ஆ! அசின்

(டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தருண் விஜய் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)

asinஇந்தக் கட்டுரைக்கு ‘காட்மண்டுவில் கஜினிகள்’ என்றுதான் தலைப்பு வைக்க இருந்தேன். முன்னாள் இந்துதேசம் நேபாளத்தில், இந்துக்களின் மிகப் புனித ஆலயம் பசுபதிநாத் சிவன் கோவில் தாக்கப்பட்டு களங்கப்படுத்தப்பட்டது. இந்தியன் என்ற ஒரே காரணத்தால், தலைமை அர்ச்சகர் தாக்கப்பட்டு, வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவைச் சார்ந்திருக்கும் உணர்வு நேபாளத்தில் ஒருகாலத்தில் மதிப்பும், புகழும் தருவதாய் இருந்தது. இப்போது, இந்திய அடையாளம் உள்ளவர்கள் அனைவரும் அவமதிப்பும், அவமானமும் அடைகிறார்கள். இந்த அராஜகத்தை நடத்துவது யார் தெரியுமா? இடது, வலது, நடு எல்லாச் சார்பு இந்துக்களாலும் ராச மரியாதை பெற்ற, தெற்கு அலுவகத்தின் (பிரதம மந்திரி அலுவலகம்) டார்லிங் அன்புத்தோழர் பிரசந்திரா என்கிற திருவாளர் புஷ்ப கமல் தகால். அவர் கடந்த பத்தாண்டில் 15,000 நேபாள இந்துக்களை “வெட்டித்தீர்த்தவர்” என்று தெரிந்திருந்த டெல்லிக்காரர்கள் அவருடன் கைகுலுக்க ஆவலாக இருந்தார்கள். இதுதான் நமது லட்சணம்!

ஆக, இந்த ‘கசாப்புக்காரர்’ எல்லா புகழாரங்களையும் பெற்றுக்கொண்டார்; “நம் உறவுகள் அயோத்தியா முதல் ஜனக்பூர் வரை, சுமுகமானவை, நாகரீகமானவை” என்றெல்லாம் இனிய வசனங்களைச் சொன்னார்; (அதாவது, ராம் – அயோத்தி, சீதை – ஜனக்பூர் பிணைப்பு இந்தியா-நேபாள உறவில் இருக்கிறதாம்!). ஆகாகா!

பின்னர், காட்மண்டு அலுவலகத்தில் சிரித்துக்கொண்டார். தன் பதவி அடிப்படையில் பசுபதிநாதர் கோயிலின் தர்மகர்த்தாவாக இருப்பதால், தலைமை அர்ச்சகர் நேபாளியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று ஆணையிட்டார். அவருடைய குண்டர் படை, இளைஞர் கம்யூனிஸ்ட் லீக், கோயிலுக்குள் புகுந்து, பிரதான வாசலை உடைத்துத் திறந்து, தலைமை அர்ச்சகரை அவமதித்து, புதிதாகக் கொண்டுவந்த பிஷ்ணு தஹால் என்பவரை தலைமை அர்ச்சகராக்கியது. ஆகா! ஒரு புரட்சி தொடங்கிவிட்டது.

Pasupathinath templeபாரம்பரியமான, நேபாளத்தின் அடையாளம் என்று சொல்லப்படும் இந்தக்கோயிலில் பூசை நின்று மூன்று நாட்கள் ஆகிவிட்டன. நான்கு வாசல்களில் ஒன்றைத்தவிர எல்லாம் மூடப்பட்டுவிட்டன. நீக்கப்பட்ட தலைமை அர்ச்சகர் மகாபலேஸ்வர் பட் அவர்களுடன் நான் பேசினேன். அவர் வீட்டில் சிறைப்படுத்தப்பட்டதுபோல பயந்திருந்தார் என்று தோன்றியது. “இல்லையில்லை” என்றார் அவர். “நானே சுயமாக ராஜினாமா செய்தேன். தலைமை அர்ச்சகரின் கடும் வேலைகளைச் செய்ய என் உடல்நிலை ஒத்துவரவில்லை. எல்லாம் சரியாகிவிடும். நான் பசுபதிநாதரை நம்புகிறேன்” என்று போனை வைத்துவிட்டார். பின்னால், நான் காஞ்சி சங்கராச்சாரியரிடம் பேசினேன். அவர் விரக்தியிலும், சோகத்திலும் இருந்தார். புதிய அர்ச்சகரை நியமிக்கவேண்டுமானால் பூசைகளை நிறுத்தாமல், வழிபாட்டு முறைகளில் நன்கு தேர்ந்த ஒருவரைத்தான் நியமிக்கவேண்டும் என்றார் அவர்.

பாரதத்தின் இந்துக்கள் காஞ்சி சங்கராச்சாரியரின் மதிப்பையே காப்பாற்ற முடியாதவர்கள். அவர்கள் பக்கத்து நாட்டின் பசுபதிநாதர் கோயிலின் பெருமையைக் காப்பாற்றுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஊடகங்களும், டிவி சானல்களும் இந்த நிகழ்ச்சியை அடக்கி வாசித்தன. யோசித்துப்பாருங்கள், இதே நாத்திக கம்யூனிஸ்டுகள் (போப்பாண்டவர் வசிப்பிடமான) வாடிகனை தாக்கி உட்புகுந்தாலோ அல்லது சவுதி ஷேக் எதிர்ப்பாளர்கள் மெக்கா மசூதியில் “வெளிநாட்டவரை” அகற்ற முயற்சித்திருந்தாலோ உலகத்தின் எதிர்வினை என்னவாக இருக்கும்?

அர்ச்சகரை மாற்றக்கூடாது என்ற நேபாள சுப்ரீம்கோர்ட்டின் தடையை மீறி இது நடந்திருக்கிறது. இதை எதிர்த்து நேபாள விஷ்வ ஹிந்து மகாசங்கம் பத்திரிக்கையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்தபோது அதே இளைஞர் கம்யூனிச குண்டர்களால் தாக்கப்பட்டது. பா.ஜ.பா. தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு மட்டும்தான் நேபாள ஜனாதிபதி, பிரதம மந்திரிகளுடன் பேசி கோயிலின் ஆக்கிரமிப்பில் குறித்த இந்துக்களின் ஆழ்ந்த வருத்தத்தைச் சொல்ல முனைப்பு இருந்திருக்கிறது. ஆனால், வேறு இந்துக்கள் இல்லையா என்ன? அவர்கள் நம் பிரதம மந்திரியையோ, சூப்பர் பிரதம மந்திரியையோ கேட்க முடியாதா? அவர்கள் ஏன் மௌனமாய் இருந்தனர்? நேபாளத்தில் ஒரு பாழடைந்த மசூதி தகர்க்கபட்டிருந்தால் சும்மா இருந்திருப்பார்களா? அல்லது, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், இம்மாதிரி நிகழ்ச்சி இந்துக்கள் அல்லாதவர்களுக்கு டென்மார்க்கில் நடந்திருந்தால் சும்மா இருப்பார்களா?

ஆக, நான் கஜினிக்கு வருகிறேன். கஜினி தன் பெயரின் மறுபாதி தர்மாத்மா என்று விளங்கமுடியாத பெயர் வைத்துக்கொண்டவன். இது மொமெண்டொ ஆங்கிலப்படத்தின் அற்புதமான தழுவல். அதன் ஹீரோ சஞ்சய் (அமீர்கான் ஏற்றிருக்கும் பாத்திரம்) கஜினி தர்மாத்மா என்னும் கொடிய, அருவருப்பான வில்லனால் தன் காதலி கல்பனா (வசீகரம் பொங்கும் அசின் நடித்தது) கொல்லப்பட்டதில் ஆழ்ந்து பாதிக்கப்படுகிறான். பின், ஹீரோ குறுகியகால மறதி நோய் (anterograde amnesia) கொண்டிருந்தாலும் பழி தீர்க்கிறான். பிறர் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தன் வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு அழகான, பணக்கார இளைஞன் ஒரு தவறும் செய்யாமல் பெரிய ஊனமுறுகிறான். இந்த கொடிய உலகில் எதிலுமே விருப்பமில்லாமல் தனியாளாய், விரக்தியடைந்து விடுகிறான். பாதிக்கப்பட்டவன். தன் காதலியைக் கொன்றவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறான்.

அசின், படத்தில் கல்பனா என்கிற பாத்திரம், எல்லோரையும் நம்புகிறாள், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்கிறாள், தன் காதலனுடன் சேர ஆசைப்பட்டுக்கொண்டே கடைசியில் இறந்தும் போகிறாள். சஞ்சய்க்கும் பல கொடுமைகள் நடந்தாலும் மறதிநோய் வந்து பிழைத்துக்கொள்கிறான். தன் எதிரி யாரென்று தெரியாமல் எதிரியின் உத்தரவுகளையே பின்பற்றுகிறான். ஆனால், கடைசியில் ஒரு நண்பனால் சரியான வழி காட்டப்பட்டு, பழி வாங்கி பார்ப்போர் கைதட்டலைப் பெறுகிறான்.

கஜினியில் எனக்கு ஒரு பாடம் கிடைத்தது. இந்துக்களான நாம் குறுகியகால மறதிநோயால் பரிதாபமாய் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம் நம்பும் நம் தலைவர்கள் நமக்கு ஒன்றும் செய்வதில்லை என்பதை மறந்துவிடுகிறோம். ஆனாலும், வருடம் தவறாமல் அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறோம். பசுபதிநாதர் கோயில் தாக்கப்பட்டது சிறிய செய்தியாகிறது. சங்கராச்சாரியாரின் கைதும் அவமானமும் செக்குலர் கொண்டாட்டமாகிறது, குண்டு வைக்கப்பட்ட கோயில்கள் மறக்கப்படுகின்றன, தேசப்பற்றுள்ளவர்கள் அகதிகளாவது ஜனநாயகத்தின் தேவையாகிறது. பழிக்குப் பழி கிடையாது. நாம் நூற்றாண்டுகளாய்த் தாக்கப்பட்டு அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், நம்மைத் தாக்குவோரை நேசிக்கிறோம். குறுகியகால மறதியா? பழிக்குப் பழியா? அதெல்லாம் சினிமாவிற்குதான். நம்மைப்போன்ற நல்லவர்கள் பெரிய மனதும், சகிப்புத்தன்மையும் காட்டவேண்டும்! கல்பனா கொல்லப்பட்டாலும் சகிக்கவேண்டும்.

இம்மாதிரி நேரங்களில், அசினின் வசீகரம் நம்மை சாந்தப்படுத்தி எதிர்காலத்தின் மீது நம்பிக்கை தருகிறது. நம் வேதனைகளை தேர்தல் தினத்திற்காக விட்டுவைப்போம்.

டைம்ஸ் ஆப் இண்டியாவில் வந்த மூலக் கட்டுரை

10 Replies to “ஆ! அசின்”

  1. கட்டுரை எழுதிய திரு தருண் விஜய் அவர்களுக்கும், மொழியாக்கம் செய்த திரு ஜயராமன் அவர்களுக்கும் நன்றிகள்.

    இந்த பிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவிலின் மீது நடந்த இந்தக் கலாசாரத் தாக்குதலிற்கு பின்னணியில் உள்ளவர்கள் கிறிஸ்துவ மிஷநரிகள். இவர்களுக்கும் பிரசாந்தாவின் மாவோயிஸ்டுகளுக்கும் நேபாளத்தின் ஹிந்துத் தன்மையை அழிக்க கூட்டணி உண்டு. கடவுள் நம்பிக்கை இல்லாத மாவோயிஸ்டுகள், தாங்கள் ஆட்சியைப் பிடிக்க ஏதுவாக, கிறிஸ்துவ மிஷநரிகளின் பணபலத்தை நாடினார்கள்.

    ஆன்மீகம், ஆலயங்கள், ஆசாரியர்கள் – ஹிந்து கலாசாரத்தின், ஹிந்து பாரம்பரியத்தின், ஹிந்து தர்மத்தின் ஆணிவேர்கள் என்று சொன்னால் அது மிகையாகது. அவற்றை தாக்கினால் ஹிந்து மதத்தை அழிப்பது சுலபம் என்று தெரிந்து வைத்துள்ள மிஷநரிகள் இந்தியாவில் செய்த அதே முறையை நேபாளத்திலும் பின் பற்றுகின்றனர். மாவோயிஸ்டுகள், ஏழு கட்சி கூட்டணியுடன் சேர்ந்து நேபாள அரசாட்சியைக் கலைத்து மன்னரை ஆட்சி பீடத்திலிருந்து இறக்கி, உலகின் ஒரே “ஹிந்து நாடு” என்று பறைசாற்றப்பட்ட நேபாள தேசத்தை “மதச்சார்பற்ற குடியரசு” என்று அறிவித்தபோது, அந்தச் செய்தியை வாடிகன் பெரிதும் ஆர்பரித்து வரவேற்றது. அதற்கு காரணம், தங்கள் மத மற்ற நரித்தனங்களை சுலபமாக மேற்கொள்ளலாம் என்பது தான்.

    மாவோயிஸ்டுகள் மன்னர் ஆட்சியை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும்போது, ஐ நா சபையின் சார்பாக, மன்னர் ஆட்சியிலிருந்து குடியாட்சியாக மாறுவதை மேற்பார்வை செய்வதற்காக, அனுப்பப்பட்ட இயான் மார்டின் என்பவர், மாவோயிஸ்டுகள் சார்பாகவும் மன்னருக்கு எதிராகவும் பணி புரிந்தார். மேலும் அவர் “உலக சர்ச்சுகள் மைய்யத்திற்கு” (World Council of Churches) மிகவும் வேண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நேபாளத்திற்கு வந்த உடனேயே அங்கு மத மாற்றம் பெரிதும் வளரத் தொடங்கியது.

    நமது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (Congress headed UPA)அரசாங்கம் நேபாளத்தின் பிரச்னையை சரியாக கையாளவில்லை. நம் நாட்டு மார்க்ஸிய தலைவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து நேபாளம் ஹிந்து தன்மையை இழக்க ஏதுவாக நடந்து கொண்டது. இதற்கு முன்னர் ஆட்சி செய்த பா ஜ க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் (BJP headed NDA) உருப்படியாக ஏதும் செய்யாதது பெரிய துரதிர்ஷ்டம்.

    இந்த இரண்டு அரசாங்கமும் செய்த தவறின் பயனாக இன்று ‘ஹிந்து’ நேபாளம் ஒரு மதச்சார்பற்ற குடியரசாக மாற்றப் பட்டுள்ளது. ஒரு நாட்டை இஸ்லாம் மயமாகவோ, அல்லது கிறிஸ்துவ மயமாகவோ மாற்றுவதற்கான முதல் அடியே அதை மதச்சார்பற்ற நாடு என்று அறிவிப்பது தான். இந்தியாவிலும் இது தான் நடந்தது. சுதந்திரம் பெற்று பாரதம் இரண்டாகப் பிரிக்கப் பட்டபோது, முலீம்கள் தங்கள் தேசத்தை இஸ்லாமியக் குடியரசாக “பாகிஸ்தான்” என்று அறிவித்த போது நாம் நம் தேசத்தை ஹிந்துக் குடியரசாக “ஹிந்துஸ்தான்” என்றோ அல்லது பாரதம் என்றோ அறிவிக்காமல் விட்டது மிகவும் பெரிய தவறாகப் போய்விட்டது நிதர்சனம்.

    ஆனால் நம் நாடு பெரிய நாடு என்பதால் ஹிந்துத் தன்மையை இழப்பதற்கு கால தாமதம் ஆகின்றது. நேபாளம் மிகச்சிறிய நாடு என்பதால் எளிதில் கிறிஸ்துவ மயமாக்கப் பட்டுவிடும். அதன் தொடர்பாக கிறிஸ்துவ மிஷநரிகள் எடுத்த நடவடிக்கையே இந்த பசுபதிநாத் கோவிலின் மீதான தாக்குதல்.

    நல்ல வேளையாக மாவோயிஸ்டுகளிலேயே ஒரு சாரார் இதை எதிர்க்கத் துணிந்ததாலும், நேபாள மக்களும் பெரும்பான்மையானோர் இதைக் கண்டித்ததாலும், மேலும் முன்னாள் மன்னரும் மற்ற அரசியல் கட்சிகளும் இதை எதிர்த்ததாலும், நேபாள பிரதம மந்திரி பிரச்சாந்தா வேறு வழியின்றி இந்திய அர்ச்சகர்களை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளார்.

    இந்திய அர்ச்சகர்களை பதவியில் அமர்த்தியது அத்வைத ஆசாரியர் ஆதி சங்கரர் அவர்கள் தான். அவர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைத்த இந்த வழக்கம் பாரம்பரியமாகக் கடைபிடித்து வரப் படுகின்றது. இப்பேர்ப்பட்ட பாரம்பரியத்தை அழிக்க நினைத்த மிஷநரிகள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பது தெளிவு. அவர்களுக்கு மாவோயிஸ்டுகள் துணை புரிவர் என்பதும் இந்த சம்பவத்திலிருந்து அறியப் படுகின்றது.

    எனவே இந்திய மற்றும் நேபாள ஹிந்துக்களும், மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து ஹிந்து மக்களும், ஹிந்து கலாச்சாரத்திற்கும், ஆன்மீக பாரம்பரியத்திற்கும் எந்த மூலையில் என்ன விதமான தாக்குதல் நடந்தாலும் உடனே பொங்கி எழுந்து எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் நாம் நம் ஹிந்து தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் இழந்துவிடுவோம் என்பது திண்ணம்.

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு. (United we stand; divided we fall!)

    வாழ்க இந்துக்கள்; வளர்க ஒற்றுமை!

    வந்தேமாதரம்.

  2. //அவர் “உலக சர்ச்சுகள் மைய்யத்திற்கு” (World Council of Churches) மிகவும் வேண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.//

    The World Council of Churches (WCC) recently received favorable coverage in a section of India’s English media which hailed it as a liberal Christian organization that opposes war and proselytism. … A primer on the history of the WCC which is closely linked to the Holocaust during which Hitler annihilated six million Jews is in order.

    The Nazi system was the culmination of 2,000 years of Christian anti-Semitism. As Elie Wiesel, 1986 Nobel Laureate, aptly stated, “the Nazi system did not arise in a void but had its roots deep in a tradition that prophesied it, prepared for it, and brought it to maturity. That tradition was inseparable from the past of Christian, civilized Europe.” The New Testament alone, as Professor Norman Beck has shown, has 450 anti-Semitic verses. Jesus himself ushered in religious anti-Semitism when he infamously called the Jews “a brood of vipers” and “the children of the Devil.” In a milieu where Christianity gained political ascendancy, the church expanded this false stereotyping with an arsenal of anti-Semitic rhetoric and declared all generations of Jews sinful. This resulted in centuries of persecution, ghettoization, and Inquisition of the Jews. In the 16th century, Martin Luther of the Protestant schism whipped up Christian frenzy by urging his followers to ethnic cleanse and kill the Jews and to burn the Jewish schools and synagogues.

    The Nazis hired more than a thousand Christian chaplains to serve in the German armed forces and reprinted Christian literature. Hitler wanted to setup a unified Christian church of Germany. He declared that he had drawn his inspiration from the church in his persecution of the Jews. The Nazi songs and hate literature that targeted the Jews derived their material from Christian scriptures – often verbatim. One such was the popular German hate song, “The Devil is the father of Jews,” which comes from John 8:44.

    Source: https://www.india-forum.com/indian_politics/media-glorifies-nazi-church-c456.html

    //நேபாள பிரதம மந்திரி பிரச்சாந்தா வேறு வழியின்றி இந்திய அர்ச்சகர்களை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளார். //

    He has also made it clear that it is only a temporary arrangement.

    A short documentary on dangerous life of Hindus by the Headlines Today informs the viewers that Maoists are interfering in the traditions of the temples to take control of them. The temples and mutts (known as “kutir” in Nepal) posess a huge wealth of jewels, money, gold, architecture, paintings, lands, buildings, and sculptures.

    Do you know where is the headquarters of Maoists? When you find it you will be surprised.

    Have fun discovering it on your own.

  3. சமீபத்தில் கிறிஸ்துமஸ் அன்று உ.பி. யில் தாய் மதம் திரும்பும் விழா நடக்கப்போவதாக செய்தி வெளி இட்டு இருந்தீகள்.அது நடந்ததா?பதில் தெரிவிக்கவும்.

  4. சுவாமி விவேகானந்தர் சொன்னது போல், பாரதத்தின் சனாதன தர்மத்தினர் ரோஷம் கொள்ள வேண்டும். ஒன்று பட வேண்டும். அடுத்த ஹிந்துவிற்குப் பிரச்சினை என்றால் எனக்கென்ன என்ற தேசிய வியாதி அழிய வேண்டும்.

    வியாதி வந்தால் ‘போய்விடு வியாதியே, மரியாதையாகப் போய்விடு’ என்று கூவுவதில் பயனில்லை. அதனினும் வலிமையுள்ளதாகி, தக்க மருத்துவம் செய்வது தான் புத்திசாலித்தனம். இதுவே ஹிந்துக்களுக்கும் பொருந்தும்.

    தமிழ் ஹிந்து.காமிற்கு எனது பாராட்டுக்கள். தயவுசெய்து ஹிந்து மதம் எப்படி அறிவியலையும் சிறந்த பகுத்தறிவையும் (ஓட்டுப் பகுத்தறிவு அல்ல) கொண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டும் பல கட்டுரைகள் வெளிவர வேண்டும். இது மிக அவசியமானதொன்று இப்பொழுது.

  5. அருமையாக மொழியாக்கம் செய்துள்ளீர்கள் ஜயராமன்..மூலக் கட்டுரையை விட உணர்ச்சிகரமாக இருக்கிறது.

    உலகின் ஒரே அதிகாரபூர்வ இந்து நாடாக இருந்த நேபாளமும் வேகமாக மனித குல எதிரிகளாக மாவோயிஸ்டுகளின் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. பசுபதிநாதர் கோயில் சமீபத்திய நிகழ்வுகள் உலகெங்கும் உள்ள இந்துக்களின் சுயமரியாதையின் மீதான தாக்குதல்.

    அரசியல்வாதிகளை விடுங்கள். இங்கே சமயத் தலைவர்கள் கூட இந்த அராஜகத்தை எதிர்த்து பெரிதாக ஒன்றுமே பேசவில்லையே -என்ன கொடுமை! அடிமையும், அச்சமும், மிடிமையும், சோம்பலும் முற்றிலுமாக இந்து சமுதாயத்தை ஆட்கொண்டு விட்டிருக்கின்றன.

    பனிமலையின் பசுபதி நாதனை வேண்டி குமரிமுனையில் தவம் செய்யும் மகா சக்தி வீறுகொண்டு எழட்டும்.

    மிடிமையும் அச்சமும் மேவி எம் நெஞ்சில்
    குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
    நின்னைச் சரணடைந்தோம் – காளி
    நின்னைச் சரணடைந்தோம்

  6. அருமையான கட்டுரை.அழகான மொழிபெயர்ப்பு.இந்துக்களுக்கு சூடு
    வந்தால் சரிதான்.

  7. நம்புங்கள். ஜெயராமனின் மொழிபெயர்ப்பு எங்களை கட்டுரையையும் கவனிக்க வைத்தது.

  8. கட்டுரையும், கருத்துப் பதிவுகளும் அருமையாக உள்ளன. நம் ஒவ்வொருவரிடமும் உள்ள பற்று சாதாரண ஹிந்துக்களுக்கும் வரவேண்டும். ஒவ்வொரு ஹிந்துவும் வேடிக்கை மனிதரைப் போல் இல்லாமல் பாரதி போல்

    பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
    வாடித் துன்பம் மிக உழன்று
    பிறர் வாடப் பல செய்கை செய்து
    நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
    கொடும் கூற்றுக்கிரையாகி மாயும்
    சில வேடிக்கை மனிதரைப் போலவே
    நானும் வீழ்வெனென்று நினைத்தாயோ?

    என்று பொங்கி எழ‌வேண்டும். அத‌ற்கான‌ எழுச்சியை, ராம‌ருக்கு அணில் செய்த‌துபோல் துளியளவேனும் செய்யும் தமிழ்ஹிந்து தளத்துக்கு நன்றி.

  9. வணக்கம்,
    மத சார்பின்மை என்றால் என்ன? இந்து மதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கையும் மத சார்பற்ற நடவடிக்கைதான் என்பது இன்று நேற்றல்ல நமக்கு சுதந்திரம் கிடைத்ததுமுதல் இருக்கிறது. ” கம்யுனிஷ்டுகளுக்கு மதம் ஒரு அபின் ” . நமது நாட்டின் உண்டியல் குலுக்கும் கம்யுனிஷ்டுகளுக்கு மற்ற மதத்தினர் செய்யும் தவறுகளை கண்டிக்க தைரியம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் கொந்தளித்து விடுவார்கள். நாம் இந்துக்கள் இளிச்சவாயர்கள். அவர்களது நடவைக்கைகள் நமக்கு எதிராகத்தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *