எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன?
இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக, எளிமையாக விடையளிக்க முயல்கிறது.
சேவை உணர்வினையும், சமுதாய நீதியுணர்வையும், சமுதாய நல்லிணக்கத்தையும் உருவாக்கிட இந்த நூல் பயன்பட வேண்டுமென எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சுகிறோம்.
சாதி என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன?
மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது. அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர். இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள் தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன. இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே சாதிகள். இதன் தோற்றம், வரலாறு பற்றி பின்னர் பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும். அண்ணல் அம்பேத்கர் ஒருவித வரலாற்றுச் சட்டகத்தை மனதில் கொண்டு இத்தகைய போக்கை பிராம்மணீயம் என அழைக்கிறார். ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை.
மனிதர்கள் அனைவரும் ஒன்றே, சாதி வேறுபாடுகள் காலாவதியானவை என்கிற எண்ணமே மானுடநேய எண்ணமாகும். ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.
சாதி என்றால் என்ன? வர்ணம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா?
ஒருவர் தன்னுள் எழும் ஆர்வத்தினால் திறமை பெறும் தொழில் சார்ந்த வாழ்க்கைமுறைக்கு வர்ணம் என்று பெயர். இது நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இவற்றில் ஒன்றையோ, பலவற்றையோ தேர்ந்தெடுத்து ஹிந்துக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இதிகாசங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. சாதி என்பது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவது. பெற்றோரின் சாதியே அவர்களின் குழந்தைகளுடைய சாதியாகும் என்று சொல்லுவது சாதி முறை.
வேதகாலத்தில் சாதி என்பதே இல்லை, வர்ணம் என்பது இருந்தது. வர்ணம் வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதருக்குத் தந்தது. சாதி அந்த சுதந்திரத்தை முற்றிலுமாக மறுத்தது. சாதியத்தை ஏற்படுத்தியது.
ஆனால், தற்போதைய பொதுவான வெகுஜன புரிதலில் வர்ணமும் சாதியும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அது தவறான புரிதல்.
அப்படியானால், சாதியத்திற்கு வேதங்களில் இடம் இல்லையா?
நிச்சயமாக, இல்லை. அண்ணல் அம்பேத்கர் வேதகால முறை குறித்து மிகவும் விரிவாக விவரிக்கிறார். வர்ணாசிரமம் அடைந்த மாறுபாடுகளை அவர் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார்:
முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது.
தொடக்க காலத்தில் ஒருவரது வர்ணத்தை மனு மற்றும் சப்தரிஷிகள் எனும் அமைப்பினைச் சார்ந்த முதுமக்கள் தீர்மானிப்பார்கள். நேர்முகத் தேர்வு போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம் இது தீர்மானிக்கப்பட்டது. இந்த வர்ண ஒதுக்கீடானது ஒரு யுகம் எனப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அப்போது மனு மற்றும் சப்தரிஷி எனக்கூறப்படும் முதுமக்கள் குழுவும் மாற்றி அமைக்கப்படும். இதுவே மன்வந்தரம் என கருதப்பட்டது. புராணங்களில் கூறப்படும் இந்த மன்வந்தரம் என்பதே ஒரு மனிதரின் வர்ணம் ஒதுக்கிடப்படும் காலகட்டமாகும். இதன் மூலம் வர்ணம் என்பது ஒருவருக்கு கொடுக்கப்படும் பதவி என்பதும் அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவே இருந்தது என்பதும் தெளிவாகும்.[1]
இந்த முறையிலிருந்த குறைபாடு என்னவென்றால், இந்த நேர்முகத் தேர்வு அத்தனை சரியாக ஒருவரது திறமைகளை மதிப்பிட முடியாது. மேலும் ஒரு வர்ணத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முறையான பயிற்சியும் இருக்காது.
எனவே குருகுல முறை பண்டைய பாரதத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆச்சாரியர் எனும் குரு 12 ஆண்டுகள் காலத்திற்கு மாணாக்கருக்கு பயிற்சி அளித்து அதன் அடிப்படையில் மாணவரின் வர்ணம் எது என்பதனை நிர்ணயிப்பார். அந்த வர்ணமே மாணவரின் வாழ்க்கை முழுக்க நிலைக்கும். இந்த முறை முந்தைய முறையைக் காட்டிலும் சீர்மைப்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்த முறையிலும் வர்ணம் என்பது பிறப்படிப்படையில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் எப்போது உபநயன சடங்குகள் வீட்டிலேயே செய்யப்படும் முறை உருவாகியதோ அப்போது பிறப்படிப்படையிலான வர்ண-சாதி முறை ஏற்பட்டது.
அம்பேத்கர் இவ்வாறு கூறியுள்ளார் சரி. ஆனால் வேதங்களில் அம்பேத்கரின் இந்த வரலாற்று ஊகங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?
ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில இங்கே.
வேத மகரிஷிகள் பலர் இன்று தாழ்த்தப்பட்டதாக கருதப்படும் குலங்களில் வந்தவர்களே ஆவர்.
உதாரணமாக மீமாம்ச பாஷ்யம் எழுதிய சாபர மகரிஷி வேடரின் மகனாவார். இன்று சாபரர் எனும் குலம் தாழ்த்தப்பட்ட குலமாகும். சாபர பாஷ்யம் இந்து தத்துவ ஆன்மிக உலகின் அரும்பெரும் பொக்கிஷமாக விளங்கும் போது அந்த மகரிஷியின் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டிருப்பது இந்து தருமத்துக்கு எதிராக இழைக்கப்படும் பாவமல்லவா?
சத்யகாமன் எனும் பாலகனுக்கு தன் தந்தை யார் என்பதே தெரியாது. ஆனால், அவன் கௌதம மகரிஷியின் குருகுலத்தில் ஏற்கப்பட்டு வேத மந்திரங்களை காணும் சக்தி பெற்ற பெரும் அந்தண மகரிஷியானார் என சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது.
தாசி பெண்ணின் மகனாகப் பிறந்து, சூதாடும்மனைகளில் வளர்ந்தவரென்ற போதிலும், கவாக்ஷ மகரிஷி ஞானம் உடையவராகத் திகழ்ந்தார். வேதமந்திரங்களை ஞானக்கண்ணால் கண்ட மந்திர திரஷ்டா எனப்படும் மிகவும் உயர்ந்த ஆன்மிக நிலையில் வாழ்ந்த மகரிஷி அவர். அவரால் அருளப்பட்ட வேதமந்திரங்கள் மிக உயர்ந்த முக்தி நிலையை அளிப்பவை. அவரே சரஸ்வதி நதி தீரத்தில் நடந்த சோமயாகத்தின் எஜமானராக இருந்தருளினார் (ரிக் வேதம் – ஐதரேய பிராம்மணம்). அவரே நீர் நிலைகளைக் கட்டுப்படுத்திய சுயநலவாதிகளை அழித்து நீர்நிலைகளை மக்களுக்கு பொதுவான வளமாக ஆக்கினார் (சாமவேதம் – கௌஷீதகீ பிராம்மணம்). ரைவகன் எனும் வண்டி இழுப்பவர் பிரம்மஞானம், கொண்டிருந்தார் என்றும் அவரிடம் மன்னரே வந்து மண்டியிட்டு ஞானம் பெற்றார் என்றும் சாந்தோக்ய உபநிடதம் கூறுகிறது. பவிஷ்ய புராணத்தின்படி பராசரரின் அன்னை சூத்திரர் ஆவார்.[2] பாரசரருக்கும் மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவரே நான்கு வேதங்களையும் தொகுத்தளித்த மாமுனிவரான வேத வியாசர்! ஐததேரய பிராம்மணத்தை எழுதிய மஹிதாச மகரிஷியும் சூத்திர குடும்பத்தில் பிறந்தவரே ஆவார்.
எனவே, வேத காலத்தில் வர்ணம் பிறப்படிப்படையில் அமையவில்லை, வேத இலக்கியத்தில் பிறப்பு அடிப்படையிலான சாதியத்துக்கு இடமில்லை என அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதற்கு் தெள்ளத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
சுதந்திரத் தன்மையுடைய வர்ண அமைப்பு, எதனால் சுதந்திரமற்ற சாதிய அமைப்பாக மாறியது?
வேத நெறி சுதந்திரத்தை கொள்கையாகவும், செயலாகவும்கொண்டது. ஆனால், பிற்காலத்தில் வேத நெறிக்கு எதிராகத் தோன்றிய சுயநலவாதங்கள் வர்ண அமைப்பை சுதந்திரமற்ற அமைப்பாக மாற்றின. வேதநெறியை இகழ்ந்தன.
ஆனால், பழங்கால நூல்கள் சில வேதநெறிக்கு எதிராக சாதியம் பேசுகின்றனவே. அவை கூறும் சாதியக் கருத்துக்களைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?
இப்பழங்கால நூல்களில் உள்ள கருத்துக்களை மாற்றலாம் என இந்து மதம் சொல்லுகிறது. இந்த நூல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை, தற்காலிக சட்டங்கள் (ஸ்மிருதி) என்று இந்து மதம் வரையறுக்கிறது. ஆதிக்க மனப்பான்மை இன்றி உயிரினங்கள் அனைத்தும் சம உரிமையோடு சுதந்திரமாக வாழவேண்டும் என சொல்லுகிற வேதநெறியை இந்துமதம் மாற்றமுடியாதது, நிரந்தரமானது (ஸ்ருதி) என வரையறுக்கிறது.
சாதிப்பாகுபாடுகளை வலியுறுத்தும் தர்ம சாஸ்திரங்கள் இந்து தருமத்தின் அடிப்படை வேதங்களோ, உபநிஷதங்களோ, கீதையோ அல்ல – அவை ஸ்மிருதிகள் எனப்படும் தற்காலிக சட்டங்களே. இச்சட்டங்கள் இன்று பெரும்பாலும் எங்கும் செயல்முறையில் இல்லை.
ஆனால் அதுமட்டும் போதாது. கருத்தளவிலும் இச்சட்டங்களை இந்துக்கள் முழுமையாக மறுதலிக்க வேண்டும். இன்று உலக அரசியல் சட்டங்களில் உன்னதமான அரசியல் நிர்ணய சட்டமாக விளங்கும், அன்ணல் அம்பேத்கர் தலைமையில் தேசபக்த தலைவர்கள் இணைந்து உருவாக்கிய பாரத அரசின் அரசியல் நிர்ணய சட்டமும், அதன் அடிப்படை கருத்தாக்கமுமே இந்துக்களின் சமூக செயல்பாடுகளை நிர்ணயிக்கும் சட்டமாகத் திகழ வேண்டும்.
ஆனால் சாதி முறை என்பது இனரீதியில் உருவானது, கைபர், போலன் கணவாய் வழியாக படையெடுத்த ஆரியர்கள் இங்குள்ள பூர்வீகவாசிகளான திராவிடர்களை அடிமைப்படுத்தி அவர்களை சூத்திரர்களாக்கினார்கள். பிராம்மணர்கள் ஆரிய வந்தேறிகள். இதைத்தான் ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்குமான போராட்டமாக இந்து மதத்தின் அடிப்படையான ரிக்வேதமே சொல்கிறது எனக் கூறுகிறார்களே?
இது குறித்தும் பாபாசாகேப் அம்பேத்கரே தெளிவுபடுத்தியுள்ளார். ஆரிய – தஸ்யு எனும் பதங்கள் இனத்தைக் குறிப்பவை அல்ல என அவர் கூறியுள்ளார். ஆரியப் படையெடுப்பு என்பதே ஒரு இனவாதக் கற்பனையாகும் எனக் கூறும் அம்பேத்கர், பிராம்மணர்களும் சரி சூத்திரர்களும் சரி வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறும் ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டினை முழுமையாக மறுத்துள்ளார். அவர் கூறுவதாவது –
“ஆரியப் படையெடுப்புக் கோட்பாடானது உண்மைத்தகவல்களின் மேல் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக முதலில் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு உருவாக்கப்பட்டு பின்னர் அதனை உண்மையாக நிரூபிக்கும் விதத்தில் தகவல்கள் தேர்ந்தெடுத்து புனையப்பட்டதாகும். அது ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும் தரையில் வீழ்கிறது.
வேத இலக்கியங்களில் இந்தியாவின் மீது ஆரிய இனம் படையெடுத்ததற்கோ அல்லது இங்கு வாழ்ந்த பூர்விக வாசிகளாக கருதப்படும் தஸ்யூக்கள் அல்லது தாஸர்களை வெற்றிக்கொண்டதற்கோ ஆதாரமில்லை. தாஸர்கள் அல்லது தஸ்யூக்களுக்கும் ஆரியருக்குமான வேறுபாடு இனரீதியிலானது என்பதற்கோ ஆரியர்களின் தோல் நிறமும் தாஸ-தஸ்யூக்களின் தோல் நிறமும் வேறுபட்டது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை.”
அம்பேத்கர் மேலும் கூறுகிறார்: “தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்கள் என்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே. பிராம்மணர்கள் நாகர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உட்படுத்தப் பட்டவர்களும் நாகர்களே.”
சரி, அம்பேத்கர் இப்படி கூறுகிறார். ஆனால் வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? திராவிட நகரங்களான சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரியர்கள் அழித்ததாகவும் அதன் பிறகு அவர்கள் சாதி முறையை ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார்களே?
இல்லை. இன்றைய நவீன வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் அம்பேத்கர் கூறிய கருத்துக்களில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதுமட்டுமல்ல ஆரிய-இனவாதக் கோட்பாட்டுக்கும் அப்படி ஒரு இனம் இந்தியாவில் பழங்காலத்தில் நுழைந்ததற்கும் எவ்வித மரபணு ஆதாரமும் இல்லை என நவீன மரபணு ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். பிராம்மண சாதி எனக் கருதப்படுபவர்களுக்கும் நம் தேச காடுகளில் வசிக்கும் வனவாசி மக்கள் சமுதாயங்களுக்கும் மரபணுத் தொடர்புகள் உள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது.
சிந்து சமவெளியில் அண்மைக் காலங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஜிம் ஷாப்பர் எனும் அகழ்வாராய்ச்சியாளர் கூறுவதாவது: “அகழ்வாராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியிலிருந்து படையெடுப்பு ஏற்பட்டதாக காட்டவில்லை. (பண்டைய பாரதத்தின்) பண்பாட்டு வளர்ச்சி இந்த மண்ணிலேயே ஏற்பட்ட கலாச்சார பரிமாணமே ஆகும்.”
அதைப்போலவே இருபது ஆண்டுகளும் மேலாக ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட மார்க் கென்னோயர் தம் இணைய தளத்தில் கூறுகிறார்: “பழைய அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதியது போல ஆரிய படையெடுப்பு நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக்கும் அதன் அருகாமையில் வாழ்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட உறவுகள் தொடர்புகள் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” மேலும், ஹரப்பா என்பதே ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஹரிவிப்யாவாக இருக்கலாம் எனும் அறிவார்ந்த ஊகத்தையும் தெரிவிக்கிறார் (ஹரிவிப்யா எனும் இடத்தில் புரு வம்சத்தவர்களுக்கும் துர்வாச வம்சத்தவர்களுக்கும் போர் நடந்ததாக ரிக் வேதம் தெரிவிக்கிறது. அவர்கள் இருவருமே வேத பண்பாட்டை சேர்ந்தவர்கள்.)
அதைப் போலவே, பழைய மரபணு ஆராய்ச்சியாளர்கள் சிலர் சில மேம்போக்கான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஆரிய படையெடுப்புக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், அண்மையில் நடத்தப்பட்ட முழுமையான ஆராய்ச்சிகளோ இந்திய சாதிகளின் மரபணுக்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருப்பதுடன் அவற்றில் வெளியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தின் தாக்கம் (ஆரியப் படையெடுப்பு நடந்திருந்தால் எப்படி இருந்திருக்க வேண்டுமோ அப்படி) இருக்கவே இல்லை எனத் தெரிவிக்கின்றன.[3]
அது மட்டுமலல. அம்பேத்கர் கூறியதைப் போலவே, (“தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்களென்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே”) இங்குள்ள அந்தண சாதியினரும் வனவாசிகளும் மரபணுத் தொடர்புடையவர்கள் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.[4]
(தொடரும்)
சான்றுகள்:
[1] Chapter 7, Revolution and Counter-Revolution in Ancient India, Dr. Babasaheb Ambedkar, Writings and Speeches, Volume 3.
[2] Bhavishya Purana 1.42.22 quoted by Kunal, “Dalit Devo bhava”, Hindi. Govt. Of India Publications Division, New Delhi.
[3] Sahoo et al. 2006; Sengupta et al. 2006; As quoted in “Genetic Imprints of Pleistocene Origin of Indian Populations”, International Journal of Human Genetics, 2008. “The fact that it (M17) is proportionately distributed between the Dravidian and Indo-European tribal groups provides significant evidence against any major influx of Indo-European speakers that could have drastically changed the Indian male gene pool”.
[4] “The Autochthonous Origin and a Tribal Link of Indian Brahmins: Evaluation Through Molecular Genetic Markers”, The American Society of Human Genetics 57th Annual Meeting Abstract Book , 2007
நல்ல தெளிவுரை
அடுத்த பகுதியில் முடிந்தால் விளக்குங்கள்:
வேதத்தை அனைத்துச்சாதியினரும் படிக்கக்கூடாது என்று கூறுவது உண்மையா?
// s.raja raman
11 February 2010 at 6:37 am
நல்ல தெளிவுரை
அடுத்த பகுதியில் முடிந்தால் விளக்குங்கள்:
வேதத்தை அனைத்துச்சாதியினரும் படிக்கக்கூடாது என்று கூறுவது உண்மையா? //
ஐயா ராஜாராமன்,
இந்தக் கட்டுரைக்குக் கீழேயே இப்படி வருதே –
தொடர்புடைய பதிவுகள்
■சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2
■சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்
அதில் போய்ப் படித்துப் பாருங்கள், உங்கள் கேள்விக்கு விடை உள்ளது.
Excellent ! Excellent ! Excellent !
We need immediately an English translation of this and should be circulated all over India !
Will create a revolution if done so !
Jatayu, Aravindan and Panithuli, God bless you !
From an interview with Swami Vivekananda :
https://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_5/Questions_and_Answers/II_At_The_Twentieth_Century_Club_of_Boston
Q.—Does Vedanta recognise caste?
A.—The caste system is opposed to the religion of the Vedanta. Caste is a social custom, and all our great preachers have tried to break it down. From Buddhism downwards, every sect has preached against caste, and every time it has only riveted the chains. Caste is simply the outgrowth of the political institutions of India; it is a hereditary trade guild. Trade competition with Europe has broken caste more than any teaching.
// தொடக்க காலத்தில் ஒருவரது வர்ணத்தை மனு மற்றும் சப்தரிஷிகள் எனும் அமைப்பினைச் சார்ந்த முதுமக்கள் தீர்மானிப்பார்கள். நேர்முகத் தேர்வு போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம் இது தீர்மானிக்கப்பட்டது. இந்த வர்ண ஒதுக்கீடானது ஒரு யுகம் எனப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அப்போது மனு மற்றும் சப்தரிஷி எனக்கூறப்படும் முதுமக்கள் குழுவும் மாற்றி அமைக்கப்படும். //
இப்படி கேள்விப்பட்டதில்லை. இதற்கு ஏதாவது reference கொடுக்க முடியுமா?
யுகம் 4 வருஷமா? ஏதாவது அச்சுப்பிழையா?
// பராசரரின் தந்தை சூத்திரர் ஆவார். //
பராசரரின் தந்தை வசிஷ்டரின் மகனான சக்தி இல்லையோ? வசிஷ்டர் பிராமணர் ஆயிற்றே? இப்போதுதான் விக்கியிலும் பார்த்தேன் – விக்கியிலிருந்து: “Parāśara is a Rigveda Mahārśi and author of many ancient Indian texts. Parāśara was the grandson of Vasishtha, the son of Shakti-muni, and the father of Vyasa.”
ஒவ்வொரு சத்யகாம ஜாபாலிக்கும் பத்து கர்ணன்களும் ஏகலைவன்களும் நமது பாரம்பரியத்தில் தென்படுகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வேத காலத்திற்கு பிற்பாடும், வேதாந்த வழியில் வந்த பல ஆச்சார்யர்களும் வர்ணாஸ்ரம தர்மத்தையே சரி எனக்கொண்டனர் – சாதியத்தை நிராகரித்தனர்
பிராம்மணரான பிள்ளை லோகாச்சர்யர் என்ற நைஷ்டிக பிரம்மச்சரியருக்கு முக்கியமான சிஷ்யரானவர் ஹரிஜன் என கருதப்படும் விலான்சோலை பிள்ளை – வேதத்தில் வல்லவரான இவருக்கு பல பிராம்மண சிஷ்யர்கள் இருந்தனர்
ராமனுஜரின் முக்கியமான சீடரில் ஒருவராக உறங்கவில்லி தாசர் என்று ஒருவர் இருந்தார். ராமானுஜர் முதலியாண்டான் என்ற பிராமண சிஷ்யரின் துணை கொண்டே கொள்ளிடத்தில் நீராடசென்று வருவார் அப்படி நீராடி வரும்போது முதளியாண்டனின் மேல் ஈர துணியை போட்டு அதன் மேல் கை வைத்து வருவார் [பிறரை தொடாமல் இருப்பது சன்யாசிகளுக்கு முக்கியமாக கருதப்பட்டது], ஆனால் அவர் உறங்கவில்லி தாசர் துணை கொண்டு நீராடி வருகையில் துணி இல்லாமல் அவரது தோளிலேயே கையை வைத்து வருவார். ஹரிஜனாக இருந்தாலும் அவரது பக்திக்கு முன் முதளியாண்டனின் பிராம்மண குளமானது மேல் என்றே ராமானுஜர் கருதியதற்கு சான்று [ராமானுஜருக்கு இன்றளவும் ஹரிஜன பக்தர்களே அதிகம்]
பிராமணரான எனது குருவும் பிராமணர் அல்லாத ஒருவர் வேதாந்தம் கற்க ஆசையுடன் இருந்தமையால் அவரையும் சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு தனது வீட்டிலேயே வேதாந்தம் சொல்லித்தருகிறார்
அன்புள்ள ஆர்.வி.அவர்களுக்கு,
// இப்படி கேள்விப்பட்டதில்லை. இதற்கு ஏதாவது reference கொடுக்க முடியுமா? யுகம் 4 வருஷமா? ஏதாவது அச்சுப்பிழையா? //
இல்லை. இது டாக்டர் அம்பேத்கர் கூறியது. மூன்று காலகட்டங்கள் பற்றிய கருத்து முழுவதுமே டாக்டர் அம்பேத்கருடையது.
// பராசரரின் தந்தை சூத்திரர் ஆவார். //
இது பிழையாகப் பதிப்பிக்கப் பட்டுவிட்டது. பராசரரின் அன்னை சூத்திரர் என்று ஒரு புராணக் கருத்து உள்ளது. இந்தத் தவறு திருத்தப் பட்டு விட்டது. சான்றுகள் தனியாகக் கட்டுரைக்குக் கீழே அளிக்கப் பட்டிருக்கின்றன.
சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.
திரு. சாரங் அவர்களே,
நீங்கள் எழுதியதில் ஒரே ஒரு திருத்தம் இருக்கிறது என்று நம்புகிறேன்:
“ஹரிஜனராக (உறங்காவில்லி தாசர்) இருந்தாலும் முதளியாண்டாரின் குலத்திற்கு முன் அவரது (உறங்காவில்லி தாசரது) பக்தியே மேல்” என்று எழுத முற்பட்டு,
“ஹரிஜனாக இருந்தாலும் அவரது பக்திக்கு முன் முதளியாண்டனின் பிராம்மண குளமானது மேல்” என்று பிழையாக எழுதியுள்ளீர்கள் என்று நம்புகிறேன்.
குற்றத்தை சுட்டிக் காட்டியதற்கு மன்னிக்கவும், ஆனால் இங்குள்ளவர்கள் தவறாக அபிப்பிராயப் படுவார்களோ என்று அஞ்சி எழுதினேன். நான் சொன்னது தவறானால் மன்னிக்கவும். அநேக நமஸ்காரம்.
By saying such truths bluntly, all the castiest people (who call themselves as pro-hindu and anti-hindu) are going to be against you. They cannot tolerate that they are not actually endowed with a superior culture and nature genetically.
And only such people are in the power centers and are good at lobbying.
But, if veda is to be trusted, “Truth alone will triumph”.
You people are inspiring with your integrity.
கந்தர்வன் அவர்களே
ஒரு பெரிய தவரை திருத்தியமைக்கு எனது சிரம் தாழ்நத வனக்கம் – நான் தவராக எழுதியது ராமனுஜரை அல்லவா குரை கோரினார் பொல ஆகிவிட்டது
ராமானுஜரைப் பற்றி இன்னொரு செய்தி: குருபரம்பரை நூல்களில் அவர் வேளாள குலத்தவரான திருக்கச்சி நம்பிகள் வாய் வழியாக வரதராஜப் பெருமாள் சொன்ன உபதேசத்தை வாங்கிக் கொண்டு, அவரை குருவாகவே ஏற்றுக்கொண்டார்.
ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் திருமால், திருமகள், சேனை முதலியார் (விஷ்வக்சேனர்), இவர்கள் முதலாக அடுத்த குருவாக நம்மாழ்வார் சொல்லப்படுகிறார். இந்த நம்மாழ்வாரும் வேளாளர் குலத்தில் தான் பிறந்தார். ஏன், பெருமாள் கோயிலில் அனைவரும் ஆசையாகத் தங்கள் தலையில் சாத்திக் கொள்ளும் பகவான் பாதுகையான சடாரியானது நம்மாழ்வார் ஸ்வரூபம் என்றே ஸ்ரீவைஷ்ணவ மரபினர் சொல்வர். “பிரப்பன்ன ஜன கூடஸ்தர்” (சரணாகதர்களின் தலைவர்) என்று அவர் அழைக்கப் படுவார்.
நாம் சாச்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மயங்கித் திரிவதற்குக் காரணம் என்ன என்பதற்கு ஏன் அபிப்பிராயப்படி கூறுகிறேன்:
(1) ஆத்மாவாகிய நாமும், உடலும் வேறு என்பதை மறந்துப் போய் மயங்குவது, தேக-ஆத்மாபிமானத்தை டிவியிலும், இன்டர்நெட்டிலும், கவர்ச்சிப் பத்திரிகைகளிலும் வளர்த்து வருவது.
(2) பாஷ்யங்களையும், பிரபந்தங்களையும் முழுதும் படிக்காமல், குறைந்த பட்சம் தற்காலத்து ஆசாரியார்களையும் கேட்டுத் தெளியாமல், ஏதோ ஓரிரண்டு வரிகளை வைத்துக் கொண்டு “இப்படி எழுதியுள்ளார்களே” என்று அறியாமையால் கலங்குவது.
(3) அப்படிக் கலங்கிப் போனதற்குச் சமாதானமாக “ஸ்மிருதி நூல்கள் தற்காலிகமானவை” என்று தவறாகக் கொள்ளுவது (மன்னிக்க வேண்டும் – இக்குற்றத்தை கட்டுரை எழுதிய ஆசிரியர் குழுவும் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஸ்மிருதி நூல்களைத் “தற்காலிகம்” என்று எந்த மதத்துப் பூர்வாச்சரியார்களும் சொல்லவில்லை.)
மேற்கூறிய விஷயத்தில் (குறிப்பாக மூன்றாவது புள்ளியில்) விவேகானந்த-ராமகிருஷ்ண-சின்மயானந்த முதலிய நவீன இயக்கங்களுக்கும் எமக்கும் அபிப்பிராய பேதம் உள்ளமையை அறிவோம். கருத்து வேறுபடுவதில் சுதந்திரம் உண்டு, அதை முற்றிலும் மதிக்கிறோம். ஆனால், (அ.) பழமைவாதம் பேசும் நாங்கள் ஒரு பொழுதும் யாரையும் வெறுக்க வேண்டும்; பிற்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. (ஆ.) “பழமைவாதிகள் மனித நேயம் அற்றவர்கள்” என்று கூறுவது நியாயமே இல்லை.
சுருக்கமாகச் சொன்னால், மனித நேயம் காண்பதற்கு ஸ்மிருதி நூல்களை தள்ளுவது சிறிதளவும் அவசியமே இல்லை, நூல்களில் உள்ள வரிகளைத் தனிப்பட்டு எடுக்காமல், எல்லா நூல்களின் சாரத்தையும் எடுத்துக் கொண்டு, “ஆக மொத்தம் என்ன சொல்கிறார்கள்?” என்றே ஆராய வேண்டும்.
ஸ்மிருதி நூல்களிலேயே, “சூத்திரனோ, வைஷ்யனோ, க்ஷத்திரியனோ, அந்தணனோ, (அப்பாவியாகிய) எவனுடைய உயிருக்கு ஆபத்து வந்தால், அவர்களைக் காப்பாற்றுவதர்காகக் கூறும் பொய் பொய்யாகாது, அது தெய்வ வாக்காகும்” என்றும், “பகவான் உத்சவத்தைக் காண்பதற்கு வந்தவர்களில் குல-சாதி வித்தியாசமும், தீண்டாமையும், தீட்டும் பார்க்கிற பிராம்மணனின் பித்ருக்கள் (அவன் செயலால்) அந்த வினாடியே கொடிய நரகத்தில் விழுந்து விடுகிறார்கள். இதனால் பெரும் பாவத்துக்கு உள்ளாகிறான்” என்றும், “பெண்கள் அவமதிக்கப் படும் வீடுகள் – கலி புருஷன் மகிழ்ச்சியுடன் உண்டு உறங்கி நடனமாடும் இல்லங்கள்” என்றும் பல இடங்கள் உள்ளாமையை கவனிக்காமல், எதிர்த்தரப்பு வாதத்துக்கு அஞ்சி வலைத்தளங்களில் ஏதேதோ எழுதுகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொண்டால் தான் நம் தரப்பு வலுவடையும் என்பது எமது தாழ்மையான கருத்து.
ஆதி சங்கராச்சாரியார் கீதை அவதரிகையில் மிக அழகாக கூறுகிறார்: “உயிர்களை உய்விக்கும் பொருட்டும், உலக வாழ்க்கை சீராக நடைபெறவேண்டும் என்பதன் பொருட்டும், பகவான் வரண-ஆசிரம தர்மங்களைக் கற்பித்தான். இம்மையில் செல்வமும் மறுமையில் வீடுபேறும் விரும்பியோர்களுள் மனிதர்கள் அனைவராலும் இந்த வரண-ஆசிரம தருமங்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கப் பட்டு வந்தன.” அதாவது, “இந்த ஜன்மத்தில் பட்டினி கிடந்து ஏழ்மையில் தவி, அடுத்த ஜன்மத்தில் நல்லது நடக்கும்” என்று எவரையும் பிற்படுத்தி வருத்துவது வரண-ஆசிரம தர்மங்களின் குறிக்கோள் அன்று. உபதேச சாஹச்ரி நூலில் சங்கரர் “ஒருவன் குலம்-வரணம் முதலியவற்றால் தற்பெருமை பேசுவது அவனுக்கு ஞானம் ஏற்படாமையின் அறிகுறியாகும்.” என்றே கூறியுள்ளார்.
காருட புராணத்தில்: “என்மேல் உண்மையான பக்தி வைத்துள்ளவன் மிகத் தாழ்ந்த குலத்தவனாக இருந்தாலும் அவனை ஞானமும் பக்தியும் நிரம்பிய சிறந்த பிராம்மணனாகவே பாவித்துக்கொள். அவனே உண்மையான துறவி. அவனுக்கு சாஸ்திரங்களை கற்பிக்கலாம், அவனிடமிருந்து கல்வியும் பெறலாம்” என்றே பகவான் கூறியுள்ளான்:
madbhaktajana-vAtsalyam poojAyAm cAnumOdanam |
matkathA-SravaNE bhaktih svara-nEtrAngavikriyA ||
svayamArAdhanE yatnO mamArthE Dhambhavarjanam |
mamAnusmaraNam nityam yacca mAm nOpajeevati ||
bhaktih ashTa-vidhA hi EshA yasmin mlEcchEpi vartatE |
sa viprEndrO munih SreemAn sa yatih sa ca panDitah ||
tasmai dEyam tatO grAhyam sa ca poojyO yathA hi aham ||
(கருட புராணம், ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் 8-91).
இத்துடன் சேர்த்து கீதையின் பதின்மூன்றாம் அத்தியாயத்தில் ஏழாம் சுலோகம் தொடக்கமாக மூன்று சுலோகங்களைப் படித்து பார்க்க வேண்டும்.
முடிவாக, “ஒரு பிராம்மணானாக இருந்து கொண்டு இதை எல்லாம் தைரியமாக கந்தர்வன் எழுதுகிறான், he does not know what it is to be in someone else’s shoes.” என்று நினைக்கக் கூடும். வேளாள குலத்தில் பிறந்து, கிறித்துவ மதத்தை விட்டு விலகி, குடும்பத்துடன் பூரண பரமவைதிக ஆஸ்திகராக மாறியுள்ள D.A.Joseph என்று ஒருவர் இருக்கிறார் (www.dajoseph.com). அவருடைய அற்புதமான வலைதளத்தை சற்று நேரம் ஒதுக்கி அலசிப் பார்த்தாலே அப்பெரியோரும் இதையே பின்பற்றுகிறார் என்று தெளிவாகும்.
மேற்கூறிய இவ்விஷயங்களில் நான் ஒரு authority அல்ல. சற்று கேள்வி ஞானத்தாலும் சற்று புத்தகங்களிலும் படித்துள்ளதால், முக்கியமாக பகவத்-ஆசாரிய கிருபையால் ஏற்பட்ட சிறிதளவு ஞானமே.
refer this portion in web site
“We pigeon holed everyone by caste and if we could not find a true caste for them, labelled them with the name of hereditary occupation. We deplore the caste system and its effect on social and economic problems, but we are largely responsible for the system we deplore.”
https://indian-history.suite101.com/article.cfm/british_india_creator_of_indian_caste_system
பழமைவாதத்தை, சாதீயவாதத்தை, சமய இறுக்கத்தை எல்லாம் எப்படி சமத்காரமாக நியாயப் படுத்துவது என்பதை கந்தர்வன் ஒரு கலையாகவே கற்று வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது..
கந்தர்வன், ஸ்மிருதிகள் என்று சொல்பவை நீங்கள் சொல்லும் மேற்கோள்கள் மட்டும் அல்ல.. கடும் சாதீயமும், வெறுப்புணர்வும் ததும்பும் பகுதிகளூம் அவற்றில் உள்ளன என்று காட்ட இதைவிட அதிக மேற்கோள்களையும் தர முடியும். (ஆனால் அவை பெரும்பாலும் show-case வகையறா மட்டுமே, அவை பரவலாக நடைமுறைப் படுத்தவில்லை) .. ஸ்மிருதிகள் தற்காலிகமானவை, காலாவதியாகக் கூடியவை என்ற கருத்து ஸ்மிருதிகளிலேயே உள்ளது என்பதையும் கவனிக்கவும். தமிழ்ஹிந்துவில் முன்பு வந்த “ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்” என்ற கட்டுரையைப் பார்க்கவும், இந்தக் கருத்தை விரிவாகவே அது பேசுகிறது.
// பல இடங்கள் உள்ளாமையை கவனிக்காமல், எதிர்த்தரப்பு வாதத்துக்கு அஞ்சி வலைத்தளங்களில் ஏதேதோ எழுதுகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொண்டால் தான் நம் தரப்பு வலுவடையும் என்பது எமது தாழ்மையான கருத்து. //
ஆமாம். உள்ளதை உள்ளபடியே தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் – சாதியம் இருந்தது, சாதிய அடக்குமுறைகளும் இருந்தன. பாமரர்களை அடக்கி, ஒடுக்கி நசுக்கியது எல்லாமும் இருந்து. அதையும் மறுக்க முடியாது தானே!
இதை எழுதியிருப்பவர்கள் முழு conviction உடன் தான் எழுதி இருக்கிறார்கள். ”எதிர்த் தரப்புக்கு அஞ்சி ஏதேதோ” எழுதவில்லை.
ஹிந்து தர்மத்தின் ஒவ்வொரு பழைய பழக்க வழக்கத்தையும் நியாயப் படுத்த வேண்டிய சுமை இன்றைய இந்துவுக்கு இல்லவே இல்லை. சுருதி/ஸ்மிருதி என்ற பாகுபாடு நமக்களித்த பெரிய சுதந்திரம் அல்லவா இது! பாரதியும், விவேகானந்தரும், சாவர்க்கரும் இந்து மறுமலர்ச்சியின் நாயகர்கள். அவர்கள் நமது தர்மத்தின் சாரமான பொருளை எடுத்துக் கொண்டார்கள், ஆனால் அதன்மீது படிந்த கசடுகளை நிர்தாட்சண்யமாக உதறினார்கள். கடும் சொற்களால் சமுதாயச் சீரழிவுகளைக் கண்டித்தார்கள் என்பதையும் மறக்கவேண்டாம்.
ஸ்மிருதிகளை நாம் கட்டாயம் கற்கவேண்டும், அலசவேண்டும் – அவை அளிக்கும் வரலாற்றுப் பார்வைக்காக, நம் சமுதாயம் அடைந்துவந்த பரிணாமங்களைப் புரிந்துகொள்வதற்காக.. அதில், அவ்வப்போது சில நல்ல நீதிபோதனைகளும் கிடைக்கலாம், ஆனால் இன்றைய வாழ்க்கைக்கும் அவை ஒட்டுமொத்தமாக வழிகாட்டும் என்று சொன்னால், அது இந்து தர்மமே அல்ல, அப்பட்டமான அடிப்படைவாதம்.
பர்த்ருஹரி சொல்கிறார் –
पुराणमित्यॆव न साधु सर्वं, सन्त: परीक्ष्यान्यतरात् भजन्ते ।
तातस्य कूपोयमिति ब्रुवाण:, क्षारम् जलं कापुरुषा: पिबन्ति ॥
தொன்மையானது என்பதாலேயே எல்லா விஷயமும் நல்லது ஆகி விடாது.
சான்றோர்கள் நன்கு சோதித்துப் பார்த்தபின்பே ஒரு விஷயத்தைப் போற்றுவார்கள்.
முட்டாள்கள் தான் தன் தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக
அதில் வரும் உப்புத்தண்ணீரையும் குடித்துக் கொண்டிருப்பார்கள்!
திரு ஜடாயு அவர்களே,
சில முக்கியமான விஷயங்களை இங்கு சொல்ல விழைகிறேன் – பொறுமையுடன் அனைவரையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
//
கடும் சாதீயமும், வெறுப்புணர்வும் ததும்பும் பகுதிகளூம் அவற்றில் உள்ளன என்று காட்ட இதைவிட அதிக மேற்கோள்களையும் தர முடியும்.
//
ஸ்மிருதி நூல்களை ஒட்டு மொத்தமாக, நான் காட்டிய வாக்கியங்களுடனும் சேர்த்து, “ஆக மொத்தம் என்ன சொல்ல வருகிறார்கள்? எதை எதை நடைமுறையில் பின்பற்ற வேண்டும்?” என்றே பார்க்க வேண்டும். இதற்கு உறுதுணையாக, ஸ்மிருதி நூல்களை ஆசிரயித்தே வந்த பரம ஆச்சாரியார்கள் வாழ்க்கையிலிருந்தும் வாக்கிலிருந்தும் தெளிவுற அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ஸ்மிருதி நூல்களை ராமானுஜர் முதலிய ஆசாரியார்களும் ஆசிரயித்து உள்ளனர். இதற்கு முன்பு கூறியுள்ள மறுமொழியின் படி அவர் பரம காருன்யராகவே பல்வேறு குலத்தவர்களையும் சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டார் என்பது தெளிவு.
நூல்களில் ஒரு சில இடங்களை மட்டும் அப்படி எடுத்துப் பார்த்து, நாமாவே அர்த்தம் பண்ணிக் கொள்ள முயன்றால் அப்படி தான் அர்த்தம் உள்ளதாகத் தோன்றும். இந்த விசாரம் நமக்குத் தேவையே இல்லை, விசாரம் பண்ண சக்தியும் அறிவும் இல்லை. எதிர்த் தரப்பினர் இந்த விஷயத்தில் நம்மை வம்புக்கு இழுத்தால் இந்த பதிலைக் கூறுவதே சரிப்படும்.
ஸ்மிருதி நூல்கள் தற்காலிகம் என்று எங்குமே சொல்லப்படவில்லை; மாறாக, “வேதத்தை ஒட்டித் தான் எழுதப்பட்டவை. ஆனால், வேதத்திற்குப் புறம்பாக அர்த்தங்கள் காணப்பட்டால், அதை ஆதரிக்கக் கூடாது” என்று மனு முதலியோர் கூறியுள்ளார். பூர்வ மீமாம்ச (ஜெய்மினி) சூத்திரமும் இதையே சொல்கிறது. இதற்கும் தற்காலிக விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை.
நான் ஸ்மிருதி நூல்களில் கூரியுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதே இல்லை. மாறாக, நமக்கு அர்த்தம் புரியாததற்கு, மனு முதலிய காருன்யர்களையும் அவர்களுடைய நூல்களையும் இகழ வேண்டாம் என்றே கேட்டுக் கொள்கிறேன். யஜூர் வேதம் தைத்திரீய சம்ஹிதை, “மனு சொன்னது அனைத்தும் மருந்து” என்று கூறுகிறது. ஆதி சங்கரர் இதை பாஷ்யத்தில் கூட சுட்டிக் காட்டியுள்ளார். இதை மதித்துத் தான் “வைதீக ஹிந்து” என்று கூறுபவர்கள் அர்த்தம் கூற வேண்டும்.
நான் முன்பே இத்தளத்தில் கூறியிருக்கிறேன் – ருஷிகள், “இம்மையிலும் மறுமையிலும் நற்கதி கூறும் வைதீக வழி உள்ளபோழுது, தீய வழிகளில் சென்றுவிடுவார்களோ மக்கள்?” என்று பரம கருணையாலே சிலவற்றை ஸ்மிருதி நூல்களில் கடுமையாகக் கண்டித்தனர். வெறுப்பு உணர்ச்சியையும் சாதியத்தையும் தூண்டுவது அவர்கள் குறிக்கோள் அன்று. நீங்களே ஒத்துக் கொண்டு விட்டீர்கள் – அவற்றில் கூரியுள்ளவையை யாருமே நடைமுறைப்படுத்தவில்லை என்று.
ஆகையால், இதற்கு “தண்டனைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்” என்பது பொருள் ஆகாது. அவ்வாக்கியங்களிளிருந்து புரிந்துக்கொள்ள வேண்டியது, “இவற்றைச் செய்யாமல் இருந்தால் நன்மைகள் ஏற்படும்”, “இவற்றைச் செய்ய மறந்தால் பாப்பம் விளையும்” என்பதே ஆகும். ஸ்மிருதிகளின் நோக்கம் ஆவது, “இவை இவை personal ideals ஆகும்” என்பதைக் கூறவே அப்படி exaggerate பண்ணிச் சொல்கிறார்கள். இதை “அர்த்தவாதம்” என்று சமஸ்கிருதத்தில் சொல்லுவார்கள். இதை மேற்கூறிய ஆச்சாரிய நூல்களிலிருந்து தான் தெளிய வேண்டும்.
உறங்கா வில்லிதாசர் ‘ஹரிஜன்’ அல்ல. அவர் ஒரு பிராமணரல்லாத வகுப்பார். அவ்வளவே.
வைணவசம்பிராதாயத்தில், பிராமணரல்லாதார், ‘தாசன்’ என்ற பெயரைச்சேர்த்துக்கொள்வதுண்டு. இவரைப்போல பிற ‘தாசர்களும்’ உண்டு.
திருக்கச்சி நம்பிகள் ‘வேளாளர்’ குலத்தவர் அல்ல. அவர் வைசியர். பூந்தமல்லிக்காரர். காஞ்சி வரதராஜர் கோயிலுக்கு கோயில் தொடர்பான பொருட்களை வழங்கி வந்தவர். (It is a fair guess he was a contractor to supply these items, as he was from traders community.)
அவர் கோயில் சம்பந்தத்தாலும், பிறப்பாலே அவர் இறைனெருக்கம் உடையவரானதாலும், அவர் திருமால் பக்தியில் ஆழங்கால்பட்டு உயர்னிலையை எய்தி ஆளவந்தாரின் சீடரானார்.
நம்மாழ்வார், வேளாளர் என்பது சரியே. அவர் காலத்தில் அவர் ஜாதி ‘சூத்திரர்’ என்ற அடைக்குள் வரும். எனவே, அவரை பிராமணர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ‘சூத்திரருக்கு’ இறைவனைப்பாட தகுதியில்லை. அப்படிப்பாடும் பாக்களுக்கு இறைத்துவம் கிடையா என்றார்கள். இதை எதிர்த்தவர்கள் ஆச்சாரியர்கள். எனவே ஆச்சாரியர்களும் துவேசப்படுத்தப்பட்டார்கள். இராமனுஜருக்கு திருக்குறுங்குடி அக்ரகாரத்தில் பிட்சையெடுத்து செல்லுங்கால், விஷம் வைத்துக்கொள்ளும் முயற்சி நடந்தது.
அக்காலத்தில், தலித்துகள், சூத்திரர்கள் மட்டுமல்லாமல், பிராமணரல்லாத எவரும் தம்வீடுகளில் கால் வைத்தால் தீட்டு என்று பிராமணர்கள் நினைத்து ஆச்சாரம் பார்த்தார்கள்.
எனவேதான் திருக்கச்சி நம்பிகள் வைசியராக இருந்தாலும், அவருக்கு உண்ண உணவை தஞ்சம்மாள் (திருமதி இராமானுஜர்) வேண்டா வெறுப்பாகவும் துவேசம் பண்ணியும் கொடுத்தார். அதை நம்பிகள் அருந்தாமல் வெளியேறி விட்டார்.
இராமனுஜர் வீட்டில் நுழையும் போது, தஞசம்மாள் குளித்துக்கொண்டிருந்தார்.
’நம்பிகளுக்கு அமுது அளிக்க சொன்னேனே….செய்தாயா?’
‘செய்தேன். அவர் வேண்டாமென்று சென்று விட்டார். அவர் பிராமணரல்லாதவர் நம் வீட்டில் கால் வைத்துவிட்டார். எனவே தீட்டு போக குளிக்கிறேன்!’
இராமனுஜர் ஏன், நம்பிகள் உணவருந்தாமல் சென்றார்; என்பதெல்லாம் புரிந்துகொண்டார்.
அன்றிலிருந்து அவர் இல்லற வாழ்க்கையைத் துறந்து முழுத்துறவியானார் என்பது இராமனுஜரின் சரிதம்.
From this, we understand brahmins practised untouchability with all varnas under them. Not only dalits.
மேற்கூரியதோடு, இன்னொரு விஷயம் –
அடக்குமுறையும், தீண்டாமையும், சாதீயமும் இருந்து வந்ததற்குக் காரணம் ஸ்மிருதி நூல்கள் இல்லை. கலியுகத்தில் உழன்ற அண்மைக்கால நூற்றாண்டுகளில் வாழ்ந்தோர்களின் குதர்க்க புத்தி தான். இல்லையானால், கிரேக்க மேகச்தநீசும், அர்ரியனும், பா-ஹிஎனும் இந்திய சமூகத்தைப் பற்றி புகழ்ந்திருக்க மாட்டார்கள். இது மறுக்கமுடியாத வரலாற்றுச் சான்றாகும்; எல்லா இந்து/இந்தியர்களும் அறிந்து பெருமைப்பட வேண்டிய விஷயம்.
இந்தியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகளா?
இப்போது இந்தியாவில் வசிக்கும் மக்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் அல்ல என்றும், அவர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும் கூறப் படுகிறது அல்லவா?
ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே, நல்லா கவனிங்க,
அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,
அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே, அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது? ருஷியாவா? மத்திய ஆசியாவா? ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!
நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால், அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சுவிட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால், கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை?
ஆரியர்கள் சுவிட்சர்லாந்திலே அல்லது ருஷியாவிலே அல்லது மத்திய ஆசியாவிலே எப்படி வாழ்ந்தார்கள், ஒரு சமூகமாக உருவானார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே?
நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் போல, ரைன் நதி நாகரீகம் என்றோ, வோல்கா நதி நாகரீகம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லையே?
உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் பலவற்றை உள்ளடக்கிய மொழி அவர்களின் மொழி – அந்த இலக்கியங்களில் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லையே?
எனவே இந்தியர்கள் இந்தியாவின் அச்சு அசலான, ஆதி குடிகள் என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன.
//இந்து மதத்தில் நால்வர்ணத்தை படைத்தானே கிருஷ்ணன் அவன் உங்களுக்கு நல்லவனா? இவன் போதனைதான் உங்களுக்கு சாதியொழிய தேவையா?//
அத்தியாயம் 4 , செய்யுள் (13)
” சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண – கர்ம விபாகச ”
கடவுளே ஒரு மனிதனைப் பிறக்கும் போதே தாழ்மையானவன், கீழானவன் , அடிமையானவன் என்ற நிலையிலே படைப்பதாகக் கூறினால் அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும். எனவே சகோதரர் வேந்தனுக்கு சினம் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே!
ஆனால் கிருட்டினர் கூறியதை எல்லோரும் தங்களின் சுயனலத்திற்கக்காக திரித்துக் கூறிய நிலையில் கிருட்டினர் என்ன செய்ய முடியும்?
குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப நான்கு வகையான பிரிவுகள் , வர்ணங்கள் உள்ளன என்று கிருட்டினர் கூறியே உள்ளார்.
ஆனால் அவை குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்பது தெளிவாக, அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்றுதான் கூறப் பட்டுள்ளதே தவிர பிறப்பின் அடிப்படையில் வர்ணம் என்று கூறப்படவில்லை.
இதையே வள்ளுவர்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்”
“பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் அவரவர்
கருமமே கட்டளைக் கல்”
கூறியுள்ளார்.
கிருட்டினரும், வள்ளுவரும் கூறினால் என்ன? அதையும் நாம் சோதனைக்கு உள்ளாக்குவோம்.
கர்மா – செயல்களில் பல வகையான செயல்கள் உண்டு. அதில் முக்கியமாக சில வகை- மக்களுக்கு அவசியமானவை- மக்களுக்கு அவசியம் இல்லாதவை- ஆனால் கெடுதல் விளைவிக்கக் கூடியவை- மக்களுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவை.
மக்களுக்கு அவசியமான கர்மாக்களை கூட இழிவான கர்மாவாக கருதுவது தவறு.
பிணம் எரிப்பது இழிவான செயலா? பிணம் எரிப்பது எவ்வளவு முக்கியமான செயல்.
இன்ஜினீயர் தன் வேலையை ஒரு வாரம் தாமதப் படுத்த முடியும். பிணம் எரிப்பவர் ஒரு நாள் தன் வேலையை தாமதப் படுத்த முடியுமா?
அதே பிணத்துக்கு அருகில் நின்று மணிக் கணக்கில் பிராமண புரோகிதர் ஓதுகிறார். மறுநாள் காலையில் வந்து சாம்பலை வைத்து இன்னும் பலதை ஓதி, அந்த சாம்பலையும் எடுத்திக் கொண்டு நதியில் கரைக்கும் போதும் இன்னும் ஓதுகிறார்.
இருவரும் அதே பிணத்துக்கு அருகில் நின்றுதான் தங்கள் தொழிலை செய்கின்றனர். ஆனால் புரோகிதர் தொழிலை உயர்வாகவும், சுடலைக் காப்பாளர் தொழிலை மட்டமாகவும் கருதும் பகுத்தறிவற்ற சமூகம் நம் சமூகம்.
பிராமணர் மகன் தான் வேதம் ஓத வேண்டும், சுடலைக் காப்பாளர் மகன் எரிக்க வேண்டும் என்று கூறுவது தான் பார்ப்பனீயம் எனக் கூறப் படுகிறது. அதை நாம் எதிர்க்கிறோம்.
புரோகிதர் ஓதாவிட்டால் புரோகித ர் ஓதாவிட்டால் வரும் கெடுதலை விட, சுடலைக் காப்பாளர் வேலை செய்யாவிட்டால் வூர் நிலைமை மோசம்.
இன்றைய உலகச் சூழலில் மென்பொருள் பணியாளர் வேலை வாய்ப்பு இல்லை. பணிப் பாதுகாப்பு உள்ள தொழில்கள் சுடலைக் காப்பாளரும், முடி திருத்துபவரும்தான். அடிப்படை சம்பளம் ரூபாய் 40,000 என நிர்ணயித்தால் பல பிராமணர் சுடலைக் காப்பார் வேலைக்கு மனுப் போட்டால் ஆச்சரியம் இல்லை.
கிருட்டினர் எந்த இடத்திலும் தச்சனின் மகன் தச்சனாகவும், அரசனின் மகன் அரசனாகவும் , பார்ப்பானின் மகன் பார்ப்பனாகவும் இருக்கவேண்டும் என்று கூறவேயில்லை.
ஆனால் பிரதமர் தம் மகனை பிரதமராக்குவது போல,
முதல்வர் தம் மகனை முதல்வராக்குவது போல,
நடிகர் தம் மகனை நடிகராக்குவது போல,
எல்லோரும் சுயநலமில்லாமல் “மக்களின் விருப்பத்தின்” பேரில்,
இப்படிப் பரம்பரை பாத்தியதை கொண்டாடி விட்டனர்.
ஆனால் நாம் ஆனால் நாம் கூற வருவது இந்தையெல்லம் விட முக்கியமான விடயம். எந்த செயலை செய்தாலும் அவர் அந்த தொழிலை எவ்வளவு திறமையுடனும், நாணயத்துடனும் செய்கிறார்கள் எனபதைப் பொருத்தே சமூகம் அவரை மதிக்கும்.
ஒரு தச்சர் நன்றாக மேசை தயாரித்துக் குடுத்தால் அவரைப் பார்ரட்டுகிறோம். ஒரு கணக்கர் திறமையுடன் செயல் படாவிட்டால் எந்த மதிப்பும் குடுப்பது இல்லை.
ஒரு பொறியாளர் அவர் கையூட்டு பெற்றுக் கொண்டு, பாலத்தை இடிந்து விழும்படிக் கட்டினால் அவர் பிராமணராக இருந்தாலும், வேறு எந்த சாதியினராக இருந்தாலும் அவர் இழிவானவராகவே, கீழ்மையானவராகவே நான் கருதுவேன்.
ஒரு காவல் துறை அதிகாரி, அவர் கற்ப்பழிப்புக் கேசை மூடி அனியாயம் செய்தால் அவர் பிராமணராக இருந்தாலும், வேறு எந்த சாதியினராக இருந்தாலும் அவர் இழிவானவராகவே, கீழ்மையானவராகவே நான் கருதுவேன்.
எனவே குணத்தின், தொழிலை செய்யும் விதத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் என்பது இயற்க்கையாக உருவாவது. ஆனால் அதை சுயனலமுடையோர், பிறப்பின் அடிப்படையில் என்று மாற்றி விட்டனர்.
ஆனால் குணத்தின், தொழிலை செய்யும் விதத்தின் அடிப்படையில் கூட வேறுபாடுகள் வேண்டாம்- வேண்டவே, வேண்டாம்- என்பதற்க்காகத்தான் நான், எல்லொரும் கனவானாக மாறும் வகையில், நல்லொழுக்கத்தில், நல்லெண்ணதில், அன்பின் அடிப்படையில் ஒன்றாக இணைவொம் என்று கூறுகிறென்.
நான்தான் உயர்ந்த சாதி, என்னைத் தொடாதெ என்று கூறுபவன் மிக இழிந்தவன்,
பிறர் வாயில் பீ தினிப்பவன் மிக இழிந்தவன்,
நிதானத்தை இழந்து காட்டுமிரான்டித் தாகுதலில் ஈடுபடுபவனும் மன முதிற்ச்சி அடைய வேண்டியுள்ளது.
அரசாங்க வேலையில் இருந்து மக்களிடம் லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பவன் மிக இழிந்த திருடன்,
இவர் போன்ற பலரையும், எல்லோரையும் பகுத்தறிவின் அடிப்படையில் கனாவானாக்கி, வள்ளுவர் பாராட்டும் படியான மனிதராக்கி ஒன்றினைப்போம்.
உலகின் பல பகுதிகளிலும் அடிமை- முறை மிக மோசமான அடிமை முறை இருந்துல்லது. அமெரிக்காவில் அடிமைகளுக்கு பிறந்த குழந்தைகள் எஜமானுக்கு சொந்தம் எஜமானிடம் பணம் இல்லை என்றால், அடிமை மனைவியை தனியாக விற்று விடுவான்.
அவர்கள் திருந்தி விட்டார்கள்.
நாம் இன்னும் திருந்த வேண்டியுள்ளது.
இந்து மதமோ, எந்த மதமோ, இனி சாதி வேறுபாடு இல்லை.
இருக்க முடியாது.
இந்த மனு என்பவர் ஒரு அரசன். இது உங்களுக்குத் தெரியும்.
மனு இந்து மதத்தை ஸ்தாபித்தவரோ, அல்லது இந்து மதக் கடவுளோ அல்லது வியாசர், ஆதி சங்கரர், விவேகானந்தர் போல ஒரு குருவோ அல்ல.
மனு ஒரு அரசர், இந்த நாட்டை ஆண்டவர். மனு போட்டது அரசாங்கக் கட்டளையே அல்லாமல் ஆனமீகக் கட்டளை அல்ல. அரசாங்கக் கட்டளை அவ்வப்போது மாறும்.
வேதங்களில் எந்த ஒரு இடத்திலாவது தாழ்த்தப் பட்டவர்கள் வேதம் படிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதா? இதற்கான சான்றை வேதத்தில் இருந்தே காட்ட முடியுமா?
மனுவிற்கு முன்னும் இந்து மதம் இருந்தது.
மனுவிர்க்குப் பின்னும் இந்து மதம் இருக்கிறது.
புத்தருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
புத்தருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது.
சங்கரருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
சங்கரருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது .
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் இந்து மதம் பின்பற்றப் பட்டு வந்துள்ளது.
இப்போது இந்து மதம் நமது கையில் உள்ளது. இதை நமது விருப்பப்படி பின்பற்றுவோம்.
இப்போது இந்து மதம் மனுவின் கையில் இல்லை. எந்த தனிப்பட்டவரின் கையிலும் இல்லை.
இப்போதுள்ள இந்து மதம் நமது கையில் உள்ளது.
சாதி, மத, இன அடிப்படையில் யாரும் தாக்கப் படக் கூடாது, இழிவு படுத்தப்படக் கூடாது, உலகின் எல்லா மனிதர்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, வழங்கப்பட வேண்டும் என்பது நமது உறுதியான, மனப் பூர்வமான கொள்கை.
“அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),
சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),
கருண ஏவ ச (கருணையுடன் )
”நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)
ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”
என்பதுதான் இந்து மதத்தின் மிக அடிப்படையான வழிமுறை என்பதை மறுக்க முடியாது.
அஹங்காரம் இல்லாமல், எல்லா உயிர்களையும் சினேகமாக நினைப்பவன், சாதி வெறுபாடு பார்க்காத சமத்துவ வாதியாகத் தான் இருக்க முடியும். எனவே இந்து மதத்தின் அடைப்படை சமத்துவமெ.
எனவே நமது செயல் பாடு , வழி, அமைப்பு எல்லாமே சமத்துவ முறையில் தான் இருக்கும்- இதில் மாற்றம் இல்லை. இதுதான் நாங்கள் தெரிவிப்பது.
நான்காயிரம் வருடம் முன்பு மனு எழுதியதை வைத்து
இன்னும் அந்த நினைப்பிலேயே இருந்தால் என்ன செய்ய முடியும்.
இனி மேலும் மேலும் சமத்துவம் அதிகமாகி வேறுபாடுகள் குறையும். இனி யாரவது தானாக நான் கீழான நிலையில் இருக்கிறேன் என்று அவர்களாகவே எண்ணிக் கொண்டால்தான் உண்டு. நாம் யாரையும் கீழாக விடப் போவதில்லை.
நாங்கள் இந்து மதத்தையும் ஒரு கருவியாக வைத்தே சமத்துவ சமூகத்தை சிறப்பாக நிறுவுவோம். அது முடியாது என்று யாராலும் சொல்ல முடியாது.
Tiruchi Karan’s explanation is very good
எப்போது ஒரு சத்திய காம ஜாபாலியின் பெயர் பதிவாகியுள்ளதோ அப்போது நூறு சத்திய காம ஜாபாலிகள் இருப்பார்கள் என்பதை அறிவார்களாக!
அர்ஜுனனுக்கு, அவனுக்கு இணையாகவோ அதற்கும் கூடுதலாகவோ வில் வித்தையில் திறன் மிக்கவர்கள் ஊக்குவிக்கப்படவோ வாய்ப்பளிக்கப் படவோ கூடாது என்கிற முன்னெச்சரிக்கையின் காரணமாகத்தான் சாக்குப் போக்காக குலம் எதுவென அறியப்படாதவன் என்று காரணம் காட்டப்பட்டு கர்ணன் ஓரங்கட்டப்பட்டான். அர்ஜுனனுக்கு எதிரராக ஓர் ஆள் கிடைத்தான் என்று துரியனும் அவனை ஊக்குவித்தான்.
ஏகலைவனுக்குக் கற்பிக்கப்படுவது கீழ்ச் சாதி என மறுக்கப்பட்டதும் ஒரு சாக்காகத்தான்..
ஏகலைவன் ஒன்றும் லேசுப்பட்டவன் அல்ல். வேட்டுவ குலமான நிஷாத வம்ச மன்னர் பரம்பரை இளவரசன். பாண்டவர் வம்சத்திற்கோ அவர்களின் அன்பன் கண்ணபிரானுக்கோ சாதகமானவன் அல்ல என்பது அவனது பிற்கால வாழ்க்கையில் நிரூபிக்கப் பட்டது. அவன் ஜராசந்தனிடம் வேலைக்குச் சேர்ந்தான். சிசுபாலன் தன்னிச்சையாக ருக்மிணியை அவள் விருப்பத்திற்கு மாறாக மணக்க விரும்பியபோது அவனுக்கும் ருக்மிணியின் தந்தைக்குக்குமிடையே தூது சென்றவன். ருக்மிணி கண்ணனுடன் தப்பிச் சென்றபோது நடந்தபோரில் ஏகலைவன் ஜராசந்தன் தரப்பில் போரிட்டு கண்ணன் கையால் கொல்லப்பட்டான். ஏகலைவன் கைக் கட்டைவிரலை துரோணர் குரு தட்சிணையாகப் பெறத் தவ்றியிருந்தால் பிற்பாடு நடந்த பாரதப் போரில் அவன் கெளரவர் த்ரப்பில் சேர்ந்து போரிட்டு, பாண்டவர் களுக்கு மிகப் பெரும் சோதனையாகியிருப்பான்.
ஏகலைவனை நினவூட்டுபவர்கள் ராமாயண குகனையும் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?
எந்தவொரு விஷயம்பற்றித் தர்க்கிக்க முன்வந்தாலும் அது பற்றிய முழு விவரமும் தெரிந்துகொண்டு வரவேண்டும்.
இம்மாதிரியான விவரங்களுக்கெல்லாம் வியாச பாரத்திலேயே நுட்பமான உட்குறிப்புள்ளது. ஆழ்ந்து படித்தாலே புலனாகும். இதற்குத்தான் மூல பாஷை தெரிந்திருக்க வேண்டும் என்பது.
சத்திய (காம) பாமா
நண்பர்களே,
இதிலே திடீரென ஏகலைவனை இழுத்துக் குமுற வேண்டிய அவசியம் என்ன?
இங்கே திரு சத்ய பாமா தெரிவித்தது போல ஏகலைவன் ஒன்றும் பெரிய அபாயகரமான சக்தியாக உருவாகி இருக்கக் கூடிய வாய்ப்பு இல்லையே?
ஏகலைவன் விடயத்தில் துரோணர் என்ன செய்திருக்க வேண்டும்?
தன்னுடைய “குரு” கேட்டார் என்பதற்க்காக தன் வலது கை கட்டை விரலை உடனே தயங்காமல் வெட்டிக் கொடுத்திருக்கிரானே ஏகலைவன். இவ்வளவு குரு பக்தி வேறு எங்கும் கேள்விப் பட்டு இராததாக இருக்கிறதே. அவ்வளவு பக்தி உடைய ஏகலைவன் எப்படிக் கெட்டவனாக முடியும்?
//ஏகலைவன் கைக் கட்டைவிரலை துரோணர் குரு தட்சிணையாகப் பெறத் தவ்றியிருந்தால் பிற்பாடு நடந்த பாரதப் போரில் அவன் கெளரவர் த்ரப்பில் சேர்ந்து போரிட்டு, பாண்டவர் களுக்கு மிகப் பெரும் சோதனையாகியிருப்பான்.//
தன்னுடைய வலது கை கட்டை விரலையே வெட்டிக் கொடுக்கத் தயங்காத ஒரு மனிதனிடன், அவன் என்றைக்கும் அர்ஜுனனை எதிர்த்துப் போர் செய்யக் கூடாது என்று கேட்டு இருந்தால் அதை அவன் மறுக்கவா போகிறான்? குரு வம்சத்தை சார்ந்த யாரையுமே எதித்து போர் செய்யக் கூடாது என்று வாக்கு கேட்டு இருந்தாலும் கொடுத்து இருக்கப் போகிறான்! பாரதப் போரிலே எந்த தரப்பிலும் போரிடாமல் பலராமரைப் போல ஒதுங்கி இருந்திருப்பான்.
இன்னும் சொல்லப் போனால், அஸ்தினாபுரத்தின் அரசரை எப்போதும் காப்பதாக பீஷ்மர் சபதம் எடுத்தது போல,
ஏகலைவனை, “தன் உயிர் இருக்கும் வரையிலும் அர்ஜுனனைக் காப்பேன்” என சபதம் எடுக்க துரோணர் சொல்லி இருந்தால் அந்த சபதம் எடுக்க ஏகலைவன் மறுப்பா தெரிவிக்கப் போகிறான்? கை கட்டை விரலையே வெட்டிக் கொடுத்தவன் ஆயிற்றே!
அப்படி அர்ஜுனனுக்கு காப்பாக ஏகலைவன் போரிட்டிருந்தால், போர் விரைவிலேயே முடிந்திருக்கும். இணையற்ற வீரனாகிய ஏகலைவன் கர்ணனை அவன் தேரில் இருக்கும் நிலையிலேயே தோற்கடித்திருப்பான். தேரை தள்ளும் போது கொல்ல வேண்டிய அவல நிலை கூட இருந்திருக்காது.
திருதராட்டிரன் தன் மகன் மேல் பித்தானது போல, துரோணர் தன் சிஷியன் அர்ஜுனனிடம் அளவு கடந்த அன்பு வைத்து ஏகலைவனுக்கு அநீதி செய்து விட்டார் என்பது தான் சரி..
நாம் ஏகலைவனின் பெற்றோராக இருந்தால் நம் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும்.
//ஏகலைவன் ஜராசந்தன் தரப்பில் போரிட்டு கண்ணன் கையால் கொல்லப்பட்டான்.//
இது பற்றி தமிழ் இந்து நன்கு ஆராய்ந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோருகிறேன். என்னுடைய நணபன் ஒருவன் ஏகலைவன் மஹா பாரத இறுதி வரையிலே வாழ்ந்ததாக கூறினான். கிருட்டிணரின் குல மக்கள் தங்களுக்குள் போரிட்டு குல நாசம் ஆன நிலயிலே, ஒரு தருணத்திலே ஏகலைவன் கிருட்டிணரை சந்தித்தாக கூறினான்.
இது பற்றி தமிழ் இந்து நன்கு ஆராய்ந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.
Jattayu’s articles, it looks, are well written after much reading and research ; but he seems to get upset when someone says something different from his views, and uses some harsh words in his replies. It will be better, if he can avoid this.
கந்தர்வன்,
ஸ்ம்ருதிகள் இரண்டாம் நிலையில் உள்ளவை.
ஸ்ருதிகள் முதல் நிலையில் உள்ளவை.
எப்போது ஸ்ம்ருதிகளானவை, முதல் நிலையில் உள்ள ஸ்ருதிகளிலிருந்து வேறுபடுகிறதோ, அப்போது அவற்றை ஒதுக்கிவிடலாம் என்பது ஆச்சாரியார்கள் பலர் சொன்னதுதான்.
அப்படிச் சொல்லாத ஆச்சாரியார் யாரும் இல்லை.
ஸ்ம்ருதிகள் என்பவை அவ்வப்போது திருத்தப்படுபவை என்பதுதான் ஆச்சாரியார்கள் சொல்லுவது.
திருத்தமுடியாதது ஸ்ருதிகள் மட்டுமே.
ஆனால், அதை உங்களது வாதம் திரித்துப் பேசுகிறது.
ஸ்ருதிகளைவிட உயர்ந்தது ஸ்ம்ருதியே என்று எந்த ஆச்சாரியாரும் சொல்லவில்லை.
அப்படி யாராவது சொன்னால் அவர் ஆச்சாரியாருமில்லை, அந்த ஸ்ம்ருதியைப் பின்பற்ற வேண்டிய அவசியம் எந்த ஹிந்துவிற்கும் இல்லை.
மானுடம் கண்ட உண்மை பெரியதுதான். ஆனால், மானுட உய்விற்கு உதவாத ஒன்று உண்மையல்ல.
ஆச்சார்யார்களுக்கும் அதி ஆச்சார்யனரான விவேகானந்தர் ஸ்ம்ருதிகள் குறித்து இலங்கையில் பேசியது கீழே:
”Next to the Vedanta come the Smritis. These also are books written by sages, but the authority of the Smritis is subordinate to that of the Vedanta, because they stand in the same relation with us as the scriptures of the other religions stand with regard to them. We admit that the Smritis have been written by particular sages; in that sense they are the same as the scriptures of other religions,
இரண்டு விஷயங்கள்:
1.மனு ஸ்ம்ரிதி தவிர வேறு பல ச்ம்ரிதிகளும் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன்.அவைகள் என்ன சொல்ல வந்தன என்றும் யாராவது விளக்கினால் நன்றி உடையவனாவேன்.ஏன் மனு ச்ம்ரிதியை மட்டும் எல்லோரும் குறிப்பிடுகிறார்கள்?
2.ஏகலைவன் பற்றி இந்தத் தளத்திலேயே ‘மகாபாரத உரையாடல்கள்’என்ற திரு. ஹரி கிருஷ்ணன் எழுதிய கட்டுரையில் காணலாம்.
//
மனு ஸ்ம்ரிதி தவிர வேறு பல ச்ம்ரிதிகளும் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன்.அவைகள் என்ன சொல்ல வந்தன என்றும் யாராவது விளக்கினால்
//
அவை அலசும் விஷயங்கள் அனைத்தும் ஒன்றே – காலம், இடம் பொறுத்து கருத்துக்கள் தான் வேறுபடும்
மனு ச்ம்ரிதியை ரிக் வேதம் உயரக் கூறுவதாலும், இது ஆதி ஸ்ம்ரிதி என்பதாலும், பெரும் பாலும் வேதத்தை ஒட்டியே வருவதாலும், இதை பல ஆச்சார்யர்கள் கையாண்டதாலும் இதை முதன்மையாக கருதுகின்றனர்
திரு சாரங்,
//
மனு ச்ம்ரிதியை ரிக் வேதம் உயரக் கூறுவதாலும்
//
யஜூர் வேத தைத்திரீய சம்ஹிதையில் இப்படி உள்ளது என்பதைப் பார்த்துள்ளேன். ரிக் வேதத்திலும் உள்ளது என்பது எனக்குப் புதிய செய்தி. எங்கு உள்ளது? நன்றி.
கந்தர்வன் அவர்களே
மன்னித்துவிடுங்கள் – அது யஜுர் வேதம் தான் – “tounge of the slip”
தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி
//அவ்வளவு பக்தி உடைய ஏகலைவன் எப்படிக் கெட்டவனாக முடியும்? //
இராவணன் கூட மிகப் பெரிய பக்திமான் என்றுதான் சித்தரிக்கப்பட்டுள்ளான்!
இராமனுஜர் காலத்திலேயே வைஷ்ணவ பக்தி மார்க்கத்தில் சாதிகள் களையெடுக்கப்பட்டுவிட்டன. ஷிரிவைணவத்தில் ஒரே ஒரு சாதிதான் உண்டு. அஃது அனைவருக்கும் சேர்த்து. அச்சாதியின் பெயர்: திருமாலடியார்கள்.
ஒரே ஒரு சாதியாக அனைவரும் இருப்பதால், அங்கு சாதிப்பிரச்னை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருவர் தன்னை இன்ன சாதியென்று சொல்லிவிட்டு, ஷிரிவைணவன் எனக்கூறிக்கொள்ள முடியாது.
சாதி வேணுமா சாமி வேணுமா என்பதுதான் சிரிவைணவத்தில் கேள்வி.
(edited and published)
திரு. armchaircritic அவர்களே
நீங்கள் இராவணனை ஏகலைவனோடு ஒப்பிடுகிறீர்களே,
ஏகலைவன் செய்த தவறு என்ன? ஏகலைவன் பெண்களைக் கற்பழித்தான? சர்வாதிகார அராஜக ஆட்சி செய்தான? மக்களை கொடுமைப் படுத்தினானா?
பக்தி என்கிற ஒரே ஒரு வார்த்தையை- அதாவது ஏகலைவன் குரு பக்தி உடையவனாக இருந்தான் என்பதைக் காட்ட நான் உபயோகப் படுத்திய ஒரு வார்த்தையை வைத்து – ஏகலைவனை இராவணனோடு ஒப்பிடுகிறீர்கள்.
இத்தனைக்கும் ஏகலைவன் பூசனை செய்து இறைவனைத் தொழுதவனாக அறியப் படவில்லை. இராவணனை போலவே இறைவனை தொழுது பக்தி செய்த பலர் தென்னிந்தியாவில் இருந்ததாக வரலாறு உள்ளதே. அவர்களை எல்லாம் இராவணனோடு ஒப்பிடத் தயாராக இருக்கிறீர்களா?
நீங்கள் மதித்து வணங்கும் பலர் இறைவனிடம் மிக அதிகமான பக்தி உடையவர்களாக இருந்திருக்கக் கூடுமே, அவர்களை எல்லாம் இராவணனோடு ஒப்பிடத் தயாராக இருக்கிறீர்களா?
அர்ஜுனனை விட வில்வித்தையில் திறமைசாலியாக இருந்ததை தவிர வேறு எந்தக் குற்றமும் ஏகலைவனிடம் இல்லை. மறைந்து இருந்து துரோணர் நடத்திய பாடத்தை அவர் அறியாமலே கற்று விட்டான். துரோணரிடம் கொடுக்க அவனிடம் பாணமும் இல்லை. அப்படியே அவன் பணம் கொடுத்து இருந்தாலும் துரோணர் கற்ப்பித்து இருந்திருப்பாரா என்பது சந்தேகமா! ஆர்வ மிகுதியால் மறைந்து இருந்து கற்றே அர்ஜுனனை விட சிறந்த வீரனாகி விட்டான்.
குரு தட்சிணையாக கட்டை விரலைக் கேட்டவுடன் தயக்கமின்றி கொடுத்து விட்டான். துரோணர் ஏகலைவனின் உயிரையே கேட்டிருந்தால் அதையும் கொடுத்திருப்பான்.
ஆனால் அவ்வளவு சிறந்த ஒரு மாணவனிடம் கட்டை விரலைக் கேட்டு, அநியாயம் செய்தது சரியா என துரோணர் தன் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளட்டும்.
ஏகலைவனுக்கு இழைக்கப் பட்ட அநீதியை மறைக்கும் வண்ணம், ஏகலைவனை இராவணனோடு ஒப்பிட்டு அவனைக் கெட்டவனாக சித்தரிப்பது சரியா என நீங்கள் உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்.
சத்யபாமா,
ஒரு ஜாபாலி சொல்லப்பட்டால் நூறு பேர் இருந்திருப்பார்கள் என்கிறீர்கள். இருப்பதை வைத்துத்தான் பேச முடியும். சரி அப்படியே வைத்துக் கொள்வோம். எத்தனை கர்ணன், ஏகலைவன் இருந்திருக்க வேண்டும் என்பதையும் கொஞ்சம் யோசியுங்கள். குகனோடு ராமன் ஐவரானது நல்ல விஷயம்தான். ஆனால் குகனோடு இஷ்வாகு குலத்தவருக்கு ஏதாவது கொண்டான் கொடுத்தான் உறவு உண்டா? கர்ணனுக்கும் துரியோதனனுக்குமே இல்லை…
மதிப்பிற்குரிய திரு. RV அவர்களே,
ஒவ்வொருவருக்கும் ஒரு பிரியாரிட்டி இருக்கிறது. நீங்கள் இன்றைக்கு இங்கே ஏன் கொடுக்கல் வாங்கல் நடைபெறவில்லை என்பதை, நீங்கள் எதை முக்கியத்துவமாகக் கருதுகிறீர்களோ அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு இருக்கிறீர்கள்.
அஞ்சா நெஞ்சன் கொள்கைக் குன்று குகன் அவர்களும், இராமரும் அவர்களுக்கு எதை முக்கியத்துவமாக கருதியிருக்க வேண்டும் என்பதை, நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாது.
ஒரு குடி மகன் சீதையை பழித்து சொன்னதால், அரசனாக தான் ஒரு லீடர், முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காக, சீதையைக் காட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான் இராமன். மனைவியோடும் இனி சேர முடியாத படிக்கு தனித்து வாழும் நிலை. மனைவி கர்ப்பவதியாக இருந்தாள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை
பின்னாளில் தன புதல்வர்களைக் களத்திலே சந்திக்கும்போதே இராமரின் , புதல்வர்கள் என்பதை தெரியப் படுத்த முடிந்தது. ஆட்சிப் பொறுப்பை புதல்வர்களிடம் ஒப்படைத்து விடுவதோடு இராமரின் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது.
வாழ்க்கையில் எண்ணற்ற துயரங்களை, தாங்கொனாத் துயரங்களை, பல இடையூறுகளை சந்தித்த இராமர் அந்த நிலையிலும் தான் நல்ல நெறியை விடாமல் வாழ வேண்டும் என்பதிலே அதிக கவனம் செலுத்தியவராக இருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையிலே இராமனின் கையறு நிலையை குகனாரும் அறிவர்.
எனவே இராமர் தனது ஆட்சிக் காலத்திலே பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யாதது ஏன், என்பது போன்ற கேள்வியை இப்போது எழுப்பினால் அது பொருத்தமா?
திருச்சிக்காரன் அவர்களே,
கொண்டான் கொடுத்தான் உறவு என்பது மிக சிம்பிளான விஷயம். நான் காந்தீயவாதி என்று சொல்வது சுலபம், காந்தீயவாதியாக இருப்பது கஷ்டம். அந்த மாதிரிதான் உனக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்வது சுலபம், அப்படி உண்மையாகாவே நினைத்தால் அது வெளிப்படும் அல்லவா? அவ்வளவுதான். கொண்டான் கொடுத்தான் உறவு என்பது இல்லை, வேறு எந்த விதத்திலாவஹ்டு வெளிப்பட்டிருந்தால் – பேச்சைத் தவிர – எனக்கும் சொல்லுங்கள், நானும் கேட்டுக் கொள்கிறேன்.
இதிலிருந்தெல்லாம் என்ன தெரிகிறதென்றால், நம் நூல்களும்,சமயமும் எதையும் மறைக்கவில்லை என்பதுதான். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை தனியே அலசக் கூடாது.அதன் தொடர்ச்சி மற்றும் முடிவு ,அதிலிருந்து அறியப்படும் நீதி இவைகளுடன் சேர்த்துப் பார்க்கவேண்டும்
உதாரணமாக சீதையை ராமன் அக்னிப் பிரவேசம் செய்யும் நிலைக்கு தூண்டியது -அதை ராமன் தவறு செய்து விட்டார் என்று சொல்லக் கூடாது -ஏன் செய்தான் என்றால் ஒரு அரசன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தவர்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் ,அப்போது மக்களுக்கு அவன் மீது மதிப்பு இருக்கும், அவன் ஆட்சியில் நம்பிக்கை இருக்கும் என்பது .
மேலும் சீதையின் பெருமை மற்றும் உயர்வை எல்லோருக்கும் காண்பிக்கவும் இவ்வாறு செய்யப் பட்ட்து என்பதை உணர வேண்டும் இதே போல்தான் ஹிந்து சமய நூல்களில் விவரிக்கப்படும் பல நிகழ்ச்சிகள் ஏதாவது ஒரு நீதியை போதிக்கவே இருக்கும்.
இரா.ஸ்ரீதரன்