ஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.

haiti2010_01 பேரழிவு உருவாக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுக்கிறது.

விஸ்வ ஹிந்து பரிஷத் உங்கள் அனைவரையும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தாராளமாய் நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறது. இந்த நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பல லட்சக் கணக்கானோர் வீடு வாசல்களை இழந்து, உணவு, நீர், மருத்துவ வசதி மற்றும் அடிப்படை தேவைகள் ஏதுமின்றி இருக்கின்றனர்.

haiti2010_02உங்களது நன்கொடைகள் உதவிக்காக ஏங்கும் மக்களுக்கு நிச்சயம் உதவும், நன்கொடை வழங்க இங்கே சொடுக்கவும்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தானது, யுனிசெஃப் மற்றும் ஹைத்தியில் உள்ள இதர சேவை குழுக்களுடன் இனைந்து உங்களது நன்கொடைகளை தேவையானவர்களுக்குப் போய்ச்சேர வழி செய்யும்.

இதற்கு முன்னர் நீங்கள் காத்ரீனா புயலில் உதவினீர்கள், குஜராத் பூகம்பத்தின்போதும் உதவினீர்கள், வெள்ளத்தால் இந்திய மக்கள் பாதிக்கப்பட்டபோது உதவினீர்கள். இதுபோன்ற பலவித பேரழிவுக் காலங்களில் உதவி இருக்கிறீர்கள். உங்கள் நன்கொடைகள் ஹெய்த்திய மக்களுக்கு உதவவும், ஆதரவளிக்கவும் உபயோகப்படுத்தப்படும். நன்கொடைகள் பணமாக மட்டுமே பெறப்படுகின்றன. துணிமனிகளோ, இதரவகையான உதவிகளோ பெறுவதில்லை.

அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத்தானது ஒரு லாபநோக்கற்ற, ஏழைகளுக்கும், உதவிதேவைப்படுவோருக்கும் தன்னார்வ நோக்கில் உதவும் ஒரு அமைப்பு. ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருக்கும், கல்வி, உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதும் இதன் பணிகளில் ஒன்று.

நன்கொடை வழங்க இங்கே சொடுக்கவும். அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத், மாஸ்டர், விசா, மற்றும் டிஸ்கவர் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்கிறது. உங்களது காசோலைகளை கீழ்க்கண்ட முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.

VHPA, P.O. Box 441505, Houston, TX 77244

மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Girish Gandhi, Vice President, Seva – 561-244-5813
Yogesh Naik, Director, Seva in USA – 281-485-8256

எல்லா நன்கொடைகளும் வரிவிலக்குக்கு உட்பட்டது. உங்களது நன்கொடைகளுக்கு நாங்கள் அன்புடன் நன்றி கூறுகிறோம். அமெரிக்க விஸ்வஹிந்து பரிஷத் பணம் கிடைத்ததற்கான ரசீதை உங்களுக்கு அனுப்பி வைக்கும்.

தங்கள் உண்மையுள்ள,

கிரிஷ் காந்தி,
வைஸ் பிரசிடெண்ட், சேவா, அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத்,
561 244 5813

https://www.vhp-america.org/appeals/haiti_earthquake.html

2 Replies to “ஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.”

  1. இன்னும் விஸ்வ ஹிந்து பரிஷத் பற்றி எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும்!

  2. Visha hindu parisathu doing good things we all are cooperate means it must do wondeful things. Here i ask every hindu people will sure to be a member of VHP and jointly do his seva activities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *