ளார். இங்கே உள்ள முஸ்லிம் பெண்கள் MP ,MLA , MC மந்திரி, வார்டு உறுப்பினர்கள் என்று 5 வித பதவிகளில் இருக்கின்றனர். ஆனால் Pak ல் முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை கட்டாயபடுத்தி மிரட்டி மத மாற்றம் செய்து அவர்களது 5 வது என்ற பதவியினை தருகிண்டனர். இவர் பெயரை கொண்ட ஒரு இந்தி நடிகன் அமீர் கான் என்பவன் ரீனா என்ற இந்து பெண்ணை மணந்து பின்னர் அவளை விவாக ரத்து செய்து இன்னொரு இந்து பெண் கிரன் ராவ் என்பவரை மணந்தார். இவன் போன்ற ஆட்களுக்கு பெண்டு (=wife ) என்றால் தோளில் தொங்கும் துண்டு என்று நினைப்போ?
  1947 ல் Pak ல் 24% ஆக இருந்த இந்துக்கள் ஜனத்தொகை இன்று 1.1% (one point one %) தான் உள்ளது. இந்த அதல பாதாள வீழ்ச்சிக்கு என்ன காரணம்?அங்குள்ள இந்து ஆண்கள் ஆண்மையினை இழந்துவிட்டார்களா? அல்லது பெண்கள் மலடி ஆகிவிட்டார்களா?i ஆனால் 1951 ல் இந்தியாவில் 10.4 % ஆக இருந்த முஸ்லிம் ஜனத்தொகை இன்று 15% ஆக உள்ளது. மேலும் ஒரு நாட்டின் ஜனத்தொகையில் 10% க்கு குறைவாக இருக்கு இனத்தவருக்கு மட்டுமே minority என்ற அந்தஸ்து அளிக்கவேண்டும் என்று UN CHARTER
  கூறுகிறது. ஆனால் முஸ்லிம்கள் 15% இங்கே உள்ளனர்.
  1946 ல் நடந்த தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவை பிரித்து முஸ்லிம்களுக்கு என பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்று 90% முஸ்லிம்கள் வாகளிதனர். அவர்கள் விருப்படியே பாகிஸ்தான் கிடைத்தபிறகு 15% முஸ்லிம்கள் மட்டுமே இங்கிருந்து பாகிஸ்தான் சென்றனர். 85% முஸ்லிம்கள் இங்கேயே நீடிக்க விரும்பினர், அம்மா அப்பாவின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை என்று தனிக்குடித்தனம் என்று கேட்டு பின்னர் கிடைத்தபின்னர் மனைவியினை மட்டும் அங்கு அனுப்பிவிட்டு கணவன் அம்மா அப்பா உடன் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் முஸ்லிம்களின் நிலைபாடும் உள்ளது. pak என்ற தனி நாடு கிடைத்தும் அங்கு போகாமல் இங்கேயே இருக்க விரும்பியவர்கள் அவர்களது விருப்படிதான் தங்கினர். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் அல்ல The International Law recognising the need for special rights to minorities COMPELLED to live in a state by force had no applications to Indian muslims The concept of special rights to minorities is applicable only on a situation where a society is subordinated against ITS WILL by another country( i.e India)
  1910 களில் கிலாபத் இயக்கத்தின்போது துருக்கியின் கலிபா பதவீழந்தார் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் இந்தியாவில் இந்துக்கள் மீது வன்முறையில் முஸ்லிம் லீக் ஈடுபட்டது உண்மையை சொல்லபோனால் கிலாபதியக்கதை ஜின்னா எதிர்த்தார். ஆனால் காந்தி ஆதரித்தார். உலகில் எது நடந்தாலும் இந்துக்கள் தான் இவர்களுக்கு இலக்கு. அதுபோலதான் ஒரு அமரக்க கிறிஸ்தவன் எடுத்த படம் காரணமாக சென்னையில் இந்துக்களின் வண்டிகளை தீயிட்டு கொளுத்தினார்கள் சமாதானம் கடை பிடிக்கும் சமயமான இந்து மத மக்களுக்கு சமாதி கட்டிட துளுக்கங்கள் துடிக்கின்றனர். அதனால் worldwide வேடிளுண்டுகளை வெடிக்கன்றனர் நேற்று வேலூரில் இந்து முன்னணி தலைவர் கொலை. (சம்பவம் நடந்த இடத்தில ஒரு bag ல் 5 pipe bombs கிடைத்துள்ளது.) மலேசியாவிற்கு செல்லவிருந்த முகமது ஹாசன் என்பவர் கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செஇயபட்டான். (காரணம் அவனிடம் expolsive materials இருந்தன) இப்படி கொலை வெறி பிடித்து ஏன் அலைகிறார்கள் என்று தெரியவில்லை.
  கதை இப்படி இருக்க நாம் இவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு நாம் கூருகிரோமாம்! நாடு பிரிதாபின்னும் வங்காள தேசிலிருந்து அசாம் மேற்கு வங்காளம் திரிபுர போன்ற மாநிலங்களுக்கு திருட்டு தனமாக வராமல் இருந்தாலே போதாதா!

 10. “5 வது என்ற பதவியினை” என்பதை “5 வது மனைவி என்ற பதவியினை” என்று படிக்குமாறு வேண்டுகிறேன். அதே போல துளுக்கங்கள் என்பதை துலுக்கர்கள் என்று படிக்கவேண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *