கபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை

முன்னுரை

kapil-sibalமார்ச் 15, 2010ல் மத்திய அரசின் அமைச்சரவை ஒரு வரலாற்று முக்கியத்துவமான முடிவிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலும் தங்கள் கல்விப் பணியை ஆரம்பிக்கவும் பட்டங்களை வழங்கவும் முடியும் என்பதுதான் அது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் இது சட்ட வடிவம் பெறும்.

பொதுவாகவே இந்தியக் கல்வி நிலையையும், குறிப்பாக உயர்கல்வியில் இந்திய அரசு செய்ய முற்படும் சீர்திருத்தங்களையும் அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாம் முறையாக கடந்த 2009ல் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக திரு.கபில் சிபல் பதவியேற்றார். அந்நேரத்திலேயே அவர் பிரதமரின் நேரடித் தேர்வு எனவும், இந்திய கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறார் என்றும், குறிப்பாக அந்த முயற்சிகளுக்கு பிரதமரின் முழு ஆதரவும் உண்டு என்றும் கூறப்பட்டது.

இந்தப் பின்புலத்தைப் பொய்யாக்காமல் திரு.கபில் சிபல் கடந்த வருடம் மட்டும் 10 புதிய கல்வித் துறை சீர்திருத்தங்களை அறிவித்திருக்கிறார்.

 • 6-லிருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமையாக்கப்படும்.
 • இன்று இந்தியா முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின் நூற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகள் உள்ளதை மாற்றி ஒரே நுழைவு தேர்வு ஏற்படுத்தப்படும்.
 • பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின் ஒரே நுழைவுத் தேர்வு என்பதற்கு ஏதுவாக அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்கள் இந்தியா முழுவதும் எல்லாக் கல்வி முறைகளிலும் ஒன்றாக மாற்றப்படும்.
 • உயர்கல்வியில் உள்ள இடத் தட்டுப்பாட்டை அகற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தொடங்க அனுமதிக்கப்படும்.
 • CBSE கல்வி முறையில் இன்று வழக்கில் உள்ள 10ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைமுறை நிறுத்தப்பட்டு Grade System ஆரம்பிக்கப்படும்.
 • அரசாங்க உதவி இல்லாமல் இயங்கும் எல்லாப் பள்ளிகளிலும் (Un-aided Private Schools) 25 சதவிகித இடங்கள் அப்பள்ளியைச் சுற்றி வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
 • கல்வி நிலையங்களை தரப்படுத்த ஒரு வாரியம் அமைக்கப்படும். (National Accredition Body)
 • புதியதாக 6 IIM’s உருவாக்கப்படும்.
 • குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள தற்சமயம் தனியார் பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் குழந்தை மற்றும் பெற்றோருக்கான நேர்முகத் தேர்வுகள் செல்லாததாக்கப்படும்.
 • National Commission for Higher Education and Research (NCHER) என்னும் அமைப்பு உருவாக்கப்படும். இந்த அமைப்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் முறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும். இன்று நடைமுறையில் இருக்கும் துணை வேந்தர்களை நியமிக்கும் முறையில் ஏற்படும் லஞ்சம் மற்றும் தரம் குறைந்தவர்களை நியமிக்கும் போக்கு ஆகியவை சீர்செய்யப்படும்.

 

இவற்றைத் தவிர திரு.கபில் சிபல், தான் உண்மையாகவே கல்விச் சீர்திருத்தங்களில் அக்கறையுடன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். மத்திய கேந்திரிய வித்யாலயா பள்ளிக் கூடங்களில் மனித வள மேம்பாட்டு அமைச்சர் 1200 மாணவர்களை சிபாரிசு செய்யலாம். தவிரவும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தலா 2 மாணவர்களை சிபாரிசு செய்ய முடியும். இந்தச் சிபாரிசு முறைகளை மொத்தமாக திரு.கபில் சிபல் நீக்கியிருக்கிறார்.

மேற்கூறிய அறிவிப்புகள் 2009ஆம் வருடத்தில் கபில் சிபல் பதவி ஏற்றதிலிருந்து இது வரையில் வெளியிடப்பட்டவை. ஒவ்வொரு அறிவிப்பும் வந்தவுடன் அதை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் ஊடகங்களில் காரசாரமாக விவாதித்துக் கொள்வார்கள். அந்தச் சூடு அடங்குவதற்கு முன்னரே அடுத்த அறிவிப்பு வந்துவிடும்.இந்தப் புதிய வியூகத்தை கபில் சிபல் மிக அருமையாகக் கையாண்டு வந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க இந்த அறிவிப்புகள் வரத்தொடங்கியவுடன் வேறு சில குரல்களும் சில மாநிலங்களிலிருந்து கேட்கத் தொடங்கியுள்ளன.

உதாரணமாக,

* கல்வியை அரசியல் சட்ட Concurrent List-லிருந்து State List-க்கு மாற்ற வேண்டும். அரசியல் சட்டத்தின்படி State Listல் உள்ள விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலத்திற்கு உண்டு. Concurrent List என்றாலோ அது மத்திய மற்றும் மாநில அரசுக்குப் பொதுவானது. ஆனால் நடைமுறையில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் உண்டு. இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கல்வி State List-ல் தான் இருந்திருக்கிறது. எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தியால் கல்வி, மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டது.

* 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தகுதி இல்லாதவை என்று மத்திய அரசால் இனங்காணப்பட்டுள்ளன. இதற்கான வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த 44 தகுதியிழந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டில் உள்ளவை மட்டுமே 16. இவை பெரும்பாலும் அரசியல் பின்புலம் உள்ளவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

நான் ஒரு கல்வியாளன் இல்லை என்னும் உண்மையை கருத்தில் கொண்டு, என்னால் இந்த மாற்றம் ஒவ்வொன்றிலும் உள்ள சாதக பாதகங்களை அலச முடியாது என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

 

நாம் மறக்கக் கூடாத புள்ளி விபரங்கள்

 • இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடிகள்.
 • மத்திய அரசின் அதிகாரபூர்வ கணக்குகளின் படி, 65 கோடி மக்களின் தினப்படி வருமானம் வெறும் 20 ரூபாய்கள்.
 • மத்திய அரசின் அதிகாரபூர்வ கணக்குகளின் படி, 30 கோடி மக்கள் ஏழ்மைக்கும் கீழ்நிலையில் வசிக்கிறார்கள் (BPL-Below Poverty Line).
 • 2007ம் வருடம் மத்திய அரசின் NCERT என்ற அமைப்பு அரசுப் பள்ளிகளில் நடத்திய ஆய்வின்படி, ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 60 சதவிகித மாணவ, மாணவிகளால் இரண்டாம் வகுப்புப் புத்தகத்தின் பாடங்களைக் கூடப் படிக்க முடியவில்லை. அவர்களால் 2 மற்றும் 3ஆம் வாய்பாட்டைக் கூற முடியவில்லை.
 • அரசுப் பள்ளிகளில் 30 சதவிகித ஆசிரியர் தட்டுபாடு உள்ளது. வேலை செய்வோரிலும் 40 சதவிகிதம் பேர் வேலைக்கு ஒழுங்காக வருவதில்லை.
 • மாணவிகள் படிக்கும் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் சரியாக இல்லை.
 • 65 சதவிகித நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம் போன்றவை இல்லவே இல்லை அல்லது செயல்படும் நிலையில் இல்லை.
 • Confederation of Indian Industries (CII) மற்றும் Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)யின் படி இந்தியாவில்
  படித்து முடித்த பட்டதாரிகள் மற்றும் தொழிற் கல்வி பயின்றவர்களில் 80 சதவிகிதம் பேர் தொழில்துறை வேலைகளுக்குத் தகுதி இல்லாதவர்கள். அதாவது Not Employable.

 

மேற்கூறிய புள்ளிவிபரங்களின்படி நம் நாட்டின் கல்வி எந்த நிலையில் உள்ளது என்பதையும், குடும்பப் பொருளாதாரம் குழந்தைகளின் கல்வியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கத்தையும் எளிதாகவே அறிந்துகொள்ளலாம்.

மேற்கூறிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஏதேனும் நிவாரணம் உள்ளதா?

ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் ஒருவர், தான் Medical Representative ஆக மாறிவிட்டதாகவும் எல்லோருக்கும் இலவசமாக மருந்துகளை கொடுக்கப் போவதாகவும் ரீல் விட்டுக் கொண்டிருப்பார். அங்கு வரும் ஒருவர் தனக்குள்ள வியாதிகளைப் பட்டியலிடுவார். ‘மூலம்’ இருப்பதால் தன்னால் உட்கார முடியாது என்றும், ‘கால் ஆணி’ இருப்பதால் நடக்க முடியாதென்றும், கண்ணில் மாலைக்கண் நோய் உள்ளதென்றும், காது கேட்காதென்றும், TB போன்ற வியாதிகள் உள்ளதென்றும் கூறிவிட்டு ஒரே ஒரு மருந்தைக் கேட்பார். அந்த மருந்தினால் தன்னுடைய அனைத்து வியாதிகளும் தீர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்வார். நம் நகைச்சுவை நடிகர் அவருக்கு எலி பாஷாணம் கொடுப்பதாக அந்தக் காட்சி முடிவுறும்.

education1இந்தியக் கல்வியின் நிலை கிட்டத்தட்ட இந்த நிலையில்தான் உள்ளது. இந்தியாவில் இன்றுள்ள பல பிரச்சினைகளுக்கு மூல காரணம் ஏழைமை என்பதும் அதற்கும் மூல காரணம் மக்கள்தொகைப் பெருக்கம் என்பதும் நம் எல்லாருக்கும் தெரியும். இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே மருந்தாக மக்கள்தொகையை நம்மால் குறைக்கவும் முடியாது. ஏழைகளை நடுத்தர வர்க்கமாக உடனடியாக மாற்றவும் முடியாது.

மிகவும் சிக்கலான கல்வி நிலை; தீர்வும் சிக்கலாகவே இருக்கும். எல்லோருக்கும் பொதுவான நுழைவு தேர்வு ஏற்படுத்துவது தமிழகக் கட்சிகளுக்கு ஒவ்வாதது. கிராம மாணவர்களால் பொதுத் தேர்வில் சோபிக்க முடியவில்லை என்பதால் நுழைவுத் தேர்வு இங்கு நிறுத்தப்பட்டது. துணை வேந்தர்கள் நியமனம் என்பது அரசியல் சார்பாக மாறி பல யுகங்கள் ஆகி விட்டன. அதில் லஞ்சம் பெருகியிருப்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. மேற்கூறிய 10 அறிவிப்புகளில் தமிழகத்தில் சிலவற்றிற்கு எதிர்ப்பு, வேறு மாநிலங்களில் வேறு சிலவற்றிற்கு எதிர்ப்பு என்பதான மிகவும் குழப்பமான சூழ்நிலை தற்போது நிலவுகிறது.

மிகவும் குழப்பமான, அரசியலில் சாமர்த்தியமாக காயை நகர்த்த வேண்டிய நேரங்களில் தலைவர்கள் விதவிதமான நிலைகளை எடுப்பார்கள்.

* அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்தல் வாக்குறுதியாக எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குவேன் என்று கூறியிருந்தார். குறிப்பாக தனக்கு செனட்டர் பதவி கொடுத்திருக்கும் மருத்துவக் காப்பீட்டை போன்றே அமெரிக்கர்கள் அனைவருக்கும் அளிப்பேன் என்று உறுதி அளித்தார். பதவி ஏற்றவுடன் மருத்துவச் சீர்திருத்தத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பால் 95 சதவிகித அமெரிக்கர்களுக்கு மட்டும், அதுவும் தனியார் துறையின் மூலமே காப்பீடு வழங்குவேன் என்று கூறி வருகிறார். அதுவும் இன்னும் சட்டமாக்கப் படவில்லை. இது ஒரு முறை. பெரிய அளவில் உறுதி அளித்துவிட்டு ஓர் அளவோடு நிறுத்தி கொள்வது.

* சில தலைவர்கள் பெரிய உறுதி எதுவும் செய்யாமல் Status Quoவையே தொடர்வார்கள். இதனால் எதிர்ப்பு கிளம்பாதென்றாலும் வளர்ச்சியும் இருக்காது. பெரும்பாலான தலைவர்கள் இம்முறையையே கையாள்வார்கள்.

மேற்கூறிய முறைகளைக் கையாளாமல் திரு.கபில் சிபல் புதிய முறையை இந்த கல்விச் சீர்திருத்தத்தில் கையாண்டுள்ளார். கல்விப் பிரச்சினையை பத்தாகவோ பதினைந்தாகவோ கூறுபோட்டு சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார். எல்லோராலும் எல்லாத் திருத்தங்களையும் எதிர்க்கவும் முடியாது. ஆதரிக்கவும் முடியாது. ஒவ்வொரு மாநிலமும் சில சமாதானங்களுக்கு வந்தாக வேண்டும். குட்டையைக் குழப்பி விட்டார். கோமேதகம் கிடைக்காமல் போகலாம். கண்டிப்பாக அழுக்கும் கிடைக்காது. நடுவான ஒரு வகைச் சீர்திருத்தம் கிடைக்கும்.

 

பெரும்பாலானோர் கூறும் 8 சதவிகித நிதி ஒதுக்கீடு

பெரும்பாலான கல்வியாளர்கள் இந்திய பட்ஜெட்டில் 8 சதவிகிதம் கல்விக்கு ஒதுக்குவது அவசியம் என்ற ரீதியில் கருத்து கூறுவதை கேட்டிருப்பீர்கள். இதை ஒரு சிறிய அட்டவணையின் மூலம் நோக்கலாம்.

கீழே கூறப்படும் புள்ளி விபரங்கள் 1ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே எடுக்க
பட்டுள்ளது.

Table

 

 education-reformsஇங்கு இன்னொரு விஷயமும் கருத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் 5 கோடி குழந்தைகளின் எண்ணிக்கையையும் இந்தியாவில் உள்ள 12 கோடிக் குழந்தைகளின் எண்ணிக்கையையும் யோசித்தால் நாம் பொருளாதார ரீதியில் செல்ல வேண்டிய தூரம் புலப்படும். ஒரு குழந்தைக்கு 4.5 இலட்சம் ரூபாய் இங்கு தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் இருக்கும் பணத்தில் எல்லோருக்கும் கல்வி கொடுக்க முடியும். ஆனால் தரமான கல்வி கொடுக்க முடியுமா?

அமெரிக்கக் கல்விக் கட்டமைப்புகளை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்வதாக (கற்பனையில்தான்) வைத்து கொள்வோம். 12 கோடிக் குழந்தைகளுக்கும் தேவையான பள்ளிக் கட்டிடங்கள், ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், குறிப்பாக கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், 12 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்றால் தேவைப்படும் ஆசிரியர்கள், நவீன காலத்தில் தேவைப்படும் கணினிகள் போன்றவற்றைக் கணக்குப் போட்டால் (கணக்குப் போடுபவருக்கு சத்தியமாக தலை சுற்றும்.) நமக்கு பல இலட்சம் இலட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்பது தெளிவு.

மேற்கூறிய புள்ளி விபரங்களின்படி நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இதுதான். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். இந்தியாவில் பணம் இல்லை. கண்டிப்பாக இல்லை. ஒங்கொப்புரானே சத்தியமாக இல்லை. இந்த யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு மேலே செல்வோம். மற்றொரு விதத்தில் Blunt Truthஆக வெளிப்படையாகக் கூறுவதென்றால் எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி என்பது இன்னும் 50 வருடங்களுக்காவது கற்பனையிலே மட்டும்தான் சாத்தியம்.

சரி. அதற்காக மூலையில் முடங்கி விட வேண்டுமா? நம்மிடம் உள்ள பணத்திற்கு ஏற்ற வகையில் கல்வியை சீர்திருத்தி அதனாலேயே பொருளாதார நிலையில் முன்னுக்கு வர முயற்சி செய்வதுதானே அறிவாளிக்கு அழகு. பொருளாதார நிலை மேம்பட மேம்பட அந்தக் குடும்பத்தின் குழந்தைகளின் கல்வி நிலையும் தன்னாலேயே முன்னேறி விடும். ஆனால் இது நடக்க சில தலைமுறைகள் ஆகத்தான் செய்யும்.

 

கல்வியின் நோக்கம்

நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு தலைமுறை தன்னிடம் சேர்ந்துள்ள அறிவு, திறமை மற்றும் கோட்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பிக்கும் முறையே கல்வியின் நோக்கமாகும்.

புத்திசாலிகள் தரம்பிரிக்க படவேண்டும்: சரி, கல்வியின் நோக்கம் ஒருபுறம் இருக்கட்டும். நடைமுறையில் கல்வி எவ்வாறு கையாளப்பட வேண்டும்?

ஒவ்வொரு சமூகத்திலும் வெகு சிலர் பிறப்பிலேயே புத்திசாலிகளாக இருப்பர். சிலர் விடா முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் ஒரு துறையில் சோபிப்பர். பலர் நடுவான அறிவுடையவர்களாகவும் சிலர் குறைந்த அறிவுள்ளவர்களாகவும் இருப்பர். ஒரு சமூகம் அல்லது ஒரு நாடு முன்னேற புத்திசாலிகள் கண்டிப்பாக தரம்பிரிக்கப் படவேண்டும். மற்றும் அவர்களுக்கான வசதி, வாய்ப்புகள் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்ததாக அமைவதும் மிக அவசியம். புத்திசாலிகளின் பங்களிப்பினாலேயே ஒரு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற முடியும். இந்தியா போன்ற மக்கள்தொகை அபரிமிதமாக உள்ள நாடுகளில் இந்த வகை புத்திசாலிகளினாலேயே பொருளாதாரம் உயர்ந்து அதனாலேயே மேலும் பலருக்கு சாதாரண நிலைக் கல்வியையாவது அளிக்க முடியும்.

நம் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் எல்லோருக்கும் தரமான கல்வியை அளிக்க முடியாது என்றாலும் நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளைக் கலைவது மிகவும் அவசியம். முக்கியமாக இக்கட்டுரைக்கு விஷயமான உயர்கல்வியில் நம் நிலை மோசமாகவும் இல்லை. இதற்கான உதாரணமாக நமக்குக் காட்டப்படும் IIT, IIM மற்றும் IISc போன்றவற்றின் நம்பகத்தன்மை. அதே நேரத்தில் CII போன்ற அமைப்புகளின்படி இந்தியாவிற்குத் தேவைப்படும் தகுதியுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதைச் சரிசெய்ய நாம் ஒன்று, புதிய தகுதிவாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்க வேண்டும்.

 

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்பு-விமர்சனங்கள்

left-assails-education-reforms_cartoon-manjulஎந்தவொரு சீர்திருத்தத்துக்கும் முதலில் எதிர்ப்பு கிளம்புவது புரிந்துகொள்ளக் கூடியதே. நாம் கம்யூனிஸக் கிறுக்கர்களால் ஆளப்படவில்லை என்றாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஜனநாயகம் இங்கு இருப்பதால் எதிர்ப்பு என்று ஒன்று இல்லாமல் இங்கு எந்தச் சீர்திருத்தத்தையும் செய்ய முடியாது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.பி.சி தமிழ் ஓசைக்கு அளித்த பேட்டி மற்றும் ஊடகங்களில் தோன்றும் விமர்சனங்களை ஒட்டியும், அவற்றிற்கான என் பதிலும் இப்பகுதியில் இடம்பெறுகிறது.

1. பணக்காரர்கள் மட்டுமே இவ்வகைப் பல்கலைக்கழகங்களில் படிக்க முடியும்.

ஒப்புக்காக இதை ஏற்றுக் கொண்டாலும் இதனால் இந்தியாவிற்கு லாபமே. இன்று பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளை ஆஸ்திரேலியாவிற்கும் கனடாவிற்கும் அனுப்பிப் படிக்க வைப்பதால் இந்தியப் பணம் வெளி நாடுகளுக்குதான் செல்கிறது. அங்கு சென்று நம் மாணவர்கள் அடி வாங்கவும் வேண்டாம். கல்விக்கடன், கல்வி உதவி நிதி (Scholarship) போன்றவை இந்தியாவில் வந்து விட்டதால் முழுவதுமாக பணக்காரர்களுக்கான கல்லூரிகள் என்று முத்திரை குத்த முடியாது. காலப்போக்கில் தகுதி பெற்ற ஏழை மாணவர்கள் கண்டிப்பாக இவற்றில் படிக்கும் சூழல் வரும்.

2. இந்தியக் கல்லூரிகளிலிருந்து தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இந்தப் புதிய பல்கலைக்கழகங்களுக்குச் சென்று விடுவார்கள்.

ஆமாம்; உண்மைதான். இந்த நிலையை இந்தியப் பல்கலைக்கழகங்கள் சந்தித்துதான் தீர வேண்டும். சில காலங்கள் கழித்து நிலைமை சீரடையும். தகுதிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற மனநிலையும் நமக்கு ஏற்படும்.

3. இது போன்ற பல்கலைக்கழகங்களை நம்மாலேயே உருவாக்க முடியும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. IIT, IIM, IISc போன்றவற்றை நாம் உருவாக்கி இருந்தாலும் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதிலிருந்தே நம் நிலை தெரிகிறது. அதுவும் அந்த அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டதிற்கான காரணங்கள் நாம் இன்னும் பல மைல் பயணிக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.

4. வெள்ளைப் பேராசிரியருக்கு ஒரு சம்பளம், இந்தியப் பேராசிரியருக்கு ஒரு சம்பளம்.

ஆமாம். அப்படித்தான் ஆரம்பமாகும். சீனாவில் 1977ற்குப் பிறகு வெளிநாட்டுப் பேராசிரியர்களை சீனா பெருமளவில் தருவித்தது. அவர்களுக்குத் தரப்பட்ட சம்பளம் சீனப் பேராசிரியர்களை சங்கடப்படுத்தியது. ஆனால் வெள்ளையர்களின் அனுபவத்தை நம் மாணவர்கள் கற்க இது போன்ற நிலைகளை சந்தித்துதான் தீரவேண்டும்.

5. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் பணத்தைச் சுருட்டிகொண்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் கல்விப் பணி செய்ய இங்கு வரவில்லை. வியாபாரத்திற்குதான் இங்கு வருகிறார்கள். இந்திய உயர்கல்வி அமெரிக்காவால் வழி நடத்தபடும்.

ஆஹா இவர்களுக்கு என்னவொரு தீர்க்க தரிசனம். இது போன்று கூறுபவர்கள் யார்? இவர்களிடமிருந்து 60 வருடங்களாக நாம் கேட்டுக் கேட்டுப் புளித்து போன கோஷங்களை பார்ப்போமா!

“ரஷ்யாவைப்பார், சீனாவைப்பார்”

“அமெரிக்க ஏகாதிபத்தியம்”

இந்த சோஷலிஸ்ட் பிதற்றல்களை இன்னும் எவ்வளவு காலத்திற்குதான் பொறுத்து கொள்வது? இங்கு பல்கலைக்கழகங்கள் நடத்துபவர்கள் கல்வி சேவை செய்கிறார்களாம்! வெள்ளைகாரன் வந்தால்தான் வியாபாரமாகுமாம்!.

6. புதுப் பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டங்கள் அந்தந்த நாட்டிற்கு ஏற்றபடிதான் இருக்கும். ஆகவே படித்தவுடன் மாணவர்கள் எந்த நாட்டுப் பல்கலைக்கழகத்தில் படித்தார்களோ அந்த நாட்டிற்குதான் செல்ல வேண்டியிருக்கும்.

இதுவும் ஒரு முன்அனுமானம். பதில் கூறக் கூட தகுதியில்லாத விமர்சனம். முற்றாக நிராகரிப்போம்.

7. நம் பல்கலைக்கழகங்களில் இருக்கும் குறைகளைக் களைந்துவிட்டால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் தேவை இருக்காது.

கட்டமைப்புகள், ஆசிரியர்களின் தரம், கல்வி கற்பிக்கும் முறைகள் போன்றவற்றையெல்லாம் மாற்றுவது கற்பனையில்தான் நடைபெறும். கட்டமைப்பு என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒருமுறை அமெரிக்காவில், அரசு பள்ளிக்கூடம் ஒன்றில், 3ம் வகுப்பு மாணவர்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்கள். நாம் செய்தியை விட்டு விடுவோம். அந்த 3ம் வகுப்பு அறை நம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்லூரி அறையை விட வசதியாக இருந்தது. குழந்தைகளுக்கு இருந்த நவீன இருக்கை மற்றும் மேஜைகள், ஆசிரியருக்கு இருந்த உபகரணங்கள் (Electronic Touch Screen, கணிணியைக் கொண்டே கற்பிக்கும் முறை) போன்றவற்றை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

8. புதிய பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு வேலை உத்திரவாதம் இருக்காது.

அப்பாடா! இப்பொழுதுதான் இவர்களின் உண்மையான சொரூபம் தெரிகிறது. கடமை என்பதை மறந்து உரிமைக்கு மட்டுமே போராடும் இவர்களின் யூனியன் டம்மியாகி விடும். இன்று இந்தியாவிலேயே இருக்கும் தனியார் கம்பெனிகளில் இருக்கும் சட்ட திட்டங்கள் இந்தப் புதிய பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும். இவர்களைப்போல் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான ஆர்பாட்டம் எதையும் செய்ய முடியாது.

9. புதிய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு இருக்காது.

ஆமாம். சட்டத் திருத்த மசோதா இப்படித்தான் கூறுகிறது. இந்து சமூகத்தையே பெரிய அளவில் ஜாதி ரீதியாகப் பிரித்திருக்கும் இது அவ்வளவு எளிதாகக் கருத்து கூறும் விஷயமில்லை. ஆனால் ஒன்றைக் கூற முடியும். இட ஒதுக்கீட்டை அனுசரிக்க நாம் வற்புறுத்தினால் எந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகமும் இங்கு வராது.

10. இந்திய வரலாற்றைத் திரித்துக் கூறும் பாடத்திட்டத்தை அனுசரிப்பார்கள்.

ம்ம்ம். இது சுவையான விஷயம். இதைச் சிறிது விவரமாக பார்ப்போம். முதலில் வரலாற்றை இந்து மற்றும் மற்றவர்களின் வரலாறு என்பதாகப் பிரித்து கொள்வோம். இந்து என்பவன் எக்கச்சக்கமாக இளிச்சவாயனாக இருப்பதால் 150 வருடங்களாக நம் வரலாற்றை திரித்துதான் கூறிவருகிறார்கள்.  இந்தியா காலனியாக இருக்கையில் நம் வரலாறு எவ்வாறு எழுதப்பட்டதோ அதைத்தானே நாமே இன்றுவரை பின்பற்றி வருகிறோம். ஆகவே இந்து வரலாற்றில் ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. இன்று இருப்பதே தொடரப்போகிறது. இன்னொரு வகையில் கூறுவதானால்
இந்து வரலாற்றை எழுதியவனே நம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப் போகிறான்.

ஆனால் இதை விமர்சிப்பவர்கள் இந்துக்களின் வரலாற்றை இங்கே கூறவில்லை. முகலாயர்களின் வரலாற்றைப் பற்றிதான் கூறுகிறார்கள். இணையத் தளம் ஒன்றில் ஒரு பேராசிரியர் இதைக் கூறியிருக்கிறார். அவர் கூறுவதிலிருந்தே முகலாயர்களின் வரலாற்றை இந்தியப் பாடத்திட்டங்கள் ஒருவிதமாகவும், வெள்ளையர்களின் பாடத்திட்டங்கள் வேறு விதமாகவும் சித்தரிக்கின்றன என்பது தெரிகிறது.

அக்பரின் வரலாறு எனக்கு ஞாபகம் வருகிறது. முதலில் நான் இதை அறிந்தது ‘Israel National Radio’வில் அடிக்கடி பேசும் ‘Andrew Bostom’ என்பவரிடமிருந்துதான். இவர் அக்பரின் வரலாற்றை இரண்டாகப் பிரித்துக்கொள்வார். அக்பருக்கு 40 வயது ஆகும்வரை அவர் கடும் இஸ்லாமியவாதியாகவே இருந்துள்ளதாகவும் 40 வயதிற்குப் பின்னரே மதசார்பற்றவராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதாகவும் கூறினார். அதாவது அக்பருக்கு 40 வயது ஆகும் வரை இந்துக்களை, “மதம் மாறு அல்லது செத்து மடி” என்ற முறையில் நடத்தியதாகவும், பெரும்பாலானோர் சாவதை விரும்பியதைக் கண்டதால் தன்னுடைய உத்திகளை மாற்றிக் கொண்டதாகவும் ஆண்ட்ரு போஸ்தம் கூறுகிறார். 40 வயதிற்குப் பின் அக்பர் இந்துக்களை “மதம் மாறு (அல்லது) உன்னுடைய மதத்திலேயே இரு; ஆனால் இஸ்லாமிய நாட்டில் வாழ்வதற்கான வரியைக் கட்டிவிடு (அல்லது) செத்து மடி” என்ற முறையில் நடத்தியிருக்கிறார். இதே நடையில் ஆண்ட்ரு போஸ்தம் வேறு சில முகலாய மன்னர்களின் வரலாற்றை நிறுவுகிறார்.

இந்தப் பேட்டியைக் கேட்டவுடன் நம் வரலாற்றுப் பாடங்கள் திருத்தப்பட வேண்டும் என்பது புரிகிறது. உண்மையான முகலாயர்களின் வரலாற்றை வெள்ளையர்கள் படித்து வருகிறார்கள் என்பதும் புரிகிறது. ஐந்தாம் வகுப்புக் குழந்தைக்கு இதைச் சொல்லிக் கொடுத்து பிஞ்சு உள்ளத்தைக் குழப்பவேண்டியதில்லை என்றாலும் B.A, M.A வரலாறு படிக்கும் மாணவர்கள் இப்படித்தானே படிக்க வேண்டும். வரலாற்றுப் பாடத்திட்டங்கள் நமக்கு இருக்கும் ஆதாரங்களை வைத்துக்கொண்டு விருப்பு வெறுப்பின்றிதானே அமைக்கப்பட வேண்டும். அக்பரை மதசார்பற்றவர் என்று நிறுவதற்காகவே பாடத்திட்டங்கள் அமைக்கப்படுவது எவ்வளவு கொடுமை? சிறுபான்மையினர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தும் என்பதற்காக B.A மற்றும் M.A படிக்கும் மாணவர்களுக்கு தவறான வரலாற்றை பயிற்றுவிப்பது எப்படிச் சரியாகும்?

இப்பொழுது வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தைப் பற்றின விமர்சனத்தின் நோக்கம் புரிகிறதல்லவா! இந்த ஒரு விஷயத்திற்காகவே நாம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்கலாம். அவர்கள் வந்தாவது நாம் படிக்கும் இந்திய வரலாற்றின் சில பக்கங்கள் திருத்தப்படட்டுமே!

 

முடிவுரை

திரு. கபில் சிபல் அறிவித்த 10 கட்டளைகளில் சிலவற்றைக் கைவிட நேரிடலாம். சிலவற்றை மாற்ற வேண்டி வரலாம். Idealismஐ பேசிக்கொண்டு idleஆக இருக்கப்போகிறோமா? அல்லது முன்னேற்றப் பாதையை வகுத்துக் கொண்டு, நடுவில் ஏற்படும் தடைகளை ‘Course Correction’ செய்து கொண்டு பயணத்தைத் தொடரப் போகிறோமா?

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதனாலேயே இந்திய உயர் கல்வி சீராகி விடாது. Allopathy Medicineல் கூறுவதைப் போன்று ‘Benefits outweigh Risks’ என்னும் வாசகம்தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் சீரமைப்பிற்கு இதுவும் ஒரு காரணியாக கண்டிப்பாக அமையும் என்பதனால் இதை முழு மனதுடன் வரவேற்போம்.

அன்பு அதிகமானால் ஒருமையில் அழைப்பது தமிழ் மரபு. இதன் அடிப்படையில் திரு.கபில் சிபல் அவர்களுக்கு நான் கூற விரும்புவது…

kapil-sibal2“உன் மனமார்ந்த முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்கள். எனக்குக் கிடைக்காத வாய்ப்புகள் என் அடுத்த தலைமுறை இந்தியனுக்குக் கிடைக்க முயற்சிக்கிறாய். உன்னையும், என்னை போன்றவர்களையும் அமெரிக்கக் கைக்கூலிகள் என்று அழைப்பார்கள். அப்படி அழைத்தாலும் பரவாயில்லை.

என்னால் ஒப்புக்கொள்ள முடியாத கொள்கைகளை உடைய கட்சியில் இருக்கிறாய். ஆனாலும் இன்று ஒப்புக்கொண்டாக வேண்டிய யதார்த்த முடிவுகளை செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறாய். கல்வியில் சீர்திருத்தங்கள் ஆரம்பமாகட்டும். “அமெரிக்க ஏகாதிபத்தியம்” என்று வீராப்புடன் 60 வருடங்கள் வீணடித்தது போதும். இந்தச் சீர்திருத்தம் 10,15 ஆண்டுகளில் நம் சமூகத்தையும் நாட்டையும் கண்டிப்பாக மேல்நிலைக்குக் கொண்டு செல்லும்.

உன் தலைவனுக்கும் இதே நிலை வந்தது என்பது ஞாபகம் இருக்கிறதல்லவா! 1991ல் Balance of Payment Crisis வந்தபோது இந்தியாவின் பொருளாதாரப் பாதையை மாற்ற முற்படும்போது அவரும் இதைப் போன்ற எதிர்ப்புகளைத் தாண்டினாரல்லவா!

நீ நினைவில் நிறுத்த வேண்டிய ஒரே விஷயம்- வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நெறிப்படுத்த SEBI, IRDA போன்ற தனியாட்சி கொண்ட நெறிபடுத்தும் அமைப்பை மட்டும் மறக்காமல் உருவாக்கி விடு.

நீ வாழ்க பல்லாண்டு!”

18 Replies to “கபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை”

 1. தமிழ் இந்துவில் முற்றிலும் மாறுபட்ட கட்டுரை. பதிவிற்கு பாராட்டுக்கள்.

 2. In respect of arts like painting,dance, music, jewelery etc and sports Gurukulam system should be encouraged

  Under Gurukulam System, the students and eminent Gurus live together in a serene atmosphere of tolerance and traditional values as a joint family under the guidance and directions of the Guru and his family.
  Gurukulam education is very interesting and very useful to the students not alone to study from the teachers. It is the method where the students could learn good qualities and characters as well as the works given by Guru which is essential for the students.

 3. இப்போதே தமிழ்நாட்டில் இருக்கும் பல பொறியியல் கல்லூரிகளில் சரியான ஆசிரியர்கள் இல்லை.(மற்ற மாநிலங்களிலும் அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன் ) இந்நாளைய இளைஞர்கள் பொறியியல் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நல்ல வருமானம் வரும் வேலைக்குப் போகத்தான் விரும்புகிறார்கள்.மேல் படிப்பு படிப்பதிலோ research செய்வதிலோ பெரும்பாலாருக்கு விருப்பம் இல்லை.அப்படியிருக்க புதிய கல்லூரிகட்கும் தொழில் நுட்பக் கழகங்களுக்கும் ஆசிரியர்களை எப்படி உருவாக்குவது என்பதற்கு முதலில் ஒரு கொள்கை தேவை.

 4. I suggest shri Balaji to go through if possible the book “In the name of excellence” by Thomas Toch which deals with the crisis in school education in USA in the 1980s and how many
  attempts were made to reform the eduction system and various obstacles to that. In our country the problem is very diiferent.I feel Kapil Sibal inly facilitating the establishment of cheap intellectual labour for the various MNCis who fund the cost of their own country employees undermining their profits.In INdia the major problem is the medium of instructionIn USA itis English from Detroit to Dallas.We have every state having its iwn regional language at the fundamental levels of education–Primary and secondary.We have aplethora of educational systems with various grades of syllabui–CBSE,Matriculation State board, Anglo-indian and ICSE.China had to import teachers because it did not have english knowing teachers.Even now many chinese students in American universities struggle hard to catch upOne of the reports said”the character of a schools output depends largely on a single input namelythe characteristics of the entering children.Everything else-the school budget,its policies the characteristics of the teachers–is either secondary or completely irrelevant. Before thinking of importing foreign universities let us try make our students in the primary and secondary schools capable of absorbing the teaching of those who will definitely bring some tghing which is alien to them.Secondly the Indian IT companies who is battiening on the products of highly subsidised education system should be taxed by way of surchage to facilitate the growth research and development in the existing universities Kapil is only introducing tnrough the back door the elitist system at the cost of equal opportunities.We may also take note that despite all this Obama is exhorting the american students to do better if they want to have advantage over the indians and chinese
  A.T.Thiruvengadam of

 5. திரு பாலாஜி, இன்று நமது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான தனியார் தொழில் நுட்ப மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை நடத்திவருபவர்கள் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகளின் கைகூலிகள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டுகிறேன். சாதாரண தனியார் பள்ளிகளிலேயே, நிர்வாகம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது என்பது அரிதாகி வரும் இன்றைய நிலையில், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் நாம் எதிர்பார்க்கும் தரம் கிடைப்பதற்கான சூழல் கபில் சிப்பலின் இந்த பத்து கட்டளைகளினால் மட்டும் உருவாகிவிடுமா? மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் கல்வியை கொண்டுவந்ததன் விளைவோ என்னவோ, இன்று தமிழக கல்விக்கூடங்களில் பாரம்பரியமான ஆன்மீக இலக்கியத்தின் சுவடு கூட பாடத்திட்டங்களில் காணக்கிடைப்பதில்லை.

 6. Dear Sir

  Tamil Hindu has published very thought provoking article ! “Hats off” to you for the same !

  In India education is one assured business with least amount of investment. As a person familiar with Tamilnadu I can only comment about Tamilnadu. But what is happening in Tamilnadu is true to a larger extent to other states too.

  Most of the educational institutions that have come up recently and uttained deemed univerity status are all having total political patronage. They may be affiliated to either a particular community (minority community!!!!) or political party to stay safe! Even deemed universities do not implement UGC salaries, AICTE facilities like specified laboratories etc.

  Communal wars in colleges and universities due to present reservation policy is well known.
  Taminadu has the great distinction of having battles inside and outside law colleges !
  We have seen the TV snaps of one community students beating black and blue someone belonging to other community. If the future generation of lawyers attitude is like this then we can imagine how law abiding other stuents would be. Leave aside employability, social behavious of our students properties like bussesand trains is deplorable.

  Entry of foreign univerities is certainly a welcome move as our studnets shall get exposed to international curiculam. They need not pay in black and white huge capitation fees, bus fees. They need not leave India to get beatings in Australia or go to Russia to study medicine in Russian or go to some little known university abroad which they may find closed overnight !

  Foreign universities may not have reservation policy of our country. So people belonging to even SUPPRESSED CLASS may also get equal opportunities !

  The exisiting colleges may increase their standards and try to improve !

 7. அன்புள்ள பாலாஜி
  விரிவான அலசலுக்கு நன்றி. தமிழ் இந்து பல தளங்களுக்கும் விரிவது கண்டு மகிழ்ச்சி.

  கபில் சிபல் உடனடியாகச் செய்ய வேண்டியது ஆரம்பக் கல்வி முதல் +2 வரையிலான கல்வியைச் சீரமைக்க வேண்டியதேயாகும். இந்தியா முழுவதும் ஒரே விதமான 1-12 கல்வியை குறைந்த பட்சம் கணக்கு, விஞ்ஞானம், சரித்திர பூகோள பாடங்களிலாவது முதலில் அமுல் படுத்த வேண்டும். அதில் வலுவான அடித்தளம் அளிக்கும் கல்வியாக அதை மாற்ற வேண்டும். அதைச் செய்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். நம் கல்லூரிகளில் ஆசிரியர் பாடம் சொல்லித் தந்து மாணவர்கள் படிப்பதில்லை. அவர்களது ஆரம்பக் கல்வி சரியாக இருந்திருந்தால் ஆசிரியர் கல்லூரிகளில் ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருந்தால் போதுமானதாகப் போய் விடும். ஆகவே 1-12 கல்வியில்தான் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்

  கல்லூரி மற்றும் மேல்நிலைக் கல்விகளை பெரும்பாலும் தனியார் கைகளில் கொடுக்கலாம். தனியார் என்றால் உடையார், ஜகத்ரட்சகன், தங்கபாலு போன்ற சாராய வியாபாரிகளிடம் அல்ல. மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரி நிர்வாகத்தினர் போன்ற, கோவை பி எஸ் ஜி போன்ற, ப்ரேம்ஜி, நாராயண மூர்த்தி, ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்கள் நடத்தும் பெரும் கல்லூரிகளிடம் மேல் நிலைக் கல்வியை ஒப்படைக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் பல்கலைக் கழகங்கள் எல்லாம் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப் பட்டு திறமையான பொறுப்பான நிர்வாகங்களிடம் அளிக்கப் பட வேண்டும்

  மேல் நிலைக் கல்விக்கு கபில் சிபல் ஒதுக்கிய பணம் எல்லாம் வீணாகப் போய் கொண்டிருக்கிறது. உதாரணமாக இப்பொழுதுள்ள பல்கலை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு எந்தவித தர நிர்ணயமும் செய்யாமல் குருட்டாம் போக்கில் சம்பளத்தை 1 லட்சம் வரை உயர்த்தியிருக்கிறார். இது போன்ற கூமுட்டைத்தனமான செயல் கிடையாது. அதைக் கண்டதில் இருந்தே கபில் சிபல் மீதான நம்பிக்கை எனக்குப் போய் விட்டது (என்றுமே இந்த ஆம்புலன்ஸ் சேசர் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது என்பது வேறு விஷயம்) கல்லூரி பல்கலையில் இன்று இருப்பவர்கள் ஜாதி ரீதியாக, அரசியல் செல்வாக்கில் உள்ளே வருபவர்கள் இவர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு கந்து வட்டி பிசினஸோ, சாராய பிசினெஸோ செய்யத்தான் போகப் போகிறார்கள். பி எச்டி, பேப்பர்கள் எலலமே விலைக்கு எழுதிக் கொடுக்கப் படுகிறது. இன்று தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களில் 1 லட்சம் கொடுத்தால் பி எச் டி வாங்கி விடலாம் என்பதுதான் உண்மை நிலை. மேலும் எந்தவிதத் மேம்பட்ட தகுதியும் இல்லாத ஆசிரியர்களே பெரும்பாலும் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் இப்பொழுது இருக்கிறார்கள். அரசியல்வாதிகளும் அவர்களின் உறவினர்களுமே வி சி என்னும் பதவிக்கு அமர்த்தப் படுகிறார்கள். அவர்களுக்கு கல்வி குறித்தோ எந்த துறை குறித்தும் எந்தவித அறிவும் இருப்பதில்லை. ஜாதி பலம் , அரசியல் பலம் வாய்ந்தவர்கள் மட்டுமே இன்று மேல் கல்வித் துறைகளில் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் கபில் சிபலின் அதிக பட்ச சம்பளம் வெட்டியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

  அவர்களுக்கு உண்மையான தர நிர்ணயம் செய்ய எந்தவித அமைப்போ விதிமுறைகளோ இன்றி கோடிக்கணக்கில் சம்பளத்தைக் கொட்டிக் கொடுப்பதனால் உயர் கல்வி எப்படி வளரும்? அடிப்படைக் கல்வி ஆரம்ப அஸ்திவாரம் நன்றாக அமைந்து வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் நல்ல பல்கலைக் கழகங்களும் நிறைய கல்லூரிகளைத் துவங்குமானால் நிறைய திறமைசாலிகள் உருவாகுவார்கள்.

  இப்பொழுதுள்ள நம் பல்கலைக்கழகங்கள் மேல் படிப்பு என்பது பெரும் கேலிக் கூத்தாக இருக்கிறது. சரோஜா தேவி புத்தகம் எழுதிய ஒருவனின் பெயரில் தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களை ஊருக்கு ஊர் ஆரம்பித்தால் அந்தக் கல்வி எப்படி உருப்படும்? நமது ஆரம்பக் கல்வியில் உள்ள மனப்பாடம் செய்யும் திறன் ஒரு புறம் ஞாபகசக்திக்காக மட்டுமே வளர்க்கப் பட்டு பாடங்களைப் புரிந்து சொல்லிக் கொடுத்து புரிந்து வெளிப்படுத்தக் கூடிய திறன் அதிகம் வளர்க்கப் பட வேண்டும். அதற்கான அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்களும் உருவாக்கப் பட வேண்டும். மேல் கல்விக் கூடங்களின் ஆசிரியர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தால் இந்தியாவின் மேல் கல்வி வளர்ந்து விடும் என்ற கபில் சிபலின் திட்டம் ஏற்கனவே வீணாகிப் போய் விட்டது. எனக்கு இவரின் திட்டங்களில் அவ்வளவாக ஏதும் நம்பிக்கை இல்லை. ஏதும் ஒன்றிரண்டு நல்லது நடந்தால் நல்லது பார்க்கலாம். வெளிநாட்டில் இருக்கும் உருப்படியான பல்கலைக் கழகங்கள் இந்தியாவுக்கு வந்தால் நல்லது. நமது டீம்டு யுனிவர்சிட்டி போன்ற கோமாளிக் கும்பல்கள் நுழைந்து விடாமல் இருக்க வேண்டும்.

  அன்புடன்
  ச.திருமலை

 8. அருமை! உண்மையிலேயே எனக்கு ஓரளவுக்குத்தான் படிப்பு உண்டு! ஆனால் எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்க சரியான வழிமுறை ஏற்படக் கூடிய சூழல் தெரிகிறது! தமிழ் ஹிந்துவின் சிறப்பான கட்டுரைகளில் இந்த கட்டுரைக்கும் தனி இடம் உண்டு! நன்றி பாலாஜி அவர்களே!

 9. If a person comes with a certificate of a cook or hotel management , you show him the tur dal, urad dal, rice, wheat ask him to identify if the person can not identify how you can expect the person to be a good cook or manage a Hotel. This is the level of education in in all Indian colleges. Just like uneducated persons some people learn the Job on the Job and succeed.

  That is the reason our country is backward . Having mobile phone car are thought as a development. But there are more than 180 countries in the world who are ahead of India in such parameters.

  India needs to understand what is education That is real situation

 10. மறுமொழி இட்ட வாசகர்களுக்கு என் நன்றிகள்.

  இது மிக மிக மிக சிக்கலான பிரச்சினை. தீர்வும் சிக்கலாகத்தான் இருக்கும்.
  என்னால் சரியான தீர்வையெல்லாம் கூற முடியாது. நாம் இன்று இருக்கும்
  நிலையை எடுத்து காட்டுவது மட்டுமே என் நோக்கம்.

  வெளிநாட்டு பல்கலை கழகங்களை அனுமதிப்பதனாலேயே இந்திய
  உயர் கல்வி நிலை மேம்பட்டு விடும் என்று நான் கூறவே இல்லை. இதுவும்
  நம் முன்னேற்றத்திற்கு ஒரு காரணியாக அமையும் என்றே நான் நம்புகிறேன்.

  ஜாதி, சிறுபான்மை மதம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் இங்கு
  எந்த துறையும் இல்லை. நீதித்துறையையும் சேர்த்துதான். இந்த விஷயங்களில் சம்பந்தமே இல்லாமல் ஒரு “Out of Box” Thinkingஉடன்
  சில கல்வி நிலையங்களாவது இந்தியாவில் ஏற்பட வெளிநாட்டு
  பல்கலைகழகங்கள் உதவும் என்பது என் கருத்து.

  ஜாதி மற்றும் அரசியல் குறுக்கீட்டு பிரச்சினைகளை தீர்த்து விட்டுத்தான்
  நாம் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால் அது நடக்க
  வாய்ப்பில்லை. கடல் அலை எப்பொழுது நிற்பது, சமுத்திர ஸ்நானம்
  எப்பொழுது செய்வது?

  Perfect நிலை இந்திய கல்வியில் ஏற்பட வாய்ப்பேயில்லை. சில
  மன சமாதானங்களை செய்து கொண்டுதான் ஆகவேண்டும். (Compromises)

  நம்மிடம் பல Mental Blocks உள்ளன.
  (1)எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.
  நோக்கம் சரியாக இருந்தாலும் நடக்க முடியாத விஷயம் என்பதை
  ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்.

  (2)எல்லா குழந்தைகளிடமும் ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கிறது.
  சில குழந்தைகள் எதற்குமே பிரயோஜனம் இல்லாமல் இருக்கும். அதாவது அறிவியல், கலை, இலக்கியம் போன்ற சமூகத்திற்கு தேவைப்படும்
  திறமைகள் இல்லாமலும் சில குழந்தைகள் சோம்பேறியாக, முட்டாளாக
  இருக்கும் என்பதை ஏற்க மறுக்கிறோம்.இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு
  வசதிகள் ஏற்படுத்தி தருவதை விட்டு, புத்திசாலி குழந்தைகளுக்கு நிறைய
  வசதி, வாய்ப்புகள் செய்து தந்தால் சமூகத்துக்கு பிரயோஜனம்.

  (3)சோஷலிஸ்டு ஆட்சியில் நாம் 60 வருடங்கள் வாழ்ந்ததினால்
  பணக்காரர்களை எதிர்க்கிறோம். நாம் என்ன முயன்றாலும் பணக்கார
  குழந்தைகள் சாதாரணமாக படித்தாலும், இந்தியாவிலோ அல்லது
  வெளிநாட்டிலோ தரமான கல்வியை அடைந்தே தீரும்.Management
  Quotaவில் அவர்கள் கொடுக்கும் பணத்தினால்தான் கட்டமைப்புகள்
  உருவாகின்றன என்பதை பார்க்க மறுக்கிறோம்.

  (4)நம் ஆசிரியர்களின் நிலை படு மோசமாக இருக்கிறது. எந்த சீர்திருத்தமும்
  யூனியனால் தடுக்கப்படும். ஒரு அளவிற்கு மேல் எந்த தலைவராலும்
  ஒன்றும் செய்ய முடியாது.

  (5)+2 படிப்பு முடித்து கல்லூரிக்கு 100ல் வெறும் 11 பேரே சேருகிறார்கள்.
  இதை 100ல் 25 பேர் என்றாவது மாற்ற நாம் இப்பொழுது இருப்பதை விட
  இரண்டு மடங்கு கல்லூரிகளை நிறுவ வேண்டும். அதை செய்ய அரசிடம்
  துட்டு இல்லை என்பதை ஏற்க மறுக்கிறோம்.

  (6)அடுத்து, நான் கூறும் விஷயம் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
  மரபணு வழியாகவும் புத்திசாலித்தனம் வருகிறது என்பதை நாம் ஏற்க
  மறுக்கிறோம்.

  (7)நம் இந்தியர்களிடம் இருக்கும் பெரிய Mental Block-நம்மால் எந்த நவீன
  கண்டுபிடிப்பும் வெளிவராத நிலையிலும், பழைய பெருமைகளை
  பேசுவதை நாம் நிறுத்துவதில்லை. 1500ம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின்
  ஒரு விஞ்ஞானி மைக்ராஸ்கோப்பை கண்டுபிடித்தார். முதன்முதலில்
  நம் கண்ணிற்கு தெரியாத உயிரினங்களை அவர்தான் கண்டார். ஒருவர்
  தொலைநோக்கியை கண்டுபிடித்தார். அதே கால கட்டத்தில் தென்னிந்தியாவில் இந்துக்கள் நல்ல நிலையில்தானே வாழ்ந்தார்கள்.
  1800க்கு பிறகுதானே வெள்ளையன் வந்தான். 1500களில்
  ஐரோப்பியர்கள் அறிவியலை நோக்கி நகர்கையில் நம்மால் ஏன் எதையும்
  சாதிக்க முடியவில்லை. சிலருக்கு இதை படிக்க சங்கடமாகத்தான் இருக்கும்.

  உலக அறிவியல் செல்லும் திசையை கவனித்தவர்கள் ஒரு விஷயத்தை
  கவனித்திருப்பார்கள். தனி மனிதன் கண்டுபிடிக்கும் அதிசயம் கிட்டத்தட்ட
  முடிவுக்கு வந்து விட்டது. ஒரு ஆய்வு சாலையில் பலரின் துணையுடன்
  மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. பெரிய அளவில் மட்டும்
  அல்ல, மிகப்பெரிய அளவில் நமக்கு ஆய்வு சாலைகளை அமைக்க முதலீடு
  தேவை. இதை மத்திய அரசால் செய்ய முடியாது. தனியார் துறை வந்தே
  தீர வேண்டும். ஆய்வுகள் லாப நோக்குடன் இருந்தால் மட்டுமே தனியார்
  துறை உள்ளே வரும். நானே ஒரு பணக்காரனாக இருந்தாலும் ஆராய்ச்சிக்காக கோடி கோடியாக சும்மா கொட்டி விட மாட்டேன்.

  நம்மிடம் உள்ள புத்திசாலிகளில் 5 சதவிகிதம் பேர் இராமாயணத்தில் வரும்
  புஷ்பக விமானத்தை பற்றி ஆராயலாம். ஆனால் 100 சதவிகிதமும் இந்த
  மனநிலையில் இருந்தால் நம் நாடு முன்னேற வாய்ப்பு கிடையாது.
  இராமாயண ஆராய்ச்சி வேண்டாம் என்று கூற வில்லை. அவ்வளவுபேரும்
  அந்த மனநிலையில் இருப்பதைதான் சாடுகிறேன்.
  [தனிப்பட்ட முறையில், யாரேனும் நம் மதப்புத்தகங்களில் இருக்கும்
  அறிவியலை எடுத்து காட்டினால் எனக்கும் பூரிப்பு ஏற்படுகிறதுதான்.
  ஆனால் நம் மொத்த சமுதாயமும் இப்படி இருந்தால் சோற்றிற்கு என்ன
  செய்வது?]

  Christian Scientists என்று ஒரு குழு மேற்கத்திய நாடுகளில் உள்ளது.
  பைபிலில் வரும் Noah’s Ark போன்றவை எங்கு நிகழ்ந்தன என்பதை
  ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையானோர்
  அறிவியல் முறைப்படிதான் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள்.

  மைக்ராஸ்கோப், தொலைநோக்கி, மின்சாரம், மின்சாரத்தினால் இயங்கும்
  மோட்டார்கள், பல்புகள், வாஷிங்க் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள்,
  இண்டர்நெட் வசதி, வானொலி மற்றும் தொலைக்காட்சி வசதிகள், திரைப்படம், வாகனங்கள், விமானங்கள், தொலைபேசிகள், செல் தொலைபேசிகள், சேட்டிலைட்டுகள், நவீன மருத்துவ வசதிகள் என்று
  நாம் உபயோகப்படுத்தும் விஷயங்களில் 99.99 சதவிகிதம் வெள்ளையனின்
  ஆராய்ச்சியாலேயே வெளிவந்துள்ளது.

  புதிய பன்றிகாய்ச்சல் வைரஸ் H2N2 உருவானால் அதற்கு தடுப்பு மருந்தை
  உருவாக்க நாம் தயாராக வேண்டும். இன்றுள்ள நிலையில் காய்ச்சல்
  இருக்கிறதா இல்லையா என்பதை Test செய்ய கூட அமேரிக்காவிலிருந்துதான் TestKitஐ இறக்குமதி செய்கிறோம் என்பதை
  நாம் மறக்க கூடாது.

  ஐரோப்பாவில் CERNல் இரண்டு புரோட்டான்களுக்கு இடையில் ஓட்ட
  பந்தயம் வைத்து 7TeV சக்தியை உருவாக்குகிறார்கள். இதற்கு கிட்டத்தட்ட
  40000 கோடி ரூபாய்களை செலவு செய்துள்ளார்கள். ஒரு வருடத்தில் நாம்
  கல்விக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையே இதைவிட குறைவுதான்.

  கால் கை இழந்தவர்களுக்கு ஜெய்ப்பூர் செயற்கை கால் இந்தியாவில்
  உருவாக்கியிருக்கிறோம். ஆனால் போரினால் கை கால்களை இழந்த
  அமேரிக்க சிப்பாய்களுக்கு அவர்கள் உருவாக்கும் கை கால்களின்
  Technologyஐ நாம் கவனிக்கிறோமா!

  செவ்வாய் கிரகத்திற்கு ரோபோட்டுகளை அனுப்பி அந்த கிரகத்தின்
  மண்ணின் தன்மையை அமேரிக்கர்கள் ஆராய்கிறார்கள்.

  இதைப்போன்று எவ்வளவோ கூறலாம்.

  அறிவியலில் இன்றைய நிலையில் நாம் குழந்தைகள் என்பதை முதலில்
  ஒப்புக்கொள்வோம். இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள் பலன் தர
  25 முதல் 50 வருடங்கள் ஆகும் என்பதையும் மறக்காமல் இருப்போம்.

  ஒன்று, நாம் வெள்ளையன் கண்டுபிடிப்பதை Copy,Paste மூலம்
  உபயோகித்து கொண்டிருக்கலாம். அல்லது அவனுடன் போட்டியிட்டு
  அவனுக்கு முன்பாகவே நாம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம்.
  பின்னதை செய்ய மிக பெரிய அளவில் மன உறுதி கொண்ட தலைவர்கள்
  தேவை. இந்த மாற்றங்கள் உடனடி பலன் கொடுக்காததால் ஓட்டிற்கு
  வழியில்லை.

  அறிவியலை தவிர மற்ற துறைகளிலும் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
  என்றாலும் அறிவியல் துறையில் முன்னேறினால் நம் பொருளாதார
  நிலை மேம்படும் என்பதால் அதற்கு Priority கொடுக்க வேண்டும்.

  எனவேதான் சிறிய அளவில் யாரேனும் சீர்திருத்தங்கள் செய்தாலும்
  நாம் ஆதரிக்க வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரையை எழுதி என்
  கருத்தை பகிர்ந்து கொண்டேன்.

 11. /////////இந்தியாவில் இன்றுள்ள பல பிரச்சினைகளுக்கு மூல காரணம் ஏழைமை என்பதும் அதற்கும் மூல காரணம் மக்கள்தொகைப் பெருக்கம் என்பதும் நம் எல்லாருக்கும் தெரியும். ./////////

  இது மட்டுமே காரணம் என்று மே போடும் அளவுக்கு இல்லை….

  ஏன் சொல்கிறேன் ?

  இந்தியாவை விட மேற்கு ஜெர்மானியில் (மே. ஜெர்மானி) population density அதாவது சதுர கிலோ மீட்டரில் இருக்கும் மக்கட்தொகை அதிகம் !! …ஆம் அதிகம் ..ஆயினும் மேற்கு ஜெர்மானி நம்மைவிட பணக்கார நாடு (சராசரி / தனி நபர் அளவில்). அங்கே வாழும் சராசரி நபர் இந்தியரைவிட வசதிவாய்புடன் வாழ்கிறார்

  இந்தியாவை விட தென் கொரியாவில் population density அதாவது சதுர கிலோ மீட்டரில் இருக்கும் மக்கட்தொகை அதிகம் !! …ஆம் அதிகம் ..ஆயினும் தென் கொறியா நம்மைவிட பணக்கார நாடு (சராசரி / தனி நபர் அளவில்). அங்கே வாழும் சராசரி நபர் இந்தியரைவிட வசதிவாய்புடன் வாழ்கிறார்

  இந்தியாவை விட ஹாங்காங்கில் population density சதுர கி மி யில் இருக்கும் மக்கட்தொகை அதிகம் !! …ஆம் அதிகம் ..ஆயினும் ஹாங்காங் நம்மைவிட பணக்கார நாடு… சராசரி / தனி நபர் அளவில். அங்கே வாழும் சராசரி நபர் இந்தியரைவிட வசதிவாய்புடன் வாழ்கிறார்

  இப்படியே சிங்கப்பூர், நெதெர்லாந்து , தாய்வான் என்று சிறிதும் பெரிதுமாய் பல நாடுகளை அடுக்கலாம்.

  ஜப்பான், இஸ்ரேல், பெல்ஜியம் , இந்தியா …இந்த நான்கு நாடுகளுக்கும் population densityல் சின்ன வித்தியாசமே. சராசரி வருமானத்திலோ !! ??

  இதேபோல இந்தியாவுக்கும் ஹைதிக்கும், ரவாண்டாவுக்கு population density ல் சின்ன வித்தியாசமே …சராசரி வருமானத்திலோ ?

  ஆகவே நண்பரே, இந்தியர்களை …. இந்துக்களை சிசுவிலேயே கொல்லும் பம்மாத்துக்கு நீங்களும் விழுந்துவிடாதீர்கள் !!

  நாம் ஏழையாய் போனதற்கு காரணம் கம்யூனிசம், அரசுடமையாக்குதல், சரியான பொருளாதாரக் கொள்கையின்மை…ஊழல்… இன்ன பிற காரணங்கள்

  இன்று இந்தியாவின் ஜனத்தொகையே நம் பலம்

  இளைய வாரிசுகளே நம் பலம்

  பெமினிசம் தலை விரித்து ஆடி…புள்ளை பெத்துக்க முடியாது என்று அலைந்த மேற்கத்திய நாடுகள் 30தே வருஷங்களில் கிழடுகளாய் போய்க்கொண்டு இருக்கின்றன. நாளை இராணுவத்துக்கு யார் என்று பயந்து செத்துக்கொண்டு இருக்கிறார்கள்

  ஒரு பிள்ளை போதும் என்ற சீனா, இரண்டு பிள்ளையாவது பெத்துக்குங்க என்று கெஞ்சாத குறைதான்.

  இடமே இல்லை, இனிமேல் கடலில் தான் குதிக்கவேண்டும் என்று தோன்றலாம் சிங்கப்பூரை பார்த்தால்…. புள்ளை பெத்துக்கிட்ட சிங்கபூரியனுக்கு , அந்த அரசு சலுகை தர தயார்…

  ஒன்று இரண்டு மூன்று …ஊகூம் இரண்டு போதும் என்று ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்த இந்தியா வேறு ஒரு இந்தியா…ருஷ்யா வீசிய பசையை சந்தனம் என்று எடுது தடவிக்கொண்டு அலைந்தோம்… இன்று ருஷ்யாவே தம் மக்களை பிள்ளை பெற்றெடுக்க வேண்டுகிறது!!

  மீண்டும் வேண்டிக்கொள்கிறேன் ஆகவே நண்பரே, இந்தியர்களை …. இந்துக்களை சிசுவிலேயே கொல்லும் பம்மாத்துக்கு நீங்களும் விழுந்துவிடாதீர்கள் !!

  வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு

 12. எனது 10 ஆலோசனைகள்
  1. முதலில் இந்த ( Pre-KG, LKG, UKG) போன்ற பள்ளிகள் நடத்துவதை தடைசெய்யவேண்டும்.
  2. 6 வயது நிரம்பியபி்ன்தான் பள்ளியில் சேர்க்கவேண்டும்
  3. 8 ஆம் வகுப்புவரை தாய்மொழியில்தான் கல்விகற்பிக்கவேண்டும்
  4. ஆங்கிலம் 2வது லாங்வேஜ் பாடமாகவும் இந்தி அல்லது வேறு ஒருமொழி 3வது லாங்வேஜ் பாடமாகவும் பயில்விக்கவேண்டும்
  5. Moral Science, drawing, craft, physical training, ACC, NCC போன்றவற்றை எல்லோருக்கும் கட்டாயம் போதிக்கவேண்டும்
  6. 11வது வரை முன்போல் (SSLC ) பள்ளிப்படிப்பை முடிக்கவேண்டும்
  7. நல்ல ஆசிரியர்கள் கிடைக்கவில்லை என்றால் கணினி உதவிகொண்டு பயில்விக்கலாம்
  8. (PUC ) என்ற ஒன்று தேவையில்லை. நேராக டிப்ளமோ அல்லது டிகிரி படிப்பை மேற்கொள்ளலாம்
  9. எல்லா (Engineering ) டிகிரி படிப்பையும் கட்டாயம் விடுதியில் தங்கி படிக்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும். எல்லா (Engineering ) டிகிரி கல்லுரியில் கட்டாயம் ஒரு தரமான தங்கும்மிடம் கான்டீன் (Library ) (Laboratory ) (prayer hall ) திரந்தவெளி அரங்கம் விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் கட்டாயம் இருக்கவேண்டும்
  10. கடவுள் நம்பிக்கை நாட்டுப்பற்று நல்லொழுக்கம் முதலியவற்றிற்கு எல்லா காலகட்டங்களிலும் முக்கியத்துவம் அளித்தல் அத்தியாவசியமாகும்
  அன்னிய நாட்டு பல்கலைகழகங்கள் வந்தால் தவறு ஏதும் இல்லை. இங்கேயும் இடஒதுகீடு மதபிராசாரம் அரசியல் என்று புகுத்தினால் இது இல்லாமல் இருப்பதே நல்லது.

 13. அன்புள்ள பாலாஜி, நமது முன்னோர்களின் ஆன்மீக திறன் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நமது முன்னோர்களால் அறிவியல் மற்றும் உலகாயத விஷயங்களில் நமக்கு புகட்டப்பட்டு வந்த பல்வேறு திறமைகளும், சுமார் எழுநூறு ஆண்டு கால இஸ்லாமியர் படையெடுப்புக்களால் அழிக்கப்பட்டு விட்டதாகவே எண்ணுவதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாரத்வாஜ மகரிஷி எழுதிய வைமானிக சாஸ்திரம் என்ற புத்தகத்திலிருந்து சிலபகுதிகளை தேர்ந்தெடுத்து, சில இத்தாலிய ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 9 PATENT பதிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இன்றைக்கு நமது நாட்டின் பாதுகாப்பு துறைக்கு புதிதாக செர்கப்பாட்டுள்ள அக்னி 4 ஏவுகணைகூட இந்த வைமானிக சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைந்த ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியவில்லையா? யந்திர சர்வஸ்வ மற்றும் வைமானிக சாஸ்திரம் போன்ற நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நமது முன்னோர்களின் திறனை பறைசாற்றும். ஊழலிலும் அதிகார போதையிலும் திளைத்து நாட்டு நலனை மறந்த அதிகார வர்க்கத்துக்கும் இன்று அதிகாரத்தில் உள்ள நமது அரசியல்வாதிகளுக்கும் எந்த துறையில் ஆராய்ச்சிக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பது புலப்படுமா?

 14. சகோதரர் வேதம்கோபால் கருத்துக்களை நானும் ஆதரிக்கிறேன் மேலும் கல்லூரியில் படிக்கும் அனைவரும் விடுதியில் தங்கித்தான் படிக்கவேண்டும். .ராணுவ பயிற்சியும் கட்டாயம் ஆக்கப்படவேண்டும். நாட்டுணர்வு சகோதரத்துவம் நல ஒழுக்கம் போன்றவை மேலும் மேலும் வளரும். சே சுந்தரராஜன்

 15. திரு வேதம்கோபால் மற்றும் சுந்தரராஜன் அவர்களே!
  உங்கள் மறுமொழிக்கு நன்றிகள்.
  உங்கள் மறுமொழியில் இரண்டு விஷயங்களை பற்றி என் கருத்துகளை
  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  (1)எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி.
  (2)விடுதியில் தங்கி கல்லூரி படிப்பு மற்றும் இராணுவ அல்லது தேச சேவை
  கட்டாயமயமாக கல்வியுடன் இருப்பது.

  (1)எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி சத்தியமாக இந்தியாவில் சில
  தலைமுறைகளுக்காவது சாத்தியமில்லை என்பது என் கருத்து. இதை
  வெளிப்படையாக கூற எந்த தலைவரும் கல்வியாளரும் முன்வருவதில்லை.
  நான் நேரடியாக பார்த்து கொண்டிருக்கும் என் அனுபவத்தை பகிர்ந்து
  கொள்கிறேன்.
  நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள்
  ஊராட்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பேரூராட்சி இருக்கிறது.
  எங்கள் கிராமத்தில் ஆரம்ப பாடசாலை மட்டுமே உள்ளது. (5ம் வகுப்பு
  வரை). பேரூராட்சியில் உயர்நிலை பள்ளிகள் உள்ளன. (+2 வரை).
  தினமும் நான் மாலை சுமார் 4 மணி அளவில் ஒரு முச்சந்தி வழியாக
  செல்வேன். ஒரு புறத்திலிருந்து உயர்குடி பள்ளியில் படிக்கும் மாணவர்கள்
  வந்து கொண்டிருப்பார்கள். இன்னொரு புறத்திலிருந்து அரசாங்க மற்றும்
  Aided பள்ளியிலிருந்து மாணவர்கள் வெளி வந்து கொண்டிருப்பார்கள்.
  -உயர்குடி மாணவர்கள் டிப் டிப்பாக சீருடை அணிந்து, நுனி நாக்கு
  ஆங்கிலத்துடன், Authoritative முக வெளிப்பாட்டுடன் வருவார்கள்.
  -Aided பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர்கள் அடுத்த தரத்தில்
  இருப்பார்கள்.
  -அரசாங்க பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவ, மாணவிகளில்
  பெரும்பாலானோருக்கு சீருடை கூட இருக்காது. கிழிந்த, அழுக்கான
  பாவாடை மற்றும் டிராயர் அணிந்திருப்பார்கள். தலை எண்ணையே
  பார்க்காததால் சீக்கோடு இருக்கும். குளிக்கவில்லை என்பதும் பார்க்கும்
  போதே தெரியும். காலில் செருப்பு இருக்காது. [நான் ஒருமுறை என்
  செருப்பை கழற்றி காலை ரோட்டில் வைத்து பார்த்தேன். 4 மணிக்கு
  தஞ்சாவூர் வெயிலின் கடுமையை நான் கூற வேண்டியதில்லை.]

  இதற்கு மேல் வர்ணனை தேவையில்லை என்று நம்புகிறேன்.
  இந்த பேரூராட்சியில் அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களால்
  உயர்குடி மாணவர்களுடனோ அல்லது சென்னை போன்ற நகரங்களில்
  உள்ள உயர்குடி மாணவர்களுடனோ போட்டி போட முடியும் என்று
  கூற முடியுமா?

  மேலும் 10 சதவிகித குழந்தைகள்தான் இந்தியாவில் தனியார் பள்ளிகளில்
  படிக்கிறார்கள் என்பதையும் கவனித்தில் கொள்வோம். இந்த பெரும்பாலான
  ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க தேவைப்படும்
  துட்டு, மாலு, டப்பை கல்வியாளர்கள் வெளிப்படையாக பேசட்டும்.
  அவர்களால் தேங்காய் எண்ணை கூட வாங்க முடியாது என்பதை நாம்
  மறக்காமல் இருப்போம்.

  யாராவது இதை நேரடியாக பார்த்து அனுபவிக்க விரும்பினால் தயவு
  செய்து என்னை தொடர்பு கொள்ளலாம்.

  மேலும் சுமாரான பொருளாதார நிலையில் உள்ள தமிழ்நாட்டின் கதியே
  இது என்றால் ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களின் நிலையை
  ஊகித்து கொள்ளலாம்.

 16. Balaji himself has stated that there is a cognisable difference between the pupils of private school and government schools and the amount sanctioned by Sibal has not been properly utilised.What is the cause? One has to see the plethora of free distribution of various things such as colour TV gas burners , free electricity to all and sundry which diverts funds essential for improving educational facilities.It is also imperative the public who vote in exchz\ange for the freebees are made to relise that for their temporary pleasure for today that they are not only mortgaging the future of their children and virtually destroying their life. secondly the infiltration of foreign universities will result in a different castwe/class system that is those who went abroad and studied in a foreign univwesity , those who studied in foreign university in India and those whon studied in Indian Universities.One can imagine its impact in employment opportunitiesWe require facilities and infrastructure in the country to be improved and the waste of taxpayers money in free doles for votegathering has to be stopped
  A.T.Thiruvengadam

 17. Balaji
  I appreciate your thought provoking article. Its true, that no two individuals are going to agree on a thing. What is important is to create a forum and encourage dialogue. I think you have created a sample forum that way.

  Now, one thing that stands out in your writing is about Akbar, that is very true. I have heard and read about different versions of everyone of India’s rulers in various media.

  I think we have an obligation to take this forward, wherein, we take in the Indian text book version, and publish that and the corresponding other versions of the same story, and publish it to a wider audience. The reader of such writings should come to their own conclusions, form their opinion. This is what is needed for our nation today, where people are like ஆட்டு மந்தை, keep going in a direction that our print and other media keep showing. Which is 99.99% anti hindu. Since the early education formed their opinions highlighting that all is well in Muslim rule, its very difficult for them to hear the opposing views. And think that anything and everything thats done by a white man is right.

  Let me know, if you would like to create such a collection. I am open to such a collaboration.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *