பெரியாரின் மறுபக்கம் – பாகம் 17: ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!

பெண்ணடிமையை அழிக்க வந்த வீரர்!
பெண் விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்!
பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தீரர்!

– என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை நாம் பாராட்டுகிறோம். போற்றுகிறோம். தான் ஆணாக இருந்தபோதிலும் ஆணாதிக்கத்தை வெறுத்தவர் என்று அவரின் சீடர்கள் முதல் நாமும் கூறுகிறோம். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஆணாதிக்க மனப்பான்மை இருந்து இருக்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

marriage01 ”பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியது ஒருவேளை அவரை நினைத்து தான் சொல்லியிருப்பாரோ என்னவோ நமக்குத் தெரியது ஒருவேளை இது உண்மையாகக்கூட இருக்கலாம்.

எப்படி? இதோ!

அன்று முதல் இன்று வரை பெண் விடுதலைக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொண்டிருக்கும் பலர் ‘பெண்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் பெயருடன் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதுகின்றனர். இது தனக்கு மனைவி அடிமையானவள் என்பதைக் காட்டுவதைத் தவிர வேறில்லை. ஆனால் ஆண் தன் பெயருடன் தன் மனைவியின் பெயரை சேர்ப்பதில்லை. மனைவியின் பெயருடன் தன் பெயரையும் கணவன் போடச் சொல்வது ஆணாதிக்க மனப்பான்மையைத்தான் குறிக்கிறது என்று பெண்களுக்காக போராடும் போராளிகள் பலர் கூறுகின்றனர்.

அதேபோல், வீரமணியிடம் ஒருவர், ”பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டுமென்று மேடை தோறும் முழங்குகிறோம். ஆனால் மனைவி தன் பெயருக்கு பின்னால் கணவன் பெயரையும் சேர்த்து போட்டுக்கொள்வது எதற்கு? அதுபோன்று ஆடவர், மனைவி பெயரை சேர்த்து போட்டுக்கொள்வது இல்லையே ஏன்? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு வீரமணி பதில் கூறும் போது, ”மனைவி என்பவர் கணவனின் (ஆணின்) அடிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் அப்படி நடக்கிறது” என்று கூறுகிறார்.
(நூல்:- வீரமணி பதில்கள்)

அதாவது மனைவியின் பெயருக்கு முன்னால் கணவனின் பெயரைப் போட்டுக்கொள்வது என்பது மனைவி என்பவர் கணவனின் அடிமை என்பதற்காகத்தான் என்று வீரமணியே அடித்துக் கூறிவிட்டார். வீரமணியின் சொல்படி பார்த்தால், ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் திருமணத்திற்குப் பிறகு(இரண்டாவது திருமணத்திற்கு பிறகு) மு. ஹ. மணிம்மை (மு. அரசியல்மணி)என்று இருந்துவந்த பெயரை தன்னுடைய பெயரையும் சேர்த்து அதாவது ஈ.வே. ராமசாமி மணியம்மை என்று தமிழிலும், நு. ஏ. சு. மணியம்மை என்று ஆங்கிலத்திலும் அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தாரே-இது மனைவி என்பவர் கணவனின்(ஆணின்) அடிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நடந்ததுதானே! வீரமணியின் பதில்படி இது ஆணாதிக்க மனோபாவமா? இல்லையா?

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உண்மையிலேயே தனக்கு தன் மனைவி அடிமையல்ல என்று நினைத்திருந்தால் தன்னுடைய பெயரை சேர்க்கசொல்லியிருப்பாரா? தன்னுடைய பெயரை எதற்கு சேர்க்க சொல்லவேண்டும்? அப்படி என்ன அவசியம் வந்தது? மணியம்மையின் பெயருக்கு முன்னால் தம் பெயரை சேர்க்க வேண்டுகோள் விடுத்த ஈ.வே. ரா. தன் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ மணியம்மையின் பெயரைச் சேர்க்க வேண்டுகோள் விடுத்திருக்கலாமே! அது தானே முற்போக்கு! ஏன் அவ்வாறு செய்யவில்லை? தன் பெயருக்கு முன்னால் ஒரு பெண்ணினுடைய பெயரை சேர்ததால் அவமானம், அகெளரவம் என்றெல்லாம் நினைத்திருப்பாரோ என்னவோ! யாருக்குத் தெரியும்? ஒரு வேளை இதுதான் ஆணாதிக்க மனோபாவமோ! அவர்களுக்கே வெளிச்சம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம் ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து மீள பல வழீகளைக் கூறியுள்ளார். ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதிய ‘பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’ என்ற நூலிலே, ”ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும். ஜிப்பா போடவேண்டும். உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது. நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்” என்று கூறுகிறார்.

மேலும் ‘குடியரசு’ இதழில் (16-11-30) கேள்வி பதில் வடிவில் இவ்வாறு எழுதுகிறார்:-

பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.

பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)

marriage02 இவ்வாறெல்லாம் பெண்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரைக் கூறுகிறார். இந்த அறிவுரைகள் எல்லாம் தன்னுடைய திராவிடக்கழகத்தினுடைய தோழிகளுக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருப்பார் என்று நம்பிக்கைக் கொண்டு நமக்கு எழுந்த சந்தேகங்களை கேட்போம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்ணடிமை நீங்கும் விதமாக கூறிய அறிவுரைகள், நாகம்மையாருக்கும், மணியம்மையாருக்கும் மற்றும் கழக தோழிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படியானால் பெண்ணடிமை நீங்க ஆண்களைப் போலவே பெண்களும் வேஷ்டி, ஜிப்பா போடச் சொன்னரே ஈ.வே. ராமசாமி நாயக்கர்-

ஏன் மணியம்மையும் கழக தோழிகளும் வேஷ்டி-ஜிப்பா போடவில்லையே?

புடவையே தேவை இல்லை என்று சொல்லிவிட்டாரே-

ஏன் மணியம்மையும், கழக தோழிகளும் புடவையை உதறாமல் இருந்தார்கள்? இன்றும் இருக்கிறார்களே ஏன்?

கூந்தல் இருப்பது அநாகரீகம் என்று சொன்னாரே-

பின் ஏன் மணியம்மையாரும், கழக தோழிகளும் கூந்தலை வைத்திருந்தனர்? ஏன் இன்றும் வைத்திருக்கின்றனர்?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மீது அல்லது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கையை கடைபிடிக்கின்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற மணியம்மையும், கழக பெண்மணிகளும் ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்படி செய்யவில்லை? இதுதான் கொள்கைப்பிடிப்பா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இறப்புக்குப்பின் மணியம்மை தலைமை ஏற்று நடத்தினாரே திராவிடர்கழகத்தை – அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கொள்கையை கடைப்பிடித்தாரா? இல்லையே!

தம்மை பின்பற்றும் மக்கள் தம்முடைய வாழ்வு செயலுக்கு ஒரு முன்மாதிரியான தன்மையில் நடந்து காட்டுவது தானே ஒரு நல்ல தலைவரின் கடமை.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னமாதிரி, பெண்ணடிமை விலக, மணியம்மையார் கூந்தலை அகற்றி, கிராப் வைத்துக்கொண்டு, புடவை கட்டாமல் ஜிப்பாவோ அல்லது சட்டையோ போட்டுக் கொண்டு, வேஷ்டிக்கட்டிக் கொண்டு முற்போக்காக ஒரு புரட்சி செய்திருக்கலாமே! நீங்கள் தான் புரட்சிவாதிகளாயிற்றே! முற்போக்காளர்கள் நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொள்பவர்களாயிற்றே! ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது முற்போக்கு கருத்து அல்ல என்று கடைபிடிக்கவில்லையா? அல்லது ஈ.வே. ராமசாமி நாயக்கரின்படி செய்தால் தமிழ் பண்பாடு அழிந்துவிடும் என்ற காரணமா?

எந்தக் காரணமாக இருந்தாலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த கருத்து ஏற்புடையது அல்ல என்ற காரணத்தால்தான் மணியம்மையும், கழக பெண்மணிகளும் கடைபிடிக்கவில்லை என்று நாம் நம்பலாம்.

நம்முடைய இந்த நம்பிக்கை பொய் என்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்படி இவர்கள் ஏன் கடைபிடிக்கவிலலை என்பதை விளக்குவார்களா திராவிட கழகத்தவர்?

ஆண்களும், பெண்களும் வித்தியாசம் தெரியாதபடி பழகவேண்டும், உடை உடுத்தவேண்டும் என்றெல்லாம் புரட்சியான செய்திகளை சொன்னார் ஈ.வே. ராமசாமி நாயக்கர்.

ஆனால் தம்முடைய திராவிடர் கழகத்திலேயே பெண்களுக்கான தனி அணியை உருவாக்கினாரே ஏன்? திராவிடர் கழகத்திலே ஏன் மகளிரணி வைத்தார்கள்?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அகராதிப்படி, ஆண்களும், பெண்களும் வித்தியாசமில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்பதுதானே! ஆனால் இவர்களே பெண்கள் அணி, ஆண்கள் அணி என்று பிரித்தது ஆண்கள் வேறு. பெண்கள் வேறு என்பதைக்காட்டத்தானே! திராவிடர் கழகத்திலே மகளிரணி என்று பிரித்தவர்களுக்கு பெண்களும், ஆண்களும் ஒரே மாதிரிதான் என்றுச் சொல்ல அருகதை உண்டா?

தங்களுடைய கொள்கைக்கு மாறாக மகளிரணியை உருவாக்கினார்களே – அப்படி உருவாக்கும்போது யார் சட்டைப்போட்டுக்கொண்டு, தலைமுடிவெட்டி கிராப் வைத்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை மட்டும்தான் சேர்ப்போம் என்ற விதியை சேர்த்திருந்தால் இன்னும் புரட்சிகரமாக இருந்திருக்குமே – ஏன் அவ்வாறு செய்யவில்லை?

திராவிடர் கழகத்தில் சேருபவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அல்லது தங்கள் அமைப்பினுடைய கொள்கைகளை ஏற்று செயல்படுவார்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கொள்கையை கடைபிடிக்கும் திராவிடர் கழகத்தினர் மகளிர் விஷயத்திலும் மேற்கண்ட விதிகளை சேர்த்திருக்கலாமே! பெண்ணடிமை விலகவேண்டும் என்ற நோக்கம் உண்மையிலேயே இருந்திருந்தால்தானே இவர்கள் இந்த விதியை சேர்ப்பதற்கு என்ற எண்ணம் அல்லவா நமக்கு தோன்றுகிறது!

மேலும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

இஸ்லாமிலும் பெண்கள் எவ்வளவு அடிமையாக – கேவலமாக நடத்தப்படுகிறார்கள் தெரியுமா?

இதைப்பற்றி பகுத்தறிவாளர்கள் இதுவரை பேசியதுண்டா? அல்லது அவர்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா? இதைப்பற்றி கேள்விக் கேட்டால் என்ன தெரியுமா சொல்வார்கள்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”நமக்கு கடிதம் எழுதிய நண்பர் ‘இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறைபோட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்’ என்று எழுதியிருக்கிறார். அது (உறைபோட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக்கொள்வோம். இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகிறவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்ராயம்”
(குடியரசு 17-11-1935)

இஸ்லாமின் பெண்ணடிமையைப் பற்றிக் கேட்டால் பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்று சொன்னால் இந்து மதத்திலும் பெண்ணடிமை விலக பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்கப்படவேண்டியவை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் சொல்லவில்லை?

முஸ்லிம்களும் தமிழர்களே! திராவிடர்களே என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம் தமிழ் பெண்களின் அடிமைத்தனம் விலக போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமா? இல்லையா? கோஷாமுறையை அகற்ற மசூதிமுன் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாமே. ஆனால் இதுவரை போராட்டம் நடத்தவில்லை. காரணம் முஸ்லிம்களிடம் போனால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்களோ என்ற பயமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? திராவிடர் கழகத்தவர் உண்மையிலேயே பெண்ணடிமை விலக பாடுபடுவர்கள்தான் என்றால் எல்லா மத பெண்களுக்கும் சேர்த்து போராட வேண்டியதுதானே! அது தானே சீர்த்திருத்தமாக இருக்கும்! இனிமேலாவது அவர்களுக்காக போராடுவார்களா?

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்ணடிமை விலக இன்னொரு வழியை கூறுகிறார்:-

”பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்”.
(குடியரசு21-09-1946)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறிய இந்த அறிவுரையைகூட ஈ.வே. ரா. வே கடைபிடிக்கவில்லை. அதற்கு முரணாகத்தான் நடந்துகொண்டார். ஈ.வே. ரா. மணியம்மை என்று கூப்பிடுமாறு அறிவுறுத்தினாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – அந்தப் பெயரிலே இருக்கின்ற அம்மை என்பது பெண்பாலை குறிக்கின்றது. அதைத்தவிர்த்து வெறும் ஈ.வே. ரா. மணி என்று அழைக்கச் சொல்லியிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?

ஆண்கள் பெயரையே பெண்களுக்கு இடவேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் – எத்தனை பெண்களுக்கு ஆண் பெயர் வைத்துள்ளார் என்பதை சொல்லமுடியுமா?

ஒரே ஒரு உதாரணம்.

திருவாரூர் தங்கராசு மகளுக்கு பெயரிடும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆண் பெயரையா வைத்தார்? பெண் பெயரைத்தானே வைத்தார். ஏன் தன் கொள்கைப்படி ஆண் பெயர் இடவில்லை? பதில் சொல்லுங்கள் பகுத்தறிவாளர்களே!

annathurai

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

துரோகி! எவ்வளவு இலேசாகக் குற்றம் சாட்டிவிடுகிறார்!

பொது வாழ்வால் வயிறு வளர்ப்பவர்கள் – எவ்வளவு கேவலமான குற்றச்சாட்டு – இதற்கு என்ன காரணம் காட்ட முடியும், நான் ஏழை என்பதும், அவர் இலட்சாதிபதியின் திருமகானர் என்பதும் தவிர!!

இதைச் சொல்வதால் என்னைப் பற்றித்தான் பொதுவாக மக்கள் எடைபோட – கணக்குப் பார்க்க – விரும்புவார்கள்? பெரியாரைப் பற்றியும் கூடத்தானே!

இன்னும் சொல்லப்போனால், பல்லக்குத் தூக்கிக்கே இவ்வளவு பலன் கிடைத்ததென்றால், பல்லக்கில் சவாரி செய்தவருக்கு அதிகமாகத்தானே கிடைத்திருக்கும் என்றுதானே பொதுவாகப் பேசுவார்கள்? பொது வாழ்வுத் துறைக்கே பொறுப்பற்றவர்களின் மூலம் ஒரு பழிச்சொல் கிடைக்குமேதவிர, என்னையா இச்சொல் இழிவுபடுத்தும்.

இவ்விதமெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத மனநிலை ஏற்பட்டுவிட்டது பெரியாருக்கு – ஏமாற்றத்தின் காரணமாக எனவேதான், தூற்றுகிறார். தூற்றினால் கோபம் பிறந்து நாம் சுடுசொல் கூறுவோம். அதைத்துருப்புச் சீட்டாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார். இங்குதான் என்னை அவர், பதினைந்தாண்டுக்குப் பிறகும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
(திராவிட நாடு 09-10-1948)

18 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 17: ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!”

 1. Dear Sirs,
  Vanakkam.
  Thank you for sharing this indepth opinion.
  My salutes to the Author & TamilHindu.
  Both the articles, போகப் போகத் தெரியும் & பெரியாரின் மறுபக்கம் complement each other.
  Thank you and Good wishes,
  God Bless,
  Anbudan,
  Srinivasan.

 2. Pingback: tamil10.com
 3. EVR used to call widows as “thumbu aruththathu,” as if they are cattle let loose from the rope they were tied when they had husband. EVR was number one MCP!
  Malarmannan

 4. I think EVR also told that the uterus of women (garpapai) has to be removed. Did he or his followers practise in their families. Had they practised, none of their descendants would’ve been there today to spoil Tamil Nadu.

 5. EVR advocated free-love without any commitment of rearing children and maintaining family so that every individual can be free to engage in any kind of activity of choice. Women have the hurdle of concieving a child and therefore they should be relieved of from that hurdle.
  Plato adivocated free love but he said children born should be the responsibility of the society. By this, every man and woman would be parents of every child irrespective of to whom that child was born. This makes sense whereas, EVR’s advocacy is encouraging irresponsibility.
  MALARMANNAN

 6. My sincere thanks and admiration to Mr. Ma. Venkatesan for his intelligence, courage and quest for exposing the truth!

  Brother Ve. Mathimaaran has written an article in his blogspot.

  ‘பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்’ on the blog ‘வே.மதிமாறன்’.

  That could probabaly intended to make a counter arguement for Mr. Venkatesans wrritings.

  I have expressed my views in that.

  (Edited)

 7. Pls check ravikumar article in kalachuvadu, he has clearly broken the image of what actually EVR has written regarding ladies..

 8. மறியாதைக்குரிய ம.வெங்கடேசன்

  நீங்கல் பெரியார் பெண்களுக்கு உறிமை கொடுக்கவிலை,

  இஸ்லாமியர்கள் பள்ளிக்குமுன் பெண்ணுக்கு உருமை கொருவரா என்று கேட்டு இருந்தீர்கல்.

  இல்லாத ஒன்றை எப்படி கோரமுடியும்,

  பெண்கள் தன் உடம்பை முலுவதும் மரைப்பது குற்றமா,

  இன்றைய நவீன உலகில் ஈவிடீசிங் எப்படி நடக்கிறது,

  பெண்கல் உரிமை என்கே மீறபட்டது,

  மனைவியின் பெயர் முன் கணவன் பெயர் பொட்டுவது ஹிந்துகலச்சாரம்,

  இஸ்லாமியர்கள் ஆனாக இருந்தாளும் பெண்ணாக இருந்தாலும் பெயருக்கு பின்( முன் அல்ல ) தன் தந்தையின் பெயரை பொடுவார்கள்.இது தன் இஸ்லாமியர் சட்டம்,

  உலகத்திலேயே முதன் முதலில் பெண்ணுக்கு சொத்துரிமை கொடுத்ததுயார்
  இஸ்லாம்தான்

  (Comment edited & published)

 9. Sorry to write in English, I don’t know how to type in Thamizh.

  There is a destination, and the way to reach the same may be different. Animals don’t have religion, but they have principles. For example even the Lion don’t kill the other animals for pleasure except human. Dogs (and most of the animals) don’t cross their boundaries.

  About Women liberation: First we have to take care of the family, then the friends and relative, and then the others. Same way, first we talk about our restrictions, and then the others. Once I was talking about the Sri Lanka issues, and my friend asked why don’t you worry about the Pakistan issues. The answer is the Pakistan is in the outer circle. Simple – one step at a time.

  The Last Name: Basically we accept the Lady as one of our family. The last name is the family name. We are not ignoring their rights, we are giving the rights. Personally, nobody in our family changed their last name. This is basically to hold the hierarchy of the family, and not the rights. Be honest, who controls the family?

  Dressing sense: Common, not only in India, watch the fashion channel. All the women dress will be attractive. Simplicity – don’t show off, you don’t want to agree? Now days, most of the ladies don’t want to have long hair. Reason – maintenance time. That is what he told around fifty years ago.

  Why he did not ask his wife to cut her hair? If he asked, then you may told that “MALE DOMINATION”. This is individual right. His wife may like to grow hair, similar to his big “DHAADI”.

  Separate group for women: I really don’t know what you are talking about. We eliminated the individual queue in the ticket counter. Grow up; he is talking about equal right, not the separation.

  THEENDAMAI: The other part of the world called Racism. All the people need basic rights. Don’t say survival of the fittest. Then the same, now the other group trying to be the stronger one.

  Call the ladies with male names: Guess what, the girls talk to the friends with “DA” denotes the male group, and “DI” used by males. This describes the closeness. Think in the other way, there is a term called factor of safety. If you are trying to achieve something, you have to over do. Most of the Periyar principle comes in this way.

  Every leader has some Goal to achieve, and he did that. I studied Thamizh in my school. In one lesson, they mentioned, Periyar planned to do the work of two hundred years in twenty years. Two thousand years ago, Thiruvalluvar and Ouvai are friends. Thousand years ago, Rajaraja Cholan sister is his advisor. Thirty years ago, Indira was the Prime Minister of India.

  Now, the people in India have more freedom, more education. One group cannot suppress the other group.

  All happened not only because Periyar, but because of all the good leaders.

  Don’t look for Nadhi moolam, Rishi moolam.

  Just to show the intelligence, do not dig into wrong details.The net result is good, and most of the population is enjoying that. The truth is always the truth.

 10. //உலகத்திலேயே முதன் முதலில் பெண்ணுக்கு சொத்துரிமை கொடுத்ததுயார்
  இஸ்லாம்தான்//

  ஏன் இந்த ஆகாச பொய்?

  கதீஜா பெரிய பணக்காரராக இருந்தார். அவரிடம் வேலை பார்த்தவர்தானே முஹம்மது? கதீஜாவின் மூன்றாவது கணவர்தானே முஹம்மது?

  அப்படிப்பட்ட நிலையில் அரபிய பெண்கள் இருந்தார்கள்.

  இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?

 11. //இஸ்லாமியர்கள் ஆனாக இருந்தாளும் பெண்ணாக இருந்தாலும் பெயருக்கு பின்( முன் அல்ல ) தன் தந்தையின் பெயரை பொடுவார்கள்.இது தன் இஸ்லாமியர் சட்டம்,
  //
  No It is just arab way. Nothing to do with Islam.
  Islam has taken the arab cultural habits. That is all.
  The tamilians forget about their own culture and adopt arab culture thinking that is islamic culture.

 12. HINDU is not a religion,,,,

  it was an identification fo the people from the nation.

  where ever we go there is a talk about religion,

  do better and be accountable, every one will follow U, if they like ur way !!!

  its in general, please guys dont be a captious, do better like Dr. Kalam & Dr. venky

 13. There is no first name, last name concept in Tamil Nadu. When the Population increased, because of the name shortage, people from Tamil Nadu started to put thier fathers name first letter as an initial. Please note, that is not the last name.

  If you compare all the other parts of India, most of the places, their is a last name concept which is a family name, and not the father’s name.

  There are groups of people in Africa use the fathers name as last name. I am not trying to deviate the subject, but giving the explanation about the last name, and the family name.

 14. உங்களுக்கு எழுதத் தெரிகிறதே உண்மையை எழுதத் தெரியவில்லை. பெண்கள் அல்லது ஆண்களாக இருந்தாலும் கண்ணியமாக ஆடையைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
  வெட்கக் கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருககு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள். திருக்குர்ஆன் 24:19

 15. //Jagan
  8 October 2009 at 11:00 pm
  HINDU is not a religion,,,,

  it was an identification fo the people from the nation.

  where ever we go there is a talk about religion,

  do better and be accountable, every one will follow U, if they like ur way !!!

  its in general, please guys dont be a captious, do better like Dr. Kalam & Dr. வெங்கி //

  ஏனென்றால், அறிவை உபயோகித்து, சிந்த்தித்து கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் வழி என்பதால் இது மார்க்கம் இல்லையாம்.

  இவர்களைப் பொறுத்தவரையில் யாரவது ஒருவர் இறைவனின் தூதர் என்று சொல்லிக் கொண்டு கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். நீ எரிகோ நகரின் மீது படையெடுத்து அங்கே இருப்பவர்களை இறக்கம் காட்டாமல் சங்கரிக்கப் பண்ணு என்று கட்டளையிட வேண்டும். பிடரிகளை வெட்டுங்கள், விரல் நுனிகளை வெட்டுங்கள் என்று கொலை வெறியைத் தூண்ட வேண்டும். இப்படி காட்டு மிராண்டிக் கருத்துக்களைக் கூறினால் அது மதம்.

  இந்து மதம் “வெறுப்பில்லாமல், எல்லோரிடமும் சிநேகத்துடன் இருக்க வேண்டும், கருணை மட்டுமே உடையவனாக அகம்பாவம் இல்லாமல் இருக்க வேண்டும்” என்று கூறியதால் அது மதம் அல்ல என்று அவசரமாக கருத்து தெரிவிக்கிறார் இந்த சகிப்புத் தன்மை உள்ள NANBAR. .

  உலகின் மிகப் பழைமையான மதம் இந்து மதம்.

  ஆனால் இந்த உலகின் தலை சிறந்த அறிங்கர் அது மதம் இல்லை என்று கண்டு பிடித்து நமக்கு கூறுகிறார்.

  சகோதரர் ஜகன், உலகின் மிகப் பழைமையான மதம், 8000 வருடங்களுக்கு மேலாக உயிர்த் துடிப்புடன் இருக்கும் மதம் இந்து மதம்.

  மதக் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் ஆராயக் கற்றுக் கொள்ளுங்கள்.

  நாங்கள் பலர் பிற மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடித்து விளக்கி வருகிறோம்.

  அதைப் போல சமரசக் கருத்துக்களை எழுதுவது நல்லது.

  இல்லாவிட்டால் பேசாமல் நீங்கள் கூறியது போல திரு. கலாம், திரு, வெங்கி போல வேறு பெட்டெர் வேலை செய்யலாம். நீங்கள் கூறியது உங்களுக்கும் பொருந்தும்!

 16. EvR never dared to express the truth on how women were (& still are) being treated in islam.

  This incident happened in UP. A father-in-law raped his daughter -in-law. The case was taken to the local muslim court. The ulemas (or whoever) gave the verdict. Know what is it? The daughter-in-law has committed a sin, she must be driven out of the house.

  When women’s organisation groups protested to the then UP CM Malayam singh yadav, he cooly said ” If the ulemas have taken a decison, there must be some meaning in it?

  If anyone dares to question anthing about islam, they will be issued a fatwa. Ask taslima nasreen.

  If you quote these instances, islamists will say “Quran does not justufy this, blah blah.

  To quote another incident in EVR’s life, he once said that Tirukkural must be the common guide for all religions. A group of muslim religious leaders met him the next day & demanded an explaination for this. EVR maintained silence & never dared opening his mouth on this issue afterwards.

  Another incident, which was narrated by a friend of mine. EVR, once while addressing a meeting asked “Yaar intha christu (meaning christ)?”.

  Immediately a couple of slippers were seen flying to the dais.EVR hurriedly wound up the meeting & fled in his car.

 17. ஈரோட்டில் ஒரு குறிப்பிட்ட தெருவில் தாசிகள் வசித்து வந்தார்கள் .அந்த தெரு வழியாக பெரியார் நடந்து செல்லும் போதுதெருவோரத்தில் உட்கார்ந்திருக்கும் அந்த தாசி பெண்களை காலால் எட்டி உதைத்து ,தேவிடியா முண்டைகளா ,ஒடுன்கடி …என்று விரட்டி அடிப்பாராம் .இவரை கண்டாலே அந்த பெண்கள் அஞ்சி ஒடுவார்கலாம் ,….இதை என்னுடைய தாயார் சொள்ளக்கேல்விப்படிருக்கிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *