சில நாள்களுக்கு முன்னர், ஒரு விவாதத்தின் போது நண்பர் ஒருவர் கேட்டார், “நாம் ஏன் மதமாற்றத்தைக் குறித்து இவ்வளவு விசனப்படுகிறோம்? எல்லோரும் கிறிஸ்தவர்களாகிவிட்டால்தான் என்ன? எல்லாம் பழகிப் போய்விடாதா? ஏன் ஹிந்து தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்?”
-0-
இருள் சூழ்ந்த வானத்தை நோக்கியபடி இருக்கிறாள் ஒரு பெண். அவள் கற்று அறிந்தது டாலமிய புவிமையக் கோட்பாடு (Ptolemy’s geocentric theory). அதில் கோள்கள் வட்ட வடிவில் சுழல்கின்றன. ஆனால் அந்த கோட்பாட்டால் வானில் அவள் காணும் கிரகங்களின் இயக்கங்களை விளக்க இயலவில்லை…. ஒருவேளை பூமியும் சுழல்கிறதென்றால்… உரக்க தன் எண்ணத்தைச் சொல்கிறாள். அவள் அமர்ந்திருப்பது ஒரு கோயிலில். அக்கோயில் சுவர் ஒன்றில் அமர்ந்திருக்கிறார் ஒரு முதியவர். அவர் இதைக் கேட்டவுடன் சொல்கிறார், “பெண்ணே இதை அரிஸ்டார்சஸ் (Aristarchus of Samos) சொல்லியிருக்கிறார். இந்தக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அவரது கோட்பாடு, அவரது எழுத்துகள், அந்த சுருள் இந்த ஆலயத்தில் இருக்கிறது.” பின்னர் அவர் உணர்ச்சி பொங்கச் சொல்கிறார், “இது வெறும் வழிபாட்டு ஆலயம் மட்டுமல்ல. இங்கே நம் முன்னோர்களின் அறிவு அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவேதான்… எனவேதான் நாம் இதைக் காப்பாற்ற வேண்டும்.” ஆம் அவர்கள் அந்தக் கோயிலுக்குள் ஒரு முற்றுகைக்குள் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி கோயில் சுவர்களுக்கு அப்பால், மூடிய கதவுகளுக்கு அப்பால், கொலைவெறியுடன் ஒரு கும்பல் சூழ்ந்திருக்கிறது.
நான்காம் நூற்றாண்டின் ரோமானிய அலெக்ஸாண்ட்ரியா. ரோமானியப் பேரரசு கிறிஸ்தவமயமாகி வருகிறது. ஆட்சி அதிகாரங்களில் கிறிஸ்தவர்களாக இருப்பதே வசதியானது என்ற நிலை. ஆனால் பேரரசு முழுமையாக கிறிஸ்தவமாகிவிடவில்லை. அலெக்ஸாண்ட்ரியாவில் பாகன்கள் (Pagans) எனும் பல தெய்வ விக்கிரக வழிபாட்டாளர்களும் வலிமையுடன் விளங்குகிறார்கள். சமுதாயத்தின் மேல்தளங்களில் தாங்களே பெரும்பான்மையாக இருப்பதாக நம்பும் பாகன்கள். தங்கள் நகரத் தெருக்களில் கிறிஸ்தவப் பிரசாரங்களைக் கேட்கிறார்கள். அடிமைகளும் கீழ்மட்ட மக்களும் நம்பும் ஒரு விசித்திர நம்பிக்கை நோயாகப் பரவுகிறது கிறிஸ்தவம்.
இந்தப் பாகன் சமுதாயத்தில் வாழ்பவள் ஹைப்பேஷியா (Hypatia) . தத்துவ ஞானி. கணித-வானியல் அறிவியலாளி. தன் வாழ்க்கையை, உண்மையைத் தேடவே அர்ப்பணித்தவள். அங்குள்ள கல்லூரியில்– அதுவே பாகனீயக் கோயிலும் கூட– கணிதப் பேராசிரியை. அக்கல்லூரியின் முதல்வர், அவள் தந்தை. அவளை அறிந்த ஆண்டானிலிருந்து அடிமை வரை பலராலும் காதலிக்கப்படுவள். ஆனால் எந்த ஆணின் காதலையும் ஏற்காதவள். தன் வாழ்க்கை, ஞானத்தைத் தேட மட்டுமே என்பதில் உறுதி கொண்டவள்.
இறுதியில் கிறிஸ்தவத்தின் வெற்றி அலெக்ஸாண்ட்ரியாவைக் கபளீகரம் செய்யும்போது ஹைப்பேஷியா கிறிஸ்தவத்துக்கு மாற மறுத்துவிடுகிறாள். கிறிஸ்தவக் கும்பலால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். அவள் கொலை ஒரு வரலாற்றுக் குறியீடாகவும் கிறிஸ்தவம் முன்வைக்கும் கடுமையான எச்சரிக்கையாகவும் மாறுகிறது. அவளது கொலையை, திட்டமிட்டு காய்நகர்த்திச் செய்த அலெக்ஸாண்ட்ரியாவின் பிஷப்பான சிறில் கத்தோலிக்க சபையால் புனிதராக அறிவிக்கப்படுகிறார்.
இவை அனைத்தும் வரலாறு.
இந்த வரலாற்றுக்குத் திரைவடிவம் அளித்துள்ளார் ஸ்பானிஷ் இயக்குநர் அலெக்ஜாண்ட்ரோ அமெனாபார் (Alejandro Amenábar.) இந்தத் திரைப்படத்தின் பெயர் அகோரா (Agora): கூடும் இடம். பொது இடம். 2009-இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்துக்கு, சரியாக விநியோகஸ்தர்கள் கிடைக்கவில்லை.
அந்தக் காலகட்டத்தின் அலெக்ஸாண்ட்ரியா, அதன் சமூகப் பரிமாணங்களுடன் அப்படியே உருவாக்கப்பட்டுள்ளது. ஹைப்பேஷியாவிடம் காதல் கொண்ட ரோமானிய அரசுப் பிரதிநிதி, அடிமை இருவரும் இரு வேறு காரணங்களுக்காக கிறிஸ்தவர்கள் ஆகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற தன் முகத்தை அடிமைக்குக் காட்டும் கிறிஸ்தவம், அதிகாரத்துக்கான யதார்த்த வழியாக அதிகார வர்க்கத்துக்குத் தன்னை முன்வைக்கிறது. பாகனீய குருக்கள் தங்கள் உலகங்களில் வாழ்கிறார்கள்.
கிறிஸ்தவம் பலமடைந்ததும் தன்முகத்தைக் காட்ட ஆரம்பிக்கிறது. தெருக்களில் பாகன் தெய்வச் சிலைகள் அவமதிக்கப்படுகின்றன. பாகன்கள் கிறிஸ்தவர்களைத் தாக்குகிறார்கள். கிறிஸ்தவர்கள் பதில் தாக்குதல் நடத்துகிறார்கள். அப்போதுதான் பாகனீயத் தலைவர்களுக்கு, எந்த அளவு கிறிஸ்தவம் சமுதாயத்தில் ஊடுருவி இருக்கிறது என்பது தெரிகிறது. பாகன் கோயிலின் உச்சியிலிருந்து இரத்தவெறியுடன் குவியும் கிறிஸ்தவக் கும்பலைப் பார்த்து, தலைமைப் பூசாரி அதிர்ச்சியுடன் சொல்கிறார், “எங்கிருந்து இத்தனை கிறிஸ்தவர்கள் வந்தார்கள்?” ஹைப்பேஷியாவின் மாணாக்கர்களில் இருக்கும் கிறிஸ்தவர்களையும் சிறைவைக்க பாகன் பூசாரி ஆணையிடுகிறார். ஹைப்பேஷியா தலையிட்டு, தன்னுடைய மாணவர்கள் எந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களைத் தொடக்கூடாது என வலியுறுத்துகிறாள்.
பாகனீயச் சமுதாயத்தின் மேல்தட்டு, இறுகிய சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்டது. அடிமைகளை- அவர்கள் உணர்ச்சிகளை- எவரும் மதிப்பதே இல்லை. இந்நிலையில் தன் அடிமை ஒருவன் தன் பேருரைகளை உன்னிப்பாக கவனிப்பதை ஹைப்பேஷியா உணர்கிறாள். அவனைத் தன் உரைச்சாலையில் அனைவர் முன்னிலையிலும் கௌரவப்படுத்துகிறாள். அந்த அடிமை அவளிடம் காதல் கொள்கிறான். ஏழைகளை உணவு கொடுத்து மதம் மாற்றும் கிறிஸ்தவ சேவையைக் கண்டு ஏற்கனவே மனம் நெகிழ்ந்திருக்கும் அந்த அடிமை இறுதியில் தன் காதலை பரமபிதா நிறைவேற்றி வைப்பார் என்று நம்பி கிறிஸ்தவனாகிறான். ஹைப்பேஷியா அந்த அடிமையை ஓர் உணர்ச்சிகரச் சூழலில் விடுதலை செய்கிறாள்.
வேகமாகக் காட்சிகள் நகர்கின்றன. கிறிஸ்தவம் முழுமையான அதிகாரம் நோக்கி திட்டவட்டமாக நகர்கிறது. அடிமைகளில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் ஆகிறார்கள். கிறிஸ்தவ அதிகார பீடம் இவர்களைத் தெருச் சிப்பாய்களாகப் பயன்படுத்துகிறது. அதுவரை பாகனீய அலெக்ஸாண்ட்ரியாவில் இல்லாத ஒரு புதிய நிகழ்ச்சி நடக்கிறது. யூதர்கள் கிறிஸ்தவ வெறியர்களால் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் ஓய்வுநாளன்று இசை கேட்கக்கூடாது; ஆண்டவனை நினைக்க வேண்டும், இல்லாவிட்டால் கற்களால் தாக்கப்படுவார்கள் என்று அலெக்ஸாண்ட்ரியாவின் பிஷப்பாகப் பதவியேற்கும் சிறில், ரோமானிய அரசப்பிரதிநிதி முன்னால் சொல்கிறான்.
இந்த அரசப் பிரதிநிதி ஹைப்பேஷியாவின் மாணவன். தன் காதலை அவளிடம் சொல்லி அவளால் அவமானப்படுத்தப்பட்டவன். ஆனால் ஹைப்பேஷியாவின் மீது முழு மரியாதை கொண்டவன். சிறில் உண்மையில் மிரட்டல் விடுப்பது யூதர்களுக்கு அல்ல உனக்குத்தான் எனச் சரியாகக் கணித்துச் சொல்கிறாள் ஹைப்பேஷியா.
இந்நிலையில் சில யூதர்கள் கிறிஸ்தவர்களைத் திரும்பத் தாக்குகிறார்கள். அதனைப் பயன்படுத்தி தன் அதிகாரத்தை முழுமையாக்க சிறில் யூதர்கள் மீது வன்முறையைத் தூண்டிவிடும் காட்சி, அன்பு எனும் பெயரில் கிறிஸ்தவ இறையியலில் வியாபித்து நிற்கும் வெறுப்பை திறமையாக வெளிக்காட்டுகிறது. “யூதர்களிடம் பரிதாபப்படுங்கள்… நம் மீட்பரைக் கொன்ற யூதர்களிடம் பரிதாபப்படுங்கள்… ஆண்டவனால் சபிக்கப்பட்டு, நாடிழந்து, நாடோடிகளாத் திரியும் யூதர்களிடம் பரிதாபப்படுங்கள்” என்று சொல்லியே ‘ஏசுவைக் கொன்றவர்கள்’, ‘ஆண்டவனால் சபிக்கப்பட்டவர்கள்’ என கிறிஸ்தவர்களிடம் வெறியேற்றுகிறான் சிறில். அலெக்ஸாண்ட்ரியா எங்கும் யூதர்கள் கிறிஸ்தவர்களால் வேட்டையாடப்படுகிறார்கள். யூதப்பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுகிறார்கள். கலவரம் நடக்கும் வீதியில் ஹைப்பேஷியா நடக்கிறாள். அவளது பழைய அடிமை, இப்போது அவன் ஒரு கிறிஸ்தவ வீரன். அவன் கையில் உள்ள வாளில் யூத ரத்தம்; முகத்திலும் அது தெளித்திருக்கிறது. ஹைப்பேஷியாவின் பார்வை அவனுள் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தவிர்க்க இயலாத ஐயங்கள் அவனுக்கு எழுகின்றன – கிறிஸ்தவனாகும் முன்னால் என்னால் மன்னிக்க முடிந்தது. இப்போது ஏன் முடியவில்லை? மற்ற கிறிஸ்தவச் சகோதரர்கள் சொல்கிறார்கள், “மன்னிப்பது ஆண்டவனின் வேலை. உன்னை ஆண்டவன் நிலைக்கு உயர்த்திக் கொள்ளாதே.”
ஹைப்பேஷியா யூதர்களுக்கு எதிராக கிறிஸ்தவ வெறியர்கள் செய்யும் படுகொலைகளை நகரசபையில் கடுமையாகக் கண்டிக்கிறாள். இப்படியெல்லாம் நடந்தால் யூதர்கள் திரும்பத் தாக்குவார்களே என ஒரு நகரசபைப் பிரதிநிதி கூறுகிறார். அதற்கு ஒரு கிறிஸ்தவத் தலைவர் மிக அமைதியாக பதிலளிக்கிறார், “உங்களுக்கு இன்னும் புரியவில்லை. இதெல்லாம் முடியும்போது யூதர்களே இருக்க மாட்டார்கள்.”
தன் அதிகாரத்தை முழுமைப்படுத்துவதில் ஹைப்பேஷியா பெரும் தடைக்கல்லாக இருப்பதை உணர்கிறான் சிறில். அவளை அகற்ற முடிவெடுக்கிறான். அந்த ஞாயிறுப் பிரசங்கத்தில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும்; அவர்கள் உரை ஆற்றக்கூடாது இத்யாதி இறை வசனங்களைச் சொல்கிறான். விவிலியத்தை மேலே உயர்த்தி, இந்த இறை வார்த்தைக்குக் கட்டுப்படுங்கள் என்கிறான். அலெக்ஸாண்ட்ரியாவின் அதிகார வர்க்கமே பாகனியத்தைக் கைவிட்டு கிறிஸ்தவத்தைத் தழுவுகிறது. மண்டியிட்டு, ‘பெண்கள் சபைகளில் பேசக்கூடாது ஆண்களுக்கு கட்டுப்பட வேண்டும்’ என்பதை ஏற்கிறது. இறுதியாக இதை எதிர்க்கும் ரோமப் பேரரசின் பிரதிநிதியும் தாக்கப்படுகிறான். அவனைத் தாக்கியவன் புனிதனாக அறிவிக்கப்படுகிறான். ஹைப்பேஷியாவின் கடைசி பாதுகாப்பாக இருந்த அந்த அரசபிரதிநிதியும் இறுதியில் கிறிஸ்தவத்தின்முன் மண்டியிடுகிறான்.
அந்த இரவில் கிறிஸ்தவர்கள் ஹைப்பேஷியாவைக் கொல்ல முடிவெடுக்கிறார்கள். அந்தப் பழைய அடிமையும் அங்கிருக்கிறான். ஹைப்பேஷியாவைக் காப்பாற்ற அவளை எச்சரிக்க முயற்சி செய்கிறான்; தோற்கிறான்.
அதே இரவில் ஹைப்பேஷியா வானியலில் ஒரு முக்கியக் கண்டுபிடிப்பை வந்தடைகிறாள். மறுநாள் அதை ஆர்வத்துடன் தெரிவிக்கச் செல்லும்போது, அவளது கடைசிப் பாதுகாப்பாக இருந்த அந்த கிரேக்க அரசப்பிரதிநிதி அவளை கிறிஸ்தவ மதத்தை ஏற்கச் சொல்கிறான். இல்லாவிட்டால் தன்னால் அவளுக்குப் பாதுகாப்பளிக்க முடியாது என்கிறான். மறுத்து, பாதுகாப்பையும் துறந்து வெளியேறிச் செல்லும் ஹைப்பேஷியாவை கிறிஸ்தவர்கள் பிடித்து இழுத்து வருகிறார்கள்– கிறிஸ்தவ சர்ச்சாக மாற்றப்பட்டிருக்கும் பழைய பாகனீய ஆலயத்துக்கு. அங்கு அவள் நிர்வாணமாக்கப்படுகிறாள். அவள் தோலை உரிக்கத் திட்டமிடுகின்றனர். அந்த அடிமை அங்கு வருகிறான். அவளைக் கல்லால் அடித்துக் கொல்ல, மற்றவர்களை வெளியே செல்லச் சொல்லிவிட்டு அவளை மூச்சிழக்க செய்கிறான். அவன் ஏற்றுக்கொண்ட அன்பு மதம் அவனுக்கு அளித்த பரிசு, தன் காதலிக்குத் தன் கையாலேயே கருணைக் கொலை. அவள் உடல் கிறிஸ்தவ வெறியர்களால் சின்னாபின்னமாக்கப்படுகிறது.
அந்த இரவில் அவள் கண்டடைந்த உண்மை, இந்நிகழ்வுக்கு 1500 ஆண்டுகளுக்குப்பின் டைகோ ப்ராகே (Tycho Brahe) என்கிற வானியலாளரால் கண்டடையப்படுகிறது.
அது: கோள்களின் சுற்றுப்பாதை நீள்வட்டம்.
படத்தின் டிரெய்லர்..
**********
அருமையான படம். ஒரு பட விமர்சனத்தில் முழு கதையையும் சொல்லலாமா என்றால், இந்த முக்கியப் படம் இந்திய திரையரங்குகளுக்கு வருமா என்பது ஐயமே… ஆனால் திரைப்படம் என்ன, இந்த திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகளே இந்தியாவில் உண்மையாக அரங்கேறலாம்! அந்த விதத்தில் அலெக்ஸாண்ட்ரியாவின் இறுதிப் பாகனீயத் தத்துவஞானி குறித்த இப்படம் ஹிந்துக்களுக்கு அவர்கள் வருங்காலம் குறித்த முன்னறிவிப்பு என்றே கருதலாம்.
திரைப்படம்: அகோரா (Agora)
இயக்குநர்: அலெக்ஜாண்ட்ரோ அமெனாபர் Alejandro Amenábar
திரைக்கதை/வசனம்: அலெக்ஜாண்ட்ரோ அமெனாபர், மாட்டியோ ஜில் (Mateo Gil)
நடிப்பு: ராச்சேல் வெயிஸ் (Rachel Weisz – ஹைப்பேஷியாவாக), மாக்ஸ் மிங்கெல்லா ( Max Minghella) மற்றும் ஆஸ்கார் ஐஸாக்
அருமையான படம். இரு முறை பார்த்தேன். ஹிந்துக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். ஆபிரகாமிய மனநிலை கூட்டமாகக் கூடும்போது எப்படி கண்மண் தெரியாமல் வெறியாக உருமாறி வன்முறைத் தாண்டவமாகிறது என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டும் படம். நான் இருக்கு அமெரிக்காவில் இது பொது ரிலீஸ் செய்யப்பட்டதா என்றே தெரியவில்லை. நெட்ப்ளிக்ஸ்-இல் வந்த பொது தான் பார்த்தேன்.
வரலாறு முழுக்க கிறிஸ்தவத்தின் வெறித்தனத்தைக் காட்டும்போது இந்திய கிறிஸ்தவ பாதிரிகள் எந்த முகத்தோடு கிறிஸ்தவம் அன்பு மதம். இயேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றதாக மத பிரசாரம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கிறிஸ்தவத்தின் வரலாறு எவருக்கும் தெரியாது என்ற தைரியம் என்று நினைக்கிறேன். தற்போதைய கிறிஸ்தவர்களுக்கும் பிறரை மன்னிக்கும் தன்மை இல்லை என்று உறுதியாக கூறலாம். பள்ளிகளில் குழந்தைகளை படிக்க சேர்ப்பதற்கே மதம் மாறச் சொல்லும் கெட்ட புத்தியுடையவர்கள். ஈனப்பிறவிகள். இவர்கள் அறிவுரை சொல்வதெல்லாம் மற்றவர்களுக்குத்தான்.
இந்தியாவில் சோனியாவால் நிச்சயமாக இந்த படம் வெளியிடுவதற்கு அனுமதி கிடைக்காது என்று நினைக்கிறேன். இன்டெர்னெட்டில் பார்க்க முடிந்தால் வசதியாக இருக்கும்.
பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இப்படத்துக்கு வரி விலக்கு அளித்து, பட்டி தொட்டியெங்கும் திரையிடச் செய்ய வேண்டும். பாரதிய ஜனதா ஆளாத மாநிலங்களில் இந்து அமைப்புகள் உள்ளூர் கேபிள் டி.வி.கள் மூலம் இதை ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
People who could not get the CD of this movie can contact me: aiyan.kali@gmail.com.
அறிவார்ந்த அரவிந்தன் அவர்களின் அகோரா திரைப்பட விமர்சனம் கண்டேன். கிறித்தவ மதத்தின் கோர முகத்தை வெளிச்சம் காட்டுவதாக இது அமைகிறது. ஒரு சமுக ஆராய்ச்சியாளனாக பார்கின்றபோது கிறித்தவ மதம் எங்கு கடும் அடக்குமுறை இருந்ததோ அங்கே பரவியிருந்தைக் காண்கிறேன். கிறித்தவம் ஆரம்பகாலம் முதலே ஸமூகத்தில் கீழ் நிலையில் இருந்தவர்களையே குறிக்கோளாகக்கொண்டு பரப்பபட்டிருக்கிறது. ஓரளவு எண்ணிக்கை சேர்ந்ததும் மற்றவர்களை மிரட்டி கட்டாயப்படுத்தி மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதையும் திரு அ நீ அவர்களின் சித்திரம் காட்டுகிறது.
மற்றொரு மறுக்கமுடியாத உண்மை அரசியல் அதிகாரத்தையே இலக்காக கொண்ட கிறித்தவம் மாற்று மதங்களையோ வழிபாட்டு முறைகளையோ எள்ளளவும் வாழ அனுமதிக்காது என்பது. நம் நாட்டிலும் மிசனரிகள் இப்படியே இயங்கி வந்திருப்பதையும் கடந்த கால வரலாற்றில் காணமுடியும். இதை போலி மதச்சார்பின்மை வாதிகள் மறுப்பதோ கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களின் சுயநலத்தால் அன்றி வேறு காரணத்தால் அல்ல. திரு அரவிந்தன் முடிவாக உரைக்கும்
“இந்த திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகளே இந்தியாவில் உண்மையாக அரங்கேறலாம்! அந்த விதத்தில் அலெக்ஸாண்ட்ரியாவின் இறுதிப் பாகனீயத் தத்துவஞானி குறித்த இப்படம் ஹிந்துக்களுக்கு அவர்கள் வருங்காலம் குறித்த முன்னறிவிப்பு என்றே கருதலாம்” கருத்து சிந்திக்கத்தகுந்தது. எனினும் வற்றாத ஜீவநதியாம் நம் பாரத பாரம்பரியம் ஹிந்து தர்மம் இவர்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்பதே எனது நம்பிக்கை. இந்தக்காலத்திலும் தர்மத்தைக்காக்க வீறுகொண்டு எழுந்துள்ள பலப்பல
அமைப்புக்கள், சான்றோர்கள், சமயத்தை காக்கும் பணியில் வெற்றி பெறுவது உறுதி. இதில் முக்கியமாக கற்றோர்கள், படித்தவர்கள் மதமாற்றத்தின் அச்சுறுத்தலை உணரவேண்டும். ஹிந்து சமுகத்தில் தீண்டாமை, கல்வியின்மை, வறுமை,வேலையின்மை ஆகியன ஒழிக்க நாம் பணியாற்றவேண்டும். நமது சமயத்தின் ஆழ்ந்த தத்துவங்கள் அனைவரையும் சென்றடைய வழிவகுக்கவேண்டும்.
அருமையான விமர்சனம் அரவிந்தன் நீலகண்டன்.கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.இதை இந்தியாவில் அணிமதிப்பகலாலா என்று தெரியாதது.ஆனால் மக்களை தமிழ் பெயர்ப்பஊடன் பார்க்க செய்வது நல்லது
christianity is the worst man made cult which advocates for violence, either it be the killing of
widows of europe and america as ”witch hunting’- more than 1,40,000 widows were killed in europe and america together by protestant.similarly goa inquistation or spainish inquistation which witnessed killing of two million people.same way in many european countries. st paul under romanian king constanine fashioned this cult in to a political force to bring entire world under the umberla of america. many south american countries rulers were assassinated in early 60s by missionaries under the pretext of freedom movement with the support of CIA. Those countries were now almost converted to christianity. But fortunately most of the foreigners realised that christianity is false and fabricated without any spirituality and hence slowly switch over to hinduism and budhisim. we must educated poorer and illitrate ignorant hindus whenever we meet them about the danger of conversion. this is the only way to drive this vultures flying for preys
missionaries have now changed their strategy – adopting hindu practice of worship – temple kodi maram, light festival as deepawali, pongal festival by carrying sugarcan, Ther – car festival.
Fortunately missionaries can not have water tank like hindu temples are having water – kulam
where floating festivals are conducted in almost all temples – thanks to our chera,chozha and pandiya kings who had constructed water tank in front or backside of all hindu temples.
so christianity simply copies hindu practices to fool hindus who must be educated first.
மதிப்பிற்குரிய ராமநாதன்,
தங்கள் கடிதத்தில் உள்ள கருத்தின் அடிப்படை உண்மையே ஆகும். ஆனால், ஏதோ கிறித்தவர்கள் மட்டும் இப்படி செய்வதாக சொல்வது சரியில்லை என்பதே உண்மை. ஆபிரகாமிய மதங்கள் எல்லாமே இப்படிப்பட்டவை என்று ஒட்டு மொத்தமாக சொல்லிவிடவும் முடியாது.
யூதர்களின் மதம் இதர மதங்களை போல, மத மாற்ற முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறதா அல்லது பிற மதத்தினரை கொன்றுவிடும் படி அவர்களின் மதநூல்களில் கட்டளை எதுவும் உள்ளதா என்ற விவரம் எனக்கு தெரியாது. தெரியாத விஷயத்தில் கருத்து கூறுவது முறை அல்ல என்பதால் கிறித்தவம், மற்றும் இஸ்லாமிய மதங்களை பற்றி மட்டும் என் கருத்தை கூறுகிறேன். இரண்டு மத நூல்களான பைபிள் மற்றும் குரான் இரண்டும் படித்தவன் என்ற முறையில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது.
ஏசுநாதர் தனது மலைப்பிரசங்கத்தை தவிர வேறு எதுவும் உபதேசிக்கவில்லை. எனவே, மலை பிரசங்கத்தை தவிர, கிறித்தவர்கள் இன்று புனித நூலாக கருதும் பைபிளில், இயேசுவின் உபதேசம் எதுவும் கிடையாது. இன்றைய கிறித்துவ மத தலைவர்களும், மிஷினரிகளும் ஈடுபட்டுவரும் மதமாற்ற முயற்சிகள் , ஏசுநாதருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத விஷயம். இதுபோன்ற மத மாற்ற விஷயங்களில் ஈடுபட்டுவரும் மிஷினரிகள் தீர்ப்பு நாளில் நரக நெருப்பில் நிரந்தரமாக எரிக்கப்படுவார்கள்.
இஸ்லாத்தை பொறுத்தவரையில், அதில் பல கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின்படி, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை , இறைமறுப்பாளர்கள் என்று சொல்கிறார்கள்.
ஒன்று :- இறை மறுப்பாளர்களை உடனே கொன்று விடும்படியும், அவ்வாறு செய்பவர்களுக்கு, அதன் பலனாக, சொர்க்கத்தில் இருக்கும் அவர்களின் கடவுள் பல சிறப்பு சலுகைகளை கொடுப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது.
இரண்டு:- வேதப்புத்தகம் உள்ள கிறித்துவ, யூத, மற்றும் பார்சி போன்ற மதத்தை சேர்ந்தவர்களையும் , இஸ்லாத்துக்கு மாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாற மறுப்பவர்களை தக்கபடி கவனிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தக்கபடி கவனிப்பவர்களுக்கு சொர்க்கத்திலிருக்கும் அவர்களது கடவுள் பல் சிறப்பு சலுகைகளை கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மூன்று:- காபிர்கள் என்று சொல்லப்படும் , அதாவது உருவங்கள் மூலம் வழிபாடு செய்து வணங்குவோரை , சிலைகளை அழித்துவிட்டு, இஸ்லாத்துக்கு மாற செய்யவேண்டும். மறுத்தால் அவர்களை கொன்று விடவேண்டும். இவ்வாறு கொலை செய்தால் , சொர்க்கத்தில் இருக்கும் அவர்களின் கடவுள் பல சிறப்பு சலுகைகளை கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த உலகிலேயே பெரிய
புத்தர் சிலைகளை தாலிபான் காட்டுமிராண்டிகள் உடைத்தது இந்த உலகம் முழுவதும் அறியும். பதிலுக்கு புத்த மத ஆதரவாளர்கள், இவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் விட்டதால் உலகம் தப்பியது. இல்லையெனில், மீண்டும் ஒரு உலகப்போரே தோன்றி, மனித இனத்துக்கு பேராபத்தாக மாறி இருக்கும். நல்ல காலம், உலகம் யார் அருளாலோ தப்பியது.,
நான்கு:- ஒரு இஸ்லாமியர் தான் வாழும் நாட்டில் , இசுலாமிய முறைப்படி வாழ இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், தன்னுடைய உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் அந்த நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாட்டுக்கு சென்று , இசுலாமிய முறைப்படி வாழ வேண்டும். அவ்வாறு செல்லும்போது, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உடன் வர மறுத்துவிட்டால், அவர்கள் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்றும், அவ்வாறு கொன்றுவிட்டால் , சொர்க்கத்தில் இருக்கும் அவர்களின் கடவுள் பல சிறப்பு சலுகைகளை கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
முடிவாக, இந்த மத நூல்களை படித்துவிட்டு, அந்த மதங்களை சேர்ந்த பல இளைஞர்கள் , உலகிலுள்ள பிற மத மக்களை மதம் மாற்றவும், முடியாதுபோனால், கொன்றுவிடவும் முடிவு செய்துவிடுகிறார்கள். இது வருந்த வேண்டிய ஒரு விஷயம். பிறர் மீது, தன்னுடைய கருத்தை திணித்து, பயமுறுத்தியோ, கொலைசெய்தோ, தன்னுடைய மதத்தை வளர்க்கமுடியும் என்று நினைக்கும் இந்த புல்லர்களை அவர்களின் கடவுளே அழித்துவிடுவார். பல பயங்கரவாத இயக்கங்கள் இந்த மதங்களில் வளர்ந்தமைக்கு, இதுவும் ஒரு காரணம்.
இன்றைய செய்தி தாளில், சவூதி அரேபியாவில் காரோட்டிய பெண்களை கைது செய்து, சிறையில் அடைத்துவிட்ட கொடுமையை கண்டித்து, மகளிர் அமைப்புக்கள் பல , கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்துள்ளன.
எனவே, தாங்கள் தெரிவித்துள்ள காட்டுமிராண்டி தனம் கிறித்தவத்துக்கு மட்டும் தனிச்சொத்து அல்ல. அது ஏராளமாக இஸ்லாத்திலும் உள்ளது. மத நூல்களின்பெயரால், இவ்வளவு காட்டுமிராண்டி தனம் நிகழ்த்தப்படுவதை பார்த்து , அதிர்ச்சி அடைந்து தான் , இன்றைய இளைஞர் சமுதாயம் நாத்திக கருத்துக்களின் பின்னே சென்றுவிடுமோ என்று , விவரம் தெரிந்த அனைவரும் கவலைப்படுகிறார்கள்.
நல்ல கட்டுரை. ஆசிரியர் அரவிந்தனுக்கு நன்றி.
ஏன் கிருத்துவர்கள் தங்களை “கருணையின்” வெளிப்பாடாக காட்டிக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை.
நிறைய முறை, எங்கள் ஊரில் இந்த கிருத்துவ பாதிரியார்களை, ரவுடிகள் வந்து பார்த்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
நியு ஜெர்சீயில் ஆம்புலன்ஸ் உதவியாளராக இருக்கும் ஒரு நண்பர் சொன்னார்: “நல்ல ட்ரீட்மென்ட் குடுத்துதான் அனுப்பறோம்.. ஆனா இந்த கறுப்பர் மறுபடியும் சர்ச்சுக்கு போறாரு.. சாயங்காலம் புத்தி மாறிப்போய் தெருவுல இயேசு சொன்னார்னு கலாட்டா பண்ணி எல்லாரையும் மிரட்டறாரு.. ஞாயித்துக் கிழமையானா இவரை புடிச்சு ட்ரீட்மென்ட் குடுக்கறதே வேலையா போச்சு.. பாருங்க சட்டைய வேற கிழிச்சுட்டாறு”
@அரவிந்தன் நண்பரே, இந்த படத்தைப்பற்றி கூறியதற்கு மிக்க நன்றி, இது தான் வேண்டும். கிருஸ்துவத்தின் முகத்திரையை கிழிக்காதவரைக்கும் நம்மால் நிம்மதியாக வாழமுடியாது. இந்த தளத்துக்கு போய் பாருங்கள் (https://www.hindudharmaforums.com)உலக மக்கள் அனைவரும் நமது மதத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நமது இந்திய சகோதரர்கள் தருமத்தைவிட்டு . கொலை வெறி கொண்ட இயக்கத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. சிவனுக்குதான் தெரியும்.
தனக்கு பிடித்தது எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. ஏனெனில் இயற்கை அப்படி வேறுபாடுகளுடன் தான் படைத்துள்ளது.உணவு, உடை, இறை நம்பிக்கை அல்லது இறை நம்பிக்கை இன்மை அல்லது இறை நம்பிக்கை பற்றிய எந்த விதமான அக்கறையும் இன்மை, என்று பல விஷயங்களிலும் மாறுபட்ட சுவைகளுடன் தான் மனித இனத்தை எங்கும் நிறைந்த அல்லது ஏதோ ஒரு இடத்தில் சொர்க்கம் என்ற பெயரில் அங்குமட்டும் உள்ள ( மற்ற இடங்களில் இல்லை போலும் ) கடவுள் படைத்துள்ளார்.
தனக்கு பிடித்த ஒரு நிறத்தில்தான் உலகில் உள்ள எல்லோரும் உடை அணியவேண்டும் என்று ஒரு மனிதன் சொன்னால் , நாம் அவனை என்ன சொல்வோம்? என்ன செய்வோம்? பைத்திய கார ஆஸ்பத்திரிக்கு அனுப்புவோமா மாட்டோமா?
இதே போன்று , பிறரை தங்கள் மதத்துக்கு மாற்ற துடிப்போரும், மனநிலை பாதிக்கப்பட்ட பயித்தியன்களே, அவர்களை நாட்டில் நடமாட விடுதல் மனித இனத்துக்கே ஆபத்து. அவர்கள் பயித்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் நாள் விரைந்து வருகிறது.
இந்து கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதன்மூலமும், ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதியில் கலப்பு திருமணம் செய்வோருக்கே , அரசு வேலை என்று சட்டத்தை திருத்தினால் , பத்து வருடத்திலேயே சாதிகள் ஒழிந்து, மதமாற்ற வியாபாரிகள் விஷம் குடித்து சாவார்கள்.
திரைப்படத்தை எடுத்தவர்களின் தைரியத்தையும் நேர்த்தியையும் பாராட்டும் அதே வேலையில்; மத வெறியின் கோர முகத்தை சாடும் அதே வேலையில் நாம் சில பாடங்களையும் கற்க வேண்டியது அவசியம்.
மதம் பரப்பப்பட்ட நகரத்தில் அடிமை முறை இருந்திருக்கிறது. அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை. அன்றாட உணவுக்கே இன்னொருவரை நம்பி வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் (பாகனீய) கோவில்களுக்குள் அனுமதிக்கப் பட்டார்களா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் ஒரு சமுதாய ஏற்றத்தாழ்வு இருந்திருக்கிறது. அதிகாரத்தை பிடிக்க நினைக்கும் எந்த ஒரு (அந்நிய) சக்திக்கும் இதுபோன்ற சூழல் ஒரு வரப்பிரசாதமே ! பல பேரரசுகள் அழிந்த கதையும் இதேதான்.
கிறித்தவம் இந்தியாவில் காலூன்றத்துவங்கிய சமயத்தில் கிட்டத்தட்ட, இதே சூழலை நமது சமுதாயத்துடனும் ஒப்பிடலாம். சாதியின் பெயரால் பாகுபாடு. தாழ்ந்த சாதியினர் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தனர். அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை. கோவில்களில் அனுமதி கிடையாது. பொதுக்குலதில் குடிநீர் எடுக்க முடியாது. etc etc. இதே காரணதிற்குத்தான் அம்பேத்கர் புத்தம் தழுவினார்.
பாகுபாடு கடவுளிடத்தில் இல்லை; மனித மனதில்தான் இருக்கிறது.
நம் சகோதரன் பசியால் வாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். வெளியில் இருந்து வந்தவன் உணவைக்கொடுத்து கூடவே ஒரு புத்தகத்தையும் கொடுத்தான். ஒரு கையில் உணவு, மறு கையில் புத்தகம். புத்தகத்தில் உள்ள கடவுள்தான் உனக்கு உணவையும் கொடுத்தார் என்ற உபதேசம் பசியோடிருன்தவன் காதுகளில் உரக்கவே ஒலித்திருக்கும். நேற்றுவரை கைகூப்பி “பரமேஸ்வரா” என்றவன் இன்றுமுதல் மண்டியிட்டு “பரமபிதாவே” என்கிறான்.
தவறு எங்கே நடக்கிறது என்பது புரிந்திருக்கும்.
சக மனிதனை மனிதனாக மதிக்காத எந்த ஒரு சமூகமும் அழிவையே சந்திக்கும்.
மெக்ஸிகோ தெருக்களில் போதைமருந்து விற்பவர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்று பார்த்தேன். ”அரசுக்குத்தான் அவர்கள் சமூக விரோதிகள், அந்தத்தெருவில் அவர்கள் ஹீரோக்கள், அதாவது தன் குடும்பம் சாப்பிட உயிரைப்பணயம் வைக்கும் ஹீரோக்கள்” என்று அதில் வருகிறது. இப்படி ஹீரோக்களை உருவாக்குவதற்காக மாஃபியா தலைமையை பாராட்ட வேண்டுமா, இல்லையா, எறும்பு அவர்கள் சொல்வதன் தர்க்கத்தைப்பார்த்தால் பாராட்ட வேண்டும் போலத்தான் இருக்கிறது.
ஏழ்மையையோ, ஆரோக்கியக்குறைவோ, அவலமோ, சமூக நிலையோ எதுவாயிருந்தாலும் ஒருவனது பலவீனத்தை உபயோகப்படுத்தி அவனைத்தனது பெரும் திட்டத்தின் ஒரு கருவியாக உபயோகப்படுத்தும் அணுகுமுறை மிகத்தெளிவாக மாஃபியா அணுகுமுறைதான். காட்ஃபாதர் படத்தில், தான் முன்பு உதவி செய்த ஒருவனிடத்தில் கொலை செய்த துப்பாக்கியை தந்து ஒளித்து வைக்கச்சொல்வார் காட்ஃபாதர். ஒருவனது பலவீனமான நேரத்தை தன் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளும் சந்தர்ப்பமாக உபயோகிக்கும் அசிங்கம் பிடித்த காட்ஃபாதர் அணுகுமுறையைத்தான் கிறித்துவமும் கடைப்பிடிக்கிறது.
மதமாற்றம் என்பதை அடிநாதமாகக்கொள்ளும் கிறித்துவத்தின் சேவை என்பது கேவலமான குயுக்தி. ஒரு மனிதனின் தனிப்பட்ட அறநிலைப்பாட்டிற்கும் ஒரு சமூகத்தின் ஆன்மீக சுதந்திரத்திற்கும் இழைக்கப்படும் அவமதிப்பு.
மாஃபியா தலைவனை நியாயப்படுத்தும் மனோபாவம்தான் பிறரது பலவீன நிலையை மதமாற்ற சந்தர்ப்பமாகக் கையாளும் கிறித்துவத்தின் நரித்தனத்தையும் நியாயப்படுத்தும்.
ஏற்றத்தாழ்வுகளும் சக மனிதனை மனிதனாக மதிக்காத இழிபோக்குகளும் எல்லா சமுதாயத்திலும் எல்லா காலங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் இருந்து கொண்டேதான் இருக்கும். அவை களையப்பட ஒவ்வொரு கட்டத்திலும் மனப்பூர்வமான முயற்சிகள் எடுக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் இரு கருத்தில்லை. ஆனால் ஒருவனது ஆன்மீக சுதந்திரத்தை விலை பேசுவது அல்ல அதற்கு தீர்வு. கிறித்துவம் கோலோச்சிய கால கட்டங்களில் சுதந்திர சிந்தனையும் தர்க்கமும் அறிவுத்தேடலும் கிறித்துவத்தின் நுகத்தடியின் கீழ் வைத்து நசுக்கப்பட்டது. விளைவு, ஐரோப்பாவே இருண்ட சகாப்தத்தில் மூழ்கிப்போனது. கிறித்துவத்தின் உட்சண்டையின் விளவாய்க் கிடைத்த சிறிய இடைவெளியில்தான் அறிவியல் சிந்தனை ஐரோப்பாவில் மீண்டும் கிளைத்து மறுமலர்ச்சி காண முடிந்தது. அதற்குள் 1500 ஆண்டுகளையும் பல ரத்தப்போர்களையும் உலகம் அதற்கு விலையாகத்தர நேர்ந்து விட்டது. இந்தக்கட்டுரை சொல்ல வருவ்து அதைத்தான்.
ஆடு நனைகிறதென்று அழும் குரலெல்லாம் அன்பின் குரலென்று அடையாளப்படுத்தி விடவேண்டாம். உற்றுக்கேட்டால் அது ஓநாயென்று தெரிந்து விடும். கிறித்துவ ஓநாயின் வாயில் சிக்கிய சமூகம் எப்படி அறிவுத்தேடலின் சுதந்திரம் மறுக்கப்பட்ட இருளில் மூழ்கிப்போனது என்பதுதான் இக்கட்டுரையின் முக்கியச்செய்தி.
அருணகிரி
@Arunagiri ,
//ஆடு நனைகிறதென்று அழும் குரலெல்லாம் அன்பின் குரலென்று அடையாளப்படுத்தி விடவேண்டாம். உற்றுக்கேட்டால் அது ஓநாயென்று தெரிந்து விடும். கிறித்துவ ஓநாயின் வாயில் சிக்கிய சமூகம் எப்படி அறிவுத்தேடலின் சுதந்திரம் மறுக்கப்பட்ட இருளில் மூழ்கிப்போனது என்பதுதான் இக்கட்டுரையின் முக்கியச்செய்தி.// மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே.
இந்து கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதன்மூலமும், ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதியில் கலப்பு திருமணம் செய்வோருக்கே , அரசு வேலை என்று சட்டத்தை திருத்தினால் , பத்து வருடத்திலேயே சாதிகள் ஒழிந்து, மதமாற்ற வியாபாரிகள் விஷம் குடித்து சாவார்கள்.
மகரமதி அவர்களே
தாங்கள் கிறிஸ்தவ மத வியாபாரிகளை மட்டும் கருத்தில் கொண்டு கருத்து தெரிவித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதைவிட மோசமான ஆபத்ததானவர்கள் முஸ்லீம்கள். இவர்கள் கண்மூடித்தனமாக முகமது நபியையும், அல்லாவையும் நம்பிக்கொண்டு குரானுக்கும், முகமது நபிக்கும் எதிராக கருத்து சொல்பவர் எவராக இருந்தாலும் கொல்லவேண்டும் என்ற சிந்தனை உடைய கொடுர புத்தி உடையவர்கள். இவர்கள் திருந்தினால் ஒழிய நாட்டில் அமைதி ஏற்படாது. ஆனால் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனென்றால் மதரஸாக்களில் அவர்களை காட்டுமிராண்டிகளாகவே உருவாக்குவதற்கான வழிமுறைகள் சொல்லித்தரப்படுகின்றன. மதரஸாக்களை மூடிவிட்டு அனைவருக்கும் பொதுவான கல்வி கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
//நம் சகோதரன் பசியால் வாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். வெளியில் இருந்து வந்தவன் உணவைக்கொடுத்து கூடவே ஒரு புத்தகத்தையும் கொடுத்தான். ஒரு கையில் உணவு, மறு கையில் புத்தகம். புத்தகத்தில் உள்ள கடவுள்தான் உனக்கு உணவையும் கொடுத்தார் என்ற உபதேசம் பசியோடிருன்தவன் காதுகளில் உரக்கவே ஒலித்திருக்கும். நேற்றுவரை கைகூப்பி “பரமேஸ்வரா” என்றவன் இன்றுமுதல் மண்டியிட்டு “பரமபிதாவே” என்கிறான்.
தவறு எங்கே நடக்கிறது என்பது புரிந்திருக்கும்.
சக மனிதனை மனிதனாக மதிக்காத எந்த ஒரு சமூகமும் அழிவையே சந்திக்கும்
//
எறும்பு அவர்களே,
உங்களின் நல்லெண்ணம், அனைவரும் சமுதாயத்தில் நன்றாக இருக்கவேண்டும் என்ற கொள்கை போற்றுதலுக்குரியது.
அதே நேரத்தில், ஒரு மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி மதம் மாற்றுதல் அல்லது எதையும் சாதித்தல் பலவந்தப்படுத்துதல் கேவலமானது. அவர்கள் உணவும், புத்தகமும் கொடுத்தார்கள் என்றீர்களே, ஏன் அந்த உணவும் புத்தகமும் சோமாலியாவிலும், ருவாண்டாவிலும், அரபு நாடுகளிலும் சாகும் கறுப்பர்களுக்கு கிடைக்கவில்லை? கொடுக்கப்பட்ட அந்த அந்த உணவும் , புத்தகமும் எங்கிருந்து கிடைத்தது அந்த பாதிரியாருக்கு?
வரலாற்று அறிவு குறைந்திருப்பதாலேயே இவ்வாறு பேசுகின்றீர்கள் நீங்கள். ஏழைகளிடமிருந்து பிடுங்கிய வரிப்பணம், தானியங்கள்தான் இங்கிலாந்துக்கு ஏற்றியது போக, கும்பினியாருக்கு உபயோகம் செய்ததுபோக, பாதிரிகளுக்கு கிடைத்தது. அதை அவர்கள் பிடுங்கிய ஏழைகளுக்கே கொடுத்து மதம் மாற்றினார்கள்.
மகர மதி அவர்களே,
//இந்து கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதன்மூலமும், ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதியில் கலப்பு திருமணம் செய்வோருக்கே , அரசு வேலை என்று சட்டத்தை திருத்தினால் , பத்து வருடத்திலேயே சாதிகள் ஒழிந்து, மதமாற்ற வியாபாரிகள் விஷம் குடித்து சாவார்கள்//
நீங்கள் சொல்வது மொட்டைத்தலையில் முள் குத்தினால் முழங்காலில் நெறிகட்டும் என்பதுபோல் இருக்கிறது. இப்போது கூட உங்கள் சாதிக்காரர்கள் சேர்ந்து ஒரு கோவில் கட்டி, உங்கள் சாதிக்கரரையோ அல்லது யாரை வேணுமானாலும் அர்ச்சகராக நியமிக்கலாம். ஆனால் உங்களைப் போல் கருத்துள்ளவர்கள் கோவில் சமைக்க மாட்டார்கள். அடுத்தவர்களுக்கு உபதேசம் மட்டும் பண்ணுவார்கள்.
சாதி மாறி கல்யாணம் பண்ணினால் ஏன் மதமாற்ற வியாபாரிகள் விஷம் குடிக்கவேண்டும் என்று புரியவில்லை. வேணுமென்றால் சர்ச்சில் கொடுக்கும் திராட்சை ஒயினை குடிப்பார்கள். அவ்வளவுதான். சர்ச்களில் இருக்கும் ஜாதி பற்றி உங்களுக்கு தெரியாதா? ஜாதிக்கு ஒரு சர்ச் உண்டு.
எரும்பு அவர்களே,
\\சக மனிதனை மனிதனாக மதிக்காத எந்த ஒரு சமூகமும் அழிவையே சந்திக்கும்.\\
நல்ல காமெடி. அது சரி, ஏன் கொரியாவில் மதமாற்றம் நிகழ்ந்தது. ஊர் குலத்தில் தண்ணீர் எடுத்து குடிக்காமல் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள். ஒரு வேலை அவர்களுக்கு என்று தனியாக குலம் இருந்ததா என்ன? எதோ ஒரு ஊரில் நடந்த விசயத்திற்கு நாட்டில் உள்ள எல்லோர் மீதும் வசை பாடுவது நகைப்புக்கு உரியது.
\\மதம் பரப்பப்பட்ட நகரத்தில் அடிமை முறை இருந்திருக்கிறது\\
உங்கள் கருத்து SC / ST க்கு பொருந்தும் என்று வைத்து கொள்வோம், பிற சமுதாயத்தினர் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு உண்மையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், மத மாற்றம் பெறும்பாலும் நிகழ்வது,
OBC சமுதாயத்தில் தான். இதில் என்ன காமெடி என்றால், எனது சாதி, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் UR, ஆனால் ஒடிசா மற்றும் மஹாராஷ்டிராவில் OBC. தமிழ் நாட்டை ஆண்ட பல மன்னர் பரம்பரைகள் இன்று MBC பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை என்னவென்று சொல்வது?
\\நம் சகோதரன் பசியால் வாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.\\
உங்களுக்கு சுத்தமாக வரலாறு தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஒருவன் உழைத்தால் சாப்பாடு கிடைக்கிறது. இதில் என்ன வேண்டி இருக்கிறது. யாரும் யாருக்கும் பிச்சை போட தேவை இல்லை. 1000 ஆண்டுகள் இஸ்லாமிய மற்றும் கிறித்துவ படையெடுப்பின் காரணமாகவே, நீங்கள் சொன்ன அனைத்து விசயங்களும் நடந்தது.
நாட்டில் உள்ள அனைத்து வனங்களையும் அழித்து அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியினரை விரட்டி, காப்பி தோட்டம் அமைத்தது யார் என்று தெரியாதா என்ன?
சும்மா வாய் புலித்த்தா அல்லது மாங்காய் புலித்ததா என்று பேசாதீர்கள். அது சரி, கிறித்துவ கபோதிகள் கறுப்பு இனத்தை சேர்ந்த மக்களை எவ்வாறு நடத்தீனார்கள் என்பது உங்களுக்கு மறந்து போனது ஆச்சர்யமாக உள்ளது.
[Edited and published]
மகர மதி,
\\இந்து கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதன்மூலமும்\\
இது முட்டாள் தனமான ஒரு வரி. அர்ச்சகர் வேலை என்ன கலெக்ட்டர் வேலையா என்ன… இது என்ன காமெடி வரி. கோயிலில் அனைவருக்கும் பொதுவானது. அதே சமயத்தில் ஒரு // சில கோயில்கள் // ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானவையாக இருக்கின்றன. அவர்கள் வேறு யாரையும் அனுமதிப்பது இல்லை. கிட்டதட்ட தனது வீட்டின் பூஜை அறை போல வைத்து இருக்கிறார்கள். இந்த மாதிரி கோயில்கள், 1000000 : 1 என்ற விகிதத்தில் தான் இருக்கின்றன.
அர்ச்சகர் ஆவதர்க்கான் தகுதிகள் இருக்கும் பட்சத்தில், சாதி வேறுபாடு பார்க்கமல் அதற்குரிய வாய்ப்பு வழங்கபடுவது ஏற்ப்புக்கு உரியதே.
\\ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதியில் கலப்பு திருமணம் செய்வோருக்கே , அரசு வேலை என்று சட்டத்தை திருத்தினால் , பத்து வருடத்திலேயே சாதிகள் ஒழிந்து, மதமாற்ற வியாபாரிகள் விஷம் குடித்து சாவார்கள்.\\
நல்ல காமெடி. நீங்கள் கிறித்திவரா என்ன. ஏன் இவ்வாறு கேட்கிறேன் என்றால் அவர்கள் தான் இவ்வாரு விசம் குடித்து சாவது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.
சரி விசயத்திற்கு வருவோம். கலப்பு திருமணத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் என்ன சம்மந்தம். கொரியாவில் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் ஏன் மதம் மாற்றப்பட்டார்கள். அங்கு எந்த விதமான சாதி அமைப்பு இருந்தது. தமிழ் நாட்டு காரனும், ஆந்திரா நாட்டுகாரரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் அவர்களுக்குள் கலப்பு திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்ன?
ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு வித கலாச்சார முறை உண்டு. அது அடுத்தவர் வாழ்க்கை முறைக்கு ஒத்துவராது. அவ்வளவு ஏன், தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும், பல தெலுங்கு பேசும் மக்கள், ஒரே சாதியாக இருந்தாலும் ஆந்திராவில் பெண் எடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் வாழ்க்கை முறை ஒத்துவராது.
திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட மணம் சம்மந்தபட்ட விசயம். இதில் கருத்து சொல்கிறேன் பேர் வழி என்று தாங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்.
மதத்திணிப்பு தவறு என்பதில் இங்கு மறுமொழியிட்ட எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. நான் கூற விழைவதெல்லாம் அதற்கான சூழலை நாமே ஏற்படுத்தக்கூடாது என்பதே. கட்டுரை ஆசிரியர் கடைசி பத்தியில் “இந்த திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகளே இந்தியாவில் உண்மையாக அரங்கேறலாம்” என்று ஐயம் தெரிவிக்கிறார். “நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவம். மக்கள் மதம் மாறும் சூழலுக்கான காரணத்தை அறிந்து அதை களைவதே என் எண்ணம்.
சமுதாய ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதுமே உண்டு. ஆனால் பிறப்பால் வரும் ஏற்றதாழ்வு கொடுமையானது. தாழ்ந்த சாதி மக்கள் படும் இன்னல்
ஏராளம். கற்றறிந்த சட்ட மேதை கூட இதற்கு விதிவிலக்கல்ல. அந்த அவமானத்தை அனுபவித்தவர்களுக்கே அதன் வலி தெரியும். அடித்தட்டு மக்களின் இந்த வலியையும் , ஏழ்மையையும் இன்னபிற பலவீனங்களையும் பயன்படுத்தி மதம் திணிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
அதே வேளையில், மதம் மாறும் அந்த நபர் எந்த காரணத்திற்காக மதம் மாறினார் என்பதையும் பார்க்கவேண்டும்.
* என்றவது ஒருநாள் தேநீர் கடையில் கொட்டன்குச்சியில் தேநீர் தரப்படிருக்கிறதா?
* சாதியை காரணம் காட்டி என்றாவது பேருந்து இருக்கையில் இருந்து இறக்கி விடப்பட்டு தரையில் உட்கார வைகப்பட்டிருகிறீர்களா?
* பசியிலும் நோயிலும் அவதிப்படும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் கண்ணீர் வடிதிருக்கிறீர்களா ? இன்னும் பல உண்டு.
நாளைக்கு உயிரோடிருக்க இன்று எனக்கு உணவு வேண்டும். கடவுள் அப்புறம்தான். பசியோடிருப்பவனுக்கு மதம் இல்லை என்கிறார் ராமகிருஷ்ணர். இதற்காகவே ஜகத்தை அழிப்போம் என்றார் பாரதி.
ஜமீன்தாரின் புதிய காருக்காக “மோடரானா” வரியும் யானைக்காக “ஹாதியானா” வரியும் கட்டி ஒட்டிப்போன வயிறு சாமானிய இந்திய வயிறு. ஒரிசாவில் ஒரு மலை கிராமத்தில் குடிநீருக்காக மதம் மாற்றபடுகிறார்கள் என்று படித்த நினைவு. இது போன்ற சில சமுதாய ஓட்டைகளை அடைத்தாலே இந்து எண்ணிக்கை கரைவதை தடுக்கலாம்.
@ அருணகிரி அவர்களே, மதத்திணிப்பு செய்வதை நான் ஆதரிக்கவில்லை. அதற்கான வாய்ப்பே இந்தியாவில் எழக்கூடாது என்பதே என் எண்ணம்.
@ கார்கில்ஜய் , எனது வரலாற்று சிற்றறிவுக்கு வருந்துகிறேன்; சரி செய்ய முயற்சிக்கிறேன். நன்றி. பெயருக்கு ஏற்றார்போல் எழுத்தில் நெருப்பு தெறிக்கிறது. வாழ்த்துக்கள். மகர மதியை கொஞ்சம் ஓவராகவே கலாய்துவிட்டீர்கள் 🙂
அருணகிரி & கார்கில்ஜய், நீங்கள் மதத்திணிப்பு கேவலமானது என்று எவ்வளவு சொன்னாலும் அவர்கள் காதில் விழப்போவதில்லை. அவர்களை பொருத்தமட்டில் அது புனிதமான செயல். எனவே அவர்களை திருத்துவதை விடுத்து நம்மை சரிசெய்துகொள்வோமே!
என் கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
நன்றி.
விமர்சனத்தையும் ட்ரைலேரரேயும் பார்த்தவுடன் படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகமாகின்றது.ஆனால் இத்தாலி சோனியாவின் வழிகாட்டுதலில் ஆட்சி நடக்கும் நம் பாரத நாட்டில் நிச்சயம் இந்த படத்தை திரைடமாட்டார்கள்.தவிர போலி மதசந்தர்ப்பவாதிகளும் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆகவே இந்த திரைப்படத்தை சிடியாக அனைத்து இந்திய மொழிகளின் சப்டைட்டிலுடன் வெளியிடவேண்டும்.
இந்தப் படத்தை இங்கே இலவசமாக பார்க்கலாம் அல்லது தரவிறக்கிக் கொள்ளலாம்.
https://stagevu.com/video/xzfwayteuqie
Prakash
\\\\\\\\\ “இது வெறும் வழிபாட்டு ஆலயம் மட்டுமல்ல. இங்கே நம் முன்னோர்களின் அறிவு அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவேதான்… எனவேதான் நாம் இதைக் காப்பாற்ற வேண்டும்.”\\\\\\\\\
கருத்தை ஈர்க்கும் வாசகங்கள்.
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்று தமிழில் ஒரு வசனம் உண்டு. இது ஆப்ரஹாமிய மதங்கள் புகும் தேசங்களுக்கும் பொருந்தும். இந்த வெறிமிகு மதங்கள் புகும் தேசங்களில் முன்னம் இருந்த கலாசாரங்களை வேரும் வேரடி மண்ணும் சேர களைவது என்பது ஆக்ரமிப்பாளரின் யுக்தி.
ஆயிரம் வருஷங்களுக்கு மேலாக ஹிந்துஸ்தானத்தில் ஆப்ரஹாமிய மதங்கள் பேயாட்டம் ஆடியும் இன்றும் பல பித்தலாட்டங்களை செய்து வந்த போதிலும் முழு ஹிந்துஸ்தானத்தை அடிமைப்படுத்த இயலவில்லை. ஆனால் பகுதி வாரியாக பெரும் வெற்றியும் பெற்றுள்ளார்கள். ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பாங்களாதேசத்தில் ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக்களின் நிலை இவ்வெறி மதங்கள் புரையோடும் புண்கள் எனத்தெளிவு செய்கின்றன.
இன்றைய ஹிந்துஸ்தானத்தில் ஜம்மு காஷ்மீரத்தில் குறிப்பாக காஷ்மீர ப்ராந்தியத்தில் ஹிந்து மதம் மற்றும் ஹிந்து மதம் சார்ந்த மிகப்பல கோவில்கள் இவையெல்லாம் ஸங்க்ரஹாலயத்தில் (அரும் பொருள் காட்சியகம்) வைக்கப்படும் காட்சிப்பொருள்கள் போலத்தான் உள்ளது.
மணிப்பூர் (ஹிந்து மதத்தின் எச்சம் இங்கு மட்டும் கொஞ்சம் மிச்சம்) நாகாலாந்த், மேகாலயா மற்றும் மிஜோரம் போன்ற வடகிழக்கு மாகாணங்களில் முன்னமிருந்த வழிபாட்டு முறைகளை மக்கள் குடிமுழுகி க்றைஸ்தவத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஸ்வீகரித்து விட்டார்கள் என மிஷநரிகள் பறைசாற்றிய பின்னும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரத் சேவாச்ரம் சங்க் போன்ற அமைப்பினரின் முயற்சிகளால் இது பொய் எனத் தெரிய வந்துள்ளது. மண்சார்ந்த பழைய வழிபாட்டு முறைகளை பின்பற்றும் வனவாசிகள் மற்றும் மலைவாசிகள் இன்றும் இங்குள்ளனர் (மிக சொல்பம் என்ற போதும்) என்பது தெரிய வருகிறது.
ஹிந்துஸ்தானத்தைப்பிளந்து உருவாக்கப்பட்ட தேசங்களில் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துக்களல்லாத மற்றைய மதத்தினரின் இன்றைய நிலை விசாரம் செய்யப்பட வேண்டிய விஷயம்.
அன்புள்ள சோழன்,
மத மாற்றகும்பல் பல இடங்களில் , பிரச்சாரம் செய்யும் போது, உங்கள் மத கோயில்களில் சமத்துவம் கிடையாது. ஒரு சாதியினர் மட்டுமே பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் செய்கின்றனர். ஆனால் எங்கள் மதத்தில் உடனே சேர்ந்தால், பாதிரியார் பயிற்சி பெற்று பாதிரியார் ஆகலாம் என்று சொல்லி , பைபிளை கொடுத்து மூளை சலவை செய்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதை நான் அறிவேன்.
தங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ, மஞ்சள் துண்டார் ஒரு முறை பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும் போது , மாரியாத்தா , காளியாத்தா கோயில்களிலும், மரத்தடி விநாயகர் கோயில்களிலும் மற்ற சாதியினர் பூசை செய்தால் போதாது, மதுரை மீனாட்சி , மயிலை கற்பகம், சிதம்பரம் நடராசர், மற்றும் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில்களிலும் அனைத்து சாதியினரும் ( பிராமணர்கள் உட்பட ) அர்ச்சர்கர்கள் ஆனால் தான் சாதி சண்டைகள் ஒழியும் என்று சொல்லியிருந்தார்.இந்த கருத்தில் தவறு ஏதும் இல்லை. நிற்க தமிழக அரசினால் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கும் இதுவரை அர்ச்சகர் பணி கொடுக்கப்படவில்லை. இது ஏன் என்று கேட்டு மதமாற்ற வியாபாரிகள் பிரச்சாரம் செய்வது உங்களுக்கு தெரியுமா ?
கிறித்துவத்திலும், இஸ்லாத்திலும் பல ஆயிரம் பிரிவுகள் உள்ளன. சட்டம் பயின்ற மாணவர்களுக்கு தான் அது தெரியும். ஆனால், நமது மஞ்சள் துண்டார் , அனைத்து சாதியினரும் சேர்ந்து விநாயக சதுர்த்தி விழாவை ஒரே கோயிலில் கொண்டாடினால், தான் கலந்து கொண்டு, கொழுக்கட்டை சாப்பிட தயார் என்று சொல்லி பேட்டி கொடுத்தார்.
கிறித்தவர்களிலும், ஆர் சி , ப்ரோடேச்டன்ட் , பெந்தகொச்து, டி ஈ எல் சி என்று பல பிரிவுகள் உண்டு. அவர்கள் ஒரு சர்ச்சிலிருந்து , வேறு சர்ச்சுக்கு போய் வழிபாடுகள் செய்வதில்லை. தங்கள் தங்கள் சர்ச்சில் தான் வழிபாடு செய்கிறார்கள்.
இதைவிட, மிக முக்கியமாக இஸ்லாத்தில், ஷியா, சன்னி , அகமதியா, சுபி என்று பல பிரிவுகள். அதில் பன்னிரு திருக்கூட்டத்தார் என்று நான் படித்த புத்தகத்தை வைத்துள்ளேன். அதில் வஹாபி என்ற பிரிவு மிகவும் தீவிரமான ஒரு பயங்கரவாத இயக்கம் ஆகும். இவர்களில் எவரும் , ஒரே மசூதியில் சேர்ந்து தொழுகை செய்வதில்லை. ஆனால் மஞ்சள் துண்டார் , இந்து முறைகளில் உள்ள குறைகளை மட்டும் சுட்டிக்காட்டி கழகம் விளைவிக்க முயல்கிறார். எனவே, அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் , இந்துக்கள் செயல்பட வேண்டும்.
மஞ்சளாரும், அவரது சொம்புகளான கே வீ மற்றும் சுப வீ போன்றோரும், பிறமதங்களில் உள்ள பெண்ணடிமை, மற்றும் இதர கேடுகளை கண்டிக்கும் துப்பில்லாமல், நம்மை மட்டுமே விமரிசிப்பார்கள். எனவே, நண்பர் சோழன் அவர்களே தயவு செய்து சிந்தியுங்கள். நான் சொல்லும் கலப்பு திருமணம் என்பது, காலத்தின் கட்டாயம் இல்லையெனில் , பிற மதத்தினர் நம்மை முழுவதுமாக மதமாற்றம் செய்து வெளிநாட்டு பாதிரிகளிடமும் , தீவிரவாதிகளிடமும் நம் நாட்டையே வெளிநாட்டாரிடம் அடகு வைக்க நூறுசதவீதம் வாய்ப்பு உள்ளது.
எறும்பு,
நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவே இல்லையே.
\\உங்கள் கருத்து SC / ST க்கு பொருந்தும் என்று வைத்து கொள்வோம், பிற சமுதாயத்தினர் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு உண்மையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், மத மாற்றம் பெறும்பாலும் நிகழ்வது,
OBC சமுதாயத்தில் தான்\\
அடுத்து
\\ என்றவது ஒருநாள் தேநீர் கடையில் கொட்டன்குச்சியில் தேநீர் தரப்படிருக்கிறதா?
* சாதியை காரணம் காட்டி என்றாவது பேருந்து இருக்கையில் இருந்து இறக்கி விடப்பட்டு தரையில் உட்கார வைகப்பட்டிருகிறீர்களா?
* பசியிலும் நோயிலும் அவதிப்படும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் கண்ணீர் வடிதிருக்கிறீர்களா ? இன்னும் பல உண்டு.\\
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏன் மழுப்புகிறீர்கள். நீங்கள் சொன்ன அனைத்தும் பிரீட்டிஷ் காலத்தில் இந்தியாவுக்குள் வந்தவை. உணவு விடுதி என்பதே, ஆப்ரகாமிய மதம் இந்தியாவில் வந்த பின்பு ஏற்பட்டது தான்.
பீரிட்டிஷ் காலத்திற்கு முன்பு தேநீர் என்ற விசயமே இங்கு கிடையாது.
எல்லா கோயில்களிலும் இலவசமாக உணவு ஒரு காலத்தில் வழங்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யமாக உள்ளது. ஒவ்வொரு குலத்திற்கும் தனி தனி கோயில்கள் அவரவர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டது. நீங்கள் சொல்லும் தாழ்த்தப்பட்ட என்று கூறப்படும் சாதியினருக்கும் தனி கோயில்கள் உள்ளன.
மன்னர் வம்ச குலதெய்வ கோயில்கள் மிக பிரம்மாணடமாக கட்டப்பட்டன். பிற இனத்தவர் கோயில்கள் சாதாரணமாக கட்டப்பட்டன.
உங்களுக்கான ஒரு விசயம். காலம் காலமாக எல்லா மாரியம்மன் கோயில்களிலும் பூசாரிகள் தான் பூஜை செய்கிறார்கள். சாதி ஏறத்தாழ்வு என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு கயவர்களால் ஆப்ரகாமிய உதவியுடன் தவறான முறையாக மாற்றப்பட்டது.
\\நண்பர் சோழன் அவர்களே தயவு செய்து சிந்தியுங்கள். நான் சொல்லும் கலப்பு திருமணம் என்பது, காலத்தின் கட்டாயம் இல்லையெனில் , பிற மதத்தினர் நம்மை முழுவதுமாக மதமாற்றம்\\
மீண்டும் சொல்கிறேன். கலப்பு திருமணம் என்பது அவரவர் விருப்பம். எனக்கு தெரிந்து இப்பொழுது இரண்டு சாதி தான். ஒன்று பணம் உள்ளவன். மற்றொருவன் பணம் அற்றவன். எனக்கு கலப்பு திருமணத்தில் எந்த ஒரு உடன்பாடும் கிடையாது. அதே சமயத்தில் அதை எதிர்ப்பதும் கிடையாது. திருமணம் என்பது அவரவர் தனிபட்ட விசயம்.
சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அனைத்து பகுதிகளிலும் சுற்றியுள்ளேன். 100க்கு 85 சதவிகிதம் சாதிய பாகுபாடு கிடையாது. இதில் 10 சதவிகிதம் அரசியல் மற்றும் கிறித்துவ மிஷினரிகளால் ஏறபடுத்த்ப்பட்டவை.
மீதம் உள்ள 5 சதவிகிதமும் காலப்போக்கில் மாறிவிடும்.
சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர், காஞ்சிபுரம் கோயிலில் யானைக்கு என்ன வகை திருமண் இடவேண்டும் ( வடகலையா தென்கலையா ) என்று ஒரு வழக்கு நடைபெற்று தீர்ப்பு வந்தது என்பதை நாம் அறிவோம்.
இந்து மதத்தின் பல பிரிவுகளுக்குள்ளும் சில தீவிர வைஷ்ணவர்களும், வீர சைவர்களும் இருந்தனர். ஆனால் இதுபோன்ற நபர்கள் அவ்வாறு இருந்ததற்கு என்ன காரணம் எனில், அவர்களின் அறியாமை மட்டுமல்ல , அன்றைய கால கட்டங்களில் நல்ல குருமார்கள் அவர்களுக்கு கிடைக்காததும் ஒரு காரணமாகும்.
திருமங்கையாழ்வார் தம்முடைய பாடலில் –
“பாருருவில் நீறேரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமாய்ப் பறந்து நின்ற
ஏறுருவில் மூவருமே என்னநின்ற விமையவர் தந்திருவுறு வேறென்னும்போது ,
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்று மாகடலுருவமொத்து நின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகளுருவந்தானே.” என்று
மிக அழகாக வலியுறுத்தி , சைவம், வைணவம் என்ற சண்டைக்கு சாவுமணி அடித்துள்ளார்.
பொய்கை ஆழ்வார் தம்முடைய பாடலில் –
“பொன் திகழுமேனிப் புரிசடையம்புண்ணியனும் ,
நின்றுலகம் தாய நெடுமாலும் – என்றும்
இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவன் அங்கத்து உளன்” .
என்று அழகாக பாடி , சைவம், வைணவம் என்ற
சண்டைக்கு சாவுமணி அடித்துள்ளார்.
இதே போல, சிவவாக்கியரும் தனது பாடலில்,
“இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலம் மான் மழு
எடுத்த பாதம் நீண்முடி எண்டிசைக்கு மப்புறம்
உடல் கடந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரே.”
என்று பாடி வைணவ சைவ ஒற்றுமையை வலியுறுத்தி உள்ளார். இனியாவது இந்த தீவீர வைஷ்ணவர்களும், வீர சைவர்களும் திருந்துவார்களா ?
ஒரே இறைவனுக்கு இது மட்டுமே அவன் பெயர், இது மட்டுமே அவன் உருவம், அல்லது அவனுக்கு உருவமே இல்லை , இது மட்டுமே வேதம் என்று சொல்லி , அளக்க முடியாத சக்தியான இறைவனுக்கு எல்லைகள் வகுக்கும் இந்த மூடர்களுக்கு நிச்சயம் கடவுள் நல்ல பாடம் கற்பிப்பார்.
நான் சமீபத்தில் கொச்சிக்கு போயிருந்தேன் அங்கிருந்து கோவை செல்லும் மெயின் ரோட்டில் ஒரு சர்ச்சில் கொடிமரமும் அதன் மேலே சிலுவையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் எப்படி எல்லாம் நம் வழிபாட்டு முறைகளை காபி அடிக்கிறார்கள் இந்த கிறித்துவர்கள்
இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா?
https://hayyram.blogspot.com/2010/06/blog-post.html
ஜாதியைச் சொல்லி இந்துக்களை ஏமாற்றுபவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்!
@ சோழன் அவர்களே,
நான் இரண்டாவது முறை மறுமொழி இட்டபோது உங்கள் மறுமொழி பிரசுரமாகவே இல்லை.
எனது கருத்துக்களை நான் தெரிவிக்கவே வந்தேன். யாரையும் கேள்விகேட்கவோ / வசை பாடவோ எனக்கு விருப்பம் இல்லை. அது அவரவர் கருத்து. அதை பதிவு செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அதில் தவறு இருந்தால்(அன்புடன்) சுட்டிக்காட்டலாம் 🙂 நீங்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்தீர் போலும். ஆசிரியர் நீக்கிவிட்டார்.
உழைத்தால் மட்டும் உணவு கிடைபதில்லை. அவன் சுரண்டப்படாமல் உழைப்புக்கேற்ற ஊதியமும் அளிக்கப்படவேண்டும்.
தலையை மெல்ல உள்ளே நுழைத்த ஒட்டகம் இன்று கூடாரத்தையே அசைக்கப்பார்கிறது . நான் சொல்ல வருவதெல்லாம் தலையை உள்ளே நுழைக்கவே நாம் அனுமதிக்கக் கூடாது என்பதுதான். இந்த திரைபடத்தில் கூட, முதலில் அடிமைளை மதம் மாற்றி பின் மெல்ல மெல்ல ஆட்சிபீடத்தில் இருப்பவர்களையும் மதம் மாற்றி நாட்டையே அபகரிக்கிறார்கள். அடிமைகளாய் அவர்கள் நடத்தப்படாமல் இருந்திருந்தால் மதமாற்றிகள் உள்ளே நுழைந்திதிருக்கவே முடியாது என்பதுதான் என் கருத்து.
ஒவ்வொரு சமூகத்திலும் நுழைவதற்கு இவர்களுக்கு ஒரு காரணம் தேவை. அது சூழலுக்கு சூழல் மாறுபட்டிருக்கும். ஆனால் நோக்கம் என்னவோ ஒன்றுதான்.
தாங்கள் ஆசிரியர் போலும், கேள்விகேட்டு பதில் வரவில்லையெனில் இத்தனை கோபம் 🙂
கடைசியாக ஒன்று, நாம் அனைவருமே பாரத தேசத்தின் நலனுக்காகவும் நம் சமூக முன்னேற்றதிர்க்காகவுமே சிந்திப்பவர்கள். நமது எண்ணங்களில் சிறு வேற்றுமைகள் இருந்தாலும் நோக்கம் ஒன்றே. ஆகவே, நமக்குள் நாம் கோபப்படுவதை விடுத்தது நாட்டு நலனுக்காக ஒற்றுமையுடன் கைகோர்ப்போம்.
வாழ்க பாரதம் !
தன்னுடைய விருப்பங்களை பிறர் மீது திணிப்பது காட்டுமிராண்டிகளின் இயல்பாகும்.
தன்னுடைய மதத்தினை பிறர் மீது திணிப்பவனும் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவன் ஆகிறான்.
எனவே, மதமாற்ற வியாபாரிகள் அனைவரும் , எங்கோ இருக்கும் அவர்களின் கடவுளால் மீளா நரக நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.
//நான் சமீபத்தில் கொச்சிக்கு போயிருந்தேன் அங்கிருந்து கோவை செல்லும் மெயின் ரோட்டில் ஒரு சர்ச்சில் கொடிமரமும் அதன் மேலே சிலுவையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் எப்படி எல்லாம் நம் வழிபாட்டு முறைகளை காபி அடிக்கிறார்கள் இந்த கிறித்துவர்கள்//
நான் சமீபத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த போது ரோட்டோரத்தில் தூரத்தில் ஒரு சிறிய கோவில் தெரிந்தது..எதோ ஒரு அம்மன் கோவில் என்று நினைத்தபோது அருகில் வந்த போது தான் தெரிந்தது அது அச்சு அசலாக கோவில் போல் , கோபுரம் , அதில் சிலைகள், அவைகள் நமது கோவில் கோபுரத்தில் உள்ளவை போலவே பெயின்ட் அடிக்கப்பட்டு இருந்த ஒரு சர்ச்சு..கோபுரத்தின் நடுவில், உச்சியில் அல்ல, ஒரு சிலுவையும் வைக்கப்பட்டிருந்தது.. இனி கோவிலைப் பார்த்து கும்பிடு போடுவதென்றால் கூட ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நன்றாகப் பார்த்தே கும்பிடவேண்டும் போல் இருக்கிறது…
எறும்பு அவர்களே,
இந்துமதத்தின் மாறா ஸ்ருதிகளாக உள்ள நூல்கள் எவையும் பிறப்படிப்படை ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தவில்லை.
சமூக அவலங்கள் அத்தனை மதங்களுக்கும் சமுதாயங்களுக்கும் பொதுவானவைதான். ஏனெனில் ஒவ்வொரு மதமும் அந்தந்த சமுதாயத்தின் அங்கங்களாக வளர்கையில் அவற்றின் சமூகவியல் கூறுகளையும் உள்வாங்கிக்கொண்டே வளர்கிறது. சமூக நியதிகள் காலம்தோறும் மாறுபவை.
சமுதாய நியதி மாறிக்கொண்டே இருப்பது என்பதால் சமுதாயத்திற்கான நீதிகளும் மாறிக்கொண்டே இருப்பவைதான். இப்படிப்பட்ட நீதி நூல்கள் இந்து தர்மத்தில் ஸ்ம்ருதிகள் (மாறக்கூடியவை) என்று கீழ்ப்படியில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்து தர்மம் போலல்லாது ஆபிரஹாமிய மதங்களின் இறை வாக்கு நூலே அவர்களது நீதி நூலாகவும் விளங்குகிறது. அதில் உள்ளவை எல்லாம் லிட்டரலான உண்மைகள் என்று சொல்வது அவற்றின் இறையியல். எனவேதான் இறையியல் அடிப்படையில் பரிணாமம் இன்றும் எதிர்க்கப்படுகிறது. குழந்தைகள் பாவத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகின்றன. தாடியின் அளவும் பாவாடையின் நீளமும் கூட வரையறுக்கப்பட்டு உண்மையான மதவானுக்காக அடையாளமாகின்றன. பெண்கள் இரண்டாம் படியில் வைக்கப்படுகின்றனர். கு-க்ளக்ஸ்-கானின் இனவெறி இறையியல் நியாயம் பெற்று விடுகிறது.
ஆபிரஹாமிய விழுமியங்களால் கட்டுண்ட சமூகம்- பரிணாமம், பூமி உருண்டை, பூமி சூரியனைச்சுற்றுவது, குடும்பக்கட்டுப்பாடு, பெண் சுதந்திரம் என்று அத்தனை அறிவியல், சமூக நிலைகளிலும் மானுட முன் நகர்தலுக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளது.
அறிவியல் சக்திகள் ஆபிரஹாமிய நூல்களை நிராகரித்து அல்லது புறம் தள்ளுவதன் மூலம் மட்டுமே இச்சமூகங்கள் மேலெழ முடிந்திருக்கிறது. அதனாலேயே இந்தத்தரப்பு கொடுமையான மதவாத எதிர்ப்பை இன்றும் எதிர்கொள்ள நேர்கிறது. ஆனால் உள்ளூரில் மதிப்பிழந்து வரும் விழுமியங்களை கீழை நாடுகளுக்கு ஜரூராக இன்று ஏற்றுமதி செய்து வருகின்றன.
ஒரே புத்தகம்- நேரடி இறை வாக்கு- லிட்டரல் உண்மைகள்- ஆகியவற்றால் சமைக்கப்பட்டமையால், சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு மதச்சாயம் பூசப்புகுந்தால் பிறப்பினடிப்படையில் ஏற்றத்தாழ்வு என்பது இந்து மதத்தை விட புத்தக மதங்களுக்கு இன்னமும் அழுத்தமாகவே பொருந்தி விடும்.
கடைசியாக, வறுமையால் ஒருவன் வீடுபுகுந்து ஒருவன் திருடுகிறான் என்றால் திருட்டுத்தொழில் நியாயமானது என்றாகி விடுமா? அல்லது சமுதாயத்தில் வறுமையை ஒழித்து விட்டு பிறகுதான் திருட்டைப்பற்றிப் பேச வேண்டும் என்பீர்களா?
குட்டை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்- அது தொடர்ந்து செய்ய வேண்டிய சுகாதார செயல்பாடு. ஆனால் இன்றைக்கு தேதிக்கு குட்டை இருக்கிறதே, என்ன செய்ய? குட்டையில் மருந்தடிக்க வேண்டும். நாமும் மலேரியா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குட்டை நீர் தேங்குவதை தடுத்தி நிறுத்தி விட்டு பிறகுதான் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவேன் என்று அடம்பிடிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
”சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடிய பாரதிதான் ”ஆயிரம் உண்டிங்கு சாதி- எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி” என்றும் கேட்டான். முன்னது நீண்ட கால விழைவு. பின்னது தற்கால செயல்திட்டத்துக்கான அறைகூவல். இந்து சமுதாயத்திற்கு இன்று வேண்டுவதும் இதுபோன்ற அணுகுமுறைதான்.
அருணகிரி.
//நான் சமீபத்தில் கொச்சிக்கு போயிருந்தேன் அங்கிருந்து கோவை செல்லும் மெயின் ரோட்டில் ஒரு சர்ச்சில் கொடிமரமும் அதன் மேலே சிலுவையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் எப்படி எல்லாம் நம் வழிபாட்டு முறைகளை காபி அடிக்கிறார்கள் இந்த கிறித்துவர்கள்////
சென்னை பெசன்ட் நகர் சர்ச்சிலும் புதிதாய் கொடிமரம் கொண்டு வரப்போகிறார்களாம்
christianity was totally based on copied half baked, half cooked version of hinduism mainly that of vaishnvavam. take the example of hindu trinity of godhood like brahma-vishnu-shiva, they changed for them to – father god- son of god- holy angel considering son of god yesus as equivalent to shiva. Hindu concept is – vishnu gave birth to brahma from his lotus flower that came out from his naval and shiva came out from the face of brahma.
christianity could not build up any image for ‘father god’ supreme god but was able to plant the theory of jesus only as ” son of god’. so who is father god in this trinity ? Even after 2000 years
they are not able to build the image of ‘ father god’. how come father god and son of god could be same .Like this, they have the figure of ‘ satan’ a black with two horns beast- which they copied from any hindu demons.
Christiantiy has no answer to ”soul’ . once their bodies is buried, where does the soul go?
they say it goes to ‘ puragatroy’ where souls are purified and wait for some time till the bodies resurrect from the buried ground once jesus apppears on the sky on his third coming.
now question arised in the mind- how come souls join in the condaminated skiltions buried in the ground for many years. even if joins , what about those non believers souls? will it stay still in purigatory? christianity itself is totally confused on souls and unable to fix up without the theory of karma, soul , deeds and final salvation which are the basis of hinduism. You will see slowly these foolish people would claim that ‘ theory of karma was invented by them long ago but missed from the bible and advocates for christianity.
How come a person could absolve the sins of people by subjecting himself to crucification in the cross bleeding blood – is he a god to save the people when he himself is unable to save the sinners for which he dies himself. what a foolish theory in this 21st century. foreigners now realise this and throwing out this religion as false and fabricated. now converts in indian due to money, girls, liquers, food, jobs, educations offered by missionaries for the sake of converting them due to their ignorant mind go for christainity with black book in hand on sundays.
Dears,
I dont know why the people who are replied ( around 80% ) here like Cats ( if they close their eyes the world become dark ).
எறும்பு & மகரமதி said is correct. recenly i went to Thirithani to my relatives home. While we were chatting outside of the home, one outsider came and asked for water. Our neighbours were asked that “which community that man belongs too”.
Even Thiruthai people doesnt like to give water to other community hindus.
Do u think thing this was cultivated by Christians / Muslims?
Some people are saying that their is no communial difference in some place, these differences were only in British India. I can show you lot of live examples please go and check the sroundings of Srivilliputhoor villages ( Koonampatti, Watrap etc….. ) other community people ( other than Brahmins ) cannot enter the temples, should not walk into the main roads, other community peoples hav different ways to enter the villages.
If they enter into main streets the Brahmins people will come & fight then they do somthing with water for purification. all these I physicaly seen while i went their for NSS programs through my collage.
for above examples also some people may say these will happen very rare occation. not only srivilliputhoor. Most of the southern tamilnadu districts i seen ( becase i dont hav much contact in northern tamilnadu )
I understood from the replies here most of you people are upper community peoples. You cant understand the other humans feelings. If u cant understand you cant solve the problem.
In christian / Muslim may hav more inter divisions but they never fought in between them ( plz dont take any rare examples ). If any problems against them they all become union. if church / Matharsa decide something everyone will follow.
Here can anyone make unity ?
Becoming prist in Temple is not possible for non Brahmin peoples. But they are expecting. Temples can adopt the instrested non brahmin childerens and teach them all rules & regultion / mantras through Matts. If the child taught by young they will follow the same. finanly they became Prist in Temple.
I know nobody will like this because some community people wants to rule others. that why the Forward community peoples are opposing the relgion conversion. they dont love their relgion / their own people by heart.
If the people staying as Hindu, Forward community peoples can rule others. but now thats not possible because of christians / Muslims.
Just writting one aricle here, typing replies and oppsoing from here wont give any outputs. I hav seen lot of Vaishnava( Iyenkar ) people wont eat even Saiva ( Iyer ) homes. why ? if some one touch the food it becomes untouchable rite?
All are humans why some people should get all libreation some people dont hav ev
Sombody may think i am belongs to secularist . but i dont care atleast one can understand what i explained……………
Excellent movie, though i haven’t seen the same, i am able to visualize the happenings with the excellent narration from the author. I have requested to one of our friend for the CD/DVD. If any one has the same please mail me @ rprasad79@gmail.com
This is responding to //Vishal, 11 July 2011 at 5:20 pm//.
1.Some people, may be large in number, might have hesitated to give drinking water to the thirsty. But the question is, ” Whether Hinduism preaches such things”.
2.May the other Caste people not be allowed to walk on a public road. Here is also the same question rising. ” Whether Hinduism preaches such things”.
3.The Christians and Muslims follow the decisions of the Church and Madharasa. Who told this not true? The problem is, most Hindus are not following any of the religious Organisations. But the cruelty is this, that this has been taken granted by others.
4.In Hinduism, numerous temples have non-Brahmin priests. Unfortunately this is not focussed. Moreover, if one is a priest, then he becomes a Brahmin.
5.It is true that many of the people of forward community dislike their own people. But their are Brahmins only in your view. One who loves others and show way for other people’s liberation is only Brahmin. This is in the view of Hinduism.
6.One cannot compel any other to take food touched by someone else. It is against hygiene. Here is no Saiva/Vaishnava or any other arguements. With polythene gloves in hands, you see the food served in restaurants. Are the servers untouchable? Where, when, how and which to take as food is highly personal.
And finally Sir, Difference is reality. Some play cards with this reality and grow their wealth. But many lose themselves because of the false propaganda. Here is no doubt that this (Your) letter does not dare that all miseries prevailing in the society are because of Hinduism. Please try to have links with Sri Ramakrishna Movement or any other real Hindu Organisations to know “What is Hinduism”
01. ரொம்ப நாளாக குடைகிறது. கேட்டே விடுகிறேன். அது என்ன “இறுதிப்” பெண் ?
02. ரோம ராஜ்ஜியாதிபதியால் உருவாக்கப்பட்ட மதவெறி அமைப்பு, க்ரேக்க கலாச்சாரத்தைப் பூண்டோடு அழிக்கப் பயன்பட்டது என்றும் இவ்வரலாற்றைப் பார்க்கலாமா ?
03. முதன்முதலாக மதக் காரணங்களுக்காக அழிக்கப்பட்ட நூலகமாக இந்த வரலாற்றுப் பதிவை எடுத்துக் கொள்ளலாமா? அல்லது இதற்கும் முன்பாக மதக் காரணங்களுக்காக இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளனவா?
04. அப்போதைய ரோம அரசன் தியோடோஸியஸின் பண மற்றும் அரசியல் உதவிகள், தியோஃபிலியஸுக்கு வழங்கப்பட்டு மதவெறி அமைப்பை விரிவாக்கப் பயன்பட்டது என்று கொள்ளலாமா?
கீலே உள்ளதை சொடுக்கி பதிவிரக்க செய்து திரைபடத்தை பார்கவும்.
links
https://www.mediafire.com/file/hhjetoxvagx/Agora.2009.BRRip_300mbfilms.com.mkv.001;
https://www.mediafire.com/file/hwojt17tm9i/Agora.2009.BRRip_300mbfilms.com.mkv.002;
https://www.mediafire.com/file/0ynylutmzj2/Agora.2009.BRRip_300mbfilms.com.mkv.003;
https://www.mediafire.com/file/dyme4sxxnpj/Agora.2009.BRRip_300mbfilms.com.mkv.004;