சில நாட்கள் முன்பு மூவர் முதலிகள் முற்றம் என்ற கட்டுரையில், “கும்பகோணத்தில் ‘தை’ மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ள ஒரு கருத்தரங்கு” பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கருத்தரங்கு ஜனவரி-24 (சனிக்கிழமை) அன்று கும்பகோணம் நகரில் நடைபெறுகிறது.
அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் கீழே காணலாம். அன்பவர்கள் அனைவரையும் மூவர் முதலிகள் முற்றம் சார்பில் வருக வருக என்று அழைக்கிறோம்.
(படங்களின் மீது க்ளிக் செய்தால் முழுமையாக, பெரிதாகத் தெரியும்)
அழைப்பிழ் : பக்கம் 1
அழைப்பிழ் : பக்கம் 2
கருத்தரங்கம் குறித்து அறிந்து மிக்க மகிழ்ச்சி. கருத்தரங்கம் சிறந்த வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கருத்தரங்கத்தில் விளைந்த அனைத்து அழகான கருத்துக் கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் தமிழ் இந்து தளத்தில் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
நன்றி
ஜயராமன்
மூவர் முதலிகள் முற்றத்தினருக்கும், மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். அருள்கூர்ந்து பெயர்களை எழுதும் பொழுது,
“K. கண்ணன்” என்பது போல ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதாதீர்கள். ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தை எழுதி அதில் செ. இரா Selvakumaar என்று நான் கையெழுத்து இட்டாலோ அல்லது ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அழைப்பிதழில்
Vote of Thanks: கு. நா. Kannan என்றோ,
Keynote speaker: மா. Murugan என்றோ
குறிப்பிட்டு எழுதி இருந்தால் எத்தனை அதிர்ச்சி தரும் ஒன்றாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். நன்றி.
செல்வா, வாட்டர்லூ, கனடா
திரு.ஜயராமன், திரு.செல்வா, வணக்கம்.
கும்பகோணம் கருத்தரங்கின் கருத்துரைகள் விரைவில் இத்தளத்தில் வரும்.
செல்வா, நீங்கள் சொல்வது சரிதான்; ஒவ்வொருமுறையும் K. கண்ணன் என்று எழுதும்போது நினைத்துக்கொள்வதுதான். ஆனால், தற்பொழுது என்னால் மாற்றிக்கொள்ளமுடியும் என்று தோன்றவில்லை – முயற்சிக்கிறேன். மகிழ்ச்சி.
கண்ணன்.
//“K. கண்ணன்” என்பது போல ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதாதீர்கள்//
இப்படி இனிஷியல் வைத்துக்கொள்வதே ஆங்கிலேயர் காலத்தில் எழுந்த வழக்கம். ஆங்கிலப் பழக்கத்தை அப்படியே வைத்துக்கொண்டு, தமிழில் எழுத்தைக் கொண்டுவருவதால் என்ன லாபம்?
எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து அனைத்து சன்னிதானஙகளின் அருளாசியும் கிடைக்கப் பெற்றேன். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்கு மிக்க நன்றி.
ஆனால் மாற்று மதத்தினர்களின் தீய எணணங்களைக் கேள்விப்பட்டு மனம் வருந்தி நம் இறைவனை பிரார்த்திகிறேன், நல்லதே நடக்க.
//இப்படி இனிஷியல் வைத்துக்கொள்வதே ஆங்கிலேயர் காலத்தில் எழுந்த வழக்கம். ஆங்கிலப் பழக்கத்தை அப்படியே வைத்துக்கொண்டு, தமிழில் எழுத்தைக் கொண்டுவருவதால் என்ன லாபம்?//
தமிழ்நாட்டில், இன்ன ஊரின் இன்னார் மகன் என்று கூறுவது தொன்மரபு. “சத்தியமங்கலம் முருகன் மகன் கந்தசாமியா” என்பது போல கேட்பார்கள். இது ஆங்கிலேயர் வழக்கம் இல்லை. முதலெழுத்து என்று சுருக்குவது வேன்டுமானால் புதிதாக இருக்கலாம். “தமிழில் எழுத்தைக் கொண்டுவருவதால் என்ன லாபம்” என்று கேட்கும் நீங்கள் மீதி உள்ள பெயரை மட்டும் தமிழில் எழுதுவதால் என்ன இலாபம் என்று கேட்டுப் பாருங்கள். ஒன்று முழுக்க ஆங்கிலத்தில் எழுதுங்கள் அல்லது முழுக்க தமிழில் எழுதுங்கள் என்னும் வேண்டுகோள் மிக எளிய ஒன்று. இதுகூடவா புரிந்துகொள்வது கடினம்?! ஏற்பதும் ஏற்காததும் உங்கள்
விருப்பம். ஆனால் சுட்டிக்காட்டுவது என் சிறு கடமையாக எண்ணிக் கூறினேன்.
நண்பர்களே
கருத்தரங்கத்தில் விளைந்த அனைத்து அழகான கருத்துக் கட்டுரைகளையும், சொற்பொழிவுகளையும் தமிழ் இந்து தளத்தில் தரவேண்டும்
ந்ன்றி