உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

islamic-terrorism01இப்படி ஒரு படத்தை தமிழுக்குக் கொண்டுவந்ததன் மூலம் கமல் மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படம் ஒன்றும் கலைப்படம் அல்ல, யதார்த்தப் படமும் அல்ல. வெட்ட வெளிச்சமாக தீவிரவாத எதிர்ப்பை ஒரு அதீத கற்பனையின் வாயிலாக எடுத்து வைக்கிற படம் இது. இதனால் மருந்துக்கு சில பாராட்டுக்களையும், ஏராளமாக எதிர்ப்புகளையும் தேடித்தரும் என்று தெரிந்தே கமல் இதில் இறங்கி இருக்கிறார். மத நல்லிணக்கம் என்ற பெயரில் இசுலாமிய தீவிரவாதத்தைக் கண்டும் காணாமல் இருப்பதும், மதச்சார்பற்ற தன்மைக்காக நாத்திக ஜல்லி அடிப்பதும் என்று இருந்தவரிடம் இப்படி ஒரு படம் – இந்த படத்திலும் ஜல்லிகள் உண்டு என்ற போதிலும் – எதிர்பாராதது

பாசிடிவாக சொல்வதானால், படத்தில் நடிப்பைப் பொருத்த வரை, வழக்கமான தன் ஹீரோயிசத்தை சற்று ஒதுக்கி விட்டு, மற்ற கதாபாத்திரங்களையும் பேசவிட்டு ஒரு வரவேற்கத்தக்க மாறுதலைக் காட்டியுள்ளார். படத்தில் போலீஸ் கமிஷனர் பாத்திரத்தில் மோகன்லாலைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்காது என்று சொல்லும் அளவுக்கு மோகன்லால் மிளிர்கிறார். கதையைத் தொய்வின்றி எடுத்த விதத்தில் இயக்குநர் சக்ரி பாராட்டுக்குரியவர். சலங்கை ஒலி படத்தில், பரத நாட்டிய போசை போட்டோ எடுக்கிறேன் என்று கமலை ‘பெண்டு’ நிமிர்த்துகிற சிறுவன் இவர்தான் என்பது ஒரு சுவாரசிய தகவல்.

இந்தியில் ‘A Wednesday’ படத்தைப் பார்த்த பலரும் இந்த படத்துக்குப் பாடல்கள் எதற்கு என்றுதான் கேட்டார்கள். நல்ல வேளையாக படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. முதல் படமாக இருந்தாலும் ஸ்ருதிஹாசன் பின்னணி இசையில் நன்றாகச் செய்திருக்கிறார். சில இடங்களில் பின்னணியில் மௌனத்தையும் கலந்தது சிறப்பு. மற்றபடி படத்தில் கமிஷனர் அலுவலகம், War Room அமைப்பு போன்ற செட்களில் நுணுக்கமாகத் திறமையை வெளிப்படுத்திய கலை இயக்குநரையும் பாராட்ட வேண்டும்.

சொல்லப் போனால் இந்தப் படத்துக்கு வசனமே ஹீரோ. நகைச்சுவை இழையோட, சுஜாதாவை நினைவுபடுத்தும் பாணியில் இரா.முருகன் மிளிர்ந்திருக்கிறார். ஆனாலும், அந்தக் கடைசிக் காட்சியில், கதையின் தங்க முடிச்சவிழும் சந்தர்ப்பத்தில் வரும் நீண்ட வசனங்கள் போதுமானவையாகப் படவில்லை. அதற்கேற்றவாறு பார்வையாளர்களை தயார்ப்படுத்தும் முயற்சி எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டதாகவே படுகிறது.

நான் இந்த படத்தின் இந்தி மூலத்தை ‘A Wednesday’ படத்தை பார்க்கவில்லை. முதல்முறையாக தமிழில்தான் பார்க்கிறேன். பயங்கரவாதத்தைப் பொருத்தவரை தமிழகத்தின் பார்வை வேறு. இங்கே இசுலாமிய தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வும், அண்மைக்கால அனுபவங்களும் குறைவு. விடுதலைப் புலிகளால் பல படுகொலைகள் நிகழ்ந்த போதும், அதை கடந்து வந்து விட்டோம். நம்மைச் சுற்றி, ஹைதராபாத்தில், பெங்களூரில், மும்பையில் என்று எவ்வளவோ குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறிய போதும், தமிழகத்தில் அது குறித்த சர்ச்சைகள் – விமர்சனங்கள் ஏதும் எழவில்லை. ஊடகங்கள், இசுலாமிய தீவிரவாதம் குறித்து பேசினாலே அது இசுலாமியர்களுக்கு எதிரானது என்று இங்கே கட்டமைக்கின்றன.

தொடர்ந்த அரசியல் மற்றும் ஊடக மூளைச் சலவைகளால், தமிழனைப் பொருத்தவரை, தீவிரவாதம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்வினை மட்டும்தான். தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களை சற்றும் நினைத்துப் பார்ப்பது இல்லை. விடுதலைப் புலிகளின் தீவிரவாதம் ஆகட்டும், அதனைத் தொடர்ந்த இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் சிங்கள பயங்கரவாதம் ஆகட்டும், நக்சலைட்டுகள், சந்தன வீரப்பன், அண்டைய மாநிலங்களில் குண்டு வைத்த தீவிரவாதிகள் என்று எந்த தீவிரவாத அமைப்புகள் ஆகட்டும் – எவற்றிற்கு எதிராகவும் தமிழன் அசைந்து கொடுப்பதாய் இல்லை. ஒரு காலத்தில் பிஜி தீவு மக்களுக்காக இரங்கிய பாரதியாரை நினைத்துக் கொள்கிறேன். அவரைப் போன்ற எடுத்துக்காட்டான மனிதர்கள் உருவாகாமல் போனது துரதிருஷ்டம். பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் கட்சிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் – இவ்வளவு ஏன்? – அவரவர் வீட்டுக்குள்ளேயாவது தீவிரவாதம் குறித்து அலசி இருப்போமா என்பது சந்தேகம்.

unnai-pol-oruvan01கமலின் கதாபாத்திரம், சாவதானமாக போலிஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல இடங்களில் வெடிகுண்டு வைத்துவிட்டு, வரும் வழியில் காய்கறி வாங்கிக் கொண்டு, ஒரு கட்டிமுடிக்கப் படாத கட்டிடத்துக்கு வந்து அதன் உச்சியில் லாப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சங்கதிகளுடன் அமர்ந்து கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அவர் மதியம் லஞ்ச் சாப்பிடுகிறார். சாயந்திரம் காபி குடிக்கிறார். இவ்வளவு காசுவலாக இருந்துகொண்டே இன்னொரு பக்கம் போலீசை விரட்டுகிறார். தீவிரவாதிகளை விடுதலை செய்யச் சொல்லி மிரட்டுகிறார். ஆரம்பக் காட்சிகளில் நகைச்சுவை இழையோடும் வசனங்களில் கருணாநிதியையும் சற்றே வாரி இருக்கிறார்கள். கருணாநிதியும் ஒரு கதாபாத்திரமாக, போனில் குரல் மட்டும் ஒலிக்கிறது, அந்த பரபரப்பான சூழ்நிலையிலும் ‘எதிர்கட்சிக்காரன் அறிக்கை விடப் போகிறான்.. தேர்தலில் பாதிப்பு வரக்கூடாது’ என்று கருணாநிதி பேசுவதாக அமைந்த வசனங்கள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன.

இசுலாமிய தீவிரவாதத்தை அடிப்படையில் இந்தப் படம் எடுத்து வைத்தாலும், தனது செக்யூலர் பிம்பத்தை விடக்கூடாது என்ற ஆசையில் புகுத்தப்பட்ட சில வசனங்கள் அரைகுறையாக நிற்கின்றன. அதுவே படத்தின் பலவீனமும் கூட. அதுவும் அந்த கடைசி நிமிடத்தில் வரும் நீண்ட வசனத்தில், தான் இசுலாமியர்களுக்கு எதிரானவன் இல்லை என்றும் நிறுவ வேண்டுமே என்ற தவிப்பு நன்றாக தெரிகிறது. இன்றைய பொதுவாழ்க்கையில் ஏற்படும் நிர்பந்தங்களில் அதுவும் ஒன்று என்று விடவேண்டியதுதான்.

தீவிரவாதத்துக்கு என்ன எதிர்வினை? அரசின் பதில் என்ன? ஒவ்வொரு தீவிரவாத செயலின் போதும், பிரதமரும் முதல்வர்களும், ‘நிச்சயம் சட்டம் தன் கடமையை செய்யும்… இந்தியா இதனால் விழுந்துவிடாது. தீவிரவாதிகாளால் பொதுவாழ்க்கை பாதிக்கப் படவில்லை’ என்று அறிக்கை விட்டுவிட்டு போய்விடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். டெல்லி பாராளுமன்றத்தில் தன் உயிரைத் தந்து, அரசியல்வாதிகளை காப்பாற்றிய அதிகாரிகளின் உயிருக்கு மரியாதை இல்லை. தீவிரவாதிகள் என்று தீர்மானமாக தெரிந்தும் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டு, ஏசி ரூமில் ஆயுர்வேத மசாஜ் பெற்றுக் கொண்டு சுகமாக இருக்கிறார்கள். கசாப்புக் கடைக்கு வந்த ஆட்டு மந்தைகளாக மக்கள் செத்துப் போவதுதான் மிச்சம்.

அப்படியே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து தீவிரவாதிகளை பிடித்தாலும் மிரட்டல்களுக்கு பணிந்து அவர்களை விடுவித்துவிடுவதும், தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பதும், கொடிய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் முன்னாள் முதல்வரின் பிறந்தநாளுக்காக விடுவிக்கப் படுவதும் நடைமுறைதான். இதையே படத்திலும் போலிஸ் கமிஷனராக மோகன்லால் கதாபாத்திரம் பேசுகிறது. சாதாரண மனிதர்கள் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்று உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், தொடர்ந்த தீவிரவாத செயல்களால், அரசாங்கம் எதுவும் தீர்மானமாக செய்யாது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டி இருக்கிறது.

அப்படி முடிவுக்கு வந்த ஒருவர், தீவிரவாதத்தையே பயன்படுத்தி தீவிரவாதிகளை விடுதலை செய்யச் சொல்லி, தன் பாணியில் தண்டனை வழங்குவதே இப்படத்தின் சாராம்சம். தீவிரவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அவர்களுக்குள் உள்ள நுண்ணரசியல் என்று நகைச்சுவை கலந்து சொல்லிக் கொண்டுபோனாலும், அடிப்படையில் ஒரு சாதாரண மனிதன் கேள்வி கேட்க ஆரம்பித்தால், செயலில் இறங்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற ஒரு கற்பனையை படம் முன்வைக்கிறது. இது சாதாரண மனிதர்களால் நிஜத்தில் நிச்சயம் நடக்கக் கூடியது இல்லை என்றாலும் கற்பனை தானே நமக்கு ஒரு வடிகால்.

நாமிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற படம் வருவது பெரிதாக சிந்தனை ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்றாலும் படம் பார்க்கிற ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு உறுத்தலை ஏற்படுத்தும் என்றே எண்ணுகிறேன்.

தமிழ்ஹிந்துவில் வெளியான ‘A Wednesdasy’ ஹிந்தித் திரைப்படம் பற்றிய விஸ்வாமித்திராவின் விமர்சனம் இங்கே.

54 Replies to “உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்”

 1. Pingback: tamil10.com
 2. //விடுதலைப் புலிகளால் பல படுகொலைகள் நிகழ்ந்த போதும், அதை கடந்து வந்து விட்டோம். //

  இது என்ன? விடுதலைப்புலிகளால் தமிழகத்தில் இறந்தவர் எத்தனை (கட்டுரை தமிழக மக்களின் மனநிலையைப் பற்றி பேசுகிறது), ஜிஹாதிகளால் தமிழகத்தில் இறந்தவர்கள் எத்தனை பேர்?

  தமிழகத்தில் பல இடங்களில் ஜிஹாதிகள் குண்டு வைத்துள்ளனர். கோயம்புத்தூரில் செத்தவர்கள், கைகால் இழந்தவர்கள் எண்ணிக்கை நூறைத்தாண்டும். அது தவிர எத்தனை ரயில்களில் டிசம்பர் 6 அன்று குண்டு வைத்துள்ளனர், ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குண்டு, இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு, நாகூரில் தங்கம் முத்து கிருஷ்ணன் பார்சல் வெடிகுண்டால் கொல்லப்பட்டது என்று இவர்களின் குண்டு வெடிப்பு லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. மேலும், தமிழகம் முழுவதும் எத்தனைபேரை கொடூரமாகக் கொன்றுள்ளனர் என்று யோசித்துப் பாருங்கள். இதே தமிழ் இந்துவில் பேராசிரியர் பரமசிவம் பற்றிய கட்டுரை வந்துள்ளது. மதுரை இராஜகோபாலன், பரமசிவம், மதுரை ஜெயிலர் கொலை, கோவை சிவா, செல்வராஜ், தென்காசி பாண்டியன், அவரது சகோதரர்கள் என்று லிஸ்டை எழுத ஆரம்பித்தால் நீண்டு கொண்டே போகும்.

  தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு டஜன் ஜிஹாதி அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் இமாம் அலி மற்றும் அவனது கும்பல் பாகிஸ்தானிற்கு சென்று பயிற்சி பெற்று வந்த கும்பல். இந்த ஜிஹாதி கும்பலில் பலர் சிறையிலிருந்து அரசியல் வாதிகளின் முயற்சியினால் வெளியே வந்து சுதந்திரமாக உலவிக்கொண்டு இருக்கின்றனர்.

  இந்த நிலையில் புலிகளைப் போய் இவர்களுடன் ஒப்பிடுகிறீர்களே? பாலில் உப்பைக் கொட்டுவது போல, ஒரு நல்ல கட்டுரையில் இந்த வரி தேவைதானா?

 3. I have not seen the Tamil Film; but I am told the vigilante wants to kill one ‘hindu’ extremist also !

  “HINDU” extremist? Has there been one in TamilNadu?

  I think the Actor has thought this up to appear ‘even handed’ to Islamic Jihadists !

 4. //I have not seen the Tamil Film; but I am told the vigilante wants to kill one ‘hindu’ extremist also ! “HINDU” extremist? Has there been one in TamilNadu?//

  ஓட்டு வங்கிக்காக பயங்கரவாதிகளுக்கு பிரியாணி சாப்பாடும் மசாஜும் சப்ளை செய்யத் தவமிருக்கும் கருணாநிதி போன்ற அரசியல் புரோக்கர் போல அவன் தன் ஸ்விஸ் வங்கி கணக்குக்காக பயங்கரவாசிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் ஆயுத புரோக்கர் அவன்.

 5. it is all domesional injurious waste hazard to utter anything on and about kamalhasan, who desecrated Sri Rangam temple with his MAKAYIKA and DK hooligans.

 6. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பத்து ஆயுள் தண்டனை தீவிரவாதிகள் விடுதலை , இது போன்ற ஆட்சியாளர்கள் இருக்கும் வரை எத்தனை பாதுகாப்பை பலப்படுத்தினாலும் தமிழகத்தை தீவிரவாத செயல்களில் இருந்து காப்பாற்ற முடியாது

 7. Thanks Aravindan.

  I am grateful to you to learn that it was not a Hindu extremist ( ! ) who was the target of the vigilante, but a man consumed by avarice.

  People who supply arms and ammunition to extremists for enriching their Swiss Bank Funds, do deserve death.

  I have not seen the Tamil film yet.

 8. இது நடுநிலையாக எழுதப்பட்ட விமர்சனமா ?
  இந்துவோ, முஸ்லிமோ யாராக இருந்தாலும் தீவிரவாதம் செய்பவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்கள் என்ற கருதில் கமல் படம் எடுதிருபதாக சொல்லிகொன்டலும் 3:1 என்ற விகிதாசாரத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காண்பித்து இருப்பதும் அதற்கு வக்களது வாங்கி உள்ள உங்களின் விமர்சனமும் மத ஒற்றுமையை குலைக்கும் தன்மையே.

 9. உள்ளதைத்தானே காட்டுகிறார்கள்.
  வெட்னஸ்டே படத்தில் இப்படி ஊருகாயாகக் கூட இந்து தீவிரவாதி இல்லாமல் இருந்தது. கமல் இப்படி ஒப்புக்குச் சப்பாணியாக ஒரு இந்து தீவிரவாதியைக் காட்டியிருக்கிறார் என்று பெருமகிழ்ச்சியிம் பேரானந்தமும் அடையும் கூட்டம் இருக்கும் வரை “மதச்சார்பின்மையும்” மதக்கலவரமும் இருக்கத்தான் செய்யும்.

 10. நூர்,

  //3:1 என்ற விகிதாசாரத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காண்பித்து இருப்பதும் அதற்கு வக்களது வாங்கி உள்ள உங்களின் விமர்சனமும் மத ஒற்றுமையை குலைக்கும் தன்மையே.//

  உங்களது நேர்மையைப் பாராட்டுகிறேன். நீங்கள் சொல்லுவது போல, அந்தப் படத்தில் அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக காட்டி இருக்க வேண்டும். 🙂

  அதே போல தீவிரவாதத்தை எதிர்க்கும் இந்த விமரிசனத்தையும் எதிர்க்க வேண்டும். இப்படி எல்லாம் விமரிசனம் எழுதினால், நீங்கள் குண்டு வையுங்கள் நாங்கள் சாகிறோம் என்று ஒற்றுமையாக “தீவிரவாதி – தெருவில் சாகிறவன்” விளையாட்டு விளையாடும் மத ஒற்றுமை குலைந்துவிடும்.

  இந்திய செக்யுலரிசத் தத்துவத்தின்படி தீவிரவாதத்தை நிதானமான, தெளிவான நடையில் விமரிசிக்கும் இந்த திரை விமரிசனத்தை நானும் எதிர்க்கிறேன்.

  இப்படி ஒரு படத்தை எடுத்ததற்காக படத்தை எடுத்தவர் வீட்டில் குண்டு போட்டு விடாதவரை மகிழ்ச்சி.

 11. //அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பத்து ஆயுள் தண்டனை தீவிரவாதிகள் விடுதலை , //

  என்ன கொடுமை இது?

  இனி தினமும் சிக்கன் மட்டன் பிரியாணியும், ஆயுர்வேத மசாஜும் கிடைக்காதா?

 12. /// 3:1 என்ற விகிதாசாரத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காண்பித்து இருப்பதும்/// இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களைக் கணக்குப் போடுங்கள். உங்கள் சதவீத கணக்கும் சரியாக வரும். பிறரைக் குறை சொல்ல மாட்டீர்கள்.

 13. விடுதலைபுலிகள் எதற்காக இந்த கட்டுரையில் வருகிறார்கள் என்பது புரியவில்லை

 14. கமல் காட்டியது ஹிந்து தீவிரவாதியா இல்லை சைவ தீவிரவாதியா ?
  ஏன் எனில் இவர் ஒரு எதோ சைவர்கள் எல்லாம் கயவர்கள் போல் ஒரு மையை உண்டாக்க நினைக்கிறார் Mr Kamal. eg., அன்பே சிவம், தசாவதாரம்

 15. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

  கமலஹாசன் ஒரு காபிர். அவரது கரிசனத்தையோ அல்லது உங்களது கரிசனத்தையோ முஸ்லீம்களான நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.

  (முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.

  நீங்களெல்லாம் இப்படித்தான் அல்லாஹ்வின் கொள்கைகளை கேலி செய்வீர்கள் என்பதை அல்குரானிலேயே அறிவித்துள்ளான்.

  குண்டு வைப்பது குண்டு வைப்பது என்று இங்கே பலர் பேசி வருகிறார்கள். என்னவோ அது பெரிய தப்பு என்பது மாதிரி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு சண்டை வந்தால் இந்தியா குண்டுதான் வைக்கும். அது தப்பா?

  இஸ்லாமியர்கள் ஒரு தேசம். அவர்கள் எந்த தேசத்தின் உள்ளேயும் வரமாட்டார்கள். இறுதித்தீர்ப்புநாள் வரைக்கும் முஸ்லீம்களின் கடமை, அல்லாஹ்வின் கட்டளைகளை காபிர்கள் ஒத்துக்கொள்ளும்வரை ஜிஹாத் புரிவதே.

  ஜிஹாத் என்பது எதிர்வினை அல்ல. ஜிஹாத் என்பது முஸ்லீம்களை யாரோ அடிப்பதால் திருப்பி அடிப்பதல்ல. ஜிஹாத் என்பது ஏக இறைவனின் கட்டளை.

  ”எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வுரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். (4:74-76)

  இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12)

  ‘ ‘ நபியே போர் புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக. உங்களில் நிலைகுலையாத இருபதுபேர் இருப்பின் [இறைமறுப்பாளர்களில்] இருநூறுபேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் [8:65]

  டைரக்ட் ஆக்‌ஷன் டே என்று காய்தே ஆஸஸம் முகம்மதலி ஜின்னா அறிவித்து காபிர்களை படுகொலை செய்தது அதற்கு முன்னால் காபிர்கள் முஸ்லீம்களை கொன்றதால் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு தனி தேசம். அது தார்-உல் இஸ்லாம். அதனை காப்பாற்றவும், காபிர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஒப்புக்கொள்ளும் வரை ஜிகாத் புரிவதும் ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமையும் கூட.

  ஜிகாதுக்கு புறப்படாதவர்கள் முஸ்லீம்களே அல்ல

  இனி அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவர்களுக்காக ஜானஸா [மரணத்தொழுகை] தொழாதீர் .மேலும் அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர் [9:84]

  அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்

 16. ரஹ்மத்துல்லா,

  ஆக, மத நல்லிணக்கம் என்பதெல்லாம் வெறும் பசப்பல் என்றும், முஸ்லிம்கள் எப்போதும் தீவிரவாதிகள் என்றும் இந்துத்துவா வெறியர்கள் சொல்வதை உண்மை என்று நிரூபித்திருக்கிறீர்கள். வருண் காந்தி கேட்டால் சந்தோஷப்படுவார்.

  ஒரு காலத்தில் உங்கள் முன்னோர்கள் காபிர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இன்று நீங்கள் ஜிகாத் பண்ணுகிறீர்கள். பரிதாபகரமான நிலை இது.

  உங்கள் அல்லாவே போதுமானவன் என்று சொன்னாலும், அல்லாவின் காபாவைக் காப்பாற்ற சவுதியில் காபிர் அமெரிக்கப்படைகள்தான் தேவையாய் இருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பில் சவுதி தினமும் இருந்துகொண்டிருப்பது ஏன்?

  ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக மும்மீன்கள் (இந்த மீன்களை நான் சாப்பிட்டதில்லை!) இருக்கும் தேசமெல்லாம் பிச்சைக்கார நாடுகள் பட்டியலிலும், மனித வளத்தில் மிகவும் பின்தங்கியிருப்பதையும் பார்த்தால் உங்கள் அல்லா என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றே புரியவில்லை.

  யார் மனத்தில் உங்கள் ஏக இறைவன் பயத்தை விளைத்துவிட்டார் என்று தெரியவில்லை. எல்லா ஜிகாதிகளும் இன்று முஸ்லிம் சர்க்கார்களால் கூட விரட்டப்பட்டு சாக்கடை எலிகள் போல ஒளிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுவா உங்கள் அல்லாவின் முக்கிய வழி???

  காபிர்கள் தேவையில்லை. ஆனால், காபிர்களின் நாடுகளுக்கு எப்படியாவது போய் விடவேண்டும் என்று பல லட்சம் முஸ்லிம்கள் இன்று துடிப்பது ஏன்?

 17. சொலமண்டி

  //காபிர்கள் தேவையில்லை. ஆனால், காபிர்களின் நாடுகளுக்கு எப்படியாவது போய் விடவேண்டும் என்று பல லட்சம் முஸ்லிம்கள் இன்று துடிப்பது ஏன்?//

  அல்லாஹ்வின் திட்டங்கள்தான் நிறைவேறுகின்றன என்பதை முஸ்லீம்கள் அறிவார்கள்.

  உலகம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.
  முழு உலகமும் அல்லாஹ்வின் கட்டளைகளை ஒப்புக்கொள்ளும் நாள் விரைவில் இல்லை.

  அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்

 18. சகோதரர் ரஹமத்துல்லா அவர்களே,

  முதிர்ச்சி அடைந்த இந்து பிற மார்க்கங்களை வெறுப்பதில்லை.
  எல்லா மார்க்கத்தையும் ஆக்க பூர்வமான கண்ணோட்டத்திலே அணுகுவான்.

  ஆனால் கட்டாயப் படுத்தி, பலவந்தமாக ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டே யாகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தால், அதை இந்து மட்டும் அல்ல, தைரியம் உள்ள எவனும் எதிர்ப்பான்.

  நான் இஸ்லாத்திலே பல நல்ல விசயங்களை அறிந்து கொண்டு உள்ளேன். கடந்த ரமலான் மாதத்தில் பல நாட்கள் நோன்பும் இருந்தேன்.

  இங்கெ சமரசக் கருத்துக்கள், பகுத்தறிவின் அடிப்படையிலான சிந்தனைகள் எழுதப் பட்டு வருகின்றன.

  நீங்களும் அது போல நல்ல சிந்தனைகளை எழுதுவது நல்லது.

  நிரூபிக்கப் படாத ஒரு விடயத்தை நாம் நிரூபிக்கப் பட்டது போல அழுத்திக் கூறுவது தவறு.

  பாரடேயின் மின் இயக்க விதிகளை என்னால் உலகில் எந்த இடத்திலும், எத்தனை முறை வேண்டுமானாலும் நிரூபித்துக் காட்ட முடியும். நான் மட்டுமல்ல இலட்சக் கணக்கானவர் அதை நிரூபித்துக் காட்ட தயாராக உள்ளனர்.

  ஆனால் உலகில் யாராலாவது, உலகின் எந்த இடத்திலாவது யாருக்காவது கடவுள் என்று ஒரு சக்தி இருப்பதை நிரூபித்துக் காட்ட- தெளிவாக நிரூபித்துக் காட்ட முடியுமா? கடல் நீரை இரண்டாகப் பலனது , எந்த விதத் தடுப்பும் இல்லாமல் நிறுத்திக் காட்ட முடியுமா?

  நான் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரவில்லை. உங்கள் நம்பிக்கையை கிண்டல் செய்வதாக எண்ணாதீர்கள். நீங்கள் “இல்லை ஒரு கடவுள் அல்லாவினைத் தவிர” என்கிறீர்கள். கிருஸ்துவர்களோ “கர்த்தர் மட்டுமே ஜீவனுள்ள கடவுள்” என்கிறார்கள். யூதர்களோ “ஜெஹோவா தான் எல்லோருக்கும் மேலான கடவுள்” என்று சொல்லுகிறீர்கள்.

  கடவுள் என்று ஒருவர் இருப்பதே இன்னும் நிரூபிக்கப் படவில்லை. எல்லாமே நம்பிக்கை தான். எனவே நம்பிக்கையை வெளிப்படுத்தலாமே தவிர, அடுத்தவரிடம் பலவந்தமாக திணிக்கக் கூடாது.

  நிரூபிக்கப் படாத விஷயத்தை கட்டாயப் படுத்தி ஏற்றுக் கொள்ளச் சொல்வது காட்டு மிராண்டித் தனம் ஆகும்.

  இப்படி எல்லோரும் நான் கூறுவதுதான் சரி, என் கடவுள் தான் பெரியவர் என்று கட்டாயப் படுத்த பலத்தை உபயோகப் படுத்தினால், இறுதியில் உலகில் கல்லறைகளே மிஞ்சும்.

  முதலில் நாம் மனிதனாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். மார்க்கம் எல்லாம் அப்புறம்தான்- இந்த விதி உங்களுக்கு மட்டும் அல்ல, எனக்கும் இந்த உலகத்தில் எல்லோருக்கும் பொருந்தும்.

  உங்களுடன் சேர்ந்து மசூதியில் அல்லாவினைத் தொழ நான் தயார் – இதை நான் சொல்லுவது நல்லெண்ணத்தின் அடிப்படையில், நட்பின் அடிப்படையில், சமரசக் கருத்துக்களை நிலை நாட்ட- காட்டு மிராண்டிக் கருத்துக்களுக்கு பயந்து அல்ல -அதே நேரம் நான் இயேசு கிருஸ்துவையும், மேரி மாதாவுயும் வாங்குவேன்,

  சிவபெருமானையும், இராமரையும், முருகனையும் வணங்குவேன், அந்த சுதந்திரம் எனக்கு உண்டு.

  “நீ இதைதான் வணங்க வேண்டும், இதை எல்லாம் வணங்கக் கூடாது” என்று தனி மனிதரின் சுதந்திரத்தில் தலையிட்டு அவரை பலவந்தப் படுத்துவது, அநாகரீகமான காட்டு மிராண்டித் தனம்.

  இந்த தளத்திற்கு உங்கள் பின்னூட்டங்களை இட வந்திருக்கிறீர்கள், மாமனன்ன்ர் அக்பரைப் போல, மத சகிப்புத் தன்மையும், மத நல்லிணக்க நல்லெண்ணமும் பெற்று சரியான இந்திய சகிப்புத் தன்மை உடையவாராக மாறி நாகரீக கருத்துக்களை அன்புக் கருத்துக்களை எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

  எனவே அடுத்த முறை எழுத வரும்போது, புன் சிரிப்புடன் எல்லோரும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் அன்புக் கருத்துக்களை எழுதுங்கள்.

  பி அமான் அல்லா!

 19. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் எத்தனைக் காட்டு மிராண்டிக் கருத்துக்கள்!

  //இறுதித்தீர்ப்புநாள் வரைக்கும் முஸ்லீம்களின் கடமை, அல்லாஹ்வின் கட்டளைகளை காபிர்கள் ஒத்துக்கொள்ளும்வரை ஜிஹாத் புரிவதே//

  //இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12) //

  //நபியே போர் புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக. உங்களில் நிலைகுலையாத இருபதுபேர் இருப்பின் [இறைமறுப்பாளர்களில்] இருநூறுபேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் [8:65]//

  அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவே , உன் பெயரால் எத்தனை அநாகரீக , வன்முறைக் கருத்துக்கள், உயிர் வாங்கும் இரத்த வெறிக் கருத்துக்கள்?

  அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய உன்னைப் பற்றி, எல்லோரும் அருவருப்பாக எண்ணும்படிக்கு கொலை வெறிக் கருத்துக்களை பரப்பும் இவர்களை நீ தண்டிக்க வேண்டாம்,

  இவர்களின் மனதில் நல்ல எண்ணங்களை நீ உருவாக்கு!

 20. ரஹ்மத்துல்லாஹ்…

  இவன் ஒரு காட்டுமிராண்டியே தவிர வேரில்லை….
  தீவிரவாதம் செய்பவன் முஸ்லிமே அல்ல….
  தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்……

  (பத்ரு போர்) களத்தில் நிற்க்கும்போது,நபியவர்களின் படை எண்ணிக்கை,குறைவாக இருந்ததை எண்ணி,படையினர், பயந்தபொது,அவர்களை தைரியப்படுத்த இறக்கப்பட்ட வசனங்கள் அவை….

  அக்காலத்தில் முஸ்லிம்களுடன் எதிரிகள் நடத்திய போர்கள் அனைத்தும்,நாட்டை கைப்பற்றவோ,அல்லது,செல்வத்திற்க்காகவோ,அல்ல…
  இஸ்லாம் என்ற ஒரு மார்ககத்திற்கு எதிராகவே….இதை உறுதியாக சொல்லமுடியும்…ஏனென்றால்…நபியவர்கள் காலத்தில்,அவர்களே…ஹிஜ்ரத் செய்து மதினாவில் தஞ்சம் புகுந்தார்கள்….

  //‘ ‘ நபியே போர் புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக. உங்களில் நிலைகுலையாத இருபதுபேர் இருப்பின் [இறைமறுப்பாளர்களில்] இருநூறுபேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் [8:65]//

  மேற்குறிப்பிட்ட வசனம்,சூரா அல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றி பொருள்கள்).இது போர்காலங்களில் இறைவனின் வழிகாட்டுதல் குறித்த வசன்ங்களை உள்ளடக்கியது…
  நபி அவர்கள் செய்த போர்கள் அனைத்திலும்,முஸ்லிம்களின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும்…

  இறைஅருளால் அந்த போர்களில் வெற்றி கண்டு,அன்று வரை இல்லாத ஒரு புது சமூக கட்டமைப்பை உருவாக்க முனையும் போது,கிளர்ச்சியில் ஈடுபடும் சில கூட்டத்தினரை எச்சரிக்க படைகள் அனுப்பபட்டன….
  அவர்கள் தன்னுடய நிலையிலேயே(குழப்பம் செய்வது) நீடிக்க முயலும் போது,அவர்கள் மீது போர் தொடுப்பது கட்டாயம் ஆகிரது…
  அதிலும் பல கட்டுப்பாடுகள் அவர்களுக்கு உண்டு… பெண்கள்,குழந்தைகள்,முதியவர்களை கொல்லக் கூடாது,வீடுகளை இடிக்க கூடாது…விவசாய நிலங்களை அழிக்க கூடாது…என பல..

  இது போன்ற ஒரு புதிய சமூகத்தை நீங்கள் அமைக்க முனைந்தால்,வரும் பிரச்சனைகளை தீர்க்க (திணிக்கப்பட்ட) சில போர்கள் நீங்கள் செய்வது அவசியம் என உணர்வீரகள்

  இது எல்லாவற்றிகும் மேலாக…இறைவன் கூருகிறான்..
  எவன் ஒருவன் அநியாயமாக ஒருவனை கொலை செய்கிரானோ, அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம்…இன்னும் எவன் ஒருவன் ஒருவனை காரணமின்றி அநியாயமாக கொல்கிறானோ,அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம் என்று…
  கொலை இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்று….

  ஜிகாத்…(முஸ்லிம்களின் உயிர்,உடைமை,மற்றும் அவர்களின் மார்க்கத்திற்கு பங்கம் வரும்போது,அவர்களை எதிர்த்து போரிடுவது…)
  இங்கு,இஸ்லாம் போர் புரிய சொல்கிறது….போர் என்பது,என்னவென்று அனைவரும் அறிவர்…இருசாராரிலும்,உயிரை துச்சமாக எண்ணி சண்டையிட பொதுவிடத்தில் கூடுவார்கள்…இருவரும் சண்டையிட்டுக் கொள்வார்கள்…இரு தரப்பிலும் மடிவார்கள்…இதுதானே போர்…அதில் படையினர் தவிர வெரெவரும் (மக்கள்)இருக்க மாட்டார்கள்.

  இதற்குதான் அனுமதி உண்டு.இதுவல்லாத அப்பாவி மக்களையும்,பெண்களையும்,குழந்தைகளையும் கொல்லும் இந்த தீவிரவாத்தை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது….இதற்கு அவர்கள் வல்ல இறைவனிடம்,வேதனை அடைந்தே தீருவார்கள்…

  ஜிகாத்…(முஸ்லிம்களின் உயிர்,உடைமை,மற்றும் அவர்களின் மார்க்கத்திற்கு பங்கம் வரும்போது,அவர்களை எதிர்த்து போரிடுவது…)ம்ம் இந்த ஜிகாத்,முஸ்லிம் மட்டுமல்ல,எந்த ஒரு மனிதனும் செய்யக்கூடியது தானே..அந்த நிலை ஒருவனுக்கு வரும்போது,அவன் சண்டையிடுவது தவறா?
  அது ஹிந்துவானாலும்,கிரிஸ்தவன் ஆனாலும் யாராக இருந்தாலும் அவன் செய்தால் நியாயம் தானெ…
  அதன் பேரில் தற்போது நடப்பது தீவிரவாதம்…. (பாகிஸ்தான்,தாலிபான்,பொன்றவை)

  ஹிந்து மததிலும் அநீதியை எதித்து போரிட சொல்கிறது…அதேதான் இங்கும்…
  இதை சுயனலவாதிகள்,தீவிரவாதிகள்(நரக வேதனைக்குரியவர்கள்) எடுத்துக்கொண்டு,இஸ்லாத்தை தவறாக முன்னிருத்தி,செய்கிரார்கள்…

  இதற்கு மார்க்கம் பொருப்பாகாது……
  நன்றி..

  நட்புடன்
  ரஜின்
  https://sunmarkam.blogspot.com/

  எடிட்டர் அவர்கள்,எனது தரப்பு கருத்தை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…..

 21. //உலகம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.
  முழு உலகமும் அல்லாஹ்வின் கட்டளைகளை ஒப்புக்கொள்ளும் நாள் விரைவில் இல்லை//

  உலகம் முழுவதும் அல்லாவுக்கே என்றால் அவர் உலகத்தை படைக்கும் போதே அனைவரையும் முஸ்லீம்களாகவே படைத்து இருக்கலாமே, பிறகு ஏன் காபிர்களையும் படைத்தானாம், நீங்கள் குண்டு வைத்து விளையாடவா?

 22. அல்லாஹ்வின் வழியை முஸ்லீம்களுக்கே தெளிவுபடுத்த வேண்டிய தேவையை சகோதரர் ரஜினின் மறுமொழி சுட்டிக்காட்டுகிறது.

  //
  இவன் ஒரு காட்டுமிராண்டியே தவிர வேரில்லை….
  தீவிரவாதம் செய்பவன் முஸ்லிமே அல்ல….
  தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்
  //

  தீவிரவாதம் செய்பவன் முஸ்லீம் அல்லதான். ஆனால், முஸ்லீம்கள் செய்வது தீவிரவாதம் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

  //(பத்ரு போர்) களத்தில் நிற்க்கும்போது,நபியவர்களின் படை எண்ணிக்கை,குறைவாக இருந்ததை எண்ணி,படையினர், பயந்தபொது,அவர்களை தைரியப்படுத்த இறக்கப்பட்ட வசனங்கள் அவை….
  //

  பரிதாபத்துக்குரிய ரஜினின் பதிலை பார்த்து பரிதாபப்படாமல் என்ன செய்வது? அது எக்காலமும் முஸ்லீம்களுக்கு தைரியமூட்ட கொடுக்கப்பட்டது. பத்ரு போருக்கு மட்டுமான வசனம் என்றால் அது ஏன் நிரந்தரமான அல்குரானில் இடம் பெற்றுள்ளது? வெற்றி என்றும் முஸ்லீம்களின் பக்கமே என்று அல்லாஹ் இங்கே தெளிவாக்குகிறான். முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அல்லாஹ்வே முஸ்லீம்களின் அருகே நின்று போர் புரிய மலக்குகளை அனுப்புகிறான்.

  //
  அக்காலத்தில் முஸ்லிம்களுடன் எதிரிகள் நடத்திய போர்கள் அனைத்தும்,நாட்டை கைப்பற்றவோ,அல்லது,செல்வத்திற்க்காகவோ,அல்ல…
  //
  முஸ்லீம்களின் எதிரிகள் நாட்டை கைப்பற்றவோ அல்லது செல்வதுக்காகவோ போர் புரியவில்லை. அவர்கள் சாத்தானின் பக்கத்திலிருந்து போர் புரிகிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் ஜிஹாதுக்காக போர் புரிகிறார்கள்.

  ”வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.” 9:29

  எதுவரையிலும் ஜிஹாத் என்பதற்கு மேற்கண்ட இறைவசனத்தை விட வேறென்ன ஆதாரம் வேண்டும் சகோதரர் ரஜின் அவர்களே?

  //
  இறைஅருளால் அந்த போர்களில் வெற்றி கண்டு,அன்று வரை இல்லாத ஒரு புது சமூக கட்டமைப்பை உருவாக்க முனையும் போது,கிளர்ச்சியில் ஈடுபடும் சில கூட்டத்தினரை எச்சரிக்க படைகள் அனுப்பபட்டன….
  அவர்கள் தன்னுடய நிலையிலேயே(குழப்பம் செய்வது) நீடிக்க முயலும் போது,அவர்கள் மீது போர் தொடுப்பது கட்டாயம் ஆகிரது//

  யார் இலலை என்று சொன்னது சகோதரர் ரஜின் அவர்களே? இன்றும் அதே நிலைதானே நீடிக்கிறது? இன்று உலகத்தில் ஒரு புது கட்டமைப்பை உருவாக்க அல்லாஹ்வின் வழியில் நிற்கும் முஸ்லீம்கள் தொடர்ந்து முயற்சி செய்துதான் வருகின்றனர். அது உருவாகிவிட்டதா? உலகெங்கும் இஸ்லாமின் ஆட்சியில் வரும் வரைக்கும் என்ன செய்யவேண்டும் எனப்தைத்தான் 9.29 கூறுகிறது.

  //அதிலும் பல கட்டுப்பாடுகள் அவர்களுக்கு உண்டு… பெண்கள்,குழந்தைகள்,முதியவர்களை கொல்லக் கூடாது,வீடுகளை இடிக்க கூடாது…விவசாய நிலங்களை அழிக்க கூடாது…என பல..//

  இல்லை சகோதரர் ரஜின் அவர்களே..
  அவர்களும் காபிர்களைச் சார்ந்தவர்களே என்று நபி(ஸல்) அறிவுறுத்தியுள்ளார்.
  ”இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல்கள் – புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)

  கஜ்வா என்னும் திடீர் தாக்குதலில் பெண்களும் சிறுவர்களும் இறப்பது தவிர்க்கமுடியாதது. இருபுறமும் அறிவித்து செய்யும் போரில்தான் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அறிவுறுத்தியுள்ளார்.

  //,இது போன்ற ஒரு புதிய சமூகத்தை நீங்கள் அமைக்க முனைந்தால்,வரும் பிரச்சனைகளை தீர்க்க (திணிக்கப்பட்ட) சில போர்கள் நீங்கள் செய்வது அவசியம் என உணர்வீரகள்//

  அதனைத்தான் நானும் சொல்கிறேன்.

  //இது எல்லாவற்றிகும் மேலாக…இறைவன் கூருகிறான்..
  எவன் ஒருவன் அநியாயமாக ஒருவனை கொலை செய்கிரானோ, அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம்…இன்னும் எவன் ஒருவன் ஒருவனை காரணமின்றி அநியாயமாக கொல்கிறானோ,அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம் என்று…
  கொலை இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்று….//

  இல்லை சகோதரர் ரஜின் அவர்களே. அந்த வரி அல்லாஹ்வால் யூதர்களுக்கு அருளப்பட்டது. அது யூதர்களுக்கு அருளப்பட்டது என்றுதான் அல்குரானிலும் இடம் பெற்றுள்ளது. அது முஸ்லீம்களுக்கு அருளப்படவில்லை.

  //ஜிகாத்…(முஸ்லிம்களின் உயிர்,உடைமை,மற்றும் அவர்களின் மார்க்கத்திற்கு பங்கம் வரும்போது,அவர்களை எதிர்த்து போரிடுவது…)
  இங்கு,இஸ்லாம் போர் புரிய சொல்கிறது….போர் என்பது,என்னவென்று அனைவரும் அறிவர்…இருசாராரிலும்,உயிரை துச்சமாக எண்ணி சண்டையிட பொதுவிடத்தில் கூடுவார்கள்…இருவரும் சண்டையிட்டுக் கொள்வார்கள்…இரு தரப்பிலும் மடிவார்கள்…இதுதானே போர்…அதில் படையினர் தவிர வெரெவரும் (மக்கள்)இருக்க மாட்டார்கள்.

  இதற்குதான் அனுமதி உண்டு.இதுவல்லாத அப்பாவி மக்களையும்,பெண்களையும்,குழந்தைகளையும் கொல்லும் இந்த தீவிரவாத்தை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது….இதற்கு அவர்கள் வல்ல இறைவனிடம்,வேதனை அடைந்தே தீருவார்கள்…//

  மேலே காட்டியுள்ள ஹதீஸை பாருங்கள். உங்களுக்கு தெளிவு பிறக்கலாம்.

  //ஜிகாத்…(முஸ்லிம்களின் உயிர்,உடைமை,மற்றும் அவர்களின் மார்க்கத்திற்கு பங்கம் வரும்போது,அவர்களை எதிர்த்து போரிடுவது…)ம்ம் இந்த ஜிகாத்,முஸ்லிம் மட்டுமல்ல,எந்த ஒரு மனிதனும் செய்யக்கூடியது தானே..அந்த நிலை ஒருவனுக்கு வரும்போது,அவன் சண்டையிடுவது தவறா?
  //
  அதனைத்தான் நானும் கூறுகிறேன்.

  //அது ஹிந்துவானாலும்,கிரிஸ்தவன் ஆனாலும் யாராக இருந்தாலும் அவன் செய்தால் நியாயம் தானெ…
  அதன் பேரில் தற்போது நடப்பது தீவிரவாதம்…. (பாகிஸ்தான்,தாலிபான்,பொன்றவை)//

  தவறு சகோதரரே. ஹிந்துக்களும் கிறிஸ்துவர்களும் செய்வது அநீதியே. அவர்கள் சாத்தானின் பக்கமே உள்ளார்கள். முஸ்லீம்கள் மட்டுமே அல்லாஹ்வின் பக்கம் உள்ளார்கள்.

  ”நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும் . (4:74-76)

  //ஹிந்து மததிலும் அநீதியை எதித்து போரிட சொல்கிறது…அதேதான் இங்கும்…//

  இல்லை. ஹிந்துமதமே அநீதி. அதில் எப்படி அநீதியை எதிர்த்து போரிடமுடியும்? அப்படி ஹிந்துக்கள் அநீதியை எதிர்த்து போரிடவேண்டுமென்றால், அவர்கள் இந்துக்களைத்தான் தாக்கவேண்டும்.

  எடிட்டர் அவர்கள்,எனது தரப்பு கருத்தையும் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

 23. அன்பு நண்பர் அருமை சகோதரர் ரஜின் அவர்களே ,

  //இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12) //

  //காபிர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஒப்புக்கொள்ளும் வரை ஜிகாத் புரிவதும் ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமையும் கூட.

  ஜிகாதுக்கு புறப்படாதவர்கள் முஸ்லீம்களே அல்ல//

  பாருங்கள், கேளுங்கள் உங்களின் மேலான மார்க்கத்தவரின் மன நிலையை!

  நீங்கள் பன்றி என்னும் மிருகத்தை வெறுக்கிறீர்கள். ஜெர்மானிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட அழாகான சிறிய பன்றிக் குட்டிகளை காண நேரிட்டது. அவற்றுக்கு கஞ்சி குடுத்து வளர்க்கிறார்கள். வளர்ந்ததும் அவற்றை வெட்டி விற்ப்பனை செய்வார்களாம். அந்தப் பன்றிகளால் இந்த உலகில் யாருக்கும் ஒரு சிறு கஷ்டமும் இல்லை. அந்தப் பன்றிகளை நீங்கள் வெறுக்கிறீர்கள். அது உங்கள் இஷ்டம். அதில் நான் தலையிடவில்லை.

  ஒரு சிறு தொல்லையை கூட அந்தப் பன்றிகள் தருவதில்லை. ஆனாலும் அதை வெறுக்கிறீர்கள்.

  இங்கெ அருமை சகோதரர் ரஹ்மத்துல்லாஹ்வின் மன நிலை எப்படி உள்ளது? பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்கிறார்.

  இந்த நிலைக்கு அவர்க் கொண்டு வந்தது யார், உங்களின் மார்க்கம் தானே. இவரை எப்படி குணமாக்க, மனதில் அன்புள்ள குண நிலைக்கு கொண்டு வரப் போகிறீர்கள்?

  இன்னும் பல சிறு குழந்தைகள், இவர் படித்தவற்றையே படித்து விட்டு வந்து பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்! என்று சொல்லப் போகின்றன.

  உலகில் எல்லோரும் பயந்தவர்களோ, கோழைகளோ, தொடை நடுங்கிகளோ அல்ல. ஆனால் மனிதம் வாழ வேண்டும், மனித நேயம் வேண்டும் என்று அமைதி வழியை எடுக்கிறோம். எங்கள் மார்க்கமோ அத்வேஷ்டா(வெறுப்பில்லாதவனாய்), சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சினேகத்துடன்), கருணா எவ ச (கருணையே உருவானவனாக ) என்று கூறுகிறது.

  ரஹ்மத்துல்லாஹ்வை குணமாக்க, மனதில் அன்புள்ள குண நிலைக்கு கொண்டு வர வேண்டியது உங்களைப் போன்றவர்கள் தான். இன்னும் பல ரஹ்மத்துல்லாஹ்க்கள் உருவாகாமல் தடுக்க வேண்டியதும் உங்களைப் போன்றவர்கள் தான்!

 24. Mr Rahmathullah

  Even after Mr Thiruchi has so compassionately pointed out, you still spew hatred – how could you have such a repulsive view that hinduism is an unjust path and all hindus will have to fight each other if they wish to weed out injustice? All religions have good in them, learn to respect and control your impulse to atttack other religions in an immature manner – do not give into hatred.

  as long as religious bigots like you are around, the world will know no peace. Learn to practice the good in your religion and control the torrent of hate you spit out. This will be a step towards peace.

  gayathri

 25. ரஹ்மத்துல்லாஹ் புரிதல்,முற்றிலும் தவறானது….அவர் முழுமையாக மூளை சலவை செய்யப்பட்டுள்ளார்…

  அன்பர்,திருச்சிகாரன் அவர்களே,
  நீங்கள் சொல்வது சரிதான்,அவர்களை,சீர்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் எம்மை சார்ந்தது….
  ம்ம்ம் அவரது பதிலுக்கான விளக்கம் என்னிடம் உள்ளது…
  கொஞ்சம் வேலைப்பளு…
  இன்ஷா அல்லாஹ் விரைவில் விவரிக்கிறேன்…
  இது பற்றி எனது வளைபூவிலும் விவரிக்கிறேன்… விருப்பமுல்லவர்கள்.பார்வையிடலாம்,கருத்து தெரிவிக்கலாம்….

  விரைவில் எனது பதில்…..
  அன்புடன்
  ரஜின்

 26. தமிழ் ஹிந்து எடிட்டர் அவர்களுக்கு..
  ஏன் எனது பின்னூட்டத்தை ,அதில் பகுதியை நீக்கிவிட்டு பதிகிரீர்கள்?,,,,
  என்ன தவறாக சொல்லிவிட்டேன் என்று…..
  நான் ஒன்றும் யாரையும் சாடவில்லையே…

  நடுநிலை தேவை…..

 27. ரஹ்மத்துல்லாஹ் என்னை நோக்கி எழுப்பிய கேள்விகளுக்கு நான் பதில் தர வேண்டியுள்ளதால்,அவரது பதிவை அடைப்புகுள்ளும்,எனதை வெளியிலும் பதிந்துள்ளேன்..

  ரஹ்மத்துல்லா எழுதியது….
  7 October 2009 at 6:31 am

  //அல்லாஹ்வின் வழியை முஸ்லீம்களுக்கே தெளிவுபடுத்த வேண்டிய தேவையை சகோதரர் ரஜினின் மறுமொழி சுட்டிக்காட்டுகிறது.

  தீவிரவாதம் செய்பவன் முஸ்லீம் அல்லதான். ஆனால், முஸ்லீம்கள் செய்வது தீவிரவாதம் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

  பரிதாபத்துக்குரிய ரஜினின் பதிலை பார்த்து பரிதாபப்படாமல் என்ன செய்வது? அது எக்காலமும் முஸ்லீம்களுக்கு தைரியமூட்ட கொடுக்கப்பட்டது. பத்ரு போருக்கு மட்டுமான வசனம் என்றால் அது ஏன் நிரந்தரமான அல்குரானில் இடம் பெற்றுள்ளது? வெற்றி என்றும் முஸ்லீம்களின் பக்கமே என்று அல்லாஹ் இங்கே தெளிவாக்குகிறான். முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அல்லாஹ்வே முஸ்லீம்களின் அருகே நின்று போர் புரிய மலக்குகளை அனுப்புகிறான்.//

  உண்மைதான் ரஹ்மத்துல்லாஹ்,இது பத்ரு போரின்போது அந்த வசனம் இறக்கப் பட்டாலும்,இது முஸ்லிம்கள் “போர் புரியும்”(வன்முறை அல்ல) எல்லா காலத்துக்கும் பொருந்தும்…சரிதான்.ஆனால் இந்த வசனத்தை கையாள நீங்கள் போர் அல்லவா புரியவேண்டும்…

  ஈராக்கில்,அமேரிக்காவுக்கு,எதிராகவும்,பாலஸ்தீனில்,இஸ்ரேலுக்கு எதிராகவும்,நீங்கள் நிற்கும் போது இந்த வசனத்தை கையில் எடுத்துகொள்ளுங்கள்…..

  மாறாக,இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தப்படும்,பொது மக்கள் மத்தியிலான குண்டு வெடிப்பு,மும்பையில்,சமீபத்தில் தாஜ் ஹோட்டல்,நரிமன் ஹவுஸ்,ரயில் நிலையம் பொன்றவற்றில் நடந்த கொலைவெறித்தாக்குதல்களுக்கு,நீங்க ஜிஹாதுன்னு பேரு வச்சுகிட்டு,யாரோட போர் பொரியுரீங்க சார்….ஏதும் அறியாத அப்பாவி மக்களோடயா?…

  //அக்காலத்தில் முஸ்லிம்களுடன் எதிரிகள் நடத்திய போர்கள் அனைத்தும்,நாட்டை கைப்பற்றவோ,அல்லது,செல்வத்திற்க்காகவோ,அல்ல…//
  //முஸ்லீம்களின் எதிரிகள் நாட்டை கைப்பற்றவோ அல்லது செல்வதுக்காகவோ போர் புரியவில்லை. அவர்கள் சாத்தானின் பக்கத்திலிருந்து போர் புரிகிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் ஜிஹாதுக்காக போர் புரிகிறார்கள்.//

  ஆமா சார்.. அப்பொ முஸ்லிம்களுடன் எதிரிகள் நடத்திய போர்கள் அனைத்தும்,நாட்டை கைப்பற்றவோ,அல்லது, செல்வத்திற்க்காகவோ, இல்ல,அததான்,நா சொன்னேனெ…

  அது இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரான போர்தான்..அதனால் தான் அல்லாஹ்,எதிரிகளை குறித்து சொல்லும் போது நிராகரிப்போர் என்று குறிப்பிடுகிறான்…

  //”வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.” 9:29
  எதுவரையிலும் ஜிஹாத் என்பதற்கு மேற்கண்ட இறைவசனத்தை விட வேறென்ன ஆதாரம் வேண்டும் சகோதரர் ரஜின் அவர்களே?//

  ம்ம்ம்…அந்த வசனத்த…நீங்களே கண்ண நல்லா தொரந்து ஒரு தடவ,இல்ல… ரெண்டு தடவ படிச்சு பாருங்க…
  ”வேதம் அருளப்பெற்றவர்களில்(யூத,கிறிஸ்தவர்கள்) எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ” (அப்படீன்னா…ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்). அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.(“கப்பம் கட்டும் வரை”அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்)” 9:29

  இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்று மதத்தினர் மீது,ஜிஸ்யா எனும் வரிவிதிப்பு உண்டு..அதை அவர்கள் செலுத்தாத வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்ன்னு அல்லாஹ் சொல்கிறான்..

  அல்லாஹ்வுடய வார்த்தையயை ஒங்களுக்கு ஏத்தமாதிரி வளைக்காதீங்க சார்….

  உமர் (ரலி)அறிவித்தார்.
  (எனக்கு பின் வருகிற புதிய) கலிஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொருப்பிலும்,அவனுடய தூதர் (ஸல்) அவர்களின் பொருப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.அதன்படி அவர்களை பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்.அவர்களின் சக்திக்கேற்பவே தவிர(ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) அவர்கள் மீது சுமத்த கூடாது.
  ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்:3052

  இது என்ன சொல்லுதுன்னு பாத்தீங்களா?…முஸ்லிம்கள் பொருப்பில் உள்ள மாற்றுமதத்தவர்களுக்காக முஸ்லிம்கள் போரிடனும்னு சொல்லுது…

  ரஹ்மத்துல்லா,உங்களது புரிதல் படி:”ஒங்க பொருப்புல இருக்குரவங்கள மொதல்ல கொல்லுங்கன்னுல மார்க்கம் சொல்லனும்”…அவங்களும் நிராகரிப்பாளர்கள் தானே….

  மாறா அவங்கள பாதுகாக்க சொல்லுது….இது தான் இஸ்லாம்…புரியுதா?

  //இறைஅருளால் அந்த போர்களில் வெற்றி கண்டு,அன்று வரை இல்லாத ஒரு புது சமூக கட்டமைப்பை உருவாக்க முனையும் போது,கிளர்ச்சியில் ஈடுபடும் சில கூட்டத்தினரை எச்சரிக்க படைகள் அனுப்பபட்டன….

  அவர்கள் தன்னுடய நிலையிலேயே(குழப்பம் செய்வது) நீடிக்க முயலும் போது,அவர்கள் மீது போர் தொடுப்பது கட்டாயம் ஆகிரது//

  யார் இலலை என்று சொன்னது சகோதரர் ரஜின் அவர்களே? இன்றும் அதே நிலைதானே நீடிக்கிறது? இன்று உலகத்தில் ஒரு புது கட்டமைப்பை உருவாக்க அல்லாஹ்வின் வழியில் நிற்கும் முஸ்லீம்கள் தொடர்ந்து முயற்சி செய்துதான் வருகின்றனர். அது உருவாகிவிட்டதா? உலகெங்கும் இஸ்லாமின் ஆட்சியில் வரும் வரைக்கும் என்ன செய்யவேண்டும் எனப்தைத்தான் 9.29 கூறுகிறது.///

  அப்படியா?….அப்போ ஒரு போர் பிரகடணம் செய்யுங்க….போருக்கு வர்ரவங்கள கொல்லுங்க…யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்..

  ஏதும் அறியாத மக்கள் என்ன செஞ்சாங்கன்னு அவங்க மீது ஒங்க கோவம்… அவங்களாலதான்,ஒங்கள திரும்ப தாக்க முடியாதுன்னா?

  //இல்லை சகோதரர் ரஜின் அவர்களே..
  அவர்களும் காபிர்களைச் சார்ந்தவர்களே என்று நபி(ஸல்) அறிவுறுத்தியுள்ளார்.
  ”இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல்கள் – புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)

  ம்ம்ம் இந்த வசனத்துல,அவங்கள தாக்கலாம்னோ,அல்லது கூடாதுன்னோ சொல்லல…சரிங்களா…..நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க…..

  இத பாருங்க…
  அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
  நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள்.
  ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்:3945

  இது தான் போருக்கான முறையான ஹதீஸ்..சும்மா,எதயாவது எடுத்துவச்சு, ஒலராதீங்க….

  //கஜ்வா என்னும் திடீர் தாக்குதலில் பெண்களும் சிறுவர்களும் இறப்பது தவிர்க்கமுடியாதது. இருபுறமும் அறிவித்து செய்யும் போரில்தான் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அறிவுறுத்தியுள்ளார்//.

  இது என்ன ஒங்களோட சொந்த ஃபத்வா வா?…இப்படித்தான் ஊருக்குள்ள பலபேர் இஷ்டத்துக்கு,ஏதோ மிட்டாய் கொடுக்குர மாதிரி,ஃப்த்வா கொடுத்துகிட்டு திரியுராங்க….

  //,இது போன்ற ஒரு புதிய சமூகத்தை நீங்கள் அமைக்க முனைந்தால்,வரும் பிரச்சனைகளை தீர்க்க (திணிக்கப்பட்ட) சில போர்கள் நீங்கள் செய்வது அவசியம் என உணர்வீரகள்//

  அதனைத்தான் நானும் சொல்கிறேன்.

  //இது எல்லாவற்றிகும் மேலாக…இறைவன் கூருகிறான்..
  எவன் ஒருவன் அநியாயமாக ஒருவனை கொலை செய்கிரானோ, அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம்…இன்னும் எவன் ஒருவன் ஒருவனை காரணமின்றி அநியாயமாக கொல்கிறானோ,அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம் என்று…
  கொலை இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்று….//

  இல்லை சகோதரர் ரஜின் அவர்களே. அந்த வரி அல்லாஹ்வால் யூதர்களுக்கு அருளப்பட்டது. அது யூதர்களுக்கு அருளப்பட்டது என்றுதான் அல்குரானிலும் இடம் பெற்றுள்ளது. அது முஸ்லீம்களுக்கு அருளப்படவில்லை.//

  அடப்பாவிங்களா…குர் ஆனே பொதுவா எல்லாத்துக்கும்,குறிப்பா முஸ்லிம்களுக்கு அருளப்பட்டது..அதுல உள்ள வசனம் யூதர்களுக்கா?…நல்ல கதையா இருக்கு..

  சரி நீங்க சொல்ர மாதிரி யூதர்களுக்குன்னா,அவங்களுக்கு அருளப்பட்ட வேதமும்(தோரா) அல்லாஹ் இறக்கியது தானே…அந்த வேதத்தை,ஈமான் கொள்ளாதவர் முஸ்லிம் இல்லையே….

  தாங்கள் எப்படி?????

  ரஹ்மத்துல்லாஹ்,

  மற்ற மதத்தினரையும்,மதங்களையும் சாடுவது,வெறுப்பதையும் வேலையாக கொண்டு திரியாதீங்க..முதல்ல நீங்க சார்ந்து இருக்கும் மார்க்கத்த முழுமையா தெரிஞ்சுகொங்க…..

  “உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு” இந்த ஒரு வசனம் போதாதா,நீங்க புரிஞ்சுக்க????????????

  நன்றி
  ரஜின்

  (Comment edited & published)

 28. திருத்தம்,
  எனது முந்தய பின்னூட்டத்தில் பதிந்த கீழ்கண்ட ஹதீஸ் எண்,3945 அல்ல,
  ஹதீஸ் எண்:2945 சரியானது….

  {{அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
  நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள்.
  ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்:3945 அல்ல 2945 }}

  எடிட்டர் அவர்களே….விரிவான விவாத்திற்கு,இது,ஏற்ற இடமாக இருக்குமா?
  என்ற சந்தேகத்தில் தான்,என்னுடன் விவாதிக்கும்,ரஹ்மத்துல்லாவை அழைத்தேன்….
  ஏனென்றால்,முன்னமே ஒரு முறை,இது போன்று பதில் தரும்போது,எதிர்ப்பும் கண்டனமும், தெரிவித்தார்கள்…அதை தவிர்க்கவே நான் நினைத்தேன்….

  ஏன் அதை,திருத்தி,நீக்கிவிட்டீர்கள்…
  இருந்தாலும்,நான் சொல்ல வந்த கருத்தை,நிறைவாக அனுமதித்த தங்களுக்கு,எனது நன்றியை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்….

  மாற்று மதத்தவனின்,கருத்துக்கும்,மதிப்பளிக்கும்,தங்களுக்கு,எனது நன்றி…

  வாழ்த்துக்கள்…

  அன்புடன்
  ரஜின்

  (Comment edited & published)

 29. ரஜின் பாய்,

  //// மற்ற மதத்தினரையும்,மதங்களையும் சாடுவது,வெறுப்பதையும் வேலையாக கொண்டு திரியாதீங்க..முதல்ல நீங்க சார்ந்து இருக்கும் மார்க்கத்த முழுமையா தெரிஞ்சுகொங்க….. ////

  உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். இந்த மாதிரி ஆட்களிடமிருந்து நீங்கள்தாம் உங்கள் மார்க்கத்தை மீட்பிக்க வேண்டும். ஒன்று தெரிகிறது.. உங்கள் இறைவன் இறக்கியதாக நீங்கள் சொல்லும் புத்தகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது போல. ரொம்பவும் தெளிவாகவே சொல்லியிருக்கிறோம் என்று சொல்லப்பட்டிருந்தாலும். இன்னும் கொஞ்சம் தெளிவாக இந்த வஹீ வந்திருக்கப்படாதா!!

  (Edited and published.)

 30. //”வேதம் அருளப்பெற்றவர்களில்(யூத,கிறிஸ்தவர்கள்) எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ” (அப்படீன்னா…ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்). அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.(”கப்பம் கட்டும் வரை”அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்)” 9:29

  இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்று மதத்தினர் மீது,ஜிஸ்யா எனும் வரிவிதிப்பு உண்டு..அதை அவர்கள் செலுத்தாத வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்ன்னு அல்லாஹ் சொல்கிறான்..
  //

  சகோதரர் ரஜின் அவர்களே, எந்த இடத்தில்

  ”இஸ்லாமிய ஆட்சிக்குள் இருக்கும் மாற்றுமதத்தினர்” என்ற வார்த்தை இந்த வசனத்தில் இருக்கிறது? நீங்களாக இட்டுக்கட்ட ஆரம்பித்துவிட்டீர்களா?

  நீங்கள் சொல்வது போலத்தான் வசனம் இருந்தால், ஏன் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமை ஒப்புக்கொள்ளாத மற்ற நாடுகள் மீது படையெடுத்து இஸ்லாமை ஒப்புக்கொள்ள செய்தார்கள்?

  //கப்பம் கட்டும் வரை”அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்//

  இப்போது உலகத்தின் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் யூதர்களும் முஸ்லீம்களுக்கு கப்பம் கட்டுகிறார்களா? அவர்கள் கட்டும் வரைக்கும் ஜிஹாத் புரியவேண்டியது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை.

  சகோதரர் ரஜின் அவர்களே கீழே பாருங்கள். இது இஸ்ரேலின் புத்திரர்களுக்கு அதாவது யூதர்களுக்கு அருளியது என்று தெளிவாக அல்குரான் குறிப்பிடுகிறது.

  சூரா – அல் மாயிதா
  அத்தியாயம் – ஐந்து
  வசன எண் – 32

  இதன் காரணமாகவே, ”*நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப்பதிலாக அல்லது புமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காக) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்*. மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழவைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைப்பவரைப் போலாவார். என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களினடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். இதன்பின்னரும் அவர்களின் பெரும்பாலோர் புமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

  நீங்கள் சொல்வது உண்மையென்றால், இதில் ”எல்லோருக்கும் விதித்தோம்” என்றல்லவா சொல்லியிருப்பான். இங்கே தெளிவாக இஸ்ரேலின் புத்திரர்களுக்கு விதித்தோம் என்று சொல்லியிருக்கிறான் அல்லாஹ். யாரிடம் காது குத்துகிறீர்கள்.

  “உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு” இது எப்போது அருளப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு? முஸ்லீம்களின் பிள்ளைகளை மற்ற மததினராக்கக்கூடாது என்பதற்காக இறக்கப்பட்ட வசனம் அது. சற்றே ஹதீஸ் படித்துப் பாருங்கள்.

 31. kannan

  //Learn to practice the good in your religion //

  அறிவுரைக்கு நன்றி. எங்களதுமார்க்கத்தில் இருப்பதெல்லாம் நல்லதுதான். அது அல்லாஹ்வின் வழி. உங்க்ளுடையது சாத்தானின் வழி.

  (Comment edited & published)

 32. ரஹ்மத்துல்லா அவர்களே,

  //// இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்று மதத்தினர் மீது,ஜிஸ்யா எனும் வரிவிதிப்பு உண்டு..அதை அவர்கள் செலுத்தாத வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்ன்னு அல்லாஹ் சொல்கிறான்.. ////

  உங்களிடம் நேர்மை இருக்கிறது. தனக்குத்தெரிந்தவற்றை, புரிந்தவற்றை அல்லாஹ்வின் உண்மையான முகத்தை நீங்களே முழு ஈமானுடன் நம்பி சொல்கிறீர்கள். உங்கள் மீது அல்லாஹூத்தாலாவின் முழு கருணை இருக்கட்டும்.

  ரஜின் முதலிய சகோதரர்கள் ஈமான் இல்லாதவர்கள். அல்லாவின் வசனங்களைக் கண்டு வெட்கப்படுகிறார்கள். அவர்களும் காபிர்களே.

  (Comment edited & published)

 33. வணக்கம்
  //ஏன் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமை ஒப்புக்கொள்ளாத மற்ற நாடுகள் மீது படையெடுத்து இஸ்லாமை ஒப்புக்கொள்ள செய்தார்கள்?//

  போப் ஒரு முறை ஒரு பழைய செய்தியாக வந்த ஒரு விஷயத்தை கூறினார் அதாவது இஸ்லாம் என்பது வாள் முனையில் பரப்பப் பட்ட மதம் என்று, எங்கோ வாடிகனில் அவர் சொன்ன ஒரு தகவலுக்காக போப்பை மன்னிப்பு கேட்க சொல்லி பல நாடுகளில் இருக்கும் ஏன் நமது பாரத நாட்டு இஸ்லாமியர்களும் ஒன்று கூடி கூக்குரலிட்டார்களே இப்போது ஒரு இஸ்லாமிய நண்பரின் வாயால் சுயரூபம் வெளிப்பட்டது. அப்படியானால் இந்த மதத்தினை ஏன் அமைதி மார்க்கம் என்று பீற்றிக் கொள்கிறீர்கள். மனித சமுதாயம் மேம்பட ஒரு நல்ல விஷயம் கிடையாத உங்களின் மார்க்கத்தை விடவா நீங்கள் சொல்லும் நரகம் கொடிதானது .

  உண்மையாகவே உங்கள் மார்க்கம் அமைதியானது எனில் வாளையோ, வெடிகுண்டையோ நீங்கள் நினைத்து இருக்க மாட்டீர்கள்.

  //இப்போது உலகத்தின் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் யூதர்களும் முஸ்லீம்களுக்கு கப்பம் கட்டுகிறார்களா? அவர்கள் கட்டும் வரைக்கும் ஜிஹாத் புரியவேண்டியது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை.//

  இது எப்படி இருக்கிறது தெரியுமா சினிமாவில் வரும் ரவுடிக் கூட்டம் சந்தைக்கடையில் மாமூல் வாங்கி பிழைப்பது போல் இருக்கிறது.ஏன் உங்களுக்கு உங்கள் அல்லா உழைத்து உண்ண முடியாமல் உடல் ஊனமாகவா உங்களை படைத்து உள்ளான், மற்ற மதத்தினர் முஸ்லிம்களுக்கு கப்பம் கட்டுவதற்கு. உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் வெறும் அதிகார வெறியும் மடத்தனமாக ஒரு மார்க்கத்தை புரிந்து கொண்டதும் நன்றாக தெரிகிறது. நண்பரே நன்றாக இன்னொரு முறை உங்களின் குரானை நல்ல மனநிலையில் படித்துப் பாருங்கள் ஒருவேளை பல நல்ல கருத்துக்கள் ‘உங்கள் கண்களில்’ தென்படலாம்.
  ஜெய் ஹிந்த்.

  (Edited.)

 34. சொல்மண்டி இரா,

  ////// இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்று மதத்தினர் மீது,ஜிஸ்யா எனும் வரிவிதிப்பு உண்டு..அதை அவர்கள் செலுத்தாத வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்ன்னு அல்லாஹ் சொல்கிறான்.. //////

  இது ரஹ்மத்துல்லா சொன்னதல்ல.

  “நல்லவரான” ரஜின் எழுதியது.

 35. இங்கே எழுதியிருக்கும் இஸ்லாமிய நண்பர்களது பின்னூட்டங்களை தயவு செய்து நீக்கிவிடுங்கள்.

  அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய வேறு நிறைய இடங்கள் இருக்கின்றன.

  இதனையும் ஒரு தமிழ்மணம் ஆக்கவேண்டாமே?

 36. //ரஹ்மத்துல்லாஹ் எழுப்பிய கேள்விகளுக்கு நான் பதில் தர வேண்டியுள்ளதால்,அவரது பதிவை அடைப்புகுள்ளும்,எனதை வெளியிலும் பதிந்துள்ளேன்..//
  ரஹ்மத்துல்லா எழுதியது…

  8 October 2009 at 7:04 pm

  ”வேதம் அருளப்பெற்றவர்களில்(யூத,கிறிஸ்தவர்கள்) எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ” (அப்படீன்னா…ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்). அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.(”கப்பம் கட்டும் வரை”அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்)” 9:29

  இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்று மதத்தினர் மீது,ஜிஸ்யா எனும் வரிவிதிப்பு உண்டு..அதை அவர்கள் செலுத்தாத வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்ன்னு அல்லாஹ் சொல்கிறான்.

  [[சகோதரர் ரஜின் அவர்களே, எந்த இடத்தில்

  ”இஸ்லாமிய ஆட்சிக்குள் இருக்கும் மாற்றுமதத்தினர்” என்ற வார்த்தை இந்த வசனத்தில் இருக்கிறது? நீங்களாக இட்டுக்கட்ட ஆரம்பித்துவிட்டீர்களா?]]

  ம்ம் இதில் இட்டுகட்ட என்ன இருக்கிறது….

  [கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்]

  ஜிஸ்யா மாற்று மதத்தினர் கட்டாம,முஸ்லிமான?? ?? நீங்களா கட்டுவீங்க?…..

  புரியாதவங்களுக்கு,விளக்கலாம்,புரியாதமாதிரி நடிக்கிரவங்களுக்கு….ம்ம் முடியாத காரியம் தான்….

  ஜிஸ்யாவுக்கு மட்டும் தான் போர்புரிய சொல்லுது…

  (இந்தியாவுல வரி யேய்ப்பு செய்ரவங்கள என்ன செய்வாங்க….தனிமனிதனா இருந்தா கைது,சமூகமா இருந்தா,அடக்கி கட்டவைப்பார்கள்…அது தான்…இஸ்லாமும் சொல்லுது..)

  [[நீங்கள் சொல்வது போலத்தான் வசனம் இருந்தால், ஏன் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமை ஒப்புக்கொள்ளாத மற்ற நாடுகள் மீது படையெடுத்து இஸ்லாமை ஒப்புக்கொள்ள செய்தார்கள்?]]

  அடப் பாவிங்களா?….இஸ்லாம்,வாளால்,பரப்பபட்டது,அததானே, சொல்ல வர்ரீங்க?…

  ம்ம்ம் இன்னக்கி இப்படித்தான்,உலகம் முழுவதும் ஊடகங்களாலும்,யூத கிறிஸ்தவர்களாலும்,பரப்ப படுகிறது……

  இந்த மாதிரி, இஸ்லாத்த எடுத்துவைக்க,மார்க்கமும் சொல்லல,அப்படிதான் பரப்பபட்டது,என்பதற்கு, வரலாற்று ஆதாரமும் இல்ல…..சும்மா மார்க்கத்தில் பேரால்,இட்டுக்கட்டாதீங்க….

  அப்படி கட்டாயத்தின் பேரால் வாளுக்கு பயந்து இஸ்லாத்தை ஏற்பவர்களிடம்,ஈமான் இருக்காது….

  ஈமான்கிற நம்பிக்கை இல்லாதவன,இஸ்லாமியன்னு இஸ்லாம் சொல்லல,,இல்லயா..அவனுக்கு பேரு முஸ்லிம் இல்ல,முனாஃபிக்…இதுவாவது தெரியுமா?

  இந்தியாவ எடுத்துகிட்டா.இங்க 200 ஆண்டுகளுக்கு மேலா இஸ்லாமிய?? ஆட்சி இருந்துச்சு,ஆனா அதில் பெருவாரியான அரசர்கள்,நீங்க சொன்னமாதிரி,வாளாலும் சரி,சும்மா கூட இஸ்லாத்தை பரப்பவில்லை…அவர்கள் அனைவரும் சுகபோக வாழ்வு வாழ்ந்தார்கள்…

  அக்பர் போன்ற அரசர்கள், ஹிந்துக்களுடன்,நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்…

  அதற்கு சாட்சி.இன்றைய இந்தியா….இங்கு பெரும்பான்மையினர்,ஹிந்துக்கள்….இது ஒன்று போதாதா ஒங்க பிரச்சாரம் பொய்ன்னு நிரூபிக்க….

  [[கப்பம் கட்டும் வரை”அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்//

  இப்போது உலகத்தின் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் யூதர்களும் முஸ்லீம்களுக்கு கப்பம் கட்டுகிறார்களா? அவர்கள் கட்டும் வரைக்கும் ஜிஹாத் புரியவேண்டியது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை.]]

  ஓ ….நீங்கதான் நம்ம இந்தியாவின் மாமன்னர் ரஹ்மத்துல்லாவா?….எனக்கு தெரியாம போச்சு??? மன்னர் மன்னா

  நா வந்து,இந்தியாவுல காங்கிரஸ் ஆட்சி நடக்குதுன்னு நெனச்சுகிட்டு இருக்கேன்…..

  ஒங்க ஆட்சியில யாருமே ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டலயா???….அடடா////

  ரஹ்மத்துல்லா,சும்மா அரவேக்காட்டு தனமா பேசிகிட்டு இருக்காதீங்க…….

  [[சகோதரர் ரஜின் அவர்களே கீழே பாருங்கள். இது இஸ்ரேலின் புத்திரர்களுக்கு அதாவது யூதர்களுக்கு அருளியது என்று தெளிவாக அல்குரான் குறிப்பிடுகிறது.

  சூரா – அல் மாயிதா
  அத்தியாயம் – ஐந்து
  வசன எண் – 32

  இதன் காரணமாகவே, ”*நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப்பதிலாக அல்லது புமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காக) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்*. மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழவைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைப்பவரைப் போலாவார்.என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களினடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். இதன்பின்னரும் அவர்களின் பெரும்பாலோர் புமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

  நீங்கள் சொல்வது உண்மையென்றால், இதில் ”எல்லோருக்கும் விதித்தோம்” என்றல்லவா சொல்லியிருப்பான். இங்கே தெளிவாக இஸ்ரேலின் புத்திரர்களுக்கு விதித்தோம் என்று சொல்லியிருக்கிறான் அல்லாஹ். யாரிடம் காது குத்துகிறீர்கள்.]]

  சகோதரரே??…

  இது சம்பந்தமா நான் எனது முந்தய பின்னூட்டத்தில் கொடுத்த பதில் போதுமானது….

  {அடப்பாவிங்களா…குர் ஆனே பொதுவா எல்லாத்துக்கும்,குறிப்பா முஸ்லிம்களுக்கு அருளப்பட்டது..அதுல உள்ள வசனம் யூதர்களுக்கா?…நல்ல கதையா இருக்கு..

  சரி நீங்க சொல்ர மாதிரி யூதர்களுக்குன்னா,அவங்களுக்கு அருளப்பட்ட வேதமும்(தோரா) அல்லாஹ் இறக்கியது தானே…அந்த வேதத்தை,ஈமான் கொள்ளாதவர் முஸ்லிம் இல்லையே….

  தாங்கள் எப்படி?????}

  குர் ஆன்ல உள்ள ஒரு வசனம் யூதர்களுக்கு,என்று,உங்களின் மேதாவித்தனத்தின்?? மூலம் முதல்முறை அறிகிறேன்………..

  [[நீங்கள் சொல்வது உண்மையென்றால், இதில் ”எல்லோருக்கும் விதித்தோம்” என்றல்லவா சொல்லியிருப்பான். இங்கே தெளிவாக இஸ்ரேலின் புத்திரர்களுக்கு விதித்தோம் என்று சொல்லியிருக்கிறான் அல்லாஹ். யாரிடம் காது குத்துகிறீர்கள்.]]

  ம்ம்ம் அப்படிப்பார்த்தால்,அல்லாஹ் பெருவாரியான வசனங்களை,நபியே!(ஸல்) என்று,நபியை பார்த்து,தான் சொல்கிறான்,
  மக்காவாசிகளே,நபியின் மனைவியரே,என இன்னும் பலரை குறித்து,பல இடங்களில்,அல்லாஹ்,குறிப்பிட்டு சொல்கிறான்,
  அப்ப இத எல்லாம் பிரிச்சுட்டு பாத்தா?…………

  முதல் மற்றும் கடைசி அட்டைதான் குர் ஆனில் மிஞ்சும்????
  இதல்லாம்…யாரு ஒங்களுக்கு பாடம் எடுக்குரா????

  [[“உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு” இது எப்போது அருளப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு? முஸ்லீம்களின் பிள்ளைகளை மற்ற மததினராக்கக்கூடாது என்பதற்காக இறக்கப்பட்ட வசனம் அது. சற்றே ஹதீஸ் படித்துப் பாருங்கள்.]]

  ஏங்க…ஹதீஸ்ல இருக்கா?….நீங்க படிச்சுருக்கீங்களா?….அப்டீன்னா……அத அப்ப்டி இங்க பதிஞ்சுருக்கலாமே????

  [[ஜயராமன்
  8 October 2009 at 3:30 pm
  உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். இந்த மாதிரி ஆட்களிடமிருந்து நீங்கள்தாம் உங்கள் மார்க்கத்தை மீட்பிக்க வேண்டும். ஒன்று தெரிகிறது.. உங்கள் இறைவன் இறக்கியதாக நீங்கள் சொல்லும் புத்தகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது போல. ரொம்பவும் தெளிவாகவே சொல்லியிருக்கிறோம் என்று சொல்லப்பட்டிருந்தாலும். இன்னும் கொஞ்சம் தெளிவாக இந்த வஹீ வந்திருக்கப்படாதா!]]

  நன்றி,ஜெயராமன்…
  இவங்களுக்கே..இன்னும் நிறையா விளக்கவேண்டி இருக்கு….
  வஹீ பத்தி சொன்னீங்க…..ஒரு சாதாரண பாட புத்தகத்த ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள்,ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளும் விதம் வேறு…இல்லயா….இது இறைவேதம்…அல்லாஹ் இது குறித்து ஆராய்ந்து பார்க்க தான் சொல்ரான்…அதுவல்லாது….அதன்படி,வாழ்ந்துகாட்டிய நபியவர்களின் வாழ்க்கை அதை புரிந்துகொள்ள போதுமானது….

  அன்பரசனின் விளக்கம் சொல் மண்டி இரா அவர்களுக்கு போதுமானது…

  [[அன்பரசன்
  9 October 2009 at 8:22 am
  இங்கே எழுதியிருக்கும் இஸ்லாமிய நண்பர்களது பின்னூட்டங்களை தயவு செய்து நீக்கிவிடுங்கள்.]]

  அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய வேறு நிறைய இடங்கள் இருக்கின்றன.

  அன்பரசன் அவர்களே……இஸ்லாத்தை பத்தி தாங்கள் பதிவு வெளியிடும் போது,அதற்கு,பின்னூட்டம் இடும் உரிமையைக் கூட எனக்கு தர மறுக்கிரீர்களே?….

  இஸ்லாம் பற்றி,தங்களது புரிதலை,பதிவாக வெளியிடுகிறீர்கள்..நான் வரவேற்கிறேன்…..

  ஆனால் அது சரியெனில்,வாழ்த்தவும்,அது தவறெனில், சுட்டிக்காட்டவும், விளக்கவும்,தேவையான குறைந்த பட்ச உரிமையை எனக்கு தாருங்கள்…………
  நன்றி

  அன்புடன்
  ரஜின்

  (Comment edited & published)

 37. அன்பு நண்பரக்ளே,அருமை சகோதரர்களே,

  தீவிரவாதம்,அது சம்பந்தமாக,ஒரு முஸ்லிமாகிய எனது,கருத்தை அனுமத்தித்து,பதிவு நீண்டு காணப்பட்டாலும்,அதன் முக்கியத்துவம் அறிந்து அதனை இங்கு வெளியிட்ட தமிழ்ஹிந்து எடிட்டர் அவர்களுக்கும்,எனது ஹிந்து சகோதரர்களுக்கும்,நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்….

  அது போக,என்னால் முடிந்தவரை,ரஹ்மத்துல்லாவின் கேள்விகளுக்கும், இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை,என்பதையும் தங்கள் முன் எடுத்து வைத்து விட்டேன்…

  இனி ரஹ்மத்துல்லா,கேட்கும் கேள்விகளுக்கு,எனது முந்தய பின்னூட்டங்களே போதுமான பதிலை தரும் என நம்புகிறேன்..
  உணர மறுக்கும் அவரிடம் உரையாடுவது தேவையற்றதாகவே நான் கருதுகிறேன்….

  இனிமேலும் இது சம்பந்தமாக உரையாடுவது,”அறைத்த மாவை அறைப்பதே” தவிர வேறு இல்லை…..

  இந்த கலந்துரையாடலின் போது நான் யார் மனதையும்,புண்படும் படி,எழுதி இருந்தால்,அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்…..

  நன்றி

  அன்புடன்
  ரஜின்

 38. இந்த கலந்துரையாடலின் போது நான் யார் மனதையும்,புண்படும் படி,எழுதி இருந்தால்,அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்….. //

  அன்புள்ள ரஜின்,

  நீங்க்ள் எங்கள் மனதை புண்படுத்தவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்கவேண்டாம்.

  உங்களது மதம் சொல்கிறது என்று நீங்கள் (ரஹ்மத்துல்லா அல்ல) எழுதியதே புண்படுத்தியது.
  நீங்கள் எழுதியதெல்லாம் எவ்வளவு கேவலமானது என்று நீங்கள் உணரக்கூடிய முடியாத மனநிலையில் இருக்கிறீர்கள். அதனை நினைத்து வருத்தமே வருகிறது.

  நீங்கள் எழுதியதை சற்றே திருப்பி போட்டுப்பாருங்கள். உதாரணமாக
  இப்படி ஒரு மத புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

  ”முஸ்லீம் அல்லாதவர்களே, யார் தங்களை முஸ்லீம் என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்கள் கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்”

  ”உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஸ்லீமல்லாதவர்களை உறுதிப்படுத்துங்கள் முஸ்லீம்களின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் முஸ்லீம்களின் பிடரிகளின் மீது வெட்டுங்கள் முஸ்லீம்களின் விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்”

  ”இறை நம்பிக்கை கொண்ட முஸ்லீமல்லாதவர்கள் இறைவனின் பாதையில் போர் செய்கிறார்கள். முஸ்லிம்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே நீங்கள் ஷைத்தானின் நண்பர்களான முஸ்லீம்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும் ”

  இப்படியெல்லாம் ஒரு மதப்புத்தகத்தில் இருந்தால் என்ன சொல்வீர்கள் என்று அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
  நீங்கள் குறிப்பிட்ட வரிகள் குரானில் இருப்பதற்காக எப்படி நியாயப்படுத்துகிறீர்களோ அதே போல இந்த வரிகளையும் நியாயப்படுத்துவீர்களா?

  இந்த வரிகளில் முஸ்லீம் என்ற இடத்தில் முஸ்லீமல்லாதவர் என்று போட்டிருக்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம்.

  இது நியாயமானது என்று பாராட்டுவீர்களா? இந்த வரிகளை கொண்ட புத்தகம் உண்மையான இறைவேதம் என்று அதே போல இதனையும் பாராட்டுவீர்களா?

 39. எனது பதில்,மற்றும் கருத்து பற்றி,எனது ஹிந்து சகோதரர்களின்,உள்ளக்கிடக்கை அறிய விரும்புகிறேன்…

  அன்புடன்
  ரஜின்

 40. நண்பர் ரஜின் அவர்களே,

  உங்களைப் பாராட்டுகிறேன். நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதாகவே கருதுகிறேன். உங்களின் மன சாட்சியையும் விட முடியாமல், உங்கள் மார்க்கத்தையும் விட முடியாமல் நீங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

  நீங்கள் நல்லது நினைக்கிறீர்கள் என்றால், அது உங்களின் அடிப்படைக் குணங்களினாலேயே தவிர உங்களின் மார்க்கத்தால் அல்ல என்பதாகவே அறிகிறேன்.

  நான் முன்பு எழுதும் போது ரஹ்மத்துல்லா அவர்களின் எண்ணங்களை மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் ஒரு வகையிலே இஸ்லாத்தின் அச்சு அசலான முகத்தை, சரியான இஸ்லாத்தை எல்லோருக்கும் தெரியப் படுத்துகிறார்.

  //இல்லை சகோதரர் ரஜின் அவர்களே..
  அவர்களும் காபிர்களைச் சார்ந்தவர்களே என்று நபி(ஸல்) அறிவுறுத்தியுள்ளார்.
  ”இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல்கள் – புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)

  ம்ம்ம் இந்த வசனத்துல,அவங்கள தாக்கலாம்னோ,அல்லது கூடாதுன்னோ சொல்லல…சரிங்களா…..நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க…..//

  இந்த விசயத்திலே இதைப் படிக்கும் யாரும், பெண்களும் , குழைந்தைகளும் கூட காபிர் தான் அதனால் அவர்களைத் தாக்க தயங்காதே என்றே பொருள் கொள்ளவார்கள்.

  நீங்கள் தான் அந்த தாக்குதலுக்கான இசைவை எப்படியாவது மட்டுப் படுத்த முடியாதா என்று “ம்ம்ம்” எல்லாம் போட்டுப் பார்க்கிறீர்கள், என்றே கருத முடியும்.

  இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.

  நான் உங்களுக்கும், ரஹ்மத்துல்லாவுக்கும் இடையே நடந்த கருத்தாடல் பற்றி இன்னும் எழுதுவேன்.

  நீங்கள் ஒரு முக்கியமான மனிதர் என்பதை உணருங்கள். நீங்கள் அதிகம் வேலை செய்ய வேண்டியது இசுலாமியர்களிடம் என்பதை நீங்களே புரிந்து இருப்பீர்கள். உங்களின் கருத்துக்களை உங்கள் நண்பர்களிடம் பரப்புங்கள்.

  நான் உங்களின் மார்க்கத்தினால் அமைதியை , அன்பை உருவாக்க முடியும் என்று நம்பவில்லை. ஆனால் உங்களை நம்புகிறேன். உங்களின் மார்க்கத்தையும் மீறி நீங்கள் நல்லவராக இருக்க முயல்வதாகவே கருதுகிறேன். அதற்கே உங்களைப் பாராட்டலாம். நீங்கள் ஒரு பாலைவனச் சோலை.

  சரியான இஸ்லாத்தை வெளிப்படையாகக் கூறிய ரஹ்மத்துல்லா அவர்களும் ஒரு வகையில் பாராட்டுக்கு உறியவரே!

 41. ரஹ்மத்துல்லா அவர்களே,

  ரஹ்மத்துல்லா ரொம்ப நம்பிக்கையுடன், வீராவேசமாகப் பேசுகிறார், எழுதுகிறார். ஆனால் அவர் கூறுவது நடப்பது இல்லை, அவர் நம்பிக்கை பலிக்கவில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

  //இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் //

  ஆனால் இஸ்ரேலில் உள்ள “நிராகரிப்பாளர்கள்” எல்லா இசுலாமிய நாடுகளையும் தொடை நடுங்க வைக்கிறார்களே! பாலஸ்தீனியரை அவர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்து இஸ்ரேலிய “நிராகரிப்பாளர்கள்” விரட்டி விட்டனர்.

  எகிப்து உட்பட பல நாடுகள், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விட்டன. முஃமின்கள் விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடி விட்டனரே!

  ஏன் அல்லா பாதுகாவலனை அனுப்பவில்லையா? மலக்குகளை அனுப்பவில்லையா?

  //நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்//

  இஸ்ரேலிய “நிராகரிப்பாளர்கள்” ஒரு திகிலும் இல்லாமல், தெம்பாக இருக்கிறார்கள்.

  // நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12) //

  உண்மையில் இஸ்ரேலிய “நிராகரிப்பாளர்கள்” எவ்வளவு தைரியத்துடனும், உறுதியுடனும் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் பிடரிகளை அல்ல, பிடரிகளில் உள்ள முடியைக் கூட வெட்ட முடியாதவராய் இருக்கிறார்கள் “முஃமின்கள்” என்பதுதானே உண்மை!

  எனவே நண்பர் ரஹ்மத்துல்லா போன்றவர்கள், நண்பர் ரஜின் போல நல்லெண்ணத்தில் , சமரச சகிப்புத் தன்மைக் கொள்கைக்கு மாறுவது தான் சிறந்த வழி!

  இந்துக்கள் சமரசக் கொள்கை உடையவர்கள். நியாயமானவர்கள். ஆனால் நீங்கள் இப்படி வெறிக் கருத்துக்களை கைக் கொண்டு பிடரியை வெட்டுவேன், பிட்டத்தை வெட்டுவேன் என்று பிலிம் காட்டினால், கடைசியில் இந்தியாவில் உள்ள “நிராகரிப்பாளர்”களும்,
  இஸ்ரேலில் உள்ள “நிராகரிப்பாளர்கள்” போல மாறி விடும் நிலை வுருவாகக் கூடும்!

  ஆனால் உங்களை சகோதரராகவே கருதுகிறோம், நல்லிணக்கத்தில் இணையுங்கள், உங்களுடன் சேர்ந்து மசூதியில் தொழவும், நோன்பு இருக்கவும் நான் தயார்!

 42. Salaam to you.
  Why not publish my previous comments which i wrote with lot of defensive matters to fight against terrorism. Ok.
  I understood this is not the website for knowing the truth.
  Thanks. I will not come back again.

 43. அன்புள்ள செல்லகிளி அவர்களுக்கு,
  நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்…ஆனால் நீங்கள் இதற்கு இவ்வளவு மெனக்கட்டு,குர் ஆன் வசனத்தை எல்லாம் மற்றி எழுதி,எனக்கு விளங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் எண்ணுகிறேன்…தாங்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விக்கு,இதோ பதில்…..

  தாங்கள் சொல்ல வந்தது,
  குர் ஆனில்,(மாற்று மதத்தவர்களுடன் போர் புரியும் போது அவர்களை வெட்டுங்கள்,என சொல்வது போல்,பிற மத வேதங்களில்,முஸ்லிம்களை பற்றி சொல்லப் பட்டு இருந்தால்..அதை நீங்கள்(அதாவது என்னை) பாராட்டி வரவேற்பீர்களா?…..இது தானே…

  இதுக்கு ஏங்க,அவ்வளவு தூரம் போகனும்…இஸ்லாமே அத தான் சொல்லுது…..
  முதலில் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்….

  இஸ்லாத்தில் போர்:

  இஸ்லாத்தில் போர் ஆனது,அடிப்படையாக,சில காரணிகளை கொண்டு அமைகிறது…
  1. இஸ்லாதிற்கு எதிராக சூழ்ச்சி,செய்து,முஸ்லிம்களை அழிக்க நினைப்பவர் -களுடன் போர்.
  2. ஒரு சமூகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள்,பெரும்பான்மையினரால், பாதிக்கப்படும் போது,அவர்களை சகமுஸ்லிம்,எனும் அடிப்படையில் காக்கும் பொருட்டு,அவர்களுடன் போர்.
  3.மற்ற சில காரணங்கள்,அக்கால அரசுகள்,கொண்டிருந்த காரணங்களுடன் பொருந்தக் கூடியதாகவே அமையும்.(உதாரணம்.ஒரு நாட்டின் செய்தியை, எடுத்து செல்லும்,தூதுவனை,பிற நாட்டினர்,கொன்றுவிட்டால், கொன்றவர்கள், தூதுவனின் நாட்டினறை பகிரங்கமாக போருக்கு அழைப்பதற்கு சமம்.)

  (இந்த காரணங்களுக்கு உரியவர்களாக முஸ்லிம்கள் இருந்தால்,முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்கு,மற்றவர்களுக்கு எந்த தடையும் இல்லை….அப்படி மற்ற மதவேதங்களில் குறிப்பிட்டு இருந்தாலும்,அதை எற்றுக்கொள்வோம்.)
  போர்ன்னு வந்த பிறகு,பிடரியில் வெட்டுவதென்ன,குத்துவதென்ன…அது அனைவருக்கும் பொருந்தும்…
  ஆனால்,இப்படிப்பட்ட காரணங்களுக்குரியவன்,நிச்சயம் முஸ்லிமாக இருக்க முடியாது…

  சரி…
  இப்படிப்பட்ட காரணிகளால் தூண்டப்பட்டு முஸ்லிம், ஒரு சமூகத்தின் மீது போர் தொடுக்க செல்லும் போது,அவர்களிடம் ஒரு நிபந்தனை முன்வைக்கப்படும்.
  எதிரிகளை நோக்கி நீங்கள்,அல்லாஹ்வையும்,அவனது தூதரையும்,ஏற்றுக்கொண்டால்,போர் தவிர்க்கப் படும்.ஏற்க மறுத்தால், முஸ்லிம்கள்,போர் புரிய வந்த காரணத்தின்,அடிப்படையில்,எதிரிகள் கீழ்படிந்து,ஜிஸ்யா செலுத்தும் வரையில்,அவர்களுடன் போர் புரியப்படும்….

  வரி…இஸ்லாத்தில்,இரண்டு வகை மட்டுமே….
  ஒன்று,ஸகாத்(ஏழை வரி),இது இஸ்லாத்தை ஏற்றவர்கள் மீது கட்டாயக் கடமை….
  மற்றது..ஜிஸ்யா(பாதுகாப்பு வரி),இது இஸ்லாத்தை ஏற்காதவர்கள்,இஸ்லாமிய ஆட்சிக்குபட்டு இருந்தால்,அவர்கள் மீது விதிக்கப் படுவது….

  இவர்கள் ஜிஸ்யா தர மறுத்தால்,அவர்களுடன் போர் புரிய இஸ்லாம் சொல்கிறது…

  ஸகாத்.
  இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்று…
  ஒரு முஸ்லிமின்,சராசரி ஆண்டு வருமானம்,நிணயிக்கப்பட்ட அளவை தாண்டும்போது,அவர் ஸகாத்,கொடுக்க கடமைப்படுகிறார்.
  அப்படி கடமைப்பட்டவர்,அதை தர மறுக்கும் போது,அவர்களுடனும் போர் புரியவேண்டும்,என்பதை கீழே பதியப்பட்ட ஹதீஸ் உறுதி செய்கிறது.

  நபி (ஸல்) அவர்கள் மரணித்து,அபூபக்கர் (ரலி) (ஆட்சிக்கு)வந்ததும்,அரபிகளில் சிலர்,(ஸகாத்தை மறுத்ததின் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க)அபூபக்கர் (ரலி) தயாரானார்.உமர்(ரலி),’லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியவர்,தன் உயிரையும்,உடமையயையும் என்னிடம் இருந்து காத்துக்கொண்டார்,தண்டனைக்குறிய குற்றம் புரிந்தவரைத்தவிர,அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது,நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும் என்று கேட்டார்.
  அபூபக்கர்(ரலி), உமரை(ரலி) நோக்கி அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்து பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன்.ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்,
  அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களிடம்,(ஸகாததாக)வழங்கி வந்த ஓர் ஒட்டக குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட,அதை மறுத்ததற்காக இவர்களுடன் நான் போரிடுவேன்,என்றார்.இது பற்றி உமர் (ரலி) அவர்கள்,அல்லஹ்வின் மீது ஆணையாக! அபூபக்கரின் இதயத்தை(தீர்க்கமான தெளிவை பிரும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார்.அவர் கூறியது சரியானது தான் என நான் விளங்கிக் கொண்டேன்.என்றார்.
  ஸஹீஹுல் புஹாரி: 2:1399,1400

  இங்கு,ஜிஸ்யாவுக்கு,மற்றவர்களுடனும்,ஸகாதிற்கு,முஸ்லிம்களுடனும்,போர் புரியப்படும் என விளங்குகிறது…
  போர் எப்படி…அது இறைவன் வகுத்த வழியில்…
  இங்கு,முஸ்லிம்களை,எச்சரிக்க வில்லை,அச்சுருத்தவில்லை, அவர்களுடனும், போர் தான் செய்யப்படுகிறது..
  இதுவல்லாத,இன்ன பிற,கடுமையான ஷரீஅத்,சட்டங்களும் இஸ்லாமியர்களுக்கு தானே….
  அவர்களின் தவறுக்கு,தண்டனை தரும்,உலகின் கடுமையான சட்டங்கள் தானே அவை….

  இஸ்லாம்,மற்ற மக்கள் மீது போர் தொடுத்து,அவர்கள் தனது ஆட்சியின் கீழ் வரும் போது,அவர்களிடம்,ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டாயமாக வசூலிக்கிறது.
  அதனைக் கொண்டு,அவர்களின் உயிர் உடமைக்கு உத்திரவாதம் அளிக்கிறது…
  அவர்களுக்கு பிறரால் பாதிப்பு ஏற்படும்போது,அவர்களுக்காக போரிடுகிறது.
  —————–

  மேற்கண்ட காரணங்களுக்கு உரியவர்களாக முஸ்லிம்கள் இருந்தால், முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்கு,மற்றவர்களுக்கு எந்த தடையும் இல்லை….அப்படி மற்ற மதவேதங்களில் குறிப்பிட்டு இருந்தாலும்,அதை ஏற்றுக்கொள்வோம்.

  நன்றி,

  அன்புடன்
  ரஜின்

 44. //இதுக்கு ஏங்க,அவ்வளவு தூரம் போகனும்…இஸ்லாமே அத தான் சொல்லுது…..
  //

  சூப்பர் ரஜின்,

  உங்களது மதப்புத்தகமான குரானில் இந்த வரிகளையும் சேர்க்கச்சொல்லி உங்கள் மௌலானாக்களிடம் சொல்லலாமே.

  ”முஸ்லீம் அல்லாதவர்களே, யார் தங்களை முஸ்லீம் என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்கள் கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்”

  ”உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஸ்லீமல்லாதவர்களை உறுதிப்படுத்துங்கள் முஸ்லீம்களின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் முஸ்லீம்களின் பிடரிகளின் மீது வெட்டுங்கள் முஸ்லீம்களின் விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்”

  ”இறை நம்பிக்கை கொண்ட முஸ்லீமல்லாதவர்கள் இறைவனின் பாதையில் போர் செய்கிறார்கள். முஸ்லிம்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே நீங்கள் ஷைத்தானின் நண்பர்களான முஸ்லீம்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும் ”

  (Edited and Published.)

 45. ரஜின் – மனித உருவில் மனிதன்.
  ரஹ்மத்துல்ல்லா – மனித உருவில் மிருகம்.

  எல்லாப் புகழும் இறைவனுக்கே

 46. Dear Brother Mr. Razin

  //ஸகாத்.
  இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்று…
  ஒரு முஸ்லிமின்,சராசரி ஆண்டு வருமானம்,நிணயிக்கப்பட்ட அளவை தாண்டும்போது,அவர் ஸகாத்,கொடுக்க கடமைப்படுகிறார்.//

  That means if a citizen is not a very rich person but a Muslim he need not pay Shaath.

  But all tne non- muslims have to pay jisiyaa tax whether ordinaru man or rich man.

  That means ordinary man who is already struggling to take care of his family expenses will obviously forced (indirectly) to follow islam!

  //இஸ்லாம்,மற்ற மக்கள் மீது போர் தொடுத்து,அவர்கள் தனது ஆட்சியின் கீழ் வரும் போது,அவர்களிடம்,ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டாயமாக வசூலிக்கிறது.//

  This is discriminataion based on Religion. Are not the Muslims get protected? They are not paying protection money. If a ruler wants to protect some citizens without taxing them, and to protect other citizens only after taxing them, why does he rule that country?

 47. சகோதரர் திருச்சிக்காரன் அவர்களுக்கு எனது பதில்….

  //இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல் – புகாரி, 3012).//

  //இந்த விசயத்திலே இதைப் படிக்கும் யாரும், பெண்களும் , குழைந்தைகளும் கூட காபிர் தான் அதனால் அவர்களைத் தாக்க தயங்காதே என்றே பொருள் கொள்ளவார்கள்.//

  //இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//

  எனது பதில்:
  சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
  தங்களின் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்,அது பற்றி,முழுமையாக ஆராயக் கடமைப்ப் பட்டுள்ளேன்,ஏனென்ரால்,இஸ்லாத்தில் நான் ஒரு மாண்வனே,கற்றுள்ளேன்,இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்…
  போர் சம்பந்தமான ஹதீஸ்களை பார்க்கும் போது,நபியவர்கள் காலத்தில் நடைபெற்ற போர்களுக்கான,ஹதீஸ் ஆதாரங்களில்,ஒன்று கூட மேற் சொன்ன ஹதீஸுக்கு சாதகமான அறிவிப்பை கொண்டு இல்லை….
  நபியவர்கள் காலத்தில்,நடந்த எந்த போர்களும் இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட வில்லை.பிறகு ஏன் இது போன்ற ஒரு சந்தேகத்தை நபித்தோழர்கள் கேட்டு,அதற்கு,நபி (ஸல்) அவர்களும் இசைவதைப்போல் பதில் அளித்தார்கள் என பார்ப்போம்.

  இஸ்லாமிய அரசு கட்டமைக்கப்பட்ட காலத்தில், யாத்ரிப் (மதீனா)நகரம், இஸ்லாமிய தலைமையகமாக விளங்கியது,அதை சுற்றியுள்ள,எதிரிகள் பெரும்பாலும் யூதர்களாகவும்,கிராமத்து அரபிகளாகவும் இருந்தனர்…
  இவர்களில்,யூதர்கள் முஸ்லிம்களுடன் நண்பர்களாக பழகிக் கொண்டே அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்,இன்னும் சிலர் வெளிப்படையாகவே எதிப்பை காட்டி முஸ்லிம்களை நேரடியாக எதிர்கொள்ளும் திறன் கொண்டு இருந்தார்கள்.வேறு சிலர்,சிறு குழுக்களாக வாழக்கூடியவர்கள்,அவர்களுக்கு எந்த ஒரு நிலையான இருப்பிடமும் இருந்திருக்கவில்லை,

  இவர்களில் நாடோடி வாழ்வு வாழ்ந்த கடைசிப் பிரிவினர்,முஸ்லிம்களுக்கு எதிராக குழப்பம் செய்யவும்,பின்பு அவர்களுக்கு எதிராக,படைப்பிரிவு அனுப்பப் பட்டால்,அதை எதிர்கொள்ளாது,இடம்பெயர்ந்து சென்றுவிடுவர்,அல்லது,அது சமயம் குகைகளிலும்,மலைக் கணவாய்களிலும் மறைந்துகொள்வர்.இப்படிப் பட்டவர்களின்,செயல்களை கட்டுப்படுத்த,இரவு நேரத்தாக்குதல் தவிர வேறுவழி இருந்திருக்க வாய்ப்பில்லை.

  மேலும் அந்த நபிமொழியை ஆதாரமாக கொண்டு,எந்த ஒரு தாக்குதல் சம்பவமும் நடந்ததற்கான ஹதீஸ் ஆதாரங்களையும் நான் காணவில்லை.

  எனவே மெற்கண்ட அந்த ஹதீஸை நாம் விதிவிலக்காகவே கருத முடியும்…

  //இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//

  இதை தங்களின் சொந்தக் கருத்தாகவே எண்ணுகிறேன்.

  அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
  நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள்.
  ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்: 2945

  மேலும் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான மேற்கண்ட ஹதீஸயே,நாம் இதற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்….

  மேலும் இது போன்ற இரவு நேரத்தாக்குதல் நடந்து,பெண்களும்,குழந்தைகளும் முஸ்லிம்களால்,கொல்லப்பட வில்லை என அறுதியிட்டுக் கூற முடியும்….

  மேலும் ரஹ்மத்துல்லாஹ் போன்றவர்கள்,ஆதாரமாக காட்டும் ஹதீஸ் 3012,3013…..
  ஆனால் அதை தொடர்ந்து வரும் 3014,3015 எண் கொண்ட ஹதீஸ்களை அவர்கள் பார்க்காமல் விட்டது,என்ன உள்நோக்கத்தின் அடிப்படையில் என எனக்கு விளங்கவில்லை….

  அவை:
  அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்,
  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை “கண்டித்தார்கள்”.
  ஸஹீஹுல் புஹாரி:3014

  இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை “தடைசெய்தார்கள்”.
  ஸஹீஹுல் புஹாரி:3015

  சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
  எந்த நிலையிலும்,நபி(ஸல்) அவர்கள் மனித நேயத்துடனேயே நடந்துள்ளார்கள், அவர்களின் நேர்மையினை,பல்வேறு காலகட்டங்களில் அவர்களது எதிரிகளே புகழ்ந்துரைக்க காணலாம்…

  நன்றி

  அன்புடன்
  ரஜின்

 48. Rahmattullah tells what is islam directly.
  Rajin also tells the same thing but in a sugar coated way.

  Rahmattullah is more honest.

 49. இந்த மருமொழிகளைஎல்லாம் படித்துக்கொண்டுதான் வருகிறேன். ரஹ்மதுல்லஹ் எழுதியது உண்மையில் ஒரு பயங்கரவாதி எழுதியதைப்போலவே உள்ளது! ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை, இதெல்லாம் எதிர்ப்பார்த்தது தான். ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவது போல உள்ளது!!

  //I understood this is not the website for knowing the truth.//

  —————————————
  Mr.Mohammed, if this is not the site to know the truth, go to Dr.Zakir Naik, he will tell you more about truth, ofcourse fabricated ones!!
  You will realize which is true and which is not…

 50. //அறிவுரைக்கு நன்றி. எங்களதுமார்க்கத்தில் இருப்பதெல்லாம் நல்லதுதான். அது அல்லாஹ்வின் வழி. உங்க்ளுடையது சாத்தானின் வழி. //

  ——————-

  Look at the hatred… Viraivil therindhuvidum bayangaravaadhiyae, yaarudayadhu nalladhu, yaarudayadhu saithhanudayadhu endru!!
  Mokkai podaadheergal!

 51. நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்! பலபேர் ஆங்கிலத்தில் ‘Terrorist’ என்ற வார்த்தையையும் தமிழில் ‘தீவிரவாதி’ என்ற வார்த்தையையும் காய்யாள்கிறார்கள். ஆனால் உண்மையில் ‘தீவிரவாதி’ என்னும் சொல்லுக்கு நிகரான ஆங்கிலப்பதம் ‘Extremist’ என்பதேயாகும். ‘Terrorist’ என்ற ஆங்கிலப்பதத்திற்கு இணை ‘பயங்கரவாதி’ என்பது. இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது! தீவிரவாதி என்பவன் ஒரு லட்சியத்திற்காக, தவறு நடக்க காரணமானவர்களை தண்டிப்பான். உதாரணத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர்கள் செய்வது ஒரு வகையில் குற்றமேயானாலும், அது தற்காப்பிற்காக செய்வது. சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்காக நடப்பது. அவர்கள் அப்பாவி மக்களை கொள்ளமாட்டார்கள்! ஆனால் பயங்கரவாதி என்பவன் யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். விடுதலைப் புலிகள் இயக்கம் முதலில் தீவிரவாத (Extremist) ஆக துவங்கப்பட்டு, பிறகு பயங்கரவாதத்தை (Terrorism) ஆகிவிட்டது. இனி, சொற்க்களை பார்த்து உபயோகியுங்கள்!!

 52. சகோதரர்,அன்பரசன் அவர்களே…
  முதலில்,உங்களுக்கு எனது உளமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…

  தாங்கள் கேட்டது….
  //உங்களது மதப்புத்தகமான குரானில் இந்த வரிகளையும் சேர்க்கச்சொல்லி உங்கள் மௌலானாக்களிடம் சொல்லலாமே.//

  இது சாத்தியம் அல்ல என நீங்கள் நன்குணர்ந்த நிலையில்,வெறும் வாதத்திற்காகவே கேட்டுள்ளீர்கள் என நம்புகிறேன்….

  குர்ஆன் ஒன்றும் தமிழக அரசின் 10ஆம் வகுப்பு இலவச பாடப்புத்தகம் அல்லவே….அடுத்த பதிப்பில் விரும்பியதை சேர்க்கவும்,விரும்பாததை நீக்கிவிடவும்.
  அந்த உரிமை,இப்போதுள்ள மௌலானா அல்ல,அதை உலகுக்கு தந்த நபி(ஸல்) அவர்களுக்கே இல்லை…..

  All rights reserved to Almighty Allah

  நன்றி

  அன்புடன்
  ரஜின்

 53. இங்குள்ள நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்த இணைய தளத்தை கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பார்த்தேன். இங்கு ஆரோக்கியமான மத விவாதங்களுக்கு தடையின்றி அனுமதி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு நண்பர் ரஹமதுல்லாஹ் என்பவரது எழுத்துகளை பார்க்கும்போது எனக்கு ஒரு வித சந்தேகம் தோன்றுகிறது, அப்படி ஒரு பெயரில் வேறு யாரேனும் எழுதுகிறார்களோ என்று, ஏனெனில் முஸ்லிம்களின் பெயரில் பல கிறிஸ்தவர்கள் இணைய தளங்களில் இஸ்லாமிய கருத்துக்களுக்கு எதிராக வலம் வருவதை நான் அறிவேன், நான் சந்தேகப்படுவத்தின் காரணம் குற ஆனுடைய வசனங்களை எப்படியெல்லாம் அவர்கள் தப்பர்த்தம் கர்ப்பிப்பார்களோ அவ்வாறே நண்பருடைய விளக்கங்களும் அமைந்துள்ளது. ஒன்று அவர் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது சிலருடைய சுய லாபத்திற்காக மூளை சலவை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *