வெட்கக்கேடு

மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்வுகளின்போது தீரத்துடன் போராடிய நம் போர்வீரர்களுக்கும் போலீசாருக்கும் நாம் வீர வணக்கம் செலுத்தும் அதே நேரத்தில் இந்திய ஜனநாயத்தில் பெருந்தலைவர்களாக பவனி வரும் சிலரின் நடத்தையைக் காணும்போது, இதுபோன்ற நபர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருக்கிறது.

 1. மும்பையில் பாகிஸ்தானிய முஸ்லிம் பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கில் மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஆளும் காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசராக முடி சூட்டப்பட்டிருக்கும் ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் விடிய விடியப் பார்ட்டி நடத்தி கொண்டாடிக் கொண்டிருந்தாராம். ஆறாய்ப் பெருகி ஓடும் குருதி பற்றி அவருக்கு என்ன கவலை! (செய்தி: இந்தியா டுடே)
 2. ‘முப்படைகளின் முழுமுதல் தளபதி’யான நம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அம்மையார், மும்பை பயங்கர நிகழ்வுகள் முடியும்வரை இந்தோனேஷியாவின் ஓர் உல்லாசத் தீவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ஆட்டுக்குத் தாடி போல இப்படி ஒரு பதவி. இவர்களுடைய படாடோபமான செலவுகளுக்கும் சேர்த்து நாம் வரி கட்டி அழுதுகிறோம்.
 3. அங்கே எல்லோரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொடூர மனதுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் கையில் சிக்கி அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் மஹாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் சினிமா நடிகரான தன் மகனுடனும் ஒரு சினிமா டைரக்டருடனும் சேர்ந்துகொண்டு இந்த பயங்கரத்தை எப்படி சினிமா எடுத்து காசு பண்ணலாம என்று தாஜ் ஓட்டலைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.
 4. இங்கே நீங்கள் காணும் இந்த பயங்கரவாதி மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தன் கூட்டாளிகளோடு சேர்ந்து கண்ணில் கண்டவர்களையெல்லம் சுட்டுத் தள்ளியவன். அந்த ஃபோட்டோவை எடுத்த சபேஸ்டியன் டிசௌஸா என்பவர், துப்பாக்கிச் சூடு நடக்கும்போது ஆயுதமேந்திய பல போலீஸ்காரர்கள் ஸ்டேஷனில் பதுங்கியிருந்ததை பார்த்திருக்கிறார். ஆனால் ஒருவர்கூட அந்தப் படுகொலையைத் தடுக்கவோ பயங்கரவாதிகளைத் திருப்பிச் சுடவோ முயலாமல் ஒரு மூலையில் பதுங்கியே இருந்தனராம். “என் கையில் இருந்தது வெறும் காமிராதானே, துப்பாக்கி இல்லையே” என்று அங்கலாய்க்கிறார் அந்த புகைப்படக்காரர்.
 5. இத்தகைய படுகொலை மும்பை சி.எஸ்.டி. ஸ்டேஷனில் நடந்த மறுதினம் அந்த ஸ்டேஷனை உள்ளடக்கிய மத்திய ரயில்வேயின் பொது மேலாளரான சௌம்யா ராகவன் டில்லிக்குப் பறந்து சென்று அங்குள்ள ஐந்து நட்ச்த்திர ஓட்டலில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். (செய்தி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்) இவர்களுக்கெல்லாம் பயங்கரவாதமோ உயிரிழப்போ ஒரு பொருட்டல்ல போலும். அதனால் தான் அமாவாசையும் பௌர்ணமியும் மாறிமாறி வருவதுபோல் தொடர்ந்து இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களும் ஜேஜேயென்று நடக்கின்றன. அப்பாவி உயிர்களும் பலியாகிக் கொண்டிருக்கின்றன!
 6. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் நம் நாட்டின் ஒரு முக்கிய கடற்படை தளத்தைக் கடந்து ஏராளமான துப்பாக்கிகளுடனும் டன் கணக்கில் வெடி குண்டுகளுடனும் மற்றும் சேடலைட் ஃபோன் போன்ற கருவிகளுடனும் ஏதோ கல்யாண வீட்டுக்குள் நுழையும் மணமகன் வீட்டார் போல் சர்வ சகஜமாக பலமைல் தூரம் போய் பல இடங்களில் இஷ்டப்படி மக்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். பாதுகாப்பு, தற்காப்பு, புலனாய்வு என்கிறார்களே, அவையெல்லாம் இந்தியாவில் அறவே கிடையாதா! இந்த அழகில் நாம் நம் நாட்டை வல்லரசு என்று வேறு அழைத்துக் கொள்கிறோம்!

3 Replies to “வெட்கக்கேடு”

 1. அட அத விடுங்க சார்.

  முந்தா நாள் ஒருவர் தன்னுடைய (லைஸன்ஸ் பெற்ற) துப்பாக்கியை பேண்ட் பாக்கெட்டில் சொருகிக்கொண்டு, துப்பாக்கி சூடு நடந்த அந்த ரயில்வே ஸ்டேஷனின் அத்தனை வாசல்கள் வழியாகவும் சென்று வந்திருக்கிறார். எந்த போலீஸ்காரரும் அவரை தடுக்கவில்லை. அவர்போய் கேள்விகேட்ட போது, வாசல்களில் உள்ள மெட்டல் டிடக்டர்கள் வேலை செய்யாவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று சொன்னார்களாம். பெங்களூர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருந்தது.

  இந்தியாவில் ரொம்ப ரொம்ப சீப்பான விசயம் இந்தியர்களின் உயிர். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அறிக்கைதான் கொடுக்கிறார்கள். இத்தனைக்குப் பின்னும்கூட வேலை செய்யாத மெட்டல் டிடக்டரை வைத்து இருப்பவர்கள் நம்மைப் பற்றி எந்த அளவு அக்கறைப்படுகிறார்கள்?

  பொடா, தடாவைவிட கடுமையான சட்டங்கள் வரவேண்டும். இல்லாவிட்டால், பாக்கிஸ்தானின் காலனியாக இந்தியா மாறி, அவர்களின் ஷூவை நக்கி பிழைக்கவேண்டியதுதான்.

 2. What an irony:
  that the elite NSG Force was transported in ordinary BEST buses,
  whereas our cricketers are transported in state of the art luxury buses,
  these Jawans lay down their lives to protect every Indian
  and these cricketers get paid even if they lose a match,
  we worship these cricketers and
  forget the martyrdom of these brave Jawans.

  The Jawans should be paid the salaries of the cricketers
  and the cricketers should be paid the salaries of the Jawans.

  An ace shooter shoots and gets gold medal,
  the government gives 3crores, all others vie to shower gold on him
  another shooter dies while shooting terrorist,
  government gives just 5 lakhs.

  While the system is unable to protect ordinary people from terrorist attacks, politicians, cutting across party lines, spend hundreds of crores of tax-payers’ money to protect themselves.

  Over Rs 250 crore is spent on “VIP” protection, including people like Sajjan Kumar, who have murder cases against them.

  The explosion of VIP security has led to a ridiculous situation in which commandos meant for anti-terror operations have been diverted to protect politicians.

 3. hi Friend S.K,

  Very nice to get the information .It is really our destiny for longtime after 1950s what you have wrote here. We needed the instant change as recent brought down of the head of the nation in Thailand like to make perfect nation with full of loveness,sanitation,corruption free,nepotism free,and so on. Need urgent factor to remove the weeds in our admins land………My e mail address; natural.2020@indiatimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *