கீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த தமிழ் இந்துக்களின் போராட்டம்

வம்பர் 10, புதுதில்லி: இன்னும் மூன்றே மாதங்களில், மேல்விஷாரம் ஊராட்சியிலிருந்து பிரித்து, கீஷ்விஷாரம் கிராம மக்கள் கேட்டுக் கொண்டபடி கீழ்விஷாரம் தனி ஊராட்சியாக செயல்பட ஆவன செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி இங்கே.

இப்படி ஒரு தீர்வுக்காகப் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏன் கீழ்விஷாரம் மக்களுக்கு வந்தது என்பதைப் பார்க்கலாம்.

.melvisharam-mosques… அந்த நகரில் உள்ள நீண்ட கடைவீதியில் கடைகளின் பெயர்ப் பலகைகள் உருது மொழியில் மின்னுகிறது. தெருக்களின் பெயர்களும் அரசு அலுவலகங்கள், வங்கிகளின் பெயர்களும் உருது மொழியிலே எழுதப்பட்டுள்ளன. அங்கு உள்ள ஒரே நூலகத்தில் குல்லா அணிந்த இஸ்லாமிய இளைஞர்கள் உருது பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் உருது மொழியிலேயே பேசுகிறார்கள். அங்கு உள்ள பள்ளிக்கூடங்களில் உருதுதான் முக்கிய பாடம்… இந்த சிறு நகரில் இத்தனை மசூதிகளா? என்று நாம் ஆச்சரியப்பட்டு கேட்டால், உலகத்திலேயே ஐந்தாவது பெரிய மசூதி இங்குதான் இருக்கிறது என்று அங்குள்ள முஸ்லிம்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்!

… அந்த அதிர்ச்சி நகரத்தின் பெயர் மேல்விஷாரம். வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் ஆற்காட்டிற்கு அருகே இருக்கிறது இந்த நகரம்… இந்த மேல்விஷாரம் நகராட்சியில் 25,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விஷாரம் என்ற ஊரும், 10,000க்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரம் (கீழ்விஷாரம்) என்ற ஊரும் இருக்கிறது.

… மேல்விஷாரம் நகராட்சியில் கட்டடத் திறப்புவிழா போன்ற முக்கிய விழாக்களில் முஸ்லிம் ஜமாத் தலைவர்கள்தான் கலந்து கொள்வார்கள். அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை. .. அங்கு மெக்காவிலிருந்து ஒரு இமாம் அடிக்கடி வந்து போகிறார். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பல தோல் தொழிற்சாலை அதிபர்கள் இங்குதான் வசிக்கிறார்கள். ..

–   தமிழகத்தில் ஒரு பாகிஸ்தான்! (ஜனவரி 17, 2007) ரிப்போர்டிலிருந்து,

1996ல் கீழ்விஷாரத்தின் தண்ணீர்வளத்தை அபகரிக்க முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேல்விஷார பஞ்சாயத்துடன் கீழ்விஷாரத்தையும் இனைக்கவேண்டும் என கோரிக்கை வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.  அதன் பின்விளைவுகள் தான் இவை.

இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்துவாழும் தமிழகத்தின் ஒரு பஞ்சாயத்து முழுவதும் பஞ்சாயத்து தலைவர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய ஜமாத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?? ஊராட்சி ஒன்றியத்தின் நிலத்தின் மதிப்பை தீர்மானிப்பது மார்க்கெட் நிலவரம் அல்ல,  ஜமாத்.  போலிஸ் ஸ்டேஷன் கூடாதென ஜமாத் சொல்லிவிட்டதால் காவல்நிலையம் கிடையாது –  இஸ்லாமிய ஜமாத் எனும் கட்டைப்பஞ்சாயத்துதான் தீர்ப்பு. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என ஜமாத் பிறப்பிக்கும் கட்டளைப்படிதான் வாக்களிக்கப்படவேண்டும். இல்லையெனில் ஜமாத்தின் தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்.   எல்லாமே ஜமாத் என்ற அளவில் தான் நடைமுறையில் மேல்விஷாரம் நகராட்சி நடந்து வந்தது.

மேல் விஷாரம் சொர்க்கம் என்றால், இராசாத்துபுரம் நரகம்  (பார்க்க:   சொர்க்கமும், நரகமும், ஜனவரி 2007 நேரடி ரிப்போர்ட்) இராசாத்துபுரத்தில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. சாக்கடை பாயும் தெருக்களையும், புழுதி பறக்கும் வீதிகளையும் தான் அங்கு பார்க்க முடியும். தோல் தொழிற்சாலை கழிவுநீர் இராசாத்துபுரத்து வழியாகச் சென்றுதான் பாலாற்றில் கலக்கிறது.  இராசாத்துபுரத்தின் நிலத்தடி நீர் முழுதும் விஷமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராசாத்துபுரத்தின் விவசாயமான வெற்றிலை விவசாயம் அடியோடு ஒழிக்கப்பட்டு இன்று பீடி சுற்றும் நிலைமைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

“மேல்விஷாரத்தில் முன்பு நூற்றுக்கும் அதிகமான இந்துக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை பத்தாகக் குறைந்துவிட்டது. அதுபோல இராசாத்துபுரத்திலும் இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்து முஸ்லிம்மயமாக்க அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம்களைத் திட்டமிட்டு குடியமர்த்தி வருகிறார்கள். திடீர், திடீரென மசூதி கட்டுகிறார்கள். எங்களை விரட்டுவதற்காக பல கொடுமைகளை எங்களுக்கு இழைத்து வருகிறார்கள்” என்று 70 வயதைக் கடந்த பல பெரியவர்கள் நம்மிடம் துக்கத்தோடு கூறினார்கள். …

kilvisharam-appeal

… வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் பணிபுரியும் பிரபல பத்திரிகைகளின் நிருபர்களிடம் மேல்விஷாரத்திற்கு சென்று வந்தோம் என்றால், ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். அங்கே எப்படி சென்றீர்கள்? நாங்கள் சில விஷயங்களை அவர்களிடம் சொன்னபோது அப்படியெல்லாம் நடக்கிறதா? என்று அதிர்ச்சியுடன் கேட்டார்கள். மேல்விஷாரம் பற்றியும், இராசாத்துபுரம் பற்றியும் செய்திகள் வெளிவந்தால் அந்த பத்திரிகைகளை புறக்கணிக்குமாறு ஜமாத் கட்டுப்பாடு விதித்துள்ளதாம்.

… இராசாத்துபுரம் தனி ஊராட்சி ஆகிவிட்டால் எல்லா பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்துக் கொள்வோம். எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நாங்களே செய்துகொள்வோம். யாரிடமும் கையேந்த வேண்டி இருக்காது. இந்த முறை இராசாத்துபுரத்தை தனிஊராட்சியாக அறிவிக்க வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்று ஊரின் முகப்பில் இந்துக்கள் பேனர் வைத்துள்ளனர்.

–  சொந்த மண்ணில் கொத்தடிமைகளாய் ஹிந்துக்கள்! (ஜனவரி 2007 ரிப்போர்ட்)

தனி ஊராட்சி வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கைவைத்தும், இதே கோரிக்கையை நிறைவேற்றித்தரவேண்டும் என்ற உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களித்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.  அதனால் தொடர்ச்சியாக  ஊர்மக்கள்  ஊராட்சித் தேர்தல்களைப் புறக்கணித்து,  தனி ஊராட்சி வேண்டும் என்ற  தங்கள்  கோரிக்கையை  வலியுறுத்தி வந்தனர்.

… இங்கு பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக இந்துக்களின் வழிபாட்டுத் தலமாகவும் காணும் பொங்கல் கொண்டாடும் இடமாகவும் இருந்த இந்த முந்திரித் தோப்பின் மீது முஸ்லிம்களின் பார்வை விழுந்தது. இந்த முந்திரித் தோப்பில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்ட மிட்டனர். இதற்காக மேல்விஷாரம் நகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நகராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தீர்மானம் எளிதாக நிறைவேறியது. ஆனாலும் இராசாத்துபுரம் இந்துக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர்களால் அமைக்க முடியவில்லை.
இதனால் திட்டமிட்டு படிப்படியாக அங்கிருந்த 7,000 முந்திரி மரங்களையும் வெட்டி, அந்த முந்திரித் தோப்பை இன்று வெறும் மைதானமாக மாற்றிவிட்டார்கள். இப்படி கொள்ளை போன முந்திரி மரங்களின் மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என்று உள்ளூர் மக்கள் மதிப்பிடுகிறார்கள்.

–  வழிபாட்டு நிலத்தைக் காப்பாற்ற போராடும் ஹிந்துக்கள்! ரிப்போர்ட்

அரிஜன சுடுகாட்டை முஸ்லிம் குடியிருப்பாய் சட்டத்திற்குப் புறம்பாய் மாற்றியது,  இந்துக்களின் நிலங்களை ஜமாத்/ந்கராட்சி அச்சுறுத்தல்கள் மூலம்  அபகரிப்பது,  மதமாற்றத்திற்கு வலைவீசுவது என்று மேல்விஷாரத்தில் நடக்கும் கொடுமைகள் தொடர்ந்தன.

இந்த நிலையில் டாக்டர்.சுப்பிரமணியன்சாமி இந்த பிரச்சினையை கையில் எடுத்து கீழ்விஷாரத்தை தனி பஞ்சாயத்தாக பிரிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்துக்களுக்கு எதிரான சிறுபான்மையினரின் அநியாயங்களை மூடிமறைக்கும் அல்லது துணைபோகும் அரசு நடக்கும் மாநிலத்தில், இந்தத் தீர்ப்பு  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் படி  முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஃபிர்கள் மூன்றாந்தர குடிமக்களாக அடக்கி, ஒடுக்கி, கொத்தடிமைகளாக, “திம்மிகளாக” நடத்தப் பட வேண்டியவர்கள்;   மேல்விஷாரத்தின் ஒட்டுமொத்த முஸ்லிம் ஆதிக்கவாதிகளும் இதைத் தான் செய்யத் துடித்தனர்.  ஆனால் திம்மிகளாக வாழ மறுத்து  சட்டரீதியாகவும், ஜனநாயக முறையிலும் உறுதியாகப் போராடி வெற்றி பெற்றிருக்கின்றனர் கீழ்விஷாரம் இந்துக்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

இந்தப் பிரசினையை வெளிச்சம் போட்டுக் காட்டிய மேற்குறிப்பிட்ட ரிப்போர்ட்கள் விஜயபாரதம் இதழில் வெளிவந்தவை –  வழக்கின் போது இவை முக்கிய ஆதாரமாகக் காட்டப் பட்டன.  விஜயபாரதம் இதழுக்கும் , டாக்டர் சுவாமிக்கும் நமது பாராட்டுக்கள்.

சத்யமேவ ஜயதே. வாய்மையே வெல்லும்.

31 Replies to “கீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த தமிழ் இந்துக்களின் போராட்டம்”

 1. மேல்விஷாரம் மக்களும் மீண்டும் இந்துக்களாக ஆவதற்கு இது ஒரு பிள்ளையார் சுழியாக இருக்கட்டும்.

 2. கீழ் விஷாரம் தனி ஊராட்சியாய் பெற்ற மக்களுக்கு வாழ்த்துக்கள்.

  விஜெயபாரம் பத்திரிகைக்கு நன்றி. சுவாமிக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

 3. Until and unless the Hindus get together and vote en block for the politicians with only Hindu interests in mind,NOTHING WILL CHANGE. Passive Gandhi /secular ways have brought Hindus to their knees and everyone is walking over them with impunity. Hindus need another Vivekandaji to arise and awaken them. They are in a self induced stupour.
  Imagine the respect Hindus will get from corrupt politicians like MK, Jaya, etc if they form a major vote bank. These politicians then will be crawling on their hands and feet to please Hindus.

 4. மிக நிம்மதி தந்த கட்டுரை. புதியதோர் உலகு செய்வோம்.. இந்துக்கள் அணி திரள்வோம்

 5. நமக்கென்ன நஷ்டம் என்று இந்துக்கள் இருக்கும் வரை அவர்களது அடிப்படை பறி போய்க் கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு போடாதவர்களின் சதவிகிதத்தில் majority இந்துக்களாகத்தான் இருக்கும். பின் ‘sickular’ கட்சிகள் எவ்வாறு நம்மை மதிக்கும்???
  நம்மை ஆள்வது ஓட்டுப்பொறுக்கி கட்சிகள்
  நாம் படிப்பது அந்த கட்சிகளுக்கு சேவை செய்து பிழைப்பு நடத்தும் பத்திரிகைகள்
  நாம் பார்ப்பது அந்த கட்சிகளுடய பிராசர இயந்திரங்களாக செயல்படும் தொலைகாட்சிகளை
  சிறிது சிறிதாக எல்லா ஊழல்களையும் சகித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டோம் (அ) பழக்கி விட்டார்கள்!
  நம் கலாச்சாரத்தில் நமக்கு பிடிப்பு இல்லாதது மட்டுமல்ல சிறிது சிறிதாக எரிச்சல் படவும் வெறுப்பும் அவமானமும் அடையவும் படிப்பித்து விட்டார்கள்.
  நமக்கு வேண்டியது 3 வேளை சோறு TV இது நாம் ஓட்டு போட்டாலும் போடா விட்டாலும் வரும் யாருக்கு அடிமையாக இருந்தால் என்ன?!
  ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன
  முஸ்லிம் ஆண்டா என்ன கிறிஸ்டியன் ஆண்டா என்ன
  கீழ்விஷாரம் மக்களயும் விஜயபாரதம் பத்திரிகையும் வணங்குகிறேன்.

 6. Why we are getting excited by these news as even the TN Govt. is itself agrees and supports only muslims and urdu students?. Go to http://www.tn.gov.in and browse in Schemes tab. There in the Backward,MBC,Minority Schemes PDF You can see very detail and big schemes that are very helpful especially to Urdu students,WakfBoard, Utilising Tax money and Hundial Money of temples to built Durghas, Mosques even though they get billions&trillions from Gulf countries. Pension scheme for Ulemas.
  There is nothing to get excited or astonished by these kind of news. One side the evangelical missionaries are stealing our great&valuable scriptures and age old traditions and customs and saying that only christians and jesus told these customs & practices to the world. On the other side the secular govt. asked only Hindus to go easier with other religion. But Muslims are always trying to kill Kafirs and destroy their temples and places,denigrating their Gods, encroaching their lands.
  “Porumai Kadalinum Periadhu”…… !!! Nammai naragathil thallinaalum porumai kaaka vendum. sothukku singi adithaalum, arai velai sappattukku nayai lol pattalum, musalmaangal nam pengalai nam kan munnare avamana padithinaalum, raamaraium, deepavaliaium, kevalamaaga pesinaalum naam sirupaanmaiynarai eppozhuthum kaaka vendum, ivargalin maanangetta arasiyalukke ottukkal pottu kondu, porumai kadalinum perithena irukka vendum thamizhargale !!!!

 7. இது எத்தனை அறிவு ஜீவிகளுக்குப் புரியப் போகிறது !!
  நல்லிணக்கம் பற்றி போதித்துவந்த முகமதியர்கள்
  இப்பொழுதெல்லாம் நம் நூல்களை ஆராய்ந்து நமக்கு போதிக்க ஆரம்பித்து விட்டனர். கொரானை ஆராய்ந்தால் ஃபத்வா.

  தேவ்

 8. இந்த கட்டுரையை படித்த போது நான் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. வேலூரில் இருந்த சிப்பாய் கலகத்தில் இறந்தவர்களுக்கான நினைவு இடத்தில் இப்போது ஒரு சர்ச்தான் உள்ளது! நினைவு இடம் மறைந்து, மறந்து போய் விட்டது.

 9. எய்யா, வணக்கம். இதேபோல் அக்கிரமம் காட்டு மன்னார் கோயில் அருகே உள்ள கிராமங்களில் !!உடன் வழி செய்யுங்கள் , நன்றி.

 10. //அந்த நகரில் உள்ள நீண்ட கடைவீதியில் கடைகளின் பெயர்ப் பலகைகள் உருது மொழியில் மின்னுகிறது. தெருக்களின் பெயர்களும் அரசு அலுவலகங்கள், வங்கிகளின் பெயர்களும் உருது மொழியிலே எழுதப்பட்டுள்ளன. அங்கு உள்ள ஒரே நூலகத்தில் குல்லா அணிந்த இஸ்லாமிய இளைஞர்கள் உருது பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் உருது மொழியிலேயே பேசுகிறார்கள். அங்கு உள்ள பள்ளிக்கூடங்களில் உருதுதான் முக்கிய பாடம்…//

  எங்கே கலைஞர்? எங்கே ‘வீர’மணி? எங்கே வைகோ? எங்கே திருமாவளவன்? எங்கே ராமதாஸ்? இப்பொழுது பேசுவார்களா? சமஸ்க்ருதம் தேவையில்லை என்று நாக்கை சுழற்றுவோர் இப்பொழுது காக்கை ஓட்டச் சென்றுவிட்டனரோ?????

 11. இங்கு மறுமொழிகளை எழுதியவர்களை நினைக்கும்போது எனக்கு அழுகையே வருகிறது! நம் நாட்டில், நம் ஊரை அபகரித்து, நம்மை விரட்டுகிறார்கள், நீங்கள் இந்துக்களுக்கென்று ஒரு தனி ஊர் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறீர்கள், வாழ்த்துகிறீர்கள், கொண்டாடுகிறீர்கள். இந்தியாவிலிருந்து ஒரு வங்கதேசம், ஒரு ஆபிகநிச்தான், ஒரு பாகிஸ்தான் சென்றது பத்தாது என்று ஒரு மேல்விஷாரமும் போகவேண்டுமா??

 12. I would like to congrats Killvishaburam people and also special thanks to Dr. Subramanya Swami. I have sent this document to my friends also in pdf format. I would like to request all the readers to send this document to your friends in pdf format. So that, everyone will aware of what is happening around us. Lot of free pdf convertes tool is available in internet. The one which I am using is cute pdf writer.

  Rgds,
  SRI

 13. இத் தகவலை தெரியப் படுத்திய ஆசிரியர் குழுக்கும், சட்ட நடவடிக்கை எடுத்து கிராமத்தைக் காப்பற்றிய டாக்டர். சுப்ரமண்யம் சுவாமிக்கும் …….

  நன்றி ….நன்றி…நன்றி…….

 14. நல்ல நகைச்சுவையான கட்டுரை. ஆசிரியரின் கற்பனை வளம் அபாரம்.வாழ்த்துக்கள்

 15. //
  எங்கே கலைஞர்? எங்கே ‘வீர’மணி? எங்கே வைகோ? எங்கே திருமாவளவன்? எங்கே ராமதாஸ்? இப்பொழுது பேசுவார்களா? சமஸ்க்ருதம் தேவையில்லை என்று நாக்கை சுழற்றுவோர் இப்பொழுது காக்கை ஓட்டச் சென்றுவிட்டனரோ?????
  //

  வள்ளுவன் அய்யா என்ன காக்க ஒற்றாங்கன்னு இவ்வளவு சிம்புளா சொல்லிடீங்கா – இந்த புனிதர்கள் எல்லாம் செம்ம பிஸி –

  கலைஞர் குஷ்பூ ரம்பா இட்த்யாதி இத்யாதி இவர்களை சந்தித்து கொண்டு – பிஸியாககிறார்

  வீரமணி – புச்சா பெனிபிட் புண்டு ஓபன் பண்றதுல பிஸியாககிறார்

  ராமதாஸ் பாவங்க – இப்போ என்னதான் பண்ணலாம்னு ரூம் போட்டு யோசிசுக்கிட்டுக்றார்

  வைகோ – அம்மாவிடம் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை – உத்தரவை எதிர்பார்த்து பிஸியாககிறார்

 16. //நல்ல நகைச்சுவையான கட்டுரை. ஆசிரியரின் கற்பனை வளம் அபாரம்.வாழ்த்துக்கள்//
  கற்ப’நயா’க இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

 17. தஞ்சை மாவட்டத்தின் பல கிராமங்கள் இஸ்லாமியர்களின் பெரும்பான்மை தான். தேரழுந்தூர் என்பது 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்று. அங்குள்ள சன்னிதித் தெருவில் பெரிய அரபுக்கல்லூரி உள்ளது. இதுவரை பிரச்னை ஏதுமில்லை. ஒருவேளை முன்னாள் இந்துக்கள் என்னும் எண்ணமாக இருக்கலாம். இந்த தேசத்தை போலி மதச்சார்பின்மை வா(வியா)திகளிடத்திலிருந்து இறைவன் தான் காப்பாற்றவேண்டும்.

 18. நயா,

  //நல்ல நகைச்சுவையான கட்டுரை. ஆசிரியரின் கற்பனை வளம் அபாரம்.வாழ்த்துக்கள்//

  தாங்கள் இதில் எங்கு நகைச்சுவை கண்டீர்? அறியாமல் கேட்கின்றேன்.

 19. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
  தமிழ்நெஞ்சம்

 20. என்னுடைய சக ஊழியர் திருச்சியில் ஓர் அக்ரகாரத்தில் வளர்ந்த முஸ்லிம் பெண்! அவரும் சரி அவர் சகோதரியும் சரி, உருது பேசினாலும் இஸ்லாத்தின் வழி முறைகளை பின்பற்றினாலும் தமிழ் பேசும் போது உருது வாடையே வீசாது. இந்து கோவில்களுக்கு போவதையோ சில இந்து மத சடங்குகளை பின்பற்றுவதையோ இயல்பாகவே செய்வார்.

 21. தமிழ் ஹிந்துவில் புது ரத்தம் ஏதோ பாய்ந்திருக்கிறது. பிரச்சினைகள் உடனுக்குடன் அலசப்படுகின்றன.என்னுடய மனமார்ந்த பாராட்டுக்கள்.
  https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=௯௩௧ இந்தப் பிரச்சினை குறித்து நண்பர் ஹரன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையும் வாசகர்கள் பார்க்கலாம்.

 22. ஆமாம் அங்கே பெண்களின் நிலைமை எப்படி குரானில் உள்ளது என்று கூறுகிறார்களே அது போல உள்ளதா? கல்வி அளிக்கப் படுகிறதா? சமமாக நடத்தப் படுகிறார்களா?

  The French have realised the threat from this Muslim faith. French schoolchildren encouraged to sing national anthem. The French government is to launch a campaign to “reaffirm pride” in the country and combat Islamic fundamentalism.
  Italy have realised that if they don’t do this the muslim faith will try and rule Italy.

  நம் அரசியல்வாதிகள் நம் நாட்டை கூறு போட்டு விற்பதற்க்கு முன்னால் காசுக்காக, TVக்காக, சாதிக்காக என்று ஓட்டு போடாமல் நாட்டுக்காக ஓட்டு போடுவோம்.

 23. // subbu
  14 November 2009 at 12:13 pm
  தமிழ் ஹிந்துவில் புது ரத்தம் ஏதோ பாய்ந்திருக்கிறது. பிரச்சினைகள் உடனுக்குடன் அலசப்படுகின்றன.என்னுடய மனமார்ந்த பாராட்டுக்கள்.
  https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=௯௩௧ இந்தப் பிரச்சினை குறித்து நண்பர் ஹரன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையும் வாசகர்கள் பார்க்கலாம்.//

  Correct URL:-

  https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=931

 24. நயா ,
  முதலில் இதைப் https://puduvaisaravanan.blogspot.com/2007/01/blog-post_17.html படியுங்கள்.. இதிலுள்ள போட்டோக்கள், மக்கள் , பர்தாக்கள் எல்லாமே கற்பனையா? ஆம் என்று தோன்றினால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தியுங்கள். உங்கள் சிரிப்பைப் பார்த்து பத்து பேர் சுற்றி நின்று சிரிக்கக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

 25. //எங்கே கலைஞர்? எங்கே ‘வீர’மணி? எங்கே வைகோ? எங்கே திருமாவளவன்? எங்கே ராமதாஸ்? இப்பொழுது பேசுவார்களா? சமஸ்க்ருதம் தேவையில்லை என்று நாக்கை சுழற்றுவோர் இப்பொழுது காக்கை ஓட்டச் சென்றுவிட்டனரோ?????//

  அவங்களுக்கெல்லாம் வேற வேலை இருக்கு. அவர்கள் தத்தமது பிள்ளைகளுகாக சொத்து சேர்த்து கொண்டிருப்பார்கள். திருமா ‘முள்வெளி’யில் பிஸி. பின்ன அரசியல் செய்ய வேண்டாமா? வைகோ. அம்மாவை பார்க்க அப்பாயின்மென்ட் கிடைக்குமா என்று பிஸி.

 26. Tamilhindu.com doing an excellent job. Its a eye opener for lot of people, I really appreciate your work!

  also blogging & discussing is not enough, We must convey our dissatisfaction to our Govt. how can we do that? If you provide some info, it will be use full.

  & we must appreciate Mr.Subramaniam swami for his valuable efforts.

  Kalai

 27. As of till now, this order not yet implemented.
  What to do next?
  Few important persons in our village got cash from the muslims.

  As os till now, this is like day dreaming only for us.

  How to take notice to Mr. Subramaniam Swamy about this?

  Kindly help us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *