வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி

தமிழ் திரையுலகில் வில்லனாக எம்.ஜி.ஆர் காலத்திலும் பின்னர் குணசித்திர நடிகராகவும் நடித்து தமிழ் திரையுலகில் 62 ஆண்டுகள் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த திரையுலகின் குருசாமி எம்.என். நம்பியார் காலமானார். அவருக்கு வயது 91.

திரைப்படத்தில் வில்லனாகவே எல்லோரும் அடையாளம் காணும் நம்பியார் தனிவாழ்வில் நல்லவராகவே வாழ்ந்து வந்தார். அவர் சபரிமலைக்கு அழைத்துச் செல்லாத திரையுலக நபர்களே கிடையாது என் சொல்லலாம்.

சபரிமலைவாசன் அவரது ஆன்மாவை அமைதியில் ஆழ்த்தட்டும்.

புகழுடம்பெய்திய பழம்பெரும் நடிகர் நம்பியார் அவர்கள் டிசம்பர் 1984 இல் விஜயபாரதம் இதழுக்கு கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே: [வெளியிட அனுமதி வழங்கிய விஜயபாரதம் ஆசிரியர் திரு. சடகோபன் அவர்களுக்கு நன்றி.]

விஜயபாரதம் நிருபர்: நீங்க எத்தனை வருடமா மலைக்குப் போறீங்க?

நம்பியார்: எத்தனை தடவையா போறீங்கன்னு கேட்டுடாதீங்க. வருடத்திற்கு மூன்று அல்லது நாலு தடவை. கணக்கு கிடையாது. 1942 இலிருந்து மலைக்குப் போய் வருகிறேன்.

நிருபர்: எல்லா தடவையும் முறையா விரதம் இருந்துதான் போவீங்களா இல்ல…

நம்பியார்: நிச்சயம். எல்லா முறையும் முறைப்படி விரதம் இருந்து வேலைக்கும் இடைஞ்சல் இல்லாத படிதான் மலைக்குப் போவேன். விரதம் இருக்கிறது சாமிக்காக கிடையாதுங்க. நம்ப மனத்தூய்மைக்காகத்தான். கடவுள் மீது பழியை போட்டுவிட்டு நாம் விரதம் இருக்கிறோம். நம்ம தவறை திருத்திக் கொண்டு வாழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

நிருபர்: வருடாவருடம் எத்தனை பேரை அழைத்துக் கொண்டு போவீங்க?

நம்பியார்: நான் அழைச்சுகிட்டு போறது கிடையாது அவர்களோடு நான் போவேன் அவ்வளவுதான். எல்லோரையும் அழைச்சுகிட்டுப் போறாப்ல அவ்வளவு பெரிய தகுதி நமக்கு கிடையாது.

நிருபர்: விரதகாலத்தில் ஐயப்பன்மார்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகளை வருடம் முழுவதும் கடைப்பிடிக்கும்படி கட்டாயப்படுத்தினால் என்ன?

நம்பியார்: அது எப்படிங்க முடியும்? அந்த 41 நாள் விரத காலத்தில் நான் சொல்லலாம். விரதம் இல்லாத காலங்களில் சொல்லலாம் எப்படி? சிகரெட் குடிக்கிறவங்களை கொஞ்சம் குறைச்சு குடிங்கன்னு சொல்லுவேன். தண்ணி அடிக்கிறவங்களை கொஞ்சம் குறைச்சு அடியுங்கன்னு சொல்லலாம். நீங்க குடிக்கவே கூடாது அப்படீன்னு சொல்ற உரிமை எனக்கு கிடையாதுல்ல.

நிருபர்: குருசாமி ஆவதற்கான தகுதி என்ன?

நம்பியார்: இத்தனை வருடங்கள் போனவங்கதான் குருசாமி ஆகலாம் அப்படீன்னு தகுதி இருக்கு. எதுக்கு? நம்ம காமன்சென்ஸை யூஸ் பண்ணித்தான் யோசன பண்ணலாமே. மலைக்குப் போகும் போது எப்படி போனா சௌகரியம் எந்த பாதை நல்லா இருக்கும் எங்க தங்கலாம்? இதெல்லாம் பலவருடம் போனவங்களுக்குத்தான் அனுபவபூர்வமாக தெரிந்திருக்கும். அதுக்குத்தான் பலதடவை போன அனுபவம் உள்ளவங்க குருசாமியா ஆறாங்க.

நிருபர்: சென்ற வருடம் நிலக்கல் விஷயமாக நடந்தவைகள் அங்கு அத்து மீறி சர்ச் எழுப்பப்பட்டு அகற்றப்பட்ட விதம் இதெல்லாம் கேள்விப்பட்டீங்களா?

நம்பியார்: ஓ கேள்விப்பட்டேனே. காரில் போனால் அந்த வழியாகத்தான் மலைக்குப் போயாகணும். ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ஆபரண பெட்டி நிலக்கல்லில் இருந்து முன்பு நட்ந்தே கொண்டு வருவாங்க. இப்ப பம்பா நதி வரை காரில் வந்துவிடுகிறது. நிலக்கல் பிரச்சனை வர்றதுக்கு காரணம் என்னங்கறீங்க.ஆளும்கட்சி அரசாங்க அதிகாரம் வேணுமா நியாயம் வேணுமா என்று பார்க்குது. அரசாங்கமும் அதிகாரமும் வேணும் என்று அரசியல் கட்சிகள் நினைப்பதால் நியாயத்திற்கு அங்கு இடமில்லாமல் போயிடுது. இதெல்லாம் நம்ம மனநிலையை பொறுத்து இருக்கு. நாம எல்லாரும் இந்தியன் என்று நினைத்தால் இந்த பிரச்சனைகளே எழாது. இந்தியனுக்கு ஒரு பொது சட்டம்தான் இருக்கணும். அதை எல்லா இந்தியனும் ஒத்துக்கணும். மதத்திற்குத் தனிச் சட்டம் இருக்கக் கூடாது. அதாவது நான் என்ன சொல்றேன்னா மைனாரிடிகளுக்கு உள்ள உரிமைகளை மெஜாரிட்டிக்கு கொடுக்கணும். அதை மறுக்கக் கூடாது. நம் நாட்டில் மைனாரிட்டி சமுதாயத்தினருக்கு ஏகப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் தராங்க. அதைப் போல மெஜாரிட்டி சமுதாயத்தினரையும் கவனிக்க வேண்டாமா?

நேற்று எங்க தொகுதி வேட்பாளர் ஒருவர் எங்க வீட்டுக்கு வந்தாரு; நல்லா ஜெயிக்கக் கூடிய வாய்ப்புள்ளவரு. நான் அவரிடம் ‘ஒரே ஒரு கோரிக்கை’ என்றேன். என்னான்னாறு. நீங்க ஜெயிச்சு வந்தா மெஜாரிட்டி சமுதாயத்துக்கு துரோகம் செய்யாம இருப்பீங்களான்னு கேட்டேன். அவரு என்னை கேட்டாரு, ”மெஜாரிட்டின்னா ஆரை சொல்றீங்க”ன்னு. நிலைமை எப்படி இருக்கு பாருங்க.

நிருபர்: குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளைக் கூட மைனாரிட்டியைக் காட்டியும் தங்கள் மதநூலைக் காட்டியும் தட்டிக் கழிக்கிறார்களே?

நம்பியார்: எல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசைதான் காரணம். அதற்காக எதையும் செய்யுறாங்க. எதுக்கும் இடம் தர்றாங்க,. குடும்பக்கட்டுப்பாடுன்னு சொன்னதும் ஞாபகம் வருது. இது விஷயமா யுனெஸ்கோ அமைப்பே பாராட்டி உதவி செய்யுற அளவுக்கு ஐயப்பன்மார் செயல்படுறாங்க. சிலபேர் விரத காலத்தில் அப்படி இப்படி இருக்கலாம். ஆனா இந்த பிரம்மச்சரிய
விரதத்துல மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. 41 நாட்கள் இது போல இருக்கும் போது எவ்வளவு குழந்தைகள் பிறப்பு கட்டுப்படுத்தப்படுது. இது உலகத்துக்கே மாபெரும் உதவியில்லையா? அவுங்களே தெரியாம இது போல ஒரு உதவியும் செய்யுறாங்க அய்யப்பன்மார்.

…இப்ப ஆர்.எஸ்.எஸ் வந்தப்புறம் தான் இந்துக்களுக்கு ஒரு ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் வந்திருக்கு. இந்துக்கள் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய நிலைமை வந்திருக்கு இது மறுக்க முடியாத உண்மை. இறுதியா நான் சொல்ல விரும்புறது டிஸிபிளின் பத்திதான். கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லைன்னா நாம எதையும் சாதிக்க முடியாது. நம்மை நாமே ஏமாற்றிக்கிட்டா நமது மனசு நம்மளை சும்மா விடாது. கொஞ்சபேரு ஆயுதங்களோடு அணி வகுத்து நிக்கிறாங்கன்னு வச்சுக்குங்க ஆயிரம் பேரு கூட்டமா வந்தாங்கன்னா அந்த கொஞ்சப்பேரைக் கண்டு அந்த கூட்டமே நடுங்கும். ஏன்னா அந்த கொஞ்சம் பேருக்கு எபடி செயல்பட வேண்டும் எந்த விஷயத்தில் செயல்பட வேண்டும் என்கிற பயிற்சியும் கட்டுப்பாடும் இருக்கும். அந்த டிஸிபிளின் நம்ம சமுதாயத்துக்கு முழுக்க வேண்டும்.

10 Replies to “வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி”

  1. Thank you
    very touching and May His Soul rest in Peace.
    God Bless.
    Thanks again for your Team, that has thought of sharing this with us.
    Good wishes and Greetings,
    anbudan,
    srinivasan.

  2. Very sad that Good souls are leaving us one by one !

    We all grow up seeing him on screen. He is the first one to define villainy in Tamil Cinema.
    Nobody can forget the comedian inside him that showed up in films like Missiamma and Thooral ninnu pochchu etc !

    Here is a video which shows Nambiar’s anbu thollai to MGR demanding a kiss on stage !

    https://in.youtube.com/watch?v=Qt1d0mGHidI

    May he bless us from there !

  3. 91 வயது வரை வாழ்ந்துவிட்டு உயிரை நீத்தத்ற்காக நிச்சியமாக நம்பியார் வருத்தப்பட்டு இருக்கமாட்டார். ஆனால் நாம் வருந்துகிறோம். புகழோடு தோன்றி புகழோடு மறைவதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்கவேண்டும்!

    அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்!

  4. ஐயா,

    நம்பியார் அவர்களின் மறைவு கேட்டு மனம் கலங்கியது. நம்மை அறியாமல் ஒருமுறை கேட்டிருந்த அன்னாரின் இனிய குணங்களை மனத்தில் அசை போட்டோம்.

    நம்பியார் ஐயாவின் இந்துத்துவ சிந்தனைகளை இந்த பேட்டியின் வாயிலாக அறிய முடிந்தது. ஆன்மீகமும் கலையும் அவரின் நரம்புகளில் பிணைந்திருக்கிறது.

    நன்றி. சபரீசனின் பாதகமலங்களில் நம்பியார் அவர்களுக்கு எப்போதும் ஒரு அழியா இடம் உண்டு. (“அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்” என்ற வரிகள் டிபிகல் ஆப்ராமிகிய மதங்களின் கோட்பாட்டை தழுவியவை. இந்துமதத்தில் ஆன்மா என்பது எப்போதும் சாந்தியாகவும், நிறைவாகவும் இருப்பது. சிவலோகப்ராப்தி, வைகுண்டபிராப்தி முதலானவையே நம் சம்பிரதாயம்)

    நன்றி

    ஜயராமன்

  5. All hindus pray for his peaceful and eternal rest at the Divine’s feet.
    Nambiar’s loss is an irreplacable loss for Dharma and the hindu society.

  6. ஐயப்ப விரதம் பிரம்மச்சரியத்தை மிகவும் வலியுறுத்துகிறது. 41 நாட்க்களாவது வருடத்தில் கட்டுபாட்டுடன் இருக்கும் பொழுது நம்முள் இருக்கும் சக்தி ஆன்ம பலமாக உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்ப்படுகிறது. இதைத்தான் திரு.நம்பியார் சுட்டிக் காட்டுகிறார். தனி மனிதனின் வலிமை சமுதாய வலிமையாக உருவெடுக்கிறது.

    இதனாலேயே சுவாமி விவேகானந்தரும் இந்திய இளைஞர்களுக்கு பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினார் !

    பிரம்மச்சரியத்தை பற்றி பேசும் ஒரு நல்ல வலைத்தளம் உள்ளது.

    http://www.celibacy.info

  7. ‘அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று எழுதுவது அப்பட்டமான ஆபிரஹாமியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்

    பலானவர் ‘வைகுண்டப்ராப்தி/சிவலோகப்ராப்தி” அடைந்துவிட்டார் என்ற் செய்தி வரும்பொழுது வேறு எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுத்தால் மிகவும் நன்றாகவிருக்கும்.

    இந்தமாதிரி சமயங்களில் நம்மை எந்தமாதிரி பின்னூட்டம் இட சொல்கிற்து நமது பண்பு?

  8. சார்ம்லீ ஐயா,

    /// பலானவர் ‘வைகுண்டப்ராப்தி/சிவலோகப்ராப்தி” அடைந்துவிட்டார் என்ற் செய்தி வரும்பொழுது வேறு எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுத்தால் மிகவும் நன்றாகவிருக்கும். ///

    நான் சுபாவமாக எழுதிய என் கருத்துக்களில் உங்களுக்கு ஆழ்ந்த மனவருத்தம் இருக்கிறது என்பதை அறிகிறேன். இது ஏன் என்று புரியவில்லை? எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுக்க நான் யார்? இப்படி எழுதுவது சரியா என்று எனக்குள் வந்த சந்தேகத்தை நான் இங்கு முன்வைத்தேன். அதை நீங்கள் பார்த்து வெகுண்டு எழுந்து என்னை எதிர்கேள்வி கேட்டது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. இம்மாதிரி பதிவுகளில் வெறும் புகழுரைகள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. ஒருவேளை நீங்கள்தாம் இந்த கட்டுரையின் ஆசிரியரோ தெரியவில்லை. நான் இந்த பின்னூட்டத்தில் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அப்படிச்சொல்லியிருந்தால்என்னை மன்னிக்கவும். அந்த பின்னூட்டத்தை தூக்கிவிடவும்.

    நான் எப்படி எழுதினால் சரியாக இருக்கும் என்பதை என் பின்னூட்டத்திலேயே நான் சொல்லியிருக்கிறேனே பாருங்கள்..

    /// சபரீசனின் பாதகமலங்களில் நம்பியார் அவர்களுக்கு எப்போதும் ஒரு அழியா இடம் உண்டு. /// இறைவன் திருவடி சேர்ந்தார் என்று சொல்வது இந்து மரபாக இருக்கும் என்பது என் எண்ணம். ஆனால், இப்படித்தான் சொல்லவேண்டும் என்று யாருக்கும் சொல்லிக்கொடுக்கும் நிலையில் நான் இல்லை ஐயா.

    /// இந்தமாதிரி சமயங்களில் நம்மை எந்தமாதிரி பின்னூட்டம் இட சொல்கிற்து நமது பண்பு? ///

    என் பண்பு சரியில்லை என்றால் திருத்திக்கொள்கிறேன். மன்னிக்கவும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ஆனால், என் பின்னூட்டத்தில் நான் மறைந்த அன்னாரைக்குறித்த என் நல்ல எண்ணங்களை ஆழமாக பதிந்திருக்கிறேனே. நம்பியார் ஐயாவைக் குறித்து என்னிடம் நல்ல எண்ணங்களும், உயர்ந்தகருத்துக்களும் மட்டுமே இருக்கின்றன. மாறாக நான் என்றுமே நினைக்கவில்லை.

    “ஆன்மா சாந்தி அடையட்டும்” முதலான உருவகங்கள் மீதான என் எண்ணங்களை இது போன்ற பதிவுகளில் பதியாமல் வேறு எப்போது நான் சொல்ல முடியும் ஐயா! அப்படி நான் சொல்வது பண்பு அல்ல என்று நீங்கள் சொன்னால் எனக்கு வேறு எப்படி செய்வது என்றே புரியவில்லை.

    என்னை தமிழ்இந்து.காம் தளத்தின் பங்கெளிப்பிலிருந்தும் தடுக்கவும், அகற்றவும் முயற்சியோ என்று எனக்கு சந்தேகமாய் இருக்கிறது. அவ்வாறாயின், அதற்கு இப்படி சிரமப்படவேண்டியதேயில்லை. என் பின்னூட்டங்களைத் தடை செய்தாலே போதும். நான் புரிந்துகொள்வேன்.

    தமிழ்இந்து.காம் வளம்பெற வாழ்த்துக்கள்.

    நன்றி

    ஜயராமன்

  9. திரு ஜயராமன் அவர்களுக்கு நான் முத்லிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன். எனக்கும் தமிழ் இந்து..காமிற்கும் ஒரு வாச்கன் என்ற முறை தவிற வேறு எந்த உறவும் கிடையாது.

    “அன்னாருடைய ஆன்மா சாந்தியடயிட்டும்” என்பதை ஆபிரஹாமியம் தான் என்று நான் ஒப்புக்கொண்டாயிற்று..

    எப்படி எழுதவேண்டும் என்று கேட்டது எனது அறியாமையினால்தான்.

    எந்த விதத்திலும் தங்கள் மனம் புண்படவேண்டும் என்ற எண்ணமே எனக்கு கிடயாது. அப்படி புண் பட்டிருக்குமேயானால் மிகவும் வருந்தி என்னை மன்னிக்கும்படியாய் வேண்டிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *