மூவர் முதலிகள் முற்றம்

சென்னையில் தெய்வநாயகம்-தேவகலா கும்பல் நடத்திய ‘ஆராய்ச்சி பயங்கரவாத மாநாடு’ம் அந்த மாநாட்டின் திருட்டு நோக்கத்தை சந்தியில் கொண்டுவந்து வெளிச்சம்போட்டுக் காட்டிய ‘தமிழ் ஹிந்து’ செயல்பாடும், எழுத்தாளர் திரு. ஜெயமோகனின் அந்த ஆராய்ச்சி பற்றிய கட்டுரையும் புரட்டு ஆராய்ச்சியாளர்களை துகிலுரித்துக் காட்டியதும் நாம் அறிந்ததே. அந்த ஆராய்ச்சி மற்றும் தெய்வநாயகத்தின் புத்தகம் பற்றி ஹிந்து இயக்கங்களும் அதன் தலைவர்களும் மற்றும் சில தனி நபர்களும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார்கள் – சிலர் தகுந்த அதிகாரிகளிடம் புகாரும் அளித்துள்ளார்கள். ஆனால், எங்கிருந்து அல்லது எவரிடமிருந்து கண்டனங்களும் ஆதாரபூர்வமான மறுப்பு அறிக்கைகளும் வரவேண்டுமோ அந்தப் பீடங்கள் தவ மோனத்தில் இருக்கின்றன.

கோடிக்கணக்கான நிதியின் பின்பலத்தோடு நடத்தப்படும், நம்மையும் நம் முன்னோர்களயும் கேவலப்படுத்தும் இதைப்போன்ற ஆராய்ச்சிகளும் மேலும் அவற்றின் முடிவுகளை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகளும் வாழும் வீட்டுக்குள் சுவர் ஓரமாக நெழுநெழுவென்று பாம்பு நுழைவதைப் போல் நுழைகின்றன. ஏற்கனவே நுழைந்த ‘இப்படியாப்பட்ட’ ஒரு ஆராய்ச்சி ‘ஆர்ய-திராவிட இன வாதம்’. இன்று அதன் விளைவு என்ன? கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. இதை உணரவேண்டிய பெரியவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
சைவம், வைணவம் ஏனய சமய சிந்தாந்தங்களும் தாமஸ் அவர்களது சிந்தனையின் விளைவு ; அதற்குமுன் தமிழர்களுக்கு ஆன்ம ஈடேற்றத்திற்கான வழிகளே தெரியாது” என்பதாக ஒரு ஆராய்ச்சி அதற்கு ஊர் முக்யஸ்தர்கள், ஆட்சியில் உள்ளோர் ஆகியோரின் பாராட்டு – நம்மை, ஆராய்ச்சி செய்து கேவலப்படுத்துபவர்களை ஆகா, எப்பிடி சொல்றாக என்று அக்காந்து நம்மவர்களே பாராட்டும் அவலம்; இதையெல்லாம் கண்டு பெரியவர்களின் மௌனம்!

இந்த அவலத்தைப் போக்க உங்கள் பங்களிப்பு தேவை. இதற்காக ஒரு சிறு வெளியீடை கும்பகோணத்தில் ‘தை’ மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ள ஒரு கருத்தரங்கின் முன்னோட்டமாகப் பதிப்பிக்க உத்தேசித்துள்ளோம். சைவ சிந்தாந்தில் ஈடுபாடுள்ள சிலரது முன் முயற்சியில் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு முன், சைவ, வைணவ ஆதீனங்கள், பீடாதிபதிகள் உள்ளிட்ட இந்துத் துறவிகள் அனைவருக்கும் பொது மக்களிடமிருந்து இந்த அபத்த, அபாய ஆராய்ச்சி குறித்து அவர்களது மேல் நடவடிக்கை வேண்டி கடிதங்கள் செல்லவேண்டும். ‘தமிழ் ஹிந்து’ வாசகர்களுக்கு இதுவே வேண்டுகோள்.

-கண்ணன், கும்பகோணம்

கடிதம் எழுத வேண்டிய இந்து சமய, ஆன்மிகத் தலைவர்கள் முகவரிகள்:

1. ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள்,
தருமபுர ஆதீனம், தருமபுரம், மைலாடுதுறை-609 001.

2. ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள்,
திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை-609 803

3. தவத்திரு. குன்றக்குடி, பொன்னம்பல அடிகளார் அவர்கள்,
குன்றக்குடி – 630 206

4. தவத்திரு. ஆதீனகர்த்தர் அவர்கள், மதுரை ஆதீனம்,
70, தெற்கு ஆவணி மூல வீதி,
மதுரை – 625 001.

5. ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சுவாமிகள் அவர்கள்,
அதிபர், காசித்திருமடம்,
திருப்பனந்தாள் – 612 504.

6. தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகள் அவர்கள்,
பேரூர் ஆதீனம்,பேரூர், கோயம்புத்தூர் – 641 010.

7. ஸ்ரீமந் நாராயண ஜீயர் அவர்கள்,
வடக்கு உத்தர வீதி, ஸ்ரீரங்கம்.

8. ஸ்ரீ வானமாமலை கலியன் ராமானுஜ ஜீயர் அவர்கள்,
நான்குநேரி, திருநெல்வேலி மாவட்டம்.

9. ஸ்ரீமந் எத்திராஜ ஜீயர் அவர்கள்,
சந்நிதி வீதி, ஸ்ரீபெரும்புதூர்.

10.எம்பெருமானார் ஜீயர் அவர்கள்,
ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி மாவட்டம்.

11.பேரருளாளர் ராமானுஜ ஜீயர் அவர்கள்,
திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம்.

12. ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் அவர்கள்
காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சம்ஸ்தானம்
1, சாலை தெரு, காஞ்சிபுரம் – 631502

13. ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் அவர்கள்
தட்சிணாம்னாய சிருங்கேரி சாரதா பீடம்
சிருங்கேரி, சிக்மகளூர் மாவட்டம்
கர்நாடகம் – 577139

14. பூஜ்ய சுவாமிஜி அவர்கள், தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம்,
31, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை – 600004.

15. அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள்
சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம்
மேல்மருவத்தூர் – 603319.

16. பூஜ்ய ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி அவர்கள்
மாதா அம்ருதானந்தமயி மடம்
அம்ருதபுரி அஞ்சல்,
கொல்லம் – 690525
கேரளா

17. சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்
ஈஷா யோக தியான மையம்
வெள்ளியங்கிரி, செம்மேடு அஞ்சல்
கோயம்புத்தூர் – 641 114

7 Replies to “மூவர் முதலிகள் முற்றம்”

 1. 1. Whos is “மூவர் முதலிகள் முற்றம்”?

  2. Can you give its address and the contacts – phone no, e-mail etc.

  3. The mentioned mutt heads are useless according to my opinion as they cannot matach the propaganda or the manipulative skills of of the christians or mohammedans. Had it been so, the position would not be like this.

  4. Moreover, the list includes the mutt-heads who have already been in anti-Hindu groups and activities. In fact, one of the so-called Jeers has been hobnobbing with them. Another has been with Karu; yet another has been creating a lot of problems within the Hindus. Therefore, these mutt-heads need not be involved.
  Ref:https://vedaprakash.indiainteracts.com/2008/08/16/religion-of-tamizhar-an-international-conference-is-a-camouflage-or-subversaion-of-hindus/

  5. Real Hindus, in the sense, who have guts should conduct the conference. The Hindus with other motives would only produce negative results, that would further harm the interests of the Hindus.

  6. As pointed by Sri Vedaprakash, during the above-mentioned conference, Swami Omkarananda has volunteered himself to conduct the conference and therefore such Swamijis can be relied upon.
  Ref: https://vedaprakash.indiainteracts.com/2008/12/07/thamizhar-samayam-a-reply-to-the-christian-protagonists-and-propagandists/#ff1

  7. Anyway, there should be co-ordination, co-operation and consensus amng the Hindus.

  Kindly give the details.

 2. Sir,
  I want to furnish the address of Muvar Mudali Mutram, which follows: Prof Swamy Thiyagarajan, 14, Handi Building, New Railway Station Road, Near Flyover, Kumbakonam – 612001. Cell no 94435 18004. He is making efforts to initiate action against the said M Deivanayagam and others for publishing a titled Irulil Oli, which contained defamatory and derogatory materials. Another two gentlemen connected with this is Sri Panneer Selvam – 9443408446 & Sri K Kannan – 9443222257. Please contact any one the three gentlemen for further information.

 3. திரு. நாச்சியப்பன், உங்களின் ஆர்வம் ஊக்கமளிக்கிறது.

  சென்னையில் தர்ம ரக்ஷண சமிதி நடத்திய ‘தமிழர் சமயம்’ சொல்லரங்கம் மற்றும் மதிப்பிற்குரிய சுவாமி ஓங்காரானந்தா பற்றிய தங்களின் கருத்துக்கள் குறித்தும் மகிழ்ச்சி.

  மேலும் உள்ள உங்களது கருத்துக்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படவேண்டியவையே. ஆனால், அமைப்பு ரீதியாகவும் பாரம்பர்யமாகவும் உள்ள சைவ, வைணவ சிந்தாந்திகளின் பங்களிப்பும் எதிர்வினைகளும் இங்கு மிக அவசியம். அவற்றை வேண்டியே, தங்களைப்போன்ற ஆர்வலர்களை அவர்களுக்கு கடிதம் எழுதி மேல் நடவடிக்கையை வலியுருத்தக் கோருகிறோம். தாங்களும் தங்கள் நண்பர்களும் அவசியம் எழுதுங்கள். ஊர் கூடி தேரிழுபோம். நாம் விரிவாகவும் ஆராய்ச்சிபூர்வமாகவும் சதிகாரர்களை சந்தியில் இழுக்கும் விதமாகவும் கருத்தரங்கங்களை நடத்துவோம். வந்தால் வந்தவர்களுடன், வராவிட்டாலும் நாம் செய்வோம்; சாவர்கர் வழியே நம் வழி.

  கண்ணன், கும்பகோணம்.

 4. “தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.

  குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது!

  ஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்!

  சதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்!

  போதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது!

  அதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது!

  கருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

  மொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.

 5. ஈழவேதன், தங்களின் அக்கறை மிகுந்த தகவலுக்கு நன்றி.

  அந்த மாநாடு சென்னையில் எந்த அரங்கில் நடந்தது எனறு சொல்வீர்களானால் நல்லது.

  சுய மறதி-சுயமதிப்பின்மை, எல்லையில்லாத் தன்நலம் இவையே கடந்த சில நூற்றாண்டுகளாக நம்மை பீடித்திருக்கும் வியாதி. இதற்கான மருத்துவ முறைதான் இன்னும் புலப்படவில்லை.

  கண்ணன்.

 6. நான், “Hindu conference: by the Hindus, for the Hindus, of the Hindus but against Hindus?” என்ற தலைப்பில், கீழ்கண்ட தளத்தில் பதிவு செய்துள்ளதை வாசிக்கவும்:

  https://ezhavendan.indiainteracts.com/2008/12/26/hindu-conference-by-the-hindus-for-the-hindus-of-the-hindus-but-against-hindus/

  மேலும் விவரங்கள் தேவையானால், தருகிறேன்.

 7. Yesterday (27-12-2008), there had been a VHS- 2008 conference at Hotel Ashoka, wherein, one of the ‘controversial samiyars’ appeared to have participated.

  He was questioned by other delegates and R.B.V.S. Manian, who inagurated the Conference, condemned the duplicity of Mutukumaraswamy Thampiran (he had not attended this conference, but was there with the “controversial one” in another “Hindu conference” held on 25-12-2008 at Thevar Mantapam, Chennai), who hobnobbing with the mylapore bishop (who has been aiding and abetting the thomas frauds) and other christians.

  It is ironical how such duplicities and christian agents are infiltrating other conferences surreptiously, that too, masquerading as ‘Hindu samiyars’!

  The above report only proves how the masqueraders have been roaming in India cheating Hindus.

  The Sufis had / have been doing such nonsense and therefore, Hindus should expose such masquerades and cheats!

  They also asdopt / adapt suffixes like “IYER”, and thus in Tamilnadu, we have ‘many christian iyers’. Not only the bishops / catholic bishops are addressed as ‘iyer’, but also folling pastors / prechers who roam with such names e.g, Mani Iyer of Annanagar. He has been fooling in spite of being a christian. His booklet was distributed by the Deivanayagam before the Kapakleswarar Temple. Though, a complaint has been lodged bty Ramagopalan, no action seems to have been taken.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *