கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!

raja-sibalஅலைக்கற்றை ஊழலைப் பற்றிய மற்றுமொரு அலசலை நீங்கள் இங்கே ஊகிக்க வேண்டாம். கல்வி என்பதே இத்தலைப்பின் இறுதிச் சொல். கல்வி பற்றியது இக்கட்டுரை. சில வாரங்களுக்கு முன் தமிழகக் கல்வி நிலை பற்றி எழதியிருந்தேன். அதையொட்டிய இன்னும் சில செய்திகள், எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

காங்கிரசும் கழகமும் இயற்கையான அணி போலும். ஊழல், தரமலிவு, அரசு சார் இயக்கங்களை, நிறுவனங்களை மலினப்படுத்துவது, போலியான மாறுதல்களைக் கொணருவது என்பதில் அவர்கள் காட்டும் முனைப்பு வியக்கவைக்கிறது. அதிலும் கபில் சிபல் ஊழலில் ஒரு “கலைஞர்”.

கபில் சிபல் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை நீக்கி சீர்திருத்தம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார். இந்தத் தேர்வை அவர் நீக்கியதற்குக் கூறிய ஒரே காரணம் மாணவர்களுக்கு தேர்வினாலான மன அழுத்தம் அதிகமாகிறது என்பது மட்டுமே. “மாணவர்களின் மன அழுத்தத்தைப் பத்தாம் வகுப்பிலானத் தேர்வை நீக்குவதன் மூலம் குறைக்க இயலுமா? பன்னிரண்டாம் வகுப்பிலோ அல்லது அதற்கு மேலோ மன அழுத்தம் வராதா?” என்றெல்லாம் கேட்காதீர்கள். அழுத்தம் பூஜ்யம் என அறிக்கை விட்டுவிடுவார் சிபல்.

இவ்வாண்டின் இறுதித் தேர்வை ஒட்டிய அறிவிப்பைச் சென்ற மாதம் CBSE வெளியிட்டது. அதில் தான் அளிக்கும் வினாத்தாள்களைக் கொண்டு, தான் குறிப்பிடும் கால அட்டவணையில் தேர்வு நடத்தி; குறிப்பிட்ட மதிப்பெண் கையேட்டுப்படி  விடைத் தாட்களைத் திருத்தி முடிவை தனக்கு அனுப்பவேண்டுமென பள்ளிகளை CBSE   மையப் பள்ளிக் கல்வி ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. மன அழுத்தம் ஒன்பதாவதிலிருந்தே துவக்கம் இப்புதிய முறையில்.

left-assails-education-reforms_cartoon-manjulசில நாட்களுக்கு முன்  CBSE இயக்குனர் தி ஹிந்து (The Hindu) பேட்டியில் (அது என்ன, அரசு சார் பேட்டிகள் தி ஹிந்துவிலே அதிகம் வருகின்றன!!). மாணவர்களின் மதிப்பிடலை இன்னும் கூடுதலான பரிமாணங்களில் செய்யப் புதிய முறை வழிவகுப்பதாகச் சொல்லியிருந்தார். இது போதுத்தேர்வெழுதாத பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொருந்தும். மூன்றில் இரு பங்கு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதைத்  தவிர்த்திருக்கிறார்களென  CBSE இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுவே சரியான தகவலா எனத் தெரியவில்லை.

 நானறிந்த பள்ளிகளில் 90 விழுக்காட்டிற்கு மேல் பொதுத் தேர்வு எழுதுகிறார்கள். 11, 12 ற்கு மாநிலப் பாடத் தேர்விற்கு மாறுவதற்கு பொதுத் தேர்வு கட்டாயத்தேவை. பெரும்பாலான மாணவர்கள் +2 வில் மாநிலப் பாடத் திட்டத்திற்கு மாறும் உத்தியைக் கைக்கொள்கின்றனர். அதனால் இந்த புள்ளிவிவரமே அலைக்கற்றைப் புள்ளிவிவரமோ? மேலும்  தொடர் மதிப்பிடல் என்ற முறையில் பல்வேறுவிதமான முறைகளை (quiz, project) போன்று பட்டியலிட்டு இவைகளும் கணக்கிடப்படும் என்றார். பள்ளிகள் ஓரிரு தேர்வுகளைச் செய்து கணக்குக் காட்டுகின்றன.

“CBSE ஐக் கேளுங்கள்” என்றொரு பகுதி ஹிந்து நாளேட்டில் வருகிறது. பிப்  7ந் தேதிப் பதிப்பில், பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்குப் பள்ளிகள் 11 ஆம் வகுப்பு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கக்கூடும் என ஊகமாகப் பதிலிருக்கிறது. தேர்வு எழுதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களைவிட தேர்வைப் புறந்தள்ளிய மாணவர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள். கலைஞர் உத்தி போல் தெரியவில்லை? என்னே புரட்சி! ஆயினும் இதே பகுதி பிப்ரவரி 14 ஆம் தேதி அதற்கு முரணாகப் பேசுகிறது.

sibal_cartoonபொறியியல், மருத்துவத் தேர்வுகளை ஒரே தேர்வாக ஆக்கபோகிறேன் என்று அறிவித்தார் கபில் சிபல். மருத்துவ நுழைவுத்தேர்வை தமிழகம் எதிர்த்ததைக் கணக்குக் காட்டி ஒத்தி வைத்தார். இந்தியத் தொழிநுட்பக் கழகம் IIT இதில் விலக்குப் பெற்று விட்டது. தனியார் பல்கலைக் கழகங்கள் பற்றி வாயே திறக்கவில்லை; இந்திய விண்வெளி தொழில்நுட்பக் கல்லூரி IIST போன்றவர்கள்  தனித் தேர்வு நடத்துவதையும் கண்டுகொள்ளவில்லை.

அதனால் பள்ளிக் கல்வித்  திட்டத்தில், நுழைவுத் தேர்வுகளில் என்ன தான் மாறுதல் கொண்டு வந்தார் கபில் சிபல் என்கிறீர்களா? எனக்கும் தெரியவில்லை. ஆனால், பூஜ்யம் என்று சொல்லமாட்டேன்.

என் அனுமானம். பட்ட மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம். குத்துமதிப்பான கணக்கில் 4000 கோடி  பணப்புழக்கம். இதில் உரிய பங்கு பெற முயற்சிகள் நடை பெறுகிறது. அயல் நாட்டுக் கல்வி நிறுவனங்கள் இங்கு கடை போட அடிகோலப்படுகிறது (TVU?). இது மட்டுமின்றி  உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 43 தனியார் பல்கலைக் கழகங்களை தகுதி மறுபரிசீலனை செய்யப்போவதாகக் கூறியுள்ளார். கோடிகளைக் குவிக்கச்  செய்யும் மோசடியின் முகப்பூச்சு இந்தப் பள்ளிக் கல்விச் சீர்திருத்தம்.

மும்பைத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு சிதம்பரம் கொண்டு சிவராஜ் பாட்டிலை உள்துறை அமைச்சகத்திலிருந்து வெளியேற்றினார்கள். அதைக்கண்டு அப்பாடா நிதியமைச்சகம் தப்பித்தது (சிதம்பரத்திடமிருந்து) என்று  எண்ணினேன். அதுபோல் அலைக்கற்றை ஊழலையொட்டிய  அமைச்சரவை மாற்றத்தில் கபிலையும் கல்வியையும் பிரிப்பார்களெனக் கனவு கண்டேன். நிகழவில்லை!

காங்கிரஸ் மந்திரிகளில் வேறுபாடு என்ன  எனக் கேட்டீர்களானால் என்னிடம் சரியான விடையில்லை. விடியுமா என்று  சிறு சபலம் தான். அதிலும் சீர்திருத்தம் என்ற பெயரில் நடக்கும் மோசடி மிக்கவே வேதனை அளிக்கிறது. RTE என்றொரு மோசடி! அதைப் பற்றி அப்புறம்  எழுதுகிறேன்.

tuktuks-little-question-bloஇது பற்றி பா.ஜ.க பெரிய கருத்துகளையோ விமர்சனங்களையோ வைக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்திற்கு வருவோம். இதே போன்ற நிலை தான். பள்ளிக் கட்டண சீரமைப்பு என்ற பெயரில் நடந்த கூத்தை நான் விவரிக்கத் தேவையில்லை. சிறு வேறுபாடு! தமிழக பாஜகவிலிருந்து திரு ராஜா, மன்னிக்கவும்  H. ராஜா, (எதற்குப் பெயர்க்  குழப்பம் !) குரல் கொடுத்திருந்தார். சிறுபான்மை சலுகைப்போராட்டத்தினூடே இதையும் பா ஜ க தொட்டிருக்கலாம்.

தொழில்நுட்பக் கல்விப்பெருக்கத்தில் முந்தைய தலைமுறை காட்டிய முனைப்பின் விளைவு இன்றைய இந்திய வளர்ச்சி. கழகக் காங்கிரஸ் கூட்டணியினால் அது வேகமாகப் பலவீனப்படுகிறது.

நல்ல கூட்டணி! வெளியேறும் நாள் என்றோ?

7 Replies to “கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!”

  1. இந்திய மாணவர்கள் தரமான கல்வியைப் பெற்றுவிடக் கூடாது என்று வெளிநாடுகளும் நினைக்கின்றனவோ! அரசுகள் மட்டுமல்லாது அரசியல் வியாதிகள் ( வாதிகள் வியாதிகள் ஆகி நிறைய வருடங்கள் ஆயிற்று ) சரியான முறையில் செயல் படுவதில்லை! பா ஜ க வும் இதை சரியாக உணர்ந்த மாதிரி தெரியவில்லை!
    என்ன செய்வது!

  2. Sibal is famously known as zero sibal after his zero loss theory in 2G loot. His sons have earned enough in the loot.Now he is particular that zero is the best numeral that can fetch many things for him and Indian children.

  3. காங்கிரஸ் என்பது ஒரு CIRCUS கூடாரம். இதில் முதலிட்டாளர்கள் இத்தாலிய சோனியவின் குடும்பத்தார். இங்கு Ring Master வீரமிகுந்த? கரையற்ற? உத்தமர்? மண்மோகன் சிங். அடிக்கடி, மக்களை சிரிக்க வைக்க கபில், திக் விஜய், பிரணப் போன்ற கோமாளிகளின் அறிக்கை.
    வாழ்க காங்கிரஸின்!
    வாழ்க காங்கிரஸின் தேசப்பற்றாக்குறை!

  4. தற்போது உள்ள மாநில மற்றும் மத்திய அரசுகள், ஊழல் குற்றங்கள் புரிந்த
    சட்டத்தின் பெயரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனால் சட்டத்திற்கு புறம்பான அரசுகள். ஆனால், சட்டம் “அரசு” என்று தான் கூறுமே தவிர, அவ்வரசின் செயல் பாடுகள் சட்டத்திற்கு புறம்பாவதைப்பற்றி அதனை ஒழித்துக்கட்டாது. இதனால் தான், சட்டம் எடுப்பார் கைப்பிள்ளை, குரங்குக்கையில் சென்றால் பூமாலை.

  5. அவளை நினைத்து உரலை இடிப்பது போல் அமெரிக்காவைக் காட்டி மோசடி நடக்கிறது இங்கே.
    அமெரிக்கக் கல்வி பற்றி இப்பதிவைப் பார்க்க வேண்டுகிறேன்.

    https://www.tamiloviam.com/site/?p=1469

  6. அண்மையில் சமச்சீர் கல்வி என்று ஒரு ஜோக் முன்னாள் தமிழக அரசால் நிகழ்த்தப்பட்டது. நான்கு வகையான கல்வி பாடத்திட்டங்களுக்கும் ஒன்றிணைத்து , ஒரே பாடத்திட்டத்தை வைத்து சீர் திருத்தம் செய்வதாக சொல்லி ஒரு கோமாளி கூத்து நிகழ்த்தப்பட்டது.

    அறிவியலிலும், கணிதத்திலும் ஏற்கனவே இருந்த மெட்ரிகுலேஷன் பாடப்புத்தகங்களுடன் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை ஒப்பிட்ட அனைவரும் , சமச்சீர் என்ற பெயரில் சுமார் பதினாலு பாடங்களை காணவில்லை என்கிறார்கள். அதாவது சமச்சீர் கல்வி என்ற பெயரில் ஏற்கனவே இருந்த பாடங்களைவிட குறைந்த பாடங்களே வைக்கப்பட்டுள்ளன. இந்த பாடங்களை படித்துவிட்டு, அகில இந்திய அளவில், தமிழக மாணவர்கள் எந்தபோட்டி தேர்விலுமோ , எந்த நுழைவு தேர்வுகளிலோ நிச்சயம் வெற்றிபெற முடியாது.

    மேலும் , சமச்சீர் கல்வி குழுவின் தலைவர் திரு முத்துக்குமரன் அவர்களும் தனது குழுவின் பரிந்துரைகளில் முக்கியமான பல பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என்கிறார். தமிழக மாணவர்களை கற்காலத்திற்கு அழைத்து செல்லும் , முன்னாள் முதல்வரின் சதித்திட்டம் இயற்கை அருளால் தடுக்கப்பட்டுள்ளது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன். நல்ல தரமான பாடத்திட்டத்தை உருவாக்கி தமிழக கல்வியின் தரத்தை எல்லோரும் மெச்சும்படி உயர்த்துவோம். .

  7. கபில் சிபல் அவர்கள் இந்திய அரசுக்கு டூ ஜி ஊழலால், ஜீரோ லாஸ் ( zero loss ) என்று சொல்லி நம் மக்களை ஏமாற்ற முயற்சி செய்தார். நம் மக்கள் டூ ஜி பற்றிய உண்மைகள் தெரிந்துவிட்டதால், 2011-சட்டசபை தேர்தலிலும், 2014- பார்லிமெண்டு தேர்தலிலும் திமுகவுக்கு நல்ல தீர்ப்பு வழங்கிவிட்டனர். ஆனால் பாவம் கபில் சிபல். டெல்லியில் பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப்போய் இவரும் ஜீரோ ஆகிவிட்டார். அதுவும் மூன்றாவது இடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *