பொதுவாக மகான்கள் செய்யும் காரியங்கள் பலவற்றிற்கும் நமக்கு முதலில் அர்த்தம் புரியாது. பைத்தியக்காரத்தனமாகத் தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் பின்னர் உண்மை புலப்படும்.
அவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்து பக்தர்களின் கர்ம வினையைத் தாம் ஏற்று, அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த மகான்களுள் மிக முக்கியமானவர் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். ‘தங்கக்கைச் சாமி’ என்றும் ‘கிறுக்குச் சாமி’ என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டவர். பலரது வாழ்க்கை உயர்விற்குக் காரணமாக அமைந்தவர். ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலையையைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்.
ஒருமுறை, தெருவில் சவ ஊர்வலம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதனைப் பின் தொடர்ந்து சேஷாத்ரி சுவாமிகள் சென்று கொண்டிருந்தார். அருகே ஓர் மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார் சுவாமிகள். பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. சாவு வீட்டில் இருந்து, அதுவும் குளிக்காமல் தீட்டுடன் திருமண வீட்டிற்குள் நுழைந்து விட்டாரே என சிலர் கோபமுற்றனர். சிலர் திட்டினர். சிலரோ, சுவாமிகள் வந்தது நிச்சயம் நல்லதற்குத் தான் என நினைத்தவாறு அமைதியாக இருந்தனர்.
மகான் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. நேரே சமையல் அறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய அண்டாவில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. வேகமாகச் சென்றவர் அப்படியே அதைச் சாய்த்துக் கீழே கொட்டிவிட்டு, வேகமாக வெளியே ஓடிச் சென்று விட்டார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி, ஆத்திரம். சிலர் திட்டிக் கொண்டே மகானைப் பிடிக்கப் பின்னால் வேகமாக ஓடினர். பயனில்லை. மகான் எங்கேயோ போய் விட்டிருந்தார்.
மகானின் இந்தச் செய்கைக்குக் காரணம் புரியாமல், கீழே கொட்டிக் கிடந்த சாம்பாரைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி போய் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. மகானை இரு கை கூப்பி வணங்கினர்.
காரணம், சாம்பாரில் ஒரு பெரிய நல்ல பாம்பு செத்துக் கிடந்தது. இதனை மகான் முன்கூட்டியே உணர்ந்து, சாம்பாரை யாரும் உண்டுவிடக் கூடாது, அதனால் ஆபத்தோ, உயிரிழப்போ நேர்ந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அண்டாவைக் கவிழ்த்தார் என்பதறிந்து அவரைத் தொழுதனர்.
மகான்களின் பெருமை சொல்லவும் அரிதே!
Thanks Ramanan! Please continue such writings.
Balakumaran’s novel “Thanga kai” is a nice biography of Sri Seshadhri Swamigal.
Let the Swami bless us all.
இந்தச் சம்பவம் மிக ஆச்சரியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மஹான்கள் வாழ்ந்த பூமியில் இன்று ஏன் இத்தனை கலவரம், வன்முறை, பிரிவினை என வருத்தமாகவும் இருக்கிறது. மஹான்கள் தான் நல்லது நடக்க வழிகாட்ட வேண்டும்! தொடருங்கள், நன்று!
அற்புதம்!!
திருவண்ணாமலை சிவ குடும்பத்தின் ஐக்கியம் என்பார் என் தந்தை. அப்பனாக அண்ணாமலையானும் (திருவண்ணாமலையே) சக்தி வடிவமாக ஷேஷாத்ரி ஸ்வாமிகளும், ஆனைமுகத்தோனாக கணபதி முனிவரும் குமரக்கடவுளாக ஸ்ரீ ரமணரும் ஆக சிவகுடும்பம் உள்ளதே திருவண்ணாமலை என்பார்.
ரமணமஹரிஷி பாதாள லிங்க அறையில் தவமிருந்தபோது அவரை உலகுக்கு அடயாளம் காட்டியவர் சேஷாத்ரி ஸ்வாமிகள்தான்.
இந்த சம்பவத்தைத் தான் தி.ஜானகிராமன் தன் பாயாசம் கவிழ்ந்தது பற்றிய சிறுகதையில் மாற்றி எழுதினாரோ என்று எனக்குத் தோன்றியது. இந்த விவரிப்புக்கும் அதற்கும் கருத்தளவில் உறவில்லை, ஆனால் இலக்கியகர்த்தாக்கள் எங்கிருந்தெல்லாம் கருக்களைப் பெறுகிறார்கள் என்பது வியப்பாக இருந்தது.
அன்புள்ள ஐயா,
மகான் சேஷாத்ரி சுவாமிகள் ஓர் பெரிய ஞானி. பகவான் ரமணர் அவரை
முற்றும் அறிந்திருந்தார். இருவரும் சில முறை சந்தித்து கொண்டார்கள். பகவான் ரமணர் சேஷாத்ரி சுவாமிகளின் சமாதி
வைபவத்திற்கு சென்று ௬ மணி நேரம் இருந்து சமாதி வைபவத்தை
முடித்து வைத்தார். பகவான் ரமணர் வேடிக்கையாக சொல்வது:
திருவண்ணாமலையில் ௩ பைத்தியங்கள் இருக்கிறார்கள். ஒன்று சேஷாத்ரி, இன்னொன்று நான் மூன்றாவது அருணாச்சலேஸ்வரர்,
ஏனென்றால் அருணாச்சலேஸ்வரர் ஒரு பாகத்தையே பெண்டாட்டிக்கு
கொடுத்து விட்டார்.
அன்புடன்,
சுப்ரமணியன். இரா.
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள் …சித்தர்கள் கூட்டத்திற்கு தலைவனே அந்த சிவன் தான் …பித்தரைப் போல காணப்படுபவர் சித்தர்.சிவபெருமானையும் நாம் ,”பித்தா பிறைசூடிப் பெருமானே ”என்று தானே போற்றி அழைக்கிறோம் ….?!
இதே போல sai baba life history ல் ஒரு சம்பவம் நடந்தது
Thanks