தமிழ்த் திரைப்படங்களில் இப்போது பரவலாகப் பேசப்பட்டு ஏகோபித்த பாராட்டுகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தெய்வத் திருமகள். I am Sam என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தைப் பார்த்தது எனக்கு ஓர் அற்புத அனுபவம். பலவேறு விமர்சனங்கள் முன்கூட்டியே தரும் புகழுரைகள் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பினால் பல படங்கள் பார்க்கும்போது சற்று ஏமாற்றமாக இருப்பது வழக்கம். ஆனால் இப்படம் அந்த வழக்கத்தை மீறி படம் பார்க்கும்போது அத்தனை புகழுரைகளுக்கும் உரித்தானதாக இருக்கிறது.
காதல் அல்லது வெட்டுகுத்துகளை மட்டுமே மையமாக வைத்து தமிழ்ப் படங்கள் எடுக்கப்பட்டு வரும் நேரத்தில் அவற்றின் சாயல் கூட இல்லாமல் முற்றிலும் புதிதான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு புதியதோர் அனுபவமாக இருக்கும். தந்தை மகள் பாசத்தை ஒரு மனவளர்ச்சி குன்றிய தந்தையை வைத்து நம்மை நெகிழவைக்கிறது இத்திரைப்படம். படத்தில் மூன்று தந்தை மகள் இரட்டைகள் இருக்கின்றன. இவை மூலப்படத்திலிருந்து தமிழுக்காக மாற்றியமைக்கப்பட்ட கதையில் உறவுப் பிணைப்புகளின் நுட்பங்களை நமக்காகத் தருகின்றன. அன்பையும் மனித நேயத்தையையும் படம் முழுதுக்கும் சூழ்வெளியாகக் கொண்டிருக்கிறார் இயக்குனர். எதிர்மறை செய்திகளும் எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை மனிதர்களும் மிக மிகக் குறைவாக இருக்கும் ஒரு கதைக்களம், நிறைவான ஒரு நீண்ட படத்தைத் தருவது இப்படத்தின் சிறப்பம்சம். இப்படத்தில் யதார்த்தமே வில்லனாகி இருப்பதை எளிமையான திரைக்கதை சாதித்திருக்கிறது.
கதைநாயகனாக வரும் விக்ரம் அப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருடையதை சற்று மிகை நடிப்பாக சிலர் குறை கூறலாம். ஆனால் இப்பாத்திரத்தை விக்ரமைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்ற எண்ணத்தை உறுதியாக அவர் நடிப்பு ஏற்படுத்திவிடுகிறது. அந்தச் சிறுமியாக வரும் சாரா என்கிற சுட்டிப்பெண் மிகச் சிறந்த தேர்வு. அவர் அப்பாவின் மனதை மட்டுமல்லாமல் காண்போர் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார். இளம் வழக்கறிஞர்களாக வரும் அனுஷ்காவும் சந்தானமும் சிறிது நேரமே வரும் அமலா பாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நல்ல ஒளிப்பதிவும் இசைவான பின்னணி இசையும் படத்துக்கு பக்கபலமாய் நிற்கின்றன.
படத்தில் நான் கவனித்த மற்றுமொரு நல்ல அம்சமும் இருக்கிறது. இதை பொதுவாக மற்றவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துவிடலாம். ஆனால் நமது கலாச்சாரத்தின் நல்லடையாளமாகத் திகழும் மகளிர் இடும் நெற்றித் திலகம் இப்படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் பாத்திரங்களாலும் தெளிவாகத் துலங்கும்படி உடையலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் அல்லது இயல்பாகவே அப்படி அமைந்துவிட்டிருந்தாலும் இரண்டுமே எனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது. இப்போதுள்ள நவநாகரிக யுவதிகளுக்கு பொட்டு ஒரு பெரும் பாரமாக இருக்கிறது. பாரதத்தின் நான்கு திசையிலுள்ள பெண்களும் காலம் காலமாக அணித்துவரும் நெற்றித்திலகம், சங்க இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டிருக்கும் நெற்றித் திலகம், பல கீழை பண்பாடுகளிலும் காணக்கிடைக்கின்ற நெற்றித் திலகம், ’அத்திலக வாசனைபோல்’ என்று நமது தமிழ்த் தாய் வாழ்த்தும் குறிப்பிடுகின்ற நெற்றித் திலகம் யுவதிகளால் சட்டை செய்யப்படாத இக்காலகட்டத்தில் இளம் வழக்கறிஞராக வரும் அனுஷ்காவுக்கும் பள்ளிக்கூட கரஸ்பாண்டண்டாக வரும் அமலா பாலுக்கும் பள்ளிச் சிறுமியான சுட்டிப்பெண் தாராவுக்கும் துலங்கும்படியான பொட்டு வைத்திருப்பது என்னை இப்படத்தில் மிகவும் கவர்ந்த இன்னுமொரு சிறப்பம்சம்.
அபூர்வமாக வரும் இது போன்ற படங்களை ஆதரிப்பது தமிழ் ரசிகர்களின் கடமை. இப்படத்துக்காக விக்ரம் செய்திருக்கும் உழைப்பும் அர்ப்பணிப்பும் தமிழ்த் திரை உலகின் ஒரு மைல்கல்லாக நிலைக்கப் போகின்றது. இப்படத்தை என் குடும்பத்துடன் சென்னை உதயம் திரையரங்கில் பார்த்தேன். படம் முடிந்த பின்னரும் ரசிகர்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்ததும் படம் முடிந்தவுடன் ரசிகர்கள் தாமாகவே தந்த கரவொலியும் இப்படம் ரசிகர்களை வென்றிருப்பதற்கும் நல்ல ரசிகர்கள் இருந்துகொண்டிருப்பதற்கும் உறுதியான சான்றாக இருக்கின்றன.
நல்ல படம்
எத்தனை அழகான புன்னகைகள்
யதார்த்தமான வார்த்தைகள்
கதை
தமிழின் உயிர் இன்னும் வாழ்கிறது
நன்றி …..
இதுபோன்று வரும் படங்கள் மக்கள் ரசனைகளை சிறிதேனும் மாற்றினால் நமது தமிழ் சினிமா எங்கேயோ சென்றுவிடும் கோ கி நாகராஜன்
பாசமலர் போன்று பல நல்ல பழைய தமிழ் படங்களில் பல காட்சிகள் நம்மை அறியாமலே கண்ணீர் வரவழிக்கும். நீண்ட இ்டைவெளிக்கு பின் இந்த தெய்வதிருமகள் படத்தி்ன் கடைசி கோர்ட் காட்சி (குழந்தை- விக்கிரம் இடையே யான சங்கேத பரிமமாற்றம்) காண்போர் கண்களில் கண்ணீரை வரவழித்துவிடுகிறது
நல்ல படம்
காதல் அல்லது வெட்டுகுத்துகளை மட்டுமே மையமாக வைத்து தமிழ்ப் படங்கள் எடுக்கப்பட்டு வரும் நேரத்தில் அவற்றின் சாயல் கூட இல்லாமல் முற்றிலும் புதிதான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு புதியதோர் அனுபவமாக இருக்கும்
paathuttu sollureen…
நல்ல படம், ஹிந்து மதத்தை கேலி செய்யாமல் படங்கள் வருவது அபூர்வம், இது ஒரு அக்க பூர்வமான சினிமா. இதன் தயாரிப்பாளர், இயக்குனர் பற்றியும் அவர்களுடைய குடும்பம், சொந்த ஒரு, சூழ்நிலை பற்றி தெரிந்தவர்கள் கூறினால், ஹிந்துக்கள் இனி வரும் களத்தில் ஆக்கபூர்வமான அதரவு கொடுக்க முடியும். நாம் இந்த அப்படம் இயக்குனருக்கும தயரிபலருகும் சிறிய அளவிலாவது பாராட்டுவது அவசியம். திரை அரங்கிற்கு சென்று டிக்கெட் வங்கி பார்க்க வேண்டிய படம் தான். தரமற்ற ஹிந்து மதத்தை கேலி செயும் படத்தை CD இல் மட்டுமே பார்க்கும் வழக்கத்தை நாம் கைகொள்ள வேண்டும். வருமானம் பதிதல் தன இந்த தீய பலகம் ஒடுங்கும்.
“I am Sam என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தைப் பார்த்தது எனக்கு ஓர் அற்புத அனுபவம்.”
The right word to use here is not ‘based on’, but ‘stolen’. FTFY.
@ K
not stolen,they have earned remaking authority.
Product Patent, Process patent அப்படின்னு ஒண்ணு இருக்கு. உதாரணமா ஒரு மருந்த கண்டுபிடிக்க கோடி கோடியா செலவழிக்கும் ஒரு கம்பனி, அதை நோகம நோம்பு கும்படற மாதரி அப்படியே வேறு முறையில அதே பொருள தயரிக்கறதுல கில்லாடிங்க நம்ப ஆளுங்க. கண்டுபிடிச்சவன் நூறு ரூபாய்க்கு விக்கறத இவன் பத்து ரூபாய்க்கு விப்பான் இது நியாயமா. அதேப்போலத்தான் இந்தப் படமும்.
இது ஒரு லாஜிக்கே இல்லாத ஒரு படம். 3 வயசுலிருந்து மனவளர்ச்சியில்லைன்னா அவன் ஸ்பாஸ்டிக்கா. ரெண்டு பேர்ல ஒருத்தர் வெவரமா இருந்த போதும்கற லாஜிக் நம்ப மக்களுக்கு போதும்ன்னு கண்ணப்ப நாயனார்ப் போல நம்ப மூஞ்சில கலை வைத்து பூவை சுத்தியிருக்காரு விஜய். பக்கத்து சீட்டுகாரரு அழுகாச்சியோட வெளிய போனபோது சிரிப்பு சிரிப்பா வந்தது. நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள்!
Columbo Tamizhan; I can only laugh at your ignorance. Indians usually rip off Hollywood films shamelessly and pass it off as their own work. This movie is no different. These guys have turned stealing into an art form.
யார் சொன்னது, இதை ரசிப்பவர்கள் நல்ல ரசிகர்கள் என்று. ஐம் சாம் பார்க்காதவர்கள் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஒரு அரை வேக்காட்டு காப்பி இந்த படம். விமர்சன எழுத வேண்டும் என்பதற்காக எழுத வேண்டாம்.