மத்தியக் கிழக்கில் உள்ள காஸா (Gaza) என்னுமிடத்தில் ஆட்சி செய்யும் ஹமாஸ் என்றழைக்கப்படும் ஒரு பயங்கரவாதக் கும்பல் மீது இஸ்ரேல் குண்டு வீசித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இதை எதிர்த்து இஸ்ரேலின் கொலை வெறி என்றெல்லாம் பலர் எழுதி வருகின்றனர். பள்ளிக்கூடங்களின் மீதெல்லாம் இஸ்ரேல் குண்டு வீசுகிறது என்று படங்களை வெளியிடுகின்றன பல ஊடகங்களும் நாளிதழ்களும்.
ஆனால் அந்த ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் நாட்டிலுள்ள மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் மீது, முக்கியமாக குழந்தைகள் விளையாடுமிடங்கள் மேல் ராக்கெட்டுகளை வீசி தொடர்ந்து தாக்கி வருகிறது. அதனால் இஸ்ரேலில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அதைப் பற்றி நம் நாட்டில் எவரும் குறிப்பிடுவதில்லை. ஏனெனில் இங்குள்ள ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பானவை.
இந்த வீடியோ இஸ்ரேல் மீது தொடுக்கப்படும் ராக்கெட்டுகள் எங்கு விழுகின்றன என்பதைக் காண்பிக்கிறது.
அது பெய்ரூட் ஆக இருந்தபோது எப்படி இருந்தது !
இந்த ஹமாசும் பாலஸ்தீனியர்களும் எந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டனர்!
ஹமாஸுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
எல்லா உயிரையும் மதிக்க வேண்டும், எந்த உயிரும் அர்ப்பமானது அல்ல. உயிரைப் பறிக்கும் உரிமை இறைவனுக்கு மட்டுமே உண்டு.
அநியாயத்தை எதிர்ப்போம்; நியாயத்திற்கு குரல் கொடுப்போம்.
அன்புடன்,
சாதிக்.
இரு பக்கங்கள் மீதும் தவறு இருக்கிறது, ஒரு பொறுப்புள்ள நாடாக இஸ்ரேல் செயல்பட வேண்டும், மேலும் மேலும் பிரச்சனையை வளர்க்காமல் ஒரு சுமுக உறவு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்
நன்றி
ராம்குமார்
Muslims, while condemning Israel, should condemn Hamas too. It is Hamas who brought this on the civilians of Gaza strip.
ரத்த வெறி, பழி வாங்கும் படலம்,
மனித நேயம் செத்து விட்டது.
மத வெறியும், மத மூட நம்பிக்கையும் (காபிர்களை கொல்),
மிருகங்களின் கையில் ஆயுதம்,
அப்பாவி மனிதர்கள்!!!!
பாலாஜி